ஹொட்டல் அறையில் இந்திய வீரருடன் தங்கியிருந்த அழகி யார் : விஸ்வரூபம் எடுக்கும் விசாரணை!!

beauty

ஐ.பி.எல் பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி முத்கல் குழு விசாரணை நடத்தி உச்சநீதி மன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது.

இதில் இலங்கையில் கடந்த 2010ம் ஆண்டு நடந்த ஆசியக்கிண்ண போட்டியின் போது இந்திய வீரருடன் தங்கியிருந்த அழகி யார் என கேள்வியெழுப்பியுள்ளது.

இந்தப்போட்டியின் போது இந்திய அணியின் முன்னணி வீரர் ஒருவரின் ஹோட்டல் அறையில் அழகி ஒருவர் அதிகாலை 4 மணி வரை தங்கி இருந்த தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

பின்னர் இந்த அழகி மேனேஜ்மென்ட் கம்பெனி ஒன்றின் நிர்வாகி என்பது தெரியவந்தது. அந்த அழகி அன்று இரவே தமுல்லாவில் இருந்து கொழும்பு செல்ல இருந்தார்.

வீரர்களின் வற்புறுத்தலின் பேரில் அவர் ஹொட்டல் அறையில் தங்கி இருந்ததாகவும், சூதாட்ட விசாரணை அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஒரு வீரரின் அறையில் தான் அந்த அழகி தங்கி இருந்தார் என்றும் கூறப்படுகிறது

தற்போது இந்த விசாரணை குழு இலங்கையில் உள்ள ஹோட்டல் அறையில் இந்திய வீரருடன் தங்கி இருந்த அழகியிடம் விசாரணை செய்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

அதே போல் இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் அந்த அழகி தற்போதைய இந்திய அணியில் இடம் பெற்றுள்ள மற்றொரு வீரரை திருமணம் செய்ய இருக்கிறார் என்றும், இந்த திருமணம் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு பிறகு நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.

அலரிமாளிகையில் குவியும் செய்தியாளர்கள்: தேர்தல் தொடர்பான அறிவிப்பில் ஜனாதிபதி கையொப்பமிட்டார்!!

mahinda

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு குறித்து முந்திக் கொண்டு செய்திகளை வழங்கும் நோக்கில் அலரிமாளிகையில் செய்தியாளர்கள் குவிந்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

சோதிடர்களின் ஆலோசனைப்படி நண்பகல் 1.15 தாண்டிய பின் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட ஜனாதிபதி தற்போது தயாராகிக் கொண்டிருக்கின்றார்.

இதன் காரணமாக அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் தற்போது அலரி மாளிகை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களுடன் சேர்ந்து அரசாங்கத்தரப்பினருக்கு நெருக்கமான ஊடகவியலாளர்களும் அலரிமாளிகையை முற்றுகையிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே ஜனாதிபதியின் தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் நாடு முழுவதிலும் இருந்து சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் ஆரவார வரவேற்பு வழங்கவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முக்கிய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக தங்கியிருந்த பிரித்தானிய பிரஜைக்கு சிறைத் தண்டனை!!

A9

இலங்கையில் 24 வருடங்கள் வீசா அனுமதியின்றி தங்கியிருந்த பிரித்தானிய பிரஜைக்கு குறைவாக வேலைகளுடன் கூடிய ஒரு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாத சிறைத் தண்டனை முடிந்த பின்னர் பிரித்தானிய பிரஜையை மிரிஹானவில் உள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகள் தடுத்து வைக்கப்படும் முகாமில் ஒப்படைக்குமாறு பண்டாரவளை நீதவான் ஜெயராம் ட்ரெட்ஸ்கி உத்தரவிட்டுள்ளார்.

ரிச்சர்ட் டேவிட் என்ற 65 வயதான பிரித்தானிய பிரஜைக்கே இந்த சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 24 ஆண்டுகளாக வீசா அனுமதியின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்துள்ளார்.

பேஸ்புக் விமர்சனத்தால் சுகவீனமடைந்த பாடசாலை அதிபர்!!

Fb

பாடசாலை அதிபர் ஒருவர் முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த செய்தியைப் பார்த்த பின் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று நாவலப்பிட்டியவில் இடம்பெற்றுள்ளது.

நாவலப்பிட்டியவில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபரை இழிவுபடுத்தி முகப்புத்தகத்தில் செய்தி தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

நேற்று இதனைப் பார்த்த அவ்வதிபருக்கு உயர்குருதியமுக்க நோய் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்துள்ள சிலர், அங்கிருந்த ஆசிரியர் ஒருவரை கடுமையாகப் பேசி, அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதலுக்கு இலக்கான ஆசிரியரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து,குறித்த பாடசாலையின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அமைதியற்ற நிலைமை உருவாகியுள்ளது.

இவ்விரு சம்பவங்களையும் கண்டித்து, அவர்கள் நேற்று நாவலப்பிட்டி நகரில் ஆர்ப்பாட்டமொன்றிலும் ஈடுபட்டனர்.

இவ்விரு சம்பவங்கள் தொடர்பிலும், நாவலப்பிட்டிய பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உங்கள் முகத்தில் உள்ள முகப்பருவின் வடுக்கள் மாற‌ அற்புதமான‌ இயற்கை வைத்தியங்கள்!!

Natural-Ingredients

நீங்கள் என்ன செய்தாலும் முகப்பரு வடுக்கள் மறைய அதிக காலமாகும். இந்த வடுக்கள் பல அடுக்காக அமைந்து இருப்பதால் இது கீழிருந்து மேலாக காயத்தை ஆற்றும். தோல் நிபுண‌ர்கள் முகப்பரு வடுக்களை நீக்க‌ நிறைய நேரம் எடுத்துக் கொள்வதோடு இதற்கான தொகையும் அதிகமாக வசூலிக்கின்றனர்.

இதையே நீங்கள் இயற்கை பொருட்களை கொண்டும் உபயோகிக்கலாம். நீங்கள் தொடர்ந்து இவற்றை போடுவதால், முகப்பரு வடுக்கள் படிப்படியாக மறைந்துவிடும்.

கீழே குறிப்பிட்டுள்ள‌ 5 அற்புதமான‌ இயற்கையான முறையில் முகப்பரு வடுக்களை மாற்ற தேவையான பொருட்கள்:

இங்கே வேகமாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் முகப்பரு வடுக்களை மறைக்க உங்களுக்கு உதவும் 5 பொருட்கள் உள்ளன:

1. வெள்ளரிக்காய்

வெள்ளரி தோலுக்கு இனிமையான, ​​புத்துணர்ச்சி மற்றும் குளிர்ச்சி உணர்வு ஊட்டக்கூடிய ஒன்றாகும். இது டோனிங்கை அடக்கும் மற்றும் உங்கள் கண்களின் கீழ் உள்ள கருவளையம் மற்றும் வீக்கத்தை குறைப்பதற்கும் உதவும் அற்புதமான இயற்கை நன்மைகளை கொண்டிருக்கிறது. மேலும் இது திறம்பட வடுக்களை வெளியேற்றும் சக்திகளைக் கொண்டுள்ளது. வெள்ளரிக்காயை சீராக‌ பயன்படுத்தினால் இது வீக்கத்தை தளர்த்தி நிறமிகள் மற்றும் முகப்பரு வடுக்களை போக்குகிறது.

எப்படி வீட்டில் வெள்ளரிக்காய் பேஸ்ட் செய்யவது என்பதைப் பார்ப்போம்..

1. ஒரு பெரிய வெள்ளரி எடுத்து இதன் தோலை நீக்கி மையத்தில் இருக்கும் வெள்ளரி விதைகளை நீக்கி துண்டுகளாக வெட்ட வேண்டும்.

2. பின்னர் ஒரு சில புதினா இலைகள் மற்றும் எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி சேர்த்து நன்கு கலக்கி இத்துடன் வெள்ளரி துண்டுகளை சேர்த்து கலக்கவும்.

3. இதை பசை போல் மாற்றி ஒரு கொள்கலனில் சேமித்துக் கொள்ளவும்.

4. மெதுவாக இதை கலந்து ஒரு ஃபேஸ் பேக் போல் செய்து ப்ரஷ் அல்லது விரல்களால் உங்கள் முகத்தில் தடவுங்கள்.

5. அதை 15 முதல் 20 நிமிடங்கள் உலர வைத்து, பின்னர் தண்ணீர் கொண்டு துடைக்க வேண்டும்.

2. தக்காளி

பழுத்த தக்காளியை கூழாக்கி பயன்படுத்துவதால் இது விரைவாக‌ குணமடைய செய்வதோடு மற்றும் முகப்பருவையும் எளிதில் கட்டுப்படுத்துகிறது. தக்காளி முகப்பரு சிகிச்சையை முறையாக செய்தால் தோலில் உற்பத்தியாகும் அதிகப்படியான எண்ணெயை உறிஞ்ச‌ உதவுகிறது இது லைகோபீன் என்ற பகுதிகளை அதிக அளவில் கொண்டுள்ளது.

இது தோலின் பழுப்பு நிறத்தை நீக்குகிறது மற்றும் வடுக்களையும் மாறைய வைக்கிறது. தக்காளி கூழ் முகப்பரு உடைவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். பாக்டீரியா திரட்சியை தடுக்க வெள்ளரி சாறு கலந்து தேய்கலாம். வெள்ளரி பயன்படுத்துவதால் கூடுதல் நன்மை கிடைக்கிறது..

வீட்டில்  தக்காளி பேஸ்ட் செய்யும் முறை..

1. 2 முதல் 3 தக்காளி எடுத்து தோலை நீக்கிக் கொள்ளவும். துண்டு துண்டாக வெட்டி தயிர் ஒரு தேக்கரண்டி மற்றும் காட்டு மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன் சேர்த்து ஒரு கலவை போல் தயாரித்துக் கொள்ளவும்..

2. இந்த‌ ஃபேஸ் பேக்கை ஒரு ப்ரஷ் அல்லது விரல்களால் உங்கள் முகம் முழுவதும் தடவிக் கொள்ள வேண்டும்.

3. அதை 15 முதல் 20 நிமிடங்கள் உலர வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

4. உங்கள் தோல் காயத்திற்கு நீங்கள் உடனடி தீர்வை பார்ப்பீர்கள்.

3. எலுமிச்சை

எலுமிச்சை சாறு இயற்கையாகவே தோலிற்கு ஒளியேற்றும் சாத்தியம் அதிகம் கொண்டுள்ளது. தோல் நிறம் மாற‌ எலுமிச்சை சாற்றின் அமிலம் உதவுகிறது. இது விரைவில் முகத்தின் இருண்ட வடுக்களை போக்குகிறது.

வீட்டில் எலுமிச்சை பேஸ்ட் செய்யயும் முறை..

1. 2 எலுமிச்சை எடுத்து ஒரு கிண்ணத்தில் சாறு எடுக்கவும்.

2. இப்போது கரிம தேன் ஒரு தேக்கரண்டி சேர்த்து நன்றாக‌ கலந்துக் கொள்ளவும்.

3. இதை ஒரு பஞ்சைக் கொண்டு தொட்டு உங்கள் முகம் முழுவதும் இந்த கலவையை போடவும்.

4. இதை நன்றாக‌ 10 முதல் 15 நிமிடங்கள் உலர வைத்து பின்னர் தண்ணீர் கொண்டு துடைக்க‌ வேண்டும்.

5. உங்கள் தோல் உலர்ந்த பின் ஒரு நல்ல தீர்வை பார்ப்பீர்கள்.

உங்களுக்கு மென்மையான‌ தோல் இருந்தால் இது எரிச்சலை ஏற்படுத்தும், எனவே நீங்கள் உடனே இந்த செய்முறையை உபயோகப்படுத்த கூடாது. எலுமிச்சை சாறு எரிச்சல் தன்மையைக் கொண்டுள்ளதால் கடுமையான சேதத்தை விளைவிக்கும் சூரியக் கதிர் வீச்சினால், எனவெ இதை உபயோகித்த பிறகு அடுத்த நாள் காலை நீங்கள் சன்ஸ்கிரீன் போட வேண்டும்.
4. தேன்

தேன் ஒரு சுகாதாரமான‌ மற்றும் தோலுக்கு ஒரு இயற்கையான ஊட்டச்சத்தை கொடுக்கும் அதிசய மூலப்பொருளாக‌ உள்ளது. மேலும் இது இன்னும் திறம்பட செயல்பட்டு முகப்பரு வடுக்களை போக்கி அன்டி-பாக்டீரியலாக செயல்படுகிறது.

வீட்டில் ஹனி பேஸ்ட் செய்யும் முறை..

1. தேன் பெரிய‌ தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

2. உங்கள் விரல்கள் அல்லது ப்ரஷ் கொண்டு உங்கள் முகம் முழுவதும் இதை பயன்படுத்தவும்.

3. 10-15 நிமிடங்கள் கழித்து தண்ணீர் விட்டு உங்கள் முகத்தை துடைக்கவும்.

ஒரு சுத்தமான துண்டினை வைத்து துடைக்கும் போது நீங்கள் மென்மையான மற்றும் பளிச்சிடும் தோலை பார்ப்பீர்கள்.
இந்த எளிய தேன் மாஸ்க்கை தொடர்ந்து பயன்படுத்தினால் ஒரு வாரத்திற்குள் வடுக்களின் தோற்றத்தை குறைக்கிறது.

5. ஸ்ட்ராபெர்ரி

பழுத்த ஸ்ட்ராபெர்ரி முகப்பரு வடுக்களை மின்னல் வேகத்தில் நேர்த்தியாக குறைக்கிறது. ஸ்ட்ராபெர்ரி, தோலில் உள்ள‌ அனைத்து அசுத்தங்கள் மற்றும் கெட்டதை வெளியே இழுக்க‌ உதவுகிறது. இதிலுள்ள‌ சாலிசிலிக் அமிலம், ஒரு இயற்கை வடிவம் கொண்டிருக்கின்றன. இதனால் முகப்பரு வடுக்களை எளிதில் குறைத்து அழகான‌ தோற்றத்தை தருமாறு செய்கிறது, மேலும் நிறத்தையும் பிரகாசிக்க வைக்கிறது.

வீட்டில் ஸ்டிராபெர்ரி பேஸ்ட் செய்யும் முறை..

1. 2 முதல் 3 ஸ்ட்ராபெர்ரி எடுத்து உங்கள் விரல்களை கொண்டு நன்கு மசித்துக் கொள்ளவும்.

2. இப்போது தயிர் கிட்டத்தட்ட ஒரு தேக்கரண்டி சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.

3. உங்கள் முகம் முழுவதும் இதை போட‌ வேண்டும்.

4. அதை 15 முதல் 20 நிமிடங்கள் உலர வைத்து பின்னர் தண்ணீர் கொண்டு துடைக்க வேண்டும்.

5. உங்கள் தோலில் இருக்கும் காயங்கள் மற்றும் முகப்பரு வடுக்களை மாற்றி நல்ல‌ வித்தியாசத்தை இது காட்டுகிறது.

நீங்கள் விரைவில் முகப்பரு வடுக்களை மறைக்க, மேலே கொடுக்கப்படுள்ள‌ 5 இயற்கை பொருட்களை பயன்படுத்தவும். வடுக்கள் உங்கள் தன்னம்பிக்கை மீது ஒரு வலுவான எதிர்மறை விளைவை உருவாக்கி, உங்களின் ம‌கிழ்ச்சியையும் பாதிக்கும்.

கனடா, அமெரிக்காவில் பாரிய பனிப்புயல் : பலர் உயிரிழப்பு!!

அமெரிக்காவில் நியூயோர்க், நியு ஹம்ப்சயர் மற்றும் மிச்சிக்கன் ஆகிய பகுதிகளில் வரலாறு காணாத அளவு பனிப்பொழிவு காரணத்தால் குறைந்தது 6 பேர்கள் வரை இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நியுயோர்க்கின் மேற்கு பாகத்தில் நேற்று செவ்வாய்கிழமை 120-சென்ரி மீற்றர்கள் வரையிலான பனி பெய்துள்ளது. இன்று அமெரிக்க நேரம் இரவுக்குள் 180-சென்ரி மீற்றர்கள் வரை எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிகார பூர்வமான குளிர்காலம் டிசம்பர் 21ம் திகதி ஆரம்பமாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னராக பனிபுயல் ஆரம்பித்து பிராந்தியம் பூராகவும் ஒரு ஆழ்ந்த உறைபனி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதன் தாக்கம் ரொறொன்ரோவிலும் புதன்கிழமை காலை காற்றுடன் கூடிய வெப்பநிலை பூச்சியத்திற்கு கீழ் 17 ஆக காணப்படுவதுடன் 5 சென்ரிமீற்றர்கள் வரையிலான பனி பொழிவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

நியூயோர்க்கின் வடபகுதியில் ஒரு வருடத்திற்கான மதிப்புள்ள பனி 3 நாட்களில் பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

விசேடமாக பவ்வலோ மோசமான பனியால் தாக்கப்பட்டுள்ளது. மணித்ததியாலத்திற்கு 10-12 சென்ரி மீற்றர்கள் அளவிலான பனி பெய்கின்றதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனி தீவிரமாக காணப்படுவதால் நியூயோர்க்கின் பிரதான நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மூர்க்கத்தனமான பனிப் புயலினால் 150ற்கும் மேற்பட்ட வாகனங்கள் பனிக்குள் புதையுண்டுள்ளன.

கனடா நயாகரா பல்கலைக்கழக பெண்கள் கூடைப்பந்தாட்ட அணியினர் பவ்வலோவில் அகப்பட்டு 24 மணித்தியாலங்கள் பேரூந்து ஒன்றிற்குள் இருந்துள்ளனர். பிற்ஸ்பேக்கில் விளையாட்டில் கலந்து விட்டு திரும்பி வந்து கொண்டிருக்கையில் பனிப்புயலில் அகப்பட்டுள்ளனர்.

பேரூந்தில் இருந்து காப்பாற்றப்பட்டு புதன்கிழமை காலை பல்கலைக் கழகத்தை வந்தடைந்தனர்.

கனடா- ஒன்ராறியோவின் தென்பகுதி நகரங்கள் ரொறொன்ரோ உட்பட்ட பெரும்பாலானவற்றிற்கு கனடா சுற்றச்சூழல் பிரிவு விசேட காலநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. 5 சென்ரிமீற்றர்கள் வரையிலான பனி பெய்யலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது.

ஹமில்ரன், ஒட்டாவா, கோன்வால், ஹால்ரன், கிங்ஸ்ரன், லண்டன், நயாகரா, ஒக்ஸ்வோட்-பிரான்ட், பீற்றபொறோ, சானியா, வாட்டலூ, வின்சர் மற்றும் யோர்க் பிரதேசம் போன்றன இதில் அடங்குகின்றன.

புதன்கிழமை பிற்பகல் ஆரம்பித்த பனி பொழிவு ரொறொன்ரோ பெரும்பாக முழவதிலும் அவசர நேர போக்குவரத்தை மந்தகதிக்கு தள்ளியுள்ளது.

நியு யோர்க்கின் பல மாநிலங்கள் 5-அடிகளிற்கும் மேலான பனியினால் போர்த்தப்பட்டுள்ளது. பவ்வலோ நகரம் உட்பட்ட எறிக் கவுன்ரி பகுதிகளில் பெருந்தொகை பனி காரணமாக அவசர காலநிலை பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது.

snow_01 snow_02 snow_06 snow_08 snow_09

5 மீனவர்கள் இன்று திருச்சி பயணம் : இலங்கை குறித்து இந்தியா, மீனவர்கள் குடும்பம் மகிழ்ச்சி!!

death_penalty_fishermen_lanka_650

மரண தண்டனை பெற்று விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் ஐவர் இன்று (20.11) வியாழக்கிழமை கொழும்பில் இருந்து விமானம் மூலம் திருச்சி நோக்கி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழக மீனவர்கள் இலங்கையால் விடுவிக்கப்பட்ட நிகழ்வு, மனதுக்கு இதம் தரும் நிகழ்வு என்று பாரதீய ஜனதாக்கட்சி தெரிவித்துள்ளது. இந்தநிலையில் குறித்த நிகழ்வு இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த உதவும் என்றும் அந்தக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அண்மையில் இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியின் ஊடாக கலந்துரையாடியதன் பின்னாலே இந்த வாய்ப்பு ஏற்பட்டதாக பாரதீய ஜனதாக் கட்சியின் பேச்சாளர் ஜிவிஎல் நரசிம்மராவ் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த தமிழக மீனவர்களை விடுவித்த பெருமை இந்திய மத்திய அரசாங்கத்தை சேரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மீனவர்கள் விடுவிக்கப்பட்டமை குறித்து அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

நேற்று 5 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் ராமேசுவரம், தங்கச்சிமடம் மீனவர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திகழ்ந்தனர். மீனவர்கள் விடுதலை குறித்து மீனவர் லாங்லெட்டின் தாய் இன்பெட்ரா மகிழ்ச்சியுடன் கூறியதாவது:–

எனது 3 ஆண்டுகள் பிரார்த்தனை வீண் போகவில்லை. தூக்கு தண்டனை பற்றி தீர்ப்பு வெளியான நாள் முதல் நடைபிணமாக இருந்தோம். இப்போது அளவற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது. மீனவர்களை விடுதலை ஆனதால் கடவுளுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம்.

எங்களது மீனவர்களின் விடுதலைக்காக பாடுபட்ட அனைத்து தரப்பு மக்களையும் உயிருள்ள வரை மறக்க மாட்டோம். எங்கள் கண்ணீரை காணிக்கை யாக்குகிறோம். எனது மகன் வீட்டிற்கு வந்ததும் உடனடியாக பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளோம்.

எமர்சின் மனைவி லாவண்யா கூறியதாவது:–

எனது கணவர் கைதானபோது நான் 4 மாத கர்ப்பிணியாக இருந்தேன். அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் இடி விழுந்ததுபோல் இருந்தது. தினமும் அவருக்காக ஆண்டவனிடம் முறையிட்டு வந்தேன். தந்தையின் முகத்தைகூட பார்க்காத குழந்தையை வைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தேன்.

தற்போது மீனவர்கள் அனைவரும் கடவுளின் அருளால் விடுதலையாகி உள்ளனர். மீனவர்களின் விடுதலைக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது குழந்தை தந்தையின் முகத்தை பார்த்து சந்தோசப்படுவான். கணவர் வந்ததும் வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்று குழந்தைகளுக்கு மொட்டை போட்டு காது குத்துவேன். இந்த ஆண்டுதான் எங்களுக்கு கிறிஸ்துமஸ் விழா. இந்த விழாவை அனைவரும் சிறப்பாக கொண்டாடுவோம்.

வில்சன் மனைவி ஜான்சி கூறியதாவது:–

மீனவர்கள் விடுதலை பற்றி கேள்விபட்டதும் எண்ணற்ற மகிழ்ச்சி அடைந்தோம். நேற்று மாலையில் எனது கணவர் விடுதலை செய்யப்பட்டது பற்றி என்னிடம் செல்போனில் பேசினார். அவரது குரலை கேட்டு ஆனந்த கண்ணீர் வடித்தேன்.

மீனவர்களின் விடுதலைக்காக பாடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்–அமைச்சர் மற்றும் இலங்கை அதிபர் மற்றும் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

மீனவர் அகஸ்டல் மனைவி பாக்கியசெல்வி கூறியதாவது:–

கடந்த 3 ஆண்டுகளாக நாங்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாக்களை கொண்டாடவில்லை. தற்போது மீனவர்கள் 5 பேரும் விடுதலையாகி உள்ளனர். இந்த ஆண்டுதான் எங்களுக்கு சிறப்பான கிறிஸ்துமஸ்–புத்தாண்டு ஆக இருக்கும் என அவர் ஆனந்தத்துடன் கூறினார்.

வவுனியாவில் பாழடைந்த நிலையிலுள்ள பப்பட தொழிற்சாலையை மீள இயங்கவைக்குமாறு கோரிக்கை!!

Pap

வவுனியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்ட பப்படம் தொழிற்சாலை இயங்காது பாழடைந்து செல்வதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வவுனியா செட்டிகுளத்தில் அமைந்துள்ள பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தினால் பராமரிக்கப்பட்டு வந்த குறித்த பப்படம் தொழிற்சாலையை, இலங்கை அரசும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பும் இணைந்து பல கோடி ரூபா பெறுமதியில் உருவாக்கின.

ஆனால் இத் தொழிற்சாலை திறக்கப்பட்டு ஒரு வருட காலப்பகுதியிலேயே மூடப்பட்டுவிட்டது. இதனால் இப்பிரதேசத்தைச் சேர்ந்த பெருமளவான இளைஞர் யுவதிகள் தமது தொழில்வாய்ப்பை இழந்துள்ளனர்.

செட்டிகுளம் பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்திற்கு சொந்தமான இத் தொழிற்சாலையிலிருந்தே வவுனியா உட்பட வட பகுதிகளுக்கு பப்படம் விநியோகிக்கப்பட்டது. இந்நிலையில் இத் தொழிற்சாலை மூடப்பட்டமையானது இப் பகுதிக்கு ஏற்பட்ட பாரிய வருமான இழப்பாகவும் கருதப்படுகிறது.

எனவே, இத் தொழிற்சாலையை மீள இயங்கவைத்து இப்பகுதி இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதற்கு, செட்டிகுளம் பலநோக்கு கூட்டுறவுச்சங்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிச்சயதார்த்த சர்ச்சை : திரிஷா மீது லட்சுமிராய் மறைமுக தாக்குதல்!!

trisha

நடிகை திரிஷாவுக்கும், சினிமா தயாரிப்பாளர் வருண்மணியனுக்கும் இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக பரபரப்பு தகவல் வெளியானது.
வருண்மணியன் ‘வாயை மூடி பேசவும்’ என்ற படத்தை தயாரித்துள்ளார். தற்போது சித்தார்த் நடித்த ‘காவியத் தலைவன்’ படத்தை தயாரித்து வருகிறார்.

திரிஷா ஏற்கனவே தெலுங்கு நடிகர் ராணாவை காதலிப்பதாக கூறப்பட்டது. பிறகு இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். கன்னட நடிகை ராகினி திவேதியுடன் ராணா நெருங்கி பழகியதாகவும், எனவே அவரை விட்டு திரிஷா விலகியதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இதை தொடர்ந்து திரிஷாவுக்கும், வருண்மணியனுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டதாக செய்திகள் பரவின.

ஆனால் தனக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை என்று டுவிட்டரில் திரிஷா தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது, எனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக வெளியான செய்தி வதந்திதான். அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்த வதந்தி எங்கிருந்து கிளம்பியது என்று தெரியவில்லை.

என் திருமண நிச்சயதார்த்தம் என்பது எனது வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாளாக இருக்கும். அதை சந்தோஷமாக அறிவிக்கும் முதல் நாளாக நான் இருப்பேன். பாலகிருஷ்ணாவுடன் தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறன் என்றார்.

திரிஷா இவ்வாறு கூறிய உடனேயே லட்சுமிராய் தனது டுவிட்டரில் நடந்ததை ஏன் மறைக்கிறார்கள். உண்மையை ஒப்புக் கொள்ளும் தைரியம் வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

திரிஷாவுக்கும், லட்சுமி ராய்க்கும் நீண்ட நாட்களாக மோதல் உள்ளது. ‘மங்காத்தா’ படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். அப்போது இருந்து இந்த சண்டை தொடர்கிறது. எனவே தான் அவர் திரிஷாவுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார் என்கின்றனர்.

திரிஷா, வருண்மணியன் தொடர்பு லட்சுமிராய்க்கு நன்றாக தெரியும் என்றும், லட்சுமி ராய்க்கும் வருண் மணியன் நண்பர்தான் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

விஷாலை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்குவோம் : சரத்குமார் எச்சரிக்கை!!

sarathkumar-vishal

திருச்சியில் இன்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது..

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தேர்தலை மட்டுமே மனதில் வைத்து செயல்படும் கட்சி அல்ல. அனைத்து நேரங்களிலும் மக்களுக்காக மக்கள் நலனையே கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மனதில் சமத்துவ மக்கள் கட்சிக்கு நல்ல இடம் உள்ளது.

மக்கள் பணியில் தொடர்ந்து எவ்வாறு செயல்பட வேண்டும், கட்சி வளர்ச்சி பணியை தீவிரப்படுத்துவது எப்படி என்பதற்தாக திருச்சியில் இன்று தொகுதி செயலாளர்கள் கூட்டத்தை நடத்துகிறோம்.

கர்நாடகாவில் மேலும் 2 அணைகள் கட்டுவதை தடுப்பது குறித்து அம்மாநில முதலமைச்சரை நேரில் சந்தித்து மனு கொடுத்து வலியுறுத்துவோம். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வழக்குகளில் வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக வருவார்.

முதலமைச்சராக ஜெயலலிதா இல்லை என்பதற்காக சில கட்சிகள் எதையாவது குறை கூறி கொண்டே இருக்கின்றன. சட்ட சபையை கூட்ட வேண்டும் என்று தி.மு.க. கூறுவது நியாமில்லை. சட்ட சபையை கூட்டினாலும் அவர்கள் வெளி நடப்பு தான் செய்கிறார்கள்.

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.விற்கு தான் கொள்கை, தார்மீக அடிப்படையில் ஆதரவு அளிப்போம். தமிழக மீனவர்கள் 5 பேருக்கு பொது மன்னிப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள். இப்பிரச்சினையை பொறுத்த வரை தமிழக மீனவர்கள் என்று பாராமல் தமிழகத்தில் உள்ள இந்திய மீனவர்கள் என்று நினைத்து செயல்பட வேண்டும்.

இப்பிரச்சினையை வைத்து பா.ஜனதா தன்னை வளர்த்து கொள்ள நினைக்கிறதா என்பதற்கு பதில் கூறவில்லை. ஏனென்றால் நடிகர் ரஜினியை வைத்து கட்சியை வளர்க்க நினைப்பவர்கள் அவர்கள். ரஜினி மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஜி.கே.வாசன் புதிய கட்சிக்கு சமத்துவ மக்கள் கட்சி ஆதரவா என்று கேட்பது சரியல்ல. புதிய கட்சியை அவர் தான் தொடங்குகிறார். அவர் தான் எங்களுக்கு ஆதரவு தருவாரா என்று கேட்க வேண்டும்.

நடிகர் சங்கம் சிறப்பாக செயல்படுகிறது. நஷ்டத்தில் இருந்த நடிகர் சங்க நிதியை நாங்கள் தற்போது 3½ கோடி நிதி இருப்பு இருக்கும் வகையில் உயர்த்தி உள்ளோம். இதன் மூலம் நலிந்த கலைஞர்களுக்கு உதவி வருகிறோம். மீதி உள்ள நிதியை வைத்து நடிகர் சங்க இடத்தில் கட்டிடம் கட்டி அதன் மூலம் நலிந்த கலைஞர்களுக்கு உதவ முடிவு செய்துள்ளோம்.

அதன் அடிப்படையில் திரைப்பட துறையில் தொடர்பு உள்ள சத்யம் நிறுவனத்திற்கு கட்டிடம் கட்ட அனுமதி வழங்கினோம். இதில் 15 கோடி நடிகர் சங்கத்தின் நிதி. மீதி 50 கோடி நிதி சத்யம் நிறுவனத்தினுடையது. இதன் மூலம் நடிகர் சங்கத்திற்கு ஆண்டுக்கு 24 லட்சம் வாடகை வரும்.

மொத்தம் 29 வருடம் 11 மாதத்திற்கு லீசுக்கு விடுகிறோம். இதன் முடிவில் 170 கோடி நடிகர் சங்க சொத்து மதிப்பு உயர்ந்திருக்கும். இதை பொதுக்குழுவில் கூடி அனுமதி பெற்று தான் செய்துள்ளோம். நடிகர் சங்கத்தில் இருந்து யாரும் ஒரு பிடி மண்ணை கூட எடுத்து செல்ல முடியாது. ஆனால் விஷால் எனக்கு நோட்டீஸ் அனுப்புவதாக கூறுவது சரியல்ல. விஷாலுக்கு தான் நாங்கள் நோட்டீஸ் அளிக்க வேண்டும்.

பொதுக்குழுவில் கலந்து கொள்ளாமல் இதைப்பற்றி கேள்வி கேட்கக்கூடாது. விஸ்வரூபம் படப்பிரச்சினையில் ஒரு நாள் இரவு முழுவதும் கமலுடன் அமர்ந்து நானும் ராதாரவியும் பேசினோம் என்பது விஷாலுக்கு தெரியவில்லையா. பூச்சி முருகன் என்பவர் அவருக்கு பதவி வழங்கவில்லை என்பதற்காக வழக்கு போட்டுள்ளார். நடிகர் சங்க நிர்வாகிகள் மீது குறை கூறும் அவரை கண்டிக்காமல் விஷால் தவறான தகவலை கூறினால் அவர் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாங்கள் பொறுமையாக இருக்கிறோம். இனியும் இது போன்று செயல்பட்டால் விஷாலை சங்கத்தில் இருந்து நீக்குவோம் என்று எச்சரிக்கிறேன். விஷால் இவ்வாறு செயல்படுவதற்கு பின்னணி உள்ளதா என்பது எனக்கு தெரியாது.

பிரித்தானியாவில் இலங்கைத் தமிழரின் சுப்பர் மார்க்கெட் கொள்ளையர்களால் சூறையாடப்பட்டது!!

பிரித்தானியாவில் சுப்பர் மார்கெட் மற்றும் ஏடிஎம் ஒன்றில் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

பிரித்தானியாவின் சட்பரி ஹில் ரோட்டில் சுப்பர் மார்க்கெட் ஒன்றும் மற்றும் அதற்கு அருகாமையில் ஏடிஎம் மெஷினும் உள்ளது.

இந்த சுப்பர் மார்க்கெட் ஈழத்தமிழருக்கு சொந்தமானது. இந்நிலையில் மர்மநபர்கள் சிலர், சுப்பர் மார்க்கெட் மற்றும் ஏடிஎம்மில் நுழைந்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

தற்போது, அந்த நபர்கள் யார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை, இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 2 3 4 5

தயாரிப்பாளர் சங்கத்தில் ஸ்ரீதிவ்யா மீது புகார்!!

Sri_Divya

நடிகை ஸ்ரீதிவ்யா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட உள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜீவா படங்களில் கதாநாயகியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். இப்படங்களுக்கு பின் பட வாய்ப்புகள் குவிந்தன. சம்பளமும் கூடியது.

தற்போது சிவகார்த்திகேயனுடன் காக்கிசட்டை, ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக பென்சில், விக்ரம் பிரபுவுடன் வெள்ளைக்கார துரை படங்களில் நடிக்கிறார். அதர்வாவுடன் ஈட்டி படத்திலும் நடிக்கிறார். இப்படங்களுக்கு முன்பு நகர்ப்புறம், காட்டு மல்லி என இரு படங்களில் நடிக்க ஸ்ரீதிவ்யாவை ஒப்பந்தம் செய்து இருந்தனர். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் அப்படங்கள் நின்று போயின.

அவ்விரு படங்களின் படப்பிடிப்பையும் தொடர்ந்து நடத்த அதன் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். ஆனால் ஸ்ரீதிவ்யா கால்சீட் கொடுக்க மறுக்கிறாராம். இதனால் இரண்டு தயாரிப்பாளர்களும் ஸ்ரீதிவ்யா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கிறார்கள்.

சின்னக் கலைவாணர் விவேக்கிற்கு இன்று பிறந்த நாள்!!

Vivek

தமிழ் திரையுலகில் தனது நகைச்சுவை நடிப்பாலும், சிந்தனையை தூண்டக்கூடிய வசனங்களாலும் மக்களை வெகுவாக கவர்ந்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். அவரை போலவே நடிகர் விவேக்கும் நகைச்சுவையாக நடிப்பால், சமுதாயத்தில் நிலவும் அவலங்களையும், அரசு ஊழியர்கள் கடமை தவறுவதையும் சுட்டிக்காட்டி வருகிறார்.

சாமி படத்தில் லஞ்சம் வாங்குது தவறு என்பதையும், போகியன்று பழைய துணிகளை தீ வைத்து எரிப்பதற்கு பதிலாக வறுமையில் வாடுபவர்களுக்கு அதை தரலாம் என்றும், ஏழை குழந்தைகளுக்கு பள்ளிகளில் இடம் அளிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும் அவர் நகைச்சுவையுடன் கூறியது பலரையும் கவர்ந்தது.

அதே போல் 12 பி படத்தில் பேருந்து நிறுத்தத்தில் டிரைவர் நிறுத்துவதில்லை என்பதையும், காதல் சடுகுடு படத்தில் கள்ளிப்பால் ஊற்றி பெண் குழந்தைகளை கொல்வது தவறு என்றும், பெண்ணை கற்பழித்தவருக்கு கட்டப்பஞ்சாயத்து மூலம் அபராதம் மட்டும் விதிப்பது தவறு என்பதையும் நகைச்சுவையாக எடுத்துக்கூறியது அநேகம் பேரை கவர்ந்தது. இப்படி பல படங்களில் தனது நகைச்சுவை நடிப்பு மற்றும் பேச்சால் அவர் மக்களை சிந்திக்கவைத்து வருகிறார்.

சமீபத்தில் வெளிவந்த நான் தான் பாலாவில், உப்பிட்டவரை உயிர் உள்ளவரை நினை என்ற கருத்தை உரக்க சொன்ன விவேக்கை இந்த பிறந்த நாளில் வவுனியா நெற் வாழ்த்துகிறது. இனி வரும் காலங்களிலும் தனது நகைச்சுவை நடிப்பால் அவர் மக்களை தொடர்ந்து சிந்திக்க வைக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தமிழ் சினிமா ரசிகர்களும் விவேக்கை வாழ்த்துகின்றனர்.

12 பேருந்துகள் பயணம் செய்து பள்ளி செல்லும் சிறுவன்!!

பிரித்தானியாவை சேர்ந்த 5 வயது சிறுவன் ஒருவன் தினமும் 12 பேருந்துகளை மாறி பள்ளிக்கு செல்லும் அவலநிலைக்கு ஆளாகியுள்ளான்.

பிரித்தானியாவின் மேற்கு யோக்‌ஷைர் நகரை சேர்ந்த கெல்லி-டேவிட் டையலர் (Kelly-David Taylor) என்ற தம்பதியினர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஏனெனில், இவர்கள் வசிக்கும் வீடு, பள்ளியிலிருந்து வெகுதொலைவில் உள்ளதால், இவர்களின் குழந்தைகள் தினமும் 12 பேருந்துகளில் பயணம் செய்து பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது.

இதுகுறித்து பெற்றோரின் குழந்தைகள்,பள்ளி கவுன்சிலிடம், எங்கள் குழந்தைகள் மிகவும் சிரமப்படுவதால், எங்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள பள்ளியில் இடம் தருமாறு கேட்டுள்ளனர்.

ஆனால், வீட்டிற்கு அருகாமையில் உள்ள பள்ளியில் இடம் இல்லாததால் கவுன்சில் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளது.

B B1 B3

வவுனியாவில் கஞ்சா வைத்திருந்தவர் கைது!!

A6

வவுனியாவில் கஞ்சா வைத்திருந்த ஒருவரை விசேட அதிரடிப் படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்தனர்.

வவுனியா, குருமன்காடு பகுதியில் விசேட வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட விசேட அதிரடிப் படையினர் சந்தேகத்திற்கிடமான ஒருவரை சோதனை செய்தபோது அவரது பையில் இருந்து ஒரு கிலோ 80 கிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட குறித்த நபர் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறையில் ஏன் ஜெயலலிதா சீருடை அணியவில்லை : பெங்களூரில் புதிய சர்ச்சை!!

j

சட்டத்தின் முன் அனைவரும் சமம். தண்டனை என்பது எல்லோருக்கும் பொதுவானதே. ஆனால், கர்நாடக சிறைத் துறை மட்டும் இதற்கு விதிவிலக்கானது.

சிறையில் இருந்த ஜெயலலிதாவுக்கு அவர் கைதி என்பதையே மறந்து சலுகைகளை அள்ளித் தந்திருக்கிறது.

இது எதற்காக என்று விளக்கம் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பி பதிலும் வாங்கியிருக்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் நரசிம்மமூர்த்தி.

பெங்களூரில் இருந்த அவரை சந்தித்தோம். பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதாவுக்காக வெஸ்டன் டாய்லெட், ஏ.சி மற்றும் வெளியிலிருந்து உணவு முதலியன தரப்பட்டன என ஊடகங்களில் தகவல்கள் வந்தன.

ஆனால், இதையெல்லாம் மறுத்து அறிக்கைவிட்டார் சிறைத் துறை அதிகாரி ஜெயசிம்ஹா. அதனால் என்னைப் போன்ற வெகுஜன மக்களுக்கு யார் சொல்வதை நம்புவது என்று புரிந்துகொள்ள முடியாததால், நான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் ஐந்து கேள்விகள் கேட்டிருந்தேன். அதற்கு, கடந்த வாரம் கர்நாடக சிறைத் துறை பதில்கள் அனுப்பியது.

1. நீதிமன்றம் தண்டனை விதித்த பிறகு பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் ஜெயலலிதாவை அடைத்த திகதி, நேரம் என்ன?

பதில்: 27.9.2014 மாலை 6:00. கைதி நம்பர்: 7402.

2. சிறைக்குள் ஜெயலலிதாவுக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகள் என்னென்ன?

பதில்: தண்டனைக் கைதியாக ஜெயலலிதா உள்ளே வந்ததில் இருந்து வெளியே சென்றதுவரை சிறைத் துறை அவருக்கு எந்தச் சலுகைகளும் கொடுக்கவில்லை.

3. ஜெயிலுக்குள் இருந்தபோது ஜெயலலிதா எத்தனை நபர்களைச் சந்தித்தார்? அவர்களின் பதவிகள் என்ன? அவர்கள் உறவினர்களா? வழக்கறிஞர்களா? நலம் விரும்பிகளா? அதிகாரிகளா? மந்திரிமார்களா? என்பதைத் தெளிவாகக் கொடுக்க வேண்டும்?

பதில்: அவரை யாரும் சந்திக்கவில்லை.

4. ஜெயலலிதா சிறைக்குள் எந்தெந்த அதிகாரிகளின் மேற்பார்வையில் இருந்தார்?

பதில்: ஜெயலலிதா பெண் தண்டனைக் கைதி என்பதால் பெண்களுக்கான ப்ளாக்கில் அடைக்கப்பட்டார். அவரை பெண் எஸ்.பி., பெண் ஜெயிலர், பெண் பாதுகாப்பு அதிகாரி, பெண் தலைமை வார்டன் மற்றும் சிறைத் துறை இயக்குநர் மேற்பார்வையில் இருந்தார்.

5. தண்டனைக் கைதிகளுக்குச் சீருடை கொடுக்கப்பட வேண்டியது சிறைத் துறை விதி. அப்படிச் சீருடை கொடுக்கப்படவில்லை என்றால், அதற்கான காரணம் என்ன?பதில்: கர்நாடக சிறைத் துறை 350 விதிப்படி ஒரு தண்டனைக் கைதிக்குச் சீருடைகளும், படுக்கை விரிப்புகளும் கொடுக்கப்பட வேண்டும். ஆனால், சாதாரண தண்டனைக் கைதிகள் இந்தச் சீருடைகளை அணியத் தேவையில்லை. ஆனால், கொடூரமான தண்டனைக் கைதிகள் கட்டாயம் இந்தச் சீருடைகளைத்தான் அணிய வேண்டும். ஜெயலலிதா சாதாரண தண்டனைக் கைதி என்பதால், அவர் வெள்ளைச் சீருடை அணியவில்லை எனத் தகவல் சொல்லி இருக்கிறார்கள்.

ஜெயலலிதாவுக்கு எந்தச் சலுகைகளும் கொடுக்கவில்லை என்கிறார்கள். ஆனால், சிறைத் துறை அதிகாரியே பத்திரிகைகள் கொடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். அதேபோல உணவும் வெளியிலிருந்து போனதை போட்டோவோடு பத்திரிகைகளில் வெளி வந்ததே. அது தவறான படங்களா?

ஒரு தண்டனைக் கைதிக்கு நம்பரும், சீருடையும் வழங்கப்பட வேண்டும். அதைக்கூட அணியாவிட்டால், இந்த தண்டனைக்கு என்ன அர்த்தம்?

எந்த அடிப்படையில் கைதிகள் தரம் பிரிக்கப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. அதே பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் இருந்த 132 பெண் கைதிகளுக்கும் சீருடை வழங்கப்பட்டிருக்கிறது. அதையணிந்த அந்த 132 பெண் சிறைக் கைதிகளும் கொடூரக் கைதிகளா? என்பதை சிறைத் துறை விளக்க வேண்டும்.

மீண்டும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மேல்முறையீடு செய்வேன். சொல்வதைப்போல தண்டனைக் கைதிகளுக்கும் பாகுபாடு இருக்கிறது என்றால், அதனை நீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்பேன்” என்றார்.

கர்நாடக சிறைத்துறை அதிகாரி டி.ஐ.ஜி ஜெயசிம்ஹாவிடம் பேசினோம். ”ஜெயலலிதா யூனிஃபார்ம் அணியாததைப் பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது. சட்டத்தில் என்ன இருக்கிறதோ அதைத்தான் நாங்கள் ஃபாலோஅப் பண்ணமுடியும். நாங்களாக எதையும் செய்ய முடியாது. ஜெயலலிதா கர்நாடக சிறைத் துறை விதிகளுக்கு உட்பட்டு உள்ளே கொடுக்கப்பட்ட உணவுகளைத்தான் சாப்பிட்டார்.

வெளியில் இருந்து உணவுகள் வரவழைக்கப்படவில்லை. சாதாரண தண்டனைக் கைதிகள் சீருடை அணியத் தேவையில்லை. அவர்களிடம் துணிகள் இல்லாதபோது நாங்கள் கொடுக்கும் சீருடையை அணிந்து கொள்கிறார்கள்” என்றார்.

வளைத்தால் வளையக் கூடியதா சட்டம்?

-விகடன்-