லண்டனில் இருந்து இலங்கை நோக்கி வந்த விமானத்தில் பிரித்தானிய பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த இலங்கை வம்சாவளி நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். 27 வயதான பிரித்தானிய பெண்ணையே இந்த நபர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 41 வயதான நபர் எனவும் இவர் இலங்கையில் பிறந்து பிரித்தானியா சென்று குடியேறியவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை லண்டனில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் டிசம்பர் 4ம் திகதி தொடங்குகிறது.
கடைசி மற்றும் 4வது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ம் திகதி தொடங்கி 7ம் திகதி வரை நடக்கிறது. டெஸ்ட் தொடருக்கு முன்பு இந்திய அணி இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாடவுள்ளது. இந்த நிலையில் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணி படுதோல்வி அடையும் என்று அவுஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீரர் மெக்ராத் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது..
அவுஸ்திரேலிய தலைவர் மைக்கல் கிளார்க் காயம் அடைந்து இருப்பது கவலை தரும் விஷயம் என்றாலும் அவுஸ்திரேலிய அணி வலுவாகவே இருக்கிறது.
இந்திய அணி கடந்த முறை போன்றே இம்முறையும் 4–0 என்ற கணக்கில் வயிட்–வாஷ் ஆகவே வாய்ப்பு இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியாவின் ஆட்டம் அபாரமாக இருந்தது.
அதே ஆட்டத்தை தொடர்ந்தால் வெற்றி எளிதாகிவிடும். இந்தியாவின் கடைசி 3 டெஸ்ட் (இங்கிலாந்துக்கு எதிராக) போட்டியில் அந்த அணி சின்னாபின்னமாகிவிட்டது. இந்திய அணி ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டியில் சிறந்து விளங்குகிறது.
ஆனால் டெஸ்ட் போட்டியில் அப்படி இல்லை. அவர்கள் பவுன்ஸ் பந்துவீச்சில் சிறப்பாக விளையாடவில்லை. இங்குள்ள பவுன்ஸ் ஆடுகளத்தில் திணறுவார்கள். இதுபோன்ற ஆடுகளத்தில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி கடும் பயிற்சி மேற்கொள்வது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த முறை அவுஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் நேற்று அதிகாலை முதல் கடும் மழை பெய்து வருகின்றது. பல பகுதிகளிலும் விட்டு விட்டு தொடர்சியாக மழைபெய்து வருகின்றது.
தொடர்ந்து பெய்து வரும் காரணமாக குளங்களை நோக்கி ஏராளமான நீர்வரத்து காணப்படுகிறது. வவுனியாவின் சிறிய குளங்கள் வான்பாயும் நிலையில் காணப்படுகின்றன.
வவுனியா சமணங்குளம் இன்றுகாலை முதல் வான்பாயத் தொடங்கியுள்ளது. அத்துடன் தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் தேங்கி நிற்பதை காணக்கூடியதாகவுள்ளது.
வவுனியா குளத்தின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. எதிர்வரும் சிலதினங்களில் இதுவும் வான்பாயகூடும் என எதிர்பார்க்கபடுகிறது. மழை தொடர்பான விபரங்களுக்கு தொடர்ந்தும் இணைந்திருங்கள் விபரங்கள் அவ்வப்போது வவுனியா நெற் ஊடாக வந்து சேரும் .
யாழ்ப்பாணம் மட்டுவில் மற்றும் வவுனியா கோவில்குளம் ஆகிய இடங்களில் வசித்து வருபவருமாகிய “சமஸ்கிருத பண்டிதர்” சதாசிவசர்மா 15.11.2014 அன்று கொழும்பில் இடம்பெற்ற ராம கான சபாவின் பவள விழாவின் போது சம்ஸ்கிருத பணியில் ஆற்றிய பெரும் பணிக்காக கொழும்பு இராமகான சபாவினால் ‘வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.
சமஸ்கிருதத் துறையில் யாழ்ப்பாணம் வவுனியா மற்றும் இலங்கையின் பல பாகங்களிலும் பல மாணவர்களை உருவாக்கியதோடு பல நூல்களையும் வெளியிட்டு அவர் ஆற்றிவரும் பணி அளப்பெரியது. அவர் பணி தொடர இறைவனைவேண்டி வாழ்த்தி வணங்குகின்றோம்.
வவுனியாவில் இன்று அதிகாலை (18.11)மின்னல் தாக்கியதில் வீடொன்று முற்றாக சேதமடைந்துள்ளது.
வவுனியா பொன்னாவரசன்குளம் கிராமத்தில் உள்ள வீடொன்றின் மீதே அதிகாலை 1 மணியளவில் மின்னல் தாக்கியதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வவுனியா மாவட்ட பணிப்பாளர் ரி. சூரியராஜா தெரிவித்தார்.
இதேவேளை வீட்டில் வசிக்கும் சிறுவன் உட்பட வயோதிப பெண்ணும் வீட்டில் அச் சமயம் இல்லாத காரணத்தால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு பொலிஸார் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினர் சென்று பார்வையிட்டிருந்தனர்.
இந் நிலையில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து போயுள்ளமையினால் 7 ஆம் ஆண்டில் கற்கும் பாடசலை மாணவனின் கற்றல் உபகரணங்கள் சீருடை என்பனவும் எரிந்துள்ளமையினால் பாடசாலை செல்வதில் இம் மாணவன் சிரமங்களை எதிர்கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா மாவட்டத்தில் பொதுமக்களால் சட்டவிரோதமாக தறிக்கப்பட்ட பெருமளவான மரங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பல்வேறு தேவைகளுக்காகவும் விற்பனை நோக்குடனும் அங்குள்ள காடுகளில் பொதுமக்கள் சட்டவிரோதமாக மரங்களை தறிப்பதாக வனவளத்துறை அதிகாரிகள் பொலிஸாரிடம் முறையிட்டு வந்தனர். இதனையடுத்து வவுனியா பொலிஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் பெறுமதிமிக்க பெருமளவான மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மரங்களை வெட்டி உழவு இயந்திரங்களில் ஏற்றிச் செல்லும்போதே கைப்பற்றப்பட்டதாகவும், இவ்வாறு கைப்பற்றப்பட்ட மரங்கள் பல இலட்சம் ரூபா பெறுமதியானதெனவும் வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விறகுப் பாவனைக்காக என கூறி பொதுமக்கள் அதிகளவான மரங்களை வேறு தேவைகளுக்காக வெட்டிச் செல்வதாக வனத்துறை அதிகாரிகள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடு தொடர்ந்து செல்லுமானால் சம்பந்தப்பட்டவர்களுக்கெதிராக உரிய நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீநாகராஜா வித்தியாலயத்தில் இவ் வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 08 மாணவர்கள் சித்தி பெற்றிருந்தனர். இவர்களுக்கான பாராட்டு விழா இன்று(18.11) வித்தியாலய பிரதான மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகத்தின் கிராம பிரதேச மாணவர்களின் கல்வி அபிவிருத்தியை மேம்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமாக, புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுடன், பரீட்சையில் தோற்றிய மாணவர்களும் கோவில்குளம் இளைஞர் கழகத்தின் அமெரிக்க கிளையின் அனுசரணையில் இன்றையதினம் கௌரவிக்கப்பட்டனர்.
கோவில்குளம் இளைஞர் கழகத்தின் செல்வி சுவர்ணா சந்திரகுலசிங்கம் அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு இவ் நிகழ்வுகள் கழகத்தால் முன்னெடுக்கப்பட்டது.
வித்தியாலய சமூகத்தின் ஒன்றிணைவில் வித்தியாலய அதிபர் திரு சி.வரதராஜா தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவின் பிரதம அதிதியாக வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப்பணிப்பாளர் திருமதி நா.மாணிக்கவாசகம், நிகழ்வின் சிறப்பு அதிதியாக வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும், கோவில்குளம் இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), கௌரவ விருந்தினராக சிதம்பரபுர பிரதேச வைத்தியசாலையின் வைத்தியகலாநிதி எஸ்.சூரியகுமார் அவர்களும் கலந்து இன்றைய நிகழ்வுகளை சிறப்பித்தனர்.
இன்றைய நிகழ்வில் செல்வி யோ.கோகிலா (181), செல்வன் அ.கோவாஸ்(180), செல்வி அ.யதுசா(174), செல்வி அ.தர்சிகா(173), செல்வி சி.டென்சிகா(172), செல்வன் உ.நிவேதன்(167), செல்வி யோ.நிரோசா(161), செல்வி சி.டிலுசிகா(151) ஆகிய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இவ் நிகழ்வில் பெற்றோர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கோவில்குளம் இளைஞர் கழகத்தின் கஜன், நிரோசன், நிகேதன், சஞ்சீவன், காண்டீபன் ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சர்வதேச கிரிக்கெட் பேரவை ஒவ்வொரு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்கள் முடிவிலும் அணிகள் மற்றும் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை அறிவித்து வருகிறது.
இந்நிலையில், இலங்கை – இந்தியா அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடர் முடிவில் வெளியிடப்பட்டு இருக்கும் உலக ஒருநாள் போட்டி தர வரிசைப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது.
இத்தொடருக்கு முன்பு 113 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் இருந்த இந்திய அணி தொடரை 5–0 என்ற கணக்கில் கிண்ணத்தை கைப்பற்றியதின் மூலம், 117 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறி இருக்கிறது.
தென்னாபிரிக்க அணி 115 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தையும், அவுஸ்திரேலிய அணி 114 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தையும், இலங்கை அணி 108 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தையும், இங்கிலாந்து 5ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.
அதேபோல் டெஸ்ட் தரவரிசையில், தென்னாபிரிக்க அணி 124 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அவுஸ்திரேலியா 117 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும், பாகிஸ்தான் அணி 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. இந்திய அணி 96 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையில் இந்தியாவில் நடந்துமுடிந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி ஒரு வெற்றி கூட பெறாமல் ஐந்துக்கு பூஜ்ஜியம் என்ற எண்ணிக்கையில் தோல்வியைத் தழுவியதையடுத்து, இந்த முடிவுக்கான பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாக இலங்கை கிரிக்கெட் அணிக்கான தேர்வுக் குழுவின் தலைவரும் பிரதி தபால் அமைச்சருமான ஜெயசூர்ய தெரிவித்துள்ளார்.
“அமைச்சர் எங்களை நியமித்திருப்பது சுயாதீனமாக முடிவுகளை எடுப்பதற்காகத்தான். இந்த மாதிரியான போட்டிகளில் கலந்துகொள்ளும்போது வெற்றியும் வரலாம் தோல்வியும் வரலாம். தேர்வுக்குழுவின் தலைவர் என்ற ரீதியில் அதற்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
இந்தியாவுடனான தொடர் சம்பந்தமாக விளையாட்டுத்துறை அமைச்சர் மீது யாரும் குறை கூறுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. இந்த முடிவை தேர்வுக்குழுவும், அணித்தலைவரும், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாக அமைப்பும் சேர்ந்துதான் எடுத்தோம்.”
பாராளுமன்றத்தில், இலங்கை விளையாட்டு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு சம்பந்தமான விவாதத்தின்போது ஜெயசூர்ய இதனைத் தெரிவித்தார்.
இந்தியாவில் இலங்கை அணி மோசமாக தோற்ற பின்னர் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை சேர்ந்த ஒருவர் அதுபற்றிப் பேசுவதென்பது இதுவே முதல்முறை.
உலகக் கிண்ண போட்டிகளுக்காக ஆயத்தமாகிவந்த இலங்கை அணியை, அவசரமாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த இந்தியத் தொடருக்கு அனுப்ப இலங்கை கிரிக்கெட் நிர்வாக அமைப்பு எடுத்திருந்த முடிவை ஆரம்பம் முதற்கொண்டே இலங்கையின் முன்னாள் அணித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்க போன்றவர்கள் விமர்சித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் 25 வகையான புதிய 10 ரூபா நாணயக் குற்றிகள் இன்று முதல் புழக்கத்திற்கு விடப்படவுள்ளன. இந்த நாணயக் குற்றிகள் இலங்கையின் 25 நிருவாக மாவட்டங்களையும் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த நாணையக் குற்றிகள் மத்திய வங்கியிலிருந்து விநியோகிக்கப்பட்டதன் பின்னர் வணிக வங்கிகள் மற்றும் மத்திய வங்கியின் பிராந்திய அலுவலகங்கள் ஊடாக அவை புழக்கத்திற்கு விடப்படவுள்ளன.
புதிய 10 ரூபா நாணயக் குற்றிகளின் முதலாவது தொகுதியை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது 69 ஆவது பிறந்த தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடினார். இதனை முன்னிட்டு அலரி மாளிகையில் ஜனாதிபதி குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் 69 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு நல்லாசி வேண்டி யாழ்ப்பாணத்திலுள்ள மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.
இதில் வடமாகாண ஆளுனர் ஜி.ஏ சந்திரசிறி மற்றும் அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவாநந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்பிரகாரம் ஜனாதிபதி அவர்களை வாழ்த்தியும் நல்லாசி வேண்டியும் ஆலய பிரதம குரு துரைச்சாமி குருக்கள் தலைமையில் இச்சிறப்பு பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.
வன்னி மாவட்டத்தில் விளையாட்டுத்துறை மேம்படுத்தப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம் தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு குறித்த நாடாளுமன்ற விவாத்தில் நேற்று பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வன்னியில் விளையாட்டுத்துறை சார் விடயங்கள் பின்னடைவை எதிர்நோக்கி வருகின்றது. போர் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ளன.
விளையாட்டுத்துறையை மேம்படுத்தத் தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.
வடக்கு விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்களும் பதக்கங்களை வென்றெடுப்பார்கள்.
வன்னியில் விளையாட்டு பயிற்சி கல்லூரிகள் கிடையாது. சிறந்த விளையாட்டு வீர வீராங்கணைகளை உருவாக்க பயிற்சி கல்லூரி அவசியமானது என நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்த 20 இலங்கை அகதிகள் இன்று (18.11) தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திருச்சியில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் பல்வேறு குற்றங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஏராளமான இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த நிலையில், தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் விரக்தி அடைந்து 20 பேர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
இவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா, புளியங்குளம், பிள்ளையார் குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு குடும்பஸ்தர் மீது வாள் வெட்டுத்தாக்குதல் நடைபெற்றுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தையா செல்வராசா என்ற குடும்பஸ்தர் அவர்களின் வீட்டினுள் புகுந்த சிலர் அவர் மீது சரமாரியாக வாளால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளதாகவும் காயமடைந்த இவர் உடனடியாக புளியங்குளம் வைத்தியசாலையில் இருந்து நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இச் சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
வவுனியா பிரதேச செயலகத்தின் மாற்றாற்றல் மற்றும் முதியோர் சிறுவர்களை நினைவுகூறும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை வவுனியா கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராசா தலமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்வுகள் உட்பட மாற்றாற்றல் உடையோர் மற்றும் முதியோர் மற்றும் திறமையான சிறுவர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் அதிதிகளாக வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சரஸ்வதி மோகநாதன் வவுனியா நகரசபை செயலாளர் க.சத்தியசீலன் வட மாகாணசபை உறுப்பினர் ஜயதிலக உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
உங்கள் உடல்நல இலக்குகளை அடைய ஜிம்மில் நீண்ட நேரம் செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சொல்லப்போனால், நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதை விட, குறைந்த நேரத்தில் வேகமாக உடற்பயிற்சி செய்வது கலோரிகளை எரித்து தசைகளை வலுவுறச் செய்வதில் சிறந்து செயல்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது.
நீண்ட நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட முடியாடத நாட்களில், உங்களுக்கு பயனை அளிக்கும் 15 நிமிட தீவிரமான இடைவெளி பயிற்சியில் கூட ஈடுபடலாம். ட்ரெட்மில், குந்துகைகள், லங்ஸ் மற்றும் பர்பீஸ் போன்ற பயிற்சிகளில் ஈடுபடலாம்.
உணவில் கவனமாக இருங்கள் உடற்பயிற்சியில் ஈடுபட்ட நாளன்று நன்றாக வியர்த்து கொட்டினால், எவ்வளவு பசிக்கும் என்பதை கவனித்துள்ளீர்களா, அதற்கு காரணம் உங்கள் மெட்டபாலிச வீதம் அதிகரித்திருக்கும். கூடுதலாக உடல் முழுவதும் உங்கள் கலோரிகள் தொடர்ந்து எரிக்கப்பட்டிருக்கும். சொல்லப்போனால், உங்கள் செரிமானத்தையும் கூட மேம்படுத்துகிறீர்கள். அதனால் இவ்வகை நாட்களில் அதிகமாக உண்ணுவீர்கள். இருப்பினும் உடற்பயிற்சியில் ஈடுபட முடியாத நாட்களில் அதே பழக்கத்தை கடைப்பிடிக்காதீர்கள்.
அப்போது உங்கள் ஆரோக்கியத்தை பேணிட குறைவாகவும் ஆரோக்கியமானதாகவும் உட்கொள்ளுங்கள்.
உங்களுக்கு நீங்களே சிறந்த நண்பனாக விளங்குங்கள் உடற்பயிற்சியில் ஈடுபட முடியவில்லை ena பல முறை நம்மை நாமே குறை கூறி குற்ற உணர்வை வளர்த்திருப்போம். ஆனால் திட்டமிட்ட அனைத்தையும் செய்து ஒரு இயந்திரத்தை போல் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லையே.
வாழ்க்கை என்பது ஏற்ற இறக்கம் தானே. அதனால் பரவாயில்லை. ஆனால் என்ன, எப்போதுமே நாளானது உங்களுக்காக காத்திருக்கிறதல்லவா அதனால் நமக்கு மறுபடியும் ஒரு வாய்ப்பு கிட்டும். நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமானது – என்ன ஆனாலும் சரி உங்களுக்கு நீங்களே ஆதரவு அளித்து உங்களை நீங்களே காதலிக்கவும் செய்யுங்கள்.
அப்படி செய்யும் போது ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை எப்படி எடுத்து செய்ய ஆரம்பிக்கிறீர்கள் என்பதை கண்டு நீங்களே வியப்படைவீர்கள். எப்போதும் வீழ்ச்சியடையாமல் இருப்பதல்ல வெற்றி. ஆனால் எத்தனை முறை விழுந்து எழுந்திருக்கிறோம் என்பதை பொறுத்தே அது அமையும்.