ஜெயில் சாப்பாடு பிடித்துப்போனதால் வேண்டுமென்றே குற்றங்களை செய்யும் நபர்!!

Jailசீனாவை சேர்ந்த நபர் ஒருவரை சிறையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே, குற்றங்களை செய்து வருகிறார். என்னதான் குற்றங்கள் செய்தாலும், பெரும்பாலானவர்கள் சிறைக்கு செல்ல விரும்புவதில்லை.

ஆனால் சீனாவை சேர்ந்த வாங் என்பவர், மீண்டும் மீண்டும் வேண்டுமென்றே குற்றங்களை செய்து சிறையில் பொழுதை கழிக்கிறார். சிறையில் வழங்கும் சாப்பாடு மற்றும் பாதுகாப்பான தங்கும் இடத்துக்காக இவ்வாறு செய்கிறாராம்.

திருட்டு, பொது இடங்களில் சண்டையிடுதல் போன்ற குற்றங்களுக்காக 7 முறை கைது செய்யப்பட்டுள்ளார். திருட்டு வழக்கில் ஒருமுறை 14 வருடங்கள் சிறை தண்டனையும் அனுபவித்துள்ளார், ஆனால் சிறை வாசம் முடிந்தபிறகு வெளியில் இருக்க பிடிக்கவில்லை.

இதனால் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் பெய்ஜிங்கின் பெங்காட்டி பகுதியில் பேருந்தில் சென்றபோது டிரைவர் இருக்கைக்கு வேண்டுமென்றே தீ வைத்துள்ளார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட வாங்கிற்கு, சமீபத்தில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதுபற்றி வாங் அளித்த பேட்டியில், எனக்கு வீடு ஏதும் கிடையாது. சிறையில் இருந்து வெளிவந்தவுடன் என்னசெய்வதென்றே எனக்கு தெரியவில்லை.

சிறையில் நல்ல உணவும் இருக்க பாதுகாப்பான இடமும் கிடைப்பதால் நான் மீண்டும் சிறைக்கு திரும்பி வர முடிவு செய்து வேண்டுமென்றே குற்றங்களை செய்வதாக தெரிவித்துள்ளார்.

 

பெற்ற பிள்ளைகளை ஆண் நண்பருக்கு இரையாக்கிய கொடூரத் தாய்!!

Mother

அமெரிக்காவில் பெற்ற தாயே தன்னுடைய குழந்தைகளை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஓகியோ நகரை சேர்ந்த பெண் பாபி சூயு பேக், இவரது தாயார் எட்வினா லூயிஸ். பாபிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பாபியும், லூயிசும், ஜூயன் கரோலஸ் சான்செஸ் என்பவருடன் கூட்டு சேர்ந்து அக்குழந்தைகளை கட்டிப்போட்டு, செயினால் அடித்து துன்புறுத்தி உள்ளனர்.

சான்செஸ், பாபியின் 11 மற்றும் 9 வயதான பெண்குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியுள்ளான். மேலும் அவர்களை கட்டிலில் கட்டிப்போட்டு விட்டு, தொடர்ச்சியாக செயின் மற்றும் கரண்டியால் அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர். இதில் குழந்தைகளின் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒன்லைனில் போதனை வகுப்புகள் நடந்துள்ளது, இதன் மூலம் அமெரிக்க குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். வாழ்க்கையிலேயே முதல் முறையாக இந்த மாதிரியான குற்றத்தை பார்த்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து டேவிட் ஹால் என்ற பொலிஸ் அதிகாரி கூறுகையில், இச்சம்பவம் மிக கொடுமையான நிகழ்வாகும். அவர்கள் குழந்தைகளை பல வாரங்களுக்கு நிர்வாணமாக கட்டிலில் கட்டி வைத்துள்ளனர், மேலும் எப்போதாவதுதான் உணவு வழங்கியுள்ளனர்.

அவர்களுடைய இணைய வகுப்பின்போது மட்டுமே சங்கிலிகள் அவிழ்க்கப்பட்டுள்ளன. ஆனால் அக்குழந்தைகள் மிக மிக தைரியசாலிகள், கடவுள்தான் அவர்களுக்கு அந்த தைரியத்தை அளித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சான்செஸ், பாபி மற்றும் எட்வினா ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை வருகிற 20ம் திகதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஒபாமாவின் குடும்ப வாழ்க்கையில் சர்ச்சை!!

Obama

அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கும்- அவரது மனைவி மிச்ஷெலுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கும், பிரான்ஸ் நாட்டு பிரபல பாடகி பெயோன்சேக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதனையடுத்து ஒபாமாவிற்கும், அவரது மனைவி மிச்ஷெலுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் ஒபாமாவிற்கும், பெயோன்சேற்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு ஜனாதிபதி ஒபாமா பதவிப் பிரமாணம் செய்துகொண்ட தருணத்தில், பெயோன்சே பாடல் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கற்பை காப்பாற்ற உயிரை தியாகம் செய்ய துணிந்த மாணவி!!

Abuseமேற்கு வங்க மாநிலம், மிட்னாபூர் அருகேயுள்ள டம்லுக் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பயணிகள் ரெயிலில் பயணம் செய்தார். அங்கு இளைஞர் குழுவினர் குறித்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றனர். இதன்போது அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடும் ரெயிலில் இருந்து குதித்த அப்பெண் படுகாயமடைந்தார்.

அந்த பயணிகள் ரெயில் மேற்கு மிட்னாபூர் அருகேயுள்ள பன்ஸ்குரா அருகே வந்தபோதே இந்த சம்பவம் நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் காயமடைந்த மாணவியை உடனடியாக மீட்டு அருகேயுள்ள டம்லுக் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது நிலைமை கவலைக்கிடமாவே உள்ளதாகவும் அதே சமயத்தில் அவர் குணமாகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கொல்கத்தா அருகே உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் கல்வி பயின்ற அந்த மாணவியை மானபங்கப்படுத்த முயற்சி செய்தவர்கள் அவரை கடத்தவும் முயன்றதாக அவரின் பெற்றோர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்தனர்.

 

விலைமாதுவுடன் இணைய எண்ணிய நபருக்கு நடந்த விபரீதம்!!

Proசுவிஸ் விபச்சார விடுதி ஒன்றில் 40 வயது நபர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். சுவிசின் டிகினோ நகரில் இருக்கும் “69 கபே” என்ற விபச்சார விடுதி இத்தாலிய வாடிக்கையாளர்களுக்காக தொடங்கப்பட்டதாகும்.

மொத்தம் 25 விலைமாதுக்கள் வேலை செய்யும் இவ்விடுதி, இத்தாலி நாட்டிற்கு வெகு அருகாமையில் இருப்பதால் இப்பகுதிகளில் பெரும்பாலும் இத்தாலிய மொழியே பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 8ம் திகதி இங்கிருக்கும் விலைமாது ஒருவருடன் 40வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தங்கியுள்ளார்.

அப்போது திடீரென மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவரை மருத்துவமனையில் அனுமதித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய பொலிசார், இவரது மரணத்தில் மர்மம் எதுவும் இல்லை என்றும் இது இயற்கையான மரணம் தான் எனவும் கூறியுள்ளனர்.

இதேபோல் கடந்த 2010ம் ஆண்டு பெல்லின் சோனா பகுதியில் விலைமாதுவின் அறையிலேயே ஒருவர் அகால மரணமுற்றது குறிப்பிடத்தக்கது.

 

தென்னாபிரிக்காவில் ஐபிஎல் போட்டிகள்!!

IPLஇந்தியாவில் 7வது சீசன் ஐபிஎல் போட்டிகள் தென்னாபிரிக்காவில் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் 7வது சீசன் போட்டி வருகிற ஏப்ரல் 9ம் திகதி முதல் ஜூன் 3ம் திகதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், பாதுகாப்பு அளிப்பதில் சிக்கல்கள் நிலவுகிறது. இதனையடுத்து ஐபிஎல் போட்டிகளை எங்கு நடத்தலாம் என்பது குறித்து, நிர்வாக குழு கூட்டம் பெங்களூரில் கலந்து ஆலோசித்தது.

கூட்டம் முடிந்த பின்னர் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல், ஐபிஎல் சேர்மன் ரஞ்சிப் பிஸ்வால் ஆகியோர் கூறுகையில், ஐபிஎல் போட்டியை இந்தியாவில் முழுமையாக நடத்துவதில் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்.

நாடாளுமன்ற தேர்தல் போட்டி நடைபெறும் காலகட்டத்தில் குறுக்கிட்டு பாதுகாப்பு பிரச்சினை எழுந்தால் தென்னாபிரிக்காவில் போட்டியை நடத்தும் திட்டம் உள்ளது. இந்த வகையில் மேலும் சில வெளிநாடுகளும் பரிசீலனையில் உள்ளது.

உள்துறை மற்றும் மத்திய அரசு அதிகாரிகளுடன் விரைவில் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். இந்தியாவில் அதிகபட்ச ஆட்டங்களை நடத்த வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். மத்திய அரசு பச்சைக்கொடி காட்டினால் முழு போட்டியும் இந்தியாவில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

 

 

காதலித்து திருமணம் செய்து கொள்வதுதான் சிறந்த வழி : ஆர்யா!!

Aarya

காதல் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகர் ஆர்யா கூறினார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில்..

காதல் என்பது இனிமையான உணர்வு. அனுபவத்தால் தான் தெரியும். காதலிப்பது மகிழ்ச்சியானது. உற்சாகம் தரக்கூடியது. நான் நிச்சயம் காதல் திருமணம்தான் செய்து கொள்வேன்.

காதலித்து திருமணம் செய்து கொள்வதுதான் சிறந்த வழி. காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன் பாடல் சிறந்த காதல் உணர்வு மிக்க பாடல்.

எனது நண்பர்கள் நடிகர் ஜீவா, சந்தானத்தின் காதல் கதைகள் என்னை மிகவும் கவர்ந்தன. இவர்கள் சினிமாவுக்கு வரும் முன்பே காதலித்தவர்கள்.

இப்போதும் மனைவியை காதலித்து கொண்டு இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. அது விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன் என்று ஆர்யா கூறினார்.

 

உண்மைக் காதலுக்கு எடுத்துக்காட்டாக வாழும் தம்பதியினர்!!

Love

காதலிப்பதற்கு ஊனம் ஒரு தடையல்ல, மாறாக காதல் செய்வதற்கு சிம்மாசனம் எனும் இதயம் கிடைத்தாலே அதில் நாம் அன்பான வாழ்க்கையை வாழ்ந்து ஜெயித்து விடலாம். இந்த உலகில் காதல் என்பது பொதுவான ஒன்றாகும், காக்கா குருவிகளுக்கு கூட வரும் காதல் ஏன் மாற்றுத்திறனாளிகளுக்குள்ளும் வரக்கூடாது.

சில மாற்றுத்திறனாளிகள் நாம் ஊனமாய் பிறந்துவிட்டோமே என்று தங்களுக்கென்று ஒரு சோதனை எனும் இருட்டான வட்டத்தை வரைந்து கொண்டு தங்கள் காலத்தை கழித்துவிடுவர். ஆனால் அவர்களுக்குள்ளும் சாதனைகள் எனும் வெளிச்சம் உண்டு, அந்த வெளிச்சம் நம்மேல் விழ நாம் தான் வட்டத்தை விட்டு வெளிவரவேண்டும் என்பதற்கு முன்னுதாரணம் தான் மோனிகா.

தன்னுடைய இரண்டு வயதிலேயே போலியோ எனும் நோயால் தன் இரண்டு கால்களையும் இழந்தவள் இவள். ஆனால் இவளுக்கென்று சில தனித்தன்மை உண்டு, அழகானவள், நன்றாக சமைப்பவள், அதைவிட எந்த செயலாக இருந்தாலும் கடினமாக உழைப்பவள்.

மேலும் தன் இரண்டு கைகளையே, காலாக மாற்றி இந்த உலகில் வலம் வரும் இவளுக்கு தாரா என்னும் அன்புச் சகோதரன் ஒருவன் இக்கிறார்.

பாதிரியாராய் இருக்கும் இவரின் நண்பன் தான் சாந்த், துணிதைப்பவராக இருக்கும் சாந்த் தன்னுடைய பணியை ஒரு போராட்டமாகவே நடத்தி வந்துள்ளார்.

ஏனெனில் போலியோவால் சாந்தில் ஒரு கால் பாதிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் தான் மோனிகாவை சந்தித்த சாந்த் அவளை தன் வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொள்ள முடிவெடுத்துள்ளான்.

தன் எதிர்காலம் குறித்த கேள்விக்குறித்து விடை கொடுத்தாள் மோனிகா, இவர்கள் இருவரும் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணபந்தத்தில் இணைந்து கொண்டு தங்கள் இல்லற வாழ்க்கையை நல்லறமாய் ஆரம்பித்துள்ளனர்.

 

லலித் கொத்தலாவலவின் 550 கோடி சொத்துக்கள் பறிமுதல்!!

Kotelawalaகோல்டன் கீ கிரடிட் காட் நிறுவனத்தின் தலைவர் தலைவர் லலித் கொத்தலாவல மற்றும் சிசிலி பிரியா கொத்தலாவல உட்ட பணிப்பாளர்களுக்கு சொந்தமான 550 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட சொத்துக்களையும் பணத்தையும் நீதிமன்றம் பறிமுதல் செய்துள்ளது.

மேலும் குறித்த நிறுவனத்தில் வைப்புச் செய்தவர்களுக்கு திருப்பி கொடுப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட கோல்டன் எஸ்.ஜீ.வி. நிறுவனத்திற்கு பணத்தினை மாற்றுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கு அமைய லலித் கொத்தலாவல குடியிருக்கும் எலிசபெத் மாவத்தையில் உள்ள வீடு, சிசிலி பிரியா கொத்தலாவல சட்டத்திற்கு முரணாக உறவினர்கள் சிலருக்கு வழங்கிய 46 கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியான எஸ்.என்ட்.எல். நிறுவனத்திற்கு சொந்தமான 15 கோடிரூபாவுக்கும் மேற்பட்ட அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் எஸ்.ஜீ.வி. நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

இதனை தவிர ரிசோட் என்ற நிறுவனத்தில் கொத்தலாவல தம்பதியினருக்கு சொந்தமான 50 வீத பங்குகள்.எஸ்.ஜீ.வி நிறுவனத்திற்கு வழங்கப்பட உள்ளது. இதனை தவிர செலிங்கோ காப்புறுதி நிறுவனத்தின் 350 கோடி ரூபா பெறுமதியான பங்குகள் எஸ்.ஜீ.வி. நிறுவனத்திற்கு வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு லலித் கொத்தலாவலவுக்கு சொந்தமான பல கோடி ரூபா பெறுமதியான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் எஸ்.ஜீ.வி நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறு பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், நீதியரசர்கள் கே.ஸ்ரீபவன், சந்திரா ஏக்கநாயக்க ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

கோல்டன் கீ கிரடிட் காட் வைப்பாளர்கள் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரணைக்கு எடுத்து கொண்ட போதே உயர்நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

பாலுமகேந்திரா உடல் தகனம் : அலையென திரண்டு வந்த சினிமா பிரபலங்கள்!!(படங்கள்)

மறைந்த பாலுமகேந்திரா அவர்களுக்கு பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திரைப்பட துறையை சேர்ந்த பாலசந்தர், பாரதிராஜா, இளையராஜா, மகேந்திரன், மணிரத்னம், வைரமுத்து, கமல்ஹாசன், சாருஹாசன், மோகன் சர்மா, விஜய், சூர்யா, சத்யராஜ், சிவகுமார், கே.வி.ஆனந்த், பி.வாசு, பார்த்திபன், நாசர், ஒய்.ஜி.மஹேந்திரா, அர்ச்சனா, ரேகா, குஷ்பூ ஆகியோரும்;

மற்ற துறைகளை சேர்ந்த காவல்துறை அதிகாரியும் எழுத்தாளருமான திலகவதி ஐ.பி.எஸ், வசந்த குமார்(காங்), ஜி.ராமகிருஷ்ணன்(மா.கம்யூ), ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். தமிழக ஆளுநர் ரோசய்யா, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ஆகியோரும் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

பாலு மகேந்திரா உடல் சாலி கிராமம் தசராபுரத்தில் உள்ள வீட்டில பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. நடிகர்–நடிகைகள், இயக்குனர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் அவரது உடல் பகல் 1 மணிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு போரூர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

12 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

 

பங்களாதேஷ் அணியை போராடி வென்ற இலங்கை தொடரை கைப்பற்றியது!!

SL

சிட்டகொங் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான பரபரப்பான 20- 20 போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் இன்றைய போட்டி இரு அணிகளின் ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

அந்தவகையில் இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன் அடிப்படையில் 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 120 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது பங்களாதேஷ். இவ்வணியில் அனாமுல் ஹக் 24 ஓட்டங்களையும் ஸபீர் ஹசைன் 26 ஓட்டங்களையும் அதிகூடுதலாக பெற ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

இலங்கை அணியின் பந்து வீச்சில் மாலிங்க மூன்று விக்கெட்டுகளை கைப்பற்ற குலசேகர மற்றும் சச்சித்திர சேனாநாயக ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து இலகுவான வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி மிகவும் போராட்டத்துக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 123 ஓட்டங்களை பெற்று மூன்று விக்கெட்டுகளால் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சாளர்களுக்கு முகம் முடியாத இலங்கை வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன ஆட்டமிழந்தனர். ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசேல் ஜனித் பெரேரா 21 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க டில்சான் 3, சந்திமால் 3, ஏஞ்சலோ பெரேரா 4, மெத்தியூஸ் 2, குலசேகர 2 ஓட்டங்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க குமார் சங்கக்கார மற்றும் திசர பெரேரா ஆகியோரின் நிதான ஆட்டத்தால் இலங்கை போராடி வெற்றி பெற்றது.

குமார் சங்கக்கார 37 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க திசர பெரேரா ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களை பெற்றார். மேலும் இறுதிப் பந்தில் வெற்றிக்கு இரு ஓட்டங்கள் தேவைப்பட்ட போது சச்சித்திர சேனாநாயக நான்கு ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக திசர பெரேரா தெரிவு செய்யப்பட்டதோடு தொடரின் ஆட்டநாயகனாக நுவான் குலசேகல தெரிவு செய்யப்பட்டார்.

 

சீன காதலர்களுக்கு அதிர்ச்சி அளித்த மனநோயாளி!!

China

காதலர் தினமான இன்று சீன காதலர்களுக்கு அதிர்ச்சிகரமான ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஷங்ஹாய் நகரத்தின் பிரதான திரையரங்கில் பீஜிங் லவ் ஸ்டோரி என்ற திரைப்படத்தை காதலர் தினத்தன்று ஒன்றாக பார்த்து ரசிக்கும் வாய்ப்பு சீனக் காதலர்களுக்கு கிடைக்கவில்லை.

ஏனெனில் இந்த திரையரங்கின் ஒற்றை இலக்க ஆசனங்கள் அனைத்தையும் ஒருவர் காசு கொடுத்து முன்பதிவு செய்துள்ளார். காதலர்கள் அடுத்தடுத்து அமர்வதை தடுப்பது அவரது நோக்கம்.

கடந்தாண்டு காதலி தம்மைப் புறக்கணித்து விட்டதால் இவர் மன கசப்புக்கு உள்ளாகி இருப்பதாக தெரிகிறது.

 

கணவரின் உடலை பார்த்து கதறிய மௌனிகா!! (படங்கள்)

நடிகை மௌனிகாவுக்கு தன் கணவர் மறைந்த பாலுமகேந்திரா உடலைப் பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிரபல இயக்குனர் பாலுமகேந்திரா 1998ம் ஆண்டு தாலி கட்டி மணந்தவர் நடிகை மௌனிகா. இதனை 2004ம் ஆண்டு பகிரங்கமாக உலகுக்கு அறிவித்திருந்தார்.

இருவரும் இணைந்து வாழ்ந்து வந்தனர். நேற்று திடீரென மாரடைப்பில் இறந்தார் பாலுமகேந்திரா. தகவலறிந்து, கணவர் உடலைப் பார்க்க ஓடிவந்த மௌனிகாவை, பாலுமகேந்திரா உடலைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது.

இயக்குநர் பாலா, நடிகைகள் அர்ச்சனா மற்றும் ஈஸ்வரி ராவ் போன்றவர்கள்தான் மௌனிகா அங்கு வரக்கூடாது என்று பிடிவாதமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் பரபரப்பு கிளம்பியது. பாலு மகேந்திரா மீது அவரது மனைவியான மௌனிகாவுக்கு இல்லாத உரிமையா. அதைத் தடுக்க இவர்கள் யார்? என்ற அளவுக்கு விவாதம் கிளம்ப, உடனடியாக இதில் சுமூகத் தீர்வு காண இயக்குநர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பேசினர்.

அதன்படி இன்று காலை மௌனிகாவை அழைத்து, பாலுமகேந்திரா உடலுக்கு அஞ்சலி செலுத்த அழைத்தனர். இதனைத் தொடர்ந்து அவர் பாலுமகேந்திரா உடல் வைக்கப்பட்டிருக்கும் அவரது சினிமா பட்டறை கூடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். கணவரின் உடலைப் பார்த்து கதறி அழுதார்.

01 1 2

 

 

“கண் விழியுங்கள் இந்துக்களே” : வவுனியாவில் துண்டுப்பிரசுரம்!!

Vavuniyaசிவசேனா என்ற பெயரில் கண்விழியுங்கள் இந்துக்களே, இந்து சமயம் அழிந்தால் அழியட்டும் என்ற எண்ணம் கொண்ட இந்து சமயத்தவரா நீங்கள்?ஆம் என்றால் இதை தொடர்ந்து வாசிக்காதீர்கள் என்ற தலைப்புடன் வவுனியா முழுவதும் துண்டு பிரசுரங்கள் போடப்பட்டிருந்தன.

இத்துண்டு பிரசரத்தில் இந்துக்கள் யாரும் மற்ற மதத்தினரை இந்து மதத்திற்கு மாற்ற முயற்சிப்பது இல்லை ,இந்துக்கள் மற்ற மதத்தவரின் பழக்கவழக்கங்களை தரகுறைவாக பேசுவதும் இல்லை , இந்துக்கள் பிற மத கடவுளர்களை தீய சக்திகளாக (சாத்தான்களாக) சித்தரிப்பதில்லை ,உலகின் பழமையான மதமாக இருந்தாலும் பெரும்பான்மையான மதமாக இல்லாத்தற்கு காரணம் நாம் படையெடுத்து சென்ற போதும் கட்டாய மதமாற்றம் செய்யாதது இருந்தும் எம்மை படையெடுத்து வந்த அந்நியர்கள் எம்மை கட்டாய மதமாற்றம் செய்தனர்.

இன்றும்கூட எம்மை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகின்றனர் இந்துமதம் எமக்கு தந்த சுதந்திரத்தை வேற்று மதத்தவர்கள் ஏன் எம்மவர்கள் கூட கொஞ்சம் கொஞ்சமாக வேட்டையாடி வருகின்றார்கள் இதே நிலை தொடர்ந்தால். எதிர்காலத்தில் நாம் அனைவரும் கழுத்தில் சிலுவையுடனும் தலையில் குல்லாவுடன் தான் திரிவோம்.

நாம் ஒன்றும் மற்ற மதத்தவர் போன்று மூளைச்சலவை செய்து மதம் மாற்றும் கொள்கையுடைய ஈனப்பிறவிகளல்ல எமக்கு வெளிநாட்டிலிருந்து மத அழிப்பிற்கென பண உதவியோ பொருளுதவியோ கிடைப்பதில்லை காதல் எனும் வலை விரித்து திருமணமெனும் ஆயுதத்தால் எம்மவரை மதம் மாற்றும் காமுகர்களும் நாமில்லை

இனியும் நாமிதை சுட்டி காட்டாதிருந்தால் நாம் கடவுளுக்கு செய்யும் துரோகமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

யுவராஜ் சிங்கை அதிக விலை கொடுத்து வாங்கியது ஏன்?

Yuvraj

7வது ஐபிஎல் போட்டியில் யுவராஜ் சிங்கை அதிகபட்சமாக 14 கோடிக்கு பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்தது. கடந்த ஐபிஎல் போட்டியில் புனே வாரியர்ஸ் அணிக்காக விளையாடினார்.

இந்நிலையில் 7வது சீசனில் இவரை பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் அணி 14 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதன் உரிமையாளர் விஜய் மல்லையா தனது கிங் பிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்களுக்கு கடந்த 17 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை.

ஊழியர்களின் போராட்டங்களை கண்டு கொள்ளாத இவர், விமானங்களை இயக்காததால் கடந்த டிசம்பர் வரை 822 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவித்தார். இந்த நிலையில் ஒரு தனிப்பட்ட வீரர் மீது 14 கோடியை முதலீடு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விஜய் மல்லையா கூறுகையில், யுவராஜ்சிங்கை வாங்க வேண்டும் என்பதில் எங்கள் அணியின் அணித்தலைவர் விராட் கோலி ரொம்ப ஆர்வமாக இருந்தார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக 4 கோடி கூடுதலாக போய் விட்டது.
ஆனாலும் ஏலத்தை தொடருவதா? முடிப்பதா என்பது ஏலம் நடத்துபவருக்கே உள்ள உரிமை.

கோலி, கெய்ல், டிவில்லியர்ஸ் ஏற்கனவே எங்களிடம் உள்ள நிலையில் யுவராஜ்சிங்கை வாங்கியதன் மூலம் எங்களது அணி மேலும் வலுவடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

 

 

இந்தியாவின் வேகத்தில் சுருண்ட நியூசிலாந்து அணி!!

India

இந்திய – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது.

இதில் இஷாந்த் சர்மா அபார பந்துவீச்சில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 192 ஓட்டங்கள் மாத்திரம் பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித தலைவர் டோனி களத்தடுப்பை தெரிவு செய்தார். நியூசிலாந்து அணியில் ராஸ் டெய்லர், சோதி ஆகியோருக்கு பதில் டாம் லதாம், ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் அறிமுக வீரர்களாக வாய்ப்பு பெற்றனர்.

தனது முதல் இனிங்சிற்காக களமிறங்கிய நியூசிலாந்து அணி துவக்கம் முதல் இஷாந்த் சர்மா வேகத்தை சமாளிக்க முடியாமல் ஆட்டம் கண்டது.

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 192 ஓட்டங்களுக்கு சலக விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா 6 விக்கெட் சாய்த்தார். முகமது ஷமி 4 விக்கெட் கைப்பற்றினார்.