தவறான பாலியல் முயற்சியில் ஈடுபட்ட இலங்கையர் மலேசியாவில் மரணம்!!

Malaysiaமலேசியா – கோலாலம்பூரில் உள்ள தொடர்மாடிக் குடியிருப்பில் இருந்து இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கடந்த வாரம் அளவில் உயிரிழந்திருக்கலாம் என கோலாலம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஒருபாலின நடவடிக்கையில் ஈடுபட முயற்சித்த வேளை குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
எனினும் அவர் கொலை செய்யப்பட்டாரா என விசாரணைகளை மேற்கொள்வதாக பொலிஸார் கூறினர்.

ஆனால் அவருடைய அறையில் கூறிய ஆயுதங்கள் எதுவும் மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 34 வயதுடைய இலங்கை பிரஜை சடலமாக மீட்கப்பட்டபோது படுக்கை அறையில் அரை நிர்வாண கோலத்தில் இருந்ததாக தெரியவருகிறது.

அறையின் உள்ளே பூட்டு போடப்பட்டிருந்ததாகவும் கதவை உடைத்து உள்சென்றே சடலம் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

ஐ.பி.எல் 07 இல் ஏலம் போகாத இலங்கை வீரர்கள் : யுவராஜ் சிங்கிற்கு அதிகபட்சமாக 14 கோடி!!

SL players

இலங்கை அணியின் முக்கியத்துவம் மிக்க வீரர்களான மஹெல ஜெயவர்த்தன, திலஹரத்ன டில்ஷான், அஜந்த மெண்டிஸ் மற்றும் அஞ்சலோ மெததியூஸ் ஆகியோரை இம்முறை ஐ.பி.எல் ஏலத்தில் எந்த அணியினரும் எடுக்க முன்வரவில்லை.

அத்துடன் நியூசிலாந்தின் முன்னாள் தலைவர் ரோஸ் டெய்லரும் ஏலத்தில் எடுக்கப்படாதது ஆச்சரியமே.

இன்று இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் 7 வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்றது. இதில் ஏலம் போகாத முக்கிய வீரர்கள் விவரம் வருமாறு..

அசார் மமூத் (பாகிஸ்தான்), முரளி கார்த்திக் (இந்தியா), பிரவீன்குமார் (இந்தியா) , அஜந்த மெண்டிஸ் (இலங்கை), ரொபின் பீட்டர்சன் (தென்னாபிரிக்கா), நாதன் மெக்குல்லம் (நியூசிலாந்து), திலஹரத்ன டில்சான் (இலங்கை).

முக்கியமாக முரளிதரன், திஷர பெரேரா தவிர வேறு எந்த இலங்கை வீரர்களும் இன்று ஏலம் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகபட்சமாக யுவராஜ் சிங் 14 கோடி இந்திய ரூபாய்க்கும் தினேஷ் கார்த்திக் 12 கோடி ரூபாய்க்கும் விலை போயுள்ளனர்.

 

அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் வீட்டில் 15 கிலோ எடை கொண்ட கிழங்கு!!

Mihithiri

அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கொழும்பில் கடந்த வருடம் வசித்து வந்த வீட்டின் தோட்டத்தில் பயிரிட்ட ஏஷூமா என்ற கிழங்கு பயிரில் இருந்து 15 கிலோ கிராம் எடை கொண்ட கிழங்கொன்றை அறுவடை செய்துள்ளார்.

விவசாய திணைக்களம் 1976 ம் ஆண்டு இந்த கிழங்கு இனத்தை இலங்கை அறிமுகம் செய்ததது. 5 அடி ஆழத்தில் பயிரிடப்படும் இந்த கிழங்கு பயிர் ஒரு வருடத்திற்கு பின்னர் விளைச்சாலை கொடுக்கும்.

தனது வீட்டில் தோட்டத்தில் அறுவடை செய்த கிழங்கு பார்த்த அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தான் மண்ணுக்கு தலை வணங்கி வாழும் நபர் என்பதால் மண்ணும் தனக்கு பதில் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

 

 

ஆபாச படம் ஓடிய திரையரங்கில் குண்டு வீச்சு : 12 பேர் பலி!!

Theatorபாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள பெஷாவரில் ஷாமா சினிமா என்ற பெயரில் திரையரங்கம் உள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் அதில் ஏராளமானவர்கள் சினிமா படம் பார்த்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த திரையரங்கம் மீது அடுத்தடுத்து 3 கையெறி குண்டுகள் வீசப்பட்டன. இதனால் சினிமா தியேட்டர் இடிந்தது. அங்கு புகையும் தூசியுமா இருந்தது.

தியேட்டரில் படம் பார்த்து கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இச்சம்பவத்தில் 12 பேர் பலியாகினர். 17 பேர் காயம் அடைந்தனர்.

அவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு தலிபான்கள் உள்பட வேறு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. இந்த தியேட்டர் அவாமி தேசிய கட்சியின் முன்னணி தலைவர்களின் குடும்பத்தினருக்கு சொந்தமானது.

இங்கு ஹிந்தி படங்கள் ஒளிபரப்படுவதால் தீவிரவாதிகள் அடிக்கடி மிரட்டல் விடுத்து வந்தனர். எனவே தியேட்டர் வாசலில் மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தும்படி பொலிசார் அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் தியேட்டர் நிர்வாகிகள் அதை கண்டு கொள்ளவில்லை.

தியேட்டரில் நடந்த குண்டு வீச்சு சம்பவத்துக்கு ஹிந்தி திரைப்படம் திரையிடுவது காரணமல்ல. அங்கு ஆபாச சினிமா படம் காட்டப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஏதோ ஒரு தீவிரவாத குழு குண்டு வீச்சு நடத்தியுள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

நாயைக் காணவில்லை : சோகத்தில் பெண் தீக்குளித்து மரணம்!!

Fireதான் ஆசையாக வளர்த்து வந்த நாயைக் காணவில்லை என்ற சோகத்தில் தமிழகத்தில் பெண் ஒருவர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னை கொருக்குபேட்டை ரங்கநாதம் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரது மனைவி ஷர்மிளா (35). இவர்களது வீட்டில் உயர்ரக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். அந்த நாய் கடந்த சில நாட்களுக்கு முன்னால் காணாமல் போய் விட்டதாம்.

ஆசையாக வளர்த்த நாயைக் காணவில்லையே என மன வருத்தத்தில் இருந்துள்ளார் ஷர்மிளா. இந்நிலையில் நேற்று முந்தினம் வீட்டில் யாருமற்ற நேரத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார் ஷர்மிளா.

ஷர்மிளாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தார், உடனடியாக அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு ஷர்மிளா உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

ஷர்மிளாவின் மரணம் குறித்துப் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்களுக்கு பாதுகாப்பளியுங்கள் : பொலிஸ் நிலையத்தில் மனு!!

lovers

நாளை மறுநாள் உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து மாணவர்கள் பொதுநல சங்க பொதுச் செயலாளர் ராமச்சந்திரன், 30க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் சென்று துரைப்பாக்கத்தை அடுத்த கண்ணகி நகர் பொலிஸ் நிலையத்தில் இன்று ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது,

பெப்ரவரி 14ம் திகதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. சென்னையிலும் இது தொடர்பான கொண்டாட்டங்கள் நாளை மறுநாள் நடைபெறும்.

நாளை மறுநாள் பொது இடங்களில் சந்தித்துக் கொள்ளும் காதலர்களுக்கு காவல் துறையினர் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். காதல் ஜோடிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் தடுக்க வேண்டும்.

காதலர் தினமான பெப்ரவரி 14ம் திகதி திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு, பொலிஸ் நிலையத்துக்கு வந்தால், அவர்களுடைய புகார் மனுக்களை ஏற்று பாதுகாப்பு வழங்க வேண்டும். எல்லை பிரச்சினையை காரணம் காட்டி திருப்பி அனுப்பக்கூடாது.

காதலர் திருமணங்களை ஆதரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காதல் பிரச்சினையால் கௌரவ கொலை நடைபெறாமல் தடுக்க வேண்டும். காதல் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்க வேண்டும். காதலர்களின் புகார் மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

 

எம்.ஜி.ஆர். நினைவாக கட்டிய கோவிலை இடிக்க 2 வார அவகாசம்!!

Chennசென்னை பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் உயர் நீதிமன்ற நுழைவு வாயில் அருகே ஸ்ரீநீதி கருமாரியம்மன் கோவில் உள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற போது அவர் குணமடைய வேண்டும் என்று இந்த கோவில் கட்டப்பட்டது.

இந்த கோவில் நடைபாதையில் உள்ளதாகவும், இதை இடிக்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்று டிராபிக் ராமசாமி பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இந்த கோவிலை இடிப்பதற்கு சென்னை மாநகராட்சிக்கு கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டது. ஆனால் இந்த கோவில் இடிக்கப்படவில்லை.

இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை டிராபிக் ராமசாமி தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார் அக்னி ஹோத்ரி, கே.கே.சசிதரண் ஆகியோர் கோவிலை புதன்கிழமை (இன்று) மதியம் 2 மணிக்குள் இடிக்க வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டனர்.

இதையடுத்து தமிழக அட்வகேட் ஜெனரல் சோமயாஜி இன்று நீதிபதிகள் முன்பு ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் பொது இடங்களில் உள்ள கோவில் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் இந்த கோவிலை இடிக்க கால அவகாசம் வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் கோவிலை இடிக்க வேண்டும் என்கிற தங்களது உத்தரவை அமுல்படுத்துவதற்கு சென்னை மாநகராட்சிக்கு 2 வாரம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.

இதற்கிடையே எம்.ஜி.ஆர் நினைவாக கட்டப்பட்ட கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் இன்று கோவில் முன்பு உண்ணாவிரதம் இருந்தனர்.

 

மன்னாரில் துப்பாக்கியுடன் இளைஞர் கைது!!

Mannarஅனுமதிப் பத்திரமின்றி துப்பாக்கி வைத்திருந்த ஒருவர் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நேற்று மன்னார் பெரியகரசல் பிரதேசத்தில் வைத்து இவர் கைதாகியுள்ளார்.

சந்தேகநபர் அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இவர் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

 

 

யாழ். டில்லு குழுவில் சேர்ந்து செயற்பட்ட தென் பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது!!

Arrestedயாழில் கைது செய்யப்பட்ட டில்லு குழுவுடன் சேர்ந்து இயங்கிய தென்னிலங்கையை சேர்ந்த நால்வர் நேற்றைய தினம் வட்டுக்கோட்டை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு பேரும் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் ஒருவர் விமானப்படையில் இருந்து விலகியவர் எனவும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜா-எல பகுதியை சேர்ந்த இருவரும் கொட்டாவப் பகுதியை சேர்ந்த ஒருவரும் அங்கொடையை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை டில்லு குழு என்னும் 9 பேரை கொண்ட குழுவொன்றை கொக்குவில் தலையாளி பகுதியில் பதுங்கியிருந்த போது பொலிசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு இராணுவ சீருடை உட்பட வாள்கள் கத்திகள் என்பன கைப்பற்றப்பட்டிருந்தன.

அவர்கள் அனைவரும் மறுநாள் மல்லாகம் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு நால்வர் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் ஏனைய ஐவரையும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந் நிலையில் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிசார் டில்லு குழு கைது செய்யப்பட்ட கொக்குவில் தலையாளி பகுதியில் வைத்தே இந்த நான்கு பேரையும் நேற்றைய தினம் கைது செய்தனர்.

இவர்கள் நால்வரும் தொடர்ந்து பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கபடுகின்றது.

 

சகோதரர்களின் மொத்த வயது 855 :கின்னஸ் சாதனைக்குத் தகுதி!!

Kinnas

லண்டனில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 சகோதரர்களின் வயதுக் கூட்டுத்தொகை 855 வருடங்கள். இந்த குடும்பம் உலகத்தின் மூத்த குடும்பம் என கின்னஸ் குழு அறிவித்துள்ளது.

இங்கிலாந்தின் மிடில்ஸ்பிரக் நகரில் வசித்து வரும் 68 முதல் 89 வயதுள்ள புருட்நெல் சகோதரர்கள் தான் இந்த சாதனைக்கு சொந்தக்காரர்கள்.

ராபர்ட் (68), ஜான் (69), ஜீன் (71), மேரியன் (74), ஜேம்ஸ் (76), வின்சென்ட் (78), மே (79), மேரி (80), வின்பிரெட் (83), வில்லியம் (88) மற்றும் பெர்னாடெட்டி (89) ஆகிய இந்த சகோதர-சகோதரிகள் சிறு வயதில் இருந்ததைப் போலவே இப்போதும் இணைந்திருக்கிறார்கள்.

இதுபோன்று அதிக வயதுள்ள சகோதரர்கள் கொண்ட எந்த ஒரு குடும்பம் பற்றிய தகவலும் இதுவரை வரவில்லை என்று கின்னஸ் உலக சாதனைக் குழு கூறியுள்ளது.

இதற்கு முந்தைய சாதனையாக, 9 சகோதரர்களின் வயது கூட்டுத்தொகை 828 ஆண்டுகளாக இருந்தது. எனவே, இந்த சாதனையை முறியடிக்க தகுதி பெற்றுள்ள புருட்நெல் குடும்பம், கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற விண்ணப்பிக்கலாம் என்று கின்னஸ் குழு தெரிவித்துள்ளது.

 

சட்டவிரோதமான முறையில் நியூஸிலாந்து செல்ல முயன்ற 75 பேர் கைது!!

Arrestசட்டவிரோதமான முறையில் நியூஸிலாந்து செல்ல முயன்ற மட்டக்களப்பு மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 75 பேரை பேருவளை, மொரகல்ல எனுமிடத்தில் வைத்து இன்று அதிகாலை 1.15 க்கு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களில் ஆண்கள் 60 பேரும், பெண்கள் 9 பேரும்,சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் மூவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

உண்மையான காதலுக்கு உலகிற்கு எடுத்துக்காட்டாக வாழும் தம்பதி!(படங்கள்)

டெல்லியில் அசிட் வீச்சால் வாழ்க்கையை இழந்த பெண்ணுக்கு சமூக ஆர்வலர் ஒருவர் மறுவாழ்வு கொடுத்துள்ளார்.

இந்தியாவின் தலைநகரம் டெல்லியை சேர்ந்தவர் லஷ்மி(24).
9 ஆண்டுகளாக தைரியமாக வெளியே வரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் அழகு பெண், பார்ப்பவர்களுக்கு வினோத பொருளாய் தென்படுகிறார்.

இதற்கெல்லாம் என்ன காரணம், யாரால் நேர்ந்தது என்று ஆராய்ந்தால் மிக கொடுமையான சம்பவம் அவளது வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது என்பது தான் உண்மை.

பள்ளிப்பருவ காலத்தில் குடும்பம்- நண்பர்கள் என அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டு பட்டாம்பூச்சி போன்று சிறகடித்து கொண்டிருந்த காலம் அது.

15 வயதான போது, பக்கத்து வீட்டு தோழியின் சகோதரன் காதலிப்பதாய் கூறியுள்ளார். அத்தருணத்தில் காதலையும், காதலிப்பதாய் சொன்ன நபரையும் வெறுத்து ஒதுக்கியுள்ளார், பல்வேறு முயற்சிகள் செய்தும் அவ்விளைஞனின் முயற்சிகள் தோல்வியில் முடிந்து போனது.

இதனால் கோபமடைந்த அவ்விளைஞன், லஷ்மியின் மீது அசிட்டை ஊற்றியுள்ளான். துடிதுடித்துப் போனாள், இதன்பின் பத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டும் பலனில்லாமல் போனது.

எந்தவொரு ஆண்மகனும் திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை. காலங்கள் கடந்து போக, அலுவலகம் ஒன்றில் பணிக்கு சேர்ந்தாள். அங்கு தான் அவளுக்கு அலோக் தீக்ஷித் என்ற சமூக ஆர்வலரின் நட்பு கிடைத்தது.

லஷ்மியின் வாழ்க்கையில் நடந்த சோகம், அலோக் மனதில் நீங்கா வடுவாய் இருந்தது. அவளை தனது துணைவியாக ஏற்றுக்கொள்ள தீர்மானித்தார், லஷ்மியின் சம்மதத்தை கேட்டுள்ளார்.

ஆனால் லஷ்மியோ தன்னைவிட அழகிலும் அறிவிலும் உயர்ந்தவர் என்ற காரணத்தால் திருமணத்திற்கு மறுத்துவிடுகிறார்.
உடனே சமூகத்தின் பார்வையில் கணவன்- மனைவி என்ற கோட்பாட்டிற்குள் நாம் நுழையாமல் நம் வாழ்க்கையை தொடருவோம் என்று அலோக் கூறவே, பச்சைக் கொடி காட்டியுள்ளார் லஷ்மி.

இருவரும் மிக சந்தோஷமாக தங்களது இல்லற வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் காதல் என்ற பெயரில் அரங்கேறிவரும் கொடூரங்களுக்கு மத்தியில் இப்படியான காதலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

L1 L2 L3 L4

 

புதுக்குடியிருப்பில் விபத்தில் தாயும் மகளும் மரணம்!!

Accidentமுல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் கோம்பாவில் 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த 26 வயதான ஆனந்த் சாதனா என்ற தாயும், 03 வயதான ஆனந்த் யதுசிகா என்ற அவரது மகளும் மரணமடைந்ததாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் இந்த விபத்தில் படுகாயமடைந்த ரதி என்ற பெண் புதுக்குடியிருப்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் எரிபொருள் நிலையத்தில் மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் நிரப்பி விட்டு புறப்பட்ட போது, எதிரே வந்த கன்டர் ரக வாகனம் மோதி விபத்து சம்பவித்ததாகவும் இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் மகளும் மரணமடைந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இதனைத் தொடர்ந்து கன்டர் ரக வாகனச் சாரதியை கைது செய்ததாகவும் பொலிஸார் கூறினர். இவர்களின் சடலங்கள் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர். இது தொடர்பில் விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

 

 

அடிதடி சண்டையில் ஈடுபட்ட நியூசிலாந்து வீரர்கள்!!

NZ

ஆக்லாந்தில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி 40 ஓட்ட வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த டெஸ்டுக்கான நியூசிலாந்து அணியில் நட்சத்திர பேட்ஸ்மேன் 29 வயதான ஜெஸ்சி ரைடர், 23 வயதான வேகப்பந்து வீச்சாளர் டக் பிரேஸ்வெல் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

இருப்பினும் களம் இறங்கும் ஆடும் லெவன் அணியில் இவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ரைடரும், பிரேஸ்வெல்லும் அடிதடி சண்டையில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. இவர்கள் இருவரும் ஆக்லாந்து டெஸ்ட் தொடங்குவதற்கு முந்தைய நாள் இரவில் அங்குள்ள பாருக்கு சென்று அதிகாலை மது அருந்தி கும்மாளம் போட்டுள்ளனர்.

போதை உச்சிக்கு ஏறிய நிலையில் திடீரென அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பில் முடிந்துள்ளது. இதில் ரைடருக்கு கையிலும், பிரேஸ்வெல்லுக்கு காலிலும் காயம் ஏற்பட்டுள்ளது.

இவர்களது நடத்தையை கண்டு கடும் கோபம் அடைந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையின் போது, இருவரும் தங்களுக்குள் சண்டை போட்டதை ஒப்புக் கொண்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களை அனுப்புவதை தடுப்பது பற்றி பரிசீலனை!!

Housemaidமத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களை அனுப்பும் நடவடிக்கைக்கு தடை விதிக்க இலங்கை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகள் மாத்திரமன்றி வேறு வெளிநாடுகளுக்கு இலங்கை பணிப்பெண்களை அனுப்புதல் மட்டுப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த விடயத்தை குவைத்திற்கு இலங்கை தூதுவர் சி.ஏ.எச்.எம்.விஜேரட்ன தெரிவித்தார். குவைத்தில் மொத்தமாக 130,000 இலங்கையர்கள் பணியாளர்களாக உள்ளனர். அவர்களில் 80 ஆயிரம் பேர் வீட்டுப்பணியாளர்களாக செயற்படுகின்றனர்.

பணிப்பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதன் மூலம் சமூக குடும்ப பிரச்சினைகள் பெருமளவில் அதிகரித்துவதாக குவைத்திற்கான இலங்கை தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

ஆங்கிலத்தில் ‘கமா’வை நீக்கி விட யோசனை!!

Commaஆங்கிலத்தில் காற்புள்ளியை (,) நீக்கிவிடலாம் என்று கொலம்பிய பல்கலைக்கழகம் பரிந்துரை செய்துள்ளது. வாக்கியங்களை படிக்கும் போது எங்கெங்கு நிறுத்தி படிக்க வேண்டும், எப்படி படிக்க வேண்டும், எங்கு முடிக்க வேண்டும் என்பதற்கு உதவி செய்வது நிறுத்தல் குறியீடுகள்.

அதுபோல் கமா என்றழைக்கப்படும் காற்புள்ளி, அரை புள்ளி, முற்றுப்புள்ளி, ஆச்சரிய குறி, கேள்வி குறி போன்ற பல குறியீடுகள் மொழியில் பயன்படுத்தப்படுகின்றன.

அவற்றில் காற்புள்ளியை ஆங்கிலத்தை பயன்படுத்தும் புதிய தலைமுறையினர் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை என தெரிய வந்துள்ளது. இதுகுறித்து கொலம்பிய பல்கலைக்கழக ஆங்கில மொழி துறை பேராசிரியர் ஜான் மெக்வொர்ட்டர் கூறுகையில்..

தற்போது இணையதளங்களில் எழுத வந்துள்ள புதிய தலைமுறையினர் பெரும்பாலும் நிறுத்தல் குறிகளை பயன்படுத்துவதில்லை. புதிய தலைமுறை எழுத்தாளர்களும் ஆங்கிலத்தை பயன்படுத்தும் போது பெரும்பாலான இடங்களில் நிறுத்தல் குறிகளை பயன்படுத்த விரும்பு வதில்லை.

இதனால் ஒரு சில இடங்களில் அர்த்த மயக்கம் ஏற்பட்டாலும் பொருள் பெரும்பாலும் மாறுவதில்லை. எனவே, புதிய காற்புள்ளி உள்ளிட்ட நிறுத்தல் குறிகள் தேவையில்லை என்று மொழி வல்லுனர்கள் பலர் தெரிவித்துள்ளனர். எனவே காற்புள்ளி போன்ற நிறுத்தல் குறிகளை நீக்கி விடலாம் என்று தெரிவித்துள்ளார்.