அல்ஜீரியா நாட்டில் ராணுவத்தின் குடும்பத்தினர்களை சுமந்து சென்ற விமானம் ஒன்று நேற்று விபத்துக்கு உள்ளனது.
அல்ஜீரிய நாட்டு அரசுத்துறை வானொலி தெரிவித்த தகவல்படி, அவர்களில் 99 பேர் உயிரிழந்ததாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகள் என இதில் 123 பேர் பயணம் செய்துள்ளனர்.
இந்த விமானம் தெற்கு அல்ஜீரியாவில் உள்ள டாமன்ராசெட் பகுதி வெர்க்லா விமானநிலையத்தில் இருந்து கிழக்குப் பகுதியில் உள்ள செடிப் நோக்கிச் சென்றுகொண்டிருந்து. அந்தப் பகுதியில் வீசிய பனிப்புயலால் விமானம் திசை தெரியாமல் கீழே விழுந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் தற்போது விளையாட்டை விட நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஏற்கனவே இந்திய அணியின் இளம் அதிரடி கிரிக்கெட் வீரர் வீராட் கோலி நியூசிலாந்தில் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவுடன் ரொமான்ஸில் ஈடுபட்டு வருகிறார்.
இதேபோல இந்திய அணியின் மூத்த வீரரான யுவராஜ் சிங்கும் நடிகை நடிகை நேகா தூபியாவுடன் ரொமான்ஸ் செய்து வருகிறார். இருவரும் பல இடங்களில் ஒன்றாக ஊர் சுற்றியுள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்த பிரித்தானிய கணவன் மற்றும் மனைவி கடந்த வருடம் தமிழகத்தில் வைத்து கடத்தப்பட்ட சம்பவத்துடன் இருக்கும் தொடர்புகள் குறித்து லண்டன் ஸ்கெட்லன்ட் யார்ட் பொலிஸார், சென்னை பொலிஸ் ஆணையாளருடன் கலந்துரையாடியுள்ளனர்.
இந்த பிரித்தானிய பிரஜைகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸின் ஆட்கடத்தல் மற்றும் விசேட விசாரணை பிரிவின் அதிகாரிகளான கிரிக் மெக்கி மற்றும் மார்க் ஹியூக்ஸ் ஆகியோர் சென்னை பொலிஸ் ஆணையாளர் எஸ்.ஜோர்ஜை சந்தித்து சம்பவம் குறித்து நடைபெற்று வரும் விசாரணைகள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை லண்டனில் நடைபெறும் விசாரணைகளுக்காக பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதன் போது பிரித்தானியாவின் தேசிய குற்றவியல் முகவர் அமைப்பின் சஞ்சய் மைனி, டெல்லியில் உள்ள பிரித்தானிய தூதரகத்தின் பிரதிநிதியும் இதன் போது உடனிருந்துள்ளனர்.
2.58 கோடி ரூபா கப்பம் கேட்டு இலங்கை வம்சாவளியான கணவன் மற்றும் மனைவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை பிரஜை உட்பட 9 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் ஒருவரை லண்டன் பொலிஸார் கைது செய்திருந்ததுடன் அவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்ற விசாரணைகளை அவர் எதிர்நோக்கியுள்ளார்.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் சென்னை பொலிஸாரும் ஸ்கெட்லண்ட் யார்ட் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். தமிழகத்தில் கடத்தப்பட்ட பிரித்தானிய பிரஜைகள் கூடலூர் மந்தாரகுப்பம் பகுதியில் வைத்து மீட்கப்பட்டனர்.
2013 மே மாதம் 29 ஆம் திகதி 59 வயதான தவராஜா அவரது மனைவியான 55 வயதான சலஜா ஆகியோர் கொழும்பில் இருந்து சென்னை சென்றிருந்த நிலையில், விமான நிலையத்திற்கு அருகில் வைத்து காணாமல் போயினர்.
இனந்தெரியாத நபர் ஒருவர் லண்டனில் உள்ள இவர்களின் மகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெற்றோரை விடுவிக்க 3 லட்சம் பவுண்களை கப்பமாக கோரியிருந்தனர்.
அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவும், பிரபல பொப் பாடகி பியான்சும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஒலாந்துக்கும், நடிகை ஜூலியட் கேயட்டுக்கும் இடையேயான ரகசிய உறவுகள் அம்பலமாகின.
இந்நிலையில் பிரெஞ்சு போட்டோகிராபர் வெளியிட்டுள்ள படங்களை வைத்து பிரெஞ்ச் மீடியாக்கள் ஒபாமாவுக்கும் பியானஸ்க்கும் இடையே காதல் என வதந்தியை கிளப்பி உள்ளன.
அமெரிக்க செய்தி நிறுவனமும் இதேபோன்றதொரு செய்தியை வெளியிட்டுள்ளது. ஒபாமாவுக்கும், பியாயோன்சுக்கும் இடையே 20 வருட வயது வித்தியாசம் உள்ளது.
ஒபாமாவும் அவரது மனைவி மிக்ஷேல் ஒபாமாவும் தங்களது 21வது திருமண நாளை சமீபத்தில் தான் வெகு சிறப்பாக கொண்டாடினர், இந்த விழாவில் பியாயோன்சும் கலந்து கொண்டார்.
பொலிவுட் நடிகை மேக்னா பட்டேல், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்து நிர்வாண போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
பாலிவுட் நடிகை மேக்னா பட்டேல் என்பவருக்கு திடீர் என்று பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது.
இதையடுத்து அவர் மோடிக்கு ஆதரவாக நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
உடம்பில் ஆடையே இல்லாமல் நின்று கொண்டு நரேந்திர மோடிக்கு வாக்களியுங்கள் என்ற வாசகம் அடங்கிய பிளக்கார்டை கையில் பிடித்து போஸ் கொடுத்துள்ளார்.
மேலும் பாஜகவின் சின்னமான தாமரையை தன் உடலில் வைத்துக் கொண்டு மோடிக்கு வாக்கு சேகரிக்கிறார். பப்ளிசிட்டிக்காக இந்த நடிகை இப்படி செய்துள்ளதாக பலரும் விமர்சிக்கிறார்கள்.
நடிகை மேக்னா தன்னை பிரபலமாக்கிக் கொள்ள திடீர் என்று மோடிக்கு ஆதரவு திரட்டுகிறேன் என்ற பெயரில் நிர்வாண போட்டோஷூட் நடத்தி பலரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிராவில் மனைவி தீக்குளித்த போது கணவர் பார்த்துக்கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் கஞ்சூர்மார்க் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய். இவரது மனைவி சஞ்சனா கோல்வாங்கர். இத்தம்பதிக்குத் திருமணமாகி 7 வருடமாகி விட்டது. சஞ்சனாவை, அவரது மாமியார் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர், மேலும் வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்துள்ளனர்.
இதனால் சஞ்சனா வேதனையில் இருந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று சஞ்சனா தனது கணவர் வீட்டில் தீக்குளித்து விட்டார். இதையடுத்து உடல் முழுவதும் எரிந்த நிலையில் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு நான்கு நாள் சிகிச்சைக்குப் பின்னர் சஞ்சனா மரணமடைந்தார். மரணமடைவதற்கு முன்பு அவர் பொலிசாருக்கு மரண வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதில் அன்று எனக்கும், கணவர் வீட்டாருக்கும் இடையே மோதல் வெடித்தது. அப்போது வேதனையில் நான் மண்ணெண்ணை ஊற்றி தீவைத்துக் கொண்டேன். அப்போது எனது கணவர் நான் எரிவதை ரசித்துப் பார்த்தார். தீயை அணைக்க அவர் முன்வரவில்லை.
நான் வலியால் துடித்தபோதும் எனது கணவர் அமைதியாக இருந்தாரே தவிர காப்பாற்ற முயலவில்லை. கடைசியில்தான் எனது உடலில் தண்ணீரை ஊற்றி மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர் என்றும் எனது முடிவுக்கு கணவர், மாமியார் வனிதா, கணவரின் அக்காள் பிரகதி ஆகியோர்தான் காரணம் எனவும் கூறியுள்ளார். சஞ்சனாவின் மரணத்தைத் தொடர்ந்து தற்போது பொலிசார் இந்த மூவரையும் கைது செய்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி கடந்த இரண்டரை ஆண்டுகளாக வெளிநாடுகளில் தோல்வியை சந்தித்து வருகின்றது.
நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் டோனி தலைமையிலான இந்திய அணி 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரை 0–4 என்ற கணக்கில் இழந்தது.
2 டெஸ்ட் போட்டித் தொடரில் ஆக்லாந்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்றது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் டெஸ்டில் சந்திக்கும் 10வது தோல்வியாகும்.
இந்திய அணி கடைசியாக 2011ம் ஆண்டு யூன் மாதம் மேற்கிந்தி அணிக்கு எதிரான கிங்ஸ்டன் டெஸ்டில் 63 ஓட்டங்களில் வெற்றி பெற்றது. அதன் பிறகு இந்திய அணி வெளிநாட்டு மைதானத்தில் இதுவரை வெற்றி பெறவில்லை.
இங்கிலாந்துக்கு எதிராக 4 டெஸ்டிலும், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்டிலும் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ஒரு டெஸ்டிலும், தற்போது நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டிலும் தோற்றது.
இந்த 10 தோல்விகளும் டோனி தலைமையில்தான் கிடைத்தது. அதற்கு முன்பு அவரது தலைமையிலான அணி 2010ம் ஆண்டு தென் ஆபிரிக்காவுக்கு எதிரான செஞ்சூரியன் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 25 ஓட்டங்களில் தோற்றது.
டோனி தலைமையில் இந்திய அணி வெளிநாட்டில் 11 டெஸ்டில் தோற்றுள்ளது. இது மோசமான நிகழ்வாகும். இதற்கு முன்பு கங்குலி, பட்டோடி, அசாருதீன் ஆகியோர் தலைமையில் வெளிநாட்டு மைதானத்தில் இந்திய அணி தலா 10 டெஸ்டில் தோற்று இருந்தது.
அதற்கு அடுத்தபடியாக பிஷன்சிங் பெடி 8 டெஸ்டிலும், கவாஸ்கர், டெண்டுல்கர் தலா 6 டெஸ்டிலும் வெளிநாட்டில் தோல்வியை சந்தித்தன.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகை மகா எசல பெரஹெரவில் பதினைந்து வருடங்களாக புனித தந்த தாதுவை தாங்கி சென்ற வேவலதெனிய ராஜா யானை நேற்று இரவு 9.45 மணியளவில் உயிரிழந்துள்ளது.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகை மகா எசல பெரஹெரவுக்கு மிகப்பெரிய சேவை செய்த வேவலதெனிய மஹிந்தோதய விகாரைக்கு சொந்தமான ராஜா யானை இறக்கும் போது அதற்கு வயது 55 ஆகும்.
இது குறித்து மேற்படி விகாரையின் நிர்வாக குழு தலைவரான சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் கருத்து தெரிவிக்கையில்,
உயிரிழந்த ராஜா யானை தென் மாகாணத்தின் அகுனுகொலபெலஸ் பிரதேசத்தில் பிடிக்கப்பட்டு 1976ஆம் ஆண்டு அப்போதைய உல்லாசப் பிரயாணத்துறை அமைச்சராக இருந்த பீ.பீ.ஜீ.களுகல்லவின் ஊடாக வேவலதெனிய விகாரைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.
மேற்படி ராஜா யானை கேகாலை பொஸன் மகா பெரஹெர, கண்டி ஸ்ரீ தலதா மகா பெரஹெர, கங்காராம, பெல்லன்வில, களனி, ,ரத்தினபுரி மகா சமன் தேவாலயம், கதிர்காமம், தெஹியோவிட்ட, ரம்புக்கன, மாவனல்ல, ஹெம்மாத்தகம போன்ற மகா பெரஹெரவில் புனித சின்னத்தை தாங்கி சென்ற பிரதான ராஜா யானை இதுவாகும்.
கடந்த சில காலங்களாக வேவலதெனிய ராஜா யானை நோய்வாய்பட்ட நிலையில் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சொந்தமான பல்லேகல பௌத்த விகாரையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று உயிரிழந்துள்ளது.
மேற்படி ராஜா யானை மறைவு கண்டி ஸ்ரீ தலதா மாளிகை உட்பட நாட்டின் பல்வேறு பௌத்த ஆலயங்களுக்கு பெரும் பேரிழப்பாகும் என்று மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் தெரிவித்தார்.
உயிரிழந்த ராஜா யானை இன்று பல்லேகல பௌத்த விகாரையில் அடக்கம் செய்யப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த யானையை பாராளுமன்ற உறுப்பினர் கணக ஹேரத், வேவலதெனிய மஹிந்தோதய விகாரையின் பிரதம குரு, ஹெம்மாத்தகம ஸ்ரீ சிந்தார்த்த நாஹிமி உட்பட முக்கிய அதிகாரிகள் பலர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
நடிகர்கள் சிவகுமார், விஷால், சந்தானம், நாசர், போன்றோருக்கு மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. கையெழுத்து இல்லாமல் மொட்டை கடிதங்களாக இவை அனுப்பப்பட்டு உள்ளன. இது கோழைத்தனம் என்றும் மிரட்டல் கடிதங்கள் எழுதியவர்கள் மீது போலீஸ் மூலம் நடவடிக்கை எடுப்போம் என்றும் நடிகர் சங்கம் எச்சரித்து உள்ளது.
மிரட்டல் கடிதங்களை நடிகர்கள் தற்போது வெளியிட்டு உள்ளனர். விஷாலுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் கூறியிருப்பதாவது..
பிழைப்பு தேடி ஆந்திராவை விட்டு ஓடிவந்து தமிழ்நாட்டில் ஒண்டியது மட்டும் அல்லாமல் சூப்பர் ஸ்டாராக ஆகவும் கனவு காண்கிறாய். சொந்த தயாரிப்பில் கதாநாயகனாக நடித்தாலும் தகுதியான பொருத்தமான வேஷம் கொடுத்தவர் இயக்குனர் பாலா.
தோற்றுப்போன நடிகர்களையும் திருவிழாவில் காணாமல் போன குழந்தைகள் போல் அலைகின்ற பெயர் தெரியாத நடிகர்களையும் கூட்டமாக சேர்த்துக் கொண்டு வந்தால் நீ பெரிய ஆளா?. நாசர், சந்தானத்துடன் சேர்ந்து வந்தாலும் நீங்கள் புல்லை போன்றவர்கள். சாய்ந்ததுபோல் சாய்ந்து மழை பெய்தவுடன் திரும்பவும் தளிர் விடுவீர்கள். சங்கத்தின் நலனுக்காக உங்களை வேறொடு பிடுங்கி எறிவோம். வந்தாய் ஒண்டினாய், சொந்த படம் எடுத்து கதாநாயகனாக இருக்கிறாய் அத்தோடு இருந்துகொள் என்று குறிப்பிட்டு உள்ளது.
உனக்கு என்.எஸ்.கிருஷ்ணன், கே.ஏ.தங்கவேலு, காக்கா ராதாகிருஷ்ணன், நாகேஷ், சுருளிராஜன், கவுண்டமணி, சார்லி போன்ற மாபெரும் நகைச்சுவை நடிகர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியுமா, தெரிந்துகொள். எங்களைபோல் நாடக நடிகர்களாக இருந்தவர்கள். நீ எந்த அட்ரசோடு யார் ஏமாந்தான் என்று நடிகனானாய். ஏதோ மக்கள் ஏமாந்தார்கள். என்று காலம் ஓட்டுகிறார்.
வீணாய் போன நாசரோடு சேர்ந்து கூச்சல் போடுகிறார். ஆனானப்பட்ட வடிவேலுவே ஓரங்கட்டப்பட்டார். நீ எம்மாத்திரம். தெருவோடு போகிற நாய்களோடு சேர்ந்து குரைப்பதை நிறுத்திக்கொள். காமெடியனுக்கு குரல்தான் முக்கியம். அந்த குரலை பிழைப்புக்காக மட்டும் பயன்படுத்து என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
நாசருக்கு வந்துள்ள கடிதம் விவரம் வருமாறு..
நடிகர் சங்கத்தை காட்டிக்கொடுத்த ஒண்ணரைக் கண்ணன் குமரிமுத்துக்கு குரல் கொடுக்கிறீர்கள். சங்க நிர்வாகிகள்மீது அபாண்டமாக பழி சுமத்துகிறீர்கள். நேற்று முளைத்த நடிகர்களை சேர்த்து வைத்து சண்டைக்கு வருகிறீர்கள். இவர்களுக்கு சினிமாவில் சண்டை போடவே டூப் தேவைப்படுகிறது. ஹீரோவாகும் தகுதி இல்லை.
பிழைப்புக்காக மாநிலம் விட்டு மாநிலம் போகிறீர்கள். ஊர் ஊராக பிச்சை பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அலை குரல் எழுப்பினால் பாத்திரம் ஏந்த முடியாமல் போகும். தேவர் மகனில் வடிவேல் சொன்ன வாசகம் ஞாபகம் இருக்குமே என்று நினைக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த கடிதங்கள் திரைப்பட நாடக நடிகர்கள் மதுரை என்ற பெயரில் இருந்து வந்துள்ளது.
இயக்குனர் டி.ராஜேந்தரின் மகள் இலக்கியா எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர். இவருக்கும் அபிலாஷ் சிங்கப்பூருக்கும் சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் கிறிஸ்தவ முறைப்படி நேற்று திருமணம் நடந்தது.
தி.மு.க.தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், முன்னாள் மத்திய மந்திரிகள் தயாநிதி மாறன், டாக்டர் அன்புமணி ராமதாஸ், தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மலேசிய இந்திய ஐக்கிய கட்சியின் தேசிய தலைவர் டத்தோ கே.எஸ்.நல்லா, புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், டி.ஆர்.பாலு எம்.பி., முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஆகியோர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், பிரபு, விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, கார்த்தி, நடிகைகள் குஷ்பூ, மீனா, மும்தாஜ், பூர்ணிமா பாக்கியராஜ், இயக்குனர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா, ஷங்கர், பாக்யராஜ், கே.எஸ்.ரவிகுமார், சுந்தர்.சி, வசந்த், சேரன், விஜய், பாண்டிராஜ், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார், செயலாளர்கள் ஞானவேல்ராஜா, டி.சிவா, விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் அருள்பதி, பட அதிபர்கள் எஸ்.தாணு, ஆர்.பி.சவுத்திரி, ஏ.எல்.அழகப்பன் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
அனைவரையும் டி.ராஜேந்தர், அவருடைய மனைவி உஷா ராஜேந்தர், மகன்கள் சிலம்பரசன், குறளரசன் ஆகியோர் வரவேற்றார்கள்.
ரன், சண்டக்கோழி உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை மீராஜாஸ்மின். கேரளாவைச் சேர்ந்த இவர் மலையாளத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தற்போது தமிழில் விஞ்ஞானி என்ற படத்திலும், மலையாளத்தில் இதுக்கப்புறம் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
மீராஜாஸ்மினுக்கும், மாண்டலின் இசைக்கலைஞர் ராஜேசுக்கும் இடையே காதல் என்று கிசுகிசுக்கள் வெளியானது. இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் மீரா ஜாஸ்மின் துபாயில் பொறியியலாளராக பணிபுரியும் அனில் ஜான் டைட்டஸ் என்பவரை நாளை (12 ம் திகதி) திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். இது பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணம் என்றும் கூறினார்.
ஆனால் ஆலயத்தில் திருமணம் நடக்கும் முன்பே நேற்று முன்தினம் இரவு கொச்சியில் உள்ள மீராஜாஸ்மின் வீட்டில் அவருக்கும், அனில் ஜான் டைட்டசுக்கும் திடீரென ரகசிய பதிவு திருமணம் நடந்தது. இதற்காக சார்பதிவாளர் அவரது வீட்டுக்கே சென்று திருமணத்தை சட்டப்படி பதிவு செய்தார்.
இதற்காக கொண்டு வந்த புத்தகத்தில் மீரா ஜாஸ்மினும், அனில் ஜான் டைட்டசும் கையெழுத்திட்டனர். பின்னர் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் இரு வீட்டைச் சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். அனில் ஜான் டைட்டஸ்–மீராஜாஸ்மின் இருவரும் ரகசிய பதிவு திருமணம் செய்து கொண்டாலும் ஏற்கனவே அறிவித்தபடி இவர்களின் திருமணம் திருவனந்தபுரம் பாளையத்தில் உள்ள எல்.எம்.எஸ். ஆலயத்தில் நாளை காலை 11 மணிக்கு நடக்கும் என அவர்களின் நெருங்கிய உறவினர்கள் தெரிவித்தனர். அதன்பிறகு ஒரு மணிக்கு வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.
திருமணத்துக்கு பிறகும் மீராஜாஸ்மின் சினிமாவில் தொடர்ந்து நடிப்பார் என்று தெரிகிறது. மீராஜாஸ்மினை திருமணம் செய்து கொண்ட அனில் ஜான் டைட்டஸ் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் டைட்டஸ் – சுகுதகுமாரி. அனில் ஜான் டைட்டஸ் சென்னை ஐ.ஐ.டி.யில் பி.டெக். படித்தவர். தற்போது துபாயில் மென்பொருள் பொறியியலாளராக பணிபுரிந்து வருகிறார்.
அஞ்சான் படத்தில் சூர்யா-சமந்தா இருவரும் முதல் தடவையாக ஜோடியாக நடிக்கின்றனர். லிங்குசாமி இப்படத்தை இயக்குகிறார். இதன் படிப்பிடிப்பு மும்பை பகுதிகளில் விறுவிறுப்பாக நடக்கிறது.
அங்கு சூர்யா, சமந்தா நடித்த பாடல் காட்சியொன்றை படமாக்கினர். டான்ஸ் மாஸ்டர் ராஜுசுந்தரம் இதற்கான நடனத்தை அமைத்து கொடுத்தார். சென்னையில் இருந்து சென்ற நடன கலைஞர்களுடன் சூர்யா, சமந்தா ஆட இக்காட்சி படமாகிக் கொண்டு இருந்தது.
அப்போது மும்பையைச் சேர்ந்த இந்தி நடன கலைஞர்கள் கும்பலாக அங்கு வந்தனர். படப்பிடிப்பை நிறுத்தும்படி ஆவேசமாக கத்தியபடி கலாட்டாவில் ஈடுபட்டனர். படப்பிடிப்பு சாதனங்களை உடைக்கவும் பாய்ந்தனர். இதனால் படப்பிடிப்பில் இடையூறு ஏற்பட்டது.
நடன கலைஞர்கள் முப்பது சதவீதம் பேரை மும்பை நடன கலைஞர்கள் சங்கத்தில் இருந்துதான் பணியாற்ற தேர்வு செய்ய வேண்டும். வெளியாட்களை வைத்து படப்பிடிப்பை நடத்தக்கூடாது என்று கோஷம் போட்டார்கள்.
இதையடுத்து அஞ்சான் படக்குழுவினர் 60 ஆயிரம் அபராத கட்டணம் செலுத்தினார்கள். அதன்பிறகே படப்பிடிப்பை தொடர அவர்கள் அனுமதி அளித்தனர்.
கிழக்கே வரும் பாட்டு, ஒயிலாட்டம், முஸ்தபா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் ஷர்மிளா. இவர் 6 ஆண்டுகளுக்கு முன் ராஜேஷ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐந்து வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், ஷர்மிளாவுக்கும், ராஜேசுக்கும் தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. கணவர் தன்னை மிரட்டுவதாக போலீஸ் கமிஷனரிடம் ஷர்மிளா புகார் அளித்துள்ளார். கணவரை விவாகரத்து செய்யவும் முடிவு செய்துள்ளார். இதுகுறித்து ஷர்மிளா கூறியதாவது..
நான் கிறிஸ்தவ பெண். என்னை இந்து மதத்துக்கு மாறும்படி கணவர் நிர்ப்பந்திக்கிறார். வெளியாட்களுடன் பேசவும் தடை போடுகிறார். என் மேல் அவர் சந்தேகப்படுகிறார். இரவில் செல்போனில் பேசி மிரட்டுகிறார். அவருடன் இனிமேல் வாழமுடியாது. எனவே அவரை விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளேன்.
ஆரம்பத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் சம்மதத்துடன் பிரிய திட்டமிட்டோம். தற்போது விரைவில் அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளேன். இதற்கான பணிகள் துவங்கி உள்ளன. எனது மாமியாரும் தொல்லை கொடுக்கிறார். என் குழந்தையையும் கடத்தி போய் விட்டனர். இவ்வாறு ஷர்மிளா கூறினார்.
உலகின் பெரும் செல்வந்தராக கருதப்படும் மைக்ரோ சொப்ட் அதிபர் பில் கேட்சின் ஒட்டு மொத்த வர்த்தக முதலீடு 72 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முதலீட்டின் மூலம் அவருக்கு வட்டியாக மட்டும் ஒவ்வொரு வினாடியும் 114.16 டொலர்கள் கிடைத்து வருவதால் அவரது முதலீடு ஒவ்வொரு வினாடியும் உயர்ந்து கொண்டே வருகிறது.
இதன் வாயிலாக வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் லாபமும் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து பெருகிக் கொண்டே போகிறது.
வருமானத்தின் பெரும்பகுதியை உலக நாடுகளின் போலியோ ஒழிப்பு, எய்ட்ஸ் நோய்க்கு எதிரான பிரசாரம் போன்றவற்றுக்காக செலவிட்டு வரும் அவர் இன்றும் கூட அன்றாடம் தான் சாப்பிட்ட தட்டுகளை இரவு வேளைகளில் தானே சுத்தம் செய்து வைப்பதில் மனநிறைவு கொள்கிறார்.
இந்நிலையில் அமெரிக்க அரசின் உளவு பார்க்கும் நடவடிக்கை, கேட்ஸ் அறக்கட்டளையின் தொண்டுகள், மற்றும் தனது தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் தொடர்பாக சமூக வலைத்தளத்தின் வாயிலாக நேற்று இணையம் மூலம் அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் சரமாரியாக பதில்களை அள்ளி வீசினார்.
இவற்றில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த பில் கேட்ஸ் இன்றும் கூட தெருவில் 100 டொலர் நோட்டு கிடந்தால் அதை குனிந்து எடுக்க நான் தயங்க மாட்டேன். இதற்காக எனது நேரம் செலவாவதை பற்றி கவலைப்பட மாட்டேன் என்று அதிரடியாக பதில் அளித்துள்ளார்.
தந்தையின் உடல் நலத்தை காரணமாக கூறி ஒரு மாதம் விடுப்பு கோர ஆயுள் தண்டனை கைதி நளினிக்கு உரிமை இல்லை. எனவே நளினிக்கு 1 மாதம் விடுப்பு (பரோல்) வழங்க ஆட்சேபனை தெரிவித்து சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி உயர்நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்து உள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி உயர்நீதிமன்றில் ஒரு மனுதாக்கல் செய்தார்.
அந்த மனுவில் தன்னுடைய தந்தை ஓய்வு பெற்ற சப்– இன்ஸ்பெக்டர் சங்கர நாராயணன் 95 வயதில் மரணப் படுக்கையில் படுத்து இருப்பதாகவும் அவரது இறுதி காலத்தில் அவருடன் இருக்க விரும்புவதாகவும் அதற்காக தனக்கு ஒரு மாதம் விடுப்பு (பரோல்) வழங்க சிறைத்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் கருப்பண்ணன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது..
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அம்பலவாணபுரத்தில் மனுதாரர் நளினியின் தந்தை சங்கர நாராயணன் வசித்து வருகிறார். அவர் ஆரோக்கியமான சூழ்நிலையில் உள்ளார்.
விக்கிரமசிங்கபுரம் மலைப்பகுதி என்பதாலும் பாராளுமன்றத்துக்கு தேர்தல் வருவதாலும் நளினி அங்கு வசிப்பது சாதகமான சூழ்நிலை இல்லை என்றும் அவ்வாறு அவர் அங்கு வசிக்கும் போது தேர்தல் பயனுக்காக அரசியல் தலைவர்கள் அவரை சந்திக்கலாம் என்றும் அவரால் வேறு விதமாக பிரச்சினைகள் உருவாகலாம் என்றும் விக்கிரமசிங்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆட்சேபனை தெரிவித்து அறிக்கை அனுப்பி உள்ளார்.
மேலும் நளினிக்கு 1 மாதம் விடுப்பு (பரோல்) வழங்க ஆட்சேபனை தெரிவித்து சிறைத்துறை நன்னடத்தை அதிகாரியும் அறிக்கை தாக்கல் செய்து உள்ளார்.
தந்தையின் உடல் நலத்தை காரணமாக கூறி ஒரு மாதம் விடுப்பு கோர ஆயுள் தண்டனை கைதி நளினிக்கு உரிமை இல்லை. அவர் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் தண்டனை பெற்று உள்ளவர். எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 17ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.