தலதா மாளிகையின் புனித தாதுவை சுமந்து சென்ற ராஜா யானை உயிரிழந்தது!!

peraharaகண்டி ஸ்ரீ தலதா மாளிகை மகா எசல பெரஹெரவில் பதினைந்து வருடங்களாக புனித தந்த தாதுவை தாங்கி சென்ற வேவலதெனிய ராஜா யானை நேற்று இரவு 9.45 மணியளவில் உயிரிழந்துள்ளது.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை மகா எசல பெரஹெரவுக்கு மிகப்பெரிய சேவை செய்த வேவலதெனிய மஹிந்தோதய விகாரைக்கு சொந்தமான ராஜா யானை இறக்கும் போது அதற்கு வயது 55 ஆகும்.

இது குறித்து மேற்படி விகாரையின் நிர்வாக குழு தலைவரான சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் கருத்து தெரிவிக்கையில்,

உயிரிழந்த ராஜா யானை தென் மாகாணத்தின் அகுனுகொலபெலஸ் பிரதேசத்தில் பிடிக்கப்பட்டு 1976ஆம் ஆண்டு அப்போதைய உல்லாசப் பிரயாணத்துறை அமைச்சராக இருந்த பீ.பீ.ஜீ.களுகல்லவின் ஊடாக வேவலதெனிய விகாரைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.

மேற்படி ராஜா யானை கேகாலை பொஸன் மகா பெரஹெர, கண்டி ஸ்ரீ தலதா மகா பெரஹெர, கங்காராம, பெல்லன்வில, களனி, ,ரத்தினபுரி மகா சமன் தேவாலயம், கதிர்காமம், தெஹியோவிட்ட, ரம்புக்கன, மாவனல்ல, ஹெம்மாத்தகம போன்ற மகா பெரஹெரவில் புனித சின்னத்தை தாங்கி சென்ற பிரதான ராஜா யானை இதுவாகும்.

கடந்த சில காலங்களாக வேவலதெனிய ராஜா யானை நோய்வாய்பட்ட நிலையில் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சொந்தமான பல்லேகல பௌத்த விகாரையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று உயிரிழந்துள்ளது.

மேற்படி ராஜா யானை மறைவு கண்டி ஸ்ரீ தலதா மாளிகை உட்பட நாட்டின் பல்வேறு பௌத்த ஆலயங்களுக்கு பெரும் பேரிழப்பாகும் என்று மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் தெரிவித்தார்.
உயிரிழந்த ராஜா யானை இன்று பல்லேகல பௌத்த விகாரையில் அடக்கம் செய்யப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த யானையை பாராளுமன்ற உறுப்பினர் கணக ஹேரத், வேவலதெனிய மஹிந்தோதய விகாரையின் பிரதம குரு, ஹெம்மாத்தகம ஸ்ரீ சிந்தார்த்த நாஹிமி உட்பட முக்கிய அதிகாரிகள் பலர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

 

விஷாலை விரட்டுவோம், குரைக்கும் சந்தானம் : நடிகர்களுக்கு வந்த மிரட்டல் கடிதங்களின் முழு விவரம்!!

visalநடிகர்கள் சிவகுமார், விஷால், சந்தானம், நாசர், போன்றோருக்கு மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. கையெழுத்து இல்லாமல் மொட்டை கடிதங்களாக இவை அனுப்பப்பட்டு உள்ளன. இது கோழைத்தனம் என்றும் மிரட்டல் கடிதங்கள் எழுதியவர்கள் மீது போலீஸ் மூலம் நடவடிக்கை எடுப்போம் என்றும் நடிகர் சங்கம் எச்சரித்து உள்ளது.

மிரட்டல் கடிதங்களை நடிகர்கள் தற்போது வெளியிட்டு உள்ளனர். விஷாலுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் கூறியிருப்பதாவது..

பிழைப்பு தேடி ஆந்திராவை விட்டு ஓடிவந்து தமிழ்நாட்டில் ஒண்டியது மட்டும் அல்லாமல் சூப்பர் ஸ்டாராக ஆகவும் கனவு காண்கிறாய். சொந்த தயாரிப்பில் கதாநாயகனாக நடித்தாலும் தகுதியான பொருத்தமான வேஷம் கொடுத்தவர் இயக்குனர் பாலா.

தோற்றுப்போன நடிகர்களையும் திருவிழாவில் காணாமல் போன குழந்தைகள் போல் அலைகின்ற பெயர் தெரியாத நடிகர்களையும் கூட்டமாக சேர்த்துக் கொண்டு வந்தால் நீ பெரிய ஆளா?. நாசர், சந்தானத்துடன் சேர்ந்து வந்தாலும் நீங்கள் புல்லை போன்றவர்கள். சாய்ந்ததுபோல் சாய்ந்து மழை பெய்தவுடன் திரும்பவும் தளிர் விடுவீர்கள். சங்கத்தின் நலனுக்காக உங்களை வேறொடு பிடுங்கி எறிவோம். வந்தாய் ஒண்டினாய், சொந்த படம் எடுத்து கதாநாயகனாக இருக்கிறாய் அத்தோடு இருந்துகொள் என்று குறிப்பிட்டு உள்ளது.

சந்தானத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது..

உனக்கு என்.எஸ்.கிருஷ்ணன், கே.ஏ.தங்கவேலு, காக்கா ராதாகிருஷ்ணன், நாகேஷ், சுருளிராஜன், கவுண்டமணி, சார்லி போன்ற மாபெரும் நகைச்சுவை நடிகர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியுமா, தெரிந்துகொள். எங்களைபோல் நாடக நடிகர்களாக இருந்தவர்கள். நீ எந்த அட்ரசோடு யார் ஏமாந்தான் என்று நடிகனானாய். ஏதோ மக்கள் ஏமாந்தார்கள். என்று காலம் ஓட்டுகிறார்.

வீணாய் போன நாசரோடு சேர்ந்து கூச்சல் போடுகிறார். ஆனானப்பட்ட வடிவேலுவே ஓரங்கட்டப்பட்டார். நீ எம்மாத்திரம். தெருவோடு போகிற நாய்களோடு சேர்ந்து குரைப்பதை நிறுத்திக்கொள். காமெடியனுக்கு குரல்தான் முக்கியம். அந்த குரலை பிழைப்புக்காக மட்டும் பயன்படுத்து என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

நாசருக்கு வந்துள்ள கடிதம் விவரம் வருமாறு..

நடிகர் சங்கத்தை காட்டிக்கொடுத்த ஒண்ணரைக் கண்ணன் குமரிமுத்துக்கு குரல் கொடுக்கிறீர்கள். சங்க நிர்வாகிகள்மீது அபாண்டமாக பழி சுமத்துகிறீர்கள். நேற்று முளைத்த நடிகர்களை சேர்த்து வைத்து சண்டைக்கு வருகிறீர்கள். இவர்களுக்கு சினிமாவில் சண்டை போடவே டூப் தேவைப்படுகிறது. ஹீரோவாகும் தகுதி இல்லை.

பிழைப்புக்காக மாநிலம் விட்டு மாநிலம் போகிறீர்கள். ஊர் ஊராக பிச்சை பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அலை குரல் எழுப்பினால் பாத்திரம் ஏந்த முடியாமல் போகும். தேவர் மகனில் வடிவேல் சொன்ன வாசகம் ஞாபகம் இருக்குமே என்று நினைக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த கடிதங்கள் திரைப்பட நாடக நடிகர்கள் மதுரை என்ற பெயரில் இருந்து வந்துள்ளது.

 

டி.ராஜேந்தர் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி : நடிகர்-நடிகைகள் வாழ்த்து!!(படங்கள்)

இயக்குனர் டி.ராஜேந்தரின் மகள் இலக்கியா எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர். இவருக்கும் அபிலாஷ் சிங்கப்பூருக்கும் சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் கிறிஸ்தவ முறைப்படி நேற்று திருமணம் நடந்தது.

தி.மு.க.தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், முன்னாள் மத்திய மந்திரிகள் தயாநிதி மாறன், டாக்டர் அன்புமணி ராமதாஸ், தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மலேசிய இந்திய ஐக்கிய கட்சியின் தேசிய தலைவர் டத்தோ கே.எஸ்.நல்லா, புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், டி.ஆர்.பாலு எம்.பி., முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஆகியோர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், பிரபு, விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, கார்த்தி, நடிகைகள் குஷ்பூ, மீனா, மும்தாஜ், பூர்ணிமா பாக்கியராஜ், இயக்குனர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா, ஷங்கர், பாக்யராஜ், கே.எஸ்.ரவிகுமார், சுந்தர்.சி, வசந்த், சேரன், விஜய், பாண்டிராஜ், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார், செயலாளர்கள் ஞானவேல்ராஜா, டி.சிவா, விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் அருள்பதி, பட அதிபர்கள் எஸ்.தாணு, ஆர்.பி.சவுத்திரி, ஏ.எல்.அழகப்பன் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

அனைவரையும் டி.ராஜேந்தர், அவருடைய மனைவி உஷா ராஜேந்தர், மகன்கள் சிலம்பரசன், குறளரசன் ஆகியோர் வரவேற்றார்கள்.

11 12

 

நடிகை மீராஜாஸ்மின் திடீர் திருமணம் : துபாய் பொறியியலாளரை மணந்தார்!!

Meera Jasminரன், சண்டக்கோழி உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை மீராஜாஸ்மின். கேரளாவைச் சேர்ந்த இவர் மலையாளத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தற்போது தமிழில் விஞ்ஞானி என்ற படத்திலும், மலையாளத்தில் இதுக்கப்புறம் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

மீராஜாஸ்மினுக்கும், மாண்டலின் இசைக்கலைஞர் ராஜேசுக்கும் இடையே காதல் என்று கிசுகிசுக்கள் வெளியானது. இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் மீரா ஜாஸ்மின் துபாயில் பொறியியலாளராக பணிபுரியும் அனில் ஜான் டைட்டஸ் என்பவரை நாளை (12 ம் திகதி) திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். இது பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணம் என்றும் கூறினார்.

ஆனால் ஆலயத்தில் திருமணம் நடக்கும் முன்பே நேற்று முன்தினம் இரவு கொச்சியில் உள்ள மீராஜாஸ்மின் வீட்டில் அவருக்கும், அனில் ஜான் டைட்டசுக்கும் திடீரென ரகசிய பதிவு திருமணம் நடந்தது. இதற்காக சார்பதிவாளர் அவரது வீட்டுக்கே சென்று திருமணத்தை சட்டப்படி பதிவு செய்தார்.

இதற்காக கொண்டு வந்த புத்தகத்தில் மீரா ஜாஸ்மினும், அனில் ஜான் டைட்டசும் கையெழுத்திட்டனர். பின்னர் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் இரு வீட்டைச் சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். அனில் ஜான் டைட்டஸ்–மீராஜாஸ்மின் இருவரும் ரகசிய பதிவு திருமணம் செய்து கொண்டாலும் ஏற்கனவே அறிவித்தபடி இவர்களின் திருமணம் திருவனந்தபுரம் பாளையத்தில் உள்ள எல்.எம்.எஸ். ஆலயத்தில் நாளை காலை 11 மணிக்கு நடக்கும் என அவர்களின் நெருங்கிய உறவினர்கள் தெரிவித்தனர். அதன்பிறகு ஒரு மணிக்கு வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.

திருமணத்துக்கு பிறகும் மீராஜாஸ்மின் சினிமாவில் தொடர்ந்து நடிப்பார் என்று தெரிகிறது. மீராஜாஸ்மினை திருமணம் செய்து கொண்ட அனில் ஜான் டைட்டஸ் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் டைட்டஸ் – சுகுதகுமாரி. அனில் ஜான் டைட்டஸ் சென்னை ஐ.ஐ.டி.யில் பி.டெக். படித்தவர். தற்போது துபாயில் மென்பொருள் பொறியியலாளராக பணிபுரிந்து வருகிறார்.

 

சூர்யா, சமந்தா படப்பிடிப்பில் கலாட்டா : அதிர்ந்த படக் குழுவினர்!!

Suryaஅஞ்சான் படத்தில் சூர்யா-சமந்தா இருவரும் முதல் தடவையாக ஜோடியாக நடிக்கின்றனர். லிங்குசாமி இப்படத்தை இயக்குகிறார். இதன் படிப்பிடிப்பு மும்பை பகுதிகளில் விறுவிறுப்பாக நடக்கிறது.

அங்கு சூர்யா, சமந்தா நடித்த பாடல் காட்சியொன்றை படமாக்கினர். டான்ஸ் மாஸ்டர் ராஜுசுந்தரம் இதற்கான நடனத்தை அமைத்து கொடுத்தார். சென்னையில் இருந்து சென்ற நடன கலைஞர்களுடன் சூர்யா, சமந்தா ஆட இக்காட்சி படமாகிக் கொண்டு இருந்தது.

அப்போது மும்பையைச் சேர்ந்த இந்தி நடன கலைஞர்கள் கும்பலாக அங்கு வந்தனர். படப்பிடிப்பை நிறுத்தும்படி ஆவேசமாக கத்தியபடி கலாட்டாவில் ஈடுபட்டனர். படப்பிடிப்பு சாதனங்களை உடைக்கவும் பாய்ந்தனர். இதனால் படப்பிடிப்பில் இடையூறு ஏற்பட்டது.

நடன கலைஞர்கள் முப்பது சதவீதம் பேரை மும்பை நடன கலைஞர்கள் சங்கத்தில் இருந்துதான் பணியாற்ற தேர்வு செய்ய வேண்டும். வெளியாட்களை வைத்து படப்பிடிப்பை நடத்தக்கூடாது என்று கோஷம் போட்டார்கள்.

இதையடுத்து அஞ்சான் படக்குழுவினர் 60 ஆயிரம் அபராத கட்டணம் செலுத்தினார்கள். அதன்பிறகே படப்பிடிப்பை தொடர அவர்கள் அனுமதி அளித்தனர்.

 

மதம் மாற நிர்ப்பந்தம் செய்யும் கணவரை விவாகரத்து செய்வேன் : நடிகை ஷர்மிளா!!

Sharmilaகிழக்கே வரும் பாட்டு, ஒயிலாட்டம், முஸ்தபா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் ஷர்மிளா. இவர் 6 ஆண்டுகளுக்கு முன் ராஜேஷ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐந்து வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், ஷர்மிளாவுக்கும், ராஜேசுக்கும் தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. கணவர் தன்னை மிரட்டுவதாக போலீஸ் கமிஷனரிடம் ஷர்மிளா புகார் அளித்துள்ளார். கணவரை விவாகரத்து செய்யவும் முடிவு செய்துள்ளார். இதுகுறித்து ஷர்மிளா கூறியதாவது..

நான் கிறிஸ்தவ பெண். என்னை இந்து மதத்துக்கு மாறும்படி கணவர் நிர்ப்பந்திக்கிறார். வெளியாட்களுடன் பேசவும் தடை போடுகிறார். என் மேல் அவர் சந்தேகப்படுகிறார். இரவில் செல்போனில் பேசி மிரட்டுகிறார். அவருடன் இனிமேல் வாழமுடியாது. எனவே அவரை விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளேன்.

ஆரம்பத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் சம்மதத்துடன் பிரிய திட்டமிட்டோம். தற்போது விரைவில் அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளேன். இதற்கான பணிகள் துவங்கி உள்ளன. எனது மாமியாரும் தொல்லை கொடுக்கிறார். என் குழந்தையையும் கடத்தி போய் விட்டனர். இவ்வாறு ஷர்மிளா கூறினார்.

 

இன்றும் வீதியில் 100 டொலர் கிடந்தால் அதை குனிந்து எடுக்க தயங்க மாட்டேன் : பில் கேட்!!

Bill-Gatesஉலகின் பெரும் செல்வந்தராக கருதப்படும் மைக்ரோ சொப்ட் அதிபர் பில் கேட்சின் ஒட்டு மொத்த வர்த்தக முதலீடு 72 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முதலீட்டின் மூலம் அவருக்கு வட்டியாக மட்டும் ஒவ்வொரு வினாடியும் 114.16 டொலர்கள் கிடைத்து வருவதால் அவரது முதலீடு ஒவ்வொரு வினாடியும் உயர்ந்து கொண்டே வருகிறது.
இதன் வாயிலாக வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் லாபமும் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து பெருகிக் கொண்டே போகிறது.

வருமானத்தின் பெரும்பகுதியை உலக நாடுகளின் போலியோ ஒழிப்பு, எய்ட்ஸ் நோய்க்கு எதிரான பிரசாரம் போன்றவற்றுக்காக செலவிட்டு வரும் அவர் இன்றும் கூட அன்றாடம் தான் சாப்பிட்ட தட்டுகளை இரவு வேளைகளில் தானே சுத்தம் செய்து வைப்பதில் மனநிறைவு கொள்கிறார்.

இந்நிலையில் அமெரிக்க அரசின் உளவு பார்க்கும் நடவடிக்கை, கேட்ஸ் அறக்கட்டளையின் தொண்டுகள், மற்றும் தனது தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் தொடர்பாக சமூக வலைத்தளத்தின் வாயிலாக நேற்று இணையம் மூலம் அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் சரமாரியாக பதில்களை அள்ளி வீசினார்.

இவற்றில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த பில் கேட்ஸ் இன்றும் கூட தெருவில் 100 டொலர் நோட்டு கிடந்தால் அதை குனிந்து எடுக்க நான் தயங்க மாட்டேன். இதற்காக எனது நேரம் செலவாவதை பற்றி கவலைப்பட மாட்டேன் என்று அதிரடியாக பதில் அளித்துள்ளார்.

 

நளினியை பரோலில் விட முடியாது : சிறைத்துறை அதிகாரி உயர்நீதிமன்றில் பதில் மனு தாக்கல்!!

Naliniதந்தையின் உடல் நலத்தை காரணமாக கூறி ஒரு மாதம் விடுப்பு கோர ஆயுள் தண்டனை கைதி நளினிக்கு உரிமை இல்லை. எனவே நளினிக்கு 1 மாதம் விடுப்பு (பரோல்) வழங்க ஆட்சேபனை தெரிவித்து சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி உயர்நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்து உள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி உயர்நீதிமன்றில் ஒரு மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவில் தன்னுடைய தந்தை ஓய்வு பெற்ற சப்– இன்ஸ்பெக்டர் சங்கர நாராயணன் 95 வயதில் மரணப் படுக்கையில் படுத்து இருப்பதாகவும் அவரது இறுதி காலத்தில் அவருடன் இருக்க விரும்புவதாகவும் அதற்காக தனக்கு ஒரு மாதம் விடுப்பு (பரோல்) வழங்க சிறைத்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் கருப்பண்ணன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது..

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அம்பலவாணபுரத்தில் மனுதாரர் நளினியின் தந்தை சங்கர நாராயணன் வசித்து வருகிறார். அவர் ஆரோக்கியமான சூழ்நிலையில் உள்ளார்.

விக்கிரமசிங்கபுரம் மலைப்பகுதி என்பதாலும் பாராளுமன்றத்துக்கு தேர்தல் வருவதாலும் நளினி அங்கு வசிப்பது சாதகமான சூழ்நிலை இல்லை என்றும் அவ்வாறு அவர் அங்கு வசிக்கும் போது தேர்தல் பயனுக்காக அரசியல் தலைவர்கள் அவரை சந்திக்கலாம் என்றும் அவரால் வேறு விதமாக பிரச்சினைகள் உருவாகலாம் என்றும் விக்கிரமசிங்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆட்சேபனை தெரிவித்து அறிக்கை அனுப்பி உள்ளார்.

மேலும் நளினிக்கு 1 மாதம் விடுப்பு (பரோல்) வழங்க ஆட்சேபனை தெரிவித்து சிறைத்துறை நன்னடத்தை அதிகாரியும் அறிக்கை தாக்கல் செய்து உள்ளார்.

தந்தையின் உடல் நலத்தை காரணமாக கூறி ஒரு மாதம் விடுப்பு கோர ஆயுள் தண்டனை கைதி நளினிக்கு உரிமை இல்லை. அவர் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் தண்டனை பெற்று உள்ளவர். எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 17ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

 

நுவரெலியாவில் கடும் பனிப்பொழிவு : கால நிலை மாற்றத்தினால் நிறம் மாறும் மரக்கறி,தேயிலை!!

Nuwaraliaநுவரெலியாவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும்குளிர் காலநிலை காரணமாக பனிகொட்டுகின்றது. பல இடங்கள் பனிமூட்டத்துடன் காட்சியளிப்பதுடன் சுற்றுலா பயணிகளை வருகை தந்து பார்வையிடும் படி நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பி.ஜி.குமாரசிரி தெரிவிக்கின்றார்.

இன்று காலை நுவரெலியாவில் சில இடங்களில் ஏற்பட்டுள்ள பனிப்பொழிவினால் 5-6 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை காணப்படுகின்றதாக நுவரெலியா மாவட்ட காலநிலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா மாவட்டம் மற்றும் அதனை உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் நிலவும் கடும் பனியுடன் கூடிய காலநிலை, பகல் வேளைகளில் நிலவும் கடும் வெயில் காலநிலையால் பச்சை நிறத்தில் காணப்படும் தேயிலை, மரக்கறி தோட்டங்கள் கருகி நிறமாற்றம் ஏற்பட்டு வருவதாக அறியக்கிடைக்கின்றது.

இதனால் சில தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு குறைந்த நாட்களே வேலை வழங்கப்படுகிறது. இது தொழிலாளர்களின் பொருளாதார நிலையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.

 

வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி!!(படங்கள்)

வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நேற்று (10.02) பாடசாலை அதிபர் திருமதி.ஜி.நடராஜா தலைமையில் நடைபெற்றது.

இவ் விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் திரு.G.T.லிங்கநாதன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு.எம்.கிருபாகரன்( முகாமையாளர் வசந்தம் FM) அவர்களும் திரு. A.M.சுபைர் (வவுனியா தெற்கு வலய உடற்கல்வி ஆலோசகர்) அவர்களும், திரு.J.பரதமாரன் (வவுனியா தெற்கு வலய உடற்கல்வி ஆலோசகர் ) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இவ் விளையாட்டுப் போட்டியில் பாண்டியன் இல்லம் முதலிடத்தையும், சோழன் இல்லம் இரண்டாம் இடத்தையும், சேரன் இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன. இவ் விளையாட்டுப் போட்டிக்கு வசந்தம் FM அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

OLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERA

 

யாழ். மாவட்டம் புகைத்தலில் முதலிடம் ஆய்வில் தகவல்!!

Smokingயாழ்.மாவட்டம் புகைத்தலில் முதலாம் இடத்தில் இருப்பதாக அண்மையில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளதாக தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி தெரிவித்துள்ளார்.

இலங்கை தேசிய போதைப்பொருள் புகைத்தலுக்கு எதிரான அமைப்பினால் மேற் கொள்ளப்பட்ட கணக்கெடுப்பைத் தொடர்ந்து இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் முதலாம் இடத்தில் யாழ் மாவட்டமும் இரண்டாம் இடத்தில் கொழும்பு மாவட்டமும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் 43 வீதமானவர்களும் கொழும்பு மாவட்டத்தில் 39 வீதமானவர்களும் புகைத்தலில் ஈடுபடுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி தெரிவித்துள்ளார்.

 

நீர்கொழும்பில் ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : வெளிநாட்டுப் பிரஜை படுகாயம்!!

negomoboநீர்கொழும்பு பிரதேசத்தில் ஐந்து வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில் வெளிநாட்டுப் பிரஜையொருவர் காயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 6.40 மணியளவில் நீர்கொழும்பு – சிலாபம் பிரதான வீதியில் கட்டுவ, ஓட்டுத் தொழிற்சாலை அருகில் இடம்பெற்றதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு திசையிலிருந்து கொச்சிக்கடை திசையை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் வண்டி, லொறி, ஜீப், மற்றும் இரண்டு வான்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து இடம்பெற்றது.

குறித்த விபத்து காரணமான ஜீப்பில் பயணித்துக் கொண்டிருந்த வெளிநாட்டு பிரஜையொருவர் காயத்திற்குட்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து அனுராதபுரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் முன்னால் சென்று கொண்டிருந்த லொறியில் மோதியதாகவும், இதன் காரணமாக லொறி ஜீப்பில் மோதியதாகவும், இந்த வாகனங்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த இரண்டு வான்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த விபத்து காரணமாக பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
நீர்கொழும்பு பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியதுடன் போக்குவரத்தை சீர்செய்தனர்.

 

 

எனது ஆசைகளை புறந்தள்ளி அரசியலில் ஈடுபட்டுள்ளேன் : ஹிருணிகா!!

Hirunika26 வயதான யுவதி என்பதால் எனது வயதுக்கு ஏற்ற வகையில் களியாட்டங்களில் ஈடுபட ஆசை இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாண சபை வேட்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார்.

அவிசாவளை பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்..

நான் இன்னும் 26 வயதான யுவதி. 26 வயதான யுவதி என்பதால் எனக்கும் நண்பர்களுடன் வெளியில் செல்ல, மகிழ்ச்சியாக இருக்க ஆசை இருக்கின்றது.

ஆனால் அவை அனைத்தையும் விட்டு விட்டு, அரசியலை தேர்ந்தெடுத்தேன். எனது தந்தையின் அரசியல் அவரால் செய்ய முடியாது போன மற்றும் தவறிய பணிகளை என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது என்றார்.

 

வவுனியா பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் பகிஸ்கரிப்பு போராட்டம்!!(படங்கள்)

வவுனியா பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் ஒன்பது அம்ச கோரிக்கையை முன்வைத்து இன்று காலையில் பணி பகிஸ்கரிப்பு போராட்டமொன்றினை நடத்தினர்.

வவுனியா பொது வைத்தியசாலையின் முன்னால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப் போராட்டத்தில் 6-2006 சுற்றறிக்கையை சரியாக அழுல்படுத்து, சகல தற்காலிக மற்றும் அமய ஊழியாகளை நிரந்தரமாக்கு, 8 மணித்தியால காலவரையறைக்கு மேலதிகமாக கடமைக்கான உரிய கொடுப்பனவை பெற்றுக்கொள்ளல், சீருடை கொடுப்பனவை ஒரே தடவையில் வழங்குதல் உட்பட 9 கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்திருந்தனர்.

ஸ்ரீலங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப் போராட்டமானது தைமாதம் 16ஆம் திகதி தாம் மேற்கொண்ட போராட்டத்திற்கு எவ்வித தீர்வும் வழங்கப்பாமையினாலேயே மீண்டும் இக் கேரிக்கைகளை முன்வைத்து போராட்டம் மேற்கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணிவரை இடம்பெற்ற இப் போராட்டத்திற்கு உரிய பலன் கிடைக்காத பட்சத்தில் தாம் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

-படங்கள் பாஸ்கரன் கதீசன்-

1 2 3 4 5 6

 

 

களனி பல்கலைக்கழகத்தில் கஞ்சாவுடன் 13 மாணவர்கள் கைது!!

Arrestedகளனி பல்கலைக்கழகத்தில் கஞ்சா போதைப் பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்த 13 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிரிபத்கொட பொலிஸார் நேற்று (10) மாலை குறித்த மாணவர்களை கைது செய்துள்ளனர். பல்கலைக்கழக ஒழுக்காற்று குழு வழங்கிய தகவலை அடுத்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

கலை மற்றும் வணிகப் பிரிவு மாணவர்கள் 13 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களிடம் இருந்து 13 கஞ்சா சுறுட்டுகள் மீட்கப்பட்டதாக கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இன்று மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

 

மக்களை திசை திருப்பும் சதித்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது : ஜனாதிபதி!!

Mahinda

வடக்கில் உள்ள மக்களை மட்டுமல்லாமல் தெற்கில் உள்ள மக்களை தவறான வழியில் இட்டுச் செல்வதற்காக சர்வதேச சக்திகள் ஜெனிவாவில் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

காலி, உடுகம வீதியின் அபிவிருத்தித் திட்டத்தை இன்று ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

மனித உரிமைகள் மீறப்படுவதாக கூறி அந்த சக்திகள் நாட்டை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

பாதுகாப்பு படையினருக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் உள்நாட்டு, வெளிநாடடு சதித்திட்டங்களை வன்மையாக கண்டிப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.