யாழ். சாவகச்சேரி – மீசாலையில் புதிய புகையிரத நிலைய A9 வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட ரக்டர் வாகனம் ஒன்று A9 வீதியை வேகமாகக் கடக்க முற்பட்டபோது, மோட்டார் சைக்கிளுடன் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் வெள்ளாம்போக்கட்டியைச் சேர்ந்த இராசப்பு அருந்தவராசா (33), சாவகச்சேரி வடக்கு மீசாலையைச் சேர்ந்த முருகேசு கணேஸ்குமார் (34) ஆகியோரே படுகாயடைந்துள்ளனர் என சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டுவருவதுடன், சாரதியைச் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான புதிய நிர்வாகிகள் தெரிவில் பிரதம் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
இளைஞர்கள் வருங்காலத்தின் சிப்பிகள். இவாகளில் ஏராளமான நல்ல இளைஞர்கள் இருக்கின்றனா. எனினும் ஒரு சில தீய சிந்தனையுள்ள இளைஞர்களால் இளைஞர்கள் சகலருக்கும் நற்பெயர் குறைவதாக உள்ளது.
எனவே இளைஞர்களிடம் எதிர்காலத்தை எவ்வாறு கையில் எடுப்பது என்ற இலட்சிய நோக்கு இருத்தில் வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்திலேயே இளைஞர்கள் மேன்மையடைய வாய்பபுக்கள் ஏற்படும். ஆனால் வலிமை மிக்க இளைஞர்களின் கைகளில் வாள்கள் இருப்பது துர்ப்பாக்கியமானது
அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஆவா குழு உட்பட வேறு குழுவொன்றும் இயங்கிய நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இளம் வயதினர். ஆவா குழுவின் தலைவர் 21 வயதுடையவராக இருந்துள்ளார். இது இளைஞர் சமூகம் தவறாக செல்வதை எடுத்துக்காட்டியுள்ளது. இக் குழுக்கள் யாழ்ப்பாணத்த மக்களை நித்திரையின்றி செய்துள்ளனர்.
இளைஞர்கள் பெரியவர்களுக்கு மதிப்பளித்து வணங்க வேண்டியவர்கள் ஆனால் யாழ்ப்பாணத்தில் இருந்து சில தீய குழுககள் பெரியவர்கள் தம்மை வணங்க வேண்டும் என கட்டளையிட்டுள்ளனர். இது வெட்கப்படவேண்டிய விடயம்.
இளைஞர்களாகிய நீங்கள் சவால்களை கையில் எடுக்க வேண்டும். இளைஞர் கழகத்தில் நான் இருந்தமையினாலேயே இன்று பிரதேச செயலாளராக இருக்கின்றேன். அதன் மூலம் பெறப்பட்ட தலைமைத்துவம் எனக்கு மிகவும் பயனாகவுள்ளது. எனவே இளைஞர்கள் இளைஞர்கழகங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இளைஞர்கள் திட்டமிடலுடன் வாழப் பழகிக் கொள்ளவேண்டும் என்பதுடன் இலட்சிய நோக்கோடு செயற்படவும் வேண்டும். ஆனால் இன்று வீதிகளில் செல்லும் பல இளைஞாகள் எதுவித சிந்தனையும் இன்றி திரிகினறனர். இவர்களால் நாட்டிற்கு சுமையாகவே இருபபர்.
இளைஞர்களாகிய நீங்கள் சமூகத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் அளவிற்கு சவால்களை எதிர்கொள்பவர்களாக வளரவேண்டும். முழுமையாக சமூக பிரச்சனைகளை நீங்கள் தீர்த்து விடமுடியாது. எனினும் சில பிரச்சனைகளை அடையாளம் கண்ட அதனை சீர்செய்ய முடியும். குறிப்பாக நீங்கள் வாழும் பிரதேசத்தை மது அற்ற பிரதேசமாக மாற்றுவதாக சத்தியம் செய்து கொள்ளுங்கள்.
இதன் மூலம் பிழையாக செல்லும் இளைஞர் சமூகத்திற்கு நீங்கள் முன்னுதாரணமாக வழிகாட்டியாக இருந்து பழையாக செல்பவர்களை உங்கள் பக்கம் வருவதற்கு வழிவகை செய்யவேண்டும் என தெரிவித்தார்.
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்க உட்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான புதிய நிர்வாக தெரிவு இன்று (12.2) வவுனியா வடக்கு பிரதேச செலயகத்தில் இடம்பெற்றது.
இளைஞர் பாராளுமன்றத்தின் வவனியா மாவட்ட பிரதிநிதியும் பிரதி பிரதமருமான ரஜீவன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வவுனியா வடக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள 20 இளைஞர் கழகங்களுக்கிடையிலான நிர்வாகத்தெரிவு இடம்பெற்றிருந்தது.
இதன்போது இளைஞர் கழகங்களின் சேவை மற்றும் அதன் தாhப்பரியங்கள் தொடர்பில் கழகத்தின் உறுப்பினர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து வவனியா வடக்கு பிரதேசத்தின் இளைஞர் கழகங்களின் சம்மேளன நிர்வாக தெரிவும் இடம்பெற்றிருந்தது.
இதன்போது தலைவராக ம. உதயகுமாரும் செயலாளராக சி.சதீஸ்குமாரும் பொருளாளராக ஆர்.ரதனும் உபதலைவராக ஆர்.அகல்யாவும் உப செயலாளராக இ.தர்சிகாவும் அமைப்பாளராக எஸ்.சஞ்சனும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இந் நிகழ்வில் வவனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் வவுனியா மாவட்ட உதவி பணிப்பாளர் எஸ். எம். எஸ்.செனவிரத்ன, மாவட்ட சம்மேளனத்தலைவர் ரி. அமுதராஜ், நிஸ்கோ மாவட்ட முகாமையாளர் ஜி. ஏ.சந்திரசேன ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இயக்குநர் பாலுமகேந்திரா உடல்நலக் குறைவால் காலமானார். இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணமடைந்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
1946 மே மாதம் 19ம் திகதி இலங்கையின் மட்டக்களப்பு – அமிர்தகழியில் பிறந்தவர் பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா. லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்த அவர். பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்றார்.
அவரது பட்டயப்படிப்பு திரைப்படத்தைக் கண்டு அவரை செம்மீன் படப்புகழ் ராமு காரியத் அவரது நெல்லு படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தார்.
அப்படத்துக்கு 1972ல் சிறந்த ஒளிப்பதிவுக்கான கேரள மாநில விருது பெற்றார். அதைத் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். பின் 1977ல் பாலு மகேந்திரா அவரது முதல் படமான கோகிலாவை கன்னட மொழியில் இயக்கினார்.
தொடர்ந்து மூன்றாம் பிறை, அழியாத கோலங்கள், வீடு, சந்தியா ராகம், மறுபடியும், சதி லீலாவதி என தமிழ் சினிமா இரசிகர்களால் மறக்க முடியாத பல படங்களை இயக்கினார். அத்துடன் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் சிறந்த படங்களை வழங்கியவர் பாலு மகேந்திரா.
சமீபத்தில் இவர் இயக்கத்தில் தலைமுறைகள் என்ற படம் வெளியாகி, விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்தநிலையில் இன்று காலை பாலு மகேந்திராவிற்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் சென்னை விஜயா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் காலமானார்.
சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த படம் என ஐந்து முறை தேசிய விருது வென்றவர் பாலு மகேந்திரா. தேசிய விருது மட்டுமன்றி கேரளா மற்றும் கர்நாடக மாநில அரசுகளின் விருதுகளையும் வென்றிருக்கிறார்.
இயக்குநர் பாலா, ராம், வெற்றிமாறன் உள்ளிட்ட பல முன்னணி இயக்குநர்கள் இவரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலு மகேந்திரா மறைவிற்கு தமிழ் திரையுலகினர் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
பாலுமகேந்திரா இயக்கிய படங்கள் :
கோகிலா
அழியாத கோலங்கள்
மூடுபனி
மஞ்சு மூடல் மஞ்சு
ஓலங்கள்
நீரக்ஷ்னா
சத்மா
ஊமை குயில்
மூன்றாம் பிறை
நீங்கள் கேட்டவை
உன் கண்ணில் நீர் வழிந்தால்
யாத்ரா
ரெண்டு தொகல திட்ட
இரட்டை வால் குருவி
வீடு
சந்தியாராகம்
வண்ண வண்ண பூக்கள்
பூந்தேன் அருவி சுவன்னு
சக்ர வியூகம்
மறுபடியும்
சதிலீலாவதி
அவுர் ஏக் ப்ரேம் கஹானி
ராமன் அப்துல்லா
ஜூலி கணபதி
அது ஒரு கனாக்காலம்
தலைமுறைகள்
இஸ்ரேல் நாட்டின் வடக்குப் பகுதியில் லெபனான் எல்லையை ஒட்டியுள்ள டர்ஷிஹா என்ற சிறிய நகரத்தில் ஒசாமா கௌரி குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அவரது மனைவி அமிரா தங்கள் வீட்டு வரவேற்பறையில் இருக்கும் கன்னி மேரி சிலை சமீப காலங்களில் பளபளப்புடன் இருப்பதைக் கவனித்துள்ளார்.
சுத்தம் செய்த சிறிது நேரத்திற்கெல்லாம் மீண்டும் அந்த சிலையில் எண்ணெயத்தன்மை தென்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அந்த சிலை தன்னிடம் பேசியதாகவும், தன்னை பயப்பட வேண்டாமென்று கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஒருவரும் இந்த சிலையின் மேல் எண்ணெய் வடிவதைக் கண்டதாகக் கூறவே, இந்த செய்தி எங்கும் பரவ ஆரம்பித்தது. நூற்றுக்கணக்கான மக்கள் இந்த சிலை அழும்போது எண்ணெய் வடிகின்றது என்று கூறி அதனைப் பார்ப்பதற்காக இங்கு திரளுகின்றனர்.
இதுமட்டுமின்றி இந்த சிலையின் கன்னத்தில் ஒரு கண்ணீர்த்துளி திரண்டு வெளிப்பட்டதாக இந்தக் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். கடந்த வாரம் மட்டும் 2,000க்கும் மேற்பட்டோர் வந்து இந்த சிலையை பார்த்து சென்றுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
கடந்த 1960 ஆம் ஆண்டு காலத்தில் கம்யூனிச நாடான போலந்தில் 50 ஆண்டு கால மணவாழ்க்கையை ஒன்றாகக் கழித்த ஜோடிகளுக்கு அந்நாட்டு ஜனாதிபதியிடம் இருந்து விருது கொடுத்து கௌரவிக்கும் வழக்கம் தொடங்கியது.
தற்போதும் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியில் ஆண்டுக்கு 65,000 விருதுகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இந்த விருதினைப் பெறுவதற்காக 18,000 நாட்கள் நீங்கள் உழைத்திருக்க வேண்டும். மற்ற விருதுகளுக்கான காலக்கெடு மிகவும் எளிதாகும். எனவே, அரை நூற்றாண்டை ஒன்றாகக் கழிப்பதென்பது சிறப்பு வாய்ந்த செயலாகும் என்று வார்சா நகர மேயரான ஹன்னா குரோன்கிவிக்ஸ்-வால்ட்ஸ் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
அமெரிக்காவில் பொன்விழா கொண்டாடும் தம்பதியருக்கு ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை சார்பில் ஒரு வாழ்த்து அனுப்பப்படும்.
இங்கிலாந்திலோ அறுபது ஆண்டுகளை ஒன்றாகக் கழித்த தம்பதியினருக்கு ராணியின் சார்பில் வாழ்த்து கிட்டும். அவரே ஏழு வருடங்களுக்கு முன்னர் இந்த விழாவைக் கொண்டாடினார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது மிகவும் அரிதான விஷயமாகும். வேறு எந்த நாட்டிலும் திருமணம் நிலைத்திருக்க இப்படி ஒரு விருது வழங்கப்படுவதில்லை என்று ´மெடல்ஸ் ஆப் தி வேர்ல்ட்´ என்ற இணையதளப் பிரிவை இயக்கும் மெகன் ராபர்ட்சன் குறிப்பிடுகின்றார்.
குறிப்பிட்ட தொழில்துறையிலோ, வர்த்தகத்திலோ சாதனைகள் புரிந்தவர்களுக்கு அரசு விருது வழங்கி வரும் நிலையில், திருமண வாழ்வின் சாதனைகளுக்காக இதே போன்றதொரு விருது அளிக்கப்படுவது அந்நாட்டின் சமூக வரலாற்று முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதாக வரலாற்றுத்துறை அறிஞர் மர்சின் ஸ்ரெம்பா குறிப்பிட்டுள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
மறுபக்கம் பிரச்சாரத்திற்கு நட்சத்திர பட்டாளத்தை அழைத்து வர திட்டமிடப்படுகிறது. இந்நிலையில் நடிகைகளுக்கு தான் படுகிராக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக நடிகை நமீதாவை தங்கள் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வைக்கும் முயற்சியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளனவாம்.
மார்க்கெட் இல்லாத நமீதா அரசியலில் குதிக்கப் போவதாக தெரிவித்தார். தான் எந்த கட்சியில் சேருவேன் என்பதை அடுத்த மாதம் அறிவிப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நமீதா குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அம்மாநில முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி இருக்கும் கட்சியில் சேர்வார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர் திமுகவில் சேரப் போவதாகவும் பேசப்படுகிறது. வரும் லோக்சபா தேர்தலில் தங்கள் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யுமாறு நமீதாவிடம் அதிமுக சார்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.
நமீதாவுக்கு கோலிவுட்டில் மவுசு இல்லாவிட்டாலும் அரசியல் கட்சிகளிடையே படுகிராக்கியாக உள்ளது. அவர் எந்த கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
நமீதா தவிர சிம்ரன் மற்றும் அண்மையில் மார்க்கெட் இழந்த நடிகைகளையும் தங்கள் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வைக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாம்.
பங்களாதேஷூக்கு எதிரான முதலாவது 20க்கு இருபது போட்டியில் இலங்கை அணி இரண்டு ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள், இரண்டு 20க்கு இருபது போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது.
முன்னதாக நிறைவடைந்த டெஸ்ட் தொடரை 1-0 என இலங்கை கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது 20க்கு இருபது போட்டி நேற்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணி சார்பில் குசல் பெரேரா 64 ஓட்டங்களையும் குலசேகர 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து 169 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாங்களாதேஷ் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 166 மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவியது.
இதன்படி இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் இலங்கை 1-0 என முன்னிலையில் உள்ளது.
வவுனியா வேப்பங்குளம் பகுதியை சேர்ந்த ஒருவர் மதவாச்சி பகுதியில் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
உயிரிழந்தவரின் சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மதவாச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பிறேசில் நாட்டைச் சேர்ந்த 20 வயது யுவதி கதரினா. கன்னித் தன்மையை கடந்த மாதங்களில் இவர் ஏலத்தில் விற்று உள்ளார்.
வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு குறிப்பாக வீடமைப்புத் திட்டங்களுக்கு நிதி சேகரிக்கின்றமைக்காக இதை செய்து உள்ளார். இவரது கன்னித் தன்மை 780 000 அமெரிக்க டொலருக்கு விலை போய் உள்ளது.
ஜப்பான் நாட்டை சேர்ந்த நட்சூ என்பவரே கன்னித் தன்மையை வாங்கியவர். இதனால் நட்சூ அதிஷ்டசாலியாக வர்ணிக்கப்படுகின்றார்.
எப்பவுமே முன்னனி ஹிரோவாக இருந்தாலும் கூட சரி அவர்களை கலாய்ப்பது சந்தானத்தின் வழக்கம். நான் ஹிரோ சந்தானம் என அடிக்கடி ஞாபக படுத்தி வருவார்கள் ஹிரோக்கள்.
இந்த நிலையில் ஒரு காமெடியனை எந்த அளவிற்கு கலாய்ப்பார் சாந்தானம் என்று எண்ணிய சூரி, சந்தானம் நடிக்கும் படத்தில் இரண்டவது காமெடியனாக தன்னை நடிக்க கூறி கேட்டு வருபவர்களை அதிரடியாக மறுத்து விடுகிறாராம் சூரி.
அதோடு நீங்கள் ஒரு வசனம் சொல்லி நடிக்க சொல்வீர்கள், சந்தானம் கவுண்டமணி செந்திலை மதிப்பது போல் அவர் என்னை மதிப்பார். இப்பொது எனக்கும் ஒரு மார்க்கெட் உருவாகும் நிலையில் இது தேவையானு கேட்கிறாராம் சூரி.
சசிகுமார் நடித்திருக்கும் பிரம்மன் படத்தில் சந்தானமும் சூரியும் நடித்துள்ளனர் இதில் கிராமத்திலிருந்து நகரத்திற்க்கு வரும் சசிகுமாருக்கு கிராமத்து நண்பனாக சந்தானமும், நகரத்து நண்பனாக சூரியுமாக நடித்துள்ளார்கள்.
இதில் இருவரும் சேர்ந்து ஒரு காட்சியில் கூட நடிக்கவில்லையாம். இதனால் தான் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் சூரி.
பாலிவுட்டில் பிரபு தேவா மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்கு மோதல் ஏற்பட்டுள்ளது. பிரபுதேவா இயக்கத்தில் அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிக்கும் இந்தி படம் ஆக்ஷன் ஜாக்சன்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கும் படம் ஹாலிடே (துப்பாக்கி ரீ-மேக்).
இந்த இரண்டு படங்களையும் யூன் 6ம் திகதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர் அதன் தயாரிப்பாளர்கள்.
ஆனால் இந்த இரண்டு படங்களும் ஒரே தினம் வெளியாகி மோதிக் கொள்வதை அஜய் தேவ்கனும், அக்ஷய குமாரும் விரும்பவில்லையாம். ஆனால் படத்தின் தயாரிப்பாளர்கள் தங்களது ரிலீஸ் திகதியில் பிடிவாதமாக இருக்கிறார்களாம்.
சிம்புவின் வாலு திரைப்பட இசைவெளியிட்டு விழா வரும் 14 ஆம் திகதி நடைபெற உள்ளது. அனிருத் பாடிய பாடல் வெளிவர இருக்கும் அதே நாளில் தனுஷின் நடிப்பில் அனிருத் இசையில் வேலையில்லா பட்டதாரி படத்தின் இசையையும் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
ஒரே நாளில் வெளி வர இருக்கும் தனது இரண்டு படைப்பையும் நினைத்து மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறார் கொலவெறி அனிருத்.
தமிழ் சினிமாவில் முதன்முறையாக நேற்று ஓடியோ டிராக்கை பாடல் காட்சிகளாக அனிருத் வெளியிட்டுள்ளார். ஆக மொத்ததில் வர இருக்கும் அனிருத்தின் அதிரடியான பாடல்களுக்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இது கதிர்வேலன் காதல் திரைப்படம் வருகிற பெப்ரவரி 14ம் திகதி காதலர் தினத்தில் வெளியாக உள்ளது.
இப் படத்துக்கு 320 திரையரங்குகளில் வெளியாக உள்ளதால் சந்தோஷத்தில் மிதக்கிறது இது கதிர்வேலன் காதல் டீம்.
சுந்தரபாண்டியன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ள படம் இது கதிர்வேலன் காதல்.
உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா முதன் முதலாக இணைந்து நடித்துள்ள இப்படம் யு சான்றிதழ் பெற்று குடும்பத்துடன் பார்க்க கூடிய படமாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
ஹரிஸ் ஜெயராஜ் இசையில் ஏற்கனவே பாடல்கள் வெளியாகி வெற்றிபெற்ற நிலையில் இப்படம் ஆரோ 11.1, டால்ஃபி அட்மாஸ் தொழில்நுட்பத்தில் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.
அரண்மனை படத்தில் தெய்வக்குழந்தையாக நடித்துள்ளாராம் ஹன்சிகா. கடந்த அக்டோபர் முதல் திகதி அரண்மனை படத்தின் படப்பிடிப்பை வெற்றிகரமாக பொள்ளாச்சியில் ஆரம்பித்த சுந்தர்.சி, இந்தப்படத்தை இயக்குவதுடன் அதில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.
மேலும் இன்னொரு கதாநாயகனாக வினய் நடிக்க, ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமிராய் மூன்று பேரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.
இதில் தன்னுடைய கரக்டரில் முழு ஈடுபாட்டுடன் நடித்துள்ளாராம் ஹன்சிகா. காரணம் படத்தில் அவரது கரக்டர் ஒரு தெய்வக்குழந்தை மாதிரி.
அதாவது எதிர்காலத்தில் நடக்கபோவதை முன்கூட்டியே உணர்வது மாதிரியான அபூர்வ சக்திகள் கொண்ட பெண். அதிலும் இந்தப்படத்தில் தாவணி கட்டிக்கொண்டு, நெற்றியில் பெரிய அளவில் குங்குமம் வைத்துக்கொண்டு பார்க்கவே வித்தியாசமான ஹன்சிகாவாக ரசிகர்களுக்கு தெரிவாராம். குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் ஹன்சிகாவின் நடிப்பு மிரட்டலாக இருக்கும் என்கிறார்கள்.