ஒருதுளி ரத்தம் கூட இல்லாமல் பிறந்த குழந்தை!!

baby

உடலில் சிறிதளவு கூட ரத்தம் இல்லாமல் பிறந்த குழந்தை உயிர் பிழைத்துள்ளது. கலிபோர்னியாவின் ஆரஞ்ச் நகரில் கடந்த மாதம், ஜெனிபர் ஜூரேஸ் என்பவருக்கு குழந்தை ஒன்று பிறந்தது.

பிரசவ காலத்திற்கு மூன்று வாரங்களுக்கு முன்பாகவே பிறந்த இக்குழந்தை வெளிறிய நிலையில் காணப்பட்டது.

சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் சோதனை செய்த பார்த்த போது, குழந்தையின் உடலில் ஒருதுளி ரத்தம் கூட இல்லை என்பது தெரியவந்தது.

மருத்துவர்களின் கணிப்பின் படி இக்குழந்தை கிட்டதட்ட 80 சதவிகித ரத்தத்தை தாயின் கர்ப்பத்திலேயே இழந்துள்ளது இது கடுமையான ரத்த சோகையைக் குறிக்கிறது.

பிரசவத்திற்கு மூன்று வாரத்திற்கு முன்பே குழந்தையிடம் எவ்வித அசைவும் இல்லாததால் மருத்துவரை அணுகியுள்ளார் ஜெனிபர்.
இதனையடுத்து அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தையும், தாயும் காப்பாற்றப்பட்டனர்.

ஜெனிபரின் முன்னெச்சரிக்கையான நடவடிக்கையே அவரையும் அவரது குழந்தையையும் காப்பாற்றியுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இக்குழந்தை உயிருடன் பிறந்தது மிகப்பெரிய அதிசயமாக கருதப்படுகிறது. இக்குழந்தையை பரிசோதித்த பிறகே நேரடியாக கருவிலேயே ரத்த இழப்பு ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தோம் என சாரோன் பிலிகிரிம் என்ற நர்ஸ் தெரிவித்துள்ளார்.

 

கோச்சடையான் ரிலீஸ் ஆவதால் கமல், விக்ரம், விஷால் படங்கள் தள்ளிவைப்பு!!

Kochadayanரஜினியின் கோச்சடையான் படம் ஏப்ரல் 11ம் திகதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, போஜ்புரி, பெங்காலி, பஞ்சாபி போன்ற மொழிகளில் ரிலீஸ் செய்கின்றனர். 6 ஆயிரம் தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள். இதனால் வேறு படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

கமலின் விஸ்வரூபம்–2, விக்ரமின் ‘ஐ’, விஷாலின் நான் சிகப்பு மனிதன், தனுசின் வேலை இல்லா பட்டதாரி, சிவகார்த்திகேயனின் மான் கராத்தே போன்ற படங்களை ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டனர். கோச்சடையான் வருவதால் இப்படங்களின் ரிலீசை தள்ளி வைக்க யோசனை நடக்கிறது.

 

தொழிலதிபருக்கு அசின் முத்தம் கொடுத்த போட்டோ சிக்கியது!!

Asinநடிகை அசின் தொழில் அதிபருடன் காருக்குள் ஒன்றாக இருப்பது போன்ற படம் போட்டோவில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படம் இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அசின் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். கஜினி படத்தை இந்தியில் ரீமேக் செய்தபோது அதில் நடித்து பிரபலமானார். சல்மான்கான், அமீர்கான், அக்சய்குமார், அஜய் தேவ்கான் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். ஆனால் தற்போது அவருக்கு இந்தியில் படங்கள் இல்லை. மார்க்கெட் சரிந்ததால் விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில்தான் காருக்குள் தொழில் அதிபருடன் காதல் கும்மாளத்தில் இருந்த படத்தை போட்டோகிராபர்கள் எடுத்துள்ளனர். மும்பையில் உள்ள பக்ரா தெருவில் இந்த படத்தை எடுத்துள்ளனர். காருக்குள் தொழில் அதிபருடன் நெருக்கமாக உட்கார்ந்து அசின் முத்தமிட்டுக் கொண்டு இருந்தாராம்.

போட்டோ கிராபர்கள் அதை கவனித்துவிட்டனர். அது அசின் என்பதையும் அடையாளம் கண்டனர். உடனடியாக கமராவில் கிளிக் செய்தார்கள். இதை பார்த்ததும் காரை எடுக்க சொல்லி அங்கிருந்து பறந்துவிட்டாராம் அசின். காருக்குள் இருந்த தொழில் அதிபர் யார் என்பதை நிருபர்கள் துருவி துருவி விசாரிக்கிறார்கள்.

 

விமானத்தை கடத்த முயன்ற நபரால் பரபரப்பு!!(வீடியோ)

Flightநடுவானில் பறந்து கொண்டிருந்த போது குண்டு இருப்பதாக மிரட்டி விமானத்தை கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனின் கார்கோவ் நகரத்தில் இருந்து 110 பயணிகளுடன் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அப்போது விமானத்தில் இருந்த பயணி ஒருவன் எழுந்து திடீரென கூச்சலிட்டுள்ளான்.

விமானத்தில் குண்டு வைத்திருப்பதாகவும் தான் கூறியபடி விமானத்தை ரஷ்யாவின் சோச்சி நகருக்கு செலுத்தும்படியும் உத்தரவிட்டான் இதனால் பயணிகள் அலறி கூச்சல் போட்டனர்.

உடனடியாக சாதுர்யமாக செயல்பட்ட விமானி கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவலை அனுப்பினார். இதனையடுத்து விமானிகளின் காக்பிட் அறைக்குள் நுழைய முடியாதபடி கதவுகள் அனைத்தும் மூடப்பட்டன.

விமானம் பத்திரமாக துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரத்தில் தரையிறக்கப்பட்டது அங்கு பாதுகாப்பு படையினர் ஆசாமியை சுற்றி வளைத்து பிடித்தனர்.

இத்தகவலை துருக்கி நாட்டு போக்குவரத்துதுறை செயலாளர் ஹபீப் சோலுக் வெளியிட்டுள்ளார். இதற்கிடையே தீவிரவாத அச்சுறுத்தல் அதிகம் இருப்பதால் சோச்சி நகரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

குடித்துவிட்டு கும்மாளம் போட்ட நியூசிலாந்து வீரர்கள் இடைநீக்கம்!!

Jessy Raiderபாரில் மது அருந்தி விட்டு கும்மாளம் போட்ட வீரர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்த தொடருக்கான நியூசிலாந்து அணியில் ஜெசி ரைடர், வேகப்பந்து வீச்சாளர் பிரேஸ்வெல் இடம் பிடித்திருந்தனர். இவர்களுக்கு விளையாடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் இவர்கள் இருவரும் முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு முந்தைய தினம் ஆக்லாந்தில் உள்ள மது அருந்தும் பாரில் கும்மாளம் அடித்து விட்டு இரவில் நீண்ட நேரம் கழித்து தான் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு வந்துள்ளனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய நியூசிலாந்து கிரிக்கெட் சபை இந்த 2 வீரர்களையும் இடைநீக்கம் செய்துள்ளது. ஏற்கனவே இந்த 2 வீரர்கள் மீதும் கடந்த சில மாதங்களுக்கு முன் தான் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கண்ணீருக்கு பதிலாக கற்களை சிந்தும் சிறுமி!!(படங்கள், வீடியோ)

ஏமன் நாட்டை சேர்ந்த 12 வயது சிறுமி கண்ணீருக்கு பதிலாக கற்களை சிந்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

ஏமன் நாட்டை சேர்ந்த சாண்டியா சாலே(12) என்ற சிறுமியின் விழிகளில் இருந்தே கண்ணீருக்கு பதிலாக கற்கள் வந்து விழுகின்றன.

மருத்துவர்களுக்கும் சவாலாக திகழ்கின்றார். சிறுமிக்கு ஏதோ வினோத சக்தி உள்ளதாக உள்ளூர் நகர மக்கள் நம்புகின்றனர்.

சில மணிநேரங்களில் ஒரு சிறு பெட்டியை நிரப்பும் அளவுக்கு கற்களை குவிக்கின்றார், இதற்கான காரணத்தை கண்டறிய மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

S1 S2 S3
S4

 

கேரளாவில் படகு வீட்டில் தங்கும் ஹன்சிகா!!

Hansika

கேரளாவில் படகு வீடுகள் பிரபலமானவை. நடிகர், நடிகைகள், தொழில் அதிபர்கள் குடும்பத்துடன் இந்த படகு வீடுகளில் சில நாட்கள் தங்கி வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். நட்சத்தர ஹோட்டல்களுக்கு இணையாக இந்த படகு வீடுகளுக்கும் கட்டணம் வசூலிக்கிறார்கள்.

நடிகை ஹன்சிகாவும் படகு வீட்டில் தங்குகிறார். நான்கு நாட்கள் படகு வீட்டை ஒப்பந்தம் செய்து உள்ளாராம். குடும்பத்துடன் அதில் தங்கி வரப்போகறாராம்.

ஹன்சிகாவுக்கு நரம்பு தளர்ச்சி நோய் இருப்பதாக கூறப்பட்டது. இதற்காக கேரளாவில் சிகிச்சை எடுத்துக் கொள்ள போகிறாராம். படகு வீட்டில் தங்கும்போது இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்கிறாராம்.

 

வவுனியா பிரதேச செயலக கலை இலக்கிய பெருவிழா!!

vavuniya

வவுனியா பிரதேச செயலகத்தின் கலை இலக்கியப் பெருவிழா நேற்று (08.02) வவுனியா நகர கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் கா.உதயராசா தலைமையில் இடம்பெற்றது.

பல கலை கலாசார நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டதுடன் வவுனியா குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலயத்தின் பிரதம குரு க.கந்தசாமி குருக்களின் யோகாசன புகைப்படக் கண்காட்சியும் வவுனியா பிரதேச ஓவியரின் சித்திரக் கண்காட்சியும் இடம்பெற்றிருந்தது.

இதேவேளை பிரதேச செயலகத்தின் கீதம் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல கரிச்சந்திரவிடம் உத்தியோகபூர்வமாக கலாநிதி அகளங்கன் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர் வழங்கி வெளியிட்டு வைத்திருந்தனர்.

அத்துடன் பிரதேச செயலகத்தினால் நடத்தப்பட்ட கலை இலக்கிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் வவுனியா மாவட்டத்தில் 2013 ஆம் ஆண்டு கலாபூசணம் மற்றும் ஆளுனர் விருது பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.

இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல கரிச்சந்திர பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் வவனியா மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சரஸ்வதி மோகநாதன், வவுனியா தெற்கு கல்வி வலய பணிப்பாளர் திருமதி செ.அன்ரன் சோமராஜா, வவுனியா வடக்கு கல்வி வலய பணிப்பாளர் திருமதி பராசக்தி கணேசலிங்கம், வவுனியா தெற்கு பிரதேசசபையின் செயலளார் சுகந்தி கிசோர், ஜனாதிபதியின் இணைப்பாளர் சிவநாதன் கிசோர், வவுனியா வர்த்தகர் சங்க தலைவர் எஸ்.இராசலிங்கம் ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டதுடன் பாடசாலை மாணவாகள், அரச உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

நிர்வாணப் படங்களை பிரசுரிக்கலாம் : இந்திய உச்சநீதிமன்றம் அனுமதி!!

Indian High Courtஒரு நல்ல சமூக செய்தியை மக்களிடம் கொண்டு செல்வதற்கு நிர்வாணப் படங்களை பிரசுரிக்கலாம். அதில் தவறில்லை என்று இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் ஒரு பெண்ணின் நிர்வாணப் படத்தை இதுபோன்ற காரியங்களுக்காக வெளியிடும்போது, அது ஆபாசம் இல்லாததாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்றும் உச்சநீதிமன்றம் விளக்கியுள்ளது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அனந்தபஜார் பத்ரிகா மற்றும் ஸ்போர்ட்ஸ் வேர்ல்ட் ஆகிய பத்திரிகைகளில் கடந்த 1993ம் ஆண்டு டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் மற்றும் அவரது காதலியின் நிர்வாணப் படங்கள் வெளியிடப்பட்டிருந்தது.

ஜெர்மனிப் பத்திரிக்கையில் வெளியான புகைப்படங்களை இந்த இரு பத்திரிகைகளும் எடுத்துக் கையாண்டிருந்தன. இதையடுத்து இவர்கள் மீது ஐபிசி 292வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி மேற்கு வங்க நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை எதிர்த்து இரு பத்திரிகைகளும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன. அதை விசாரித்த நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன் மற்றும் நீதிபதி சிக்ரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்பில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இருவரும் நிறவெறிக்கு எதிரான சமூக செய்தியை தங்களது படத்தின் மூலம் அளித்துள்ளனர். நிறத்தை வைத்து ஒருவரைப் பிரித்துப் பார்க்கக் கூடாது என்பதை இந்தப் படங்கள் உணர்த்தியுள்ளன. அந்த செய்தியும் முறையாக சொல்லப்பட்டுள்ளது.

மேலும் தனது காதலியின் இரு மார்புகளையும் போரிஸ் பெக்கர் தனது கரங்களால் மறைத்துள்ளார். எனவே இந்தப் படத்தில் ஆபாசம் என்று எதுவும் இல்லை. நல்ல சமூக செய்திக்காக இந்தப் படங்களையும், இந்த போஸும் தரப்பட்டுள்ளது.

எனவே ஆபாசமில்லாத வகையில் ஒரு நல்ல செய்தியை சமூகத்திற்குச் சொல்வதற்காக இதுபோன்ற நிர்வாணப் படங்களை வெளியிடுவதில் தவறில்லை என்று நாங்கள் கருதுகிறோம். ஒருவரது மனதில் ஆபாசமான எண்ணத்தை அது விதைக்காத வரையில் அதை ஆபாசம் என்று கூற முடியாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

 

இணையத்தில் சிம்பு பெயரில் மோசடி!!

Simbu

நடிகர் சிம்பு பெயரில் இணையத்தில் மோசடி நடந்துள்ளது. இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக சிம்பு அறிவித்துள்ளார்.

நடிகர்கள், நடிகைகள் பெயரில் டுவிட்டர், பேஸ்புக்கில் போலி கணக்குகளை மர்ம நபர்கள் தொடங்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகள் பற்றிய செய்தி மற்றும் படங்களை அதில் போட்டு வைத்து ரசிகர்களுடன் தொடர்பு வைத்தும் உரையாடுகிறார்கள்

ஏற்கனவே திரிஷா பெயரில் போலி கணக்கு துவங்கப்பட்டது. இதனை அவர் கண்டித்தார். சமீபத்தில் காமெடி நடிகர்கள் பரோட்டா சூரி, வி.டி.வி கணேஷ் பெயரிலும் மோசடி நடந்தது. தற்போது சிம்பு பெயரில் நடக்கிறது. இதுகுறித்து சிம்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது..

நான் டுவிட்டரில் இருக்கிறேன். ஐ அம் எஸ்டிஆர் என்ற பெயரில் என் அதிகாரபூர்வ கணக்கு உள்ளது. ஆனால் என் பெயரில் சில போலி டுவிட்டர் கணக்குகளும் இருக்கின்றன. ரசிகர்களும் பத்திரிகையாளர்களும் இந்த போலியை நம்பவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

என்னைப் பற்றிய செய்திகளையும் தகவல்களையும் எனது அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் உடனுக்குடன் போட்டு வருகிறேன். என் பெயரில் உள்ள போலி கணக்குகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

 

வெள்ளை மாளிகைக்குள் பாய்ந்த மர்ம மனிதனால் பரபரப்பு!!

White Houseஅமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகையின் மதில் சுவரை தாண்டி குதிக்க முயன்ற மர்ம நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வொஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையின் மதில் சுவரின் ஓரமாக நேற்று நடந்து சென்ற ஒரு மர்ம மனிதன் மதில் சுவரின் மீது திடீரென்று ஏற தொடங்கினான்.

இதை தூரத்தில் இருந்து கவனித்து விட்ட உளவுத்துறை பொலிஸார் பாய்ந்தோடி சென்று உள்ளே குதிக்க விடாதவாறு அவனை சுற்றி வளைத்து பிடித்து கொண்டனர். அவனிடமிருந்த 2 பைகளையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

பைகளுக்குள் வெடிகுண்டு இருக்கும் என்ற அச்சத்தில் வெடிகுண்டு நிபுனர்களுக்கும் வாஷிங்டன் நகர பொலிஸாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து வெள்ளை மாளிகை சிறிது நேரத்திற்கு அவசரமாக மூடப்பட்டது.

குறித்த மர்ம மனிதன் எந்த ஊரை சேர்ந்தவன், பைகளுக்குள் என்ன வைத்திருந்தான் என்பது தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. தொடர்ந்து அவனிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பலத்த காவல் கொண்ட ஒபாமாவின் வீட்டின் மதில் சுவரை மர்ம நபர் ஒருவன் தாண்டி குதிக்க முயன்ற சம்பவம் வொஷிங்டன் நகரவாசிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆபாச கதவை திறந்து விடும் கூகுள் : பரபரப்பு புகார்!!

Googleஆபாச வலைத்தளங்களுக்கான வாசலை கூகுள் சிறுவர்களுக்கு திறந்து விடுகிறது என்று சமூக ஆர்வலர் ஒருவர் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இணையதளங்களுக்குள் செல்வதற்கான சாவிகளாக கூகுள், யாஹூ உள்ளிட்ட தேடு இயந்திரங்கள் உதவுகின்றன. இவற்றில் கூகுள் தேடு இயந்திரத்தில் ஏராளமான வசதிகள் இருப்பதால், உலகம் முழுவதிலும் உள்ள இணையதள பயன்பாட்டாளர்கள் கூகுள் வாயிலாகவே இதர இணைய தளங்களுக்குள் நுழைகின்றனர்.

அவ்வகையில் உலகளாவிய அளவில் இணையதளங்களுக்கான தேடு இயந்திரங்களில் ஜாம்பவானாக கூகுள் திகழ்ந்து வருகிறது.
இந்தியாவில் இந்நிறுவனத்துக்கான தலைமை அலுவலகம் ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் அமைந்துள்ளது.

இதன் அலுவலக மேலாளர் மீது உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசி அருகேயுள்ள பட்டேல் நகர் பகுதியில் வசிக்கும் வினித் குமார் சிங் என்பவர் உள்ளூர் பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றையளித்துள்ளார்.

அதில், கூகுள் நிறுவனத்தின் பிளே ஸ்டோர் அப்ளிகேஷன் மூலம் அண்ட்ரொய்ட் ரக செல்போன்களை வைத்திருக்கும் சிறுவர், சிறுமியர் சுலபமாகவும், இலவசமாகவும் உடலுறவு காட்சிகள் அடங்கிய ஆபாச படங்களை பார்ப்பதற்கான தலைவாசலாக கூகுள் தேடு இயந்திரம் இருந்து வருகிறது.

இவற்றை பார்ப்பவர்கள் பருவ வயதை அடைந்தவர்களா இல்லையா என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் சிறுவர், சிறுமியர் அனைவருக்கும் ஆபாச வலைத்தளங்களுக்கு செல்லும் வாசல் கதவை திறந்து விடும் கூகுள் நிறுவனம் மற்றும் அதன் இந்திய அலுவலக மேலாளர் மீது உடனடியாக உரிய நடவக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

ஏ.ஆர்.ரஹ்மான் ஒலிப்பதிவு கூடத்தில் அதிகாலையில் நுழைந்து மூடும்படி ரகளை செய்த சிறுவன்!!

ARஇசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ஒலிப்பதிவு கூடத்துக்குள் அதிகாலை வேளையில் நுழைந்த சிறுவன் எல்லா பணிகளையும் நிறுத்தி விட்டு மூடும்படி ரகளை செய்த தகவலை அவரே வெளியிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் தனது ‘ஃபேஸ் புக்’ பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளதாவது..

புதிய இசை அல்பம் தயாரிக்க வழக்கம் போல் எனது ஒலிப்பதிவு கூடத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அதிகாலை 3 மணியளவில் எதிர்பாராத புதிய விருந்தாளியாக ஒரு சிறுவன் உள்ளே நுழைந்தான். நேராக என்னுடைய சவுண்ட் என்ஜினியரிடம் சென்று எல்லாவற்றையும் இழுத்து மூடுங்கள் என்று கம்பீரமாக உத்தரவிட்ட அவனது குரலை கேட்ட அனைவரும் திகைத்துப் போய் விட்டனர்.

குரல் வந்த திசையை பார்த்த நானும் ஒரு கணம் ஆச்சரியத்தில் பிரமித்து போய் நின்று விட்டேன். கட்டாயமாக ஏழு மணி நேரமாவது நான் உறங்கி ஓய்வெடுக்க வேண்டும் என உபதேசித்து, என்னை கையோடு அழைத்து செல்வதிலேயே குறியாக இருந்த என் மகன் அமீனை சமாதானம் செய்து அனுப்பி வைக்க 10 நிமிடங்களுக்கு மேல் நான் போராட வேண்டியதாகி விட்டது.

அதன் பிறகு எல்லாப் பணிகளையும் நிறுத்தி விட்டு நான் உறங்க செல்லும்படி ஆகி விட்டது. ஹும்.. காலம் தான் எவ்வளவு வேகமாக விரைந்தோடுகிறது. குழந்தைகள் என்றும் குழந்தைகளாகவே இருப்பதில்லை. எனது மகன் அமீன் இன்னும் குழந்தை இல்லை என்பதை நான் உணர்ந்த தருணம் இது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

குழந்தைகளுக்கு மதுபானம் ஊற்றி கொடுத்துவிட்டு கள்ளக்காதலனுடன் ஒன்றாக இருந்த பெண்!!

Motherதிருச்சி அரசு வைத்தியசாலைக்கு இன்று காலை ஒரு பெண் 2 குழந்தைகளுடன் பதறியபடி வந்தார். அந்த குழந்தைகள் மயக்க நிலையில் இருந்தன. உடனடியாக அந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன. அந்த குழந்தைகளுக்கு என்ன நேர்ந்தது என்று கேட்டபோது அந்த பெண் கொடுத்த தகவல் அதிர்ச்சி அடைய செய்தது.

2 குழந்தைகளும் மது போதையில் இருந்து மீள முடியாமல் தவித்தது சிகிச்சையின்போது அனைவரையும் கலங்கடித்தது. இதற்கு காரணம் குழந்தைகளின் தாய் பாத்திமா, அவரது கணவர் ஜலால் என்பவர் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டதால் 2 குழந்தைகளுடன் திருச்சி நத்தர்ஷா பள்ளி வாசல் பகுதிகளில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்தார்.

அவர்களுக்கு தங்க வீடு எதுவும் இல்லாததால் தெரு மற்றும் பிளாட்பாரங்களில் தங்கியிருந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று இரவு பாத்திமாவை தேடி வாலிபர் ஒருவர் வந்துள்ளார். அப்போது குழந்தைகள் இருவரும் தூங்காமல் விளையாடி கொண்டிருந்தனர்.

இதனால் அந்த வாலிபர் கொண்டு வந்த மதுவை வாங்கிய பாத்திமா, தனது குழந்தைகள் யாசிக் அன்சாரி (5), பரக்கத் நிஷா (2½) ஆகியோருக்கு கொடுத்துள்ளார். அதனை குடித்த சிறிது நேரத்தில் மயங்கி விட்டன.

அந்த நேரத்தில் வாலிபர் பாத்திமாவுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார். காலையில் வழக்கம்போல் குழந்தைகள் விழிக்கவில்லை என்பதால் பதட்டம் அடைந்த பாத்திமா, அரசு வைத்தியசாலைக்கு அவர்களை தூக்கிக்கொண்டு வந்துள்ளார்.

இந்த தகவல் பொலிஸாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து பாத்திமாவிடம் விசாரணை நடத்த பொலிஸார் முடிவு செய்துள்ளனர். பாத்திமாவுடன் உல்லாசம் அனுபவித்த அந்த வாலிபர் அவரது தாயாரின் கள்ளக்காதலனாவும் இருந்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

 

கிளிநொச்சி விபத்தில் வவுனியா நபர் மரணம்!!

Accdentவவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் தரித்து நின்றுகொண்டிருந்த லொரியின் மீது மோதி உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு வவுனியா குட்செற் வீதியைச் சேர்ந்த கந்தையா ரகுநாதன் (44) என்பவர், யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கையில், கிளிநொச்சி மாவட்டம் இரணைமடு சந்திப் பகுதியில் அவர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் வீதி ஓரத்தில் தரித்து நின்றிருந்த லொரி ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியிருக்கின்றது. சம்பவத்தில் கந்தையா ரகுநாதன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 

பெற்ற மகளை இரண்டு வருடங்களாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய தந்தை!!

Abuseகேரளாவில் பெற்ற மகளையே இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மங்கரை கிராமத்தை சேர்ந்த அப்துல் ரகுமானுக்கு (47) ஐந்து மகள்கள். இதில் இரண்டாவது மகள் நஸ்ரியா (16) பிளஸ் 2 படித்து வருகிறார்.

ஒருநாள் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் நஸ்ரியாவை தாக்கி வலுகட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் ரகுமான். இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் ரகுமான் மிரட்டியுள்ளார்.

தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியே சொல்ல முடியாமல் நஸ்ரியா தவித்து வந்துள்ளார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ரகுமான் கடந்த 2 ஆண்டுகளாக மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதன் விளைவாக நஸ்ரியா கர்ப்பமானார். மருத்துவரிடம் அழைத்து சென்று கர்ப்பத்தையும் கலைத்துள்ளார் ரகுமான். கடந்த ஒரு மாதமாக ரகுமானின் கொடுமை எல்லை மீறியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு செல்போனில் ஆபாச படங்களை காட்டி நஸ்ரியாவை பாலியல் உறவுக்கு அழைத்துள்ளார்.

ஆனால், நஸ்ரினா மறுக்கவே கொலை செய்து விடுவதாக மிரட்டி தனது ஆசையை தீர்த்துக் கொண்டுள்ளார். ஒரு கட்டத்தில் பாலியல் தொந்தரவு அதிகரிக்கவே மனம் வெறுப்படைந்து நஸ்ரினா தனது தாயிடம் நடந்த விவரங்களை கூறி அழுது இருக்கிறார்.

இது குறித்து நஸ்ரியாவின் தாயார் பொலிஸில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் ரகுமானை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நஸ்ரியாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், பாலியல் கொடுமைக்கு உள்ளானதை உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து நஸ்ரியா அரசு மகளிர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது.