பேஸ்புக்கில் விபச்சாரத்திற்கு ஆள் தேடிய பெண் கைது!!

Fbஇங்கிலாந்தில் உள்ள கார்ன்வால் பகுதியை சேர்ந்த பெண் மிச்செலி சாப்பேன். இவர் பேஸ்புக் இணைய தளத்தில் தனது தந்தை ராய் ஷாக்சன், மாற்றாந்தாய் லூசி ஆகியோர் பெயரில் கணக்கு தொடங்கினார்.

அவர்கள் பெயரில் தனக்காக விபசாரத்துக்கு ஆள் தேடினார். அதற்காக நூற்றுக்கணக்கானவர்களுக்கு செக்ஸ் வார்த்தைகளால் ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பினார்.

இதுகுறித்து பொலிசில் புகார் செய்யப்பட்டது. பொலிசார் நடத்திய விசாரணையில் மிச்செலி சாப்மேன்தான் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது தெரியவந்தது.

எனவே அவரை கைது செய்தனர். விசாரணையில் தனது தந்தை தன்னை 21 வருடங்களாக கண்டு கொள்ளவில்லை என்றும், அவரையும் தனது மாற்றாந்தாயையும் பழி வாங்கவே இது போன்று நடந்து கொண்டதாகவும் கூறினார்.

கைது செய்யப்பட்ட மிச்செல் சாப்மேன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 20 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்தது.

இங்கிலாந்து வரலாற்றிலேயே இதுபோன்ற வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற முதல் பெண் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

எனக்கு எதிராக தமிழக கட்சிகள் செயற்படுகின்றன : ரணில் குற்றச்சாட்டு!!

Ranilதமிழகத்தில் தனக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் தமிழகம் வரத் தயங்குவதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் எனக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. இதனால் தமிழகத்தில் எனக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆகையால் தமிழகம் வரவே எனக்கு தயக்கமாக இருக்கிறது என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அச்சுறுத்தல்!!

Mobileவடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலனுக்கு அநாமதேய தொலைபேசி அழைப்புக்கள் மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் யாழ் பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூர் தொலைபேசி இலக்கமொன்றிலிருந்தும், வெளிநாட்டு தொலைபேசி இலக்கமொன்றிலிருந்தும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து குறித்த தொலைபேசி அழைப்புக்கள் வருவதாகவும் எனினும் தான் அதற்கு பதிலளிக்கவில்லை என்றும் அந்த முறைப்பாட்டில் சத்தியசீலன் தெரிவித்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

48 மணி நேரத்தில் பெயரை மாற்ற வேண்டும் : பிரவுதேவாவுக்கு எச்சரிக்கை!!

Prabhu Deva48 மணி நேரத்தில் பெயரை மாற்றாவிடில் சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கைக்கு தயாராகிக் கொள்ளுங்கள் என ஹொலிவுட் தயாரிப்பு நிறுவனம் மிரட்டல் விடுத்துள்ளது.

பாபா ஃபிலிம்ஸும், ஈராஸ் என்டர்டெய்ன்மெண்டும் இணைந்து பிரபுதேவா இயக்கும் படத்தை தயாரித்து வருகின்றன. படத்துக்கு ஆக்ஷன் ஜாக்சன் என பெயர் வைத்தனர். அஜய் தேவ்கான், சோனாக்ஷிசின்கா நடித்துள்ளனர். ஜுன் 6 ஆம் திகதி படம் வெளியாக உள்ளது.

இந்தப் பெயர் – ஆக்ஷன் ஜாக்சன் – நாங்கள் 1988 ல் எடுத்த ஹொலிவுட் படத்தின் பெயர். அதனை நாங்கள்தான் பதிவு செய்திருக்கிறோம். அதனை நீங்கள் எப்படி பயன்படுத்தலாம். 48 மணி நேரத்தில் பெயரை மாற்றாவிடில் நடவடிக்கைதான் என ஹொலிவுட் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் மிரட்டல் விடுத்துள்ளது.

பிரபுதேவாவின் முந்தைய படமான ராம்போ ராஜ்குமாருக்கும் இதேபோல் எச்சரிக்கை விடப்பட்டது. ராம்போ நாங்கள் எடுத்தப் படம், அந்தப் பெயரை நீங்கள் எப்படி வைக்கலாம் என கேள்வி எழுப்பியதால் ராம்போ ராஜ்குமாரை ரா..ராஜ்குமார் என்று மாற்றினர். ஆனால் இந்தமுறை அப்படி பணிந்து போகும் எண்ணம் தயாரிப்பாளர்களுக்கு இல்லை.

வார்னர் பிரதர்ஸின் படம் ஆங்கிலம். எங்களுடையது ஹிந்தி. இந்தியாவில் இதனை முறைப்படி பதிவு செய்து நோ அப்ஜெக்ஷன் சான்றிதழும் வாங்கியுள்ளோம். படத்தின் பெயரை மாற்றுவதாக இல்லை, பார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்திருக்கிறார்கள்.

 

15 வயது சிறுமியை வல்லுறவு புரிந்த இராணுவ சிப்பாய் கைது!!

Abuse15 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.

இங்கினிமிட்டிய எச்1 ஏ கிராமத்தைச் சேர்ந்த சிறுமியே வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டை அடுத்து 20 வயதான இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியுடன் இராணுவ சிப்பாய் காதல் தொடர்பு பேணி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

 

விஜயை அதிற வைத்த தீபிகா : கைகொடுத்த ப்ரியங்கா!!

Deepika

தன் முதல் நாயகனான விஜய்க்கு மீண்டும் ஜோடியாகிறார் பாலிவுட்டின் டாப் நடிகையான ப்ரியங்கா சோப்ரா. நடிகர் விஜய் அடுத்ததாக சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகியை தீவிரமாகத் தேடி வந்தனர்.

புதுமுகமாக இல்லாமல் முன்னணி நடிகையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். ஆரம்பத்தில் தீபிகா படுகோனே மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகிய பாலிவுட் நடிகைகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.

தற்போது கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். இது தமிழில் அவருக்கு முதல் படம். இந்நிலையில் அவரை விஜய்க்கு ஜோடியாக நடிக்க கேட்டனர்.

படத்தில் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்த படுகோனே அதற்காக பெரிய தொகை ஒன்றை சம்பளமாக கேட்டார். ஆனால் படத்திற்கான பட்ஜெட்டை விட இது அதிகம் என்பதால் முயற்சியைக் கைவிட்டனர். அடுத்து நடிகை பிரியங்கா சோப்ராவை படத்தில் நடிப்பதற்கு கேட்டனர்.

படத்தின் கதை மிகவும் பிடித்து போனதால் தமிழில் நடிக்க ஆர்வமானார் பிரியங்கா சோப்ரா. அவரது சம்பள தொகையும் நிம்மதியைத் தருவதாக இருந்தது.

பிரியங்கா சோப்ரா தமிழன் என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதன் முதலில் நடித்தார். விஜய்தான் அவரது முதல் ஹீரோ. அதுமட்டுமல்ல, இருவரும் இணைந்து ஒரு பாடலையும் சொந்தக் குரலில் பாடினர் அந்தப் படத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

உண்மையிலேயே அஜித்துக்கு ரொம்ப பெரிய மனசு!!

ajithசூர்யாவைக்கொண்டு காக்க காக்க, வாரணம் ஆயிரம் போன்ற படங்களை கெளதம்மேனன் இயக்கி வந்தபோது அவரும் அஜித்தும் இணைவதற்கான ஒரு சூழுலும் உருவானது.

ஆனால் அதையடுத்து ஏற்பட்ட சில எதிர்பாராத பிரச்னைகளால் அஜித் எனக்கு தேவையில்லை என்று சொல்லிக்கொண்டு அந்த புராஜக்டையே கிடப்பில் போட்டார் கெளதம். இதனால் அவருக்கும் அஜித்துக்குமிடையே மனஸ்தாபம் ஏற்பட்டது.

ஆனால் ஆரம்பம் படத்தை முடித்து விட்டு வீரம் படத்தில் அஜித் ஈடுபட்டிருந்த நேரம் கெளதம்மேனனை சூர்யா கழட்டி விட்டார். இதனால் அடுத்து யாரை வைத்து படம் இயக்குவது என்பது புரியாமல் தடுமாறிக்கொண்டு நின்றார் கெளதம்.

அப்போது பழைய மனஸ்தாபத்தை தள்ளி வைத்து விட்டு, தானாக முன்வந்து கெளதம்மேனனுக்கு கால்சீட் கொடுத்தார் அஜித்.

அதனால் அப்படத்தில் அஜித்துடன் சிம்புவையும் இணைத்து மல்டி ஹீரோ ஸ்கிரிப்டாக பண்ணியுள்ளார் கெளதம். தற்போது படப்பிடிப்பும் தொடங்கப்போகிறார்கள். இந்த நிலையில், அஜித் தனக்கு செய்த உதவியை சொல்லி உணர்ச்சிவசப்படுகிறாராம் கெளதம்.

எனக்கு தொடர்ந்து பல தோல்வி படங்கள். அவருக்கோ தொடர்ச்சியாக ஹிட் படங்கள். அதுவும் அஜித்தை வைத்து அடுத்தடுத்து படம் இயக்க பல முன்னணி டைரக்டர்களே அலைந்து கொண்டிருந்தார்கள்.

ஆனபோதும் எனது நிலையை அறிந்து கைகொடுத்தார் அஜித். வீரம் படத்திற்கு பிறகு கெளதம் படத்தில்தான் நடிக்கிறேன் என்று அடித்து சொன்னவர், ஏ.எம்.ரத்னத்திடம் என்னை கூட்டிச்சென்று தயாரிப்பாளரையும் அவரே கொடுத்தார்.

அதன்பிறகு பலமுறை சந்தித்தபோதும் பழைய விசயங்கள் எதையும் இப்போதுவரை பேசியதில்லை. புதிய விசயங்களையும், புதிய படத்தை பற்றி மட்டுமே புதுசு புதுசாக பேசுகிறார். உண்மையிலேயே அஜித்துக்கு ரொம்ப பெரிய மனசுதான் என்கிறாராம் கெளதம்.

 

மூன்று கிலோ தங்கம் கடத்த முயன்றவர் கைது!!

GOldசட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் தங்கம் கொண்டு வர முயற்சித்த ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை, இலங்கை சுங்கப் பிரிவினர் இன்று காலை கைது செய்துள்ளனர்.

31 தங்க பிஸ்கட்டுக்களை குறித்த நபர் நாட்டுக்குள் சட்டவிரோதமான முறையில்கொண்டு வர முயற்சித்துள்ளார்.
இந்த தங்கத்தின் பெறுமதி சுமார் ஒன்றரை கோடி ரூபாவிற்கும் அதிகம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

40 வயதான கொம்பனித்தெருவை வசிப்பிடமாக்க் கொண்டவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தங்க பிஸ்கட்டுக்களின் எடை மூன்று கிலோ கிராம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எயார் அரேபிய விமானத்தின் மூலம் சாஜாவிலிருந்து குறித்த நபர் இலங்கைக்கு பயணம் செய்துள்ளார்.

 

பாலியல் லஞ்சம் பெற்றுக்கொண்ட அதிபரை விளக்க மறியலில் வைக்க உத்தரவு!!

Jailபாலியல் லஞ்சம் பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்ட பாடசாலை அதிபர் ஒருவரை விளக்க மறியிலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புத்தள நவோதய வித்தியாலயத்தில் கடமையாற்றி வரும் அதிபருக்கே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உடலிகே சுனில் சாந்த என்பவரை எதிர்வரும் 11ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது,

பெண் ஒருவரிடம் பாலியல் லஞ்சம் பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சந்தேக நபர் குறித்த பெண்ணை சுய விருப்பின் அடிப்படையில் வெல்லாவய பிரதேச ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுபற்றி அறிந்து கொண்ட குறித்த பெண்ணின் கணவரான இராணுவ உத்தியோகத்தர் புத்தள பொலிஸில் புகார் செய்துள்ளார்.

இந்த புகாரை முதலில் விசாரணை செய்த பொலிஸார் பெண் சுய விருப்பில் அதிபருடன் ஹோட்டலுக்கு சென்றதாகத் தெரிவித்து பிரச்சினையை தீர்த்து வைத்தனர். எனினும் பொலிஸாரின் விசாரணைகளில் திருப்தி அடையாத குறித்த பெண்ணின் கணவர், சிறுவர் மற்றும் மகளிர் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன்படி குறித்த பெண்ணிடம் பாலியல் லஞ்சம் பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்து வெள்ளவாய பொலிஸார் அதிபரை கைது செய்துள்ளனர்.

 

ஒரு கோடி ரூபா பெறுமதியான வல்லப்பட்டைகளுடன் ஒருவர் கைது!!

Vallappattaiஒரு தொகை வல்லப்பட்டைகளை வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய சுங்கப் பிரிவின் குறித்த நபரை கைது செய்துள்ளனர். குறித்த நபரிடம் இருந்து 16 கிலோ வல்லப்படைகள் மீட்கப்பட்டுள்ளன.

இதன் பெறுமதி ஒரு கோடி ரூபா என சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு கிரேன்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

 

காதல் போறடித்து விட்டது : சித்தார்த்!!

Sidharthசித்தார்த் என்­றாலே காதல் மற்றும் மென்­மை­யான கதை­க­ளுக்­குத்தான் பொருந்­துவார் என்­றொரு இமேஜ் உரு­வா­கி­யுள்­ளது.

அவரோ அந்த இமேஜை மாற்ற வேண்டும் என தலை­கீ­ழாக நிற்­கிறார். அதனால் ஜிகர்­தண்டா படத்தில் மாறு­பட்ட வேடத்தில் நடிக்கிறார்.

மது­ரைக்­கார இளை­ஞ­ராக இந்த படத்தில் நடிக்கும் சித்தார்த் லுங்கி கட்­டி­ய­படி பட்­டையை கிளப்­பி­யுள்­ளாராம். அவர் கூறு­கையில், காதல் படங்­களில் நடித்து போர­டித்து விட்­டது. இதனால் இப்போதெல்லாம் மாறு­பட்ட வேடங்­களில் தான் நடிக்­கிறேன்.

தற்­போது நடித்து கொண்­டி­ருக்கும் படங்கள் வெளி­யா­னதும் என் மீதுள்ள சாக்லேட் பாய் இமேஜ் மாறும் என்­கிறார்

 

இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட குண்டு கண்டுபிடிப்பு!!

Bombசீனாவின் ஒரு பகுதியாக விளங்கும் ஹாங்காங்கின் ஹேப்பி பள்ளத்தாக்கு மாவட்டத்தில் கட்டுமானப்பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது.

அப்போது இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட ஒரு தொன் எடையுடைய வெடிக்கப்படாத ஒரு அமெரிக்க குண்டு பூமிக்கடியில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து குண்டுகள் செயல் இழக்க செய்யும் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த குண்டுகள் அகற்றும் நிபுணர்கள் அப்பகுதி வீடுகள் மற்றும் ஹோட்டல்களில் இருந்த 2260 பேரை பத்திரமான இடத்திற்கு அப்புறப்படுத்தினர். பின்னர் அப்பகுதி சாலைகள் அனைத்தும் மூடப்பட்டது.

இதையடுத்து அந்த குண்டும் மற்ற வெடிக்கப்படாத பிரிட்டனின் குண்டுகளும் செயலிழக்கம் செய்யப்பட்டு அகற்றப்பட்டன. தற்செயலாக இது வெடிக்குமானால், இப்பகுதியில் உள்ள வீடுகள் தரைமட்டமாகி மிகப்பெரிய சேதங்களை விளைவித்து இருக்கும் என்று அப்போது ஒரு அதிகாரி கூறினார்.

கடந்த 1941ம் ஆண்டு ஹாங்காங் பிரிட்டன் நிர்வாகத்தில் இருந்தபோது ஜப்பான் அப்பகுதிகளுக்குள் ஊடுருவியது. அப்போது ஜப்பான் படைக்கு எதிராக அமெரிக்கா வீசிய குண்டுதான் பூமிக்கடியில் வெடிக்காமல் அப்படியே கிடந்தது என்று கூறப்படுகிறது.

 

பங்களாதேஷ் இலங்கைக்கு சவால் : முதல் இன்னிங்ஸில் 426 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது!!

Ban

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டின் மூன்றாம் நாளான இன்று பங்களாதேஷ் தனது முதல் இன்னிங்ஸை நிறைவு செய்துள்ளது.

முதல் இன்னிங்ஸில் இலங்கை பெற்ற 587 ஓட்டங்களை அடுத்து களமிறங்கிய பங்களாதேஷ் சிறப்பாக செயற்பட்டு பொலொஒன் முறையை தவிர்த்து சகல விக்கெட்களையும் இழந்து 426 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

பங்களாதேஷ் சார்பில் சமூர் ரஹ்மான் 106 ஓட்டங்களையும் இம்ருல் கயேஸ் 115 ஓட்டங்களையும் சக்கிப் அல் ஹசன் 50 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் இலங்கை சார்பில் அஜந்த மென்டிஸ் 6 விக்கெட்களையும் பெரேரா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதன்படி 161 ஓட்டங்கள் முன்னிலையில் இருக்கும் இலங்கை தனது இரண்டாவது இன்னிங்ஸை சற்றுமுன் ஆரம்பித்துள்ளது.

 

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய வருடாந்த மெய்வல்லுனர் போட்டி!!(படங்கள்)

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று (06.02) பாடசாலை அதிபர் திரு.செ.தர்மரட்ணம் தலைமையில் நடைபெற்றது.

இவ் விழாவில் பிரதம விருந்தினராக திரு.வ.செல்வராசா (வட மாகாணக் கல்விப் பணிப்பாளர்) அவர்களும், சிறப்பு விருந்தினராக திருமதி.எஸ்.அன்ரன் சோமராஜா(வலயக் கல்விப் பணிப்பாளர் -வவுனியா தெற்கு) அவர்களும், கௌரவ விருந்தினராக திரு.A.M.பாலித அபயசிங்க (பொறுப்பதிகாரி -செட்டிகுளம் பொலிஸ் நிலையம்) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் பாடசாலை அபிவிருத்தி சங்க நிர்வாகிகள், பிரதேச முக்கிய பிரமுகர்கள், பழையமாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

1 2 3 4 5 6 7 8 9 11 12

 

 

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை சுட்டுக்கொல்வேன் என ஆட்டோ சாரதி மிரட்டல்!!

Kejriwalடெல்லி முதலமைச்சராக அண்மையில் பதவி ஏற்ற ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை சுட்டுக்கொல்வேன் என முன்னாள் ஆட்டோ சாரதி ஒருவர் மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி தலைவரான ஷர்மாவிற்கு வந்த தொலை பேசி அழைப்பில் பேசிய நபர் ஒருவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜந்தர் மாந்தருக்கு வரும்போது அவரை சுட்டுகொல்வென் என கூறியுள்ளார்.

இது தொடர்பாக உடனடியாக பொலிசுக்கு தகவல் அளித்த ஷர்மா பின்னர் தொலைபேசியில் பேசியது முன்னாள் ஆம் ஆத்மி ஆதரவாளர் என தெரிந்ததும் அவர் மீது எந்த புகாரும் அளிக்காமல் அவரை விட்டுவிட சொன்னதாக தெரிகிறது.

பொலிசார் விசாரித்ததில் தொலைபேசியில் பேசியது ராம் நாராயணன் பகத் என்னும் 40 வயது நபர் என்பதும் இவர் முன்பு ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவாளராக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

டெல்லியில் தேர்தல் பிரசாரத்தின் போது அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்டோ சாரதிகள் சங்க பிரதிநிதிகளை சந்தித்து அவர்களது 17 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்ததாகவும், இன்று வரை அதில் ஒன்று கூட நிறைவேற்றப்படாததால் இந்த கொலை மிரட்டல் வந்திருக்ககூடுமென கருதப்படுகிறது.

மேலும் தொலைபேசியில் பேசிய நபர் மது அருந்திவிட்டு போதையில் இருந்ததாக தெரிவிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

உருளைக்கிழங்கு இறக்குமதி வரி 25 ரூபாவாக உயர்வு!!

Potatoesஇறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ உருளைக் கிழங்கிற்கான இறக்குமதி வரி 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாளை (07) தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி 10 ரூபாவாக இருந்த இறக்குமதி வரி 25 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

இதனால் உருளைக்கிழங்கின் விலை 30-40 ரூபாவால் அதிகரிக்கும் என எதிர்பார்கப்படுகின்றது.