வன்னி மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகளில் சஜித் முன்னிலை!!

நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 4,899 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 4,257 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 2,092 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இதன்படி, தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 1,160 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 68 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

விஷம் கலந்து ஜூஸ் குடித்து பிரபல பாடகி மரணம்!!

15 நாட்களுக்கு முன்பு போலங்கிரில் நடந்த படப்பிடிப்பில் ஒடிசாவை சேர்ந்த பிரபல சம்பல்புரி பாடகி ருக்சானா பானோ (27) பங்கேற்றார்.

பின்னர் அவருக்கு jஜூஸ் வழங்கப்பட்டது. அதை குடித்துவிட்டு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் பவானிபட்னாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆரம்ப சிகிச்சைக்குப் பிறகு, அவர் போலங்கிரில் உள்ள பீமா போய் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார், பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் பர்கரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

பின்னர் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் தொடர் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பாடகி ருக்ஸானா பானோ உயிரிழந்தார். ஆனால் அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

இதுகுறித்து ருக்ஸானா பானோவின் சகோதரி ரூபி பானோ கூறுகையில், ‘எனது சகோதரி ருக்ஸானா பானோவுக்கு மேற்கு ஒடிசாவை சேர்ந்த பாடகி ஒருவர் அவ்வப்போது மிரட்டல் விடுத்து வருகிறார்.

படப்பிடிப்பின் போது அவருக்கு கொடுத்த ஜூஸில் விஷம் கலந்திருக்கலாம். இதனால் 4 மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் சகோதரியை காப்பாற்ற முடியவில்லை.

மேலும் அவரது மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,” என்றார். பிரபல சம்பல்புரி பாடகி ருக்ஸானா பானோ மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் பரபரப்பு : வீடு எரிந்து பெண் பலி : நடந்தது என்ன?

யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியில் இன்று அதிகாலை வீடு ஒன்று மர்மமான முறையில் எரிந்து ஒருவர் பலியாகியுள்ளதாக தெரியவருகின்றது. இந்நிலையில் குறித்த வீடு கல்வீடு என்பதனால் எவ்வாறு தீப்பற்றியது என்பது தொடர்பில் குழப்பம் நிலவுகின்றனது.

யாழ்ப்பாணம் நீர்வேலியில் தனிமையில் வசித்து வந்த 65 வயதுடைய பெண்ணொருவரே சம்பவத்தில், உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீடு தீப்பற்றி எரிந்துள்ளதாகவும், இதனால் தீயில் சிக்கி பெண் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் எரிந்த நிலையில் வீட்டுக்கு வௌியில் காணப்பட்டுள்ளதுடன் வீட்டின் வாசலிலே மிளகாய் தூள் காணப்பட்டதாகவும் தெரியவருகிறது.

சம்பவ இடத்தில் யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்பு படையினர், தடயவியல் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் வீட்டுக்கு யாராவது தீ வைத்தார்களா, அல்லது எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் வீடு தீப்பற்றி எரிந்ததா? என்ற கோணத்தில் கோப்பாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தீ பிடித்தமைக்கான காரணம் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் : தள்ளாத வயதிலும் தனது கடமையை செய்த106 வயது முதியவர்!!

2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் 106 வயது நபர் ஒருவர் தனது வாக்கினை பதிவு செய்துள்ளமை பலரின் கவனத்தை பெற்றுள்ளது.

திருகோணமலையின் மூத்த பிரஜையான ஜோன் பிலிப் லூயிஸ் (106) ஒன்பது தடவையாக இடம்பெறுகின்ற ஜனாதிபதி தேர்தல தனது வாக்கினை பதிவு செய்ததாக அவர் தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த அவர் ,

நல்லதோர் ஆட்சியாளர் வரவேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு எனவும் அத்துடன் இறைவனது ஆசியுடன் எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தலிலும் வாக்களிக்க தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

 

பங்களாதேஸ் அணியிடம் சிங்களம் பேசிய இந்திய வீரர் கோஹ்லி!!

இந்தியாவுக்கும் பங்களாதேஸ் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின்போது இந்திய வீரர் விராட் கோஹ்லி கூறிய சிங்கள வார்த்தை அதிகமாக சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றது

பங்களாதேஸ் வீரர் சகிப் அல் ஹசனை பார்த்து, கோஹ்லி “நியமாய் மல்லி” ( சிறப்பு, தம்பி) என்ற வார்த்தையை கூறியுள்ளார். எனினும், இதன் அர்த்தம் சகிப் அல் ஹசனுக்கு புரியவில்லை.

இதன்போது நீங்கள், மலிங்கவை போன்று யோக்கர்களை பயன்படுத்துகிறீர்கள் என்று கோஹ்லி ஹிந்தியில் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து சகிப், கோஹ்லியின் ‘நியமாய் மல்லி’ என்ற வார்த்தைகளுக்கான அர்த்தம் புரிந்ததாக புன்னகை செய்துள்ளார்.

தேவை ஏற்பட்டால் தேர்தல் முடிவுகள் வெளியானதன் பின்னர் ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் : வெளியானது அறிவிப்பு!!

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் தேவை ஏற்பட்டால் உடனடியாக நாடு தழுவிய ஊரடங்குச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் கவனம் செலுத்தியுள்ளனர்.

தேர்தல் ஆணையாளர் மற்றும் பாதுகாப்பு பிரதானிகளுக்கு இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் தேவைக்கு ஏற்ப ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

3,250 விசேட அதிரடிப்படையினர் கடமையில்

மேலும், வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காவலரண்களில் 3,250 விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடவுள்ளனர்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலாவது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஒன்று கூடல்களை நடத்துவது மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் தொடர்பில் வெளியிடப்பட்ட தகவல்!!

நாடளாவிய ரீதியில் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நாளை அதிகாலை முதல் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ பெறுபேறுகள் அதிகாரிகளால் வழங்கப்பட்டதன் பின்னர் ஆணைக்குழுவினால் பெறுபேறுகள் வெளியிடப்படு என ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

38 வேட்பாளர்களின் பெறுபேறுகளும் ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என அவர் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும் அதற்கு முன்னதாக தபால் மூல வாக்களிப்பு முடிவுகளை வழங்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் போட்டித்தன்மைக்கு அமைய முன்கூட்டியே பெறுபேறுகளை வெளியிடக் கூடாது. ஆணைக்குழு வழங்கும் உத்தியோகபூர்வ முடிவுகளை மட்டுமே வெளியிடுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வாக்குச்சீட்டை இரண்டாக கிழித்த இளைஞன் : பொலிஸார் விசாரணை!!

யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியசாலையில் வாக்களிக்க சென்ற இளைஞன் வாக்குச்சீட்டை கிழித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று இடம்பெற்றுவரும் நிலையில், வாக்கெடுப்பு உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்ட வாக்குச்சீட்டையே குறித்த இளைஞன் இரண்டாக கிழித்துள்ளார்.

குறித்த நபரிடம் யாழ்ப்பாணம் தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்கள், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்புரைக்கமைய அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த இளைஞன் தேர்தலில் வாக்களிப்பது இதுவே முதல் தடவை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

யாழில் இடம்பெற்ற சோகம் : பலியான வயோதிபப் பெண்!!

யாழ்ப்பாணம் (Jaffna) நீர்வேலியில் வயோதிபப் பெண்ணொருவர் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார்.

தனிமையில் வசித்து வந்த 65 வயதுடைய பெண்ணின் வீடே தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் இதனால் வீட்டிலிருந்த குறித்த பெண்ணும் எரிந்து உயிரிழந்துள்ளார்.

இதில் வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர்கள் வெளியே தூக்கி வீசப்பட்டு தீயில் எரிந்துள்ளதோடு வீட்டின் வாசலிலே சமையலுக்கு பயன்படுத்தப்படும் மிளகாய் தூளும் வீசப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவ இடத்தில் யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்பு படையினர், தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் லெனின் குமார் குறித்த பகுதிக்கு விஜயம் செய்து சடலத்தை பார்வையிட்ட பின்ன உடற்கூற்று பரிசோதனைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்..

குறித்த வீட்டுக்கு யாராவது தீ வைத்திருக்கலாம் என்றும் அல்லது காஸ் சிலிண்டர்கள் வெடித்து வீடு எரிந்து இருக்கலாம் என்ற கோணத்திலும் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஊரடங்கு தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் புதிய அறிவிப்பு!!

வன்முறை ஏதும் வெடிக்குமானால் ஊரடங்குச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை ஏழு மணி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், தேவை ஏற்பட்டால் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். வன்முறை வெடித்தால் அது கடுமையாக நடைமுறையாகும்.

ஜனாதிபதித் தேர்தல் அமைதியாக நடைபெற்று வருகின்றது. இந்த சூழலைப் பேணுமாறு பொதுமக்களிடமும் அரசியல் கட்சித் தலைவர்களிடமும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

ஜனாதிபதித் தேர்தலின் போது தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

தடுப்பூசியின் எதிர்வினையால் உருக்குலைந்த இளம்பெண்!!

அமெரிக்காவைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் தடுப்பூசி எதிர்வினையாற்றியதால் அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்து போயுள்ள நிலையில் உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹீமோகுளோபினூரியா (PNH) நோயால் கண்டறியப்பட்ட 23 வயதான அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு டெட்டனஸ், நிமோகோகல் மற்றும் மூளைக்காய்ச்சல் தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டன.

அதன் பிறகு அவர் கடுமையான எதிர்விளைவுகளை அனுபவித்து, அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்து போயிருக்கிறார்.

அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த அலெக்ஸில் லோரென்ஸி எனும் இளம்பெண் பராக்ஸிஸ்மல் நோக்டர்னல் ஹீமோகுளோபினூரியா (PNH) நோயால் கண்டறியப்பட்ட நிலையில், சிகிச்சையின் ஒரு பகுதியாக இந்த தடுப்பூசிகளைப் பெற்றுள்ளார்.

இருப்பினும், தடுப்பூசி பாதுகாப்பு ஆராய்ச்சி அறக்கட்டளையின் (VSRF) அறிக்கையின்படி, தடுப்பூசிகளை எடுத்துக் கொண்ட அடுத்த பத்து நிமிடங்களுக்குப் பிறகு, அவரது உடல்நிலை வேகமாக மோசமடைந்தது.

உடனே வாந்தி, தற்காலிக குருட்டுத்தன்மை போன்ற ஆபத்தான அறிகுறிகளை அலெக்சிஸ் அனுபவித்துள்ளார். இது குறித்த அறிக்கைகளின்படி, அலெக்சிஸ் சிறப்பு சிகிச்சைக்காக லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

தற்போது அலெக்சிஸ், தானே தனது உடல்நிலையை ஆவணப்படுத்தி, டிக்டோக் போன்ற சமூக ஊடக தளங்கள் வழியாக தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அலெக்சிஸின் பல வீடியோக்கள் தற்போது ட்விட்டரில் வெளிவந்துள்ளன.

இந்த வீடியோ காட்சிகளில் அவரது முகம் மற்றும் கழுத்தில் தடுப்பூசிகளின் ஆபத்தான எதிர்வினைகள் தெரிகின்றனர். அவரது கண்கள் மற்றும் நெற்றியில் வீக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றின் தோல் கருப்பு-ஊதா நிறமாக மாறியுள்ளது.

அலெக்சிஸ் லோரென்ஸுக்கு மூன்று தடுப்பூசிகளின் காக்டெய்ல் வழங்கப்பட்டுள்ளது. அவை PNH க்கான சிகிச்சையாக வெளிப்படையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதன் பிறகு என்ன நடந்தது என்பது எந்தவொரு சுகாதார அதிகாரியும் புரிந்து கொள்ள முடியாத நிலையில் உள்ளது.

மூளையை வறுத்து சாப்பிட்டு உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்த கொலையாளி, விசாரணையில் அதிர்ச்சி!!

சென்னை துரைப்பாக்கத்தில் பெண்னின் உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்த இளைஞர், விசாரணையின் போது அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார்.

சென்னை துரைப்பாக்கம் குமரன் குடில் குடியிருப்பு அருகே துர்நாற்றம் வீசிய சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. மேலும் அதில் இருந்து ரத்தம் வழிந்தோடியதால் அங்கிருந்த பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சூட்கேஸை திறந்து பார்த்த போது அதில் பெண் ஒருவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி அடைக்கப்பட்டிருந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொலிஸார் பெண்ணின் உடலைக் கைப்பற்றி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர.

பின்னர் பொலிஸார் விசாரணையின் போது, சென்னை மாதவரத்தை சேர்ந்த 32 வயதான தீபா என்ற பெண்ணை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக காணாமல் போனதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது துரைப்பாக்கம் குமரன் குடில் பகுதியில் வசித்து வரும் மணிகண்டன் என்ற இளைஞர் சூட்கேஸை வீசி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, மணிகண்டனின் வீட்டிற்கு சென்ற பொலிஸார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

பொலிஸார் நடத்திய விசாரணையில், மணிகண்டன் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளாக துரைப்பாக்கம் பார்த்தசாரதி நகரில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது.

இவரது அக்கா கடந்த 16 -ம் திகதி திருவையாறு சென்ற நிலையில் மாதவரம் பகுதியை சேர்ந்த தீபாவை தன்னுடன் மூன்று நாட்கள் தனியாக இருக்க அழைத்துள்ளார். அதற்காக ரூ.18000 பணம் கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

பின்னர், மூன்று நாட்கள் கழித்து ரூ.12000 பணம் மட்டுமே மணிகண்டன் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு வந்துள்ளது.

பின்னர் ஆத்திரத்தில் தீபாவின் தலையில் சுத்தியலை வைத்து அடித்துள்ளார். இதனால், சம்பவ இடத்திலேயே தீபா உயிரிழந்துள்ளார். பின்னர், சூட்கேஸ் ஒன்றை வாங்கி உடலை துண்டு துண்டாக வெட்டி அதில் வைத்து கட்டுமானம் நடைபெறும் பகுதியில் அதனை வீசியுள்ளார்.

இதில் மற்றொரு அதிர்ச்சி என்னவென்றால், பெண்னின் மூளையை வறுத்து சாப்பிட்டதாகவும் கொலையாளி கூறியுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதனை கேட்ட பொலிஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சீன அழகிக்கு தாலி கட்டிய தமிழ் இளைஞன் : களைகட்டிய திருமண கொண்டாட்டம்!!

அமெரிக்காவில், சீன பெண்ணை காதலித்த ஆண்டிபட்டி மாப்பிள்ளைக்கு தேனியில் வைத்து திருமணம் நடந்தது.

தமிழக மாவட்டமான தேனி, அம்மச்சியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி அமுதன் மற்றும் சரவணகுமாரி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியுடன் அமெரிக்காவில் ஐடி துறையில் வேலை செய்வதற்காக சென்றார்.

பின்னர், அங்குள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் வசித்து வருகிறார். அமெரிக்கா குடியுரிமையையும் பெற்ற இவர் கிரீன் கார்டு பெற்று நிரந்தரமாக அங்கேயே குடியேறினார்.

இவருக்கு தருண்ராஜ் மற்றும் கிரண்ராஜ் என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில், தருண்ராஜ் என்ற மகன் அமெரிக்காவில் ஐடி துறையில் பணியாற்றி வருகிறார்.

அதேபோல சீனாவை பூர்வீகமாக கொண்ட பீட்டர்ஜூ பிங்வூ தம்பதியினர் கிரீன் கார்டு பெற்று அமெரிக்காவிலேயே சான் பிரான்சிஸ்கோ நகரில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சுனோ ஜூ என்ற மகள் உள்ளார்.

இதில், தருண் ராஜ் என்பவரும் சுனோ ஜூவும் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். பின்னர் அமெரிக்காவில் வைத்து நிச்சயத்தை முடித்தனர்.

மணமகன் வீட்டார் இந்தியாவில் உள்ள தனது சொந்த ஊரில் திருமணம் நடத்த வேண்டும் என்று கூறினர்.

இதனால், இவர்களது திருமணம் தேனி மாவட்டம் அமைச்சியாபுரம் கிராமத்தின் அருகே இருக்கும் ஆண்டிபட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்து பாரம்பரிய முறைப்படி நடந்தது.

அப்போது சமுதாய முறைப்படி சடங்குகள் நடந்தனர். பின்னர், மணமேடையில் வைத்து மணமகன் தருண்ராஜ் மணமகள் சுனோ ஜூவுக்கு தாலி கட்டினார்.

அங்கு கூடியிருந்த உறவினர்கள் அனைவரும் மணமக்களுக்கு பூ தூவி வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த திருமணத்தை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடாத்த ஏற்பாடு!!

சர்ச்சையை ஏற்படுத்திய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தால், பரீட்சையை மீண்டும் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை (20.09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போர்து அவர் மேலும் கூறுகையில்,

கடந்த 15ஆம் திகதி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற்றது. வினாத்தாள் கசிந்துள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து பரீட்சைகள் திணைக்களம் விசாரணைகளை நடத்தியது.

அந்த முதற்கட்ட விசாரணை அறிக்கையுடன் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , விசாரணை முடிவுகளின்படி செயற்படுமாறு ஜனாதிபதியும் அமைச்சரும் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

விடுதியொன்றில் சிக்கிய காதல் ஜோடி : விசாரணையில் வெளியான தகவல்!!

பெலும்மஹர – வெலிவேரிய வீதி பகுதியிலுள்ள விடுதியொன்றின் அறையொன்றில் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த காதல் ஜோடி கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று  வியாழக்கிழமை (19.09) கைது செய்யப்பட்டுள்ளதாக யக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பகஸ்பிட்டிய, கந்தமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய ஒருவரும் அவிசாவளை மீகஹா கொடல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடையவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர் ஹிரியால பொலிஸாரினால் இதற்கு முன்னர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவரிடம் இருந்து 26 கிராம் 250 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் மற்றவரிடம் இருந்து 3500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழில் இளம் தம்பதி கைது : விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு!!

யாழ்ப்பாணத்தில் கொள்ளையில் ஈடுபட்ட தம்பதியை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சங்கானையில் வீதியில் சென்ற பெண்ணொருவரின் தங்க நகையை கொள்ளையிட்ட தம்பதி கைது செய்யப்பட்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதி, சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி ஓட முயன்ற வேளை அந்தப் பகுதி மக்கள் மடக்கி பிடித்து மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் குறித்த தம்பதியை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பெண்ணிடமிருந்து திருடிய தங்க நகையை யாழ்ப்பாணத்திலுள்ள நகைக்கடை ஒன்றில் அடகு வைத்துள்ளதாக, நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்துள்னர்.