கனடாவில் வசிக்கும் யாழ். இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மல்லாகத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவரை திருமணம் செய்து அவரிடமிருந்து 15 லட்சம் ரூபாவை சீதனமாகவும் பெற்றுக்கொண்டு ஒரே மாத காலத்தில் அவரை விட்டுச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது..
யாழ். மல்லாகத்தைச் சேர்ந்த குறித்த யுவதிக்குப் பெற்றோர் வரன் பார்த்துள்ளனர். இந்நிலையில் கனடாவைச் சேர்ந்த மேற்படி இளைஞனின் சாதகம் பொருந்தியுள்ளது. இளைஞனின் தந்தையும் பொறுப்புமிக்க நிதி நிறுவனம் ஒன்றில் தொழில் பார்த்தவர் என்ற நிலையில் திருமணம் இரு வீட்டாரின் பரிபூரண சம்மதத்துடன் பேசி முடிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 9ம் திகதி யாழ்ப்பாணத்தில் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. சுமார் ஒரு மாத காலம் குறித்த இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்துள்ளனர். இறுதியில் தான் கனடா செல்ல வேண்டும் என்று அந்த இளைஞன் புறப்பட்டுள்ளான்.
அதேவேளை குறித்த யுவதியை வெள்ளவத்தையிலுள்ள தனது பெற்றோருடன் விட்டுச் சென்றுள்ளான். இந்நிலையில் இளைஞனின் பெற்றோர் மேலும் 25 லட்சம் ரூபா உடனடியாக வைக்க வேண்டும். இல்லையேல் மகன் தொடர்பு கொள்ள மாட்டார் என மிரட்டியுள்ளனர்.
பணம் இல்லை என்றதும் காணியை விற்றாவது கொடுக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். அதற்கு குறித்த யுவதி மேலும் கொடுப்பதற்கு பணம் இல்லை என்று கூறியதையடுத்து வீட்டிலிருந்து வெளியேறுமாறு கூறிவிட்டனர். அதேவேளை குறித்த இளைஞனும் சகல தொடர்புகளையும் நிறுத்தியுள்ளார்.
இதனையடுத்து குறித்த யுவதி தனது சொந்த ஊரான மல்லாகத்துக்குச் சென்று தனது பெற்றோரிடம் இது குறித்து முறையிட்டுள்ளார். இதேவேளை தாம் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் தாம் வழங்கிய சீதனத் தொகையான 15 லட்சம் ரூபாவையேனும் உடன் திருப்பித் தருமாறும் கோரி வெள்ளவத்தைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து குறித்த இளைஞனின் பெற்றோர் நீதிமன்றத்தில் வந்து விவாகரத்தைப் பெற்றால் தாங்கள் பணத்தைத் திருப்பித் தருவதாக தம்மிடம் தெரிவித்ததாக அந்த யுவதி தெரிவித்துள்ளார்.
பணம் பெறுவது ஒன்றையே நோக்கமாகக் கொண்டே குறித்த இளைஞனும் அவரது பெற்றோரும் இந்தத் திருமணத்தை நடத்தியுள்ளனர் என்று கூறும் அவர் இதனால் தனது வாழ்க்கையே சீரழிக்கப்பட்டு விட்டதாகவும் மிகுந்த கவலையுடன் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சிவன் கோவிலில் 66 ஆண்டுகளுக்குப் பின் பூஜைகள் தொடங்கியுள்ளன. பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில், சக்கரவால் என்னும் இடத்தில் புராதன, கடாஸ்ராஜ் சிவன் கோவில் உள்ளது.
இந்த வருடத்தில் மேலும் சில நகரங்களை அபிவிருத்தி செய்வதற்கு அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.


நடிகை நமீதா ஆம் ஆத்மி கட்சியில் சேரப்போவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நமீதாவுக்கு சமீப காலமாக சமூக சேவை பணிகளில் நாட்டம் ஏற்பட்டு உள்ளது. ரசிகர்களை ரத்ததானம் செய்ய வைத்தார். பெண்களுக்கு கழிவறைகள் கட்டி கொடுத்தார். தொண்டு நிறுவனங்கள் நடத்தும் பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
தலைவா தடுமாறியதால் ஜில்லாவை விஜய்யும் அவரது இரசிகர்களும் ரொம்பவே எதிர்பார்க்கிறார்கள். முந்தைய படம் எதிர்கொண்ட எந்த சிலுவையையும் ஜில்லா சுமக்கக் கூடாது என்பதற்காக அடக்கியே வாசித்தார் விஜய். அப்படியும் பேனர் கட்டக் கூடாது கட்அவுட் வைக்கக் கூடாது என பல்முனை தாக்குதல்கள்.
கணவரால் கொடூரமாக தாக்கப்பட்ட பெண் வேறு எந்த வழியும் இல்லாததால் பேஸ்புக்கில் உதவி கோரியுள்ளார். கென்டகியை சேர்ந்த சுசன்னா என்னும் அந்த பெண்ணை அவரது கணவர் துப்பாக்கியால் கொடூரமாக தாக்கியுள்ளார்.
கடும் வரட்சி காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளமையால் விவசாயிகள் தற்கொலைக்கு முயல்கின்றனர். எனவே இத் துயரை தடுத்த நிறுத்த அரசு நிவாரணம் வழங்கவேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த கால யுத்த நிலைமையை மீண்டும் ஏற்படுத்தி கொள்ளாது நாட்டின் அபிவிருத்திக்காக உழைப்போம் என யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் வடக்கு பிரதேசத்தை நோக்கி கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவுவதன் காரணமாக இப் பிரதேசங்களிற்கு மணித்தியாலத்திற்கு 100 கிலோ மீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
8 வயதான தனது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தனது பிறந்த நாள் விழாவின் போது இரசிகர்கள் மத்தியில் பேசிய ஜீவா தவறுதலாக எல்லாரும் மறக்காம திருட்டு வீசிடில படம் பாருங்க என வாய் தவறிப் பேசியதால் சிரிப்பில் அரங்கம் கலகலத்தது.
வட கொரியா தலைவர் கிம் ஜாங் யுன்னின் மாமாவான ஜாங் சாங் தேக் (67), அந்நாட்டு அரசில் தலைவருக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் அதிகாரம் மிக்கவராக செயல்பட்டார்.

சமீபத்தில் வந்த படங்களில் சத்தமே இல்லாமல் இளைஞர்களிடயே பெரும் வரவேற்பை பெற்ற படம் என்றென்றும் புன்னகை. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு திரிஷாவின் மார்க்கெட் வெகுவாக உயர்ந்துள்ளது. சமீபத்தில் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.