2013ல் சாதனை படைத்த நடிகர், நடிகைகளுக்கு விருதுகள்!!

Viruthuதிரைப்படத் துறையில் 2013ல் சாதனை படைத்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது.

நடிகர்கள் பிரபு, சத்யராஜ், சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு, கவுதம், கார்த்தி, விஜய் சேதுபதி நடிகைகள் லட்சுமிமேனன், பிந்துமாதவி, சரண்யா பொன்வண்ணன், இயக்குனர்கள் பாரதிராஜா, பாலுமகேந்திரா உள்ளிட்டோர் விருது பெற்றனர்.

ஆர்.எம். வீரப்பன், ஏ.சி.சண்முகம், எஸ்.பி. முத்துராமன், மனோரமா உள்ளிட்டோருக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. வி4 அமைப்பு சார்பில் சிங்காரவேலு, டைமன்ட் பாபு, மவுனம் ரவி, ரியாஸ் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

 

வவுனியா மகாறம்பைக்குளம் ஸ்ரீ ராமாபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் மழை வேண்டி அம்மனுக்கு 108 குட அபிசேகம்!!(படங்கள்)

வவுனியா மகாறம்பைக்குளம் ஸ்ரீ ராமாபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் கடந்த 1ம் திகதி மழை வேண்டி 108 குட நீரினால் அம்மனுக்கு அபிசேகம் நடைபெற்றது. இன் நிகழ்வில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரதேச மக்கள் பலர் ஆர்வத்துடன் அம்மனுக்கு நீரெடுத்துவந்து அபிசேகம் செய்தனர்.

வவுனியாவில் போதிய மழைவீழ்ச்சியின்மையால் வறட்சி நிலவுகின்றது. வவுனியாவின் பெரிய குளங்கள் அனைத்தும் விவசாயத்துக்கு போதுமான நீர் இன்றி காணப்படுகின்றது. இதனால் நெற்பயிருக்கு பாச்ச நீரின்றி விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இன் நிலைமையில் வவுனியாவின் பல ஆலயங்களில் மழை வேண்டி சிவாச்சார்யர்களால் சிறப்பு யாகங்கள், சிறப்பு பிராத்தனைகள், பூசைகள் என்பன நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

-படங்கள் மதுஜன்-

v3v4v1v8v7v9

 

 

பொலிசாரை பாடாய்படுத்தும் ராதா : ஐதராபாத்துக்கு தப்பிஓட்டம்!!

Radhaநடிகை ராதா புகாரை கொடுத்துவிட்டு ஐதராபாத்திற்கு தப்பியோடியதால் பொலிசார் திணறிவருகின்றனர்.

நடிகை ராதா கடந்த மாதம் திடீரென்று கமிஷனர் அலுவலகம் வந்து ஒரு புகார் கொடுத்தார். அதில் திருவல்லிக்கேனியைச் சேர்ந்த பைசூல் என்பவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி 4 வருடம் குடும்பம் நடத்தினார். 50 லட்சம் ரூபாய் பணத்தையும் ஏமாற்றி வாங்கி விட்டார் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு வடபழனி பொலிசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார். அவர்களும் வழக்கு பதிவு செய்து பைசூலை தேடி வந்தனர்.இந்நிலையில் மீண்டும் கமிஷனர் அலுவலகம் வந்த ராதா பொலிசார் பைசூலுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என்றும், அவரை கைது செய்யாமல் ஏமாற்றுவதாகவும் புகார் கூறினார்.

அதன் பிறகு திடீரென்று வடபழனி காவல் நிலையம் சென்றவர். ஆயிரம் இருந்தாலும் பைசூல் என் கணவர் என்று கூறி புகாரை வாபஸ் பெற்றார்.

அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் கமிஷனர் அலுவலகம் வந்து பைசூல் மீது மீண்டும் புகார் கொடுத்தார். ராதாவுக்கும், பைசூலுக்கும் இடையில் என்னதான் பிரச்னை என்று தெரியாமல் பொலிசார் தவிக்கிறார்கள். இருவரையும் ஒரே நேரத்தில் அழைத்து விசாரித்தால்தான் உண்மை தெரியும் என்று அதற்காக முயற்சி செய்தனர்.

இந்நிலையில் பைசூல் மீது மீண்டும் புகார் கொடுத்த ராதா யாருக்கும் தெரியாமல் ஐதராபாத்துக்கு சென்று விட்டார். அங்கு ஒரு முக்கிய புள்ளியின் பாதுகாப்பில் இருக்கிறார் என்றும், உறவினர்கள் பாதுகாப்பில் இருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பைசூல் ஆட்களின் கொலை மிரட்டலுக்கு பயந்தே அவர் பாதுகாப்பு தேடிச் சென்று விட்டதாகவும் கூறுகிறார்கள். மேலும் பைசூல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். இருவரும் சென்னையில் இல்லாததால் யாரிடம் விசாரிப்பது என்ற குழப்பத்தில் பொலிசார் உள்ளனர்.

 

நிச்சயம் அரசியலில் குதிப்பேன் : நமீதா அதிரடி பேட்டி!!

Namitha-At-Cherrybit-Opening-Stillsநான் நிச்சயமாக அரசியலுக்கு வருவேன் என நடிகை நமீதா குறிப்பிட்டுள்ளார். இது குறித்துஅவர் கூறியுள்ளதாவது..

என் திருமணத்தை பற்றி இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்க வில்லை. நான் அரசியலுக்கு கட்டாயம் வருவேன். முழுநேர அரசியல்வாதியாக மாறுவேன். எந்த கட்சி என்பதை இப்போது சொல்ல முடியாது என்று தெரிவித்தார்.

அத்துடன் மோடியின் பிரச்சாரம் புதிதாகவும், வித்தியாசமாகவும் இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி சாதாரண மக்களின் குரலாக ஒலிக்கிறது. அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

விஜயகாந்த் அனைத்து கட்சிகளும் அவரை தேடி வருகிற அளவுக்கு பலம் வாய்ந்து இருக்கிறார். ஜெயலலிதா நிறைய நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார் என்று தெரிவித்தார்.

 

கிரிக்கெட்டிலிருந்து சேவாக் ஓய்வு பெறுவாரா?

Shewagசர்வதேச போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் சேவாக், உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்தும் சொதப்பி வருகிறார்.

இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் சேவக் டெஸ்ட் (319), ஒரு நாள் (21 9) போட்டிகளில் அதிக ஓட்டங்களை எடுத்த இந்திய வீரர் இவர் தான்.

மோசமான துடுப்பாட்டம் காரணமாக, அவர் கடந்த 2013 மார்ச் முதல் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் 2013-14 ரஞ்சி சீசனில் பங்கேற்றார். மொத்தம் களமிறங்கிய 13 இன்னிங்சில் 234 ஓட்டங்களை மட்டும் தான் எடுத்தார். டெல்லி அணியில் ஒன்று முதல் 6வது இடம் வரை என துடுப்பாட்டத்தில் மாறி மாறி களமிறங்கியும் பலன் கிடைக்கவில்லை.

இதனிடையே புஜாரா, ஷிகர் தவான், ரகானே என, இளம் வீரர்கள் இந்திய அணிக்காக திறமை வெளிப்படுத்த துவங்கியுள்ளனர். தவிர, உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தி அணியில் இடம் பெற முடியாமல் பலர் காத்திருக்கின்றனர்.

இந்திய கிரிக்கெட் சபையும் சேவக்கை வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கியது. தென் ஆபிரிக்க தொடர் முடிந்து, அடுத்து நியூசிலாந்து தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டது.

இதிலும் கம்பிர், சேவக், யுவராஜ் சிங் போன்றவர்கள் சேர்க்கப்படவில்லை. இதில் கம்பிர், யுவராஜ் சிங்கிற்கு 32 வயது தான் என்பதால், அணியில் வாய்ப்பை மீண்டும் எதிர்பார்க்கலாம். ஆனால், சேவக்கிற்கு 35 வயதாகி விட்டது. பார்வையிலும் சிக்கல் உள்ளது. இதனால், இவர் விரைவில் ஓய்வு அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

3 வயது சிறுவன் மீது பாகிஸ்தான் பொலிசார் அதிரடி நடவடிக்கை எடுத்த வினோதம்!!

pakistanபாகிஸ்தானில் மூன்று வயது சிறுவனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்த வினோத சம்பவம் நடந்துள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது முல்தான்.

இந்த மாவட்டத்தை சேர்ந்த முகமது பருக் என்பவர் பரூக் பீபி மற்றும் அவரது மகன் சையத் தன்னை தாக்கி செல்போன் மற்றும் 22000 ரூபாயை பறித்து விட்டதாக பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து பரூக் பீபி மற்றும் சையத்துக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து நேற்று ஜாமின் கேட்டு பரூக் பீபி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதில் இந்த வழக்கு பொய்யானது என்றும் சையத்துக்கு வெறும் மூன்று வயதே ஆவதால் வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பான விசாரணையின் போது பீபியின் வக்கில் ஒரு பெண் தனது மூன்று வயது மகனை வைத்துக் கொண்டு எவ்வாறு ஒரு ஆணை தாக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பொலிசார் பணத்தை வாங்கி கொண்டு இவ்வாறு செயல்படுகின்றனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து பீபிக்கு ஜாமின் வழங்கியதுடன், குழந்தையின் பெயரை நீக்கவும் உத்தரவிட்டுள்ளது.

வருகிற 16ம் திகதி குற்றம் சாட்டிய நபரை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

 

குவைத்தில் கசிப்பு காய்ச்சிய இலங்கையர் கைது!!

Jail-1குவைத்தில் கசிப்பு காய்ச்சிய இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பெற்றுச்சென்ற ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 121 போத்தல் சட்டவிரோத மதுபானம் மீட்கப்பட்டுள்ளது. கடுமையான இஸ்லாமிய சட்டம் அமுல்படுத்தப்பட்டு வரும் குவைத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் உற்பத்தி செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.

முபாரக் அல் கபீர் பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
புத்தாண்டை கொண்டாடும் நோக்கில் கசிப்பு காய்ச்சியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

 

இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து லசித் மலிங்க நீக்கம்!!

Malinkaஇலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க நீக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவரது அண்மைக்காலப் பெறுபேறுகள் சிறப்பாக அமையாததன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் சபையின் மூத்த அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பையடுத்து புதிய வருடத்தில் அதிகளவிலான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிராக தொடரில் இலங்கை தோல்வி அடைந்திருந்தது.

இதன்படி முழுமையான திறமைகளை வெளிப்படுத்தாத சிரேஷ்ட வீரர்களைக் கொண்டு போட்டிகளை வெற்றி கொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்பட்டதாகவும், அதன் காரணமாக லசித் மலிங்க இலங்கை அணியிலிருந்து நீக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

லசித் மலிங்க, திஸர பெரேரா இருவரும் போதுமானளவு அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதில்லை எனவும், லசித் மலிங்கவின் உடற்தகுதி தொடர்பான பிரச்சினைகளும் காணப்படுவதாகவும், அதன் காரணமாக உடற்தகுதிப் பயிற்சிகளிலும் லசித் மலிங்க பங்குபற்றுவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இடம்பெற்றுவரும் பிக் பாஷ் லீக் தொடரில் பங்குபற்றுவதற்கான அனுமதியை திஸர பெரேரா கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களைத் தவிர இலங்கையின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளர் மார்வன் அத்தப்பத்து, களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளர் றுவான் கல்பகே ஆகியோரின் பதவிகளும் ஆபத்திலுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

 

ரஜினி பற்றி அவதூறு விவகாரம் : பொலிஸ் நிலையத்தில் சூரி!!

Sooriதன்னுடைய பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி விஷமிகள் சிலர் தன் பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாக சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொமடி நடிகர் பரோட்டா சூரி புகார் அளித்துள்ளார்.

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமாகி பல படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்து வருபவர் பரோட்டா சூரி. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு பரபரப்பான புகார் மனு கொடுத்தார்.

அதில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும்நான் பொதுமக்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த மரியாதையுடன் விளங்கி வருகிறேன்.

பொது விவகாரங்களில் தலையிடுவதோ அல்லது எதைப் பற்றியும் கருத்து சொல்வதோ கிடையாது. ஆனால் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் பற்றி அவதூறாக பேசியிருப்பதாக கூறி சில பத்திரிகையாளர்கள் என்னிடம் கருத்து கேட்டார்கள்.

பதறிப்போன நான் அது பற்றி விசாரித்த போது எனது பெயரில் விஷமிகள் சிலர் பேஸ்புக் கணக்கு ஆரம்பித்து அவதூறு கருத்துக்களை பரப்பி வருவது தெரியவந்தது.

மேலும் டுவிட்டர், பேஸ்புக்கில் பங்கேற்கும் அளவுக்கு நான் படித்தவன் இல்லை. ஆனால் எனது பெயரில் 3 பேஸ்புக் கணக்குகள் தொடங்கி எனக்கு எதிரான மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளன என்றும் எனது பெயரிலான பேஸ்புக் கணக்குகளை முடக்கி வைக்கவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

 

திரையரங்குகளில் கட் அவுட், பேனர் வைப்பதில் விஜய், அஜித் ரசிகர்கள் மோதல்!!

VIJAYவிஜய், அஜித் ரசிகர்கள் இடையே தியேட்டர்களில் கட் அவுட், பேனர் வைப்பதில் கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. சில இடங்களில் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

விஜய்யின் ஜில்லா படமும், அஜீத்தின் வீரம் படமும் வருகிற 10ம் திகதி ஒரே நாளில் ரிலீசாகிறது.

ஏற்கனவே போக்கிரி, ஆழ்வார் படங்கள் இது போல் ஒன்றாக வந்தன. அப்போதும் இருவரின் ரசிகர்களும் அடிதடி தகராறில் ஈடுபட்டனர். தற்போது ஏழு வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய், அஜித் படங்கள் ஒன்றாக வருகின்றன. ரசிகர்கள் இப்போதே தியேட்டர்களிலும், சுவர்களிலும் இடம் பிடிக்க துவங்கியுள்ளனர்.

மதுரையில் இரு தரப்பு ரசிகர்களும், ஜில்லா, வீரம் படங்கள் பற்றி சுவர் விளம்பரம் செய்த போது தகராறில் ஈடுபட்டனர். சேலத்திலும் இது போல் மோதல் நடந்தது. சென்னையிலும் தியேட்டர்களில் கட் அவுட், பேனர் வைப்பதில் போட்டி நிலவுகிறது.

விஜய் ரசிகர் மன்ற மத்திய சென்னை மாவட்ட தலைவர் பூக்கடை எஸ்.குமார், திருவள்ளூர் தெற்கு மாவட்ட தலைவர் பால முருகன், காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட விஜய் ரசிகர் மன்ற இளைஞர் அணி தலைவர் இ.சி.ஆர். சரவணன், மாதவரம் இளங்கோ உள்ளிட்டோர் சென்னை மற்றும் புறநகர் பகுதி தியேட்டர்களில் ஜில்லா படத்தை வரவேற்று விஜய் கட்அவுட்கள் வைக்க துவங்கியுள்ளனர்.

பேனர்களும் கட்டி வருகிறார்கள். கட் அவுட், பேனர்களை கிழிப்பதை தடுக்கும்படி அம்பத்தூர் போலீசில் பால முருகன் புகார் மனு அளித்துள்ளார்.

இதுபோல் சென்னை அஜித் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சக்கின் மணி, புரசை சரவணன், ரெட் சாரதி மற்றும் காஞ்சி ரமேஷ் உள்ளிட்டோர் வீரம் பட கட் அவுட் மற்றும் பேனர்களை போட்டியாக நிறுவி வருகிறார்கள். தியேட்டர்களில் மாறி மாறி இடம் பிடிப்பதால் தகராறு மூண்டுள்ளது. ரசிகர்களை சமாதானபடுத்த முடியாமல் தியட்டர்காரர்களும் தவிக்கிறார்கள்.

 

மாகாணசபை அதிகாரங்களை திருடுவதா அரசாங்கத்தின் திட்டம்?

Ranilஇலங்கையில் அதிகார பரவலாக்கலுக்கு எதிரான அரசாங்கத்தின் வேலைத்திட்டமாகவே திவிநெகும திணைக்களம் அமைக்கப்படுவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டுகிறது.

அரசியல் அதிகாரத்தை மத்தியில் குவித்துக்கொள்ளும் அரசின் திட்டமே இந்த திவிநெகும சட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்படுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கிராமங்களில் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறும் அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய திவிநெகும அபிவிருத்தித் திணைக்களம் வெள்ளிக்கிழமை முதல் சட்டபூர்வமாக அதிகாரம் பெறுகின்றது.

ஓரிரு நபர்கள் தங்களின் அதிகாரப் பிடியை இறுக்கிக் கொள்வதற்கு எடுத்த அரசியல் முடிவுதான் இது என்று ஐக்கிய தேசியக் கட்சி பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குப் பதிலாக அரசாங்கம் இந்த சட்டத்தின் ஊடாக அரசியல் ஏதேச்சாதிகாரத்தை குவித்துக்கொள்ளவே முயன்றுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி கூறுகிறது.

மாகாணசபைகளிடம் இருந்த பல அதிகாரங்கள் இந்த சட்டத்தின் ஊடாக திருடப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கிறது. அமைச்சர் பசில் மறுக்கிறார்.

ஆனால் இதன் மூலம் சுமார் 18 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 50 லட்சம் மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்று இந்த திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறுகிறார்.

இந்த திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் மூலம் தனது அதிகாரமே குறைக்கப்படுவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்தத் திணைக்களம் அரச சேவை ஆணைக்குழுவின் கீழேயே வருவதால், அதன் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டே செயற்பட வேண்டியிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஓராண்டுக்கு முன்னர் இந்த திவிநெகும சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது பெரும் அரசியலமைப்புச் சிக்கல் ஏற்பட்டது.

இதன் பின்னணியிலேயே அப்போது தலைமை நீதியரசராக இருந்த ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்குவதற்கான நடவடிக்கைகளும் ஆளுந்தரப்பால் முன்னெடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-BBC தமிழ்-

உலக சாதனை படைத்த சிறுவன்!! (வீடியோ)

boyஅமெரிக்காவை சேர்ந்த ஜேக் என்று 14 வயது சிறுவன் உலக சாதனை படைத்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளான்.

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தை சேர்ந்த ஜேக் என்ற சிறுவனே பளு தூக்கும் போட்டியில் சாதனை படைத்துள்ளான்.

ஜேக் 12 வயதாக இருக்கும் போது தந்தை அதிக எடையுள்ள பொருட்களை எளிதாக தூக்குவதை பார்த்துள்ளான். உடனே தந்தையிடம் சென்று, ஒருநாள் நான் இந்த உலகத்திலேயே வலிமை மிகுந்த சிறுவன் என்ற பெயரை பெறுவேன் என கூறியுள்ளான்.

தொடர்ந்து இரண்டரை வருடங்களாக விடாமுயற்சியுடன் உடற்பயிற்சி செய்து, தற்போது Powerliftng Bench Press Championships என்ற போட்டியில் கலந்து கொண்டு அசத்தியுள்ளான்.

அதாவது தன்னுடைய எடையை விட இருமடங்கு அதிக எடையுள்ள பொருட்களை தூக்கி சாதனை படைத்துள்ளான்.

இதுகுறித்து அவனது தந்தை, ஜேக் ஒரு அதிசய சிறுவன் அவனது மனதைரியம் தான் இப்போட்டியில் பங்கேற்க வைத்தது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பயிற்சியாளர் கூறுகையில், பயிற்சியின் போது காயங்கள் குறித்து ஜேக் ஒருபோதும் குறை கூறியதில்லை என்றும், மருத்துவர்களின் வழக்கமான சோதனைகளுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறான் என்றும் தெரிவித்துள்ளார்.

சிம்புவை முத்தமிட 50 இலட்சம் கேட்ட நடிகை!!

Simbuசிம்புவை முத்தமிட நடிகை திக்ஷாசேத் 50 இலட்சம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் வேட்டை மன்னன் படத்தில் இணைந்து நடிக்கின்றனர். ஹன்சிகா, ஜெய், சந்தானம், வி.டி.வி. கணேஷ், போன்றோரும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.

இப்படத்தில் சிம்புவும் தீக்ஷா சேத்தும் உதட்டோடு உதடு முத்தமிடுவது போன்று சில காட்சிகளை வைக்க இயக்குனர் விரும்பினார். தீக்ஷாசேத் ஏற்கனவே விக்ரம் ஜோடியாக ராஜ பாட்டை படத்தில் நடித்தார். தெலுங்கிலும் முன்னனி நடிகையாக உள்ளார். அங்கு கவர்ச்சியாகவும் நடித்து வருகிறார்.

தீக்ஷா சேத்தை அணுகி முத்த காட்சியில் நடிக்கும்படி கேட்டனர். முதலில் மறுத்த அவர் பிறகு சம்மதித்தார். முத்தக்காட்சிகளில் நடிப்பதற்காக மட்டும் 50 இலட்சம் தர வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார். இதனால் படக்குழுவினர் அதிர்ந்தனர்.

சம்பளத்தை தவிர்த்து முத்த காட்சிக்கு மட்டும் அவர் 50 இலட்சம் கேட்டாராம். கேட்ட தொகையை கொடுப்பதா அல்லது முத்த காட்சி வேண்டாம் என விட்டு விடுவதா என்ற யோசனையில் படக்குழுவினர் உள்ளனர்.

 

மன்னார் மனித புதை குழியில் மேலும் பல மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு!! (படங்கள்)

மன்னார் மாந்தைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதபுதைகுழ மீண்டும் நேற்று காலை தோண்டப்பட்டது. இது வரை 11 இற்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக நேற்று மீண்டும் தோண்டப்பட்டது.

மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் மற்றும் அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்திய ரெட்ண ஆகியோர் முன்னிலையில் இன்று காலை 8 மணிமுதல் மாலை 2.15 மணிவரை குறித்த மனித புதைகுழி தோண்டப்பட்டு மனித எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டது.

ஏற்கனவே 11 மனித எழும்புக்கூடுகள் முழுமையாகவும், சில மனித எழும்புக்கூடுகள் துண்டு துண்டுகளாகவும் மீட்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று மேலும் 4 மனித எழும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சில தடையப்பொருட்களும் குறித்த புதைகுழியில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது மீட்கப்பட்ட எழும்புக்கூடுகளை அடையாளப்படுத்தி வருகின்றனர். மேலும் பல மனித எழும்புக்கூடுகள் இருக்கலாம் என தெரிய வந்துள்ள நிலையில் அப்பகுதியில் விரிவுபடுத்தி மனித புதைகுழிகள் தோண்டப்படவுள்ளது.

மீட்கப்பட்ட மனித எழும்புக்கூடுகளில் உள்ள மண்டையோடுகள் சிலவற்றின் மேல் பகுதியில் துவாரங்கள் காணப்பட்டன. குறித்த மனித புதை குழி தோண்டும் பணி இன்று சனிக்கிழமை காலை மீண்டும் மன்னார் நீதவான் முன்னிலையில் இடம் பெறவுள்ளது.

இந்த நிலையில் தற்போது மீட்கப்பட்டுள்ள மனித எழும்புக்கூடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதன் போது சம்பவ இடத்திற்கு மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்தை அவர்களும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

12 3

இலத்திரனியல் அடையாள அட்டைக்காக தரவுகள் திரட்டும் பணி மார்ச்சில் ஆரம்பம்!!

ICஇலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகள் வழங்குவதற்காக தரவுகள் திரட்டும் பணிகள் எதிர்வரும் மார்ச் மாதத்தில் நாடுபூராவும் அமைக்கப்பட்டுள்ள 331 நிலையங்களினூடாக ஆரம்பிக்கப் படவுள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் ஆர்.எம்.எஸ். சரத் குமார தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு இறுதியில் சகலருக்கும் சர்வதேச தரத்திலான இலத்திரனியல் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை மார்ச் மாதத்திலிருந்து கையினால் எழுதப்பட்ட அடையாள அட்டைக்குப் பதிலாக அச்சிடப்பட்ட அடையாள அட்டைகளே விநியோகிக்கப்பட இருப்பதாக குறிப்பிட்ட அவர் வரலாற்றில் முதற் தடவையாக கடந்த வருடத்தில் சகல பாடசாலை மாணவர்களுக்கும் அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த ஆட்பதிவு ஆணையாளர் நாயகம்..

இலத்திரனியல் அடையாள அட்டை வழங்குவதற்காக தரவுகள் திரட்டும் பணி மார்ச்சில் ஆரம்பிக்கப்பட்டு வருட இறுதியில் பூர்த்தி செய்யப்படும். இதற்காக 331 இணைப்பு அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கான தலா இரு முகாமைத்துவ உதவியாளர்கள் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர சர்வதேச தரத்திலான புகைப்படம் பிடிப்பதற்காக புகைப்படப் பிடிப்பாளர்கள் பதிவு செய்யப்படவுள்ளனர்.

பிரதேச செயலாளர்களின் கண்காணிப்புடன் இணைப்பு அலுவலக பணிகள் முன்னெடுக்கப்படும். ஒருவரது தரவு பெறும் போது முழுக்குடும்பத்தினதும் தரவுகள் திரட்டப்படும். 16 வயதுக்கு மேற்பட்ட சகலரதும் தரவுகள் இதன் போது திரட்டிட உள்ளோம். விரல் அடையாளங்களும் திரட்டப்படும்.

16 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் அடையாள அட்டை பெறும் போது அதற்காக விண்ணப்பித்தால் மட்டுமே போதுமானது. வேறு தரவுகள் வழங்க வேண்டி ஏற்படாது. மும்மொழிகளிலும் இலத்திரனியல் அடையாள அட்டை தயாரிக்கப்பட உள்ளது. இதனால் திருட்டுத்தனமாக அடையாள அட்டை பெறுவது தடுக்கப்படும்.என்றார்.

 

கடற்பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் : அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

Kaatruபுத்தளம் முதல் பொத்துவில் வரையான யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஊடான கடற்பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் என அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மணிக்கு 70 – 80 கிலோ மீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்தொழிலாளர்கள் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.