சந்திரமுகி 2 வெளிவருமா? வராதா?

chandramuki

கடந்த 1993ம் ஆண்டில் தெலுங்கில் வெளிவந்த மணிச்சித்திரத்தாளு என்ற படத்தின் இரண்டாம் பாகம் கீதாஞ்சலி என்ற பெயரில் வரவிருக்கிறது.

இப்படத்தில் மோகன்லால், சுரேஷ்கோபி, ஷோபனா நடித்திருந்தனர். அந்த படம் கன்னடத்தில் ஆப்தமித்ரா என்ற பெயரில் பி. வாசு ரீமேக் செய்தார்.

கன்னடத்தில் விஷ்ணுவர்தன், சௌந்தர்யா நடித்தனர். தற்போது விஷ்ணுவர்தனும், சௌந்தர்யாவும் உயிருடன் இல்லை.

ஆப்தமித்ரா படத்தை தமிழில் ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாராவை வைத்து பி.வாசு சந்திரமுகி என்ற பெயரில் ரீமேக் செய்தார். இப்படமும் சூப்பர் வெற்றிப்படமானது.

இந்நிலையில் பாசில் இயக்கிய மணிச்சித்திரத்தாளு படத்தின் இரண்டாம் பாகத்தை மோகன்லாலை வைத்து பிரியதர்ஷன் எடுக்கிறார்.

கீதாஞ்சலி என்று பெயரிட்டுள்ள இப்படத்தில் ஷோபனா கௌரவ கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அப்படி என்றால் சந்திரமுகி இரண்டாம் பாகமும் வருமா? அதிலும் ரஜினிகாந்த் நடிப்பாரா? என்று ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

கால்களை இழந்த பெண் கடலில் சுழியோடிச் சாதனை!

இரு கால்களையும் இழந்த பெண், சக்கர நாற்காலியை தானே வடிவமைத்து அதன் மூலம் கடலில் சுழியோடி சாதனை படைத்துள்ளார். பிரிட்டனைச் சேர்ந்தவர் சூ அஸ்டின். 16 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மர்ம காய்ச்சலால் இவரது இரு கால்களும் செயல் இழந்தன. எனினும், நம்பிக்கையை கை விடாத அஸ்டின் தான் கற்றிருந்த நீச்சல் மீது அலாதியான காதல் கொண்டிருந்தார்.

இதனால் மீண்டும் முன் போலவே நீந்த வேண்டும் என, ஆசைப்பட்டார். இதையடுத்து தனக்கு வேண்டிய சக்கர நாற்காலியை தானே பிரத்யேகமான முறையில் வடிவமைத்தார். இதன் மூலம் மீண்டும் நீச்சல் பழகிய ஆஸ்டின் கடலிலும் நீந்தி சாதனை படைத்துள்ளார்.

இவர் தயாரித்த நாற்காலியில் விசேஷ காஸ் நிரப்பிய உருளைகள் பொருத்தப்பட்டு உள்ளன. மேலும் கால்களின் உதவி இல்லாமல் நீந்துவதற்கு ஏதுவான முறையில், வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நாற்காலியின் மூலம் 360 டிகிரி கோணத்திலும் சுழல முடியும். இதனால் தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும், தரையில் இருப்பதை விட தண்ணீரில் இருப்பதையே தான் விரும்புவதாகவும், ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.

s1 s2

சிங்கப்பூர், மலேசியா முழுவதும் திடீர் புகை மண்டலம்..

malaysia

கடந்த சில நாட்களுக்கு முன் சுமத்ரா காடுகளில் ஏற்பட்ட பயங்கர காடுத்தீயினால் சிங்கப்பூர் மற்றும் மலேசியா முழுவதும் புகை சூழ்ந்துள்ளது.

எனவே அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, பள்ளி, கல்லூரிகளுக்கும் திங்கட்கிழமை முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.

கண் எரிச்சல், மற்றும் மூச்சுவிட திணறி வரும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கின்றனர். எனவே சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் வரவும் பெருமளவு குறைந்துவிட்டது.

சுமத்ரா தீவின் காட்டுத்தீயை அணைக்க பெருமுயற்சி செய்தும் கடந்த பத்து நாட்களாக கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

 

காகிதத்தில் இப்படியும் சிற்பங்கள் செய்ய முடியுமா??

நிறமூட்டப்பட்ட கண்ணாடிகளை போன்று காட்சியளிக்கும் இக்கலைப்படைப்புகளானது வெறுமனே பல வர்ணங்களை கொண்ட கண்ணாடிகளால் உருவாக்கப்பட்டவை என நினைக்கக்கூடும்.ஆனால் இவை கண்ணாடிகளால் செய்யப்பட்ட கலை ஆக்கங்கள் அல்ல.

இக்கலைப்படைப்புகளானது முற்றுமுழுதாக காகித அடுக்குகளை கொண்டு கவனமாக வெட்டி எடுக்கப்பட்ட காகித சிற்பங்களாகும்.ஓவியரான எரிக் ஸ்டேன்டிலி என்பவரே இத்தகைய காகித சித்திரங்களை உருவாக்கியுள்ளார்.

இவருக்கு இவ்வாறான கலைப்படைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இவர் விபத்தொன்றை எதிர்நோக்கிய சந்திர்பத்திலேயே தோன்றியதாக அவர் கூறியுள்ளார்
தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றில் இணை ஓவியத்துறை பேராசிரியராக இவர் செயற்பட்டு வருகின்றார்.

வெவ்வேறு நிறமுடைய 100 காகித அடுக்குகளை கொண்டு மேற்படி ஒவ்வொரு காகித சிற்பங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றை வடிவமைத்து முடிப்பதற்கு ஒவ்வொன்றிற்கும் 80 மணித்தியாலங்கள் எடுத்தனவாம். சுமார் இரண்டு வருடங்களை காகித சிற்பங்களுக்காக அவர் செலவிட்டுள்ளார். சுமார் 134 காகித அடுக்குகள் இக் காகித சிற்பத்திற்காக செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

1 2 3 4 5 6 7 8 9

 

பறவைகளின் அதிசய நடனம்…

 

பறவைகளை ரசிக்காதவர்கள் இந்த உலகில் இல்லை என்று சொல்லலாம். அப்படிப்பட்ட பறவைகளின் நடனத்தை நீங்களும் பார்த்து ரசியுங்கள்..

 

உலகின் வேகமான கணணியைவெளியிட்டது சீனா!!!

இன்று கணணி இல்லாத துறையே இல்லை என்று கூறலாம் அந்த அளவிற்க்கு இந்த கணனியின் தாக்கமானது உலகம் முழுவதும் பரந்து விரிந்துள்ளது. கணணியை கொண்டு நாம் ஏற்கனவே பல உயரங்களை எட்டி விட்டோம். இன்று அந்த உயரத்தையே தூக்கி சாப்பிடும் விதமாக சீனா புதிய கணணி ஒன்றை வடிவமைத்துள்ளது.

இது ஒரு நிமிடத்தில் 33 செயல்களை செய்யும் திறன் கொண்ட “சுப்பர் கொம்பியூட்டர்” ஆகும். இதன் மூலம் நாம் அடுத்த தலைமுறைக் கணனியில் நாம் முதற் படியை எடுத்து வைத்துள்ளோம். இதன் பெயர் டினாஹே2 என்று வைத்துள்ளனர்.

படங்கள்..

1 2 3 4 5 6 7 8

 

பேஸ்புக்கில் உள்ள நடிகர்களின் சிரிப்புப் படங்கள்!

பேஸ்புக்கில் பல படங்கள் உலா வருகின்றன. அவற்றிள் நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு. அதில் நம்மை சிரிக்க வைப்பதற்க்கென்றே சில படங்களை வெளியிடுவார்கள். இதோ அந்த சிரிப்பு படங்களில் இருந்து சில உங்களுக்காக..

1 2 3 4 5 6 7 8 9 10 11 12

 

மீண்டும் அதிகரிக்கப்படும் பஸ் கட்டணம்..

busஜூலை முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்களில் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளதாக தேசிய போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

பஸ் கட்டண மாற்றங்கள் தொடர்பில் நேற்று பஸ் சங்கத்துடன் விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டதாக தேசிய போக்குவரத்து சபையின் தலைவர் ரொஷான் குணவர்தன குறிப்பிட்டார். இதன்படி பஸ் கட்டண மாற்றம் தொடர்பில் இன்று தனியார் போக்குவரத்து அமைச்சர் சீ.பீ. ரத்நாயக்கவுக்கு அறிவிக்கப்படவுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் முதலாம் திகதி பஸ் கட்டணங்களில் மாற்றங்களை ஏற்படுத்தப்படுவது வழமை. இதன்படி இவ்வாண்டும் பஸ்கட்டண மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக தேசிய போக்குவரத்து சபை மேலும் தெரிவித்துள்ளது.

 

எகிப்தில் பைபிளை எரித்த இஸ்லாமிய மதபோதகருக்கு 11 ஆண்டுகள் சிறை..

bible

எகிப்தில் கிறிஸ்தவர்களின் புனித மறையான பைபிளை எரித்த இஸ்லாமிய மதபோதகரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்துபவருமான அபு இஸ்லாமுக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அபு இஸ்லாம் என்று அழைக்கப்படும் இவரின் நிஜப் பெயர் அகமது முகமது மஹ்மூத் ஆகும். அமெரிக்காவில் வைத்து தயாரிக்கப்பட்டிருந்த இஸ்லாத்துக்கு எதிரான வீடியோ ஒன்றை எதிர்த்து கெய்ரோவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக நடந்திருந்த ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை ஏற்றிருந்தவர் இவர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அபு இஸ்லாமின் மகனுக்கும் எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் இருவரும் சில நூறு டொலர்கள் கணக்கில் அபராதம் செலுத்தினால் இவர்களது சிறைத்தண்டனை நிறுத்தி வைக்கப்படும் என நீதிமன்றத் தீர்ப்பு அமைந்துள்ளது.

இஸ்லாத்தை நிந்தித்ததற்காக குற்றங்காணப்படுவதென்பதென்பது எகிப்தில் பொதுவாக நடக்கின்ற விஷயம் என்றாலும், வேறு ஒரு மதத்தை நிந்தித்ததற்காக அங்கு ஒருவர் குற்றங்காணப்பட்டு தண்டனை விதிக்கப்படுவதென்பது அரிதாகவே நடக்கவும்.

 

யாழில் இரண்டு வயது பெண் குழந்தை பணயம் வைத்து நள்ளிரவில் நகை பணம் கொள்ளை..

robbery

யாழ்ப்பாணம் அல்வாய் பகுதியில் இரண்டு வயதுக் குழந்தையை பணயம் வைத்து 22 பவுண் நகை மற்றும் ஒரு லட்சத்திற்கு அதிகம் பெறுமதியான இரண்டு கையடக்கத் தொலைபேசி, 60 ஆயிரம் ரூபா பணம் உள்ளிட்ட பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

நேற்று அதிகாலை 1 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
வீடென்றில் புகுந்த மூன்று திருடர்கள், பெண் பிள்ளையைப் பிடித்துக் கொண்டு பணம், நகை உள்ளிட்ட பொருட்களை கேட்டு மிரட்டி கொள்ளையடித்துள்ளனர்.

நகைகளை தராது விட்டால் குழந்தையைக் கொல்வோம் என்றும் திருடர்கள் மிரட்டியதைத் தொடர்ந்து அனைத்தையும் கொடுத்து குழந்தையை மீட்டுள்ளனர் பெற்றோர். இதன்பின்னர் திருடர்கள் தப்பித்துச் சென்றனர். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முடுக்கியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்த இலங்கை அணி..

Srilankaசம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதி லீக் போட்டியில் இலங்கை அவுஸ்திரேலிய அணிகள் விளையாடின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று அவுஸ்திரேலிய அணி தலைவர் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்களை இழந்து 253 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பாக டில்ஷான் 34 ஓட்டங்களையும், திரிமான்ன 57 ஓட்டங்களையும் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய மஹேல ஜயவர்தன ஆட்டமிழக்காமல் 81 பந்துகளில் 11 நான்கு ஓடங்கள் அடங்கலாக 84 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

254 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய அவுஸ்திரேலிய அணி 42.3 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 233 ஓட்டங்களை  மட்டுமே பெற்றுக்கொண்டது.

இதன் மூலம் இலங்கை அணி அவுஸ்திரேலிய அணியை 20 ஓட்டங்களால் வெற்றி பெற்று அரைஇறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் சார்பில் வோகஸ் 49 ஓட்டங்களையும் மக்ஸ்வெல் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் குலசேகர 3 விக்கெட்களையும் ஹேரத் 2 விக்கெட்களையும் பெற்றுக்கொண்டனர். .

இன்றைய போட்டியின் சிறப்பாட்டகாரராக சிறப்பான துடுப்பெடுத்தாடிய மஹேல ஜெயவர்தன தெரிவுசெய்யப்பட்டார்.

இன்றைய வெற்றியின் மூலம் அரைஇறுதிப் போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டிருக்கும் இலங்கை அணி வரும் 20ம் திகதி இந்திய அணியுடன் பலப்பரீட்சை நடத்துகின்றது. இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

யாழில் பாடசாலை மாணவியிடம் சேட்டை விட்ட மாணவர்கள் கைது..

Abuse

யாழில் பாடசாலை மாணவிக்கு அங்க சேட்டை விட்ட இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு அதே பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் பாலியல் ரீதியில் தொடுகை செய்துள்ளதாக குறித்த மாணவியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டை அடுத்து இரு மாணவர்கள் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த மாணவி தன்னை தொடர்ச்சியாக இந்த இரு மாணவர்கள் தன்னிடம் பகிடிவதை செய்வதாகவும் தன் பொறுமையாக சென்று வருவதாவும் தன்னால் பொறுக்க முடியாத நிலையிலேயே தனது பெற்றோரிடம் தனக்கு நடந்த சில சம்பவங்களை கூறியதாக அந்த மாணவி பாடசாலை நிர்வாகத்திடம் கூறினார்.

தனது மகளை பாலியல் ரீதியில் சேட்டை விடும் மாணவர்கள் இருவர் குறித்து பாடசாலை நிர்வாகத்திடம் முறையிடப்பட்டது. இருந்தும் நிர்வாகத்தினர் இதனை பெரிதாக்க வேண்டாம் எனக் கூறியதுடன் இரு மாணவர்களையும் தண்டிக்கத் தவறியுள்ளனர்.

இதன் காரணமாகவே பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து இந்த மாணவர்கள் இருவர் விசாரணைக்காக பாடசாலையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

இந்துக் கோயில்களை பாதுகாப்போம் – மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்..

வடக்கு கிழக்கில் இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டு சேதமாக்கப்படுதல் மற்றும் கொள்ளையிடுதலை கண்டித்தும் இந்து ஆலயங்களை பாதுகாக்க கோரியும் ´இந்துக் கோயில்களை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளின் கீழ் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் இலங்கைக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று மட்டக்களப்பு அரசடி வைத்தியசாலை சந்தியில் இடம்பெற்றது.

உலகளாவிய ரீதியில் உள்ள இந்து ஆலயங்களையும் மற்றும் இந்துக்களையும் பாதுகாக்கும் அமைப்பான விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் இலங்கைக் கிளையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எஸ்.எஸ்.சுதர்சனன் தலைமையில் இடம்பெற்ற இப்போராட்டத்தில், மாவட்டத்திலுள்ள பல இந்து அமைப்புக்கள் பங்குபற்றின.

அண்மையில் வடகிழக்கில் உள்ள பல இந்துக் கோயில்கள் உடைக்கப்பட்டு களவாடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இது விடயமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் நடவடிக்கையெடுக்க வேண்டும் என வலியுறுத்தி மகஜர்கள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

இம்மகஜரில் இந்து இளைஞர் மன்ற தலைவர் எம்.பவளகாந்தன், இந்து ஆலயங்கள் ஒன்றிய செயலாளர் எஸ்.புஸ்பலிங்கம், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் இலங்கைக் கிளையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எஸ்.எஸ்.சுதர்சனன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

hindu

 

 

மாநிலங்களவைத் தேர்தல்: தமிழகத்தில் ஏழு பேர் களமிறங்குகின்றனர்..

lokh

இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தமிழகத்திலிருந்து ஆறு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் நிலையில், தமிழகத்திலிருந்து ஏழு பேர் போட்டியிடுகின்றனர்.
திங்களன்று தேசிய முற்போகு திராவிடர் கழகம் சார்பில் அக்கட்சியின் பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

முன்னதாக சிபிஐ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜாவும் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் செய்யும் முன், டி ராஜா முதல்வரும் அஇஅதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.

அதன் பின்னர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் ஜெயலலிதா ராஜாவை தங்கள் கட்சி ஆதரிக்கும் என அறிவித்தார்.
மேலும் அஇஅதிமுகவின் ஐந்து வேட்பாளர்களில் ஒருவரான கு. தங்கமுத்து தனது வேட்புமனுவினை திரும்பப்பெறுவார் எனவும் தெரிவித்திருக்கிறார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் டி ராஜா
ஆக அஇஅதிமுக வேட்பாளர்கள் நால்வர், திமுகவின் கனிமொழி, சி பி ஐ -யின் ராஜா, மற்றும் தேமுதிகவின் இளங்கோவன் ஆக ஏழு போர் களமிறங்குகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி ஓர் இடத்தை வெல்ல 34 வாக்குகள் தேவைப்படும் அதன்படி அஇஅதிமுகவிற்கு சட்டமன்றத்தில் 151 உறுப்பினர்கள் இருப்பதால் அது நான்கு இடங்களில் வெல்லலாம்.

அஇஅதிமுகவிற்கு 15 வாக்குக்கள் உபரியாக இருக்கும்,
சிபிஐக்கு 8 உறுப்பினர்களும் அதற்கு ஆதரவு தருவதாக என அறிவித்துவிட்ட சி பி எம் 10 உறுப்பினர்களும் உள்ளனர்.
தேமுதிக உறுப்பினர்கள் ஏழு பேர் அஇஅதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

இந்நிலையில் இராஜா வெற்றி பெறுவது எளிது எனக் கருதப்படுகிறது. ஆறாவது இடத்திற்குத்தான் திமுகவின் கனிமொழிக்கும் தேமுதிகவின் இளங்கோவனுக்குமிடையே கடும்போட்டி நிலவும் எனத் தெரிகிறது.

ஐந்து உறுப்பினர் கொண்ட காங்கிரஸ், மற்றும் கடந்த சட்டமன்றத் தேர்தல்களில் அஇஅதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மனிதநேய மக்கள் கட்சி மற்றும் புதிய தமிழகம் ஆகியவற்றின் ஆதரவைப் பொறுத்தே முடிவு அமையக்கூடும் என நோக்கர்கள்.

 

கொழும்பு பல்கலை கட்டடத்திலிருந்து கீழே குதித்த மாணவி வைத்தியசாலையில் அனுமதி..

university

பல்கலைக்கழக கட்டடத்திலிருந்து மாணவி ஒருவர் கீழே குதித்து காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த மாணவி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இன்று காலை 9.30 மணியளவில் இவர் பல்கலைக்கழக கட்டிடம் ஒன்றின் மூன்றாம் மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார்.

இம்மாணவி கீழே குதித்தமைக்கான காரணம் எதுவும் இதுவரையில் தெரியவரவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

ஊருக்கு திரும்பிப்போக அலறும் பாகிஸ்தான் வீரர்கள்..

pakistan

சம்பியன்ஸ் கிண்ண தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாலும், கடைசி போட்டியில் இந்தியாவிடம் தோற்றுப் போனதாலும் நாடு திரும்பினால் ரசிகர்களின் கடும் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்தில் இங்கிலாந்திலிருந்து தாயகம் திரும்ப அஞ்சி இங்கிலாந்திலேயே தங்கியுள்ளனராம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்.

கடைசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் மிகவும் கசப்பானஒன்றாக மாறி விட்டது பாகிஸ்தானுக்கு. சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் இந்த வருடத்தோடு முடித்துக் கொள்ளப்படுகிறது. இனிமேல் இப்போட்டி நடைபெறாது.

எனவே இதை வென்று தாயகம் திரும்பும் வேகத்துடன் இங்கிலாந்து வந்திருந்தது பாகிஸ்தான். ஆனால் எதிர்பாராத வகையில் பெரும் அவமானத்துடன் தாயகம் திரும்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது பாகிஸ்தான். மோதிய மூன்று போட்டிகளிலுமே அந்த அணி தோல்வியைத் தழுவி விட்டது.

அதிலும் கடைசிப் போட்டியில் இந்தியாவிடம் தோற்று விட்டது. சம்பியன்ஸ் தொடரில் இதுவரை இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றதே கிடையது. ஆனால் முதல் முறையாக தோற்று விட்டது. பாகிஸ்தானின் இந்த மோசமான ஆட்டம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .

இதனால் தாயகம் திரும்பினால் ரசிகர்களின் ஆவேச கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று பாகிஸ்தான் வீரர்கள் அஞ்சுகிறார்களாம். இதனால் இங்கிலாந்தை விட்டு புறப்பட சில வீரர்கள் தயக்கம் காட்டுகின்றனராம்.

அப்துல் ரஹ்மான், கம்ரன் அக்மல், வஹாப் ரியாஸ், அசாத் ஷபீக் மற்றும் முகமது இர்பான் ஆகியோர் மட்டுமே பாகிஸ்தான் திரும்பத் தயாராகி வருகின்றனராம். மற்றவர்கள் தாயகம் திரும்ப தயக்கம் காட்டுகின்றனராம்.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தரப்பில் கூறுகையில் மற்றவர்களும், பயிற்சியாளர் டேவ் வட்மோரும் டுபாய் வழியாக தாயகம் திரும்புவார்கள். பயிற்சியாளர் குழுவைச் சேர்ந்தவர்கள் சற்று தாமதமாக திரும்புவார்கள் என்று தெரிவித்தனர்.

அதேசமயம் பாகிஸ்தான் அணி வீரர்கள் சிலர் இங்கிலாந்திலேயே கொஞ்ச காலம் தங்கி லீக் போட்டிகளில் ஆட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தாமதங்களுக்கும் தயக்கத்திற்கும் பாகிஸ்தான் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகி விடுவதைத் தவிர்க்கவே என்று கூறப்படுகிறது.

கடந்த காலங்களில் இப்படி கேவலமாக தோற்றுத் திரும்பியபோதெல்லாம் ரசிகர்கள் ஆவேசத்துடன் வீரர்களைத் தாக்குவது, வீட்டைத் தாக்குவது, கொடும்பாவி கொளுத்துவது என்று நடந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.