தந்தையின் ஐபேட் மூலம் பொருட்களை வாங்கிக் குவித்த இரட்டைக் குழந்தைகள்!!

i pad

தந்தையின் ஐபேட் மூலம் இன்டர்நெட்டில் துழாவி 6 வயது இரட்டை குழந்தைகள் 1600 டொலருக்கு பொருட்களை வாங்கி தந்தையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளனர்.

இங்கிலாந்தின் செயின்ட் ஈவ்ஸ் நகரைச் சேர்ந்தவர் அஷ்லே கிரிபித். இவருக்கு 6 வயதில் ஆண், பெண் குழந்தைகள் உள்ளனர். ஒரே பிரசவத்தில் பிறந்தவர்கள். கடந்த வார இறுதியில் கிரிபித்துக்கு அப்பிள் இணையதள நிறுவனத்தில் இருந்து தபால் ஒன்று வந்திருந்தது.

அப்பிள் நிறுவனத்தில் இருந்து தனக்கு என்ன வந்துள்ளது என்று ஆச்சரியமாக அதை பிரித்து பார்த்தபோது, கிரிபித்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அதில்4 பக்க அளவுக்கு பில்கள் இருந்தன. அதில் 1600 டொலர் கட்ட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

தவறாக பில் அனுப்பி விட்டார்களோ என்று ஆச்சரியமாக பார்த்தபோது தன் பெயருடன் முகவரியும் சரியாகத்தான் இருந்தது. சரி என்ன வாங்கப்பட்டுள்ளது என்று பார்த்தபோது கணனியில் தோன்றி நாம் சொல்லும் உத்தரவுக்கு எல்லாம் கீழ்படியும் விர்ச்சுவல் பெட்ஸ் எனப்படும் வீடியோகாட்சி பிராணிகள், துணிகள் ஆகியவை வாங்கப்பட்டிருந்தன. தன்னுடைய குழந்தைகள்தான் சுட்டியாச்சே அவர்கள் இதை வாங்கினார்களா என்று கேட்டபோதுதான் உண்மை தெரியவந்தது.

அவரது குழந்தைகள் தந்தையின் ஐபேடை தங்களுடைய படிப்புக்காக பயன்படுத்திக் கொள்வது வழக்கம். அதில் இருந்த தந்தையின் பாஸ்வேர்டை அவர்கள் நினைவில் வைத்துள்ளனர். அதை வைத்து கொண்டு, இன்டர்நெட்டில் அவர்கள் இவ்வளவையும் வாங்கியுள்ளனர். குழந்தைகளை அடிக்கவா முடியும் அதனால் இணையதள நிறுவனத்திடம் நடந்ததை விளக்கி இமெயில் அனுப்பினார்.

அவரது வார்த்தைகளில் இருந்த உண்மையை உணர்ந்து அப்பிள் நிறுவனம் பில்தொகையை நல்லெண்ண அடிப்படையில் வாபஸ் பெற்றுள்ளது. இதையடுத்துதான் கிரிபித் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். உடனடியாக அவர் செய்தது ஐபேடில் இருந்த பாஸ்வேர்டையும் கிரெடிட் காட் எண்ணையும் மாற்றியதுதான்.

 

மீண்டும் மிரட்டல் வந்தால், நாட்டை விட்டு வெளியேற தயங்கமாட்டேன் : கமல்!!

kamal

கலைஞன் என்ற முறையில் எனக்கு மீண்டும் மிரட்டல் வந்தால் நாட்டை விட்டு வெளியேற தயங்க மாட்டேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

பெங்களூருவில் நிருபர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது..

நாட்டின் அனைத்து திரைப்படத்துறையையும் பொலிவுட் என அழைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. மொத்த திரைப்படங்களில் 50 சதவீத திரைப்படங்கள், தென்னிந்தியாவிலிருந்து வெளிவருகின்றன. ஹொலிவுட்டை இந்தியாவுக்கு இடமாற்ற வேண்டும் என்பது என் குறிக்கோள்.

கலைஞன் என்ற முறையில் மீண்டும் எனக்கு மிரட்டல், பிரச்னை ஏற்பட்டால் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்ற கருத்திலிருந்து பின்வாங்கமாட்டேன். நான் நாட்டை விட்டு வெளியேறுவதை நாடு அனுமதிக்குமா இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் கமல் இயக்கி நடித்த விஸ்வரூபம் 2 விரைவில் வெளிவரவுள்ளது. இந்த சூழ்நிலையில் அவர் இவ்வாறு பேசியுள்ளது, மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு சிறைக் கைதி கூரை மீது ஏறி போராட்டம்!!

batti

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைக்கைதி ஒருவர் இன்று காலை முதல் கூரை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் பாலியல் துஸ்பிரயோக வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் புதூரை சேர்ந்த அன்டனி ஜெயராஜ் என்பவரே இவ்வாறு போராட்டத்தில் குதித்துள்ளார்.

இவரை பொலநறுவையில் உள்ள சிறைச்சாலைக்கு இடமாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தன்னால் அங்கு செல்ல முடியாது என தெரிவித்தே அவர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளிடம் வினவியபோது..

குறித்த கைதி தண்டனை வழங்கப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர் ஏனைய கைதிகளுடன் அடிக்கடி முரண்படுவதுடன் ஏனைய சிறைக் கைதிகளை தாக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுவந்ததாகவும் இதன் காரணமாக அவரை பொலநறுவைக்கு இடமாற்ற தீர்மானித்ததாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த சிறைக் கைதி மீது மேல் நீதிமன்றம் மற்றும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் ஆகியவற்றில் இரு வழக்குகளும் உள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு : வவுனியா பெண் உட்பட 9 பேர் கைது!!

pro

மருதானை பொலிஸ் பிரிவில் விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு ஏழு பெண்கள் உட்பட ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் இடம்பெற்ற இந்த சுற்றிவளைப்பில் விபச்சார விடுதியை நடத்திச் சென்ற இரண்டு ஆண்களும் அதற்கு உதவியாக இருந்த ஏழு பெண்களுமே கைதாகியுள்ளனர்.

கைதான பெண்கள் 21 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இவர்கள் வலப்பனை, திருகோணமலை, வவுனியா, உடப்புஸ்ஸலாவ, வெல்லம்பிட்டிய, கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

சந்தேகநபர்களை இன்று மாலிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இந்து சமய வழிபாட்டிடம் விசமிகளால் அழிப்பு!!

vavuniya

வவுனியா பம்பைமடுப் பகுதியில் உள்ள இந்துக்களின் வழிபாட்டிடம் தீ மூட்டி அழிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..

வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள பம்பைமடுப் பகுதியில் தமிழ் மக்களால் ஆல மரத்தின் கீழ் சிறிய கட்டட அமைப்புடன் வைத்து நீண்டகாலமாக வழிபடப்பட்டு வந்த வழிபாட்டிடம் சேதப்படுத்த பட்டதுடன் இவ் இடத்தில் இருந்த சிலைகள் இனந்தெரியதாத விசமிகளால் அகற்றப்பட்டுள்ளது.

வழிபாட்டிடம் இருந்த மரமும் விசமிகளால் எரிக்கப்பட்டுள்ளது இச்செயல் இந்து மக்கள் மத்தியில் விசனத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை இச்செயலை இந்து சமய நிறுவனங்கள் கண்டித்துள்ளன.

வடமாகாண அமைச்சர்கள் தெரிவில் தொடரும் இழுபறி : இறுதி முடிவு விக்னேஸ்வரன் கையில்!!

c.v.v

வடமாகாண சபை அமைச்சர்கள் தெரிவு தொடர்பில் இறுதி முடிவெடுப்பதற்கான கூட்டம் நேற்று மாலை பம்பலப்பிட்டியில் உள்ள தமிழ் தேசியக் கூட்மைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

எனினும் இந்தக் கூட்டத்தில் இறுதி முடிவுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என கூட்டமைப்பின் சார்பாக வடமாகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

எனினும் வடமாகாண அமைச்சர்களை தெரிவுசெய்வது தொடர்பான சகல அதிகாரமும் முதலமைச்சராக நியமிக்கப்படவுள்ள சி.வி.விக்னேஸ்வரனிடம் ஒப்டைக்கப்பட்டுள்ளதாகவும் அவரே இது குறித்து அறிவிப்பார் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.

இதேவேளை, தான் பதவி ஏற்றபின் அமைச்சர்களின் விபரம் குறித்து அறவிப்பதாக சி.வி.விக்னேஸ்வரன் இதன்போது கூறியதாக தர்மலிங்கம் சித்தார்த்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் எதிர்வரும் 7ம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் விக்னேஸ்வரன் வடமாகாண முதலமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

இந்த நிகழ்வில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டும் என சம்பந்தன் இன்று அழைப்பு விடுத்ததாக தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறு இருப்பினும் கூட்டமைப்பின் அனைத்து தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்பது என்பது சந்தேகத்திற்குரியதொன்றாகவே உள்ளது.

காரணம் ஜனாதிபதி முன்னிலையில் விக்னேஸ்வரன் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வதற்கு கூட்டமைப்புக்குள் எதிர்ப்புக்கள் எழுந்துள்ளதோடு மாகாண அமைச்சர்கள் தெரிவு குறித்தும் முரண்பாடுகள் காணப்படுகின்றன.

குறிப்பாக அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மாவை சேனாதிராஜா வெளிநாடு சென்றுள்ளதாக கூட்டமைப்பின் உள்ளக தகவல்கள் கூறுகின்றன.

இதேபோல் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) மன்னாரை சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட வேண்டிய அமைச்சுப் பதவி யாழ்பாணத்தை சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்படவுள்ளதாக சர்ச்சைகளும் ஏற்பட்டுள்ளன.

இதனால் அக்கட்சியின் (டெலோ) தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய உத்தேசித்துள்ளதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் விக்னேஸ்வரனின் சத்தியப்பிரமாண நிகழ்வில் கூட்டமைப்பின் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்வது சாத்தியமா எனும் கேள்வி எழுத்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் இலங்கை பெண்களின் எண்ணிக்கை வீழ்ச்சி!!

midle east

இலங்கையில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருப்பதாக ​தெரிவிக்கப்படுகின்றது.

2012ம் ஆண்டும் ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் மத்திய கிழக்குக்கு வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்லும் இலங்கைப் பெண்களின் எண்ணிக்கை 72 வீதத்தால் குறைந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரை ஆதாரம் காட்டி பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பணிப்பெண்ணான ரிஷானா நபிக் சவுதி அரேபியாவில் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், இலங்கை அரசாங்கம் எடுத்த சில நடவடிக்கைகளை அடுத்தே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் பெண்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்களில் ஒருவரான சாந்தி சச்சிதானந்தம் கூறியுள்ளார்.

வவுனியாவில் கடும் வறட்சி குடிதண்ணீர் தட்டுப்பாடு!!

vavuniya1

தொடர்ந்து நீடிக்கும் கடுமையான வறட்சி காரணமாக வவுனியாவில் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டதுடன் குடி தண்ணீருக்கும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

பருவகால மழை பெய்யுமென எதிர் பார்த்து பெரும்போகச் செய்கைக்கென வயல் நிலங்களை பயன்படுத்திய விவசாயிகள் நெல் விதைப்பை மேற்கொள்ள முடியாத நிலையில் அவஸ்த்தைப் படுகின்றனர்.

இதே வேளை வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள 24 பெரிய குளங்களில் நீர் மட்டம் குறைவடைந்ததால் கிணறுகள் வற்றிய நிலையில் கானப்படுகின்றன. இதனால் பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் தமக்கு குடிதண்ணீர் விநியோகத்தை மேற்கொள்வதற்கு அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்வர வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதே வேளை குளங்களில் நீர் வற்றியதால் அங்கு காணப்பட்ட மீன்கள் இறந்து வருவதால் குளத்து மீன்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் குளத்து மீன்களை வாங்கி சாப்பிடும் வறிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முகத்தில் தாடியுடன் அவதிப்படும் பெண்!!

lady

இந்தோனேஷியாவை சேர்ந்த பெண் ஒருவர் முகத்தில் தாடியுடன் உலா வந்து கொண்டிருக்கிறார். இந்தோனேஷியாவின் பெனாகாவில் வசிப்பவர் அகஸ்டினா(38). இவருக்கு 19 மற்றும் 3 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர்.

இவருக்கு 25 வயதாக இருக்கும் போது முதல் குழந்தை பிறந்தது, அதன் பின் இவரது முகத்தில் திடீரென முடி முளைக்க ஆரம்பித்தது. இந்த தாடியை அகற்ற முற்பட்ட போது, கடுமையான வலியினால் அப்படியே விட்டுவிட்டாராம்.

இதனால் கடந்த 19 ஆண்டுகளாகவே வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முகத்தை மறைத்தவாறு சென்று வருவதாகவும்; வீட்டிற்குள்ளும் தன்னுடைய குழந்தைகள் பரிகாசம் செய்வார்கள் என்ற பயத்தில் முகத்தை மறைத்தே வாழ்ந்து வருவதாகவும் அகஸ்டினா தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வார ஆரம்பத்தில் முதன் முதலாக முகத்தை மறைக்காமல் வெளியே வந்தபோது மக்கள் விசித்திரமாக பார்த்தார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் இடம்பெற்ற விபத்தில் இலங்கை பெண்ணொருவர் பலி!!

eng

இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
ஸ்பீட் வெல் மற்றும் மற்றும் பிரிக்பீல்ட்ஸ் வீதி சந்திக்கு அருகில் இந்த விபத்து நேற்று அதிகாலை 6.45 அளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் இலங்கையில் பிறந்த 55 வயதான முத்துமனக்கா பின்ஹாமி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

தொழில் செய்யும் இடத்தை நோக்கி சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த போது லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர்கள் கணவரும் பிள்ளைகளும் இலங்கையில் வாழ்ந்து வருவதாகவும் அவர் ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுப்பன்றி என நினைத்து மகனை சுட்டுக் கொன்ற தந்தை!!

shoot

காட்டுப்பன்றி என நினைத்து தன்னுடைய மகனை சுட்டுக் கொன்ற தந்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரான்சின் Ardèche பகுதியில் சுடும் விருந்து ஒன்று நடைபெற்றது. இதில் 61 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கலந்து கொண்டார். அப்போது நிழலினை வைத்து காட்டுப்பன்றி என நினைத்து தனது மகனை சுட்டுக் கொன்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதேபோன்று வடக்கு பிரான்சில் ஆறு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசைக் கண்டித்து போராட்டம் : தமிழகத்தில் 70 000 பேர் கைது!!

T.Pandian

விலைவாசி உயர்வு மற்றும் இந்திய மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் இன்று நடந்தது.

இதில் தமது கட்சி சார்ந்த 15 ஆயிரம் பெண்கள் உள்ளிட்ட 70 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்..

மத்திய அரசு தொடர்ந்து கடைப்பிடித்து வரும் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து மத்திய அரசு அலுவலங்களை மறியல் செய்யும் போராட்டத்தை நடத்திட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு விடுத்த அறைகூவலின்படி 05.10.2013 சனிக்கிழமை தமிழ்நாடு முழுவதும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய மறியல் போராட்டத்தில் 280 மையங்களில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்ந்த 15 ஆயிரம் பெண்கள் உள்ளிட்ட 70 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

அத்தியாவசிய பொருட்களின் அநியாய விலையேற்றம், எரிபொருள் விலையேற்றம் என்பதோடு இயற்கை வளங்களையும் கார்ப்பேரேட் நிறுவனங்கள் குறிப்பாக அந்நிய நாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்க மத்திய அரசு ஒத்துழைப்பது, ஊழல்கள் மலிந்த நாட்டின் வளர்ச்சியும் நிர்வாகத்தையும் பாழடித்து வருவதைக் கண்டித்து நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சென்னையில் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், நெல்லையில் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு, திருச்சியில் மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன், திருவாரூரில் மாநில துணைச் செயலாளர் கோ.பழனிச்சாமி, மற்றும் இதர மாவட்டங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில செயற்குழு, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட ஒரு இலட்சம் பேர் பங்கேற்றனர். என்று கூறியுள்ளார்.

50,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரராக சாதனை படைத்த சச்சின்!!

sachin-tendulkar

கிரிக்கெட் வரலாற்றில் 50 000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை சச்சின் டெண்டுல்கர் தன்வசப்படுத்தியுள்ளார்.

நடைபெற்று வரும் சம்பியன்ஸ் லீக் இருபதுக்கு 20 போட்டிகளின், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் 26 ஓட்டங்களை எடுத்தபோதே அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதன்படி டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளில் இவர் ஒட்டுமொத்தமாக 50 000 ஓட்டங்களைக் கடந்துள்ளார்.

கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான சச்சின் 198 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15837 ஓட்டங்களை விலாசியுள்ளார். அத்துடன் 463 ஒருநாள் போட்டிகளில் 18426 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.

குடிவெறியில் பெற்ற பிள்ளையை கொலை செய்த தாய்!!

arrest1

மதுவிற்கு அடிமையான தாய் ஒருவர் பெற்ற பிள்ளையை பட்டினி போட்டு கொலைசெய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் வடபகுதியில் பிராட்ஃபோர்ட் பகுதியை சேர்ந்தவர் அமண்டா ஹூட்டன் (43). மது பழக்கத்துக்கு அடிமையான அமண்டா கணவருடன் சேர்ந்து வாழாமல் தனியாக வசித்து வந்தார்.

தினமும் குடித்து விட்டு போதையில் தூங்கிவிடும் அமண்டா மகன் ஹம்ஷா கானுக்கு சாப்பாடு கொடுக்கமலேயே இருந்துள்ளார். இதனால் பசியால் வாடிய கான் நாளடைவில் படுத்த படுக்கையாக மாறி கடந்த 2009ம் ஆண்டில் இறந்து விட்டான்.

மகன் இறந்ததை வெளியே சொல்லாமல் 2 வருடமாக நறுமண தைலம் பூசி அட்டைப் பெட்டி ஒன்றில் அடைத்து வைத்துள்ளார்.
இருப்பினும் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசவே அக்கம் பக்கத்தினர் பொலிசில் புகார் கொடுத்தனர்.

இதனையடுத்து பொலிசார் நடத்திய அதிரடி சோதனையில் உண்மை தெரியவரவே அமண்டா கடந்த 2011ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு லண்டன் பிராட்ஃபோட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அமண்டா ஹூட்டன் குழந்தைக்கு தான் செய்ய வேண்டிய கடமையில் இருந்து தவறி விட்டார். மதுவிற்கு அடிமையான அவர் குழந்தைக்கு சரியாக உணவு கொடுக்கவில்லை.

இதனால் குழந்தை இறந்திருக்கிறது குழந்தைக்கு அணிவித்திருந்த உடைகளை பார்க்கும்போது 6 முதல் 9 மாத குழந்தையாக இருக்கும் என்று தெரிகிறது.

குழந்தையை சரியாக வளர்க்காமல் பட்டினியால் சாகடித்த குற்றத்திற்காக 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கிறேன் என தீர்ப்பு வழங்கியுள்ளார்.

கொழும்பில் தனக்கு நடைபெறவிருந்த வரவேற்பு விழாவை நிராகரித்தார் விக்னேஸ்வரன்..!

mahindaவடமாகாண முதலமைச்சராக நாளை பதவியேற்கவுள்ள, முன்னாள் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் கொழும்பில் தனக்கு நடத்தவிருந்த வரவேற்பு விழாவை நிராகரித்துள்ளார்.

நாளை ஜனாதிபதி முன்னிலையில் வட மாகாண முதலமைச்சராக பதவியேற்ற பின்னர், கொழும்பில் அவருக்கு முறைப்படியான வரவேற்பு விழா ஒன்றை நடத்த ஒழுங்குகள் செய்யப்பட்டன.

தனது தெரிவை கொண்டாட வேண்டிய தேவையில்லை என்றும், இது கொண்டாட்டம் நடத்துவதற்கு உகந்த நேரம் இல்லை என்றும் கூறி, அவர் இந்த விழாவை அவர் நிராகரித்து விட்டதாக, இந்து கல்வி சமூகத்தின் செயலர் கந்தையா நீலகண்டன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பதவியேற்ற பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக தாம் உடனடியாக யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய மாநாட்டிற்காக ஒரு கோடி ரூபா செலவில் மிருகக் காட்சிச்சாலை..!

zooபொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டிற்காக ஒரு கோடி ரூபா செலவில் மிருக்கக் சாட்சிசாலையொன்று உருவாக்கப்பட உள்ளது.

பத்தரமுல்ல ஜனகலா கேந்திர நிலையத்தை அண்டிய மூன்றரை ஏக்கர் பரப்பில் இந்த மிருகக்காட்சிசாலை அமைக்கப்பட உள்ளது.

இதற்காக சீனாவிலிருந்து மிருகங்கள் தருவிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 25 விதமான மிருகங்கள் சீனாவிலிருந்து தருவிக்கப்பட உள்ளன.

இதற்கு பிரதி உபகாரணமாக அரசாங்கம் சீனாவிற்கு யானைகளை வழங்க உள்ளது.

எதிர்காலத்தில் சீனாவும் இலங்கையும் மிருகங்களை பரிமாறிக்கொள்ளும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டின் பாதுகாப்பு பணிகளுக்காக 5000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இவர்களில் 2500 பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உலகத் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட சிலருக்கு கட்டுகுறுந்த பயிற்சி நிலையத்தில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது.

பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.