ரணில் விக்ரமசிங்கவை மகிந்த அரசாங்கம் பாதுகாத்துள்ளது – சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு..!

ranilஐக்கிய தேசிய கட்சியின் தலைவா் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பாதுகாத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினா் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

மாத்தறையில் நேற்று மக்கள் நடத்திய ஆா்ப்பாட்டம் குழப்பமடைந்தமைக்கு அரசாங்கம்தான் காரணம் என்று கூறிய அவா் ஆர்ப்பாட்டத்தை நிறுத்த வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவின் மூலமாக ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பட்டுள்ளார் என சஜித் கூறியதாக உள்ளக தகவல்கள் கூறுகின்றன.

சம்பவத்தின் பின்னர் கட்சியின் மூத்த உறுப்பினா்கள் சிலருடன் கலந்துரையாடிய போது சஜித் பிரேமதாச இவ்வாறு கூறியதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஆா்ப்பாட்டம் நடத்தி அவரை தலைமைப் பதவியில் இருந்து விலக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சிக்கு தலைவராக வருவதை ஜனாதிபதி மஹிந்த விரும்பவில்லை என்றும் தனது ஊரைச் சோ்ந்த எவரும் எதிர்காலத்தில் உந்த ஒரு கட்சிக்கும் தலைமை தாங்குவதை ஜனாதிபதி விரும்பவில்லை எனவும் மற்றுமொரு உள்ளக தகவல்கள் கூறுகின்றன.

அரசாங்கத்தின் ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருப்பதனால் சஜித் பிரேமதாச தலைவராக வருவது கடினமானது எனவும் உள்ளக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த வருடமும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தலைமைத்துவ பிரச்சினை ஏற்பட்ட போது அரசாங்கம் காப்பாற்றியிருந்தது.

குறிப்பாக கட்சியின் தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்ற போது அலுவலகத்துக்கு முன்பாக உள்ள வீதியை பொலிஸார் திருத்தப் பணி என கூறி மூடியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஜனாதிபதி முன்னிலையில் முதலமைச்சர் பதவிப்பிரமாணம்: தமிழ் சட்டத்தரணிகள் கடும் கண்டனம்..!

mahindaஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் வடமாகாண முதலமைச்சர் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவிருப்பதை தமிழ் சட்டத்தரணிகள் பேரவை கண்டித்துள்ளதுடன், கூட்டமைப்பின் இத்தகைய செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கு மாகாணசபையின் ஏனைய உறுப்பினர்கள் முன்வர வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளது.

இது தொடர்பில் அந்த அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றது.

´´ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசின் அடக்குமுறைக்கு எதிராக, அந்த அடக்குமுறைக்குள் இருந்து கொண்டு, அரசின் சலுகை, அபிவிருத்தி மாயைகளுக்குள் சிக்கி விடாமல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்ததன் மூலம், தமது எதிர்ப்பை மக்கள் காட்டியுள்ளனர்.

இத்தருணத்தில் வட மாகாண முதலமைச்சராக திரு. சி.வி. விக்கினேஸ்வரன் மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யத் தீர்மானித்திருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்´´ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களால் வழங்கப்பட்ட ஆணையை அவர்களின் கையில் உள்ளமை காய்வதற்கு முன் தமிழ்க் கூட்டமைப்பு தூக்கி வீசி விட்டது என்றும் தமிழ் சட்டத்தரணிகள் பேரவை தெரிவித்திருக்கின்றது.

இந்தச் செயற்பாடு மகிந்த ராஜபக்க்ஷ அரசுக்கு எதிரான சர்வதேச போர்க்குற்ற விசாரணை அழுத்தத்தைக் குறைத்து விடும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

ஐநா மனித உரிமை ஆணைக்குழு சர்வதேச விசாரணை ஒன்றை எதிர்வரும் மார்ச் மாதம் கோர வேண்டிய நிலை ஏற்படும் எனத் தெரிவித்திருக்கும் இந்நிலையில் இச் செயற்பாடு தவறான சமிக்கைகளை சர்வதேசத்திற்கு கொடுத்துவிடும் என தெரிவித்துள்ள தமிழ் சட்டத்தரணிகள் பேரவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இவ்வாறான செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமையின் இவ்வாறான செயற்பாடுகளை ஏனைய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கோரிக்கை விடப்பட்டிருக்கின்றது.

வவுனியாவில் நாளை புதிய ஜனநாயக கட்சியின் 35வது ஆண்டு பொதுக்கூட்டம்!!

மக்களை அணிதிரட்டுவோம், மக்கள் போராட்டங்களை முன்னெடுப்போம். போன்ற பல வாசகத்தோடு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி துண்டு பிரசுரம் வெளியிட்டுள்ளது.

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி தனது 35வது ஆண்டுவிழாக்காக பொதுக்கூட்டம் என வெளியிடப்பட்ட துண்டுபிரசுரத்தில் மேற்குறிப்பிட்ட பல வாசகங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுக்கூட்டமானது நாளை (06.10.2013) ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு வவுனியா இந்திரன்ஸ் உணவக மண்டபத்தில் நடைபெறுவதாக குறிப்பிடபட்டுள்ளது.

இது பற்றி கட்சியின் செயலாளர் நி.பிரதீபன் தெரிவித்தபோது ..

மக்கள் நம்பி வாக்களித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசிய உணர்சிகளை கிளப்புகின்றது தவிர மக்களின் அடிப்படை தேவைகளை புரிந்துகொண்டு செயற்பட்டால்போல் தெரியவில்லை.

அதேபோல்தான் அரசும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உரு ஏற்றுவது போல் நடக்கிறது. மக்களின் அடிப்படை விடயத்தில் கவனம் எடுக்கவில்லை ஆகவேதான் நாங்கள் களமிறங்கவேண்டிய தேவை வந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

vavuniya vavuniya1

8 கோரிக்கைகளினை முன்வைத்து தம்பிராசா வவுனியாவிலிருந்து பாதயாத்திரை!!

tna

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட முத்தையாப்பிள்ளை தம்பிராசா எட்டு அம்சக் கோரிக்கைகளினை முன்வைத்து வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பாதயாத்திரையினை மேற்கொண்டுள்ளார்.

இந்த பாதயாத்திரையினை இன்று காலை 10 மணிக்கு வவுனியா இறம்பைக்குளம் கருமாரி அம்மன் கோவிலிருந்து ஆரம்பித்துள்ளார்.

இது பற்றி தம்பிராசா கருத்துக் கூறுகையில்,
அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சத்தியப்பிரமாணத்தினை மேற்கொள்ள வேண்டும், அரசாங்கம் அரசியல் கைதிகளுக்கு தகுந்த பாதுகாப்பினை வழங்க வேண்டும், அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டதும் அவர்களை சர்வதேச சமூகம் கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கையினை முன்வைத்தே இந்த பாத யாத்திரையை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் ஐடா..!

தென் ஆபி­ரிக்­கா­வுக்­கான இரு­வகை மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர் கிரிக்கட் விஜ­யத்தை மேற்­கொள்­ள­வுள்ள ஷஷி­கலா சிறி­வர்­தன தலை­மை­யி­லான 14 வீராங்­க­னைகள் அடங்­கிய இலங்கை மகளிர் கிரிக்கட் குழாமில் நோபர்ட் ஜோன்சன் ஐடாவும் பெய­ரி­டப்­பட்­டுள்ளார்.

தென்னாபி­ரிக்க மகளிர் அணிக்கு எதி­ராக 3 மகளிர் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கட் போட்­டி­க­ளிலும் 3 இரு­ப­து– 20 கிரிக்கட் போட்­டி­க­ளிலும் இலங்கை மகளிர் அணி விளை­யா­ட­வுள்­ளது.

இதில் மட்­டக்­க­ளப்பு மக­ஜனா கல்­லூரி சார்­பாக கிரிக்கெட் உட்­பட பல்­வேறு விளை­யாட்­டுக்­களில் ஈடு­பட்­டு­வந்த ஐடா இடம்பிடித்துள்ளார்.

இதே­வேளை உதவி அணித் தலை­வி­யாக ஏஷானி லொக்­கு­சூ­ரிய நிய­மிக்­கப்­பட்­டு ள்ளார்.
இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாமில் சாமரி அத்­தப்­பத்து, யசோதா மெண் டிஸ், தீப்­பிகா ரசங்­கிக்கா, டிலானி மனோதரா, நிலூக்கா கருணாரட்ன, சேபாலி வீரக்கொடி உதேஷிக்கா ப்ரபோ தினி, சாமரி செனவிரத்ன, மாதுரி சமுதிக்கா, சந்திமா குணரட்ன, ரெபெக்க வன்டர்ட் ஆகியோரும் பெயரிடப்பட்டுள்ளனர்.

பெண்களுக்கான தேசிய தெரிவாளர்களால் பெயரிடப்பட்டுள்ள இந்த குழாமுக்கு விளையாட்டுத்துறை அமைச்சரின் அங் கீகாரம் கிடைத்துள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் அறிவித்தது.

ida2ida1

மன்னாரில் படகு கவிழ்ந்து விபத்து: நால்வர் பலி, ஒருவரை காணவில்லை..!

mannarமன்னாரிலிருந்து கடலுக்குச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 16 பேரில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் சிறுவர் ஒருவர் காணாமற்போயுள்ளார்.

உயிரிழந்த நால்வரது சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

விபத்துக்கு முகங்கொடுத்த மேலும் 11 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

யாழ், அச்சுவேலியில் விபத்து: யாழ். பல்கலை மாணவன் பலி..!

ACCIDENT_logoயாழ், அச்சுவேலி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அச்சுவேலி பிரதேசத்தில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் மோட்டார் வண்டி ஒன்றும் டிப்பர் ஒன்றும் மோதுண்டதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் வண்டியில் சென்ற மாணவனை பின்னால் வந்த டிப்பர் மோதியுள்ளது.

விபத்தில் சாவகச்சேரி, கொரடாவில் பிரதேசத்தைச் சேர்ந்த சோகீஸ்வரன் கஜந்தன் என்ற மாணவன் உயிரிழந்துள்ளார்.

இவர் யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இறுதியாண்டு மாணவனாவார்.

இம்மாணவன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் அதேவேளை தனியார் கல்வி நிலையம் ஒன்றில் கற்பித்தும் வருகிறார்.

இந்நிலையில் கல்வி நிலையத்திலிருந்து வீடு திரும்பும்போது இவ் விபத்து நேர்ந்துள்ளது.

உயிரிழந்த மாணவனது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சையில் குறைந்த புள்ளி பெற்ற மகனுக்கு சூடு வைத்த தந்தை கைது!!

arrest1

பொகவந்தலாவை கீழ் பிரிவு தோட்டத்தில் மூன்றாம் இலக்க லயன் குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் தனது மகன் நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் குறைந்த புள்ளிகளைப் பெற்றுள்ளார் என கூறி தீயினால் சூடு வைத்துள்ளார்.

இம் மாணவன் புலமைப்பரிசில் பரீட்சையில் 95 புள்ளிகளை பெற்றுள்ளார். இச் சம்பவம் நேற்று மாலை பொகவந்தலாவை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பொகவந்தலாவ பொலிசாருக்கு கிடைத்த தகவலின் படி சம்பவம் தொடர்பாக குறித்த சிறுவனின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் கழுத்துப் பகுதியிலும் வலது காலிலும் எரி காயங்களுடன் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக பொகவந்தலாவ பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தேசிய பாடசாலைகளுக்கு இடையிலான போட்டியில் வவுனியாவிற்கு பெருமை சேர்த்த மாணவர்கள்!!

vavuniya

அகில இலங்கை பாடசாலைகள் மட்ட மெய்வல்லுநர் போட்டிகளில் கொழும்பு சுகததாஸ அரங்கில் நடைபெற்று வருகின்றன.

இப் போட்டிகளில் வவுனியா மாவட்ட மாணவர்கள் பலர் தமது திறமையை வெளிப்படுத்தி பதக்கங்களை வெற்றி பெற்று வருகின்றனர்.

21 வயதிற்குட்பட்ட 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த கமலநாதன் லேகாஜினி 1 நிமிடம், 04.31 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து 3வது இடத்தைப் பெற்று வெங்கலப்பதக்கத்தை பெற்றுக்கொண்டார். இவர் வவுனியா சைவப்பிரகாச இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவியாவார்.

19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான பரிதிவட்டம் எறிதலில் வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மனோகர் தர்சிகா 31.67 மீற்றர் பதிவுசெய்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

15 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வவுனியா பூம்புகார் கண்ணகி வித்தியாலய மாணவன் குமாரவேல் யோகேந்திரன் 49.36 மீற்றர் பதிவுசெய்து வெள்ளிப் பதக்கத்தை வெற்றிபெற்றார்.

வெற்றி குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில் தாம் அடிப்படை வசதிகளற்ற பூம்புகார் கிராமத்திலிருந்து வந்து போட்டிகளில் பங்குபற்றியதாகவும் தன்னிடம் போட்டிக்கு தேவையான உபகரணங்கள் அற்ற நிலையிலிருப்பதாகவும், உபகரணங்கள் கிடைக்கும் பட்சதில் தேசிய ரீதியில் மேலும் சாதனைகளை படைக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

இவருக்கு உதவி செய்ய யாராவது முன்வரும் பட்சத்தில் அவருடன்  நேரடி தொடர்புகளை ஏற்படுத்தித்தர தயாராகவுள்ளோம்.

நடுக் கடலில் தத்தளித்த 70 பேர் மீட்பு!!

boat

இலங்கையின் தென்மேற்கு கடற்பரப்பில் 215 கிலோமீற்றர் தொலைவில் படகு பழுதடைந்தமையின் காரணமாக ஆபத்துக்கு முகங்கொடுத்த 70 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இவர்கள் 70 பேரும் பாதுகாப்பான நிலையில் நேற்று காலி துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். தொழிநுட்ப கோளாறு காரணமாக படகு தென்மேற்கு கடற்பரப்பில் 215 கிலோமீற்றர் தொலைவில் பழுதடைந்துள்ளது.

இந்நிலையில் படகில் பயணித்தவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். இந்த கப்பலில் 13 சிறுவர்கள், 13 பெண்கள் மற்றும் 46 ஆண்களும் பயணித்துள்ளனர்.

படகிலிருந்து மீட்கப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றதடுப்பு பிரிவினரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம், கற்பிட்டியிலிருந்து இவர்கள் படகு மூலம் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா நோக்கி பயணித்துள்ளனர்.

மன்னாருக்கு அமைச்சுப் பதவி வேண்டும்: கூட்டமைப்புக்கு மகஜர்!!

telo-logo

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக மன்னார் மாவட்டத்திற்கு வழங்கப்படவிருந்த அமைச்சுப்பதவி யாழ். மாவட்டத்திற்கு மாற்றப்பட்ட சம்பவம் மன்னார் மாவட்ட மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் இடம்பெற்ற வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மன்னார் மாவட்டத்தில் மூன்று ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. அதில் தமிழீழ விடுதலை இயக்கம் இரண்டு ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் தமிழீழ விதலை இயக்கம் டெலோ சார்பாக வழங்கப்பட்ட ஆசனம் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கே வழங்க தீர்மானிக்கப்பட்டது. எனினும் குறித்த ஆசனம் யாழ்ப்பானத்தைச் சேர்ந்த சிவாஜிலிங்கத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ சார்பாக போட்டியிட்டு மன்னார் மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற சட்டத்தரணி பா.டெனிஸ்வரனின் ஆதரவாளர்கள் மத்தியில் பாரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே குறித்த ஆசனத்தை மன்னார் மாவட்டத்தில் டெலோ சார்பாக போட்டியிட்டு அதி கூடிய வாக்குகளை பெற்ற சட்டத்தரணி பா.டெனிஸ்வரனுக்கு வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனின் கவனத்திற்கு அந்த மக்கள் கொண்டு சென்றுள்ளனர்.

இதேவேளை குறித்த அமைச்சுப் பதவியை சட்டத்தரணி டெனிஸ்வரனுக்கு வழங்க வேண்டும் என கோரி தமது கோரிக்கை அடங்கிய மகஜரை மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கங்களின் சமாசம் மற்றும் மன்னார் எருக்கலம் பிட்டி முகைதீன் பெரிய யூம்ஆ பள்ளி வாசல் ஆகியவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை பீடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தென் இந்தியரை மணந்து தமிழக அரசியலில் குதிப்பேன் : நமீதா!!

nameetha

நடிகை நமீதா அரசியலில் ஈடுபட தயாராகி வருகிறார். ஏற்கனவே சமூக சேவை பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். இரத்த தானம், கண் தானத்தை ஊக்குவித்தார். தொண்டு நிறுவனங்கள் நிகழ்ச்சிகளில் இலவசமாக பங்கேற்று வருகிறார். சென்னையில் பெண்களுக்கு தனி கழிப்பிடங்கள் கட்டும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.

அடுத்த கட்டமாக அரசியலுக்கு வருகிறார். நமீதா குஜராத்தை சேர்ந்தவர். எனவே அங்கு நரேந்திர மோடியை சந்தித்து பாரதீய ஜனதாவில் சேர்வார் என கூறப்பட்டது. குஜராத் மாநில பாரதீய ஜனதா கட்சியில் பதவி பெற்று அரசியலில் தீவிரமாக ஈடுபடப்போவதாகவும் செய்திகள் பரவின. இதற்கு நமீதா பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது..

நான் அரசியலில் ஈடுபட முடிவு செய்து உள்ளேன். இந்த ஆர்வம் எனக்கு ஒரு வருடத்துக்கு முன்பே ஏற்பட்டது. எந்த கட்சியில் சேரலாம் என்று யோசித்து வருகிறேன். நான் பாரதீய ஜனதா கட்சியில் சேரப்போவதாக செய்திகள் வந்துள்ளன. அதில் உண்மை இல்லை. சென்னையில்தான் நான் தங்கி இருக்கிறேன். இங்கு குடியேறி பத்து வருடங்கள் ஆகிவிட்டது. என் பாஸ்போர்ட்டில் சென்னை முகவரிதான் இருக்கிறது.

எனவே இங்கிருந்து வேறு எங்கும் போகமாட்டேன். தமிழக அரசியல் கட்சியொன்றில் விரைவில் சேர்ந்து அரசியல் பணிகளில் ஈடுபடப்போகிறேன். தென் இந்தியாவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளேன் என்று நமீதா கூறினார்.

கழிவறையிலேயே உணவு, தூக்கம் : டெல்லி சிறுமியின் சோகக் கதை!!

girl

வேலைக்கார சிறுமியை வீட்டுக்குள் அடைத்து வைத்து சூடு போட்டும் கத்தியால் தாக்கியும் சித்ரவதை செய்து கொடுமைப்படுத்திய எஜமானி ஒருவரை டெல்லி பொலிசார் கைது செய்தனர்.

தெற்கு டெல்லியின் வசந்த்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு மாடி வீட்டின் பல்கனியில் இருந்து ஒரு சிறுமி உடல் முழுக்க தீ மற்றும் வெட்டுக்காயங்களுடன் தன்னை காப்பாற்றும்படி கதறி அழுதபடி கூச்சலிட்டாள்.

சிறுமியின் கூக்குரலை கேட்ட அக்கம் பக்கத்தினர் இதுதொடர்பாக மனித உரிமை ஆர்வலர்களுக்கும் பொலிசாருக்கும் தகவல் அளித்தனர்.

அவர்கள் விரைந்து வந்து உடல் முழுக்க காயங்களுடன் மிக மோசமான நிலையில் இருந்த அந்த பரிதாபத்திற்குரிய சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அந்த சிறுமி பொலிசாருக்கு அளித்த வாக்குமூலத்தில் என்னை வெளியே போக விடாமல் அடைத்து வைத்திருந்த முதலாளி அம்மா சற்று நேரம் கூட ஓய்வு தராமல் தொடர்ந்து என்னிடம் வேலை வாங்கி வந்தார்.

நான் செய்த வேலையில் எப்போதும் குறை கண்டுபிடிக்கும் அவர் சூடு போட்டும், பெல்ட், பிரம்பு போன்றவற்றால் அடித்தும் சித்ரவதை செய்வார். சில வேளைகளில் வெட்டுக்கத்தியால் தாக்கியும் கொடுமை படுத்துவதுண்டு என்று கூறினார்.

அவர் கூறுவது அனைத்தும் உண்மை என்பதை அந்த சிறுமியின் தலை மற்றும் உடலில் உள்ள வெட்டு காயங்கள் மற்றும் தீக்காயங்கள் உறுதிப்படுத்துகின்றன. அந்த சிறுமியை இந்த நிலைக்கு ஆளாக்கிய வந்தனா திர் என்ற 50 வயது பெண்ணை பொலிசார் கைது செய்தனர்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் அந்த சிறுமியை சந்தித்த டெல்லி அரசின் குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை அமைச்சர் கிரண் வாலியா சிறுமிக்கு நேர்ந்துள்ள இந்த கொடுமை கொடூரமானது காட்டுமிராண்டித்தனமானது என்று கூறியுள்ளார்.

தற்போது வைத்தியசாலையில் உடல்நலம் தேறிவரும் அந்த பெண் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

என்னை கத்தி, நாய் சங்கிலி, தோசைக்கல் போன்வற்றால் அடித்து கொடுமைப்படுத்திய எஜமானி தனது சிறுநீரை குடிக்கச் சொல்லியும் என்னை கொடுமைப்படுத்தினார். கழிவறையிலேயே சாப்பிட்டு அங்கேயே தூங்கியும் நான் அவதிப்பட்டேன் என்று அவர் கூறினார்.

பார்வை இழந்தவருக்கு பல் வழியே பார்வை திரும்பிய அற்புதம்!!

eye-operation

1998ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த விபத்தில் இயன் டிபெட்ஸ் (43) என்ற தொழிலாளியின் வலது கண்ணில் இரும்பு துண்டு பாய்ந்தது. அடிபட்ட கண்ணில் அடிக்கடி வலியுடன் நீர் வடியும் நிலையில் அவர் மிகவும் அவதிப்பட்டு வந்தார்.

நாளடைவில் அந்த கண்ணின் பார்வை முற்றாக பறிபோனது. இதனால் அவர் வேலையை விட்டு நிற்க வேண்டிய பரிதாப சூழ்நிலை ஏற்பட்டது. அவரது இடது கண்ணின் பார்வையும் ஓரிரு ஆண்டில் பறிபோனதால் உலகமே இருண்ட நிலையில் சூன்ய பிரதேசத்தில் வசிக்க வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.

புரட்சிகரமான ஓர் அறுவை சிகிச்சையின் மூலம் இயான் டிபெட்சுக்கு மீண்டும் கண்ணொளியை ஏற்படுத்த ஒரு கண் வைத்தியசாலையின் பேராசிரியர் கிரிஸ்டோபர் லியு முடிவு செய்தார். இதன்படி அவரது தாடையின் ஒரு பகுதியையும், முன் பல்வரிசையில் ஒன்றையும் வைத்தியர்கள் அகற்றினர்.

தாடையை தொட்டிலாக்கி அதில் பல்லை இணைத்து அவரது கன்னப் பகுதியில் பொருத்தி விட்டனர். அந்த பல்லில் அதிநவீன கண்டக்ட் லென்சை இணைத்து 3 மாதங்களுக்கு அப்படியே விடப்பட்டது. இதற்கிடைப்பட்ட காலத்தில் அந்த புதிய இணைப்பில் திசுக்களும் இரத்த நாளங்களும் வளரத் தொடங்கின.

அதை அப்படியே மொத்தமாக எடுத்து அவரது வலது கண்ணுக்குள் திணித்து மூளைக்கு செல்லும் நரம்பு மண்டலத்திற்கு இணைப்பு வழங்கப்பட்டது. இந்த நவீன அறுவை சிகிச்சை நடந்த சில வாரங்களில் கண்ணொளி திரும்பப் பெற்று பழைய மனிதராக இயான் டிபெட்ஸ் தற்போது நடமாட தொடங்கி விட்டார்.

தன்மானம் உள்ளவன் சினிமாவில் இருக்க முடியாது : ரஜினி ஆவேசம்!!

rajani

16 வயதினிலே பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியதாவது..

தயாரிப்பாளர் ராஜ்கண்ணு என்னை சந்தித்து 16 வயதினிலே படத்தை டிஜிட்டலில் மீண்டும் ரிலீஸ் செய்யப்போவதாக சொல்லி டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு அழைத்தார். அவரிடம் நான் இந்த படத்தில் கிடைக்கும் லாபம் உங்களுக்கு நேரடியாக வரும் என்றால் நான் நிச்சயம் கலந்து கொள்வேன் என்றேன்.

ராஜ்கண்ணு சினிமாவில் மரியாதைக்குரியவர். சுயமரியாதை உள்ளவர். கர்வம் கிடையாது. 16 வயதினிலே படம் எடுத்தபோது நன்றாக ஓடாது என்றனர். ஆனால் பெரிய வெற்றி பெற்றது. கமல் அப்போது பெரிய நடிகராக இருந்தார். படம் நன்றாக ஓடியது சந்தோஷமாக இருந்தது.

மனிதர்களுக்கு கஷ்டகாலம் வரும். கெட்ட காலம் வரும். ஆனால் அது நிரந்தரம் இல்லை. தன்மானம் உள்ளவன் சினிமாவில் இருக்க முடியாது.

தற்போது 16 வயதினிலே மீண்டும் ரிலீசாக உள்ளது. பழைய படங்கள் மீண்டும் ரிலீசுக்கு வருவது வரவேற்கத்தக்கது. இந்த படத்தையும் ஜெயிக்க வைக்க வேண்டும். இந்த படம் நன்றாக ஓட வேண்டும் என்று வேண்டுகிறேன் என்று ரஜினி பேசினார்.

ஸ்ரீகாந்துக்காக பாடகர் அவதாரம் எடுத்த சந்தானம்!!

santhanam

சந்தானம் நடிக்கும் படங்களில் வசனங்களுக்கிடையே அவ்வப்போது சில இடங்களில் அவர் பாடவும் செய்திருப்பார். இப்போது முதன்முறையாக ஒரு முழு பாடலை பாடியுள்ளார். ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகி வரும் நம்பியார் படத்திற்காகத்தான் இந்த பாடகர் அவதாரம் எடுத்துள்ளார்.

விஜய் அண்டனி இசையில் விவேகா எழுதியுள்ள வரிகளுக்கு பாடியிருக்கும் சந்தானம் குறித்து இப்படத்தின் இயக்குனர் கணேஷா கூறும்போது..

நம்பியார் படத்தில் ஸ்ரீகாந்துடன் இன்னொரு ஹீரோவாக சந்தானம் நடித்துள்ளார். அவரை ஏன் இன்னொரு ஹீரோ என்று சொல்கிறேன் என்பதை படம் வெளிவரும்போது நீங்களே தெரிந்துகொள்வீர்கள். காமெடிக்கு பஞ்சமில்லாத படமாக உருவாகியிருந்தாலும் முழுக்க முழுக்க காமெடியை மட்டுமே நம்பி பயணப்படும் படம் அல்ல.

இப்படத்தில் ஒரு முக்கியமான கட்டத்தில் வரும் பாடலை யாரை பாடவைத்தால் சரியாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் விஜய் அண்டனி சந்தானம் பாடினால் நன்றாக இருக்கும் என்றார்.

ஆனால் இதை சந்தானத்திடம் கூறினால் அவர் மறுத்துவிடுவார் என நினைத்தோம். ஆனால் அவர் மறுப்பு ஏதும் சொல்லாமல் சந்தோஷமாக பாட வந்துவிட்டார். பதினைந்து நிமிடங்களிலேயே இந்த பாடலை பாடி முடித்து கொடுத்துவிட்டார்.

ஆற அமர உக்காந்து சரக்கடி நண்பா நீ சரக்கடி என்று ஆரம்பிக்கும் இந்த பாடல் இடம்பெறும் காட்சியை மனதுக்கும் நிஜத்துக்கும் நடக்கும் ஒரு போர் என்று சொல்லலாம். இந்த காட்சியில் சந்தானம் இருக்கமாட்டார். ஆனால் சந்தானம் குரல் ஸ்ரீகாந்துக்கு கச்சிதமாக பொருந்தி வந்திருக்கிறது என்றார்.

ஸ்ரீகாந்த் கூறும்போது சினிமாவில் எனக்கு கிடைத்திருக்கும் மரியாதைக்குரிய நண்பர் சந்தானம். எனக்காக நடித்துக்கொடுப்பதோடு பாடியும் உதவியிருக்கிறார். நீங்க ஜெயிக்கணும் என்ற அவரோட நம்பிக்கையை நம்பியார் நிறைவேற்றும் என்று நம்புகிறேன். சந்தானத்துக்கு நிறைய நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்றார்.