நண்பனை கத்தியால் குத்திய 12 வயது மாணவன்!!

knif

12 வயது பள்ளி மாணவன் ஒருவன் தன்னுடன் படிக்கும் மாணவனை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மன் நாட்டில் உள்ள பள்ளி ஒன்றில் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போது இரண்டு மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து 12 வயது சிறுவன் கத்தியால் தன்னுடன் சண்டையிட்ட 13 வயது சிறுவனின் மார்பில் குத்தியுள்ளான்.
இதில் காயப்பட்ட சிறுவன் அவசர ஊர்தியின் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சையின் மூலம் குணமடைந்தான்.

ஆனால் தற்போது அவனது நிலமை மீண்டும் மோசமாகியுள்ளது.
இதுகுறித்து பொலிசார் சிறுவர்களின் மோதலுக்கான காரணங்கள் அறியப்படவில்லை. மேலும் பள்ளிகளில் மாணவர்களை விளையாட்டு மைதானத்திற்கு அனுப்பிவிட்டு ஆசிரியர்கள் கவனிப்பதில்லை என்று தெரிவித்துள்ளனர்.

தற்போது சிறுவர்களிடம் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்று பொலிசார் கூறியுள்ளனர்.

ஐதராபாத்தில் காஜல்அகர்வாலை காண திரண்ட ரசிகர்கள் : பொலிஸ் தடியடி!!

kajal

காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். 2008ல் சரோஜா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் தலைகாட்டி விட்டு போனார். அப்போது அவ்வளவு அறிமுகம் இல்லை. அதன்பிறகு சிரஞ்சீவி மகன் ராம்சரண் ஜோடியாக மகதீரா என்ற தெலுங்கு படத்தில் நடித்தார்.

அந்த ஒரே படம் ஆந்திராவில் முன்னணி நடிகை அந்தஸ்துக்கு உயர்த்தியது. தொடர்ந்து நிறைய ஹிட் படங்களில் நடித்தார். தமிழிலும் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி என நடித்து உயர்ந்துள்ளார். இரு மாநிலங்களிலும் ரசிகர்கள் வட்டாரம் பெருகி உள்ளது.

ஐதராபாத்தில் வணிக வளாக திறப்பு நிகழ்ச்சியொன்றுக்கு காஜல் அகர்வாலை அழைத்து இருந்தனர். போஸ்டர்கள் மூலம் அவர் வருகையை விளம்பரபடுத்தி இருந்ததால் வணிக வளாகத்தை சூற்றி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நின்றனர்.

காஜல் அகர்வால் வந்ததும் அவரை பார்க்க முண்டியடித்தார்கள். கூட்டத்தை பார்த்து காஜல் அகர்வாலுக்கும் வியப்பு ஏற்பட்டது. கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பொலிசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர்.

மனைவி, 1 வயது குழந்தையை பிரிந்து ஏங்கும் 97 வயது தந்தை!!(வீடியோ)

father

ஹரியானவைச் சேர்ந்த 97 வயது முதியவர் தனது மனைவி மற்றும் 1 வயது குழந்தையை பிரிந்து கவலைப்படுவது நெஞ்சை உருக்குகிறது.

உலகின் வயதான தந்தை என்று பெயர் பெற்றவர் ஹரியானவைச் சேர்ந்த ராம்ஜித் ராகவ்(97). இவரது மனைவி சகுந்தலா(50), இந்த தம்பதியினருக்கு பிகர்மஜித் என்ற ஒரு மகன் உள்ளான்.

இந்நிலையில் கடந்த ஆண்டு இவர்களுக்கு ரஜ்ஜித் என்ற மகன் பிறந்துள்ளான். ஒரு நாள் மூத்த மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற சகுந்தலா அவனை தொலைத்துவிட்டார்.

இதுவரை எங்கு தேடியும் மூத்த மகன் கிடைக்கவில்லை. இந்நிலையில் ராகவின் மனைவி தனது இரண்டாவது குழந்தையோடு வீட்டை விட்டு சென்றுவிட்டார். இதுகுறித்து ராகவ் கூறுகையில், இன்று எனது இரண்டாவது மகனின் பிறந்தநாள். ஆனால் இந்நாளில் அவன் என்னோடு இல்லை. இது எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது.

இரண்டாவது மகன் எனக்கு கடவுள் கொடுத்த பரிசு, எனது மனைவி மற்றும் மகன் இல்லாமல் தனிமையில் வாழ்கிறேன். இது எனக்கு சிறை வாழ்கை போன்று உள்ளது.

மேலும் எனது மனைவியை நான் மிகவும் விரும்புகிறேன் என்றும் அவளும் என்னை இன்றுவரை நேசித்துக்கொண்டுதான் இருப்பாள் என கூறியுள்ளார். ராகவ் அரசாங்கத்தின் ஒய்வூதியத்தில் வாழ்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் மீது இராணுவத்தினர் அத்துமீறியதை ஒப்புக்கொண்ட இராணுவத் தளபதி!!

Daya-Ratnayake

வெலிவேரியவில் குடிநீருக்காக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் படையினர் அத்துமீறி நடந்து கொண்டதாக,இராணுவ விசாரணையில் தெரியவந்துள்ளது என்று இலங்கை இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து,இராணுவ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க கூறியுள்ளார்.

இராணுவ விசாரணைக் குழுவின் அறிக்கையில், சட்டவரம்புகளுக்கு உட்பட்டே படையினர் நிலை நிறுத்தப்பட்டதாகவும் ஆனால்அவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் தமது கடமைகளுக்கு அப்பால் நடந்து கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு குறித்து நடக்கும் நீதிமன்ற மற்றும் காவல்துறை விசாரணைகளுக்கு இராணுவம் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்குப் பொறுப்பானவர்கள் மீது இராணுவ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதற்காக சான்றுகளின் சுருக்கம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இந்தப் பணிகள் முடிந்த பின்னர் இராணுவ நீதிமன்றம் நியமிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

விசாரணைகள் வெளிப்படையாகவும், சுதந்திரமாகவும் இடம்பெறுவதை உறுதி செய்து கொள்ளும் வகையில், வெலிவேரிய சம்பவத்தின் போது அங்கிருந்த படையினருக்குப் பொறுப்பாக இருந்த பிரிகேட் தளபதி ஒருவர் மற்றும் மூன்று மூத்த அதிகாரிகள் தற்போது அவர்களின் சொந்த படைப்பிரிவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளான படையினர் அல்லது அதிகாரிகளுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்படும். மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் காணப்பட்டால் யாராக இருந்தாலும் அதிகபட்ச தண்டனை நிச்சயம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

நடுரோட்டில் பெண்ணை சவுக்கால் அடித்த பொலிஸ்!!

sudan_woman

நடுரோட்டில் பெண் ஒருவரை பொலிஸ் அதிகாரி ஒருவர் சவுக்கால் அடிப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூடானை சேர்ந்த ஹலிமா என்ற பெண்ணே தண்டனைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தலைநகரான கார்டோமில் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஹலிமா முன்பின் தெரியாத நபரின் காரில் ஏறியதையடுத்து, நடுரோட்டில் வைத்து அனைவரின் முன்னிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவர் சவுக்கால் அடித்துள்ளார்.

அப்போது இனிமேல் காரிலேயே ஏறக்கூடாது என்று கூறிக்கொண்டே அடித்துள்ளார். வலிதாங்க முடியாமல் குறித்த பெண் கதறுகிறார்.

இதுகுறித்து கார்டோமின் கவர்னர் கூறுகையில் சவுக்கடி தண்டனை ஒழுங்காக நிறைவேற்றப்பட்டதா என்பது தெரியவில்லை.

ஆனால் ஷரியத் சட்டப்படி அப்பெண் தண்டிக்கப்பட வேண்டியவள் தான் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கைக்கு அருகில் பூமிக்கு அடியில் பாரிய வெடிப்பு : பூகம்பம் ஏற்படும் ஆபத்து!!

Earthquake

இலங்கைகுரிய பூமி மண்டலப் பகுதியில் சுமார் 500 முதல் 600 கிலோ மீற்றர் தூரத்தில் தெற்கு கடலில் பூமிக்கு அடியில் பாரிய வெடிப்பு ஏற்பட்டு வருவதாக சிரேஷ்ட பூகோளவியல் பேராசிரியர் சீ.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

புவியியல் காரணங்களினால் ஏற்பட்டு வரும் இந்த மாற்றம் காரணமாக இலங்கை பூகம்பங்களுக்கு பலியாகும் ஆபத்தை எதிர்நோக்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானின் அண்மையில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியை அடுத்து இந்த ஆபத்தான நிலைமை உருவாகியுள்ளது.

இலங்கையின் தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் புதிய புவி அடுக்கு உருவாகி வருவதால் பூமிக்குள் வெடிப்பு ஏற்பட்டு வருகிறது.

10 முதல் 12 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் இந்த வெடிப்பு ஏற்பட ஆரம்பித்ததுடன் தற்போது அது உள்ளுக்குள் பாரிய வெடிப்பாக மாறி வருகிறது என்றார்.

நடிகை அஞ்சலி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!!

Anjali Latest Hot Stills at Balupu Trailer Launch

நடிகை அஞ்சலி மீதான அவதூறு வழக்கில் அவர் நீதிமன்றத்தில் கண்டிப்பாக ஆஜராக வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எங்கேயும் எப்போதும், சேட்டை உள்பட பல தமிழ், தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை அஞ்சலி.
இவர் தனது சித்தி பாரதிதேவியும், இயக்குனர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்தி சொத்துக்களை அபகரிக்க முயல்வதாக கூறியிருந்தார்.

இந்த புகார் தன் மீது கூறப்பட்ட அவதூறு என்றும் பொய்யான புகாரை கூறிய நடிகை அஞ்சலி மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து தண்டிக்க வேண்டும் என கூறி இயக்குனர் களஞ்சியம் சார்பில் சைதாப்பேட்டை பெருநகர 17வது நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளர்.

இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி ராஜலட்சுமி முன் வந்தது. அப்போது நடிகை அஞ்சலி தரப்பு வக்கீல் முகுந்தன் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், நடிகை அஞ்சலி இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தார்.

அதற்கு இயக்குனர் களஞ்சியம் தரப்பு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு நகலை பெற நடிகை அஞ்சலி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்ட மாஜிஸ்திரேட்டு, வழக்கு விசாரணையை 29ம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நடிகர் சிரஞ்சீவி!!

siranjeevi

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் நடிகர் சிரஞ்சீவி தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தொலைநகல் மூலம் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பல்லம் ராஜு மற்றும் ரயில்துறை இணை அமைச்சர் சூர்ய பிரகாஷ் ரெட்டி, ஜவுளித்துறை அமைச்சர் கே.எஸ்.ராவ் ஆகியோரும் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பல்லம் ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது, தெலுங்கானாவை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது மிகுந்த வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பிரதமரை சந்தித்து ராஜினாமா செய்யும் முடிவை தெரிவித்துள்ளேன். ஆனால்,அவசரம் காட்ட வேண்டாம் என்று அவர் என்னிடம் கூறினார் என்றார்.

ஆந்திர அமைச்சர்கள் லதா சீனிவாசன், கண்டா சீனிவாசன், சாம்பசிவராவ் ஆகியோரும் பதவியை ராஜினாமா செய்ததோடு, காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் அருண்குமார், சாய் பிரதாப், அனந்த வெங்கடராம்ரெட்டி ஆகியோரு ராஜினாமா செய்துள்ளனர்.

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது, ஆந்திர மாநில பிரிவினைக்கு காங்கிரஸ் கட்சியே காரணம். பொதுமக்கள் சாலைகளில் கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர். எந்த அரசியல் கட்சியும் மாநில பிரிவினையை ஆதரிக்கவில்லை. ஆளும் கட்சியே இதற்கு காரணம் என்றார்.

தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதற்கு தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் வரவேற்றுள்ளார்.

முதல்வர் பதவிப்பிரமாணம் தொடர்பில் த.தே.கூ.வுக்குள் சர்ச்சையா?

sitharthan

வட மாகாண முதல்வர், யாரிடம் பதவிப் பிரமாணம் செய்து கொள்வது என்பது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் கருத்து வேறுபாடு நிலவியதாக வரும் செய்திகளில் உண்மை இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளிக்கிறார் கூட்டமைப்பின் சார்பாக வடமாகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் புளட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்.

வடமாகாண சபையின் உறுப்பினர்கள் இலங்கை ஜனாதிபதியின் முன்பாக சத்தியப் பிரமாணம் செய்வது தொடர்பாக கட்சிக்குள் இரு வேறு வகையான கருத்துக்கள் இருந்தாலும், வடமாகாண மக்களில் பெரும்பாலானோர் அரசுக்கு எதிராகவே வாக்களித்திருக்கிறார்கள் என்பதால் ஜனாதிபதியின் முன்பாக சத்தியப் பிரமாணம் செய்யக் கூடாது என்ற கருத்துக்கே ஆதரவு அதிகமாக இருப்பதாகவும் தாமும் அதனையே ஆதரிப்பதாகவும் சித்தார்த்தன் கூறியுள்ளார்.

ஆனாலும் சுமூகமான ஆரம்பத்தை நோக்கியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடு இருக்க வேண்டும் என்று சர்வதேச சமூகமும் ஏனைய பலரும் கேட்டிருப்பதாக இரா.சம்பந்தன் அவர்கள் கூறியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த விடயத்தை மக்கள் உணர்வுபூர்வமாகப் பார்ப்பதால், கட்சிகளும் அதனையே பிரதிபலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் தாங்கள் சிங்கள அரசிடம் சரணாகதி அடைந்து விட்டோம் என்ற கருத்து மக்கள் மனதில் ஏற்பட்டுவிடும் என்பதுதான் தமது கவலை என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாழில் பொலிஸ் மீது கத்தி வெட்டு : 7 பேர் கைது!!

police

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரைக் கத்தியால் வெட்டிய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த புதன்கிழமையன்று இரவு 9 மணியளவில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தின்போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கத்தி வெட்டுக்கு இலக்காகியிருப்பதை யாழ் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி சில்வா உறுதிப்படுத்தினார்.

சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 3 பொலிஸ்காரர்களில் ஒருவர் மீதே அடையாளம் தெரியாதவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கின்றனர். பொலிசார் மீது நடத்தப்பட்ட இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டு பிடிப்பதற்காக நடத்தப்பட்ட தேடுதலின்போது, சந்தேகத்தின்பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டிருப்பதை யாழ் பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.

உண்மையான குற்றவாளிகளைக் கண்டு பிடிப்பதற்காகப் பொலிசார் நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
நேற்று குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுவிஸில் இருந்து நாடு கடத்தப்படும் இரண்டு இலங்கை தமிழர்கள்!!

Switzerland

சுவிட்சர்லாந்தில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட இரண்டு இலங்கை தமிழர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் விசாரணை நடத்தி இவர்களின் புகலிடக் கோரிக்கையானது 2011ம் ஆண்டு ரத்துசெய்யப்பட்டது.

மேலும் இவர்கள் தங்களது சொந்த நாட்டுக்கு செல்லுமாறு சுவிஸ் அரசாங்கம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இவர்களில் ஒருவர் நாங்கள் எங்கள் நாட்டிற்கு சென்றால் எங்கள் உயிருக்கு ஆபத்து என்றும் எனவே எங்களை திருப்பி அனுப்ப வேண்டாம் எனவும் சுவிஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்த கோரிக்கையானது அகதிகள் ஜக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையருக்கு எடுத்து செல்லப்பட்டது.

செல்வம் அடைக்கலநாதன் பதவியை இராஜினாமா செய்ய உத்தேசம்!!

selvam-adaikalanathan

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய உத்தேசித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது..

நடைபெற்ற வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக வன்னி மாவட்டத்திற்கு அமைச்சுப் பதவி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) சார்பாக வன்னி மாவட்டத்திற்கு வழங்கப்படவிருந்த அமைச்சுப் பதவியை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு வழங்க கட்சி தீர்மானித்துள்ளது.

கட்சியின் தீர்மானத்திற்கு நான் கட்டுப்பட்டவனாக இருந்தாலும் வன்னி மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய நிலை எனக்கு உள்ளது. 1998 ஆம் ஆண்டு தொடக்கம் வன்னி மக்கள் எமது கட்சியுடன் இணைந்து செயற்பட்டு வந்தனர். 2013 ஆம் ஆண்டு வரை மக்கள் எமது கட்சிக்கு பெரும் ஆதரவு வழங்கி வந்துள்ளனர்.

ஆனால் அந்த மக்களின் எதிர்பார்ப்பான அமைச்சுப்பதவி வன்னி மாவட்டத்திற்கு கிடைக்காத நிலையில் அந்த மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். எனவே இந்த மக்களுக்கு பெறுப்புக்கூற வேண்டிய தார்மிக பொறுப்பு என்னிடமுள்ளது.

எனவே தமிழீழ விடுதலை இயக்க (டெலோ) தலைவர் பதவியை இராஜினாமா செய்ய உத்தேசித்துள்ளேன். இது தொடர்பில் சில தினங்களில் எனது இராஜினாமா கடிதத்தை கட்சியின் செயலாளர் நாயகத்திடம் கையளிக்கவுள்ளேன். என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

திருமண நாளை கொண்டாட சென்ற பெண் கணவன் கண் முன்னே பலி!!

para

தாய்லாந்தில் திருமண நாளை கணவருடன் கொண்டாட சென்றிருந்த இந்திய பெண் ஒருவர் சாகச விளையாட்டில் ஈடுபட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தியாவை சேர்ந்த 36 வயது பெண் ஷில்பி அகர்வால். இவர் தனது கணவருடன் திருமண நாளை கொண்டாடுவதற்காக தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அப்போது அங்குள்ள பட்டாயா நகர கடற்கரையில் பராசெய்லிங் விளையாட எண்ணிய இந்த ஜோடி அதற்காக ஒரு ஸ்பீட்போட்டை வாடகைக்கு எடுத்தனர்.

முதலில் ஷில்பி பரசூட்டில் பறக்க அந்த பரசூட்டை விரைவாக சென்ற படகு கயிறு மூலம் இழுத்து சென்றது. ஆனால் ஒரு கட்டத்தில் பரசூட்டிலிருந்து ஷில்பி கடலில் விழுந்து விட்டார்.

கடலில் தத்தளித்த ஷில்பியை மீட்க பின்புறமாக வேகமாக சென்ற படகின் அடியில் உள்ள இறக்கையில் சிக்கி படுகாயமடைந்து அவர் பலியானார்.

இதுதொடர்பாக படகை ஓட்டியவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது, இதற்காக இவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெண்டுல்கரை போன்று 40 வயது வரை விளையாடுவேன் : விராத் கோலி!!

Virat-Kohli

சச்சின் டெண்டுல்கரை போன்று நானும் இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடுவேன் என இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராத் கோலி தெரிவித்துள்ளார்.

அவரது வயதை எட்டும் போது நானும் தொடர்ந்து உடல்தகுதியுடன் இருப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. இத்தனை வயதிலும் அவர் உடல்தகுதியுடன் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்து கொண்ட போதே கோலி இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்..

டெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் தற்போதுவரை செய்துள்ள சாதனைகளில் 60 முதல் 70 சதவீதம் வரை என்னால் செய்ய முடிந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

சாதனை படைப்பதற்கு குறிப்பிட்ட வயது என்று எதுவும் கிடையாது. சச்சின் டெண்டுல்கரை பாருங்கள். 16 வயதில் ஆரம்பித்து 40 வயதிலும் இன்னும் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் தான் எப்போதும் எனக்கு ரோல் மொடல். அவரது கடின உழைப்பு இளைய தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கக்கூடியதாகும்.

இந்தியா வென்ற இரண்டு உலக கோப்பை (2007-ம் ஆண்டு 20 ஓவர், 2011-ம் ஆண்டு ஒரு நாள் போட்டி) அணிகளில் இடம்பிடித்திருந்தது நான் செய்த அதிர்ஷ்டம். குறிப்பாக டெண்டுல்கர் பங்கேற்ற 6வது உலக கோப்பையில் நானும் அங்கம் வகித்தது பெருமைக்குரிய விஷயமாகும்.

நான் இதுவரை எதிர்கொண்ட பந்து வீச்சாளர்களில் தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்டெயின், மோனே மோகல் ஆகியோர் மிகவும் அபாயகரமானவர்கள். இந்தியாவை தவிர்த்து எனக்கு பிடித்த வெளிநாட்டு கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் தான். உண்மையிலேயே அதிரடி காட்டி, ரசிகர்களை குதூகலப்படுத்தக்கூடிய ஒரு வீரர் கெய்ல்.

அடுத்து வரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் கடினமானது என்பதில் சந்தேகமில்லை. காயம் காரணமாக அந்த அணியில் தலைவர் மைக்கல் கிளாக் இல்லாவிட்டாலும் அவர்கள் பலம் வாய்ந்த அணி தான்.

களத்தில் அவுஸ்ரேலிய வீரர்கள் வார்த்தைகளால் சீண்டினால் முதலில் பேட் மூலம் பதிலடி கொடுப்பேன். அதன் பிறகு என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம். அவுஸ்திரேலிய தொடரில் நிறைய ஓட்டங்கள் குவிப்பேன் அந்த தொடரையும் வெல்ல முடியும் என்று நம்புகிறேன் என கோலி கூறினார்.

இலங்கை வரும் சல்மான் குர்ஷித் விக்னேஸ்வரனையும் சந்திப்பார்!!

Salman_Khurshid

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் வட மாகாண முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள விக்னேஸ்வரனையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கைக்கான அதிகாரபூர்வ பயணத்தை வரும் 7ம் திகதி திங்கட்கிழமை மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினரை கொழும்பில் சந்தித்து பேசவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் அவர் 8ம் திகதி யாழ்ப்பாணத்துக்கு செல்வதோடு இவரது இந்த விஜயத்தின் முக்கிய சந்திப்பாக வட மாகாண சபையின் முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள சி.வி.விக்கினேஸ்வரனுடனும் கலந்துரையாடவுள்ளார் என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை எதிர்வரும் 7ம் திகதி விக்னேஸ்வரன் வடமாகாண முதலமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஷேவாக், கம்பீருக்கு கங்குலி அட்வைஸ்!!

Sourav Gangulyஇந்திய அணியின் மூத்த வீரர்களான ஷேவாக், கம்பீர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் அணித்தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

மோசமான போம் காரணமாக மூத்த வீரர்கள் ஷேவாக், கம்பீர் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் தொடர்ந்து அணியில் புறக்கணிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் தீவிர பயிற்சிக்கு பின்னர் யுவராஜ் சிங் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து கங்குலி அளித்துள்ள பேட்டியில், இந்தியாதான் தற்போதைய நிலையில் நல்லதொரு அணியாக விளங்குகிறது.

மேலும் யுவராஜ் சிங் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளதால் துடுப்பாட்ட வரிசையில் 4வது இடம் பலமடைந்துள்ளது.
அவுஸ்திரேலிய அணி இந்தியாவில் வந்து விளையாடும்போது நிச்சயம் யுவராஜ் சிங் மிரட்டலாக இருப்பார்.

மீண்டும் அணியில் இடம் கிடைக்க யுவராஜ்சிங் மேற்கொண்ட முயற்சிகள், கடுமையான உழைப்பு பாராட்டுக்குரியது.
கிட்டத்தட்ட 6 வார காலம், பிரான்ஸில் பயிற்சி எடுத்துள்ளார். இது ஆச்சரியப்படுத்துகிறது. மீண்டும் நல்ல பார்முக்கு அவர் திரும்பியுள்ளார். இந்திய அணிக்கு அவர் நல்ல பலம் சேர்ப்பார்.

ஆனால் மீண்டும் அணிக்குத் திரும்பப் போராடும் ஷேவாக்கும், கம்பீர் அதற்கான முயற்சிகளை முழுமையாக எடுப்பது போலத் தெரியவில்லை. தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை அவர்கள் வீணடிக்கிறாரக்ள். இந்திய ஏ அணியில் இடம் கிடைத்த நிலையில் அதை அவர்கள் சரிவரப் பயன்படுத்தவில்லை இது துரதிர்ஷ்டவசமானது.

ஷேவாக்கும் கம்பீரும் சிறப்பாக ஆடி தங்களது திறமைகளை நிரூபிக்க வேண்டும். அப்போது தான் அணிக்கு திரும்ப முடியும் என்று தெரிவித்துள்ளார்.