வெள்ளை வேனில் கடத்தப்பட்ட இரு பிள்ளைகளின் தாய் மீது பாலியல் வல்லுறவு!!

white van abducts

வெள்ளை வேனில் பெண் ஒருவரை கடத்திச் சென்று விடுதிக்குள் வைத்து பாலியல் வல்லுறவு புரிந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்ய சிலாபம் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஆரச்சிகட்டு – போகஹவெடிய பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த 28ம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பெண் நேற்றைய தினமே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிகிறார்.

சிலாபம் நகருக்கு சென்று கொண்டிருந்த போது தன்னை பின் தொடர்ந்த நபர் வெள்ளை வேனில் பலாத்காரமாக கடத்தி பண்டாரவத்த பகுதி விடுதி ஒன்றில் வைத்து வல்லுறவு புரிந்ததாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் காட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களுக்கு அணுப்பாதுகாப்பு!!

Commonwealt

பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களுக்கு விசேட அணுப் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.
இலங்கை அணுசக்தி அதிகாரசபை இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க சர்வதேச அணுசக்தி முகவர் நிறுவனத்தின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.

இராணுவ, பொலிஸ் பாதுகாப்பிற்கு மேலதிகமாக அணுசக்தி பாதுகாப்பும் வழங்கப்பட உள்ளது.

அணுக்கதிர்வீச்சுக்கள் மூலம் உலகத் தலைவர்களுக்கு ஏதேனும் ஆபத்துக்களை விளைவிக்க முடியும் என இலங்கை அணுசக்கதி அதிகாரசபையின் தலைவர் டொக்டர் ரஞ்சித் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இவ்வாறான தாக்குதல்களை தடுக்க ஏற்கனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உலகத் தலைவர்கள் பங்கெற்கும் ஹோட்டல்கள், செல்லும் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை உள்ளடக்கிய வகையில் அணுப்பாதுகாப்பு திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையில் முதலிடம் பெற்ற தனுராஜ் ஜனாதிபதியால் கௌரவிப்பு..!

தரம் ஐந்து புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையில் தமிழ் மொழி மூலம் அகில இலங்கை மட்­டத்தில் அதிகூடிய 194 புள்­ளி­களைப் பெற்ற ஏழாலை சைவ சன்­மார்க்க வித்­தி­யா­லய மாண­வ­னான பரமானந்தம் தனுராஜ் நேற்று ஜனா­தி­பதி மாளி­கையில் ஜனா­தி­ப­தி­யினால் பாராட்டிக் கௌர­விக்­கப்­பட்­டுள்ளார்.

ஜனா­தி­ப­தியின் அழைப்­புக்கு அமைய இவர் நேற்று முன்­தினம் புதன்கிழமை யாழ்ப்­பா­ணத்தில் இருந்து பெற்­றோ­ருடன் கொழும்­புக்கு சென்­றுள்ளார்.

யாழ்ப்­பா­ணத்தின் வலி­காமம் கல்வி வல­யத்­திற்­குட்­பட்ட உடுவில் கல்விக் கோட்­டத்தை சேர்ந்த ­பா­ட­சாலை இது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, நாட்டின் பல பாகங்களிலும் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற 19 மாணவர்கள் ஜனாதிபதி மக்ந்த ராஜபக்சவினால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களுக்கு 1லட்சம் ரூபாவுக்குரிய மக்கள் வங்கி காசோலைகளும், சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையுடன் மடிக்கணினிகளும் வழங்கப்பட்டன.

sc1 sc2

வவுனியா – மதவாச்சி வீதியில் விபத்து ஒருவர் பலி..!

ACCIDENT_logoவவுனியா – மதவாச்சி ஏ-9 வீதியில் 167வது கிலோ மீற்றர் நாவற்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

லொறி ஒன்றுடன் கொள்கலன் மோதி இன்று அதிகாலை 2.05 அளவில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் கொள்கலன் சாரதி மற்றும் உதவியாளர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சாரதி உயிரிழந்துள்ளார்.

சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐ.தே.க.வில் புதிய தலைவர் சபை உருவாகிறது: கரு தலைவராகிறார்?

ranilஐக்கிய தேசியக் கட்சியை வழிநடத்திச் செல்ல தலைவர் சபை ஒன்றை அமைப்பது தொடர்பில் இன்று (04) மாலை விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய பிக்குகள் முன்னணி மற்றும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ளனர்.

5 அல்லது 9 பேர் அடங்கிய தலைவர் சபை ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என ஐக்கிய பிக்குகள் முன்னணி ஆலோசனை முன்வைத்துள்ளது.

ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ மற்றும் கரு ஜயசூரிய ஆகியோர் அந்த தலைவர் சபையில் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் சபையின் தலைவராக கரு ஜயசூரிய அறிவிக்கப்பட வேண்டும் என அந்த யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் தீர்மானங்கள் எடுக்கும் அதிகாரம் தலைவர் சபைக்கு அளிக்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் குண்டசாலை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக திஸ்ஸ அத்தநாயக்க அளித்த இராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று மாலை ஏற்றுக் கொண்டுள்ளார்.

அதன்படி குண்டசாலை தொகுதிக்கு புதிய ஒருவர் அமைப்பாளராக நியமிக்கப்படுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

இலங்கை கடவுச்சீட்டில் இனி சர்வதேச தரம் வாய்ந்த புகைப்படம்..!

passportஅடுத்த வருடத்தில் இருந்து சர்வதேச தரம் வாய்ந்த புகைப்படத் தன்மையுடன் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும் என இலங்கை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

அதன்படி, அடுத்த வருடம் முதல் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தால் அங்கீகாரம் பெற்ற நிலையங்களில் மாத்திரமே கடவுச்சீட்டுக்கு புகைப்படம் எடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புதிய புகைப்பட நிலையங்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதென அவர் கூறினார்.

ஒக்டோபர் 15ம் திகதி வரை இதற்கான விண்ணப்பங்களைப் பெற முடியும் எனவும் இது குறித்து 0115 731028 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து மேலதிக தகவல் அறிய முடியுமெனவும் சூலானந்த பெரேரா தெரிவித்தார்.

இராணுவ வீரராக ஆசைப்பட்ட டோனி!!

dhoni-army1-300

இராணுவ வீரராக ஆசைப்பட்டேன் என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் டோனி.

இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவரான டோனி ராஞ்சியில் உள்ள இராணுவத்தின் பரசூட் ரெஜிமென்ட்டில் ஒருநாள் செலவிட்டார். அப்போது இராணுவ வீரர்களுடன் பேசி மகிழ்ந்தார்.

அப்போது நான் சிறுவயதில் இருந்தே இராணுவத்தில் சேர விரும்பினேன். இராணுவ வீரர்களை பார்க்கையில் நானும் ஒருநாள் அப்படி ஆவேன் என்று நினைத்தேன் என தெரிவித்தார்.

நீங்கள் எப்படி கூலாக இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, செய்தியாளர் கூட்டத்திற்கு முந்தைய நாள் குளிர்சாதன பெட்டிக்குள் உட்கார்ந்து கொள்வேன் அதனால் தான் கூலாக இருக்கிறேன் என்றார்.

மேலும் இராணுவ சீருடை ஸ்பெஷலானது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இராணுவ வீரர்களின் குடும்பத்துடன் நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்ததுடன் வீரர்களின் குழந்தைகளுக்கு ஓட்டோகிராப் போட்டும் கொடுத்தார்.

2015ம் ஆண்டு உலக கிண்ணத்தை இந்தியா வெல்லும் : சச்சின் நம்பிக்கை!!

sachin

2015ம் ஆண்டுல் நடக்கவுள்ள உலக கிண்ணத் தொடரில் இந்திய அணி மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்லும் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

வரும் 2015ம் ஆண்டு அவுஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் இணைந்து உலக கிண்ண கிரிக்கெட் தொடரை நடத்துகின்றன.
மொத்தம் 44 நாட்கள் நடக்கும் இத்தொடரில் அரையிறுதி, இறுதிச்சுற்று உட்பட மொத்தம் 49 போட்டிகள் 14 மைதானங்களில் நடக்க உள்ளது.

இதில் இந்திய அணி, பி பிரிவில் பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா, சிம்பாவே, அயர்லாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் தகுதிச் சுற்றில் தெரிவாகும் ஒரு அணியுடன் இடம் பிடித்துள்ளது.

கடந்த 2011ல் நடந்த உலக கிண்ண தொடரில் டோனி தலைமையிலான இந்திய அணி சம்பியன் பட்டம் வென்று சாதித்தது. இதேபோன்று 2015ல் நடக்கும் போட்டியிலும் இந்திய அணி பட்டத்தை வெல்லும் என நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் 2015ல் இந்திய அணி கிண்ணத்தை வெல்லும். இது எனது விருப்பம் மட்டுமல்ல கோடான கோடி ரசிகர்களின் விருப்பம். இந்திய அணியில் இடம் பெற்றுள்ள நிறைய வீரர்கள் ஏற்கனவே அவுஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவம் பெற்றவர்கள்.

எனவே அங்குள்ள ஆடுகளத்தின் தன்மை, தட்ப வெப்ப நிலைக்கேற்ப விளையாடுவார்கள். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய அணி நியூசிலாந்து பயணம் செய்ய இருப்பது, உலக கிண்ணத் தொடருக்கான சிறந்த பயிற்சியாக அமையும்.

இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகளிலும் திறமையான வீரர்கள் இருப்பதால் ஆசிய அணிகளுக்கு பட்டத்தை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

வயிற்றில் பாம்பை சுமக்கும் அதிசய பெண்!!

snake

வழமையாக பெண்களின் வயிற்றில் குழந்தை வளர்வதை தான் பார்த்திருக்கிறோம். ஆனால் தென் ஆப்பிரிக்காவில் ஒரு பெண்ணின் வயிற்றில் பாம்பு வளர்கிறது என்றால் அதிசயமாக இருக்கிறதா?

ஆம், தென் ஆப்பிரிக்காவில் கிழக்கு ஜொஹன்னஸ் பேர்க்கின் வொஸ்லூரஸ் இடத்தைச் சேர்ந்த மரியா சொடெட்ஸி (49) என்ற பெண்ணின் வயிற்றில் பாம்பு வளர்வதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அடிக்கடி நோயினால் பாதிக்கப்பட்ட இந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், நோய்க்கான காரணம் வயிற்றில் இருக்கும் பாம்பாக இருக்கலாம் என்றும் இதனை அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றும் கூறியுள்ளனர்.

அறுவை சிகிச்சைக்காக பெருமளவு பணம் தேவைப்படும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.வசதியற்ற குடும்பத்தைச் சேர்ந்த இவரால் மருத்துவர்களிடம் சிகிச்சை மேற்கொள்ள முடியததால் மதகுரு ஒருவரிடம் நாட்டு வைத்தியத்தை மேற்கொண்டு வருகிறார்.

இது குறித்து மரியா கூறுகையில்இ இந்த சிகிச்சையால் எனது பற்கள் அனைத்தும் இழந்து விட்டேன். எனது காதலனும் என்னை விட்டுச் சென்றுவிட்டார். எப்படியோ மதகுரு இன்றி இந்த பாம்பை நீக்க முடியாது என்று தாம் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

தெலுங்கிலும் பட்டையைக் கிளப்பும் அஜித்!!

ajithஅஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி, ராணா, கிஷோர் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள படம் ஆரம்பம்.
விஷ்ணுவர்தன் இயக்கி இருக்கும் இந்தப் படத்திற்கு யுவன் இசையமைத்து இருக்கிறார். நீண்ட நாட்கள் கழித்து ஏ.எம்.ரத்னம் இப்படத்தினைத் தயாரித்துள்ளார்.

படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என அறிவித்து விட்டனர். பாடல்களும் வெளியாகி பட்டையைக் கிளப்புகின்றன.
இந்தப் படத்தைத் தெலுங்கிலும் டப் செய்து வெளியிட இருக்கின்றனர். ஏற்கெனவே பில்லா, மங்காத்தா ஆகிய இரண்டு படங்களும் அங்கு வசூலை வாரிக் குவித்ததால் இந்த ஏற்பாடாம்.

தெலுங்கில் ஆட்டம் ஆரம்பம் எனப் பெயர் வைத்துள்ளனர். தமிழிலும் இந்த பெயரை வைக்கத்தான் முதலில் நினைத்தார்களாம். ஆனால் என்ன நினைத்தார்களோ ஆரம்பம் என்று மட்டுமே வைத்துவிட்டனர்.

மோசமான நாடுகளின் கடவுச்சீட்டுகளில் இலங்கை கடவுச்சீட்டும் உள்ளடக்கம்!!

passport

வெளிநாடுகளுக்கு பயணிக்க விரும்புவோருக்கு உதவுவதில் மிக மோசமானதாக கருதப்படும் 10 நாட்டுகளின் கடவுச்சீட்டுகளில் இலங்கை கடவுச்சீட்டும் ஒன்றென வகைப்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பயண விதிகளின்போது ஆப்கானிஸ்தான், சோமாலியா, ஈரான், பாகிஸ்த்தான், எறிட்ரியா, பாலஸ்தீனம், நேபாளம், சூடான், கொசொவோ மற்றும் லெபனான் ஆகிய நாட்டு மக்கள் எதிர்கொள்வது போன்ற வரையறைகளை இலங்கையர்கள் எதிர்கொள்வதாக 2013 ஹேன்லி அன்ட் பாட்னர்ஸ் விஸா வரையறைகள் அமைப்பு அறிவித்துள்ளது.

நாடுகளின் பிரஜைகள் வேறு நாடுகளுக்கு பயணிப்பதற்கான சுதந்திரத்தின் அடிப்படையில் இந்த அமைப்பு தயாரித்த சுட்டி 219 நாடுகளை வரிசைப் படுத்தியுள்ளது.

பின்லாந்து, சுவீடன், ஐக்கிய இராச்சியங்கள் என்பன 173புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பெற இலங்கை 32 புள்ளிகளை மட்டும் பெற்றுள்ளது.

தமது நாட்டுக்கு வருவோரை கட்டுப்படுத்துவதில் விஸா வரையறைகளை ஒரு பிரதான கருவியாக அரசாங்கங்கள் பயன்படுத்தி வருகின்றன. விஸா தேவைகள் நாடுகளுக்கிடையே உறவின் தன்மையை புலப்படுத்துவனவாக உள்ளது.

துரதிஷ்டவசமாக சர்வதேச சமுதாயத்தில் இலங்கை பற்றிய கணிப்பு உயர்நிலையில் இல்லை என்பதை இது காட்டுகிறது.

10ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த 52 வயது தலைமை ஆசிரியர்!!

abuse

இந்திய, சத்தீஸ்கர் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி தலைமை ஆசிரயர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் கொன்டகாவ்ன் மாவட்டத்தில் உள்ள கனோரா கிராமத்தில் உயர் நிலைப் பள்ளி ஒன்று உள்ளது.
இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ராதேஷ்யாம் நேத்தம்(52).

அவர் தனது பள்ளியில் படிக்கும் 16 வயதான 10ம் வகுப்பு மாணவி ஒருவரை கடந்த ஏப்ரல் மாதம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பள்ளி வளாகத்தில் நடந்த இந்த கொடூரம் குறித்து தனது பெற்றோரிடம் மாணவி தெரிவித்துள்ளார்.

அவர்கள் உள்ளூர் பஞ்சாயத்தை அணுகி நியாயம் கேட்டபோது பஞ்சாயத்தோ தலைமை ஆசிரியருக்கு அபராதம் விதித்துவிட்டு இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இந்நிலையில் இதுகுறித்து அறிந்த மாவட்ட நிர்வாகம் நேத்தம் மீது வழக்குப் பதிவு செய்து தற்போது கைது செய்துள்ளது. சம்பவம் நடந்து 6 மாதங்கள் கழித்து தான் நேத்தம் கைது செய்யப்பட்டுள்ளார்

வேலைக்கு செல்லும் பெண்களுக்கான சில அழகுக் குறிப்புகள்!!

 

beautiful_face

தற்போது வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதே சமயம், அவர்கள் தங்கள் அழகை சரியாக பராமரிக்க முடியாத நிலையிலும் உள்ளார்கள். ஏனெனில் அந்த அளவில் வேலைப்பளுவானது அனைத்து துறையிலும் அதிகரித்துவிட்டது.

அதனால் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தால் உடல் சோர்வால் சாப்பிட்டு தூங்க மட்டும் தான் நேரம் உள்ளது. சிலருக்கு அந்த நேரம் கூட கிடைக்காது. ஆகவே அத்தகைய பெண்களுக்கு ஒருசில எளிமையான அழகுக் குறிப்புகள்..

பொலிவான கண்கள்..

கண்கள் நன்கு புத்துணர்ச்சியுடனும் கருவளையமின்றியும் இருக்க, தினமும் காலையில் எழுந்ததும், உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி, கண்களின் மேல் வைத்து 10 நிமிடம் ஊற வைத்து பின் குளிக்க செல்ல வேண்டும்.

முகத்தில் வளரும் முடி..

சில பெண்களுக்கு முகத்தில் உள்ள முடியானது நன்கு தெரியும். இதனை மறைக்க வேண்டுமெனில், ஃபௌண்டேஷன் போடலாம். இல்லையெனில், வாரத்திற்கு ஒரு முறை எலுமிச்சையை முகத்தில் தேய்த்து வந்தால் முடி தெரியாது.

முகப்பரு..

சரும பிரச்சனைகளிலேயே முகப்பரு பிரச்சனையால் தான் பெரும்பாலானோர் அவஸ்தைப்படுகின்றனர். இத்தகைய பிரச்சனையில் இருந்து விடுபட பழங்களால் செய்யப்படும் ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒரு முறை போட வேண்டும்.

சரும சுருக்கம்..

பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் சரும சுருக்கம். இந்த சரும சுருக்கம் ஏற்பட்டால், அது முதுமைத் தோற்றத்தை வெளிப்படுத்தும். இதனை தற்காலிகமாக மறைக்க கன்சீலர் பயன்படுத்தலாம்.

ஆனால் இயற்கையாக மறைக்க வேண்டுமெனில் தயிரை முகத்திற்கு தடவி நன்கு உலர விட்டு இளஞ்சூடான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ச்சியாக வாராவாரம் ஒரு முறை செய்து வந்தால் நல்ல பலன் தெரியும்.

கூந்தல் பராமரிப்பு..

கூந்தல் உதிர்தலைத் தடுத்து அதன் அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமெனில் பியர் அல்லது ஷம்பு கொண்டு கூந்தலை அலச வேண்டும். வேண்டுமெனில்,வைன், வோட்கா போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

நெயில் பொலிஷ்..

நகங்கள் அழகாக இருப்பதற்கு நெயில் பொலிஷ் போடுகிறோம். ஆனால் அந்த நெயில் பொலிஷ் விரைவில் போய்விடுவதால், அது நகங்களின் அழகைக் கெடுக்கிறது. ஆகவே அது நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமெனில், பால் கொண்டு நகங்களை மசாஜ் செய்து, பின் நெயில் பொலிஷ் போட வேண்டும்.

முழங்கை..

முழங்கை வறட்சியுடன் இருந்தால் அதனை போக்க தினமும் ஒலிவ் ஒயில் கொண்டு மசாஜ் செய்தால், வறட்சி நீங்குவதோடு, முழங்கையும் மென்மையாக இருக்கும்.

அழகான உதடுகள்..

உதடுகளின் நிறம் அழகாக அதே சமயம் இயற்கையான தோற்றத்தில் காணப்பட வேண்டுமெனில் ப்ரௌன், செர்ரி அல்லது நியூட் கலர் லிப்ஸ்டிக் போட வேண்டும். இல்லாவிட்டால் தினமும் உதட்டை தேங்காய் அல்லது ஒலிவ் ஒயில் கொண்டு மசாஜ் செய்தால், உதடுகள் லிப்ஸ்டிக் போடாமலேயே அழகாக இருக்கும்.

மிகவும் விலை உயர்ந்த கைப்பேசியை அறிமுகப்படுத்துகின்றது Vertu!!

Vertu_Android_Rumor

தற்போது ஸ்மார்ட் கைப்பேசிகள் அனைவரையும் கவர்ந்துள்ள நிலையில் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் இறங்கியுள்ளன.

இவற்றுள் ஒரு நிறுவனமான Vertu ஆனது தனது இரண்டாவது தயாரிப்பில் உருவான விலையுயர்ந்த அன்ரோயிட் கைப்பேசியை அறிமுகப்படுத்தவுள்ளது.

சுமார் 6 600 டொலர்கள் பெறுமதியான இக்கைப்பேசியானது 4.3 அங்குல அளவு 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையைக் கொண்டுள்ளது.

மேலும் Android 4.2 Jelly Bean இயங்குதளத்தினைக் கொண்ட இக்கைப்பேசியில் Dual core Snapdragon S4 Processor காணப்படுகின்றது.

இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, மற்றும் 1.3 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன. இதன் சேமிப்பு நினைவகமாக 32GB கொள்ளளவு காணப்படுகின்றது.

வவுனியாவை பூர்வீகமாக கொண்ட பெண் கனடிய இளம் அழகியாக தெரிவு!!(படங்கள்)

canada

அபிசேகா லொயிட்சன் என்ற யுவதியே இவ்வாறு இளம் கனேடிய அழகியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஒன்டாரியோவில் நடைபெற்ற போட்டியில் குறித்த தமிழ் யுவதி அழகிப் பட்டம் வென்றுள்ளார்.

கர்நாடக சங்கீதம் உள்ளிட்ட பல்வேறு திறமைகளைக் கொண்டவராக அபிசேகா திகழ்கின்றார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைப் பெற்றோருக்கு கனடாவில் பிறந்தவரே அபிசேகா எனத் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவில் அமைந்துள்ள தமது தாயின் பாடசாலைக்கு கடந்த ஆண்டு சென்றதாகக் குறிப்பிடப்படுகிறது. சந்தர்ப்பம் கிட்டினால் மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்புவதாக அபிசேகா தெரிவித்துள்ளார்.

ஒன்றாரியோ இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போதே அபிஸ்ஷேக்கா லோயட்சன் டீன் கனடாவாக தெரிவுசெய்யப்பட்டார்.

சிறு வயதிலிருந்து அபிஸ்ஷேக்கா குரல் பயிற்சி மற்றும் வயலின் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார். அத்துடன் நீச்சல் பயிற்சியாளராகவும் கூடைப்பந்தாட்ட வீராங்கனையாகவும் கரப்பந்தாட்ட வீராங்கனையாகவும் அவர் திகழ்கிறார்

கடந்த வருடம் வவுனியாவுக்கு சென்றிருந்த அவர் அவருடைய தாய் பயின்ற கற்குளம் தமிழ் கலவன் பாடசாலைக்கு சென்றார். அங்கு அவர் மாணவர்களுக்கு விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் மற்றும் அடிப்படை கணணி ஆகியவற்றை கற்பித்து கொடுத்தார்.

இந்நிலையில் அந்த சந்தர்ப்பம் மீண்டும் கிடைத்தால் நிச்சயமாக மாணவர்களுக்கு கற்பிப்பேன் என்று அபிஸ்ஷேக்கா தெரிவித்துள்ளார்.

1 2 3 4 5 6 7

புவி வெப்பமடைவதற்கு மனித செயற்பாடுகளே காரணம் : ஐ.நா விஞ்ஞானிகள்!!

globe

தற்போது புவி வெப்பமடைந்து வருவதற்கு மனிதச் செயற்பாடுகள் காரணம் என்பது உறுதியாகத் தெரிவதாக ஐ.நா விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மாறிவரும் உலகப் பருவநிலை தொடர்பான சர்வதேச நிபுணர் குழு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் புவி வெப்பமடைந்து வருவதற்கான முக்கியக் காரணம் மனிதச் செயற்பாடுகள்தான் என்பது விஞ்ஞானிகளுக்கு 95% உறுதியாகத் தெரிவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நூற்றாண்டின் கடைசியில் உலகக் கடல் மட்டம் தற்போது உள்ள அளவிலிருந்து 82 செண்டிமீட்டர்கள் உயரலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

புவி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக சட்டரீதியான உடன்பாடு ஒன்றை எட்டுவதற்கு அரசாங்கங்கள் முயன்றுவரும் நிலையில் விஞ்ஞானிகளின் இந்த அறிக்கை மிகவும் அவசியமானது என ஐ.நா செயலாளர் பான் கீ மூன் இந்த நிபுணர் குழுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

உலகப் பருவநிலை தொடர்பான ஐ.நா உச்சிமாநாடு ஒன்றை அடுத்த வருடத்தில் தான் நடத்தப்போவதாக அவர் கூறியுள்ளார்.

புவியின் சராசரி வெப்பநிலை இரண்டு பாகை செல்ஷியஸுக்கும் கூடுதலாக அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கங்களை சம்மதிக்க வைப்பதென்பது இந்த மாநாட்டின் இலட்சியமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.