ஜெயலலிதா கொடுத்த யானை விஜயகாந்த் தொகுதியில் பிச்சை எடுக்கும் பரிதாபம்!!

ele

ஸ்ரீரங்கம் ரங்கநாத சாமி கோவிலுக்கு முதல்வர் ஜெயலலிதா தானமாக கொடுத்த சிமித்ரா என்கிற சுமி என்ற யானை தெருத் தெருவாக பிச்சை எடுப்பதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு இந்த யானைய தானமாக கொடுத்தார் ஜெயலலிதா. இந்நிலையில் யானைக்கு திடீரென காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக அதை பெங்களூருக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் யானை பெங்களூருக்குப் போகவில்லை. மாறாக சென்னைக்குக் கொண்டு வந்துள்ளனர் சிலர். அங்கு அதைத் தெருத் தெருவாக பிச்சை எடுக்க வைத்துள்ளனர்.

பொலிசார் யானையைப் பறிமுதல் செய்த பாகன் மீது வழக்கும் போட்டுள்ளனர். விஜயகாந்த்தின் முன்னாள் தொகுதியில் தற்போது இந்த யானை கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் முகாமிட்டுள்ளதாம்.

அங்கு கடைவீதிகளிலும், தெருத் தெருவாகவும் இதை வைத்து பிச்சை எடுக்கிறார்களாம். ஜெயலலிதா தானமாக கொடுத்த யானையை இப்படி தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் முன்னாள் தொகுதியில் பிச்சை எடுக்க வைத்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்து ஏ அணியுடனான தொடரை கைப்பற்றிய இலங்கை அணி!!

New-Zealand-v-Sri-Lanka

இலங்கை மற்றும் நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையிலான உத்தியோகபூர்வமற்ற மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை ஏ அணி கைப்பற்றியுள்ளது.

இலங்கை ஏ அணி இரண்டிற்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் நியூசிலாந்து ஏ அணி 174 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இலங்கை ஏ அணி 178 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இந்த வெற்றியுன் மூலம் தொடரை கைப்பற்றியது.

 

கெடுபிடி காட்டும் நஸ்ரியா!!

nazriya

தமிழில் வெளிவந்த நேரம் படத்தில் அறிமுகமானவர் நஸ்ரியா நஸீம். அவருக்கும் நேரம் நன்றாக அமையவே தனுஷ், ஆர்யா, கார்த்தி என தமிழின் பெரும்பாலான இளம் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து விட்டார்.

இதனால் புதிதாகக் கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம், ஹீரோ போலவே தனக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக இருந்தால் மட்டுமே ஓ.கே. சொல்கிறாராம்.

அத்துடன் ராஜா ராணி படமும் ஹிட்டாகி இருப்பதால் தற்போது நடித்து வரும் படங்களிலும் தனக்கு கூடுதல் காட்சிகள் வைக்கும்படி இயக்குநரிடம் அன்பு வேண்டுகோள் வைக்கிறாராம்.

இந்த நிலையில் தான் அறிமுகமான நேரம் படத்தில் நடித்த நிவினுடன் மலையாளப் படத்தில் ஜோடி சேரப் போகிறார். இந்தப் படத்தில் தன்னைச் சுற்றியே கதை நகர்வதால் உடனே ஓ.கே. சொல்லிவிட்டாராம் நஸ்ரியா.

மூன்று தங்கப்பதக்கங்களை வெற்றிபெற்ற வட மாகாணம்!!

sports

அகில இலங்கை பாடசாலைகள் மட்ட மெய்வல்லுநர் போட்டிகளில் முதல் நாளான நேற்று வட மாகாணம் மூன்று பதக்கங்களை பெற்றுள்ளது.

கொழும்பு சுகததாஸ அரங்கில் நடைபெறும் இந்தப் போட்டிகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளன. முதல் நாளான நேற்று ஏழு இறுதிப் போட்டிகள் நடைபெற்றதுடன் இதில் 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாண வீராங்கனைகள் பிரகாசித்தனர்.

போட்டியில் 2.60 மீற்றர் உயரத்தை பதிவுசெய்து யாழ்ப்பாணம் மகாஜனா கல்லூரியின் டி.தன்சிகா தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார். இதேபோட்டியில் 2.50 மீற்றர் உயரத்தை பதிவுசெய்த அளவெட்டி அருனோதயா கல்லூரியின் கே.டிலக்சனா வெண்கலப்பதக்கத்தை வெற்றிபெற்றார்.

21 வயதுக்குட்பட்ட ஆடவருக்கான குண்டெரிதல் போட்டியில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷனரி கல்லூரியின் ஆர்.நிமலேந்திரா தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். போட்டியில் அவர் 13.60 மீற்றரை பதிவுசெய்தார்.

இங்கிலாந்து, பின்லாந்து கடவுச்சீட்டு இருந்தால் உலகத்தையே சுற்றிப் பார்க்கலாம்!!

Passports

பின்லாந்து, இங்கிலாந்து நாட்டின் கடவுச்சீட்டு மட்டும் இருந்தால் இந்த உலகத்தையே சுற்றி பார்க்கலாம்.

ஹென்லி அண்ட் பார்ட்ர்னர்ஸ் என்ற நிறுவனம் 2013ம் ஆண்டுக்கான விசா கட்டுப்பாட்டு குறியீட்டெண் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதவாது எந்நாடு விசா இல்லாமல் மக்களை சுதந்திரமாக மற்ற நாடுகளுக்கு செல்ல அனுமதி வழங்குகிறது என்பதை பொறுத்து இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த வரிசையில் பின்லாந்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

அதே போல சுவீடன், இங்கிலாந்து ஆகிய நாடுகளும் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன. இந்த நாடுகளின் கடவுச்சீட்டு வைத்திருந்தால் உலக அளவில் 173 நாடுகளுக்கு விசா இல்லாமல் போகலாம்.

அமெரிக்க கடவுச்சீட்டு இந்த வரிசையில் 2வது இடத்தில் உள்ளது. அவர்கள் 172 நாடுகள் வரை விசா இல்லாமல் போக முடியுமாம்.
மிக மோசமான பட்டியலில் பாகிஸ்தான், சோமாலியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள் இடம்பெற்றுள்ளன.

பாகிஸ்தான் கடவுச்சீட்டு வைத்துள்ள ஒருவர் உலக நாடுகளில் 32 நாடுகளுக்கு மட்டும்தான் விசா இல்லாமல் போக முடியும்.
ஆப்கானிஸ்தான் நாட்டு கடவுச்சீட்டு வைத்திருந்தால் 28 நாடுகளுக்கு மட்டும்தான் விசா இல்லாமல் போக முடியும்.

அதேசமயம் இந்திய பாஸ்போர்ட்கள் மூலம் 52 நாடுகளுக்கு செல்ல முடியும்.

ராமேஸ்வரத்தில் இரண்டு இலங்கை அகதிகள் கைது!!

arrest1

ராமேஸ்வரத்தில் சந்தேகத்திற்கிடமளிக்கும் வகையில் சுற்றித் திரிந்த இரண்டு இலங்கை அகதிகளை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.

இதுகுறித்து பொலிஸ் தரப்பில் கூறும் போது மதுரை மாவட்டத்தின் மேலுர் அகதிகள் முகாமில் இருந்து அவர்கள் தப்பமுயன்ற போது அவர்கள் பிடிபட்டுள்ளனர்.

விசாரணையின் போது முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதனால் அவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுதீப்புக்கு ரெகமண்ட் செய்த ரஜினி!!

sutheep

நான் ஈ படத்தில் வில்லனாக நடித்த சுதீப்பின் நடிப்பை ரஜினி பாராட்டியது பழைய விஷயம். அந்தப் பாராட்டின் மூலம் சுதீப்புக்கு ஹீரோவாக வாய்ப்பு கிடைத்திருப்பது லேட்டஸ்ட் செய்தி.

செளந்தர்யா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் கோச்சடையான். இந்தப் படத்தின் மேற்பார்வைப் பணிகளை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கவனிக்கிறார்.

இந்த சமயத்தில் நான் ஈ படம் பார்த்த ரஜினி கோச்சடையான் குழுவினரிடம் ஏகத்துக்கும் சுதீப்பைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். இந்தப் பையன் நல்லா நடிக்குறான். யூஸ் பண்ணிக்கோ என கே.எஸ்.ரவிக்குமாரிடம் சொல்லியிருக்கிறார் ரஜினி.

தற்போது கோச்சடையான் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதால், தன்னுடைய அடுத்த பட வேலைகளில் இறங்கியிருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். ரஜினி சொல்லியதால் முதல்கட்டமாக சுதீப்பை ஹீரோவாக புக் செய்துவிட்டார்.

தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் இந்தப் படம் உருவாக இருக்கிறது. வரலாறு அஜித் போல இந்தப் படத்தில் சுதீப்புக்கு அன்ட்டி ஹீரோ வேடமாம்.

லல்லுவுக்கு 5 ஆண்டுகள் சிறை : பறிபோனது பதவி!!

Lalu Prasad Yadav

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட லல்லுவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் 25 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து ராஞ்சி சி.பி.ஐ. நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பளித்துள்ளது.

பீகார் மாநிலத்தில் 950 கோடி ரூபா மாட்டுத்தீவன ஊழல் வழக்கு கடந்த 17 வருடங்களாக 53 பிரிவுகளாக நடக்கிறது.
இதில் அந்த மாநில முன்னாள் முதல்மந்திரியும், ராஷ்டிரீய ஜனதாதள கட்சி தலைவரும், முன்னாள் ரெயில்வே மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் சைபாசா மாவட்ட கருவூலத்தில் மோசடியாக 37 கோடியே 70 லட்சம் ரூபாய் பெற்ற வழக்கில் ராஞ்சி சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் கடந்த 30ம் திகதி அன்று தீர்ப்பு வழங்கியது.

இந்த வழக்கில் லாலு பிரசாத் மற்றும் இன்னொரு முன்னாள் முதல்மந்திரி ஜெகன்நாத் மிஸ்ரா, ஜெகதீஷ் சர்மா எம்.பி. உள்பட 42 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி பிரவாஸ் குமார்சிங் தீர்ப்பு அளித்தார்.

வவுனியாவில் பொலிஸார் நடத்திய சிறுவர் தினம்!!(படங்கள்)

வவுனியா கள்ளிக்குளம் கிராம அலுவலர் பிரிவுக்கட்பட்ட பாடசாலைகளை ஒன்றிணைத்து பொலிசாரால் சிறுவர் தின நிகழ்வுகள் நடத்தப்பட்டது.

கள்ளிக்குளம் கிராம அலுவலர் பிரிவுக்கட்பட்ட கருங்காலிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் சிறுவர்கள் அழைத்து வரப்பட்டு கௌரிவிக்கப்பட்டதுடன் அவர்களது கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் மடுகந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கள்ளிக் குளம் பொலிஸ் அதிகாரி ஜீவா, கிராம அலுவலர் பெனடிற் மற்றும் கள்ளிக்குளம் கிராம அலுவலர் பிரிவுக்கட்பட்ட பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர் என பலரும் கலந்து கொண்டனர்.

policevavuniya vavuniya1 vavuniya2

வவுனியாவில் பாடசாலை வகுப்பறை விசமிகளால் எரிக்கப்பட்டது..!

வவுனியா மூன்று முறிப்பு அ.த.க. பாடசாலையில் அமைந்திருந்த வகுப்பறையொன்று விசமிகளால் எரியூட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஆரம்ப பிரிவு மாணவாகளின் உளநல மேம்பாட்டுக்காக பாடசாலை மாணவர்களின் பெற்றோரால் அமைக்கப்பட்டிருந்த இவ் வகுப்பறையே இனந்தெரியாதோரால் நேற்று இரவு எரியூட்டப்பட்டுள்ளது.

வவுனியாவின் தமிழ் மக்கள் வாழும் எல்லை கிராமத்தில் அமைந்துள்ள இப் பாடசாலையின் வகுப்பறை கொட்டகை எரியூட்டப்பட்டமை கல்விச்சமூகத்தில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை இன்று காலை பாடசாலைக்கு வருகை தந்த வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன் எரியூட்டப்பட்ட வகுப்பறையை பார்வையிட்டிருந்தார்.

அத்துடன் வவுனியா பொலிஸார் இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

1

2

தலையின்றி முண்டத்துடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி!!(படங்கள்)

ஆடு ஒன்று இரண்டு குட்டிகளை ஈன்று அதில் ஒன்று தலையில்லாமல் பிறந்துள்ள அதிசய சம்பவமொன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி கர்பலா விக்டரி மைதானத்திற்கு முன்பாகவுள்ள டீன் வீதி ஹைறாத் லேனில் அமைந்துள்ள ஏ.எம்.றிபாஸ் என்பவரின் ஆட்டுப் பண்ணையில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இன்று அதில் ஒரு குட்டி குறைகள் ஏதும் இல்லாமலும் மற்றைய குட்டி தலையில்லாமல் இறந்தே பிறந்துள்ளது. இரண்டு ஆட்டுக்குட்டிகளில் ஒன்று இறந்துள்ளதுடன் மற்றது எவ்வித குறைகளுமில்லாமல் நடமாடுகிறது.

2 3 4

மட்டக்களப்பில் கடனை திரும்ப செலுத்த முடியாத பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரும் அதிகாரிகள் : அதிர்ச்சித் தகவல்!!

batti

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயதொழில் செய்ய கடனை வழங்கும் நிறுவனங்களின் அதிகாரிகள் கடனை திருப்பிச் செலுத்த முடியாத பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகளை கொடுப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஒன்றியத்தின் மாதாந்த கூட்டத்தி்ல் பெண்கள் அமைப்பு இந்த பிரச்சினைகளை முன்வைத்ததாக அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தின் தலைவர் வீ.கமலதாஸ் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் இரவு 10 மணி கடந்த பிறகும் கடன்பெற்றவர்களின் வீடுகளுக்கு செல்வதாக அவர் கூறினார்.

இந்த நிலைமையில் கடனை பெற்ற பெண்கள் இரவு நேரத்தில் வீடுகளில் தங்கியிருக்க அச்சப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
போருக்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச மற்றும் தனியார் துறைகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

அதேவேளை அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை மத்திய வங்கிக்கு அறிவித்துள்ளதாகவும் மேலதிக தகவல்களை வெளியிட ஒரு வார கால அவகாசம் தேவை எனவும் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் பீ.எம்.ஏ.எஸ்.சார்ள்ஸ் வெளிநாட்டு ஊடகம் ஒன்றிடம் கூறியுள்ளார்.

மதப் பிரசாரத்தில் ஈடுபட்டவர்களை பிடித்து மரத்தில் கட்டி வைத்த கிராமவாசிகள்!!

la

அத்துருகிரிய கல்பொத்த பிரதேசத்தில் மத பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த குழுவொன்றை கிராம வாசிகள் சுற்றிவளைத்து அவர்களை மரத்தில் கட்டிவைத்த பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட குழுவில் பெண்ணொருவர் உட்பட மூன்று இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் அத்துருகிரிய சதாசிபுர வீடமைப்புத் தொகுதியில் வசித்து வருபவர்கள் என தெரியவந்துள்ளது.

அத்துருகிரிய பிரதேசத்தில் உள்ள வீடுகளுக்குள் சென்று மத பிரசாரத்தில் ஈடுபட்ட இவர்கள் புத்த பகவானுக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ள துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துள்ளதுடன் தமது மதத்தில் இணைந்து கொள்ளுமாறு கேட்டுள்ளனர்.

நோய்கள் குணமாகும் எனவும் பணம் கிடைக்கும் எனவும் கூறியுள்ள இந்த நபர்கள் பௌத்த மதத்தை கைவிட்டு தமது மதத்தில் இணைந்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து பிரதேசவாசிகள் இணைந்து அந்த குழுவினரை பிடித்து மரத்தில் கட்டிவைத்துள்ளனர். பின்னர் அருகில் உள்ள விகாரையின் பிக்கு ஒருவரை அழைத்து அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கிறிஸ்தவ மதப் பிரிவொன்றை சேர்ந்த இந்த குழுவினர் இன்று கடுவலை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் கூறினர்.

இலங்கையின் நாகபாம்புப் பெண்ணுக்கு 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 3 மாத சிறைத்தண்டனை, 100 ரூபா அபராதம்!!

nirosha_wimalaratne

நாகபாம்பு பெண்ணென்று அழைக்கப்படும் நிரோஷா விமலரத்ன என்ற பெண்ணுக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவானால் இந்த தண்டனை இன்று வியாழக்கிழமை வழங்கப்பட்டுள்ளது. குறித்த பெண் குற்றங்களை ஒப்புக்கொண்டதையடுத்து சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 100 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

உலகில் மோசமான பயண கட்டுப்பாடுகளை கொண்ட நாடுகள் வரிசையில் இலங்கை!!

sl

உலகில் மிகவும் மோசமான பயண கட்டுப்பாடுகளை கொண்ட நாடுகள் வரிசையில் இலங்கை 88 வது இடத்தில் உள்ளது.
ஹென்லி அன்ட் பார்ட்னர் நிறுவனம் 2013 ஆம் ஆண்டுக்கான விசா கட்டுப்பாட்டு குறியீட்டெண் என்ற இந்த தரப்படுத்தலை மேற்கொண்டுள்ளது.

இலங்கை தவிர ஆப்கானிஸ்தான், சூடான், ஈராக் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் உலகில் மோசமான பயண கட்டுப்பாடுகளை கொண்ட நாடுகள் வரிசையில் இடம்பெற்றுள்ளன.

ஹென்லி அன்ட் பார்ட்னர் நிறுவனம் தமது குடிமக்கள் சுதந்திரமான பயணம் செய்யக் கூடிய உலக நாடுகள் வரிசையை அடிப்படையாக கொண்டு இந்த தரப்படுத்தலை மேற்கொண்டுள்ளது.

வெளிநாட்டு பிரஜைகளின் நடமாட்டத்தையும் தமது எல்லைகளை கடப்பதற்கும் ஒரு முக்கியமான கருவியாக அரசாங்கங்கள் விசா கட்டுப்பாடுகளை பயன்படுத்தி வருகின்றன என அந்த நிறுவனம் வெளிநாட்டு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளன.

வெளிநாட்டவர்கள் தாம் விரும்பும் பகுதிக்குள் நுழைய பெரும்பாலான நாடுகள் விசாக்களை நிலையான தேவையாக கருதுகின்றன. விசா தேவைகள் கூட தனிப்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்துடனான உறவுகள், தகுதிகளுக்கு குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளன.

வவுனியாவில் இடம்பெற்ற காந்தி ஜெயந்தி நிகழ்வு!!(படங்கள்)

வவுனியாவில் காந்தி ஜெயந்தி நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது இதில் வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கமும் வவுனியா நகரசபையும் இணைந்து காந்தி ஜெயந்தி நிகழ்வை வவுனியா நகர மண்டபத்தில் அனுஸ்டித்தன.

வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்க தலைவரின் ஏற்பாட்டில் தமிழ் மணி அகளங்கன் தலைமையில் நகரசபை செயலாளர் சத்தியசீலன் அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நகரசபை கணக்காளர் உட்பட ஊழியர்களும் வரியிறுப்பாளர் சங்க பிரதிநிதிகளான செயலாளர் ரோய் ஜெயக்குமார், மாணிக்கம் ஜெகன், சிவபாலன், கிறிஸ்டோபர், ஞானபிரகாசம், அமுதன், சிவம், வசந்தன் ராஜ், மோகன் சர்மா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

முதலில் மகாத்மா காந்தியின் படத்துக்கு நகரசபை செயலாளர், தமிழ்மணி அகளங்கன், ரோய் ஜெயக்குமார், சிவபாலன் ஆகியோர் மாலை அணிவித்தும், ஏனையோர் பூப்போட்டும் வணக்கம் செலுத்தியனர்.

பின்னர் தமிழ் மணி அகளங்கன் அவர்கள் மகாத்மா காந்தியை பற்றி நினைவு உரையாற்றினார். நகரசபை செயாளரும் சிறப்பு உரையாற்றினார். வரியிறுப்பாளர் சங்க தலைவர் சந்திரகுமாரின் நன்றி உரையுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

1 2 3 4 5 7 8