யாழ். ஆலயத்தில் ஒருகோடி பெறுமதியான பொருட்கள் கொள்ளை!!(படங்கள்)

யாழ். பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் சுமார் 150 பவுண் தங்க நகைகள் மற்றும் சுவாமிக்கு சாத்தியிருந்த வெள்ளி அங்கி என்பன நேற்று இரவு கொள்ளையிடப்பட்டுள்ளன. கொள்ளையிடப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நேற்று நள்ளிரவு குறித்த ஆலயத்தின் மடப்பள்ளிக் கூரை வழியாக உள்நுழைந்த திருடர்கள் அந்த அறையின் கதவுகளை உடைத்து ஆலயத்தினுள் நுழைந்துள்ளனர்.

பின்னர் ஆலய களஞ்சியசாலை கதவுகளை உடைத்து உட்சென்று அங்கிருந்த குளிர்பானங்களை பருகியதுடன் பிஸ்கட் என்பவற்றையும் சாப்பிட்டுள்ளனர்.

பின்னர் அங்கிருந்த மண்வெட்டி, அலவாங்கு போன்ற ஆயுதங்களை எடுத்துச் சென்று ஆலய மூலஸ்தானத்திற்குச் செல்லும் கதவை உடைத்து எழுந்தருளி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டகத்தை உடைத்து அதற்குள்ளிருந்த 150 பவுண் வரையான நகைகளைத் திருடியுள்ளனர்.

குறித்த பெட்டகத்திற்கு எட்டு பூட்டுக்கள் போடப்பட்டிருந்தது. அத்தனை பூட்டுக்களையும் உடைத்தே நகைகளைத் திருடியுள்ளனர். திருவிழாக் காலங்களில் சுவாமிக்கு சாத்துகின்ற அத்தனை நகைகளும் திருடப்பட்டுள்ளன.

அத்துடன் ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத நாராயணப் பெருமானுக்கு சாத்தப்பட்டிருந்த மூன்று வெள்ளி அங்கிகளும் திருடப்பட்டுள்ளன. மேலும் ஆலயத்திலிருந்த உண்டியல்களும் உடைக்கப்பட்டு அதற்குள்ளிருந்த பணமும் திருடப்பட்டுள்ளது.

திருடர்கள் மிக நீண்ட நேரம் ஆலயத்திற்குள் தங்கி நின்றிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. இதேவேளை மாமிசம் சேர்த்து தயாரிக்கப்பட்ட கொத்துறொட்டிப் பார்சல் ஒன்று பையில் இருந்து பிரிக்கப்படாத நிலையில் ஆலயத்தினுள் காணப்படுகின்றது.

மேலும் திருடர்கள் புகைப்பிடித்து பின்னர் எறிந்த பீடியின் அடிப் பகுதிகள் எழுந்தருளி மண்டபம் உள்ளிட்ட மண்டபங்களில் காணப்படுகின்றன. ஆலயத்தின் உள் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த ஏணி மணிக்கோபுரத்தினுள் வைக்கப்பட்டிருக்கின்றது.

இதனால் நகைகளைத் திருடிய பின்னர் திருடர்கள் மணிக்கோபுர வழியாக ஏறித் தப்பிச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

இன்று காலை வழமையான பூசைக்காக ஆலயத்திற்கு வந்த அர்ச்சகர் ஆலயத்தின் உள் கதவுகள் உடைக்கப்பட்டிருக்கின்றமையையும் நகைகள் திருடப்பட்டிருக்கின்றமையும் கண்டு ஆலய பரிபாலன சபைக்கு அறிவித்ததைத் தொடர்ந்து இது தொடர்பாக வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

ஆலயத்திற்கு வந்த பொலிஸார் ஆலயத்திற்குள் எவரும் செல்லவேண்டாமென்று தெரிவித்ததோடு தொடர்ந்து அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, கடந்த 1987 ஆம் ஆண்டும் இந்த ஆலயத்தில் இதேபோன்றதொரு பாரிய திருட்டு இடம்பெற்றது.

இதன்போது பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளும் பொருட்களும் திருடப்பட்டிருந்தமை என்பது குறிப்பிடத்தக்கது.

1 4 2 3

வினோத பிரச்னையால் சிக்கித் தவிக்கும் இங்கிலாந்து பெண்!!

lady

இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் நூதன பிரச்னையில் சிக்கி அவதிப்படுகிறார். இங்கிலாந்தை சேர்ந்த 27 வயது பெண் சார்லோட் ஸ்டார்லிங்.

இந்த பெண் தான் Dermatillomania என்ற நூதன பிரச்னையில் சிக்கி தவிக்கிறார். அதாவது உடம்பில் இருக்கும் முடியையெல்லாம் விரல்களாலேயே பிடுங்கி எறிவதுதான்.

தலை முடியைத் தவிர உடம்பில் வேறு எந்த இடத்திலும் முடியை வளர விடவே மாட்டாராம். முடியைப் பார்த்து விட்டால் போதும் உடனே பிடுங்கி விடுகிறார் சில நேரங்களில் கட்டிங் பிளேயரை வைத்தும் கூட பிடுங்கி விடுவாராம். குறிப்பாக நகங்களை கூர்மையாக வைத்துள்ளாராம்.

அவரால் இதை அடக்க முடியவில்லையாம் கட்டுப்படுத்த முடியவில்லையாம். இதனால் உடம்பெல்லாம் ரத்தக் காயத்துடன் காட்சி தருகிறார். இந்த கெட்ட பழக்கத்தால் தற்போது இவருக்கு உயிர் பயமும் வந்து விட்டதாம்.

தான் எங்கே வெறி பிடித்தவளாக மாறி விடுவோமோ என்று அஞ்சுகிறாராம். இதனால் இவரது காதலர் எப்போதும் கூடவே இருக்கிறாராம். இதுகுறித்து சார்லோட் கூறுகையில் இது போதைப் பழக்கம் போல இதற்கு நான் அடிமையாகி விட்டேன்.

மிகவும் கஷ்டமாக இருக்கிறது. முடியைப் பிடுங்க என்னவெல்லாமோ செய்கிறேன். உயிருக்கு ஆபத்தாகி விடுமோ என பயமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தல, தளபதிக்கு சவால் விட்டு களமிறங்கும் வடிவேலு!!

vadivelu

இரண்டரை ஆண்டுகளுக்குப்பிறகு வடிவேலு நாயகனாக நடித்து வரும் படம் ஜெகஜாலபுஜபல தெனாலிராமன். அவர் இரண்டு வேடங்களில் நடித்து வரும் இப்படம் ஆரம்பத்தில் சில பிரச்னைகளில் தடுமாறினாலும், அதன்பிறகு நடந்த சில சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப்பிறகு சீராக படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

சென்னை ஏவிஎம்மில் பிரமாண்ட செட் போட்டு படமாக்கியவர்கள் இப்போது குற்றாலத்தில் முகாமிட்டுள்ளனர். அங்கு அருவியில் குளிப்பது போன்ற சில காட்சிகள் படமாகி வருகிறதாம். ஆக ஆரம்பத்தில் சூடாக இருந்த வடிவேலு இப்போது குளுகுளுவென்று குளிர்ச்சியாக காணப்படுகிறாராம்.

அவர் ஒத்துழைப்பு பிரமாதமாக இருப்பதால் விரைவில் படப்பிடிப்பு முடிந்து விடும் என்கிறார்கள். அதனால் வருகிற பொங்கல் தினத்தில் தெனாலிராமனை ரசிகர்களுக்கு விருந்து படைக்கவும் தயாராகி விட்டார்களாம்.

சமீபத்தில் கூட நாகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வடிவேலும், படத்தை பொங்கலுக்கு வெளியிட போவதாக அறிவித்தார். இதே நாளில் அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா, கார்த்தியின் பிரியாணி ஆகிய படங்கள் வெளியாகயிருப்பது தெரிந்தும் தில்லாக களமிறங்குகிறாராம் வைகைப்புயல்.

மீண்டும் தமிழுக்கு வரும் ஸ்ருதி : கலக்கத்தில் கோடம்பாக்க நாயகிகள்!!

sruthi-hasan

ஏழாம் அறிவு, 3 ஆகிய படங்களுக்கு பின், ஸ்ருதி ஹாசனுக்கு, தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் ஆந்திரா பக்கம் போன அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தனர் தெலுங்கு இரசிகர்கள்.

இதனால் தமிழில் நடிப்பதை தவிர்த்தார். பின் பாலிவுட்டிலும், அவருக்கு கிராக்கி ஏற்பட்டது. இதனால், தமிழில் நடிக்க அழைத்தாலும் கால்ஷீட் காரணத்தை காட்டி, மறுத்து வந்தார்.

இப்போது ஒரு தெலுங்கு படத்திலும் மூன்று ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல தமிழ் இயக்குனர் ஒருவர் தன்னிடம் வித்தியாசமான கதை இருப்பதாக கூறி அதில் நடிக்க முடியுமா என ஸ்ருதியை அணுகினாராம்.

கதை ரொம்பவே வித்தியாசமாக இருந்ததால் கண்டிப்பாக நடிக்கிறேன் என உறுதி அளித்து இயக்குனரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினாராம் ஸ்ருதி. இந்தநிலையில் அவரின் அடுத்த ரவுண்டு குறித்த செய்தி கோடம்பாக்கத்தின் முன்னணி நடிகைகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

2050ல் மக்கள் தொகையில் உலகின் பெரிய நாடு இந்தியா!!

population-of-India

2050ம் ஆண்டுக்குள் 160 கோடி மக்கள் தொகையுடன் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என பிரான்ஸ் நாட்டின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

அதே சமயம் 130 கோடி மக்கள் தொகையுடன் சீனா இரண்டாம் இடத்துக்கு தள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ள அந்த அறிக்கை அப்போது உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 970 கோடியாக உயரும் எனவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

கடந்த 200 ஆண்டுகளில் உலக மக்கள்தொகை 7 மடங்கு அதிகரித்து தற்போது 710 கோடியாக உள்ளது. இதில் 130 கோடி பேர் சீனாவிலும் ,120 கோடி பேர் இந்தியாவிலும் உள்ளனர்.

அதாவது ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியா மற்றும் சீனாவில் பிறந்தவர்கள் என்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

வவுனியாவை வந்தடைந்தது பொதுநலவாய வாகனத் தொடரணி!!(படங்கள்)

இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை வரவேற்கும் நோக்கில் எம்.ரி.வி ஊடக வலையமைப்பு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் ஊடக அமைப்பு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள வாகனத் தொடரணி இரண்டாம் நாளான இன்று வவுனியா நகரை வந்தடைந்துள்ளது.

யாழ். பருத்தித்துறையில் இருந்து நேற்று வைபவ ரீதியாக ஆரம்பமான இந்த வாகனத் தொடரணி நேற்று மாலை கிளிநொச்சி நகரை சென்றடைந்தது.

இதேவேளை இந்த வாகனத் தொடரணியின் மூன்றாம் நாள் பயணம் நாளை கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை நகரை நோக்கி நகரவுள்ளது.

30 நாட்களில் 300 நகரங்கள் ஊடாக சுமார் இரண்டாயிரத்து 500 கிலோமீற்றர் தூரத்தை இந்த வாகனத் தொடரணி கடந்து செல்லவுள்ளது.

2 3 4 5

 

3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான நகரம் கண்டுபிடிப்பு!!

jerusalem-wall

வடக்கு ஈராக்கின் குர்திஸ்தான் மாகாணத்தில் புதையுண்டு கிடந்த 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான நகரத்தை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

சப் ஆற்றின் வடக்கு கரை பகுதியில் சட்டு காலா என்ற கிராமம் உள்ளது. அங்குள்ள ஒரு பாறைக்கு அடியில் தரைமட்டத்தில் இருந்து 32 அடி ஆழத்தில் புதையுண்டு கிடந்த முன்னர் அபு என்று அழைக்கப்பட்ட சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில்தான் மத்திய கிழக்கு நாடுகளில் பயிர் வேளாண்மை தோன்றியதாகவும், அசாரியன் பேரரசின் கீழ் சுமார் 2900 மற்றும் 3300 ஆண்டுகளுக்கு இடையில் இந்த நகரில் மக்கள் வசித்திருக்க கூடும் எனவும் தொல்லியல் துறையினர் கூறுகின்றனர்.

எடிமா என்பவரின் மகனான பவுரியின் அரண்மனை இங்கு இருந்ததற்கான ஆதாரமும் கிடைத்துள்ளது.

தவளைகளுக்கு தாலி கட்டியதால் மழை : ஆனந்தத்தில் மக்கள்!!

frog_marriage

தமிழ்நாட்டில் மழை வேண்டி தவளைகளுக்கு தாலி கட்டி திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் அன்னூர் பகுதிகளில் கடந்த 2 வருடமாக மழையின்றி கடும் வறட்சி நிலவி வருகிறது.

மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்க சின்னவடவள்ளி கிராம மக்கள் முடிவு செய்தனர். இதற்காக கடந்த 30ம் திகதி இரவு மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி, மறுநாள் தாலி கட்டி திருமணம் நடத்தி வைக்கப்படும் என்றும் திகதி குறித்து ஊர் மக்களுக்கு விழா குழுவினர் அறிவித்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. ஆண் தவளையை தேவராஜ் என்ற சிறுவனும் பெண் தவளையை சாந்தாமணி என்ற பெண்ணும் ஊர்வலமாக சக்தி விநாயகர் கோயிலுக்கு கொண்டு வந்தனர்.

தவளைகளுக்கு புத்தாடை கட்டி மலர்களால் அலங்காரம் செய்திருந்தனர். நிஜ திருமணம் போன்றே மாப்பிள்ளை அழைப்பு சடங்குகள் நிறைவேற்றப்பட்டன.

பின்பு 600 பேருக்கு சாப்பாடு வழங்கப்பட்டது. இரவில் பெண்கள் கும்மியடித்து ஆடிப்பாடினர். பின்னர் இரவு முழுவதும் மழை வேண்டி யாகம் வளர்க்கப்பட்டது.

நேற்று காலை 5.30 மணிக்கு தவளைகள் மணமேடைக்கு கொண்டு வரப்பட்டன. மணமேடை வாழை மர தோரண அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

ஐயர் மந்திரம் ஓத கெட்டி மேளம் ஒலிக்க பெண் தவளைக்கு தங்க தாலி அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து தடபுடலாக கல்யாண விருந்து பரிமாறப்பட்டது.

திருமணத்துக்கு வந்தவர்கள் கொடுத்த அன்பளிப்பு பணம் 3 ஆயிரம் சேர்ந்தது. காலையில் இந்த நிகழ்ச்சி நடந்த நிலையில், மாலையில் வடவள்ளி, ரங்கப்பகவுண்டன் புதூர், பெரியபுத்தூர், கெச்சங்கிணர், பெரிய வடவள்ளி, தேசம்பாளையம், குமரன் குன்று பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

நடிகர் எஸ்.வி.சேகருக்கு கொலை மிரட்டல் : வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு!!

s.v.sekar

நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர் சென்னை பட்டினபாக்கம் கிழக்கு 5-வது தெருவில் வசிக்கிறார். இவருக்கு ஏற்கனவே பலமுறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளது. வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. கற்களும் வீசி தாக்குதல் நடந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் பட்டினபாக்கம் பொலிசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், தனக்கு பெண்கள் சிலர் சுமார் 45 முறை போன் செய்து மிரட்டல் விடுத்து பேசினார்கள். தகாத வார்த்தைகளால் திட்டினார்கள். வீட்டை முற்றுகையிட்டு கற்கள் வீசி தாக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பதோடு உரிய பொலீஸ் பாதுகாப்பும் எனது வீட்டுக்கு வழங்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார். இந்து மகாசபா தலைவர், கோடம்பாக்கம் ஸ்ரீ என்பவர்தான் முதலில் போனில் பேசி திட்டினார். அவரைத் தொடர்ந்துதான் பெண்கள் பலர் போனில் பேசி, மிரட்டினார்கள், என்று எஸ்.வி.சேகர் நிருபர்களிடம் பேசும் போது கூறினார்.

இது தொடர்பாக துணை கமிஷனர் உத்தரவின் பேரில் பட்டினபாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நேற்று எஸ்.வி.சேகர் வீட்டுக்கு பொலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. அவரது வீடு உள்ள பகுதியில் பொலீஸ் ரோந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கு படத்தை தமிழில் டப்பிங் செய்வதை எதிர்ப்பதா : நடிகை ஹன்சிகா மீது வழக்கு!!

Hansika Motwani

நடிகை ஹன்சிகா தெலுங்கில் நடித்து 2010ல் வெளியான சீதாராமுல கல்யாணம் லங்கலோ என்ற படம் தமிழில் ரவுடி கோட்டை என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு உள்ளது. இப்படத்தை இம்மாதம் இறுதியில் தமிழகமெங்கும் ரிலீஸ் செய்ய ஏற்பாடு நடக்கிறது.

இதற்கு ஹன்சிகா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். தெலுங்கு படத்தில் என்னை ஒப்பந்தம் செய்த போது தமிழில் டப்பிங் செய்ய மாட்டோம் என உறுதி அளித்தனர். எனவே தமிழில் வெளியிடுவதை தடுக்கும்படி நடிகர்கள் சங்கத்தில் புகார் செய்வேன் என்று கூறினார்.

இதற்கு பதில் அளித்து தயாரிப்பாளர் எஸ்.சுந்தரலட்சுமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறு இருப்பதாவது..

தெலுங்கில் வெளியான சீதாராமுல கல்யாணம் லங்கலோ என்ற படத்தை தமிழில் மொழி மாற்றம் செய்ய அதன் தயாரிப்பாளர் வெல்கார் எண்டர்பிரைசஸ் விஜய் மல்லா பிரசாத்திடம் இருந்து வாங்கினேன். படத்தின் மொழி மாற்றம் மற்றும் அனைத்து வேலைகளையும் முடித்து ரவுடி கோட்டை என்ற பெயரில் திரையிட முடிவான நேரத்தில் ஹன்சிகா எதிர்ப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

ஹன்சிகாவுக்கும் தெலுங்கு பட அதிபருக்கும் இடையே எந்த மாதிரியான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது. நாங்கள் தெலுங்கு பட அதிபரிடம் கேட்ட போது ஹன்சிகா சொல்வது மாதிரி தெலுங்கை தவிர எந்த மொழியிலும் படத்தை மொழி மாற்றம் செய்யக்கூடாது என்று எங்களுக்குள் எந்த ஒப்பந்தமும் கிடையாது. வாய்மொழியாக கூட ஹன்சிகா கேட்கவும் இல்லை. நாங்களும் வாய்மொழியாக ஒப்புக்கொள்ளவும் இல்லை என்றார்.

ஹன்சிகா படத்துக்கு தடை கேட்டு வழக்கு தொடர்வதாக இருந்தால் தெலுங்கு பட அதிபர் மீதுதான் தொடர வேண்டும். ஹன்சிகா எந்த நடவடிக்கை எடுத்தாலும் அது எங்களை கட்டுப்படுத்தாது.

நடிகர் சங்கம் மூலம் எங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை ஹன்சிகா விலக்கி கொள்ள வேண்டும். இல்லையேல் அவர் மீது வழக்கு தொடரப்படும். எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஹன்சிகாவே ஏற்க வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

படத்தை தமிழாக்கம் செய்யும் பொறுப்பேற்றுள்ள ஏ.ஆர்.கே.ராஜராஜா கூறும் போது ரவுடி கோட்டை படத்தில் ஹன்சிகா இச் இச் இச் என்ற ஒரு பாடல் காட்சியில் படுகவர்ச்சியாக நடித்துள்ளார். அதனால்தான் பயந்து போய் தடை கேட்டு இருப்பார் என நினைக்கிறேன் என்றார்.

விக்ரம் படத்தில் இருந்து திரிஷா அதிரடியாக நீக்கம்!!

trisha

தரணி இயக்கும் படத்தில் விக்ரம் ஜோடியாக திரிஷா நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது திரிஷாவுக்கு பதில் ஹன்சிகாவை தேர்வு செய்துள்ளதாக தகவல் பரவியுள்ளது. இதனால் திரிஷா அதிர்ச்சியில் உள்ளார்.

ஏற்கனவே விக்ரமுடன் சாமி, பீமா படங்களில் திரிஷா நடித்துள்ளார். விக்ரமை வைத்து தரணி தில், தூள் படங்களை இயக்கியுள்ளார். எனவே அவர் இயக்கும் புதுப்படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்க தனக்கு வாய்ப்பு கிட்டும் என எதிர்பார்த்தார்.

இந்த படம் மூலம் தமிழ்பட உலகில் மேலும் வலுவாக காலூன்றலாம் என்றும் நம்பி இருந்தார். ஆனால் அவை நிராசையாகி விட்டன. ஹன்சிகா இளம் ஹீரோக்களுக்கு பிடித்த நடிகையாக வளர்ந்துள்ளதால் அவரை கதாநாயகியாக தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஹன்சிகா ஏற்கனவே பிசியாக உள்ளார். அவர் கைவசம் 9 படங்கள் உள்ளன. ஆனாலும் ஹன்சிகா கால்ஷீட்டுக்காக படக்குழுவினர் காத்து இருக்கின்றனர். தனது படவாய்ப்பை தட்டி பறித்ததற்காக ஹன்சிகா மீதும் திரிஷா கோபமாக இருப்பதாக கூறப்படுகிறது.

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா : 16 படங்கள் திரையிடப்படுகிறது!!

film

சென்னையில் 3 நாட்கள் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகின்றது. இதில் அமெரிக்கா, ஒஸ்ரியா, அல்ஜீரியா, ஈரான், பிரான்ஸ், ஜெர்மனி, மலேசியா, குரோவேஷியா, பெல்ஜியம், லட்சியா நாடுகளை சேர்ந்த படங்கள் திரையிடப்படுகிறது.

மொத்தம் 16 படங்கள் திரையிடப்படுகிறது. குறும்படங்கள், ஆவணப் படங்களும் திரையிடப்படுகின்றன. தினமும் பகல் 12 மணிக்கும் மதியம் 3 மணிக்கும், மாலை 6 மணிக்கும் 3 காட்சிகளாக படங்கள் திரையிடப்படுகிறது.

16 படங்களும் ஆழ்வார்பேட்டையில் உள்ள சோவியத் கலாசார மையத்தில் திரையிடப்படுகிறது. 16 படங்களில் சிறந்த படம் சிறந்த இயக்குனர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது.

செவன்த் சனல் கம்யூனிகேஷனும் தமிழ் திரைப்பட அகடமியும் இணைந்து இதை நடத்துகின்றன. சர்வதேச திரைப்பட விழா ஆரம்ப நிகழ்ச்சி சோவியத் கலாசார மையத்தில் இன்று நடந்தது. மாணிக்கம் நாராயணன் தலைமை தாங்கினார். இயக்குனர் வெற்றி மாறன் இதில் கலந்து கொண்டு திரைப்பட விழாவை தொடங்கி வைத்தார்.

2 வயது குழந்தைக்கு தாடி, மீசை வளரும் அபூர்வம்!!

baby

தமிழ்நாடு விழுப்புரத்தை சேர்ந்த 2 வயது ஆண் குழந்தைக்கு திடீர் ஓமோன் மாற்றத்தால் உடல் உறுப்புகளில் மாற்றங்கள் உண்டாகியுள்ளன. குறிப்பாக பெரியவர்களை போல் தாடி, மீசை மற்றும் உடல் முழுவதும் முடி வளர்வதும் தென்பட்டது.

மழலை பருவத்திலேயே இத்தகைய மாற்றங்களை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து சிறுவனை பெற்றோர் புதுவை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

ஓமோன் துறை உதவி மருத்துவர் சதீஷ் பரிசோதனை செய்தபோது அவனது உடலில் ஓமோன்கள் மிகவும் அதிக அளவில் இருந்தது. ஸ்கேன் செய்து பார்த்தபோது மூளையின் அடிப்பகுதியில் உள்ள ஓமோன்களின் தலைமையிடமான ஹைப்போத்தாலமசில் ஒரு கட்டி வளர்ந்திருப்பது தெரியவந்ததுள்ளது.

முதலில் அவனுக்கு ஓமோன்களை கட்டுப்படுத்த 3 மாதத்திற்கு ஒரு முறை சிறப்பு மருந்துகள் ஊசி மூலம் செலுத்தினர். ஆனால் அது அவனுக்கு முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. மேலும் அந்த மருந்து இன்னும் 10 முதல் 12 வருடங்களுக்கு தொடர்ந்து செலுத்த வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அந்த மருந்தின் விலை மிக அதிகம். இதனால் அதை வாங்க முடியாமல் குழந்தையின் பெற்றோர் அவதிப்பட்டனர்.

இதனை தொடர்ந்து அவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவக் குழுவினர் முடிவு செய்தனர். நரம்பியல் அறுவை சிகிச்சை துறை கூடுதல் மருத்துவர் ரூபேஷ்குமார் தலைமையிலான குழுவினர் மூளையின் அடிப்பகுதியில் உள்ள அந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் கடந்த வாரம் அகற்றியுள்ளார்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் குழந்தையின் ஓமோன் அளவு வயதுக்கு ஏற்ப சரியாக காணப்படுகிறது என்றும் இனி அவனுக்கு ஊசி மருந்து தேவைப்படாது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

2 வயது குழந்தையின் வயிற்றில் கரு : அதிர்ச்சியில் மருத்துவர்கள்!!(வீடியோ)

baby_pregnantசீனாவில் இரண்டு வயது குழந்தையின் வயிற்றில் கரு இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

சீனாவின் குவாங்சி மாகாணத்தை சேர்ந்த தம்பதியின் 2 வயது மகன் ஷியாவ் பெங். இவன் பிறக்கும் போது மற்ற குழந்தைகளை போலவே இருந்தான், பின்னர் படிப்படியான வளர்ச்சியில் 2 வயதை நெருங்கும் போது அவனது வயிறு மட்டும் பெருத்து காணப்பட்டது.

மூச்சு திணறலால் குழந்தை கஷ்டப்பட்வே சாதாரண நோய்தான் என்று பெற்றோர் கருதினர். ஒருநாள் மூச்சு திணறல் அதிகரிக்கவே மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போதுதான் உண்மை தெரியவந்தது அவனை முழுமையாக ஸ்கேன் செய்து பார்த்த போது அவனது வயிற்றில் வளர்ச்சி அடையாத கரு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த கரு பின்னர் வயிற்றுக்குள் கட்டி போல வளரத் தொடங்கியவுடன் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்தனர்.

இதுகுறித்து மருத்துவர் ஜோனாத்தன் பனராப் குழந்தையின் தாய் கருவுறும் போது இரட்டை குழந்தைக்கான கருவுறுதல் நடந்துள்ளது. ஆனால் தவறுதலாக ஒரு கரு முட்டை இவனது வயிற்றுக்குள் சென்று வளர்ச்சி அடையாமல் ஒரு கட்டத்தில் நின்றுள்ளது. இது மருத்துவ உலகில் மிக அரிதாக நடக்க கூடிய செயல் என்று கூறினார்.

சுற்றுலா சென்ற போது நடந்த விபரீதம் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி!!

tour

அமெரிக்காவில் சுற்றுலா சென்ற போது நடந்த விபத்தில் 5 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தை சேர்ந்த டோனி ஜோன்சன், எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பள்ளி ஒன்றில் பகுதி நேர நீச்சல் பயிற்சியாளராகவும் வேலை பார்த்து வருகிறார்.

இவர் தனது மனைவி டாவ்னா, கிரேசி(13) மற்றொரு மகள் குளோவா ரெய்ன் மற்றும் 2 உறவினர்கள் ஆகியோர் விடுமுறையில் கொலாராடோ மாகாணத்தில் உள்ள புவனே விஸ்டா மலைப்பகுதிக்கு வந்தனர். நேற்று பகலில் அப்பகுதியில் காரை நிறுத்தி விட்டு மலைப்பகுதியில் இளைப்பாறினர்.

அப்போது திடீரென பூகம்பம் வருவது போல் சத்தம் கேட்டதுடன் மரங்கள் முறிந்து விழுந்தது. இதனை பார்த்த ஜோன்சன் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள் என்று கூறியபடியே தனது மகள் கிரேசியை தூக்கி கொண்டு மேடான இடத்திற்கு சென்றார்.

உடனடியாக மற்றவர்களை மீட்பதற்காக சென்ற போது அதற்குள் ஏராளமான பாறைகள் உருண்டு விழுந்து அனைவரும் புதையுண்டனர். அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த கிரேசி கதறி அழுதார். புதையுண்டவர்களின் உடல்களை மீட்கும் பணி நடப்பதாக நகர மேயர் ஜான் ஸ்பீஸ் தெரிவித்துள்ளார்.

உடல் குறை கல்விக்கு தடையில்லை புலமைப்பரிசில் பரீட்சையில் நிரூபித்த கோப்பாய் மாணவன்!!

koppai

பிறப்பிலேயே பார்வைக் குறைபாடுடைய (Low Vision) யாழ்.கோப்பாய் மகா வித்தியாலய மாணவன் சந்திரகுமார் அமலஅசாம் புலமைப்பரிசில் பரீட்சையில் 157 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்து வாழ்க்கையில் சாதிக்க உடல் குறைபாடு ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார்.

இவர் தனது விடா முயற்சியும் ஊக்கமும் ஆசிரியர் திருமதி பி.ஸ்ரீபரமேஸ்வரன் மற்றும் அதிபர் ரி.ஞானப்பிரகாசம் ஆகியோரது வழிகாட்டலுமே தனது இந்த சாதனைக்கு துணை நின்றதாக மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார் இந்த மாணவன்.