சென்னை அணியை 8 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறிய டிரினிடாட் அணி!!

trinad_csk_

டிரினிடாட் அணிக்கெதிரான சம்பியன்ஸ் லீக் T20 போட்டியில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

அபாரமாக ஆடிய டிரினிடாட் அணி மூன்றாவது வெற்றியை பதிவு செய்து அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்தியாவில் 5வது சம்பியன்ஸ் லீக் T20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று இரவு நடந்த பி பிரிவு கடைசி லீக் போட்டியில், சென்னை (இந்தியா), டிரினிடாட் அன்டு டுபாகோ (மேற்கிந்திய தீவுகள்) அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டிரினிடாட் அணி அணித்தலைவர் தினேஷ் ராம்தின் தெரிவு செய்தார். இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 19.4 ஓவரில் 118 ஓட்டங்களுக்கு சுருண்டது.

முரளி விஜய் 27 ஓட்டங்களும், சுரேஷ் ரெய்னா 38 ஓட்டங்களும், அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி 25 ஓட்டங்களும் எடுத்தனர். டிரினிடாட் அணி சார்பில் ரயாத் எம்ரித் 3 விக்கெட்டும், ரவி ராம்போல், சிமன்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

சுலப இலக்கை விரட்டிய டிரினிடாட் அணி 15.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 119 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லிவிஸ் 38 ஓட்டங்களும், சிமன்ஸ் 63 ஓட்டங்களும் எடுத்தனர். சகலதுறை வீரராக அசத்திய டிரினிடாட் அணியின் சிமன்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

டிரினிடாட் அணி 4 லீக் போட்டியில் 3ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் (+0.816) ரன்-ரேட் அடிப்படையில் பி பிரிவில் முதலிடம் பிடித்தது. ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்ற சென்னை அணி 12 புள்ளிகளுடன் (+0.271) இரண்டாவது இடம் பெற்றது.

ஏ பிரிவில் நான்கு போட்டியிலும் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி 16 புள்ளிகளுடன் (+0.960) முதலிடம் பிடித்தது. நான்கில் 2 வெற்றி உட்பட 10 புள்ளிகள் (+1.068) பெற்ற மும்பை அணி, ரன்-ரேட் அடிப்படையில் இரண்டாவது இடம் பெற்றது.

200வது டெஸ்ட்டுடன் சச்சின் ஓய்வு பெற பிசிசிஐ அறிவுரை!!

tendulkar

சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றார். தற்போது சச்சின் டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார். 198 டெஸ்டில் ஆடியுள்ள இவர், மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான தொடரில் 200வது டெஸ்டில் விளையாடி புதிய வரலாற்றை படைப்பார்.

200வது டெஸ்டோடு சச்சின் ஓய்வு பெறுவார் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுவரை சச்சின் ஓய்வு பற்றி வாய் திறக்கவில்லை. 200வது டெஸ்டுக்கு பின்பு அவர் தொடர்ந்து விளையாடும் எண்ணம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் 200வது டெஸ்ட் போட்டியோடு சச்சினை ஓய்வு பெறுமாறு கிரிக்கெட் சபை வலியுறுத்தும் என்று ஆங்கில முன்னணி நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் சபையின் மூத்த நிர்வாகி ஒருவர் சச்சினை அணுகி ஒய்வுபெறுமாறு வலியுறுத்துவார் என்றும் அவரிடம் இந்த தகவலை சொல்பவர் பெயர் விவரம் பகிரங்கமாக வெளியிடப்பட வில்லை என்றும் இது உறுதியான தகவல் எனவும் அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

சச்சினின் ஆட்டம் தற்போது மிகவும் சிறப்பாக இல்லை என்று கிரிக்கெட் சபை கருதுகிறது. இதனால் தான் 200வது டெஸ்டோடு அவர் ஓய்வு பெறுவதில் தீவிரமாக உள்ளது.

சச்சின் கடைசியாக 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் தென் ஆப்ரிக்காவுக்கெதிராக கேப்டவுன் டெஸ்டில் சதம் (146 ஓட்டங்கள்) அடித்தார். அதன்பிறகு அவர் 22 டெஸ்ட் விளையாடியும் சதம் அடிக்கவில்லை. கடந்த 12 டெஸ்டில் இரண்டு அரை சதமே அடித்துள்ளார்.

சச்சின் 198 டெஸ்டில் 15,837 ஓட்டங்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 248 ஓட்டங்கள் ஆகும். 51 சதமும், 67 அரை சதமும் அடித்துள்ளார்.

குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் : வீராத் கோலி!!

kholi

என்னை பொறுத்தவரை குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என இந்திய அணியின் வீராத் கோலி தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் சூதாட்டம் பற்றிய கருத்துக்கு சூதாட்ட வீரர்களால் இந்திய கிரிக்கெட்டின் நன்மதிப்புக்கு களங்கம் ஏற்பட்டு விட்டது.
இதில் சம்பந்தப்பட்ட சென்னை அல்லது ராஜஸ்தான் அணிகள் குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை.

அதேநேரம் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் எங்களின் தரத்தை பரிசோதித்து கொள்ள வரும் தென்ஆபிரிக்க தொடர் உதவும் என்பதால் இதை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

அத்துடன் நீண்ட இடைவெளிக்குப் பின் அவுஸ்திரேலியாவுடன் மோதவுள்ளோம். மைக்கல் கிளார்க் இல்லை என்றாலும் இந்த அணி எப்போதுமே வலுவான அணி தான். இதனால் எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம் நம்பிக்கையுடன் செயல்பட்டு இந்த பருவத்தை சிறப்பாக தொடங்குவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் யுவராஜ் அணிக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், சச்சினின் 200வது டெஸ்டை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வடமேல் மாகாண முதலமைச்சராகிறார் தயாசிறி ஜயசேகர!!

dayasiri-jayasekara-upfa

வடமேல் மாகாண முதலமைச்சராக தயாசிறி ஜயசேகரவும் மத்திய மாகாண முதலமைச்சராக சரத் ஏக்கநாயக்கவும் இன்று பதவிபிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜாக்ஷ முன்னிலையில் இந்த பதவிபிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளது. மேலும் மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களும் இன்று சத்தியபிரமாணம் செய்து கொள்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கூட்டமைப்பின் நேற்றைய கூட்டமும் முடிவின்றி முடிந்தது!!

tna

வட மாகாண சபை அமைச்சர்கள் தெரிவு தொடர்பில் நேற்று இரவு கொழும்பில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டத்தில் எவ்வித முடிவுகளும் எடுக்கப்படவில்லை.

வடக்கு மாகாண முதலமைச்சரின் பதவிப் பிரமாணம் மற்றும் வடமாகாண அமைச்சரவையின் நியமனம் குறித்த தீர்மானத்துக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று கொழும்பில் கூடியது.

இக்கூட்டத்தில் பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்ட போதும் இறுதி முடிகள் எதனையும் எடுக்கவில்லை என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இந்தநிலையில் நாளை (04) காலை மீண்டும் கூடி ஆராய்ந்து முடிவெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முதலமைச்சர் பதவிப்பிரமாணத்தை எங்கே யாரின் முன்னால் மேற்கொள்வது என்பது குறித்து நேற்றைய கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

பகிடிவதை செய்த சப்ரகமுவ மாணவர்கள் 20 பேருக்கு வகுப்புத் தடை!!

Sabaragamuwa University

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் 20 பேருக்கு தற்காலிகமாக வகுப்புத் தடை விதிக்க பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

புதிய மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தியதான குற்றச்சாட்டில் ஆரம்ப விசாரணை முடிந்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

20 மாணவர்கள் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை தொடரும் எனவும் விசாரணை முடிவில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகினார் திஸ்ஸ அத்தநாயக்க!!

thissa

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தனது தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகியுள்ளதோடு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் இராஜினாமா கடிதத்தை சமர்பித்துள்ளார்.

திஸ்ஸ பதவி வகிக்கும் குண்டசாலை தொகுதி கடந்த மாகாண சபைத் தேர்தலில் தோல்வியை தழுவியது.

இந்த தோல்வியை கட்சி தலைவர் மீது மாத்திரம் சுமத்தாது தானும் பங்கெடுத்து தொகுதி அமைப்பாளர் பதவியை வேறு ஒருவருக்கு வழங்க முடிவு செய்ததாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபை ஊழியர்களின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது!!

jaffna

யாழ். மாநகர சபை ஊழியர்களின் உண்ணாவிரதம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்துள்ளது.

யாழ். மாநகர சபை ஊழியர்கள் 1ம் திகதி காலை தொடக்கம் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அதனை தொடர்ந்து நேற்று மாலை 4 மணியளவில் மாநகர சபை முதல்வர் தலைமையில் தொழில் திணைக்களமும் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் நன்கு பிரதிநிதிகளும் சந்தித்து கலந்துரையாடினர்.

அக்கலந்துரையாடலை அடுத்து தொழில் திணைக்களத்தால் தொழிலாளர்களுடன் கலந்துரையாடி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என உறுதி மொழி வழங்கப்பட்டது.

அந்த அறிக்கையினை பரிசீலித்து நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு சேவை, மூப்பு, கல்வித்தகைமை ஒழுக்கம் என்பனவற்றின் அடிப்படையில் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என முதல்வர் உறுதி மொழி வழங்கினார்.

யாழ். மாநகர சபை முதல்வரின் உறுதிமொழியை அடுத்து தொழிலாளர்கள் தேனீர் அருந்தி தமது உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

அதிவேகப் படகில் ராமேஸ்வரம் சென்று இறங்கிய ஈழத் தமிழரால் பரபரப்பு!!

colombo-boat

கடற்பரப்பில் கடும் பாதுகாப்பை மீறி ராமேஸ்வரம் அருகே அதிவேகப் படகில் சென்று இறங்கிய ஈழத் தமிழர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து தீவிரவாதிகள் கடல்வழியே ஊடுருவி தமிழகத்தில் தாக்குதல் நடத்தக் கூடும் என்று அண்மையில் தகவல்கள் வெளியானது. இதைத் தொடர்ந்து கடற்பரப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் அதிவேகப் படகு ஒன்றில் ராமேஸ்வரம் அருகே மர்ம நபர் ஒருவர் சென்றிறங்கியதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் கடற்படைக்கும் கூட தெரியாமல் அதிவேகப் படகு ஊடுருவியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கு பதுங்கியிருந்த இலங்கை மன்னார் – பேசாளையைச் சேர்ந்த செல்லகிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தாம் திருச்சியில் தங்கியிருப்பதாகவும் அடிக்கடி இலங்கைக்கு கடல்வழியே படகில் சென்று வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கூமாங்குளம் முதியோர் சங்கம் நடாத்தும் சர்வதேச முதியோர் தினவிழா பிற்போடப்பட்டுள்ளது..!

koomவவுனியா கூமாங்குளம் முதியோர் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச முதியோர் தினவிழா நாளை (03-10-2013) அன்று நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில் தவிர்க்கமுடியாத காரணங்களினால் எதிர்வரும் 22ம் திகதிக்கு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதென விழா ஏற்பாட்டாளர்கள் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தனர்.

இவ்விழாவிற்கு கூமாங்குளம் கிராம அலுவலர் திருமதி .துசிதா புஸ்பராஜா தலைமை தாங்குகிறார்.

இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக வவுனியா அரசாங்க அதிபர் திரு .M .K .பந்துல ஹரிச்சந்திர அவர்கள் கலந்து கலந்து கொள்வதோடு, கௌரவ விருந்தினர்களாக திரு .கா .உதயராசா (பிரதேச செலாளர் வவுனியா), திரு.நா .கமலதாசன் (பிரதேச செலாளர் வெ,செட்டிகுளம்) ஆகியோரும், சிறப்பு விருந்தினர்களாக வைத்தியர் .க .இராமச்சந்திரன் (தலைவர் வவுனியா மாவட்ட முதியோர் சமாசம்),  வைத்தியர் .மு.மதிதரன் (கிசான் மெடிக்கல் சென்டரர் .கூமாங்குளம்) ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இவ்விழாவில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு விழா ஏற்பாட்டுக்  குழுவினர் அழைப்பு விடுக்கின்றனர்.

(முதியோர் சங்கம் ,ஸ்டார் அமைப்பு)

அகில இலங்கை ரீதியில் சிறந்த முதியோர் இல்லமாக கோவில்குளம் “சிவன் முதியோர் இல்லம்” தெரிவு..!

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு சமூக சேவைகள் அமைச்சினால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட சிறந்த முதியோர் இல்லங்களை தெரிவு செய்யும் போட்டியில் சிறந்த முதியோர் இல்லத்திற்கான விருதினை வவுனியா கோவில்குளம்  “சிவன் முதியோர் இல்லம்”  பெற்றுக்கொண்டது.

இதற்கான விருது வழங்கும் நிகழ்வு 01.10.2013 அன்று கொழும்பில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் சிவன் முதியோர் இல்ல நிவாகிகள் கலந்து கொண்டு பெற்றுக்கொண்டனர்.

வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள சிவன் முதியோர் இல்லம் கோவில் குளம் சிவன் கோவில் அனுசரணையின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

sivan

 

வவுனியாவில் மீள்குடியேறிய 58 பிரதேச ஆலயங்களுக்கு தலா ஒரு லட்சம் நிதி ஒதுக்கீடு!!

temple

வவுனியா பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேச ஆலயங்களின் அபிவிருத்திற்கென தலா ஒரு லட்சம் ரூபா வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது‘ என வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்..

மீள்குடியமர்வு பிரதேச இந்து ஆலயங்களின் மீள்கட்டுமாணத்திற்கு உதவுமாறு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளரிடம் தாம் வேண்டுகோள் விடுத்திருந்தோம். அதன் பிரகாரம் ஐம்பத்தெட்டு(58) இந்து ஆலயங்களுக்கு இவ்வாறு தலா ஒருலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ள ஆலயங்களின் விபரம் வருமாறு:-

குஞ்சுக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம்
வாரியுடையூர் இலுப்பைக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம்
மருதோடை ஸ்ரீ கந்தசாமி ஆலயம்
பாலமோட்டை புளியடி விநாயகர் ஆலயம்
சேமமடு ஆட்காட்டி விநாயகர் ஆலயம்
கூமாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்
மகிழங்குளம் சித்தி விநாயகர் ஆலயம்
ஓமந்தை வீரகத்தி பிள்ளையார் ஆலயம்
மகாறம்பைக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம்
ஆறுமுகத்தான் புதுக்குளம் ஸ்ரீ கந்தசாமி ஆலயம்
நொச்சிக்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்
பூவரசன்குளம் இயங்கராவூர் விக்னேஸ்வரா ஆலயம்
பாலமோட்டை நவ்வி ஸ்ரீ ஞானசக்தி வேல்முருகன் ஆலயம்
மாதர்பணிக்கர் மகிழங்குளம் பத்திரகாளி அம்மன் ஆலயம்
பண்டாரிகுளம் அருள்மிகு மாடசாமி ஆலயம்
கோயில்புளியங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம்
கந்தபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம்
கல்நாட்டினகுளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்
சாந்தசோலை ஸ்ரீ இராமர் ஆலயம்
சாந்தசோலை துர்க்கை அம்மன் ஆலயம்
ஈச்சங்குளம் ஸ்ரீ விநாயகர் ஆலயம்
சாஸ்திரிகூழாங்குளம் ஸ்ரீ முருகன் ஆலயம்
மதவுவைத்தகுளம் ஸ்ரீ காளியம்மன் ஆலயம்
ஆறுமுகத்தான் புதுக்குளம் செங்காரத்திமோட்டை ஆதி விநாயகர் ஆலயம்
தோணிக்கல் ஸ்ரீ ஆதி சிவன் ஆலயம்
சேமமடு ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலயம்
சுந்தரபுரம் ஸ்ரீ சர்வசக்தி விநாயகர் ஆலயம்
விநாயகபுரம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்
எல்லப்பர் மருதங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்
சகாயமாதாபுரம் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயம்
நெளுக்குளம் சந்தி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம்
வேலவர் சின்னக்குளம் ஸ்ரீ வீரபத்திரர் ஆலயம்
பெரியவிளாத்திகுளம் ஸ்ரீ வீரசக்தி அம்பாள் ஆலயம்
மருக்காரம்பளை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்
கட்டையர்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம்
பணிக்கர் புளியங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம்
தவசிகுளம் ஸ்ரீ ஆதி பிள்ளையார் ஆலயம்
கற்பகபுரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் அலயம்
சுப்பிரமணியர் வேலன்குளம் ஸ்ரீ முருகன் ஆலயம்
வேலன்குளம் வீதி செக்கட்டிப்புலவு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம்
கந்தன்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்
நாவற்குளம் ஸ்ரீ வீரசக்தி அம்மன் ஆலயம்
தவசிகுளம் ஸ்ரீ விநாயகர் ஆலயம்
புதுக்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்
கோதண்டர் நொச்சிக்குளம் ஸ்ரீ கந்தசாமி ஆலயம்
நொச்சிமோட்டை கருங்காலியடி பிள்ளையார் ஆலயம்
நாம்பன்குளம்ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம்
கோவில்குளம் மருதமடு ஸ்ரீ கந்தசாமி ஆலயம்
அலைகல்லுபோட்டகுளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம்
சேமமடு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயம்
பேயாடிகூழாங்குளம் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம்
ஓமந்தை வேப்பங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்
பேயாடிகூழாங்குளம் ஸ்ரீ நாகபூசணி ஆலயம்
காத்தார் சின்னக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம்
நெளுக்குளம் உச்சிப்பிள்ளையார் ஆலயம்
மணிபுரம் மீனாட்சி அம்மன் ஆலயம்
பாரதிபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம்
செல்வாநகர் செக்கட்டிப்புலவு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம்

ஆகியவற்றிற்கே நிதியொதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

ரஜினி, கமலுடன் இணையும் சரத்குமார்!!

rajniஇந்தியாவில் மோசன் கப்சர் தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் திரைப்படம் கோச்சடையான். ரஜினி, தீபிகா படுகோன், ஆதி, ஷோபனா, நாசர் மற்றும் பலர் இப்படத்தில் நடித்து இருக்கிறார்கள்.

செளந்தர்யா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். பாடல்களின் உரிமையை சொனி நிறுவனம் வாங்கியிருக்கிறது. இந்த மாதம் 7ம் திகதி ஒரு பாடல் மட்டும் வெளியாகிறது.

எங்கே போகுதோ வானம் என்று தொடங்கும் அந்தப் பாடலை கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார். படத்தின் ஆரம்பமாக இருக்கும் இந்தப் பாடலை எஸ்.பி.பி. பாடியுள்ளார்.

ரஜினியின் பிறந்தநாளுக்கு படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள். ரஜினியுடன் சேர்ந்து முக்கியமான வேடத்தில் சரத்குமாரும் நடித்துள்ளார்.

விஸ்வரூபம் 2 படத்துக்குப் பிறகு லிங்குசாமி தயாரிப்பில் கமல் நடிக்கும் படம் உத்தம வில்லன். இந்தப் படத்தில் கமலுடன் சேர்ந்து நடிக்க இருக்கிறார் சரத்குமார். இப்படி அடுத்தடுத்து தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களுடன் நடிப்பதால் சந்தோஷத்தில் இருக்கிறார் சரத்குமார்.

அதேசமயம் உத்தம வில்லன் படத்தை யார் இயக்குவது என்பதில் கமல், கே.எஸ்.ரவிக்குமார், ரமேஷ் அரவிந்த் என்று மும்முனைப் போட்டி நடந்து வருகிறதாம்.

சசிகுமாரின் அடுத்த படத்தின் சம்பளம் 8 கோடி!!

sasikumar

சுப்ரமணியபுரம் படம் மூலம் இயக்குநராக, நடிகராக, தயாரிப்பாளராக அறிமுகமானவர் சசிகுமார். அதன்பிறகு பசங்க, ஈசன், போராளி, சுந்தர பாண்டியன் ஆகிய நான்கு படங்களைத் தயாரித்துள்ளார்.

சுப்ரமணியபுரத்துக்குப் பிறகு ஈசன் படத்தை மட்டுமே இயக்கியவர், நடிப்பு நன்றாக வருவதால் அதில் தனது கவனத்தைச் செலுத்தி வருகிறார். தற்போது சாக்ரடீஸ் இயக்கத்தில் பிரம்மன் படத்தில் நடித்து வருகிறார்.

அதைத் தொடர்ந்து ரவி மற்றும் லத்திப் இருவரும் அடுத்த வருடம் தயாரிக்கும் படத்தில் சசிகுமார் ஹீரோவாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 25 வருடங்களாக திரைப்பட விநியோகஸ்தர்களாக உள்ளனர்.

சசிகுமாருக்கு சம்பளமாக 8 கோடி பேசப்பட்டுள்ளது. முன்பணமாக இப்போதே 3 கோடி ரூபாயைக் கொடுத்து விட்டார்களாம்.

ஆர்யாவுக்கு சம்மதம் சொன்ன ஸ்ருதி!!

sruthi-hasanஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ருதி. அதன்பிறகு தமிழில் தனுஷுடன் 3 படத்தில் நடித்தார். அந்தப் படம் வெற்றியடைந்தாலும் ஏனோ தமிழைத் தவிர்த்துவிட்டு தெலுங்கு மற்றும் இந்தியில் மட்டுமே கவனத்தைச் செலுத்தி வருகிறார்.

தமிழில் இருந்து சென்ற சில வாய்ப்புகளையும் அறவே மறுத்து விட்டார். இந்தி மற்றும் தெலுங்கில் அவர் நடித்த படங்கள் சூப்பர் ஹிட்டானது தான் இதற்குக் காரணம் என்கிறார்கள்.

அடுத்த வாரம் அவர் நடித்த ராமய்யா வஸ்தாவய்யா, யெவடு ஆகிய இரண்டு தெலுங்குப் படங்களும் ஒரே நாளில் ரிலீஸாகப் போகின்றன. இரண்டு படங்களுமே தனக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் ஸ்ருதி.

தற்போது ஒரு தெலுங்குப் படம், இரண்டு இந்திப் படங்கள் அவர் கைவசம் உள்ளன. இந்தநிலையில் தடையறத் தாக்க படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி தான் அடுத்து இயக்க இருக்கும் படத்திற்காக ஸ்ருதியை அணுகி இருக்கிறார். கதையைக் கேட்ட ஸ்ருதி தனக்கான ரோல் வித்தியாசமாக இருக்கவே கொஞ்சம் யோசித்துள்ளார்.

ஹீரோ ஆர்யா என மகிழ் திருமேனி அஸ்திரத்தை வீச கைவசம் உள்ள படங்களை முடித்துக்கொடுத்த பிறகு கால்ஷீட் தர ஒப்புக் கொண்டுள்ளாராம் ஸ்ருதி.

முதியவர்கள் வாழ்வதற்கான சிறந்த நாடுகளில் இலங்கை 36 வது இடத்தில்!!

Elders Day

வயோதிபர்கள் வாழ்வதற்கான நாடுகளில் சிறந்த நாடுகள் வரிசையில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது.
சர்வதேச முதியோர் மற்றும் சிறுவர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் முதியவர்கள் வாழ்வதற்கான சிறந்த 91 நாடுகளில் இலங்கை 36 வது இடத்தில் உள்ளது.

ஆசிய நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இலங்கை 4வது இடத்தில் உள்ளது. அதேவேளை வயதானவர்கள் வாழ்தற்கு மிக சிறந்த நாடாக சுவிடன் விளங்குவதுடன் அது முதலாவது இடத்தில் உள்ளது.

இதற்கு அடுத்தப்படியாக நோர்வே இரண்டாம் இடத்திலும் ஜெர்மனி மூன்றாம் இடத்திலும் உள்ளன. சீனா 35 வது இடத்தில் உள்ளதுடன் இலங்கை 36 வது இடத்தில் உள்ளது. இலங்கைக்கு அடுத்ததாக ஜோர்ஜியா இடம்பிடித்துள்ளது. அந்த நாடு 37 வது இடத்தில் உள்ளது.

அதேவேளை முதியவர்கள் சிறப்பாக வாழ முடியாத நாடுகள் வரிசையில் ஆப்கானிஸ்தான் மிகவும் கீழ் மட்டத்தில் உள்ளது. அந்த நாடுகள் 91 வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 89 வது இடத்திலும் தன்சானியா 90வது இடத்திலும் உள்ளன. இந்த ஆய்வுகளின் படி இந்தியா 73 வது இடத்தில் உள்ளது.

இலங்கையில் வாழும் 88 வீதமான முதியவர்கள் குடும்ப சுற்றாடலில் வாழ்வது அதிஷ்டமான நிலைமையாகும் என ஹெல்ஏஜ் இலங்கை நிறுவனத்தின் தலைவர் திலக் டி சில்வா தெரிவித்துள்ளார்.

சொத்துக்களும் பணமும் வாழ்வதற்கு அவசியமானதல்ல என்பது இலங்கைக்கு கிடைத்துள்ள இந்த முன்னிலை எடுத்துக்காட்டுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வறுமை நிலையில் உள்ள நாடுகளான மொரிசியஸ், போலிவியா ஆகிய நாடுகள் இந்த இந்த பட்டியலில் முன்வரிசையில் உள்ளன.