நவராத்திரியின் சிறப்புகள்!!

navarathri

புரட்டாசியும் பங்குனியும் எமனின் கோரைப்பற்கள் என்று கருதப்படுகின்றன. ஜீவராசிகள் எமனின் பற்களில் சிக்கித் துன்பப்படுவதைத் தவிர்க்க நவராத்திரி ஒன்பது நாளும் வழிபட வேண்டும்.

முதல் மூன்று நாட்கள் துர்க்கையையும் அடுத்த மூன்று நாட்கள் லஷ்மியையும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வழிபட வேண்டும்.

ஒன்பது மலர்கள், ஒன்பது வகை அலங்காரங்கள், ஒன்பது வகை நிவேதனம் என்று வழிபாடு அமைய வேண்டும். இறைவனுக்கு அழகு செய்தால் வாழ்க்கையும் அழகாக சிறப்புடன் அமையும் என்ற தத்துவம்தான் இந்த வழிபாட்டுக்குப் பின்னால் இருக்கிறது.

ஒன்பது நாட்களின் வழிபாடு

முதல் நாள் 2 வயது குழந்தையை அலங்கரித்து அம்மனை குமாரிகாவாக வணங்கினால் பணக்கஷ்டம் தீரும்.

இரண்டாம்நாள் மூன்று வயது குழந்தையை அலங்கரித்து திரிமூர்த்தியாக வணங்கினால் தன, தானியங்கள் பெருகும்.

மூன்றாம் நாள் நான்கு வயது குழந்தையை அலங்கரித்து கல்யாணியாக வழிபட்டால் எதிரிகள் விலக்கம் ஏற்படும்.

நான்காம் நாள் ஐந்து வயது குழந்தையை அலங்கரித்து ரோகிணியாக வழிபட்டால் கல்வி வளர்ச்சி மிகும்.

ஐந்தாம் நாள் ஆறு வயது சிறுமியை அலங்கரித்து காளிகாவாக வணங்கினால் துன்பம் நீங்கும்.

ஆறாம் நாள் ஏழு வயது சிறுமியை அலங்கரித்து சண்டிகா தேவியாக வணங்கினால் செல்வ வளர்ச்சி மிகும்.

ஏழாம் நாள் எட்டு வயது சிறுமியை அலங்கரித்து சாம்பவி வடிவில் வழிபட்டால் தம்பதிகளுக்குள் அன்யோன்யம் பெருகும்.

எட்டாம் நாள் ஒன்பது வயது சிறுமியை அலங்கரித்து துர்க்கையாக வணங்கினால் துக்கம் விலகும்.

ஒன்பதாம் நாள் பத்து வயதுச் சிறுமியை அலங்கரித்து சுபத்ராவாக வழிபட்டால் மங்களம் கிடைக்கும்.

வவுனியாவில் டிப்பர் வாகனம் மோதி 6 வயது சிறுமி பலி!!(படங்கள்)

வவுனியா ஏ9 வீதியில் இடம் பெற்ற வீதி விபத்தில் ஆறு வயது சிறுமி தலை சிதறி பலியாகியுள்ளார். இன்று மதியம் 2.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் கணேசன் நிறோசினி என்ற ஆறு வயது சிறுமியே உயிரிழந்துள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது..

புளியங்குளம் பரிசங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி ஏ9 வீதியோரமாய் தனது வீடு நோக்கி சகோதரனுடன் நடந்து சென்று கொண்டிருந்த போது வவுனியாவிலிருந்து வந்த டிப்பர் வாகனம் சிறுமியை மோதியது.

வாகனத்தில் மோதுண்ட சிறுமி தூக்கி எறியப்பட்டு துடிதுடித்து தலை சிதறி பலியாகியுள்ளார். சம்பவ இடத்திற்கு உடனடியாக வருகை தந்த பொலிசார் குறித்த வாகனச்சாரதியை பாதுகாப்பாக வேறு இடத்திற்கு அனுப்பிவைக்க முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதை அறிந்து அங்கு கூடிய பொது மக்கள் வாகனத்தை எடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வாகனத்தை எடுக்கவிடாமல் வீதியின் குறுக்கே நின்று ஆர்ப்பாட்டம் செய்தபோதும்  பொலிசார் வாகனத்தை அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளனர்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் வவுனியா வைத்திய சாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

vavuniya vavuniya1 vavuniya3 vavuniya4

சிறப்பாக இடம்பெற்ற வவுனியா தமிழ் மாமன்றத்தினது நான்காவது விவாதப் பயிலரங்கு (படங்கள்)..!

வவுனியா தமிழ் மாமன்றத்தினது நான்காவது விவாதப் பயிலரங்கு இன்று காலை வவுனியா இந்திரன்ஸ் மண்டபத்திலே சிறப்பாக இடம்பெற்றது.

இந்தப் பயிலரங்கிலே வ/தமிழ் மத்திய மகா வித்தியாலயம், வ/சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, வ/அல் இக்பால் மகாவித்தியாலயம், வ/ பாவற்குளம் மகாவித்தியாலயம் என்பன பங்குபற்றின. மிகவும் ஆர்வமாக மாணவர்கள் இந்தப் பயிலரங்கிலே பங்கு கொண்டனர்.

மாணவர்களின் பேச்சுத் திறனை வளர்க்கும் பொருட்டு தனிப்பேச்சு, சுழலும் சொற்போர், விவாதம் என்பன நடாத்தப்பட்டன. இன்றைய பயிலரங்கில் பங்குபற்றிய மாணவர்கள் பேச்சுத் திறன்கள் மற்றும் ஆற்றல்கள் என்பனவற்றை மிகவும் நன்றாக வெளிப்படுத்தினர்.

நிகழ்ச்சி முடிவின் பின் தமிழ் மாமன்றத்தின் மகுட வாசகம் தெரிவு செய்யப்பட்டது. “தமிழால் வையத் தலைமை கொள்வோம்” எனும் மகுட வாசகம் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டது.

தமிழ் மாமன்றத்தினது ஏற்பாட்டில் அடுத்த பயிலரங்கு 12-10-2013 அன்றும், அதனைத் தொடர்ந்து ஒரே நாளில் இரு கட்டமாக வவுனியா வடக்கு வலயப் பாடசாலைகளிற்கு 13-10-2013 அன்றும், மேலும் கவிதைக்கான பயிலரங்குகள் 19-10-2013 அன்று அனைத்துப் பாடசாலைகளிற்கும் ஒன்றாக நடார்த்துவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து தமிழ் மாமன்றத்தின் பணிகள் முன்னேறிக் கொண்டே செல்லும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை என்றும் அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

029022021012032

ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்வதை மக்கள் விருப்பவில்லை : சித்தார்த்தன்!!

sitharthan

வடமாகாண சபையின் உறுப்பினர்கள் ஜனாதிபதியின் முன்பாக சத்தியப் பிரமாணம் செய்வதை, வாக்களித்த மக்கள் விருப்பவில்லை என கூட்டமைப்பின் சார்பில் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்ட சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதியின் முன்பாக சத்தியப் பிரமாணம் செய்வது தொடர்பாக கட்சிக்குள் இரு வேறு வகையான கருத்துக்கள் இருந்தாலும், வடமாகாண மக்களில் பெரும்பாலானோர் அரசுக்கு எதிராகவே வாக்களித்திருக்கிறார்கள் என்பதால் ஜனாதிபதியின் முன்பாக சத்தியப் பிரமாணம் செய்யக் கூடாது என்ற கருத்துக்கே ஆதரவு அதிகமாக இருப்பதாகவும், தாமும் அதனையே ஆதரிப்பதாகவும் சித்தார்த்தன் கூறியுள்ளார் .

ஆனாலும் சுமூகமான ஆரம்பத்தை நோக்கியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடு இருக்க வேண்டும் என்று சர்வதேச சமூகமும் ஏனைய பலரும் கேட்டிருப்பதாக இரா. சம்பந்தன் அவர்கள் கூறியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயத்தை மக்கள் உணர்வுபூர்வமாகப் பார்ப்பதால், கட்சிகளும் அதனையே பிரதிபலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் தாங்கள் சிங்கள அரசிடம் சரணாகதி அடைந்து விட்டோம் என்ற கருத்து மக்கள் மனதில் ஏற்பட்டுவிடும் என்பதுதான் தமது கவலை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதாக கூறி பண மோசடி செய்த மருத்துவ மாணவி கைது!!

arrest1

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேவையாற்று மருத்துவராக காட்டிக் கொண்டு அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதாக கூறி லட்சக்கணக்கில் பணத்தை பெற்று மோசடி செய்த மருத்துவ மாணவி ஒருவரை கொஹூவல பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டியில் உள்ள அமெரிக்க கல்லூரி ஒன்றில் பயின்று வரும் இந்த மருத்துவ மாணவி மோசடி செய்த பணத்தை வைப்புச் செய்திருந்த வங்கியின் கணக்கு புத்தத்தை வைத்திருந்த பேராசிரியர் ஒருவரை கைதுசெய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மருத்துவராக வேண்டும் என்பதற்காக தன்னை மருத்துவராக இனங்காட்டி இந்த பண மோசடியில் ஈடுபட்டதாக மாணவி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

கற்பதற்கு தேவையான புத்தகங்களை எடுப்பதற்காக இரவு நேரத்தில் கொழும்பு மருத்துவக்கல்லூரிக்குள் சென்று வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் சென்று மருத்துவர்களின் டெத்தஸ்கோப் மற்றும் ஆடைகளை அணிந்து தன்னை மருத்துவர் போல் இனங்காட்டிக் கொண்ட இந்த மாணவி மாத்தறை சேர்ந்த பெண்ணொருவரிடம் 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவையும் கொஹூவல பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரிடம் இரண்டு லட்சம் ரூபாவையும் பெற்றுள்ளார்.

இவர்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதாக கூறியே இவர் அந்த பணத்தை பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தொலைக்காட்சிப் பெட்டி விழுந்து குழந்தை பலி!!

baby

தொலைக்காட்சிப் பெட்டி விழுந்து உடல் நசுங்கி குழந்தை ஒன்று பலியாகியுள்ளதாக கல்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் கல்கமுவ நான்னேரிய – அக்கரவத்தை என்ற பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

வீட்டில் இரும்பினால் செய்யப்பட்டிருந்த மேசையில் வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டி சாய்ந்து குழந்தையின் மேல் விழுந்துள்ளது.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது.

மூன்று வயதும் நான்கு மாதங்களுமான ஆண் குழந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அரசாங்கத்திலிருந்து 59 பேர் வெளியேற திட்டம்!!

Daya-Gamage

அரசாங்கத்தில் உள்ள 59 உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேற தயாராகவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயா கமகே தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு எதிராக கட்சியை வலுப்படுத்துவதற்கு அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலிருந்து தான் விலக தயாராகவிருப்பதாகவும் அதற்கு தகுந்தவர்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளதாக தயா கமகே சுட்டிக் காட்டினார்.

மாத்தறை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த தயா கமகே சமாதான பேரணிக்கு துப்பாக்கி, பொல்லுகள் தேவையில்லை என குறிப்பிட்டார்.

நேற்று பலர் தமக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி ஏன் இத்தகைய பேரணிக்கு அனுமதி வழங்கினீர்கள் என வினவியதாக அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் ஆலோசனையின் படி மைத்திரி குணரத்னவின் தந்தை ஹேமன் குணரத்ன, தென் மாகாணசபை உறுப்பினர் கிரிஷாந்த புஷ்பகுமார மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தயா கமகே தெரிவித்தார்.

மைத்திரி குணரத்னவின் தந்தை பாதுகாப்புச் செயலருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாகவும் அழைப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியாத சந்தர்ப்பத்தின்போது ஜனாதிபதிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியதாகவும் சம்பவ இடத்திலிருந்தவர்கள் தம்மிடம் தெரிவித்ததாக தயா கமகே குறிப்பிட்டார்.

ரணில் விக்கிரமசிங்கவுடன் தனிப்பட்ட பிரச்சினையை கொண்டுள்ள தனியார் ஊடகம் ஒன்று இந்த எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தயா கமகே மேலும் கூறினார்.

16 வயதினிலே படத்தில் கமலுக்கு சம்பளம் 27 000, ரஜினிக்கு 2500- பாரதிராஜா, பாக்யராஜ் மலரும் நினைவுகள்!!

16

ரஜினி, கமல் இணைந்து நடித்து 1977ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய 16 வயதினிலே படம் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு 36 வருடத்துக்கு பிறகு மீண்டும் ரிலீசாக உள்ளது.

இப்படத்தை இயக்கிய பாரதிராஜாவும் உதவி இயக்குனராக இருந்த பாக்யராஜும் படம் சம்பந்தமான மலரும் நினைவுகளை வெளியிட்டனர். பாக்யராஜ் கூறியதாவது..

16 வயதினிலே படத்தில் ஆத்தா ஆடு வளத்தா, கோழி வளத்தா நாய் வளக்கல அதுக்கு பதிலா என்னை வளத்தா என்றொரு வசனம் வரும். அதை கமல் உணர்ச்சிகரமாக பேசி முடித்தார். அதை பார்த்த சுற்றி நின்ற படக்குழுவினர் கண்ணீர் விட்டனர்.

இன்னொரு காட்சியில் ரஜினி முகத்தில் ஸ்ரீதேவி காறி துப்ப வேண்டும். சோப்பு நுரை, டூத் பேஸ்ட் என்று எதையெல்லாமோ வைத்து ரஜினி முகத்தில் அடித்தோம். அது சரியாக வரவில்லை. பாரதிராஜா தவித்தார் நேரம் போய்க் கொண்டு இருந்தது.

உடனே ரஜினி எதுக்கு இப்படியெல்லாம் பண்றீங்க பேசாம ஸ்ரீதேவியை என் முகத்தில் நிஜமாகவே காறி துப்ப சொல்லுங்க என்றார். அப்படி ஸ்ரீதேவி நிஜமாகவே காறி துப்பியதைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள் என்றார்.

பாரதிராஜா கூறியதாவது..

16 வயதினிலே படத்தில் அதிக சம்பளம் வாங்கிய கமல்தான். அவருக்கு 27 ஆயிரம் ரூபாய் சம்பளம் தரப்பட்டது. ஒரு பட பூஜைக்கு பைக்கில் ஸ்டைலா வந்து இறங்கிய ரஜினியை பார்த்தேன். பிடித்து போனது. பரட்டை கேரக்டரில் அவரை நடிக்க வைக்க முடிவு செய்து அணுகினேன்.

இது ஆர்ட் பிலிம் என்று சொல்லி நடிக்க அழைத்தேன். அவர் கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா 5000 ரூபாய். நான் 3000 ரூபாய் தருவதாக சொன்னேன். சம்மதிச்சு நடித்தார். நான் அவருக்கு கொடுத்தது 2500 ரூபாய்தான். 500 ரூபாய் சம்பள பாக்கியை இன்றுவரை கொடுக்கவில்லை. கோவணம் கட்டும் காட்சியில் கமல் தயங்காமல் துணிச்சலாக நடித்தார் என்றார்.

கதாநாயகியாகும் ஸ்ரீதேவியின் மகள்!!

sridevi

நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கதாநாயகியாகிறார். இதற்காக, உடற்பயிற்சி, நடனம் என உடம்பை மெருகேற்றி வருகிறார்.

பழைய நடிகை ராதா மகள் கார்த்திகா, துளசி சினிமாவுக்கு வந்துள்ளனர். இருவரும் கதாநாயகியாக நடித்து வருகிறார்கள். இவர்களை தொடர்ந்து பழைய கனவுக் கன்னியான ஸ்ரீதேவி மகள் ஜான்வியும் சினிமாவில் அறிமுகமாகிறார்.

இரு வருடங்களுக்கு முன்பே பல இயக்குனர்கள் ஸ்ரீதேவியை அணுகி தங்கள் படங்களில் ஜான்வியை அறிமுகப்படுத்த கேட்டனர். ஆனால் சிறுமியாக இருப்பதாக சொல்லி மறுத்துவிட்டார். தற்போது ஜான்வி வளர்ந்து கதாநாயகிக்குரிய புது பொலிவோடு காட்சி தருகிறார்.

மும்பையில் நடந்த நிகழ்ச்சியொன்றுக்கு ஜான்வியை ஸ்ரீதேவி அழைத்து வந்திருந்தார். கூட்டத்தினரை ஜான்வி அழகு வசீகரித்தது. வைத்த கண் வாங்காமல் பார்த்தனர்.

உடற்பயிற்சி, நடனம், உணவு கட்டுப்பாடு என அழகூட்டி இருந்தார். ஸ்ரீதேவி பிரபல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாகவும் விரைவில் கதாநாயகியாக அறிமுகமாவார் என்றும் மும்பை பட உலகினர் தெரிவித்தனர்.

பென்சில் படம் மூலம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாகிறார்!!

gv

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாகிறார். அவர் நடிக்கும் படத்துக்கு பென்சில் என பெயரிடப்பட்டு உள்ளது.

இந்த படத்தை மணி நாகராஜ் இயக்குகிறார். இவர் கவுதம்மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். காதல், திரில்லர் படமாக தயாராகிறது. இதில் ஜி.வி.பிரகாஷ் 12வது வகுப்பு மாணவன் கரக்டரில் வருகிறார்.

ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடிக்க கதாநாயகி தேர்வு நடந்தது. தற்போது பிரியா ஆனந்தை ஒப்பந்தம் செய்துள்ளனர். பிரியா ஆனந்த் ஏற்கனவே நூற்றுயென்பது, எதிர்நீச்சல், வாமணன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது.

புகார் கொடுத்தவர்களுக்கு நேர்ந்த கொடூரம் : கதறி அழும் பெற்றோர்!!

killed_brothers

மணல் கொள்ளை குறித்து புகார் கொடுத்த சகோதரர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் ஊராட்சி அருகே உள்ள செங்களாக்குடியை சேர்ந்தவர் நாட்டாமை துரைராஜ்.

இவரது மகன்கள் டிரைவர் கார்த்திக்(30), ராஜேஷ் (26). இவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.30 மணி அளவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

அப்போது, இவரது உறவினரான ராம்குமார் என்பவர் கார்த்திக்கையும், ராஜேசையும் அருகில் உள்ள கோரையாற்றில் வாகனங்களில் மணல் அள்ளுவதாக கூறி அழைத்து சென்றுள்ளார்.

கார்த்திக்கும், ராஜேசும் செங்களாக்குடியில் இருந்து கோரையாற்றுக்கு தனி தனி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

அவர்கள் 2 பேரும் கோரையாற்றுக்கு அருகில் சென்றதும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு நடந்து சென்றனர். அப்போது கும்பலாக வந்த சிலர் கார்த்திக்கும், ராஜேசையும் தடுத்து நிறுத்தினர்.

கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் 2 பேரையும் அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த கார்த்திக்கும், ராஜேசும் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தனர்.

இவர்களை அழைத்து சென்ற ராம்குமாரும் அந்த கும்பலும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் 2 பேர் படுகாயங்களுடன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து மாத்தூர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த பொலிசார் ரத்தம் வடிந்த படி கிடந்த அவர்கள் 2 பேரின் உடலையும் கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த கொடுர கொலைகள் முன் விரோதம் காரணமாக நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தீவிர விசாரணையில் போலீசார் இறங்கினர்.

அப்போது பொலிசாருக்கு பல்வேறு திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. அதாவது கொலை செய்யப்பட்ட கார்த்திக்கும், ராஜேசும் கோரையாற்றில் இருந்து மணல் அள்ளி வாகனங்களில் கடத்தப்பட்டது குறித்து வருவாய் துறை அதிகாரிகளுக்கும், பொலிசாருக்கும் தகவல் தெரிவித்து வந்துள்ளனர்.

இதில் அதே ஊரை சேர்ந்த அவர்களின் உறவினரான கணேசன் என்பவர் மகன் ராஜேந்திரன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது டெம்போவில் மணல் ஏற்றி செல்லும் போது விராலிமலை பொலிசாருக்கு தகவல் தெரிவித்து மாட்டி விட்டுள்ளனர். இதில் ராஜேந்திரனுக்கும், கார்த்திக் குடும்பத்தினருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் தான் ராஜேந்திரன்(30), ஜெயராம்(26), முத்தழகு(24)ஆகிய 3 பேரும் சேர்ந்து கூலிப்படையை ஏவி கொலை செய்திருப்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

அசிட் வீச்சில் உயிரிழந்த வினோதியினின் பிரிவு தாங்காமல் தாயார் தற்கொலை!!

vinothini

ஒருதலை காதலில் அசிட் வீசி கொலை செய்யப்பட்ட காரைக்கால் பெண் பொறியாளர் வினோதினியின் தாயார் தற்கொலை செய்து கொண்டார்.

காரைக்கால் எம்.எம்.ஜி. நகரை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மனைவி சரஸ்வதி(48). இவர்களுடைய மகள் வினோதினி(23). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்தார்.

வினோதினியின் குடும்ப நண்பர் காரைக்கால் திருவெட்டக்குடியை சேர்ந்த சுரேஷ்குமார் (33). இவருக்கு வினோதினியின் மீது ஒருதலை காதல் ஏற்பட்டது. ஆனால் அவரது காதலை வினோதினி ஏற்க மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ்குமார் கடந்த ஆண்டு நவம்பர் 14ம் திகதி வினோதினி மீது அசிட் வீசினார். முகம், உடல் வெந்த வினோதினி சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த பிப்ரவரி 12ம் திகதி இறந்தார்.

இதனைத் தொடர்ந்து வினோதினி கொலை வழக்கில் சுரேஷ்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து காரைக்கால் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே சுரேஷ்குமார் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கொலையுண்ட வினோதினியின் நினைவு அவரது பெற்றோரை வாட்டி வதைத்தது. எனவே கடந்த 2 மாதத்துக்கு முன்பு சரஸ்வதியின் சொந்த ஊரான சீர்காழி அருகே உள்ள திருக்கடையூர் சென்று வசித்து வந்தனர்.

எனினும் மகள் இறந்த துயரில் இருந்து விடுபட முடியாமல் சரஸ்வதி தவித்து வந்தார். எனவே மகளை இழந்து வாழ்வதைவிட உயிர் விடுவதே மேல் என விபரீத முடிவு எடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு சரஸ்வதி தனது வீட்டில் விஷம் குடித்தார். உயிருக்கு போராடி கொண்டிருந்த சரஸ்வதியை உறவினர்கள் மீட்டு திருக்கடையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே சரஸ்வதி பரிதாபமாக இறந்தார்.

அவரது உடலை கண்டு ஜெயபால் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது. மேலும் திருக்கடையூர் பொலிஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

 

நாங்கள் என்ன பாவம் செய்தோம் : 11 வயது சிறுவனின் கதறல்!!

boy

சிரியாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இதில் ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் பலியாகி உள்ளதுடன் மில்லியன் கணக்கானவர்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

பச்சிளம் குழந்தைகள், பெண்கள் உட்பட பலரும் கொடூரமாக கொலை செய்யப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சிரியாவில் நடந்த இரசாயன தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தாக்குதல் நடத்த திட்டமிட்டன.

ஆனால் இதற்கு தொடர்ந்து ரஷ்யா மறுப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் ரஷ்யாவின் கோரிக்கையின் படி தங்களிடம் உள்ள இரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க சிரியா சம்மதம் தெரிவித்துள்ளது. இதன்படி அமெரிக்காவின் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முகாம்களில் சிரியா அகதிகளின் நிலை குறித்து பிபிசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இங்குள்ள மக்களின் நிலை சற்றே கண்கலங்க வைக்கிறது.

பசியில் துடிக்கும் பிஞ்சுக் குழந்தைகள் கையில் எதுவுமே இல்லாத நிலையில் அடுத்த என்ன நடக்கும் என்று தெரியாத நிலையில் விழி பிதுங்கி இருக்கும் பெற்றோர்கள்.

11 வயது சிறுவன் ஒருவன் கடுமையான வலி வேதனையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் பள்ளிக்கூடத்தில் இருக்கும் போது ஏன் குண்டு போட்டார்கள், ஏன் அவ்வாறு செய்தார்கள், என அழுது கொண்டே கூறியிருப்பது நெஞ்சை உருக்குவதாய் உள்ளது.

சென்னை வீரர்களை திட்டிய வட்சனுக்கு அபராதம்!!

shane_watson_313

தகாத முறையில் பேசிய ராஜஸ்தான் வீரர் வட்சனுக்கு 750 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.

சம்பியன்ஸ் லீக் டுவென்டி-20 தொடரின் முதல் அரையிறுதி போட்டி ஜெய்ப்பூரில் நடந்தது. சென்னை அணிக்கு எதிரான இப்போட்டியில் ராஜஸ்தான் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் ராஜஸ்தான் அணியின் ஷேன் வட்சன் சென்னை அணி வீரர்களிடம் தகாத முறையில் பேசியதாக தெரிகிறது.

இதுகுறித்து சம்பியன்ஸ் லீக் நிர்வாகம் வெளியிட்ட செய்தியில் கிரிக்கெட் விதி லெவல்-1 இன் படி இழிவாக பேசுவது சைகை காட்டுவது குற்றம்.

இதனை வட்சன் ஒப்புக்கொண்டார். இவருக்கு 750 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது என தெரிவித்துள்ளது.

தமிழ்ப்படம் மூலம் நடிகராகும் பிராவோ!!

bravo

மேற்கிந்திய தீவுகள் அணியைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ தமிழில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார்.
தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் பிராவோ ரசிகர்கள் மனம் கவர்ந்த வீரராக உள்ளார்.

மைதானத்தில் இவரது உடல் மொழியைக் கவனித்த இயக்குனர் ராஜன் மாதவ் என்பவர் தான் இயக்கும் உலா என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க உள்ளார். இவர் இயக்குனர் சேரன் நடித்த முரண் படத்தை இயக்கியவர்.

விரைவில் தனது முதல் தமிழ்ப் படம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பிராவோ பேட்டியளிக்கப் போகிறார்.

சம்பியன்ஸ் லீக் : இறுதிப் போட்டிக்கு மும்பை தகுதி!!

mumbai

சம்பியன்ஸ் லீக் T20 கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் டிரினிடாட் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை தோற்கடித்தது.

இந்த வெற்றியின் மூலம் 2வது அணியாக இறுதிச்சுற்றுக்கு மும்பை தகுதி பெற்றது.

டில்லியில் உள்ள ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் 2வது அரையிறுதி ஆட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் மும்பை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இன்றைய இறுதி போட்டியில் மும்பை அணி ராஜஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை நடாத்துகின்றது.