
வட மாகாணத்தின் முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இதற்கான நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெற்றது.

வட மாகாணத்தின் முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இதற்கான நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இளம்பெண் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது காதலருக்கு புறா மூலம் செல்போனை அனுப்ப முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலை சேர்ந்த பெண் கிறிஸ்டெலி மாம்சா(21). இவருடைய காதலன் வாம்பினேர்(19) போதைப்பொருள் வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனால் காதலனை இழந்து தவித்த கிறிஸ்டெலி புறாவின் மூலம் செல்போனை கட்டி சிறை வளாகத்திற்குள் அனுப்பினார்.
ஆனால் புறாவினால் சிறை மதில் சுவரை தாண்ட முடியாததால் சோர்வடைந்த அது ரோந்துப்படை அதிகாரியின் முன் போய் விழுந்து விட்டது.
புறாவையும் செல்போனையும் கைப்பற்றிய அதிகாரி அதை ஏவியவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க வெளியே ஓடி வந்தார்.
அங்கு கிறிஸ்டெலி ஒரு ஆணுடன் மற்றொரு புறாவையும் கையில் வைத்தபடி நின்றார்.
அந்த புறாவிலும் ஒரு போத்தலை கட்டி அதனுள் செல்போன் பட்டரி, மெமரி காட் மற்றும் பணம் 120 பவுண்ட் வைத்து அதையும் சிறைக்குள் ஏவ தயாராக நிற்பது தெரியவந்தது.
இதனை அடுத்து இளம்பெண்ணையும், அவருடன் நின்ற சில்வா(35) என்பவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
இரண்டு பேர் மீதும் சிறைக் கைதிக்கு சட்டத்தை மீறி பொருட்களை அனுப்ப முயற்சி, விலங்குக்கு கொடுமை செய்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நடிகை அனுஷ்கா தெலுங்கில் ராஜமவுலி இயக்கும் பாஹுபலி, குணசேகர் இயக்கும் ராணி ருத்ரம்மா தேவி என 2 சரித்திர படங்களில் நடித்து வருகிறார். 3Dல் உருவாகும் ராணி ருத்ரம்மா தேவி படத்தின் 4வது கட்டப் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இதற்காக ஐதராபாத்தில் உள்ள அன்னபூரணா ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான அரண்மனை அந்தப்புர அரங்கு அமைத்திருக்கிறார்களாம். இந்த அரங்கில் அனுஷ்கா ஏராளமான நகைகள் அணிந்து ராணி வேடத்தில் ஆடும் நடனம் படமாக்கப்பட உள்ளது. இந்த அரங்கை தோட்டாதரணி அமைத்திருக்கிறார்.
இளையராஜா இசையில் அமைந்திருக்கும் இந்த பாடலை சீதாராம சாஸ்திரி எழுதி உள்ளார். அஜய் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார். அதிநவீன தொழில்நுட்பத்தில் இந்த பாடலை படமாக்குகின்றனர். ராஜு சுந்தரம் நடனம் அமைக்கிறார்.
அனுஷ்கா நடிக்கும் இந்த 2 தெலுங்கு படங்களும் தமிழிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 13 வயது சிறுமியிடம் ஆடையை அவிழ்த்துவிட்டு பலாத்காரம் எப்படி நடந்தது என்பதை பொலிஸ்காரர் ஒருவர் செய்து காட்டுமாறு கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி உத்தம் நகரில் கடந்த மாதம் 14ம் திகதி 13 வயது சிறுமி ஒருவர் பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து அந்த சிறுமி தனது தாய் மற்றும் உறவுக்கார பெண்ணுடன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளார்.
அவரது புகாரின்பேரில் தீபக் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அந்த சிறுமி கடந்த 4ம் திகதி மூத்த பொலிஸ் அதிகாரிகளை சந்தித்து உத்தம் நகர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் மீது புகார் கொடுத்துள்ளார்.
அதில், புகார் கொடுக்க சென்ற தன்னிடம் தனது தாய் மற்றும் உறவுக்கார பெண் முன்பு ஆடையை அவிழ்ந்துவிட்டு எப்படி பலாத்காரம் நடந்தது என்பதை செய்து காட்டுமாறு பொலிஸ் அதிகாரி ஒருவர் தன்னை வற்புறுத்தியதாக கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சிறுமியை காவல் நிலையத்தில் வைத்து ஆடையை அவிழ்க்குமாறு வற்புறுத்திய விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவின் பிரபல பொப் பாடகி மடோனா. 55 வயதாகும் இவர் அமெரிக்காவில் இருந்து வெளியரும் நாளிதழில் தன்னைப்பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது..
முதன் முறையாக நியூயோர்க்குக்கு வந்தபோது 35 அமெரிக்க டொலர் பணத்துடன்தான் வந்தேன். அதை வைத்து மிகப்பெரிய இடத்துக்கு வரவேண்டும் என்ற கனவு எனக்கு இருந்தது.
நியூயோர்க் நகருக்கு வந்து தங்கியிருந்தபோது முதல் வருடத்தில் கத்தி முனையில் நான் கற்பழிக்கப்பட்டேன். என் முதுகில் துப்பாக்கியை வைத்து மிரட்டி இழுத்து சென்று கற்பழித்தனர்.
அதன்பின்னர் எனது வீட்டில் 3 முறை கொள்ளை சம்பவம் நடந்தது. என்னிடம் இருந்த ரேடியோவைகூட கொள்ளையடித்து சென்றனர். அது ஏன் நடந்தது என எனக்கு தெரியவில்லை.
நான் துணிச்சல் மிக்கவள். அது எனது உடலில் பாரம்பரியமாகவே உள்ளது என நினைக்கிறேன். எனவே, வாழ்க்கையில் முன்னேற கடுமையாக போராடினேன். எனது அறையில் படுக்கையில் படத்தபடி விரக்தியுடன் சுவரை பார்த்தபடி இருப்பேன். ஜன்னல் வழியாக பார்க்கும்போது புறாக்கள் தங்கள் கவலைகளை மறந்து பறந்து திரியும்.
அவற்றை பார்த்த பின்னர் எனக்குள் புத்துணர்வு ஏற்பட்டு நானும் என் கவலைகளை மறந்து மகிழ்ச்சியான நிலைக்கு மாறுவேன். எனது வாழ்க்கை போராட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்று அதில் கூறியுள்ளார்.

வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆனந்தி சசிதரன் வடமாகண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் முன்னிலையில் சத்தியபிரமாணம் மேற்கொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது .
சீ.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முன்னிலையில் பதவி ஏற்க உள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது .
இந் நிலையில் அவர் மாகாண முதலமைச்சருக்கு பதிலாக அரசாங்க அங்கீகாரம் பெற்ற சமாதான நீதவான் ஒருவரின் முன்னிலையில் மாகாண சபை உறுப்பினராக பதவி பிரமாணம் செய்துக் கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது .
இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு தமக்கு சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்கவில்லை என்று அவர் கூட்டமைப்பு மீது அதிருப்தியுடன் இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் காலங்களில் தம்மை பயன்படுத்தி தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டு தற்போது கூட்டமைப்பு தலைமை தம்மை புறக்கணிப்பதாக,ஆனந்தி சசிதரன் கருதுவதாகவும் கூறப்படுகிறது .

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தமிழில் சூர்யா, விஜய் இருவருக்கும் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்நிலையில் சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு திடீர் அறிவிப்பை வெளியிட்டள்ளார். அதை ‘ஸ்டிரைக்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இனி எந்த புதுப்படங்களிலும் நான் நடிக்கப் போவதில்லை. எனக்கு பிடித்தமான, சிறந்த கதாபாத்திரம் கொண்ட படங்கள் கிடைக்கும்வரை இந்த முடிவில் உறுதியாக இருக்கப் போகிறேன்.
என்றாலும், நான் ஏற்கெனவே நடிக்க ஒத்துக்கொண்ட படங்களில் நடித்து முடிப்பேன்.
எனது திறமையை சரியாக வெளிப்படுத்தாவிட்டால் என்னை ரசிகர்கள் ஒதுக்கிவிடுவார்கள். அதனால்தான் இப்படி முடிவெடுத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
சமந்தா தமிழில் நடித்த நான் ஈ பெரும் வெற்றிபெற்றாலும், அதன்பிறகு அவர் நடித்த நீதானே என் பொன்வசந்தம் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து தமிழ் சினிமாவில் அவ்வளவாக இவருக்கு வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.
இருப்பினும் தெலுங்கில் தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து வந்தார். இந்நிலையில் தற்போது சமந்தா எடுத்துள்ள இந்த முடிவு டோலிவுட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள நேட்டோ படையில் இங்கிலாந்து ராணுவமும் இடம் பெற்றுள்ளது. எனவே இங்கிலாந்து விமான படையில் பணிபரியும் இளவரசர் ஹரி ஆப்கானிஸ்தான் சென்று இருந்தார்.
அங்கு முகாமிட்டுள்ள இங்கிலாந்து ராணுவத்தின் அப்பாச்சி ஹெலிகாப்டரின் விமானியாக பணிபுரிந்தார். அங்கு முகாமிட்டிருந்த முஜாகிதீன் மற்றும் தலிபான் தீவிரவாதிகளை வெடிகுண்டு வீசி அழித்தார்.
தற்போது அங்கு பணிமுடித்த அவர் இங்கிலாந்து திரும்பி விட்டார். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் குன்னார் மாகாணத்தின் தலிபான் தீவிரவாதிகளின் கமாண்டர் குவாரி நஸ்ருல்லா இங்கிலாந்தின் டெய்லி மிர்ரர் பத்திரிகைக்கு பேட்டி அளித்தார்.
அதில் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்தபோது இளவரசர் ஹரிதான் எங்களுக்கு முதல் இலக்காக இருந்தார். அவரை பிடிக்க குறி வைத்திருந்தோம். அதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டோம்.
இங்கிலாந்தில் வேண்டுமானால் அவர் இளவரசர் ஆக இருக்கலாம். எங்களை பொறுத்தவரை அவர் ஒரு சாதாரண ராணுவ வீரர்தான் என தெரிவித்துள்ளார்.
சம்பியன்ஸ் லீக் தொடரின் பட்டதை நடப்பு இப்ல் சம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி சுவீகரித்துக்கொண்டது.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 33 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இந்தியாவின் கிரிக்கெட் நட்சத்திரங்களில் ஒருவரான ராகுல் ட்ராவிட் தனது இறுதி தொழில்முறை கிரிக்கெட் போட்டியிலும், மற்றொரு வீரரான சச்சின் டென்டுல்கர் தனது இறுதி டுவென்டி டுவென்டி போட்டியிலும் பங்குபற்றும் போட்டியாக அமைந்தது.
டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இடம்பெற்ற
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக எந்தவொரு வீரரும் அரைச்சதத்தைப் பெற்றுக் கொள்ளாத போதிலும் அவ்வணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 202 ஓட்டங்களைக் குவித்தது.
ஸ்மித், ரோகித் சர்மா, கிளென் மக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் ஆகியோர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறந்த பலத்தை வழங்கினர் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் பிரவீன் தம்பே மாத்திரம் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார்.
பதிலளித்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வேகமான ஆரம்பத்தைப் பெற முயன்ற போதிலும் குசால் பெரேரா 4வது பந்தில் ரண் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
எனினும், அதன் பின்னர் ரஹானே, சஞ்சு சம்சன் இருவரும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் அதன் பின்னர் விக்கெட்டுக்கள் தொடர்ச்சியாக வீழ்த்தப்பட தடுமாறிய அணி தோல்வியைத் தழுவியது.
பந்துவீச்சில் ஹர்பஜன் சிங், பொலார்ட் இருவரும் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தனர்.
இப்போட்டியின் நாயகனாக ஹர்பஜன் சிங்கும், போட்டித் தொடரின் நாயகனாக டுவைன் ஸ்மித்தும் தெரிவாகினர்.

நான்கு நாடுகள் பங்கேற்கும் ஒருநாள் தொடரின் இறுதிச்சுற்றில் தென் ஆப்ரிக்காவை 201 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இளம் இந்திய அணி சம்பியன் பட்டம் வென்றது.
இந்தியாவின் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான நான்கு நாடுகள் பங்கேற்கும் ஒருநாள் தொடர் நடந்தது. நேற்று நடந்த இறுதிச்சுற்றில் இந்தியா, தென் ஆபிரிக்கா அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்க அணித்தலைவர் யாசீன் வாலி களத்தடுப்பை தெரிவு செய்தார்.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 267 ஓட்டங்கள் எடுத்தது.
ஹெர்வாத்கர் 25 ஓட்டங்களும், அணித்தலைவர் விஜய் ஜோல், அரைசதம் கடந்து 71 ஓட்டங்களும், ரிக்கி புய் 46 ஓட்டங்களும், தீபக் ஹோடா 32 ஓட்டங்களும், ஆட்டமிழக்காமல் சர்பராஸ் கான் 67 ஓட்டங்களும் எடுத்தனர். தென் ஆபிரிக்கா சார்பில் ஜஸ்டின் தில் 3 விக்கெட் வீழ்த்தினார்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணி இந்திய பந்துவீச்சில் திணறியது. 28.1 ஓவரில் 66 ஓட்டங்களுக்கு சுருண்டு படுதோல்வி அடைந்தது. அதிகபட்சமாக ஜாசன் ஸ்மித் 23 ஓட்டங்களும், அணித்தலைவர் யாசீன் வாலி 13 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் சுருண்டனர்.
இந்தியா சார்பில் ஆமிர் கானி 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ், சர்பராஸ் கான் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றி கிண்ணத்தை வென்றது.
மூன்றாவது இடத்துக்கான போட்டியில் அவுஸ்திரேலிய, சிம்பாவே அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த சிம்பாப்வே அணி 50 ஓவரில் 228 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
சுலப இலக்கை விரட்டிய அவுஸ்திரேலிய அணிக்கு டமியன் மார்டிமர் (100) சதம் அடித்து கைகொடுக்க 41.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 229 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி மூன்றாவது இடம் பிடித்து ஆறுதல் பெற்றது. சிம்பாவே அணி இறுதி இடம் பிடித்தது.

பெங்களூரில் நடைபெற்ற ஊடகவியாலர் சந்திப்பில் ரஜினி அரசியலுக்கு வருவாரா என்று கருத்து கூற நடிகர் கமல்ஹாசன் மறுத்துள்ளார். பெங்களூர் ஊடகவியாலர் மன்றத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் நிருபர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு நடிகர் கமல்ஹாசன் அளித்த பேட்டியில் கர்நாடகத்தில் சினிமா தயாரிப்பதற்கான அனைத்து அம்சங்களும் காணப்படுகின்றன. பெங்களூர், மைசூரில் இதற்கு ஏற்ற பல்வேறு இடங்கள் உள்ளன. எனவே அடுத்து புதிய தமிழ் படத்தை கர்நாடக மாநிலத்தில் தயாரிக்கும் எண்ணம் இருக்கிறது.
மேலும் முழுக்க கர்நாடகாவில் படப்பிடிப்பு செய்யப்பட உள்ள தமிழ் படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். நான் இதில் நடிக்க உள்ளேன். விஸ்வரூபம் படம் திரையிடும் போது மறக்க முடியாத அனுபவம் கிடைத்தது.
விஸ்வரூபத்தின் 2ம் பாகம் திரையிடும்போது அதுபோல் ஏற்படாது என்று நினைக்கிறேன். விஸ்வரூபம் பட பிரச்னையால் நான் நாட்டைவிட்டே வெளியேறிவிடுவேன் என்று கூற வேண்டிவந்தது. இப்போதும் எனது வார்த்தைகளை திரும்ப பெறப்போவதில்லை.
நான் மீண்டும் மிரட்டப்பட்டாலோ, தொல்லைக்கு உட்படுத்தப்பட்டாலோ ஒரு கலைஞனாக நான் நாட்டை விட்டு வெளியேற வேண்டிவரும். ஆனால் இந்த நாடு என்னை விட்டுவிடுமா, அரசியலுக்கு ரஜினி வருவாரா, மாட்டாரா என்பதை பற்றி எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை.
வாக்குப்பதிவின் போது ஒரு விரல் நுனியில் கருப்பு மையை வைத்து கொள்ள விரும்புகிறேனே தவிர கை முழுவதையும் கறைப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

கனடாவில் 5 வயது சிறுவன் ஒருவன் தனது பிறந்தநாளை வித்தியாசமான முறையில் கொண்டாடியதுடன், ஏழைக் குழந்தைகளுக்காக நிதி திரட்டியுள்ளான்.
கனடாவின் ரொறண்ரோவை சேர்ந்த சேவியர் மகுர் என்ற 5 வயது சிறுவன் ஒருவன் தனது பிறந்தநாளை வித்தியாசமான முறையில் கொண்டாடப் போவதாக தனது தாயாரிடம் தெரிவித்துள்ளான்.
மேலும் இந்த உலகில் சிறுவர்கள் பல்வேறான கஷ்டங்களை அனுபவிப்பதாகவும் இவர்களுக்கு நன்கொடை அளிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளான்.
இதனையடுத்து சிறுவனின் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு வரும் விருந்தினர்களை பரிசுப்பொருட்களை கொண்டுவருவதற்கு பதிலாக நன்கொடை வழங்கும்படி தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வின் ஆரம்பத்தில் 10 நிமிடங்களுக்குள் 2 000 டொலர்கள் சேர்க்கப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தொகை கென்யா நாட்டில் உள்ள அனாதை விடுதியொன்றிற்கு வழங்கப்பட உள்ளது.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் வடக்கிற்கு சிறந்த பெறுபேறுகள் கிட்டியுள்ளன.
பரீட்சையில் சித்தியடைந்தோர் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் ஏனைய மாகாணங்களை விடவும் வடக்கில் அதிகமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டில் புலமைப் பரிசில் பரீட்சையில் 56.05 வீதமானவர்கள் சித்தியடைந்துள்ளனர். இந்த அண்டில் அந்த எண்ணிக்கை 62.62 வீதமாக உயர்வடைந்தள்ளது.
இதன்படி வடக்கில் கடந்த ஆண்டைவிடவும் 6.57 வீதமான மாணவர்கள் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். இது ஏனைய மாகாணங்களை விடவும் சிறந்த பெறுபேறாகும்.
ஊவா மாகாணத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தோர் வீதம் 6.10 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
மூன்றாவது இடத்தை தென் மாகாணம் பெற்றுக் கொண்டுள்ளது.
கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் 5.66 வீதமான மாணவர்கள் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.

வட மாகாண சபையின் முதலமைச்சராக சீ.வி.விக்னேஸ்வரன் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளாரென தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.
விக்னேஸ்வரன் முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் எதிர்வரும் 11 ம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் அவரின் முன்னிலையில் கூட்டமைப்பினர்களும் அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலமைச்சரின் பதவிப் பிரமாணம் நிறைவுபெற்றதன் பின்னர் வட மாகாண அமைச்சரவை தொடர்பில் முடிவெடுக்கவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் வட மாகாண சபை அமைச்சரவை தொடர்பில் முதலமைச்சரே முடிவெடுப்பார் என்று தெரிவித்ததற்கிணங்க, வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் இன்று ஜனாதிபதி முன்னிலையில் தான் முதலமைச்சராகப் சத்தியப் பிரமாணம் எடுத்த பின்னர், அமைச்சரவை தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
முதலமைச்சர் கூறிய கருத்தினை கூட்டமைப்பின் அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சாலை விதிமுறைகளை மீறி தவறான பாதையில் சென்று கொண்டிருந்த டோனியை பொலிசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
இந்திய அணியின் அணித்தலைவர் டோனி சம்பியன்ஸ் லீக் தொடரில் அரையிறுதியில் கலந்து கொள்வதற்காக ஜெய்ப்பூர் சென்றுள்ளார்.
அப்போது பைக் பிரியரான டோனி மட்டும் டெல்லியில் இருந்து ஜெய்ப்பூருக்கு தனது தனது ஐரோப்பிய தயாரிப்பான எக்ஸ் 132 ஹெலிகேட் பைக்கில் சென்றுள்ளார். இதன் பதிவு எண் 7781(டோனியின் பிறந்த நாள் 07.07.1981).
265 கி.மீ தூரம் பயணித்து ஜெய்ப்பூர் நகரத்தை அடைந்ததும், பைக்கினை ஹோட்டலுக்கு அனுப்பி விட்டு காருக்கு மாறியுள்ளார்.
ஆனால் தவறான பாதையில்(One Way) சென்ற டோனியை போக்குவரத்து பொலிசார் பார்த்து விட்டனர். உடனடியாக காரை நிறுத்தி, டோனியை வெளியே வரச்சொல்லி விசாரித்துள்ளனர்.
பின் டோனி என்று தெரிந்த உடனே எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

சரிநிகர் பத்திரிகையில் தனது ஊடக பணியை ஆரம்பித்து, பின்னர் தினக்குரல் பத்திரிகையில் நீண்ட காலம் பணியாற்றிய ஊடகவியளாளரான ஆரையம்பதி பரமகுட்டி மகேந்திரராஜா என்ற ரவிவர்மன் நேற்று காலமானார்.
ரவிவர்மன் கலைத்துவமான பல படைப்புகளையும், செய்தி ஆக்கங்களையும், கட்டுரைகளையும் தந்த நல்லதொரு படைப்பாளியாவார்.
1980களின் நடுப்பகுதியில் தமிழீழ மக்கள் விடுதலைக்கழத்தில் (புளொட்), மது என்ற பெயரில் உறுப்பினராக இருந்த ரவிவர்மன் பின்நாளில் ஊடகத் துறையில் தன்னை இணைத்துக்கொண்டார்.
அன்னாரது பூதவுடல் இன்று மாலை 6.00 மணி வரை கொழும்பில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு பின் அவரது பிறப்பிடமான ஆரையம்பதிக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தினக்குரல் பத்திரிகையின் ஊடகவியலாளர் அமரர் ரவிவர்மாவுக்கு புளொட் அமைப்பு தனது அஞ்சலி தெரிவித்துள்ளது. அவ் அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தினக்குரல் பத்திரிகையின் பிரபல ஊடகவியலாளர் ரவிவர்மன் என்கின்ற பரமகுட்டி மகேந்திரராஜா மரணமடைந்த செய்தி எம்மையெல்லாம் பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 1980களில் புளொட் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்ட ரவிவர்மன் கழக ஊடகங்களின் வாயிலாகவும், புத்தகங்கள் வடிவிலும் தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்தி வந்தார். பின்னர் கழகத்திலிருந்து விலகி பத்திரிகைத் துறையில் தன்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.
ரவிவர்மாவுக்கு தனது இளம்வயதில் இயல்பிலேயே வாய்த்த அறிந்துகொள்ளும் ஆர்வமும், எழுத்தாற்றலும், சிநேகமனப்பாங்கும் அவரை ஒரு தேர்ந்த செய்தியாளராக உருவாக்கியிருந்தது.
ரவிவர்மா சமூக அக்கறையுடனும், பொறுப்போடும் பக்கச் சார்பின்றி நேர்மையாக துணிந்து நின்று செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் ஆக்கங்களையும் மக்களுக்கு வழங்கிவந்த ஒரு நீண்டகால பத்திரிகையாளராவார்.
ஒரு செய்தியாளராக இருந்து தமிழ் மக்களுடைய அவலங்களையும், அவர்களின் அன்றாட பிரச்சினைகளையும் வெளிக்கொணர்வதில் முழு மூச்சோடு பணியாற்றிவந்தவர்களில் ரவிவர்மனின் பங்கு அளப்பரியது.
யுத்த காலத்தில் பிரத்தியேகமாக தமிழ் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விடயங்களை பல்வேறு நெருக்கடிகள் மத்தியிலும் அஞ்சாது செய்திகளாகவும் கட்டுரையாகவும் திறம்பட வெளிப்படுத்துவதில் ரவிவர்மா அயராது பாடுபட்டவர்.
தாம் சார்ந்திருந்த மற்றும் சாராத அரசியல் கட்சிகளுடன் மாத்திரமன்றி சகல தரப்பினரோடும் ஒரு அந்நியோன்ய உறவினைப் பேணிவந்த ரவிவர்மா சகலருடனும் மிகப் பண்பாகவும், இனிமையாகவும் பழகும் நற்குணம் வாய்ந்தவர்.
கடந்த சில நாட்களாக சுகவீனமுற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் அவர் நேற்றிரவு மரணமடைந்துள்ளார். அன்னாரின் இழப்பானது பத்திரிகைத் துறைக்கு மாத்திரமல்லாது தமிழ் சமூகத்திற்கும் ஓர் பேரிழப்பாகும்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கம் அன்னாரின் துணைவியார், மகன்மார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருடனும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந் துயரினைப் பகிர்ந்து கொள்வதோடு, அன்னாருக்கு எமது அஞ்சலிகளையும் செலுத்துகின்றோம் என அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.