நாற்காலியில் கட்டி வைத்து இளம்பெண் கொலை : கணவரின் வெறிச்செயல்!!

பெங்களூருவில் ஒரு நபர் தனது மனைவியைக் கொன்றதாகக் கூறி கைது செய்யப்பட்டதாக போலீஸார் புதன்கிழமை தெரிவித்தனர். போலீஸ் புகாரின்படி, 25 வயதான நடன பயிற்றுவிப்பாளர் நவ்யஸ்ரீ, தனது கணவர் கிரணுடன் கெங்கேரி உபநகரா எஸ்எம்வி லேஅவுட்டில் வசித்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது.

நவ்யஸ்ரீயின் தோழியான ஐஸ்வர்யா, காவல்துறையில் புகார் அளித்துள்ள நிலையில், ஆகஸ்ட் 27ஆம் தேதி காலை நவ்யஸ்ரீயிடம் இருந்து தனக்கு ஒரு செய்தி வந்ததாகக் கூறினார். மாலை 4.30 மணியளவில் ஐஸ்வர்யா நவ்யஸ்ரீயின் வீட்டிற்கு வந்தபோது, ​​அவர் வீட்டிலும் வெளியிலும் துன்பத்தை அனுபவிப்பதாக கூறினார்.

நவ்யஸ்ரீ மற்றொரு நண்பரான அனிலுக்கு போன் செய்து, தனது பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்து, அவரை சந்திக்குமாறு கேட்டுக் கொண்டார். அன்று மாலை மூவரும் சந்தித்தனர், அங்கு நவ்யஸ்ரீ தனது கணவருக்கு எதிராக புகார் அளிக்குமாறு அனில் பரிந்துரைத்தார், போலீஸ் தலையீடு திருமண பிரச்சினைகளை தீர்க்க உதவும் என்று நம்பினார்.

அனிலை இறக்கிவிட்டு, நவ்யஸ்ரீயும் ஐஸ்வர்யாவும் இரவு 11.30 மணியளவில் முன்னாள் வீட்டிற்குத் திரும்பி படுக்கைக்குச் சென்றனர். மது அருந்திய ஐஸ்வர்யா மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது நவ்யஸ்ரீ இறந்து கிடந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினரை எச்சரித்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

மனைவி மீது சந்தேகம் கொண்ட நவ்யஸ்ரீயின் கணவர் கிரண், மாற்று சாவியை பயன்படுத்தி வீட்டிற்குள் நுழைந்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அந்த பெண் நாற்காலியில் கட்டி வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.ஐஸ்வர்யா அளித்த புகாரின் பேரில், கிரண் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டில் அதிகரிக்கும் நோய் ஆபத்தை குறைக்க எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!!

இலங்கையில் தற்போது சுவாசம் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால இதனை தெரிவித்துள்ளார்.

தேசிய சுகாதார மற்றும் பராமரிப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில், நகரமயமாக்கல், வளி மாசுபாடு, காலநிலை மாற்றம் போன்ற காரணிகளால் சுவாச ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை தொடர்ந்து, இலங்கையில் சுவாச நோய்களின் ஆபத்தை குறைக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்களை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

 

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு முகம்கொடுக்கவிருக்கும் பிள்ளைகள் பல நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ரிட்ஜ்வே ஆர்யா வைத்தியசாலையின் சிறுவர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் தொடர்பில் பெற்றோர்களால் கொடுக்கப்பட்ட மன அழுத்த சூழ்நிலையே இதற்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெற்றோர்களால் பிள்ளைகள் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறை காரணமாக வயிற்றுவலி, வாந்தி, தலைவலி, சரியான உடல் செயல்பாடுகள் இன்மை போன்ற பல நோய்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் பல நோய்வாய்ப்பட்ட சிறுவர்கள் பதிவாகி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளைகளின் மன நிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வைத்தியர் வலியுறுத்தியுள்ளார்.

இதன் காரணமாக பிள்ளைகளை சுதந்திரமாக படிக்க அனுமதிக்குமாறு பெற்றோர்களிடம் வைத்தியர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

சூரியனின் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காலநிலை தொடர்பான அறிவிப்பு!!

சூரியனின் தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 06ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

இதன்படி இன்று(30.08.2024) நண்பகல் 12.11 அளவில் வவுனியா, வண்ணாமோட்டை, அனல்கட்டிமடி மற்றும் பெரியபண்டிவிரிச்சான் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படக்கூடும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 50 மில்லி மீற்றர் வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.

மேலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

 

கோர விபத்தில் மகள் பலி – தந்தை படுகாயம்!!

காலியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

யக்கலமுல்ல, கராகொட பிரதேசத்தில் நேற்று விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிள் மீது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை மற்றும் மகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி மகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியின் பழைய மாணவர்களுக்கு ஓர் அழைப்பு!!

வவுனியாவில் கடந்த 20 வருடங்களுக்கு மேல் இயங்கிவரும் வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் நாளை (31.08.2024) சனிக்கிழமை காலை 10 மணியளவில் கல்லூரியின் பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

கல்லூரியின் அதிபர் தலைமையில் இடம்பெறவுள்ள பொதுக் கூட்டத்திற்கு பழைய மாணவர்கள் அனைவரையும் தவறாது கலந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

வவுனியாவில் இருந்து குடும்பப் பெண் கடத்தல் : வானுடன் 4 பேர் கைது!!

வவுனியாவில் இருந்து குடும்பப் பெண் ஒருவர் கடத்தப்பட்ட நிலையில் அவர் மீட்கப்பட்டதுடன் வானுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, கொக்குவெளி, அரசடி வீதியில் வசித்து வந்த குடும்ப பெண் ஒருவரை யாழ்ப்பாணத்தில் இருந்து வான் ஒன்றில் வந்த குழுவினர் கடத்திச் சென்றுள்ளனர். வீட்டில் இருந்த பெண்ணின் மாமியார் பெண்ணை தூக்கிச் சென்றவர்களை விரட்டிய போது அவரை உதைந்துவிட்டு சென்றுள்ளனர்.

இதன்பின் மாமியார் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலை குற்றத்தடுப்பு பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஹேமந்த தலைமையில்,

உப பொலிஸ் பரிசோதகர் அகமட், பொலிஸ் சார்ஜன்ட் திலீபன் (61461), பொலிஸ் கொன்தபிள்களான தயாளன் (91792), ரணில் (81010) கால்கே (9200) உள்ளடங்கிய பொலிஸ் குழுவினர் விசாரணைகளை விரைந்து செயற்பட்ட பொலிசார் குறித்த வாகனம் சென்ற பாதையை பின் தொடாந்து சென்ற போது குறித்த வாகனத்தை பளைப் பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்துள்ளதுடன், குறித்த பெண்ணையும் மீட்டுள்ளனர்.

இதன்போது கடத்தலுக்கு பயன்படுத்த வாகனம் பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், நான்கு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மணியந்தோட்டம், இருபாலை, சுன்னாகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நான்கு பேரையும் நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியால் விபரீதம்.. பெற்ற தாயே குழந்தைக்கு எமனாக மாறிய சோகம்!!

இந்தியாவில் காஜலும் அவரது கணவரும் பீகார் மாநிலம் முசாபர்நகரில் வசித்து வந்தனர். இவர்களுக்கு மிஸ்தி (3) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் காஜல் தனது கணவரை பிரிந்து கள்ளக்காதலனுடன் வாழ விரும்பியுள்ளார்.

ஆனால் காதலியின் குழந்தையை கூட அழைத்து வர கள்ளக்காதலன் சம்மதிக்கவில்லை. இதனால், குற்றச் சம்பவங்களின் பின்னணி தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சியான கிரைம் பாட்ரோல் என்ற நிகழ்ச்சியை பார்த்துவிட்டு, காஜல் தனது குழந்தையின் கழுத்தை அறுத்து, அப்பகுதியில் உள்ள குப்பையில் சூட்கேஸில் வீசியுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸார், அப்பகுதியில் சிவப்பு நிற உடை ஒன்று கிடந்ததைக் கண்டனர். அதில் ஒரு குழந்தையின் உடல் இருந்தது.அதன்பிறகு குழந்தை யார் என்பதை கண்டுபிடித்து அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது தரையில் ரத்தம் கசிந்து கிடப்பதை கண்டனர்.

ஆனால் காஜல் அங்கு இல்லாததால், அவரது தந்தைக்கு போன் செய்தபோது, ​​அவரது உறவினர் வீட்டில் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, மிஸ்தியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் காஜலின் செல்போன் சிக்னல் மூலம் போலீசார் அவரை கண்டுபிடித்தனர். பின்னர் அங்கு சென்று பார்த்தபோது காஜல் தனது காதலனுடன் வசித்து வருவது தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தது. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து காஜலை கைது செய்தனர். காதலனுக்கு ஏதேனும் பங்கு உள்ளதா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருமகன் திடீர் மரணம் : அதிர்ச்சியில் உயிரை விட்ட மாமியார்!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் அருண்குமார் (24). ஃபாஸ்ட் புட் மாஸ்டர். இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு நிலக்கோட்டை அருகே உள்ள சிலுகுவார்பட்டியை சேர்ந்த நாகம்மாள் (21) என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். நாகம்மாள் கர்ப்பமானதை தொடர்ந்து, கடந்த வாரம் வளைகாப்பு நடந்தது.

பின்னர் நாகம்மாளை அவரது பெற்றோர் தங்கள் கிராமத்திற்கு அழைத்துச் சென்றனர். குழந்தை பிறக்க சில நாட்களே உள்ள நிலையில், அருண்குமார் தினமும் இரவு தனது மாமனார் வீட்டிற்கு சென்று மனைவியை பார்ப்பது வழக்கம்.

கடந்த 25ம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் சிலுக்குவார்பட்டிக்கு சென்ற இவர், அம்மையநாயக்கனூர் சர்ச் எதிரே உள்ள சாலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.

அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் இறந்தாரா அல்லது வேறு காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, மகள் கர்ப்பமாக இருந்தபோது மருமகன் இறந்துவிட்டதால் நாகம்மாளின் தாய் சின்னப்பொண்ணு (46) கதறி அழுதுள்ளார்.

இதையடுத்து, நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மாமியார் உயிரிழந்தார். கணவர் இறந்ததையடுத்து, நாகம்மாள் உடல்நிலை மோசமடைந்து, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கொழுந்து விட்டெரியும் தீயிலிருந்து தப்ப ஏழாவது மாடியிலிருந்து குழந்தையுடன் குதித்த தம்பதியர்!!

தங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீப்பற்றியதால், தீயிலிருந்து தப்ப தங்கள் இரண்டு மாதக் குழந்தையுடன் ஏழாவது மாடியிலிருந்து குதித்தார்கள் ஒரு தம்பதியர்.

பிரேசில் நாட்டில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் ஏழாவது மாடியில் அமைந்திருந்த ஒரு வீட்டில் தங்கள் இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தவர்கள் லூயிஸ் (Luiz Evaldo Lima, 28) கிரேசியேன் (Graciane Rosa de Oliveira, 35) தம்பதியர்.

செவ்வாயன்று, தம்பதியர் வாழ்ந்துவந்த குடியிருப்பில் தீப்பற்றியுள்ளது. தீயின் உக்கிரம் அதிகரிக்கவே, ஜன்னல் வழியாக கீழே குதிக்க முடிவு செய்துள்ளார்கள் தம்பதியர்.

கீழே நின்றவர்கள் குதிக்கவேண்டாம் என சத்தமிட, அதற்குள் தீ வேகமாக பரவ, தங்கள் இரண்டுமாதக் குழந்தை Léo Oliveira de Limaவை கட்டியணைத்தபடி தம்பதியர் கீழே குதித்துள்ளார்கள்.

ஏழாவது மாடிலியிலிருந்து கீழே விழுந்த வேகத்தில் மூன்று பேரும் பலியாகிவிட்டார்கள். இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள்.

தம்பதியரின் மூத்த குழந்தை, ஏழு வயது மகள், அவர்களுடைய வீடு தீப்பற்றியபோது பள்ளிக்குச் சென்றிருந்ததால் உயிர் பிழைத்துள்ளாள். அந்தச் சிறுமி தற்போது தன் தாத்தா பாட்டி வீட்டில் இருக்கிறாள்.

இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் துயரத்தையும் உருவாக்கியுள்ள நிலையில், பொலிசார் அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

 

தங்கம் வாங்க காத்திருப்போருக்காக மகிழ்ச்சி தகவல் : வீழ்ச்சியடைந்து வரும் தங்கத்தின் விலை!!

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்த தங்க விலையானது மீணடும் படிப்படியாக அதிகரித்துச்செல்கின்றது.

இன்றைய (29.08) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 757,143 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

24 கரட் தங்க கிராம் 26,710 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுண் 213,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் 24,490 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 22 கரட் தங்கப் பவுண் 195,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,380 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் 187,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

 

10 மாதங்களில் இருமுறை கர்ப்பம் : மூன்று குழந்தைகள் பெற்ற பெண்!!

பெண் ஒருவர் பத்து மாதத்தில் வெவ்வெறு பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது .

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் சரிதா ஹோலண்ட் (வயது 41). திருமணமான இவர் கர்ப்பம் ஆனார். பிரசவத்தில் அவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. பின்னர் 10 வார இடைவெளியில் சரிதா மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார்.

குறுகிய காலத்தில் தான் மீண்டும் கர்ப்பம் அடைந்தது தொடர்பில் மருத்துவர்களிடம் ஆலோசித்தபோது, அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கும் என கூறியுள்ளனர்.

சரியாக 30 வாரங்கள் 5 நாட்கள் கழித்து சரிதா ஹோலண்டுக்கு பிரசவ வலி எடுத்தது. ஆபரேஷன் மூலம் நடந்த பிரசவத்தில் அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன.

2 மாதங்கள் குறைபிரசவத்தில் அந்த குழந்தைகள் பிறந்த நிலையில் குழந்தைகளுடன் வீடு திரும்பியநிலையில் இதுதொடர்பான வீடியோவை அவர் தன்னுடைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த பெண் ஒரு குழந்தை பெற்ற 2-வது மாதத்தில் மீண்டும் கர்ப்பம் தரித்து 8-வது மாதத்தில் மேலும் 2 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். எனவே 10 மாதங்களில் 3 குழந்தைகளை பெற்றதால் சமூக வலைத்தளத்தில் இந்த சம்பவம் வைரலாகி வருகின்றது.

சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கம் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!

காலநிலையில் இன்றையதினம் ஏற்படும் மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் நேற்று(28.08.2024) முதல் செப்டம்பர் மாதம் 06ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

இதன்படி இன்று(29.08.2024) நண்பகல் 12.11 அளவில் பலப்பிட்டி, ஒட்டுசுட்டான், மாங்குளம், தேரங்கண்டல் மற்றும் மல்லாவி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படக்கூடும். மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 50 மில்லி மீற்றர் வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.

 

பிரித்தானியாவில் சாலை நடுவில் விழுந்த விமானத்தால் பரபரப்பு!!

பிரித்தானியாவின் சாலை ஒன்றில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் குளோசெஸ்டர்ஷைர் பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, அப்பகுதியில், சாலைகள் மூடப்பட்டதுடன் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.

குறித்த சிறிய ரக விமானத்தை உடனடியாக தரையிறக்க முற்பட்டதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் இருந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த விபத்தில் வேறு எந்த வாகனங்களும் பாதிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான சவர்க்காரத்தில் மோசடி : விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!!

குழந்தைகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் குறைந்த TFM மதிப்பில் குழந்தைகளுக்கான சவர்க்காரங்களை தயாரித்து விற்பனை செய்யும் மோசடியில் பலர் ஈடுபட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குழந்தைகளுக்கான சவர்க்காரங்களுக்கு SLS சான்றிதழைப் பெறுவது கட்டாயமில்லை என்பதால், சில நிறுவனங்கள் TFM மதிப்பில் குழந்தை சவர்க்காரங்களை தயாரித்து விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டுள்ளன.

இலங்கை தர நிர்ணய பணியகத்தின் பரிந்துரைகளின்படி, இலங்கை சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் சவர்க்காரங்களின் TFM பெறுமதி 78 ஆக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நாட்டில் உள்ள பிரதான சவர்க்கார உற்பத்தி நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சவர்க்காரத்தை நுகர்வோர் விவகார அதிகாரசபை பரிசோதித்த போது அதன் TFM பெறுமதி 63 என கண்டறியப்பட்டுள்ளது.

இது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் நிலை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த நிறுவனம் தயாரித்த குழந்தைகளுக்கான சவர்க்கார பொதியில் இலங்கை தரநிலைப் பணியகம் SLS சான்றிதழ் அச்சிடப்பட்டதாகவும், 78 எனப் பொதியில் TFM மதிப்பாக மோசடியான முறையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை கடந்த ஜூலை 6ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், நிறுவனம் தவறை ஒப்புக்கொண்டிருந்தது.

அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்

குறித்த நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் குழந்தைகளுக்கான சவர்க்காரத்தினை கொள்வனவு செய்து பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு அதிகார சபை அண்மையில் ஊடகங்கள் ஊடாக பொதுமக்களுக்கு அறிவித்திருந்தது.

இதற்கிடையில், இலங்கை தர நிர்ணய பணியகத்திடம் இருந்து SLS சான்றிதழ் பெற்ற சவர்க்காரங்களின் பட்டியலைப் பெற்று, அந்த சவர்க்காரங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தரத்துடன் TFM மதிப்பு உள்ளதா என்பதை சரிபார்க்க நுகர்வோர் விவகார அதிகாரசபை திட்டமிட்டுள்ளது.

சுமார் ஏழு விதமான சவர்க்கார வகைகள் இருப்பதாகவும்,.வீடுகள் மற்றும் சிறிய அளவிலான தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு வகையான சவர்க்காரங்கள் கொழும்பில் உள்ள மொத்த மற்றும் சில்லறை சந்தையில் விற்பனை செய்யப்படுவதுடன், அதன் TFM மதிப்பு தொடர்பான கடுமையான சிக்கல்கள் இருக்கலாம் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே குழந்தைகளுக்கான சவர்க்காரங்களை வாங்கும் போது மிக அவதானமாக செயற்படுமாறு பெற்றோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மகளுக்கு தந்தை செய்த கொடூரம்!!

பண்டாரவளையில் 12 வயது மகளை தீக்குச்சியால் முகத்தை எரித்து கொடூரமான முறையில் சித்திரவதை செய்த தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லியாங்கஹவெல, அம்பதன்டேகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனது மகளை இவ்வாறு தந்தை சித்திரவதை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 40 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையாகும்.

பண்டாரவளை அம்பதந்தேகம பிரதேசத்தின் லியங்கஹவெல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 7ஆம் வகுப்பு பாடசாலை மாணவியின் முகம் தீக்குச்சியால் எரிக்கப்பட்ட நிலையில் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவியின் தாயார் தேயிலை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும், அவருக்கு 6 வயதுடைய சகோதரியொருவர் இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மாலை பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்த சிறுமி சமையலறை குழாய்க்கு அருகில் கைகளை கழுவிக் கொண்டிருந்த போது தந்தை சிறுமியை திட்டி மிரட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

தீக்காயங்களுடன் குறித்த மாணவி பாடசாலை சென்ற நிலையில், சிறுமியின் முகத்தில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதை அதிபர் அவதானித்துள்ளார்.

உடனடியாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் தந்தை பண்டாரவளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்