வாழ்வை தேடிச்சென்ற இடத்தில் வாழ்க்கையை முடித்த ஈழத்தமிழ் இளைஞன் : துயரத்தை ஏற்படுத்திய சம்பவம்!!

அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புகலிடக்கொள்கையே அவரின் மரணத்திற்கு காரணம் என தமிழ் அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ் அகதிகள் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது,

தன்னைத் தானே தீக்கிரையாக்கிக் கொண்டு இளைஞன் மரணம். 23 வயதேயான இந்த இளைஞனை ஆஸ்திரேலியா அரசாங்கமும், அரசாங்கத்தின் அகதிகள் மீதான மோசமான கொள்கைகளுமே படுகொலை செய்துள்ளது.

அவனது மரணப்படுக்கையின் கடைசி நொடிகளில் அவரோடு கூட இருந்த ரதி கூறியது இதுதான். “பல எதிர்கால கனவுகளோடும், வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற லட்சியத்தோடும் வாழ்ந்த 23 வயதான இளைஞன் மனோ.

உள்நாட்டுப் போரில் பாதுகாப்புத் தேடி வந்த ஒரு இளைஞனை இந்த நாட்டின் மனிதத் தன்மையற்ற அகதிகளுக்கு விரோதமான போக்கு, அதன் மூலம் அவன் சந்தித்த தனிப்பட்ட, சமூகப் பிரச்சனைகள் வாழ்வின் மீதான நம்பிக்கை இழக்கச் செய்ததோடு இனி வாழ்வதே வீணென்று இத்தகைய பாரதூரமான முடிவை எடுக்கச் செய்துள்ளது.

கடந்த 12 ஆண்டுகளில் எத்தனையோ அப்பாவி அகதிகளின் அகால மரணங்களை நாங்கள் கடந்து வந்துள்ளோம் .

இதோ இன்று இன்னொரு இளைஞன். இன்றைக்கு போராடிக் கொண்டிருக்கும் பல தமிழ் அகதிகள் போல் பாதுகாப்பற்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு ஒவ்வொரு நாள் விடியலையும் தங்களுக்கு மாற்றம் ஏற்பட்டு விடும் என்று கனவுகளோடு இங்கிருந்து ஆபத்து நிறைந்த தங்கள் நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டு விடுவோமோ என்ற பயத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் பல அகதிகளின் ஒருவரின் மரணம் இது என்றும் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

கிறிஸ்துவ குடும்பத்தை பின்னணியாகக் கொண்ட மனோ இலங்கை இனவழிப்பு போரின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு குடும்பமாக தனது பன்னிரண்டாவது வயதில் அவரது நான்கு சகோதரர்களோடு 2013 ஆம் ஆண்டு கப்பல் வழிப் பயணத்தால் ஆஸ்திரேலிய வந்தடைந்தார்.

இங்கு வந்து பல மாத தடுப்பு காவலுக்கு பிறகு சமூகத்திற்கு விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் செவ்வாய் அன்று தனக்குத்தானே தீயிட்டுக் கொளுத்தி 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில்( Alfred Hospital, Melbourne) அனுமதிக்கப்பட்ட இன்று 12:27 மணி அளவில் தன் மூச்சை நிறுத்திக் கொண்டான் அந்த இளைஞன்.

மகிழ்ச்சியாக சாமானியமான வாழ்க்கையை வாழ வேண்டிய ஒரு இளைஞனை இத்தகைய மன உளைச்சலுக்கு உள்ளாக்கி அவன் தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு தள்ளியுள்ளது

இந்த நிரந்தரமற்ற அகதி வாழ்க்கை. ஆஸ்திரேலியா அரசாங்கம் இத்தனை ஆண்டுகளாகியும் தஞ்ச கோரிக்கையை அங்கீகரிக்காத பட்சத்தில் மேலும் இலங்கைக்கு அகதிகளை அனுப்ப முற்படும் என்றால் இங்கிருந்து மரணிப்பதே மேல் என்று பல அகதிகள் எண்ணங்கள் மாறி இருப்பது அவர்கள் வாழ்வின் மீதான அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.‌

இத்தகைய சோர்வடைந்த வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல உண்மையான மனநிலை என்று ஒரு இளைஞன் தன் உயிரைத் தீக்கிரையாக்கி அனைவருக்கும் உணர்த்திச் சென்றுள்ளான்.

ஒரே மாதத்தில் இரு அகதிகளை இழந்துள்ளோம். இது இதோடு முடியப்போவதும் இல்லை என்ற பயம் எங்கள் அனைவரையும் ஆட்கொண்டுள்ளது எனவும் பேரவை வேதனை வெளியிட்டுள்ளது.

 

சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரம்மாண்டமாக ஒளிரும் பொருள் கண்டுபிடிப்பு!!

சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமான ஒளிரும் பொருளை பிரபஞ்சத்தில் வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமுடைய இந்த குவாசருக்கு J0529-4351 என்று பெயரிடப்பட்டுள்ளது.

இது மிகவும் பிரகாசமான உள்ளதாகவும் வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்தின் VLT எனப்படும் மிகப்பெரிய தொலை நோக்கி மூலம் இதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மத்தியில் கருந்துளைகளைக் கொண்டு விண் மீன் திரள்கள் சூழ்ந்த இவ்வகையாக ஒளிர்வது குவாசர்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

மத்தியில் உள்ள கருந்துளைகளால் குவாசர்ஸ் இயக்கப்டுகிறது. இந்த கருந்துளைகளில் வாயு மற்றும் தூசிகள் அண்டும்போது மின்காந்த கதிர்வீச்சு வெளிப்படுகிறது.

இதுவே அதன் ஒளிரும் தன்மைக்குக் காரணமாக அமைத்துள்ளது. இதுவரை கண்டறியப்படாத பிரகாசமான குவாசர் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்த குறிப்பிட்ட குவாசர் வேகமாக வளர்ந்து வருகிறது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த குவாசர் பூமியில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால், அதன் ஒளி நம்மை வந்தடைய 12 பில்லியன் ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக்கொள்ளும் எனவும் வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குன்றும் குழியுமாகக் காட்சியளித்த சாலை எமதர்மராஜா செய்த செயல்!!

இந்தியாவின் கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் பெய்த கன மழையால் வீதிகள் குன்றும் குழியுமாகக் காட்சியளிக்கின்றன.

இந்நிலையில், வீதிகளை புனரமைக்க வேண்டும் என வலியுறுத்தி அம்மாவட்ட மக்கள் வித்தியமான முறையில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன்படி, உடுப்பி – மால்பே பிரதான வீதியில் எமதர்மன் மற்றும் சித்திரகுப்தன் வேடம் அணிந்த சில ஆண்கள் வீதிகளில் பள்ளமாக இருக்கும் பகுதிகளில் நீளம் தாண்டுதல் போட்டியை நடத்தியுள்ளனர்.

வீதிகளை புனரமைக்காவிட்டால் விபத்துக்கள் ஏற்படும் என்பதை வலியுறுத்தும் விதமாக, இந்தப் போராட்ட வடிவத்தை அவர்கள் முன்னெடுத்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பான காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

துபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பிரபல குற்றக் கும்பல் உறுப்பினர்!!

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழுவினால் டுபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலைச் சேர்ந்த கிட்மால் பினோய் தில்ஷான் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

கொலை, மிரட்டல், பணம் பறித்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு டுபாயில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழுவினால் இன்று (29) அதிகாலை டுபாயிலிருந்து விமானத்தின் ஊடாக பலத்த பாதுகாப்புடன் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

இவர் மத்துகம ஷான் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் தலைவரின் பிரதான உதவியாளர் என்றும் கூறப்படுகின்றது.

 

வவுனியா பூம்புகார் மாணவர்கள் வடமாகாண மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் சாதனை!!

2024 ஆண்டு வடமாகாண மெய்வல்லுநர் போட்டிகளில் வவுனியா வடக்கு வலய பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றான பூம்புகார் கண்ணகி வித்தியாலய மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

அந்தவகையில் வவுனியா வடக்கு பூம்புகார் கண்ணகி வித்தியாலயத்தை சேர்ந்த மாணவன் க.சகிந்தன் 18 வயதுப் பிரிவில் 800 மீற்றர் ஓட்டத்தில் தங்கப்பதக்கமும், 1500 மீற்றர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும்,

பா.விழிவண்ணன் 800 மீற்றர், 1500 மீற்றர், 3000 மீற்றர் போட்டிகளில் 3 வெண்கலப்பதக்கங்களைப் பெற்றுள்ளதுடன் அவர் அரைமரதன் போட்டிலும் 3ம் இடத்தினைப் பெற்றுள்ளார்.

இதன் மூலம் பூம்புகார் கண்ணகி வித்தியாலய மாணவர்கள் வலய மட்டத்தில் முதல் நிலைப் பாடசாலையாகவும் திகழ்கின்றது.

கிராமப்புறப் பாடசாலையாகவும் பொதுப் பேருந்துச் சேவையற்றதும், பொருளாதாரப் பின்னடைவுமுள்ள இப்பாடசாலையிலிருந்து வடமாகாண வெற்றியாளர்களாவது இலகுவான காரியமில்லை.

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக மரணம்!!

வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்ர் ஒருவர் இன்று (29.08) மரணமடைந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, கற்பகபுரம் பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை தனது நண்பர்களுட்ன் மது விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் மீது அங்கு வந்த குழுவொன்று கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து காயமடைந்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் வவுனியா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதன்போது, சிகிச்சை பலனின்றி அவர் இன்று (29.08) மரணமடைந்துள்ளார். மரணமடைந்தவர் யாழ்ப்பாணம், சில்லாலை பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான மைந்தன் இருதயராஜா (வயது 36) என்பவராவார்.

வவுனியா வைத்தியசாலையில் சடலத்தை பார்வையிட்ட மாவட்ட நீதிபதி இது தொடர்பான வாக்குமூலங்களையும் பெற்றிருந்தார். சம்பவம் தொடர்பில் பூவரசன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய சாரதிக்கு நேர்ந்த சோகம்!!

வவுனியா நகரில் ஆபத்தான வகையில் காரைச் செலுத்தி தொடர்ச்சியான விபத்துக்களை ஏற்ப்படுத்திய கார் சாரதி இளைஞர்களால் விரட்டிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (28.08) மாலை இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் இருந்து காரை செலுத்தி வந்த இளைஞர் ஒருவர் உக்கிளாங்குளம் பகுதியில் விபத்து ஒன்றை ஏற்ப்படுத்திவிட்டு நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளார். இதன் போது வைரவபுளியங்குளம், மற்றும் நகரப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஏனைய வாகனங்களுடனும் மோதி விபத்தை ஏற்ப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து குறித்த காரை இளைஞர்கள் சிலர் விரட்டிச் சென்றுள்ளனர். அதிவேகமாக பயணித்த கார் பூந்தோட்டம், பெரியார்குளம் பகுதியில் வீதியின் கரையில் இருந்த மின்சார கம்பத்துடன் மோதி நின்றது.

காரின் சாரதியை மடக்கிப் பிடித்த இளைஞர்கள், அவரை நையப்புடைத்ததுடன் பொலிசாரிடம் ஒப்படைத்தனர். விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறைந்து வரும் Y குரோமோசோம்கள் : இனி ஆண் குழந்தையே பிறக்காதா அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல்!!

மனிதர்களை ஆண்கள் பெண்கள் என தீர்மானிப்பது குரோமோசோம்கள் ஆகும். இந்நிலையில் எதிர்காலத்தில் ஆண் குழந்தைகள் பிற்றக்காத நிலை ஏற்படலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பெண்களுக்கு XX குரோமோசோம்களும் , ஆண்களுக்கு XY குரோமோசோம்களும் உள்ள நிலையில் ஆண்தன்மையை தீர்மானிக்கும் Y குரோமோசோம்கள் சுருங்கி வருவதாக புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

X குரோமோசோம்கள் Y குரோமோசோம்களுடன் சேரும்பொழுது ஆண் குழந்தைகள் பிறக்கின்ற நிலையில் அவற்றின் அழிவினால், வருங்காலங்களில் ஆண் குழந்தைகளே பிறக்காத நிலை ஏற்பட்டு அது இனப்பெருக்க சுழற்சியை உடைக்கலாம்.

தொடக்கத்தில் மனிதனில் உள்ள Y குரோமோசோம்களில் 1,438 மரபணுக்கள் இருந்த நிலையில் கடந்த 300 மில்லியன் ஆண்டுகளில் அவற்றில் 1,393 மரபணுக்கள் அழிந்துவிட்டது.

தற்போது Y குரோமோசோம்களில் 40 மரபணுக்கள் மட்டுமே மிச்சமுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த 11 மில்லியன் ஆண்டுகளில் அவை மொத்தமாக அழிந்துவிடும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். எனவே 11 மில்லியன் ஆண்டுகள் கழித்து என்ன நடக்கும் என்ற கேள்விக்கும் விஞ்ஞானிகள் பதில் வைத்துள்ளனர்.

அதாவது, ஸ்பைனி எலிகளை வைத்து ஆராய்ச்சி செய்தபோது, அவற்றில் Y குரோமோசோம்கள் முற்றிலுமாக அழிந்த பிறகு புதிய வகையான குரோமோசோம்கள் பரிணமித்துள்ளமை கண்டறியப்பட்டது.

எனவே மனிதர்களிடம் Y குரோமோசோம்கள் முற்றிலுமாக அழியும் போது, புதிய வகையிலான பாலினங்கள் உருவாகும் என்று நம்பப்படுகிறதாக ஆராய்ச்சியின் முடுவுகள் ஊடாக தெரியவந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் விபரீத முடிவெடுத்த இலங்கைத் தமிழர் : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!

அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் தனக்குதானே தீ மூட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

புத்தளத்தை சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. அவர் மெல்பன் நகரின் மேற்கு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள Sunshine என்ற இடத்தில் வசித்துள்ளார்.

இவர் 2013ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் இந்தியாவிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்து புகலிடம் கோரியுள்ளார்.  எனினும், அவருக்கு தற்காலிகமாக தங்குவதற்கு, Bridging Visa வழங்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான நிலையில், அவர் மன அழுத்ததில் இருந்ததாகவும், தனக்கு தானே எரியூற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கைதான போதைப்பொருள் கடத்தல் மன்னனின் மகனுக்கு பிணை!!

போதைப்பொருள் வியாபாரி என கருதப்படும் ஷிரான் பாஷிக்கின் மகன் நதீன் பாஷிக்கிற்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டதையடுத்து, கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

இன்று காலை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

டுபாயில் மறைந்திருந்துள்ள போதைப்பொருள் வியாபாரியாக கருதப்படும் ஷிரான் பாஷிக்கின் மகன் நதீன் பாஷிக் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது STF அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்ற பிரபல போதைப்பொருள் வியாபாரி ஷிரான் பாசிக் அலியின் மகன் நதின் பாசிக் அலி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

இவர் நேற்று (27) இரவு டுபாயில் இருந்து இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வருகை முன்னுரிமை அடிப்படையில் இன்று முதல் கடவுச்சீட்டு விநியோகம்!!

நேரம் மற்றும் திகதியை முன்கூட்டியே பதிவு செய்து கடவுச்சீட்டுக்களை வழங்கும் முறை இன்று (28) முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக வருகை முன்னுரிமை அடிப்படையில் கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்  தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய முறையின் மூலம் நாளொன்றுக்கு 750 கடவுச்சீட்டுகளை வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடவுச்சீட்டு வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமையினால் நேற்று (27) காலை குடிவரவு திணைக்களத்திற்கு முன்பாக திரண்ட பெருமளவான மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டதன் காரணமாகவே இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் திரண்ட உணவு, மலசலக்கூடம் உள்ளிட்ட வசதிகளின்றி நீண்ட நாட்களாக வரிசையில் காத்திருப்பதாக அங்கிருந்த மக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கடவுச்சீட்டுகளின் மட்டுப்படுத்தப்பட்ட விநியோகம் காரணமாக இந்த கட்டுப்பாடு அவசியமானது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விளக்கமளித்துள்ளது.

இதன்படி, முதலில் வருவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேவேளை, புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டை வழங்குவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக வெளிநாட்டு நிறுவனமொன்றிடமிருந்து விலை மனு பெறப்பட்டுள்ளதாகவும் டிரான் அலஸ் சுட்டிக்காட்டியிருந்தார்.

 

மின்சாரம் தாக்கிய கணவரைக் காப்பாற்றி இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

ஆந்திர மாநிலம், பத்ராத்திரி மாவட்டம் கொத்தகுடம் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் கணவரை காப்பாற்றிய பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.மின்சாரம் தாக்கியதில் இருந்து கணவரை காப்பாற்ற முயன்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் தற்போது உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆந்திர மாநிலம் பத்ரதாரி கொத்தகுடேம் மாவட்டத்தில் பாண்டுரங்கபுரம் கிராமத்தில் மளிகைக் கடை நடத்தி வருபவர் சர்வேஷ். இவருடைய மனைவி சம்மக்கா.

இந்த தம்பதியர் தங்களது மளிகைக் கடையில் பொருட்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த போது, சர்வேஷ் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. அவரது அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் சென்ற சம்மக்கா தனது கணவரை மீட்க முயன்றார்.

உடனடியாக சம்மக்காவையும் மின்சாரம் தாக்கியது. ஆனால், கட்டையால் தள்ளி விட முயன்றதில், சர்வேஷ் மின்சார தாக்குதலில் இருந்து தப்பித்தார்.

உடனடியாக சம்மக்காவை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகிலுள்ள மனுகுரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு, சம்மக்கா வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சர்வேஷ் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஓடும் பேருந்தில் இளம்பெண் மாரடைப்பால் மரணம்!!

இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் ஓடும் பேருந்தில் இளம்பெண் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், நிட்டவோலுவைச் சேர்ந்த இளம்பெண் ஹர்ஷா.

இவர் படித்து முடித்து விட்டு மஸ்கட்டில் பணிபுரிந்து வந்த நிலையில், விடுமுறையில் சொந்த ஊருக்கு திரும்பினார். மஸ்கட்டில் இருந்து இந்தியா திரும்பியவர் விஜயவாடாவில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக கோதாவரி செல்லும் தனியார் சொகுசுப் பேருந்தில் சென்றுக் கொண்டிருந்தார்.

தன்னுடைய மகள் நீண்ட நாட்கள் கழித்து வீட்டிற்கு வருகிறார் என்று ஹர்ஷாவின் பெற்றோரும், உறவினர்களும் அவரது வருகைக்காக காத்திருந்தனர். விமான நிலையத்தில் புறப்படுவதற்கு முன்பாக தனதுச் செல்போனில் புகைப்படம் எடுத்து பெற்றோர்களுக்கு அனுப்பியிருக்கிறார்.

பேருந்தில் ஹர்ஷாவுக்கு திடீரென நெஞ்சுவலி வந்துள்ளது. இது குறித்து பேருந்தில் அமர்ந்திருந்த பிற பயணிகள் உடனடியாக பேருந்து ஓட்டுநரிடம் தெரிவித்துள்ளனர். எனினும், சிறிது நேரத்திலேயே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பேருந்தில் அமர்ந்திருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்ற போது, ஹர்ஷா மாரடைப்பால் உயிரிழந்ததை மருத்துவர் உறுதி செய்துள்ளார்.பேருந்தின் பயணிகளிடையே இந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆடு மேய்த்துக் கொண்டே படித்து மருத்துவ கனவை நனவாக்கிய மாணவர்கள்!!

ஒரே கிராமத்தில் பிறந்து ஒரே பள்ளியில் படித்து அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கனவை நனவாக்கியுள்ளனர்.

தமிழக மாவட்டமான சிவகங்கை, காரைக்குடி அருகே கமலை என்ற கிராமத்தில் பிறந்து ஒரே பள்ளியில் படித்த மாணவர்களில் ஒரு மாணவர் மாற்றுத்திறனாளி இட ஒதுக்கீட்டிலும், மற்றொரு மாணவர் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டிலும் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் ஏழை மாணவர்கள் சேர்ந்து மருத்துவ கனவை நனவாக்கி வருகின்றனர்.

இதன்படி, கடந்த ஆண்டு 584 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்த நிலையில் இந்த ஆண்டு 622 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் ஒரே அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ரவி மற்றும் நாகராஜ் ஆகியோர் ஒரே மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்துள்ளனர்.

இதில் நாகராஜ் என்ற மாணவர் மாற்றுத்திறனாளி ஆவார். இந்த மாணவர் ஆடு மேய்த்துக் கொண்டே படிப்பில் கவனம் செலுத்தியுள்ளார். இவர், நீட் தேர்வில் 136 மதிப்பெண்கள் பெற்றுள்ள நிலையில், மாற்றுத்திறனாளி இடஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் சேர இடம் கிடைத்துள்ளது.

அதேபோல, ரவி என்ற மாணவர் நீட் தேர்வில் 592 மதிப்பெண் பெற்று 7.5 சதவீத இடஒதுக்கீடு காரணமாக அதே கல்லூரியில் தேர்வாகியுள்ளார்.

மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் தருண் என்ற மாணவர் 633 மதிப்பெண்கள் பெற்று 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார்.

மன்னார் உயிலங்குளம் வீதியில் கோர விபத்து : மூவர் படுகாயம்…!!!

மன்னார்(Mannar) உயிலங்குளம் பகுதியில் பட்டா ரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தானது நேற்று (27.08.2024)மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மன்னார்- மதவாச்சி பிரதான வீதி ,உயிலங்குளம் பகுதியில் நேர் எதிரே வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பட்டா ரக வாகனம் மோதி விபத்துக்கு உள்ளாகியதில் மோட்டார் சைக்கிள் மற்றும் பட்டா வாகனத்தில் பயணித்தவர்கள் இவ்வாறு படு காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக முருங்கன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதன்போது காயமடைந்தவர்கள் மன்னார் பகுதியைச் சேர்ந்த இருவரும் மாந்தை மேற்கு பகுதியை சேர்ந்த ஒருவரும் என்று தெரிய வருகிறது. இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை உயிலங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டதாக முறைப்பாடு செய்த பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

மீரிகம பிரதேசத்தில் வீட்டில் தனியாக இருந்த போது தன்னை தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக பொலிஸாரிடம் பொய் முறைப்பாடு செய்த பெண் ஒருவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அத்தனகல்ல பதில் நீதவான் சமித லால் கொடிசிங்க உத்தரவிட்டார்.

மீரிகம பிரதேசத்தில் உள்ள கிராமமொன்றில் வசிக்கும் 52 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வீட்டில் தனிமையில் இருந்த தன்னை பலவந்தமாக தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக சந்தேகநபர் மீரிகம பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்தப் முறைப்பாட்டின் பேரில், பொலிஸார் விசாரணை நடத்தி, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்த பின்னர், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, தனிப்பட்ட கோபத்தின் காரணமாக குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக பொய் முறைப்பாடு செய்ததாக தெரியவந்துள்ளது.

இங்கு, குற்றம்சாட்டப்பட்டவரை விடுதலை செய்ய உத்தரவிட்ட நீதவான், பொய் முறைப்பாடு செய்தமைக்காக முறைப்பாட்டாளரைக் கைது செய்து விசாரணை அறிக்கையுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த மீரிகம பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

அதற்கமைய, பொய் புகார் அளித்த பெண்ணை பொலிஸார் கைது செய்து வாக்குமூலம் பதிவு செய்து நீதிமன்றத்தில் அறிக்கையுடன் முன்னிலைப்படுத்தப்பட்டார். அதற்கமைய, அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் .