வெளிநாட்டில் மலர்ந்த காதல் : காதலியை தேடி இலங்கை வந்த காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

இலங்கை காதலியை பார்வையிட வந்த இந்திய பிரஜையான காதலன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று மல்வானே பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

அரேபிய நாடான துபாய்க்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கைபெண் , அங்கு வேலை இந்திய வாலிபர் ஒருவருடன் காதல் உறவில் இருந்துள்ளார். சம்பவத்தில் மல்வானே – வல்கம பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவர் சுமார் ஒன்றரை வருடங்களாக துபாயில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த பெண் கடந்த ஜூன் 20ஆம் திகதி மீண்டும் இலங்கைக்கு திரும்பினார். பெண்ணின் காதலனான இந்திய பிரஜையும் அவருடன் இலங்கைக்கு வருகை தந்து மல்வானே– வல்கம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், தன்னை திருமணம் செய்யவுள்ள இந்திய பிரஜையால் பிரச்சினை மற்றும் துன்புறுத்தல்கள் ஏற்படுவதாக பெண் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து பெண்ணையும் அவரது காதலனான இந்திய பிரஜையையும் பொலிஸார் அழைத்து விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போது இலங்கையில் தங்கியிருந்த காதலனின் விசா செல்லுபடியாகும் காலம் முடிவடைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 15 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை அவர் விசா நீடிப்பை பெற்றிருந்த நிலையில் அக் காலப்பகுதி முடிவடைந்த நிலையிலும் காதலன் இலங்கையில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து இந்திய பிரஜையை கைது செய்த பொலிஸார், அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

வவுனியாவில் சிறிசபாரத்தினத்தின் பிறந்த தினம் அனுஸ்டிப்பு!!

தமிழீழவிடுதலை இயக்கத்தின் தலைவர் சிறிசபாரத்தினத்தின் 72வது பிறந்ததினம் இன்றையதினம் அனுஸ்டிக்கப்பட்டது.வவுனியா மணிக்கூட்டுகோபுர சந்தியில் அமைந்துள்ள அவரது சிலையடியில் குறித்தநிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது அன்னாரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் ரெலோவின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவளார்கள் கலந்துகொண்டனர்.

வவுனியா குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் முன்பாக ஐந்து நாட்களாக வீதியில் நிற்கும் மக்கள் : பொலிஸார் குவிப்பு!!

வவுனியா மன்னார் பிரதான வீதியில் அமைந்துள் பிராந்திய குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் முன்பாக இன்று (28.08.2024) காலை 10.30 மணியளவில் நீடித்த அசாதாரண நிலமையினையடுத்து பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

வவுனியா பிராந்திய குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் சாதாரண சேவையின் கீழ் 25 நபர்களுக்கும், ஒருநாள் சேவையின் கீழ் 25 நபர்களுக்கும், ஏற்கனவே சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்து குறிப்பிட்ட காலம் முடிவடைந்தும் கடவுச்சீட்டினை பெறாதவர்கள் 10 நபர்கள் என ஒரு நாளைக்கு 60 நபர்களுக்கு வவுனியா பிராந்திய குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படுகின்றன.

மேலும் ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டினை பெறுபவர்களில் முக்கிய தேவையுடையவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையிலும் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படுகின்றன.

இந்நிலையில் வவுனியா பிராந்திய குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கு முன்பாக கடந்த ஐந்து நாட்களாக வரிசையில் நின்றும் தமக்கும் இதுவரை கடவுச்சீட்டு கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்து திணைக்கள காரியாலயம் முன்பாக குழப்ப நிலமை ஏற்பட்டது.

அதனையடுத்து வவுனியா பொலிஸார் அவ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டு அவ்விடத்தில் நிலவிய அசாதணை நிலமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமையுடன் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளை திணைக்கள வாயில் முன்பாக வரவழைத்து வரிசையில் நின்ற மக்களுக்கு தற்போதைய நிலமை தொடர்பில் தெளிவூட்டல் வழங்கப்பட்டமையினையடுத்து நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

மேலும் கடவுச்சீட்டினை நாளையதினம் பெறுவதற்காக மக்கள் தொடர்ச்சியாக வரிசையில் காத்திருக்கின்றமையுடன் சாதாரண சேவையின் கீழ் மார்ச் மாதம் விண்ணப்பித்து கடவுச்சீட்டு பெறாதவர்கள், வெளிநாட்டியிலிருந்து வருகை தந்தவர்கள் மீண்டும் நாட்டிற்கு செல்வதற்கு கடவுச்சீட்டு கலாவதியானவர்கள்,

மாணவர்கள், சகோதரர்களின் திருமணத்திற்கு செல்லவுள்ளவர்கள், வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்பு ஆவணம் கிடைத்தும் கடவுச்சீட்டு இல்லாதவர்கள் என பலரும் இவ்வரிசையில் காத்திருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்து : ஸ்தலத்திலேயே ஒருவர் பலி!!

கிளிநொச்சி A9 வீதியில் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். கனகாம்பிகைக்குளம் பகுதியைச் சேர்ந்த அருள்நேசன் அருள்வதனன் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

155 ம் கட்டை சந்தியில் ஆட்களை ஏற்றுவதற்காக குறுந்தூர பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் பேருந்தை முந்திப் பயணித்துள்ளது.

அதே திசையில் பயணித்த பார ஊர்தி குறித்த மோட்டார் சைக்கிளை மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே உயிரிழந்துள்ளார்.

குறித்த பார ஊர்தியின் சாரதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதுடன், விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

மாணவியை கடத்திய இளைஞனை சுற்றிவளைத்து பிடித்த பொலிஸார்!!

புத்தளத்தில் பாடசாலை மாணவியை கடத்திச் சென்றதாக குற்றம் சாட்டப்படும் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வலுக்கட்டாயமாக 15 வயதான மாணவியை கடத்திச் சென்றதாக 23 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக வனாத்தவில்லுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்மைல்புரம் பகுதியை சேர்ந்த ஒருவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 25ஆம் திகதி மேலதிக வகுப்புக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்ற மகள் திரும்பி வரவில்லை என அவரது தாயார் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டிற்கமைய, செயற்பட்ட பொலிஸார், கடத்தப்பட்டதாகக் கூறப்படும் மாணவியையும் சந்தேக நபரான இளைஞனையும் கைது செய்துள்ளனர்.

காதல் உறவின் அடிப்படையில் இந்த கடத்தல் நடந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. குறித்த மாணவி மருத்துவ பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், சந்தேக நபர் புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

வெறும் 500 ரூபாயில் திருமணத்தை முடித்த தம்பதியினர்!!

IAS தம்பதியினர் ஒருவர் தங்களுடைய திருமணத்தை வெறும் 500 ரூபாயில் முடித்துக் கொண்ட நிகழ்வு பேசப்பட்டு வருகிறது.

வாழ்க்கையின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படும் திருமணத்தை அனைவரும் புகழ்ந்து பேசும்படி நடத்த வேண்டும் என்பது தான் பலரது எண்ணமாக இருக்கும். அதுவும், கடன் வாங்கியாவது பெரிய நிகழ்வாக சிலர் நடத்துகிறார்கள்.

திருமணத்திற்கு செய்யப்படும் செலவு தற்போதைய காலத்தில் மிகவும் அதிகமாக மாறிவிட்டது. கோடிகளில் செலவு செய்து திருமணத்தை நடத்தி முடிக்கின்றனர்.

ஆனால், இதற்கெல்லாம் மாற்றாக தம்பதியினர் ஒருவர் மிக குறைந்த செலவில் தங்களுடைய திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர்.

இந்தியாவின் உயர்நிலை பதவியான ஐ.ஏ.எஸ். பதவியில் இருக்கும் தம்பதியினர் தான் மிக எளிமையான முறையிலும், குறைந்த செலவிலும் திருமணத்தை முடித்துள்ளனர்.

ராஜஸ்தானில் உள்ள அல்வாரைச் சேர்ந்தவர் ஆஷிஷ் வசிஷ்ட். பஞ்சாபின் ஜலாலாபாத்தைச் சேர்ந்தவர் சலோனி சிதானா. இவர்கள் இருவரும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆவர்.

இவர்கள் மத்திய பிரதேச மாநிலத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் அங்கேயே தங்களது திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர்.

இவர்கள், தங்களது குடும்பத்தினரை திருமணம் பதிவு செய்யும் இடத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு, ரூ.500 பதிவு கட்டணம் மட்டும் செலுத்தி எளிமையாக திருமணம் நடத்தி முடித்தனர். மாலையை ஒருவருக்கொருவர் மாற்றி கொண்டதும் திருமண சடங்குகள் முடிந்தன.

மேலும், திருமணத்திற்காக இருவரும் 2 நாட்கள் மட்டுமே விடுமுறை எடுத்துக் கொண்டனர். மூன்றாவது நாள் இருவரும் பணிக்கு திரும்பிவிட்டனர். இவர்களின் திருமணம் 2016 -ம் ஆண்டில் நடைபெற்ற நிலையில் தற்போது இந்த தகவல் பரவி வருகிறது.

 

தண்டவாளத்தில் குடை பிடித்து உறங்கிய நபர்!!

தண்டவாளத்தில் குடை பிடித்து அசந்து தூங்கிய நபரை கண்டதால் லோகோ பைலட் ரயிலை நிறுத்தி அசம்பாவிதத்தை தவிர்த்துள்ளார்.

பொதுவாகவே அனைவரும் காலையில் இருந்து நாள் முழுவதும் வேலை பார்த்து கொண்டிருப்பதால் எங்காவது சென்று ஓய்வெடுக்க வேண்டும் என்று தான் எண்ணுவோம். அதற்காக அமைதியாக இருக்கும் இடத்தையும், அழகாக இடத்தையும் தேர்வு செய்து அங்கு செல்வோம்.

இதில், சிலர் படுத்தவுடன் உறங்குவதும், சிலர் எந்நேரமும் விழித்துக் கொண்டே இருப்பதும் என்று பல்வேறு விடயங்கள் உள்ளன. ஆனால், இங்கு நபர் ஒருவர் தண்டவாளத்தில் அசந்து தூங்கியுள்ளார்.

ரயில்வே தண்டவாளத்தில் டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவர் குடை பிடித்தபடியே அசந்து தூங்கியுள்ளார். இதனை பார்த்த லோகோ பைலட் ரயிலை நிறுத்தியுள்ளார்.

பின்னர், ரயிலில் இருந்து கீழே இறங்கி சென்று உறங்கிக் கொண்டிருந்த நபரை எழுப்பி அங்கிருந்து விரட்டியடித்துள்ளார். இதையடுத்து தான் அங்கிருந்து ரயில் புறப்பட்டுச் சென்றது.

இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், தண்டவாளத்தில் உறங்கி கொண்டிருந்த நபரை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

அண்ணன், தங்கை உட்பட 4 பேர் நீரில் மூழ்கி பலியான சோகம்!!

தமிழகத்தில் சனி, ஞாயிறு, திங்கள் கிருஷ்ண ஜெயந்தி என தொடர் விடுமுறை நாட்கள். இதனால் மாணவர்கள் வீடுகளில் தங்காமல் சுற்றித் திரிகின்றனர். சில நேரங்களில் அபாயங்களில் சிக்கிக் கொள்கின்றனர்.

அந்த வகையில் ராணிப்பேட்டையில் குட்டை, ஏரியில் மூழ்கி அண்ணன், தங்கை உட்பட 4 பேர் பலியாகினர். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த புன்னை பகுதியில் வசித்து வருபவர் 45 வயது பரமசிவம்.

இவர் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி தனியார் கம்பெனி ஊழியர். இவர்களது மகன்கள் 11 வயது தினேஷ், 9வயது ரஞ்சித், 10 வயது மகள் சுப்ரியா.

இவர்கள் வீட்டின் அருகே உள்ள மீன்கள் வளர்க்கும் குட்டையில் குளிக்க சென்றனர். அப்போது திடீரென இருவரும் நீரில் மூழ்கி இறந்தனர். புகாரின்பேரில் நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே காரைமேடு ஊராட்சி மணல்மேடு கிராமத்தில் வசிப்பவர் வெற்றி வீரன்.இவரது மகன் 9 வயது மாவீரன் . அதே பகுதியில் வசிக்கும் பிரகாஷ் மகன் சக்தி இருவரும் காரைமேடு ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தனர்.

இருவரும் பள்ளி விடுமுறை என்பதால் திருவாலி ஏரிக்கு சென்றுள்ளனர். ஆடைகளை அவிழ்த்து கரையில் வைத்து விட்டு குளித்தபோது ஏரியில் மண் எடுத்ததால் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கி நீரில் மூழ்கினர். மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள் ஏரியில் வலை வீசி தேடிய போது இரு சிறுவர்களின் சடலமும் சிக்கியது.

அதே போல் கரூர் மாவட்டம் தோகைமலை அருகே நெய்தலூர் ஊராட்சி சின்னக்களத்துப்பட்டியை சேர்ந்த முருகேசன்- ரம்யா தம்பதியர். இவர்களுக்கு 6 வயதில் கிருஷ்மிதா என்ற மகளும், 2 வயதில் தர்ஷித் என்ற மகனும் உள்ளனர். நேற்று காலை தர்ஷித் அருகில் வசிக்கும் அபிலன் மகன் மயிலனுடன் சிறிய சைக்கிளில் சாலையில் விளையாடிக்கொண்டு இருந்தான்.

இருவரும் அருகில் உள்ள விவசாய தோட்டத்திற்கு சைக்கிளுடன் சென்றனர். அங்குள்ள 5 அடி ஆழ தொட்டிக்கு அருகே தண்ணீர் பாட்டிலை வைத்து விளையாடிக்கொண்டு இருந்தனர்.

அப்போது பாட்டில் தவறி விழவே அதை எடுக்க முயற்சி செய்த தர்ஷித் உள்ளே விழுந்துவிட்டான். 10 இஞ்ச் சுற்றளவு கொண்ட குழாயில் அவனை தண்ணீர் இழுத்து சென்றுவிட்டது. பெற்றோர் தேடி வந்தபோது தொட்டியில் தர்ஷித் விழுந்தது தெரிய வந்தது.

தீயணைப்பு படையினர் வந்து தொட்டியில் இருந்து விவசாய நிலத்திற்கு செல்லும் குழாயை பொக்லைன் இயந்திரம் மூலம் 8 இடங்களில் உடைத்து அதிநவீன லைட் மூலம் பார்த்தனர்.

200 மீட்டர் தூரத்தில் சின்னக்களத்துபட்டி சேப்பளாப்பட்டி மெயின் ரோட்டின் அருகே 5வது குழியில் உள்ள குழாயில் தர்ஷித் சடலம் சிக்கி இருந்தது தெரியவந்தது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் ஒன்றியம் பெருந்தொழுவு ராமலிங்கபுரத்தில் வசித்து வருபவர் 37 வயது செல்வக்குமார்.

இவரது 2வது மகன் நித்திரன் வீட்டில் இருந்த 60 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து விட்டான். அலறித்துடித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் ஏற்கனவே நித்திரன் மூச்சுத்திணறி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

‘நானில்லாம அவங்க கஷ்டப்பட வேணாம்’ மனைவி, மகளைக் கொன்று கணவன் எடுத்த விபரீத முடிவு!!

நானில்லாம அவங்க ரெண்டு பேரும் கஷ்டப்பட வேண்டாம் என்று மனைவியையும், மகளையும் கொன்று விட்டு கணவனும் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி அருகே அரண்மனைபுதூரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (37).

இவர் தேனியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு அசிதா என்ற மனைவியும், பிரித்திகா என்ற 5 வயது மகளும் இருந்தனர். இந்நிலையில், நிதி நிறுவனத்தில் கடன் பிரச்னையால் சதீஷ்குமார் 4 மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை.

வீட்டில் ஏற்பட்ட பிரச்னையால் மனமுடைந்த சதீஷ்குமார் மனைவி, குழந்தையை கொன்றுவிட்டு, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த போலீஸார் சடலங்களை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், சதீஸ்குமார் வீட்டில் ஆய்வு செய்தபோது, ​​சதீஸ்குமார் சாவுக்கான காரணத்துடன் எழுதிய கடிதம் மற்றும் டைரியை கண்டுபிடித்தார்.

அதில், “என்னால் வாழ முடியாது. நான் இறந்தால் என் மனைவி மற்றும் குழந்தைகள் மிகவும் கஷ்டப்படுவார்கள், அதனால் அவர்களையும் என்னுடன் அழைத்துச் செல்வேன். என் விதி முடிந்து விட்டது. தயவுசெய்து அனைவரும் என்னை மன்னியுங்கள். ஐ லவ் யூ ஆஷிதா, பிரித்திகா”.

மேலும் முதுகலை பட்டதாரியான அவரது காதல் மனைவி, சதீஸ்குமாருக்கு அறிவுரை கூறி டைரியில் பல குறிப்புகளை எழுதியுள்ளார். அதற்கு சதீஷ்குமாரும் பதில் எழுதினார்.

இதுகுறித்து போலீசாரிடம் கேட்ட போது, ​​`இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். குடும்பங்களுக்கு இடையே பிரச்னையும் ஏற்பட்டுள்ளது. சதீஷ்குமாருக்கும் கடன் பிரச்னை உள்ளது.

இதனால் வீட்டில் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த முடிவு எடுக்கப்படுவதற்கு முந்தைய நாள் கூட, அசிதாவின் பெற்றோர் அவரது வீட்டிற்கு வந்து அறிவுரை வழங்கியுள்ளனர். அசிதாவின் தந்தை நாகராஜ் அளித்த புகாரில், மருமகனின் தேவையற்ற செயலால் ஒரு குடும்பமே சீரழிந்துள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறோம்.

களுத்துறையில் பரிதாபமாக உயிரிழந்த யாழ் இளைஞன் : அச்சுவேலியில் இறுதி அஞ்சலி!!

களுத்துறையில் (Kalutara) நீராட சென்றபோது உயிரிழந்த யாழ்ப்பாணத்தைச் (Jaffna) சேர்ந்த பொது சுகாதார பரிசோதகரின் பூதவுடல் இறுதிக் கிரியைகளுக்காக அச்சுவேலி பத்தமேனியிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் திகதி அவித்தாவ, எத்தாவெட்டுனுவல பகுதியில் நீராட சென்றபோது பொது சுகாதார பரிசோதகரான சிவயோகபதி கௌதமன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

குறித்த இளைஞன் மொரட்டுவ பிரதேசத்தில் கடந்த ஐந்து வருடங்களாக பொது சுகாதார பரிசோதராக கடமையாற்றியுள்ளார்.

டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் குழுவினர் மற்றும் நான்கு பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவொன்று குளத்தில் நீராடச் சென்ற போதே அனர்த்தத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை மொரட்டுவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றிய 28 வயதான ஹர்ஷநாத் என்ற மற்றுமொரு பொது சுகாதார உத்தியோகத்தரும் உயிரிழந்துள்ளார். இதில் எஸ். ஹர்ஷநாத் என்ற அதிகாரி மட்டக்களப்பை சேர்ந்தவராவார்.

இந்த நிலையில் அச்சுவேலி இளைஞனின் பூதவுடல் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று (27) மதியம் ஒரு மணியளவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

வவுனியாவில் யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பலியான சோகம்!!

வவுனியாவில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம், வவுனியா – போகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சலனிகம கிராம வயல் பகுதியில் இன்று(26) காலை இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் 53 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார். இந்நிலையில், மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மனைவியை அடித்து கொலை செய்த கணவன்!!

ஹபரணை, பலுகஸ்வெவ பிரதேசத்தில் பெண்ணொருவர் நேற்று கணவனால் அடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான பெண் ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குடும்ப தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எப்பாவல, பலுகஸ்வெவ பிரதேசத்தில் வசிக்கும் 63 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசாங்கத்தால் முடக்கப்பட்ட 900 வங்கிக்கணக்குகள்!!

நிலுவையில் உள்ள வரிகளை வசூலிப்பதற்காக, மொத்தமாக 900 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

முறையற்ற வரி வசூல் குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், இந்த நிலுவைத் தொகையை வசூலிக்க அரசாங்கம் பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சர்வதேச நாணய நிதியம் நாட்டிற்கு பிரச்சினைகளை உருவாக்க விரும்பவில்லை என்றும் அதன் நிதி நிர்வாகத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலைமைக்கு நாட்டைத் திருப்ப முனைவோர் ஆட்சிக்கு வந்தால், சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையைத் திருத்துவது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், கடந்த கால நிதி சிக்கல்கள் மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதற்காக விரிவான கலந்துரையாடலின் பின்னரே தற்போதைய உடன்படிக்கை எட்டப்பட்டதாகவும், எனவே மாற்றங்கள் தேவையில்லை என்றும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தம்பியின் உயிரை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த அண்ணன்!!

மட்டக்களப்பு, கல்லடி பிரதேசத்தில் காட்டு யானைகள் உள்நுழைவதை தடுக்க பொருத்தப்பட்ட சட்டவிரோத மின்கம்பியில் சிக்கிய இளைஞனின் உயிரைக் காப்பாற்ற, தன் உயிரை பணயம் வைத்த அண்ணன் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

கொட்டுகச்சிய நவோத்யா வித்தியாலயத்தில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் 14 வயதுடைய சுனேத் ஹிமாஷ என்ற மாணவனே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார்.

சிறுவனின் சகோதரனும் நண்பரும் இல்லாவிட்டால் இந்நேரம் அவர் உயிரிழந்திருப்பார் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சிறுவன் தனது வீட்டிற்கு அருகில் கறிவேப்பிலை பறிக்க சென்ற போது மின்கம்பியில் சிக்கியுள்ளார். உயர் மின்னழுத்தம் கொண்ட மின்சார கம்பியில் சிறுவன் கையை வைத்துள்ளார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் துடித்துக் கொண்டிருப்பதனை அவதானித்த சகோதரன் மற்றும் அவரது நண்பர் தங்கள் உயிரை பற்றி யோசிக்காமல் தம்பியின் காலை பிடித்து இழுத்து காப்பாற்றியுள்ளனர்.

தென்னிலங்கையில் 3 பிள்ளைகளின் தாய் ஒருவருக்கு நேர்ந்த சோகம்!!

ஹொரணை பிரதேசத்தில் 3 பிள்ளைகளின் தாய் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். பிரதீபிகா குமாரி என்ற 36 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கெலை செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலைமை காரணமாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அயல் வீட்டிலுள்ள நபர் ஒருவர் தனது சகோதரனுடன் பிரதீபிகாவை சந்திப்பதற்காக கத்தியுடன் சென்றுள்ளார்.

திடீரென பிரதீபிகாவை அவர் கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளார். இந்த நிலையில் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ள நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் சந்தேக நபருக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரின் மனைவி இன்னொருவருடன் சென்று வாழ்ந்து வரும் நிலையில், அதற்கு கொலை செய்யப்பட்ட பெண் உதவியதாக, சந்தேகநபர் குற்றம் சாட்டியுள்ளார்.

அதற்கு பழிவாங்கும் நோக்கிலேயே குறித்த பெண்ணை கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்!!

யூடியூப் சேனல் மூலமாக பிரபலமாகி அதை தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த பிஜிலி ரமேஷ் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.

யூடியூப் சேனல் ஒன்று நடத்திய பிராங்க் ஷோ மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்

பிஜிலி ரமேஷ். ரஜினி தீவிர ரசிகர் என்றும் இவரது பேச்சு மற்றும் முக பவானைகள் ரசிகர்களிடம் தனிகவனம் பெற்றது. இதை தொடர்ந்து சினிமாவில் நடிக்கவும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

பொன்மகள் வந்தாள், நட்பே துணை, ஆடை, கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென இடத்தை தக்கவைத்தார். ஆனால் மதுப்பழக்கம் காரணமாக இவரது உடல்நிலை மோசமடைந்தது.

நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.