வவுனியாவில் நாேயாளர் காவு வண்டியில் குதித்து தப்பிய பெண் வைத்தியர் : இருவர் கைது!!

கடத்திச் சென்றதாக பெண் வைத்தியர் ஒருவர் நாேயாளர் காவு வண்டியில் குதித்த நிலையில் அங்கு கூடியவர்கள் சாரதி மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன் இருவர் நெளுக்குளம் பாெலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா – மன்னார் வீதியில் நேற்று (26.08) மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தாெடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா வைத்தியாசாலையில் இருந்து பம்பைமடு பகுதியில் உள்ள ஆயுள்வேத வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டியில் சாப்பாடு கொண்டு சென்றுள்ளனர்.

குறித்த சாப்பாட்டை வழங்கிவிட்டு நோயாளா் காவு வண்டி வவுனியா நோக்கி வந்த போது வீதியில் நின்ற பெண் வைத்தியர் ஒருவர் குறித்த நோயாளர் காவு வண்டியில் மறித்து ஏறியுள்ளார்.

குறித்த ஆயுள்வேத பெண் வைத்தியரை ஏற்றிக் கொண்டு வவுனியா நோக்கி சென்ற நோயாளர் காவு வண்டி வேப்பங்குளம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை நிரப்பி விட்டு, மீண்டும் மன்னார் வீதி ஊடாக பம்பைமடு நோக்கி புறப்பட்ட நிலையில் நோயாளர் காவு வண்டியில் இருந்த பெண் வைத்தியர் நோயாளர் காவு வண்டி கதவை திறந்து கீழே குதித்துள்ளார்.

இதனால் குறித்த பெண் வைத்தியர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு கூடிய மக்களிடம் தன்னை கடத்திச் செல்ல முற்பட்டதாக பெண் வைத்தியர் தெரிவித்ததையடுத்து நோயாளர் காவு வண்டியை மறித்து அதன் சாரதி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் நெளுக்குளம் பொலிசில் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களும் நாேயாளர் காவு வண்டியையும் நெளுக்குளம் பாெலிசிற்கு காெண்டு செல்லப்பட்ட நிலையில் வைத்தியசாலை உதவிப் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் நெளுக்குளம் பாெலிசிற்கு சென்று நாேயாளர் காவு வண்டியை விடிவித்துள்ளனர்.

இது தொடர்பில் நெளுக்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகிறார்கள்.

இதேவேளை, குறித்த சாரதி மாற்று வீதியூடாக வைத்தியசாலைக்கு செல்ல வாகனத்தை திருப்பிய பாேதே குறித்த சகாேதர மாெழி பெண் வைத்தியர் அச்சம் காரணமாக குதித்தாக வைத்தியசாலை தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – மட்டக்களப்பு சுகாதார பரிசோதகர்களுக்கு தென்னிலங்கையில் நடந்த சோகம்!!

களுத்துறை, அவித்தாவ, இஹலகந்த பிரதேசத்தில் அத்தாவெட்டுனுவல என்ற இடத்தில் நீராடிக் கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த இருவரும் தென் பகுதியில் கடமையாற்றிய மட்டக்களப்பு மற்றும் யாழ்பாணத்தைச் சேர்ந்த சுகாதார பரிசோதகர்கள் ஆவர்.

மொரட்டுவ பிரதேசத்தின் டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் குழுவினர் மற்றும் நான்கு பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவொன்று அங்கு நீராடச் சென்ற போதே இருவரும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் மொரட்டுவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றிய எஸ். கௌதம் (வயது -26) மற்றும் எஸ். ஹர்ஷநாத் (வயது -28) ஆகிய இரு பொது சுகாதார உத்தியோகத்தர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மேலும் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காதுகளால் வாகனம் இழுத்து யாழ் நபர் சாதனை!!

யாழ். தென்மராட்சியின் சாதனை நாயகன் செல்லையா திருச்செல்வம், 1,500 கிலோகிராம் எடையுள்ள ஹயஸ் வாகனத்தை காதுகளால் கட்டி இழுத்து சாதனை படைத்துள்ளார்.

ஹயஸ் வாகனத்தை 100 மீட்டர் தூரம் தனது இரு காதுகளால் கட்டி இழுத்து சென்றுள்ளார். நேற்றையதினம் யாழ்.கொடிகாமம், நட்சத்திர மஹால் முன்றலில் ஏ9 வீதியில் இந்த சாதனை நிகழ்வு இடம்பெற்றது.

இதேவேளை, செல்லையா திருச்செல்வம், இதற்கு முன்னர் பல தடவைகள் தமிழ்நாடு, கொழும்பு, யாழ்ப்பாணம் என தனது தாடியால் பல்வேறு வாகனங்களை இழுத்து சாதனைபுரிந்து சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சாரதி தூங்கியமையால் விபத்துக்குள்ளான கார்!!

திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.  குறித்த சம்பவம் மாங்கேணி காட்டுப் பகுதியில் நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் சாரதி உட்பட காரில் பயணித்த அனைவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, சாரதி தூங்கியமையால் கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரத்தில் பெரும் சோகம்… பரிதாபமாக உயிரிழந்த பாடசாலை மாணவன்!!

அனுராதபுரம் – கலென்பிந்துனுவெவ பகுதியில் மின்சாரம் தாக்கியதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் உல்பத்கம பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவனே உயிரிழந்துள்ளார்.

வீட்டின் பின்புறம் உள்ள தண்ணீர் குழாயிலிருந்து குளித்துக் கொண்டிருந்த போது அருகில் இருந்த தண்ணீர் மோட்டாரின் வயர் அவிழ்ந்து மாணவனின் உடலில் பட்டதில் மின்சாரம் தாக்கி குறித்த மாணவன் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கலேன்பிந்துனுவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மலேசியாவில் இந்திய பெண்ணுக்கு நடந்த துயரம்!!

மலேசியாவின் – கோலாலம்பூரில் நடந்த சம்பவத்தில், இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சித்தூர் மாவட்டத்தின் அனிமிகானிபள்ளி கிராமத்தை சேர்ந்த 45 வயதுடைய விஜயலட்சுமி, அங்குள்ள நடைப்பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, பாதை திடீரென இடிந்து விழுந்தமையினால், அவர் கழிவுநீர் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் அருகில் இருந்த விஜயலட்சுமியின் கணவர் மற்றும் மகன் உயிர் தப்பியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கோலாலம்பூரில் உள்ள பொது அதிகாரிகள் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.  எனினும், சனிக்கிழமை(24) மாலை வரை குறித்த பெண் தொடர்பாக எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண் வியாபாரத்தின் காரணமாக மலேசியாவுக்கும் பயணம் செய்து வந்துள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, ஆந்திரப் பிரதேசத்து வெளிநாட்டுப் பிரதேசம் (APNRT) அமைப்பின் அதிகாரிகளுக்கு, மீட்பு நடவடிக்கைகளை பயனுள்ளதாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், கல்வி மேம்பாட்டு துறை அமைச்சர் நாரா லோகேஷுடன் இணைந்து முதல்வர் இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளார்.

இலங்கையில் தொடரும் பெரும் சோகம் : குடும்ப சுமையால் மகள் எடுத்த விபரீத முடிவு!!

மொனராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த க.பொ.த உயர்தர மாணவி ஒருவர் உயிரை மாய்த்துள்ளார். கடந்த 24 ஆம் திகதி தனது தாயாருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு படுக்கையிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொனராகலை வெதிகும்புர வித்தியாலோக வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்கும் மோக்சா செவ்வந்தி என்ற 18 வயதுடைய மாணவியே உயிரிழந்துள்ளார்.

இவரது தந்தை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். வீட்டில் தாய், தம்பி மற்றும் அண்ணன் வசித்து வரும் நிலையில், கடந்த 24ம் திகதி காலை கரும்பு வெட்டுவதற்காக தாய் வீட்டை விட்டு வெளியே சென்றார்.

தம்பியும் ஒரு பயிற்சி வகுப்புக்கு சென்றுள்ளார். மதியம் மூன்று மணியளவில் தம்பி வந்து பார்த்தபோது அவர் படுக்கையில் இறந்து கிடந்துள்ளார்.

அவர் எழுதிய கடிதத்தில், “அம்மா எங்களால் மிகவும் கஷ்டப்படுகின்றார். அதனை பார்க்க வருத்தமாக உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பணப்பிரச்சினை காரணமாக அவர் படிப்பதில் கூட சிரமப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையில் ஏற்பட்டு பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலர் உயிரை மாய்த்துக்கொண்டனர்.

அதில் குடும்பத்திற்கு உணவு வழங்க முடியவில்லை என்ற இயலாமை காரணமாக பல ஆண்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்த யுவதி மர்மமான முறையில் மரணம்!!

கம்பஹா, நிட்டம்புவ பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணி புரிந்து வந்த யுவதி ஒருவர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். டட்லி சேனநாயக்க மாவத்தையில் வசித்து வந்த 21 வயதுடைய ராஜபக்ஷ ஆராச்சிலாகே செனாலி ராஜபக்ஷ என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்த யுவதி நேற்று காலை வீட்டில் ஏற்பட்ட அவசர சுகயீனம் காரணமாக வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அந்த பெண் ஏற்கனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த யுவதியின் பிரேத பரிசோதனை நேற்று வரக்காபொல மரண விசாரணை அதிகாரி விமலசிறி ராஜபக்ஷ முன்னிலையில் இடம்பெற்றது.

எங்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். உயிரிழந்தவர் மூத்த மகள் என உயிரிழந்த யுவதியின் தாயார் தெரிவித்துள்ளனர். நிட்டம்புவ தனியார் வங்கியொன்றில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

நானும் எனது கணவரும் வியாபாரம் செய்கிறோம். மகளுக்கு எந்த நோயும் இல்லை. பிறந்த நாளில் இருந்து இன்று தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் காலை 6.30 மணியளவில் வங்கி ஊழியர்களுடன் மகள் நிகழ்வு ஒன்றிற்கு சென்றார். இரவு 8.30 மணியளவில் வீட்டிற்கு வந்தார். வந்து குளித்துவிட்டு மாடிக்குச் சென்றார்.

அதிகாலை 3 மணியளவில், என் மகள் மாடியில் இருந்து இறங்கி குளியலறைக்கு செல்வதை பார்த்தேன். அதன்பிறகு நாங்கள் இருவரும் தூங்கிக்கொண்டிருந்த அறைக்கு என் மகள் வந்தார், எனக்கு சோர்வாக இருப்பதாக கூறினார்.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போதிலும் அவர் உயிரிழந்து விட்டார். எனினும் மரணத்திற்கான காரணம் என்ன என்று இதுவரையிலும் தெரியவில்லை என உயிரிழந்த யுவதியின் தாயார் தெரிவித்துள்ளார்.

 

யாழில் கணவனால் மனைவிக்கு நேர்ந்த துயரம்!!

யாழ்ப்பாணம்(Jaffna) – அச்சுவேலி பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக பெண் ஒருவர் தீயிட்டு எரியூட்டப்பட்டட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் (25.08.2024) இரவு 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இவர் திருமணம் செய்து 10 வருடங்கள் கடந்த நிலையில் குடும்பத்தில் பிரச்சினை இடம் பெற்று வருவதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கணவன் மது போதையில் வீட்டுக்கு வந்த நிலையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட பின்னர் அறை ஒன்றுக்குள் பூட்டி வைத்து தீயினை மூட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயான பாலகிருஷ்ணன் நிருத்திகா என்ற 28 வயதான பெண் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இதன் போது காயமடைந்த பெண் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கணவன் தப்பி சென்றுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் இடம்பெற்ற விபத்தில் அரச உத்தியோகத்தர் உயிரிழப்பு!!

யாழ்.அரசடியில் நேற்றிரவு நடைபெற்ற விபத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் யாழ் லயன்ஸ் கழகத்தில் உள்ளவரும் சமுர்த்தி உத்தியோகத்தருமான ஐங்கரன் என்பவர் உயிர்ழந்துள்ளதாக தெரியவருகின்றது.

 

கனடாவில் இருந்து வந்தவர் கிளிநொச்சியில் மாயம்!!

சுற்றுலா விசாவில் கனடா சென்றுவிட்டு வீடு திரும்பியவர், சில வாரங்களின் பின்னர் கடந்த 8ஆம் மாதம் 23ஆம் திகதி கடத்தப்பட்டு விட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தில் திருநகர் தெற்கு, கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பேரம்பலம் சுரேஷ்குமார் என்பவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் திருமணம் செய்த நிலையில் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருவதாகவும், அவர் காணாமல் போன தினத்துக்கு முதல்நாள் அவரது நண்பர் அவரை தனது வாகனத்தில் ஏற்றிச் சென்று அவரது வீட்டில் விட்டதாக தெரிவிக்கின்றார்.

அதேசமயம் அவரது வீட்டில் சிசிடிவி கேமராவின் தேக்கவியல் (server) சாதனமும் காணாமல் போயுள்ளதுடன் அவரது தலைக்கவசம் உடைந்திருந்தது. வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.

அவரது வீட்டில் இருந்த வேறு எந்த பொருட்களும் காணாமல் போனதாக தெரியவில்லை என அவரது நண்பர் குறிப்பிடுகின்றார். இந்நிலையில் இது குறித்து அவரது நண்பர் நேற்று முன் தினம் (24) அன்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் சுவிஸில் இருந்து வந்தவர் சடலமாக மீட்பு!!

சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் உள்ள வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று (26.08) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் உள்ள உறவினர் வீடு ஒன்றிக்கு சுவிஸ் நாட்டில் இருந்து விடுமுறையில் வருகை தந்த ஒருவர் தங்கியிருந்துள்ளார்.

குறித்த வீட்டில் சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த நபரும், அவரது உறவினரும் இரவு மது விருந்தில் ஈடுபடட நிலையில் இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது.

இதன்போது சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்தவரின் தலையில் இரும்புக் கம்பியால் தாக்கியதில் அவர் அவ்விடத்திலேயே மரணமடைந்துள்ளார். செல்லத்துரை விமலநாதன் (வயது 66) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய சம்பவ இடத்திற்கு சென்ற கனகராயக்குளம் பொலிசார் சம்பவம் தொடர்பில் 60 வயது குடும்பஸ்தர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

வவுனியாவில் பண்டாரவன்னியனின் 221 ஆவது நினைவு நாள்!!

வன்னி இராச்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 221 ஆவது நினைவு நாள் நிகழ்வு வவுனியாவில் இன்று (25.08.2024) அனுஸ்டிக்கப்பட்டது.

குறித்த நினைவு தினம் வவுனியா நகரசபை மற்றும் பண்டாரவன்னியன் விழாக்குழுவின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை செயலாளர் அ.பாலகிருபன் தலைமையில் நடைபெற்றது.

காலை 9 மணிக்கு வவுனியா மாவட்ட செயலக முன்றலில் அமைந்துள்ள பண்டாரவன்னியனின் நினைவுத்தூபிக்கு முன்பாக விருந்தினர்கள் வரவேற்புடன் கொடியேற்றல் இடம்பெற்றுடன் கொடிக்கீதத்தினை வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவிகள் பாடியமையிருந்தனர்.

அத்துடன் மங்கள விளக்கேற்றலுடன் பண்டாரவன்னியனின் நினைவுத்தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் P.A.சரத்சந்திர, சிறப்பு விருந்தினர்களாக வவுனியா பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தெ.ரதீஸ்வரன் மற்றும் கௌரவ விருந்தினர்களாக மாவட்ட திணைக்களத் தலைவர்கள், மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் விருந்தினர்களாக பொதுமக்கள் , பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை வவுனியா இலங்கை திருச்சபை த.க.பா மாணவர்கள் இசைத்தமையுடன் வரவேற்புரையினை சந்திரகுமார் கண்ணன், தலைமை உரையினை வவுனியா நகரசபை செயலாளர் அ.பாலகிருபன், சிறப்புச் சொற்பொழிவினை தமிழ்மணி அகளங்கள் ஆகியோர் முன்னெடுத்தமையுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகள் பாராட்டு பரிசில்கள் வழங்குதலுடன் நிகழ்வு சிறப்புற நிறைவுற்றிருந்து.

மன்னார் சிந்துஜாவின் கணவர் தவறான முடிவு எடுத்து உயிர்மாய்ப்பு!!

மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் தாயான சிந்துஜாவின் கணவர் நேற்று (24.08.2024) இரவு தவறான முடிவெடுத்து சாவடைந்துள்ளார்.

கடந்த மாதம் மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம் தாய் ஒருவர் மருத்துவ தவறின் காரணமாக உயிரிழந்திருந்தார். இது தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் அவரது கணவர் நேற்றயதினம் அவரது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்க முற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி சாவடைந்தார்.

குறித்த சம்பவத்தில்வவுனியா பனிக்கர் புளியங்குளத்தை சேர்ந்த எஸ் .சுதன் (26 வயது) என்ற குடும்பஸ்தரே சாவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவரது மரணம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

தொழில் நஷ்டத்தால் விபரீத முடிவு.. பரிதாபமாக பறிபோன 3 உயிர்கள்!!

தேனி அருகே கர்ப்பிணி மனைவி, 5 வயது மகளை கொன்று பைனான்ஸ் ஊழியர் தற்கொலை செய்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தேனி அருகே அரண்மனைப்புதூர், முல்லை நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (35). தனியார் நிதி நிறுவன ஊழியர்.

வெளியிலும் பைனான்ஸ் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மனைவி அஜிதா (33), தனியார் பள்ளி ஆசிரியை. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது மகள் பிரித்விகா (5). சதீஷ்குமாருக்கு சொந்தமாக செய்து வந்த பைனான்ஸ் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக சதீஷ்குமார் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.

5 மாத கர்ப்பிணியாக இருந்த அஜிதாவும் வேலைக்கு செல்லவில்லை. இதனால், கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 21ம் தேதி நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த மனைவியை கர்ப்பிணி என்றும் பாராமல் சதீஷ்குமார் கத்தியால் குத்திக்கொலை செய்தார். பின்னர் மகள் பிரித்விகாவையும் கத்தியால் குத்திக்கொலை செய்தார். பின்னர், வீட்டிற்குள்ளேயே சதீஷ்குமாரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று முன்தினம் கண்டமனூரில் உள்ள அஜிதாவின் பெற்றோர், மகளை செல்போனில் பலமுறை அழைத்தும் எடுக்காததால் சந்தேகமடைந்த அவர்கள், தங்கள் மகன் சுரேந்தருடன் நேற்று முன்தினம் இரவு அஜிதாவின் வீட்டுக்கு வந்தனர்.

அப்போது வீடு உள்பக்கமாக பூட்டியிருந்தது. கதவை தட்டிப்பார்த்தும் திறக்காததால் அக்கம்பக்கத்தில் விசாரித்தனர். காலையில் இருந்து வீடு பூட்டியிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் பழனிசெட்டிபட்டி போலீசிற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அஜிதா, பிரித்விகா கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்தனர். அருகில் சதீஷ்குமார் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார்.

இதையடுத்து, போலீசார் உடல்களை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து சதீஷ்குமாரின் விபரீத முடிவுக்கு தொழில் நஷ்டம் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை செய்து வருகின்றனர்.

இறந்த 10 நாள்களில் உயிரோடு வந்த நபர் : கொலைகார தம்பதியின் குட்டு அம்பலம்!!

கடனை அடைக்க காப்பீட்டு தொகையை பெறுவதற்கு அப்பாவி நபரை கொன்ற விவகாரத்தில் தம்பதியை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனா்.

கா்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தை சோ்ந்த தம்பதி காப்பீடு தொகைக்காக அப்பாவி நபரை கொன்று, அவரை தனது கணவா் என கூறி பெண் ஒருவா் நாடகம் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுதொடா்பான செய்தியை விரிவாக பார்க்கலாம்.

கா்நாடக மாநிலம் பெங்களூரு புறநகா் ஒசக்கோட்டையை சோ்ந்த தம்பதி முனிசாமி கவுடா மற்றும் சில்பாராணி ஆவார். முனிசாமி கவுடா அந்த பகுதியில் டயா் விற்பனை கடை நடத்தி வருகிறார்.

அவா் பல்வேறு இடங்களில் லட்சக்கணக்கில் கடன் பெற்று இருந்துள்ளார். ஆனால் அவரால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. எனவே தனது பெயரில் உள்ள காப்பீட்டு தொகையை பெற்று கொள்வதற்கு முடிவு செய்துள்ளார். இதற்காக தம்பதி கூட்டாக சோ்ந்து கொடூரமான திட்டத்தை தீட்டி உள்ளனா்.

அதன்படி முனிசாமி கவுடாவை போன்று தோற்றம் கொண்ட அப்பாவி ஒருவரை அவா்கள் தங்கள் காரில் அழைத்து சென்றுள்ளனா். பின்னா் ஹாசன் மாவட்டம் அரசிகெரே அருகே கொல்லஹள்ளி கேட் பகுதியில் வைத்து கொலை செய்துள்ளனா். பின்னா் உடலை அங்கேயே வீசிவிட்டு சென்றுள்ளனா்.

இதற்கிடையே ஹாசன் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வந்த நிலையில், சில்பாராணி, உயிரிழந்தவா் தனது கணவா் என கூறி உடலை வாங்கி உள்ளார். பின்னா் குடும்பத்தினா் முன்னிலையில் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது. எனினும் சில்பாராணி நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

உடனே அவா்கள் சில்பாராணியை ரகசியமாக கண்காணித்து வந்துள்ளனா். இந்த நிலையில் சில்பாராணியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினா். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

அதாவது சில்பாராணி தனது கணவா் முனிசாமி கவுடா தான் இறந்துவிட்டதாக கூறி உள்ளார். மேலும் தனது கணவரை தலைமறைவாக வாழும்படி அறிவுரை கூறி அனுப்பி உள்ளார். எனவே முனிசாமி கவுடாவும் வேலைக்கு செல்லாமல் வெளியூரில் சுற்றித்திரிந்துள்ளார். சில்பாராணியும் கணவரை இழந்த வேதனையில் வாழ்வது போல் நடித்துள்ளார்.

இதற்கிடையே ஒசக்கோட்டையில் என்ன நடக்கிறது என தெரியாமல், முனிசாமி கவுடா சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது உறவுக்காரரான இன்ஸ்பெக்டர் ஒருவா் கண்ணில் முனிசாமி கவுடா பட்டுள்ளார்.

உடனே இன்ஸ்பெக்டா், முனிசாமி கவுடாவை பிடித்து விசாரித்துள்ளார். அப்போது காப்பீட்டு தொகையை பெறுவதற்காக உயிரிழந்ததாக நாடகமாடியது தெரிந்தது. இதையடுத்து முனிசாமி கவுடாவை பிடித்து இன்ஸ்பெக்டா் போலீசில் ஒப்படைத்தார்.

இதையடுத்து முனிசாமி கவுடா அவரது மனைவி மற்றும் கொலைக்கு உதவியாக இருந்த லாரி டிரைவா் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனா். காப்பீட்டு தொகைக்கு ஆசைப்பட்டு அப்பாவி நபரை திட்டமிட்டு தம்பதி கொலை செய்த சம்பவம் ஒட்டுமொத்த கர்நாடகத்தையே உலுக்கி உள்ளது. இறந்ததாக கூறப்பட்ட முனிசாமி கவுடா உறவினா் கண்ணில் பட்டதால் தற்போது குட்டு அம்பலமாகி உள்ளது.