25 கிலோ தங்கம் அணிந்து திருமலை கோயிலுக்கு சென்ற புனே தொழிலதிபர்!!

பொதுவாகவே அனைத்து மக்களும் தங்களின் பக்தியை பல முறையில் வெளிக்காட்டுவார்கள். சமீபத்தில் புனேவில் நடந்த ஒரு சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

தினமும் 75,000 முதல் 90,000 யாத்ரீகர்கள் வரும் கோயிலுக்கு ஜூலை மாத காணிக்கையாக ரூ. 125 கோடி கிடைத்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரி சியாமளா ராவ் தெரிவித்துள்ளார்.

அந்த மாதத்தில், 22 லட்சத்திற்கும் அதிகமானோர் கோவிலுக்கு வருகை தந்தனர். 8.6 லட்சம் பேர் சம்பிரதாய முறைப்படி தொண்டூழியம் செய்தனர், மேலும் ஒரு கோடிக்கும் அதிகமான லட்டுகள் விற்கப்பட்டன.

கலியுகத்தில் மக்களுக்கு உதவுவதற்காக பூமிக்கு வந்ததாக நம்பப்படும் விஷ்ணுவின் வடிவமான வெங்கடேஸ்வரருக்கு இந்த கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீனிவாசா, பாலாஜி, வெங்கடாசலபதி என்று அழைக்கப்படும் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருமலையைத் தனது இல்லமாகத் தேர்ந்தெடுத்தார் என்று புராணம் கூறுகிறது.

கோயில் இப்போது 16.2 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்நிலையில் புனே சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தங்கள் குடும்பத்துடன் வரும் போது, 25 கிலோ தங்கம் அணிந்து வந்ததாக கூறப்படுகிறது.

இவர்களுடன் பாதுகாப்புக்காக சுமார் 15 பேர் வந்திருந்தனர். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 5 மாதங்களில் 3400 க்கும் மேற்பட்டோர் கைது : வெளியான காரணம்!!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலைச் சேர்ந்த 3,400 க்கும் மேற்பட்டோர் கடந்த 5 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் 19 ஆம் திகதி முதல் 20 விசேட பொலிஸ் குழுக்கள் நாடு முழுவதையும் உள்ளடக்கிய வகையில் இந்த சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

இதற்கமைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு நேரடியாக ஆதரவு, திட்டமிடல் மற்றும் மறைமுக உதவி செய்ததற்காக 3,411 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொழும்பு குற்றப்பிரிவு மற்றும் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் 38 சந்தேகநபர்கள் நேற்று முன்தினம் (22) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கழிவறைக்கு சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி : பதம் பார்த்த மலைப்பாம்பு!!

இயற்கை உபாதையை கழிக்க கழிவறையில் அமர்ந்திருந்தவரின் பிறப்புறுப்பை , திடீரென 12 அடி மலைப்பாம்பு ஒன்று பதம்பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர் சம்பவத்தை தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

தாய்லாந்து நாட்டின் சமுத் பிரகான் மாகாணத்தைச் சேர்ந்தவர் தனத் தங்தேவனோன் என்பவே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 20ஆம் திகதி தனது வீட்டு கழிவறையை பயன்படுத்திக்கொண்டிருந்த போது அவரது பிறப்புறப்பில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. கழிவறையில் ஏதோ ஒன்று என்னை கடிப்பது போல் இருந்தது.

உடனே கழிவறைக்குள் கையை விட்டு என்னவென்று பார்க்க பாம்பை பார்த்ததும் நான் அதிர்ச்சியாகிவிட்டேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அது 12 அடி மலைபாம்பு என்றும் அது பிடியை தளர்த்த இல்லை எனவும், குறிப்பிட்டுள்ள அவர் மிகவும் மோசமான வலி, மற்றும் கழிவறை எங்கும் ரத்தம் இருந்தது.

கழிவறையில் ஒரு மலைப்பாம்பு இருப்பதை என்னால் நம்பவே முடியவில்லை” என குறிப்பிட்டிருந்தார். அதேசமயம் பாம்பிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கையில் அந்த பாம்பு அவரின் விரலையும் கடித்துவிட்டதாக அவர் கூறினார்.

இதனையடுத்து உடனே அங்கிருந்த பாத்ரூம் பிரஷை வைத்து அந்த பாம்பின் தலையிலேயே அடித்ததை அடுத்து பிடியை தளர்த்தி உள்ளது.

அவரது தாக்குதலில் பாம்பு உயிரிழந்ததை அடுத்து அயல் வீட்டாரை சம்பவத்தை கூறியதை அடுத்து அவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

,”நல்ல வேளை அது வெறும் மலைப்பாம்பு. இதுவே நாகமாக இருந்திருந்தால் அது என்னை கொன்றிருக்கும்” என கூறியுள்ள அவர், மலைப்பாம்பு விஷத்தன்மை உடையது இல்லை என்பதால், எவ்வித தையலும் இன்றி தான் தப்பித்ததாகவும் பதிவிட்டுள்ளார்.

திருமணத்திற்கு சென்று வீடு திரும்பிய வர்த்தகருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

வெல்லம்பிட்டி பிரதேசத்தில் உள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்து 500 மாணிக்கக் கற்கள் மற்றும் 100 வெள்ளி மோதிரங்கள் களவுபோயுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

வெள்ளி மோதிரங்கள் மற்றும் தங்க நகைகளைத் தயாரிக்கும் வர்த்தகர் ஒருவரின் வீட்டிலேயே இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது,

வர்த்தகர் கடந்த 11ஆம் திகதி திருகோணமலை பிரதேசத்தில் உள்ள தனது உறவினர் ஒருவரின் திருமண நிகழ்விற்குச் சென்று கடந்த 21 ஆம் திகதி மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.

இதன்போது, வீட்டிற்குள் இருந்த பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதை அறிந்து கொண்ட வர்த்தகர் இது தொடர்பில் வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

களவுபோன மாணிக்கக் கற்கள் அனைத்தும் 07 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்துள்ளதாகவும் திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு பல இலட்சம் ரூபா எனவும் இந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தனியார் பேருந்து மோதி இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி!!

புத்தளம் – ஆராச்சிக்கட்டுவ நல்லதரன்கட்டுவையில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் பரிதாபமாக ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

நேற்று (23) பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொத்தனார் வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் ஹலவத்தை நோக்கி பயணித்த போது தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்தில் மோதி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் யாழ், கொழும்பு தனியார் பேருந்து சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

இதற்கமைய, மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து சாரதி திடீரென உயிரிழப்பு : காப்பாற்றப்பட்ட பயணிகள்!!

அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கிப்பயணித்த அரச பேருந்தின் சாரதி ஒருவர் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

நேற்று (23 ஆம் திகதி) இரவு 8.15 மணியளவில் சாரதி திடீரென உயிரிழந்ததாகவும், பேருந்து வீதியை விட்டு விலகி நின்றதாகவும் இங்கினியாகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று 23ஆம் திகதி இரவு 7.00 மணியளவில் அம்பாறை டிப்போவில் இருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட பேருந்தின் சாரதி உடல் நலக்குறைவு காரணமாக இங்கினியாகலையில் பேருந்தை நிறுத்திவிட்டு தனியார் வைத்தியசாலை வைத்தியரிடம் மருந்து எடுத்துக்கொண்டு கொழும்பு நோக்கி புறப்பட்டுள்ளார்.

சாரதியின் உடல்நிலை மோசமாக இருப்பதால் பேருந்தை செலுத்தி செல்ல வேண்டாம் என வைத்தியர் அறிவுறுத்திய நிலையில், வேறு சாரதிகள் இல்லாத காரணத்தினால் 10 மைல் தூரம் வரை பேருந்தினை செலுத்திச்சென்றுள்ளார்.

இதன் பின்னர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உடனடியாக இங்கினியாகலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது பேருந்து வீதியை விட்டு விலகியதன் காரணமாக பேருந்தில் பயணம் செய்த ஒருவருக்கு மாத்திரம் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், விபத்து ஏற்படும் போது பேருந்தில் 40 பயணிகள் இருந்ததாகவும் பேருந்தின் நடத்துனர் தெரிவித்துள்ளார்.

பரகஹகலே பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய மஞ்சுள பிரசன்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்கினியாகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

இலங்கையில் அறிமுகமாகும் இ-ஓட்டுநர் உரிமம்!!

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இ-ஓட்டுனர் உரிமம் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் ரஞ்சித் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் அட்டை தட்டுப்பாடு காரணமாக சுமார் 8 இலட்சம் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களில் சுமார் 91 ஆயிரம் பேருக்கு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த இரண்டு மாதங்களில் ஏனையவர்களுக்கும் அட்டைகள் வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை கடந்தாண்டு முதல் தற்போது வரை சுமார் 2 லட்சம் ஓட்டுனர் உரிமங்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அடுத்தாண்டு நிலைமை வழமைக்கும் திரும்பும் எனவும் சாதாரணமாக சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான அட்டைகளை வழங்க முடியும் என்றும் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டிலிருந்து இருந்து இலங்கை வந்த நபர் வீட்டில் உயிரிழப்பு!!

கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மத்தேகொட, கல்வலதெனிய பிரதேசத்தில் தனியாக வசித்து வந்த 65 வயதான சமன் ரொஹான் என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் சுமார் 26 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து தனது மனைவியுடன் அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளார். அவர் மீண்டும் இலங்கைக்கு வந்து வீட்டில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இதனிடையே இவரின் மாதாந்த செலவுக்காக மனைவி வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பி வந்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட பின்னர் பணம் கிடைத்ததாக தெரியப்படுத்தும் கணவர் இம்முறை தொலைபேசியில் அழைப்பேசியில் அழைப்பேற்படுத்தவில்லை.

இதனால் அயல்வீட்டு நபருக்கு அழைப்பேற்படுத்தி கணவர் தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு மனைவி கேட்டுக்கொண்டுள்ளார். எனினும் கடந்த சில நாட்களாக வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளர்.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைக்கு அமைய குறித்த நபர் உயிரிழந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் மோசடியில் ஈடுபட்ட இலங்கை குடும்பம் கைது!!

மலேசியாவில் போலியான முறையான கடவுச் சீட்டைப் பெற முயற்சித்த இலங்கையர் ஒருவரும், அவருக்கு உதவிய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

பினாங்கில் உள்ள குடிவரவுத் திணைக்களத்தில் போலியான ஆவணங்களை சமர்பித்து கடவுச்சீட்டை பெற முயற்சித்துள்ளனர்.

பதின்ம வயது நபருக்கு 10 வயது என்று கூறி கடவுச் சீட்டை பெற முயன்ற நிலையில், அவரின் தாய் போன்று நடித்த பெண்ணும் சிக்கியுள்ளார்.

எனினும் அவர்களின் ஆவணங்கள் போலியானவை என்பதை அறிந்த அதிகாரிகள், இருவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

குறித்த நபர் ஏலவே மலேசியக் கடவுச் சீட்டுக்கு விண்ணப்பித்திருந்த போதும், அவருக்கு மலே மொழி தெரியாத காரணத்தினால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது.

ஜனவரி முதல் ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு… உறுதி செய்த ரணில் தரப்பு!!

தற்போது அரச ஊழியர்களுக்கு 25ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான அமைச்சரவையும் அனுமதி வழங்கி இருக்கிறது. அடுத்த வருட வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டு.

ஜனவரி முதல் அதனை வழங்க நடவடிக்கை எடுப்போம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாடு வீழ்ச்சியடைந்த நிலையில் வாழ்க்கைச் செலவும் அதிகரித்துச் சென்றது. என்றாலும் தற்போது படிப்படியாக நாட்டின் பொருளாதாரம் அபிவிருத்தியடைந்து வருகிறது. அதன் பிரகாரம் மக்களின் வருமானமும் அதிகரிக்க வேண்டும்.

அதனால் மக்களின் வருமானத்தை அதிகரிக்க தேவையான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வருகிறார்.

தொழில் முயற்சியாளர்களை அதிகரித்து அவர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வாழ்க்கைச்செலவு அதிகரிக்கும்போது, அதற்கு ஏற்றவகையில் நாளாந்த சம்பளத்துக்குத் தொழில் செய்பவர்கள் தங்களின் நாட்சம்பளத்தை அதிகரித்துக்கொள்கின்றனர்.

ஆனால் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு மேற்கொள்வதாக இருந்தால், அதற்கு திறைசேரியின் அனுமதி பெற்று முறையாக மேற்கொள்ளப்பட வேண்டி இருக்கிறது.

அதனால் இந்த நடவடிக்கையை முறையாக மேற்கொண்டு தற்போது அரச ஊழியர்களுக்கு 25ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான அமைச்சரவையும் அனுமதி வழங்கி இருக்கிறது.

அடுத்த வருட வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டு. ஜனவரி முதல் அதனை வழங்க நடவடிக்கை எடுப்போம். இது தேர்தலை இலக்கு வைத்துத் தெரிவிக்கப்படும் வாக்குறுதி என யாரும் நினைக்க வேண்டாம். ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விடயமாகும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சொல்வதையும் செய்யும் தலைவர் என்பது அரச ஊழியர்களுக்கு தெரியும். ஏனெனில் அரச ஊழியர்களுக்கு ஏற்கனவே 10ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கியது ரணில் விக்ரமசிங்க என்பது அவர்களுக்கு தெரியும்.

மேலும் இந்த ஜனாதிபதி தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தலாகும். பாராளுமன்ற தேர்தலில் மக்கள் யாரை வேண்டுமானாலும் நிராகரிக்கலாம். ஆனால் இந்த தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களில் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே நாட்டை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்களுடன் களமிறங்கியுள்ளார்.

அதனால் ரணில் விக்ரமசிங்க தோல்வியடைந்தால் இந்த நாடு தோல்வியடையும். நாடு மீண்டும் வீழ்ச்சியடைந்தால் மீண்டும் கட்டியெழுப்ப முடியாத நிலைக்குத் தள்ளப்படும் என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

 

உலகிலேயே சிறிய உருவம் கொண்ட பெண் : ஹாலிவுட்டிலும் கலக்கியிருக்கிறாராம்!!

உலகிலேயே சிறிய உருவம் கொண்ட பெண் என்பதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற ஒரு பெண்ணைக் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு காணலாம்.

உலகில் உயிர் வாழ்பவர்களிலேயே மிகவும் சிறிய உருவம் கொண்டவர் ஜோதி (Jyoti Amge, 30). இந்தியாவின் நாக்பூரில் பிறந்த ஜோதிக்கு 30 வயதாகிறது என்றால் நம்ப முடியவில்லை.

கியூட்டான குழந்தை போல காட்சியளிக்கும் ஜோதியின் உயரம், 62.8 சென்றிமீற்றர் மட்டுமே. சிறுவயதில், achondroplasia என்னும் அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டதால், ஐந்து வயதுக்கு மேல் அவரது உடல் வளர்ச்சி அடையவில்லை.

ஹாலிவுட்டிலும் கலக்கியிருக்கிறாராம்

ஆனால், கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதுபோல, சும்மா ஹாலிவுட் வரை சென்று கலக்கியிருக்கிறார் ஜோதி.

அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் நடித்த அவரது நடிப்பு பெருமளவில் கவனம் ஈர்த்துள்ளது.

அது மட்டுமல்ல, 2009ஆம் ஆண்டில், உலகில் வாழும் சிறிய உருவம் கொண்ட பதின்மவயதுப் பெண் என கிரீடம் சூட்டப்பட்ட ஜோதி, பின்னர் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளார்.

எனக்கு தொலைக்காட்சியில் நடிக்கப் பிடித்திருக்கிறது என்று கூறும் ஜோதி, அதற்கு வித்தியாசமான ஒரு காரணத்தைக் கூறுகிறார். தொலைக்காட்சியில் நடிக்கும்போது, மக்கள் என்னைக் கண்டு வியந்து பாராட்டுகிறார்கள்.

ஆனால், நேரில் பார்க்கும்போது, 30 வயது இளம்பெண்ணான என்னை, ஒரு சிறு குழந்தை போல தூக்கிவைத்துக்கொள்வதும், என்னிடம் குழந்தையிடம் கேள்வி கேட்பது போல கேட்பதும் எனக்குப் பிடிக்கவில்லை என்கிறார் ஜோதி.

உலகின் பயங்கரமான பொம்மை, பிரித்தானியாவில் 17 ஆண்களை தாக்கிய மணப்பெண் பேய்!!

உலகின் பயங்கரமான பொம்மை இங்கிலாந்தின் தெற்கு யார்க்ஷயரில் உள்ள ரோதர்ஹாமில் உள்ளது. பேய் பிடித்த இந்த பொம்மை இதுவரை 17 பேரை தாக்கியுள்ளதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

கணவரால் ஏமாற்றப்பட்ட எலிசபெத் என்ற மணமகளின் ஆவி இந்த பொம்மை இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த காரணத்திற்காக, இது மணப்பெண் பொம்மை (Bridal Doll) என்றும் அழைக்கப்படுகிறது.

நியூயார்க் போஸ்ட்டுடனான ஒரு நேர்காணலில், அமானுஷ்ய நிபுணரும் பொம்மை உரிமையாளருமான லீ ஸ்டீர் (Lee Steer), “இந்த திருமண பொம்மை எப்போதும் அருங்காட்சியகத்தில் ஈர்ப்பு மையமாக இருந்து வருகிறது.

இப்போது தி கான்ஜூரிங் திரைப்படத்திலிருந்து நிறைய பேய் விஷயங்கள் கிடைத்துள்ளன, எனவே டால் பொறாமைப்படுகிறார். இந்நிலையில், மீண்டும் கவனத்தை ஈர்க்க பொம்மை தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ” என கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு அருங்காட்சியகத்தில் பணிபுரிந்தபோது கழுத்தில் எரியும் உணர்வை உணர்ந்ததாக லீ கூறினார். அவரது முதுகில் கீறல்களையும் அவர் கவனித்தார்.

இந்த பொம்மை பெண்களை தாக்காது என்று அவர் கூறினார். எலிசபெத் ஒரு மனிதனால் மோசமாக நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள், அதன் பிறகு அவள் ஒரு திருமண பொம்மையில் வாழ்ந்து வருகிறாள் என்று கூறுகின்றனர்.

 

பேருந்து, லொறி நேருக்கு நேர் மோதல் : தேநீர் கடையில் அமர்ந்திருந்தவர்கள் பரிதாபமாக பலி!!

இந்திய மாநிலம் ஒடிசாவில் டேங்கர் லொறி மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் 5 பேர் பலியாகினர்.

ஒடிசா மாநிலத்தின் Ganjam மாவட்டத்தில் உள்ள சமர்ஜோலா என்ற இடத்தில், டேங்கர் லொறி மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் சாலையோர தேநீர் கடையில் டேங்கர் லொறி கவிழ்ந்தது. இந்த பயங்கர விபத்தில் கடையில் அமர்ந்திருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனையடுத்து படுகாயமடைந்த பயணி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், 12 பேர் இந்த விபத்தில் காயமடைந்ததாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், பவானிபட்னாவில் இருந்து பெர்ஹாம்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து, எதிரே வந்த டேங்கர் லொறி மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்தது.

மாநிலம் முதல்வர் மோகன் சரண் மாஜி இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் இழப்பீடும் வழங்கப்படும் என அறிவித்தார்.

இறந்தவர்களின் அடையாளம் காணப்படவில்லை என்றும், பொலிஸார் குழு மற்றும் தீயணைப்பு வீரர்கள் நெடுஞ்சாலையை போக்குவரத்திற்காக சீரமைத்தனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

மலேசியா கடவுச்சீட்டு பெற 10 வயது சிறுவனாக நடித்த இலங்கையர்!!

மலேசியாவில் தமக்கு 10 வயது என்று காண்பிக்கும் வகையிலான போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து மலேசியாவின் கடவுச் சீட்டைப் பெற முயற்சித்த இலங்கையர் ஒருவரும், அவருக்கு உதவியாக அவரது தாய் போன்று பாசாங்கு செய்த பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

பினாங்கில் உள்ள குடிவரவுத் திணைக்களத்துக்குச் சென்ற அவர்கள், போலியான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர். அதில் , ஆண் நபரொருவருக்கு 10 வயது என்று கூறி கடவுச் சீட்டை பெற முயன்றுள்ளனர்.

எனினும் குறித்த நபரது உடல் தன்மையைக் கண்டு சந்தேகித்த அதிகாரிகள் நடத்திய விசாரணைகளில் அவர்கள் போலியான ஆவணங்களை சமர்ப்பித்தமை தெரியவந்துள்ளது.

அதோடு , சம்மந்தப்பட்ட நபருக்குத் தாயாக நடிப்பதற்கு பெண்ணொருவருக்கு பணம் வழங்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவர்கள் இருவரும் அந்நாட்டின் கடவுச்சீட்டு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

அதேவேளை குறித்த நபர் ஏற்கனவே மலேசியக் கடவுச் சீட்டுக்கு விண்ணப்பித்திருந்த போதும், அவருக்கு மலே மொழி தெரியாத காரணத்தினால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது.

பாடசாலை அதிபரின் மோசமான செயல் : அதிரடியாக கைது செய்த பொலிஸார்!!

பாடசாலையொன்றில் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 49 வயது பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கதிர்காமம் பொலிஸாருக்கு நேற்று வியாழக்கிழமை (22) கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

08 மற்றும் 09 ஆம் வகுப்புகளில் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சந்தேக நபரான அதிபர் கடந்த 2021 ஆம் ஆண்டில் ஒரு மாணவனையும் ,2023 ஆம் ஆண்டில் மற்றைய மாணவனையும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக இந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இரு மாணவர்களும் விளையாட்டு செயற்பாடுகளுக்காக பாடசாலைக்கு சென்றிருந்த போது உணவு உண்பதற்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அறையொன்றிற்குள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக இந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

7 வயதுச் சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை : இளைஞனுக்கு வலைவீச்சு!!

ஹிகுருகடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லுனுகல பிரதேசத்தை சேர்ந்த 7 வயதுடைய சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவனை கைது செய்வதற்கான விசாரணைகளை லிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது .

பாதிக்கப்பட்ட சிறுவனின் வீட்டிற்கு அருகில் உள்ள வீடொன்றில் வேலை செய்த கொத்தனாரின் உதவியாளராக வந்த சந்தேக நபர் பல தடவைகள் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக சிறுவனின் தந்தை நேற்று (22)அன்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுவன் வைத்திய பரிசோதனைக்காக பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.