குதிக்கால் வலியை தடுப்பது எப்படி?

heel_pain

நம் உடல் எடையை தாங்கும் முக்கிய மூன்று எலும்புகளில் ஒன்று பின் பாதத்தில் அமைந்துள்ளது. இதனை calcaneum என்று மருத்துவ பெயர் உண்டு.

சிலர் அன்றாட வாழ்க்கையில் வேலை நிமிர்த்தமாக தொடர்ந்து நீண்ட நேரம் நிக்க வேண்டியோ அல்லது நடக்க வேண்டியோ பணிக்கப்படுகிறார்கள். இதில் தொடர்ந்து என்ற வார்த்தையின் வீரியமே இந்த குதிய கால் வலிக்கு காரணம்.

நாம் தொடர்ந்து நிற்கும் போது இந்த எலும்பில் ஏற்படும் பளு இதற்கு முக்கிய காரணமாக கூறலாம்.

சிலருக்கு பாதத்தை உற்று நோக்கினால் அவர்களின் உள் பாதத்தில் இருக்கும் வளைவு மிக குறைந்தோ அல்லது இல்லாமலோ இருக்கும் போது இந்த குதிய கால் எலும்பு அதிக எடையை தாங்க நேரும் போது மூட்டுக்களை சுற்றி இருக்கும் சவ்வு அதிக வேலையை செய்ய வேண்டி நேரிடுவதால் பாத வலி வரலாம்.

இதனை நேரம் கிடைக்கும் போது அமரும் போது உங்கள் எடையை அந்த எலும்புக்கு தொடர்ந்து சொல்லாமல் தவிர்த்து வலியை குறைக்கலாம் அல்லது அமர்ந்து கொண்டு உங்கள் பணியை தொடரும் போது வலி அற்ற பாதத்தை பெறலாம்.

சிலர் முடியாது என்ற பதிலை வைத்து இருந்தால் அவர்கள் அணியும் செருப்பை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாற்றியே அல்லது MCR (micro cellular rubber) இனால் செய்யப்பட்ட காலணிகளை அணிவதன் மூலம் இதனை தவிர்க்கலாம்.

மிகச் சிறிய வயதில் விமானத்தில் உலகைச் சுற்றி சாதனை படைத்த ஆஸி. இளைஞன்!!

Flightஅவுஸ்திரேலியாவை சேர்ந்த இளைஞர் விமானத்தில் தனியாக உலகத்தைச் சுற்றி வந்து சாதனை படைத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ரேயான் கேம்பல் 19, விமானம் மூலம் தனியாக உலகை சுற்றி வர திட்டமிட்டார். இலகுரக விமானத்தில் ஜூன் 30ம் திகதி அவுஸ்திரேலியாவின் நியூ வேல்ஸ் பகுதியில் இருந்து தன், சுற்றுப் பயணத்தை ஆரம்பித்தார்.

தொடர்ந்து 70 நாட்கள் விமானத்தில் பயணித்த ரேயான் உலகின் அனைத்து பகுதிகளையும் சுற்றி வந்து தன் பயணத்தை வெற்றிகரமாக முடித்தார். இதன் மூலம், மிகச் சிறிய வயதில், விமானம் மூலம் உலகை சுற்றி வந்த நபர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன் அமெரிக்காவை சேர்ந்த ஜக் வீகன்ட்(21) இந்த சாதனையை படைத்திருந்தார். 19 வயதிலேயே உலகை சுற்றி வந்ததால் ஜக்கின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் அமெரிக்காவை சேர்ந்த, ஜக் வீகன்ட் 21 வயதில் இந்த சாதனையை படைத்திருந்தார். 19 வயதிலேயே உலகை சுற்றி வந்ததால் ஜக்கின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 24வது மாநாடு இன்று ஆரம்பம்!!

un-human-rights-council

ஜெனீவாவில் ஐ.நா சபை மனித உரிமைப் பேரவையின் 24 வது மாநாடு இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 27ம் திகதி வரை நடைபெறவுள்ளன.

ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பேரவையின் நடவடிக்கைகள், செயற்பாடுகள் தொடர்பில் விவாதத்துக்கான வருடாந்த அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்தபோது கண்டறியப்பட்ட சில விடயங்களையே அவர் தனது உரையில் சுட்டிக்காட்டுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் மனித உரிமை, நிலைவரம், ஜனநாயகத்துக்குச் சவாலான விடயங்கள், காணாமல் போனார் நிலைமைகள், தமிழர் பிரதேசங்களில் இராணுவ பிரசன்னம், சிவில் நிர்வாகச் சிக்கல்கள், தமிழ் மக்கள் மீதான கெடுபிடிகள், தமிழ் அரசியல் கைதிகளின் தடுத்து வைப்பு, முஸ்லிம்கள் மீதான அண்மைக்கால கெடுபிடிகள், மலையக மக்கள் பிரச்சினை, பள்ளிவாசல்கள் தகர்ப்பு கற்றுக் கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகள் அமுலாக்கலின் தொய்வு நிலைமை, ஊடக, கருத்துச் சுதந்திரங்களின் கேள்விக்கு உட்படுத்தப்படுத்தப்பட்ட தன்மை உட்படலான மேலும் சில உப தலைப்புகளின் கீழ் இந்த அறிக்கையைத் தயாரிக்கவுள்ளார் என்றும் நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் சிலர் நேற்று ஜெனீவா சென்றுள்ளனர்.

இந்த மாநாடு இலங்கைக்கு முக்கியமானது இல்லை எனவும் ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணையகத்துக்கான இலங்கை பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்துக் கொள்வார் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையர்கள் சிலர் இந்தோனேசியாவில் கைது!!

ind

இந்தோனேசியா ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இலங்கையர்கள் உட்பட்ட 106 பேர் இந்தோனேசிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். இந்த தகவலை இந்தோனேசிய ஊடகம் இன்று வெளியிட்டுள்ளது.

இதில் 7 இலங்கையர்களும் அடங்குகின்றனர். சோமாலியா, சூடான், மியன்மார், ஈராக் நாட்டவர்களும் இதில் உள்ளடங்கியுள்ளனர். இந்த அகதிகள் படகில் ஏறும் போது கைது செய்யப்பட்டதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவிததுள்ளனர்.

இதனையடுத்து 106 அகதிகளும் இடைத்தங்கல் முகாம் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

8 வயது சிறுவன் மீது 16 வயது சிறுவர்கள் மூவர் பாலியல் வல்லுறவு!!

abuse

8 வயது சிறுவனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 16 வயது சிறுவர்கள் இருவர் கற்பிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி , பள்ளிவாசல்பாடு நாச்சிக்கள்ளி பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவனே பாதிக்கப்பட்டுள்ளான்.

கடந்த 6ம் திகதி குறித்த சிறுவன் பாடசாலைக்குச் செல்லாது பாலகுடா பிரதேச மீன்வாடி ஒன்றுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்துள்ளான்.

அங்கு வந்த 16 வயது சிறுவன் ஒருவன் 8 வயது சிறுவனை ஏமாற்றி மற்றுமொரு மீன்வாடிக்கு அழைத்துச் சென்றுள்ளான்.

அதன் பின்னர் மூன்று சிறுவர்கள் இணைந்து 8 வயது சிறுவன் மீது பாலியல் வல்லுறவு புரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தை அடுத்து வீட்டுக்குச் சென்ற சிறுவன் தனக்கு நேர்ந்ததை பெற்றோரிடம் தெரிவித்த பின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதன்படி சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு சிறுவன் தப்பிச் சென்றுள்ளான்.

பாதிக்கப்பட்ட சிறுவன் கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

சந்தேகநபர்கள் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் குறிப்பிட்டனர்.

வவுனியாவில் தனியார் பஸ்கள் காலவரையறையற்ற பணிப்பகிஷ்கரிப்பில்!!

vavuniya

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளுக்குச் செல்லும் தனியார் பஸ்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

இதனால் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி செல்லும் தனியார் பஸ்கள் இன்று காலை முதல் சேவையில் ஈடுபடவில்லை.

ஹம்பாந்தோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் பஸ், வவுனியாவில் பயணிகளை ஏற்றுவதால் ஏற்பட்ட வாக்குவாதம் நீடித்து மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து வவுனியா பஸ் சங்க உறுப்பினர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆகையால் கைது செய்யப்பட்டுள்ள தமது உறுப்பினர்களை விடுதலை செய்ய வேண்டும் அல்லது தாக்குதலுடன் தொடர்புடைய மற்றைய பிரிவினரை கைது செய்ய வேண்டும் என வவுனியா தனியார் பஸ் ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர்.

இவ்விரண்டில் ஏதாவது ஒன்று நடக்கும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தண்ணீரில் ஏற்பட்ட சூறாவளி : உங்கள் கண்ணை நம்பமுடியாத காட்சி(வீடியோ)..

தண்ணீரில் ஏற்பட்ட சூறாவளி அதியசய காட்சியை இந்த வீடியோவில் பாருங்கள்..

ஷங்கருக்கு அதிர்ச்சி கொடுத்த ரஜனி!!

rajni

சௌந்தர்யா இயக்கத்தில் உருவாகி வரும் கோச்சடையான் பட சம்பந்தமான அனைத்து வேலைகளையும் முடித்து கொடுத்துவிட்டார் ரஜனி. இதற்கு அடுத்தபடியாக எந்த படத்தில் நடிக்கலாம் என்று தீவிர ஆலோசனையில் உள்ளார்.

இவருடைய அடுத்த படத்தை தயாரிப்பதற்கு கல்பாத்தி அகோரம் நிறுவனம் தயாராக உள்ளது. இயக்குனர் யார் என்று அறிவிக்கும் பொறுப்பை ரஜனியிடம் ஒப்படைத்துள்ளது.

இந்நிலையில் ஐ படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் ஷங்கருக்கு போன் போட்டு ஐ படத்தின் வேலைகள் எல்லாம் முடிந்துவிட்டதா என்று விசாரித்து இருக்கிறார் ரஜனி.

அதற்கு ஷங்கர் டிசம்பர் மாதத்திற்குள் முடிந்துவிடும் என்று பதிலளித்திருக்கிறார். உடனே ரஜினி நாம ரெண்டு பேரும் சேர்ந்து மீண்டும் ஒரு பண்ணுவோம். வித்தியாசமான ஒரு கதையை ரெடி பண்ணுங்க என்று சொல்ல ஷங்கர் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தாராம்.

எனவே ஐ படத்தை முடித்துவிட்டு இதற்கான பணிகளில் ஷங்கர் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

காஷ்மீரில் குண்டு சப்தங்களுக்கு இடையே நடந்து முடிந்த இசை நிகழ்ச்சி!!

kashmir

இந்திய பார்சி இனத்தைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற இசை நிகழ்ச்சியாளர் ஜுபின் மேத்தாவின் இசை நிகழ்ச்சி நேற்று மாலை காஷ்மீரில் நடை பெற்றது.

இந்தியாவின் ஜேர்மன் தூதரகம் இந்த இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இசை மூலம் இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரை உறுதிப்படுத்த நினைப்பதாகக் கூறி பல பிரிவினைவாத இயக்கங்கள் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

தங்களின் எதிர்ப்பைக் காட்டும்வண்ணம் கடையடைப்பு நிகழ்ச்சிக்கும் அந்த இயக்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. இசை நிகழ்ச்சி நடந்த ஷாலிமார் பூங்காவினை சுற்றியிருந்த பகுதிகளின் கட்டுப்பாட்டை வியாழன் அன்றே காவல்துறை ஏற்றது.

பல அடுக்குப் பாதுகாப்பு இந்தப் பகுதிக்கு வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட 2000 ரசிகர்கள் கூடியிருந்து இசை நிகழ்ச்சியினைக் கண்டு களித்த போதிலும், ஆங்காங்கே துப்பாக்கித் தாக்குதல்கள் நடைபெற்றவண்ணம்தான் இருந்தன.

புட்ஷா சதுக்கத்தில் வேகமாகத் தங்களைக் கடந்து சென்ற காரை காவல்துறை வீரர்கள் சுட்டதில் காரை ஓட்டியவரின் இரண்டு கால்களும் சேதமடைந்தன.காஷ்மீரின் தென்பகுதியில் உள்ள புல்வாமா என்ற இடத்தில் அடையாளம் தெரியாத போராளிகள் காவல்துறையினர் மீது கையெறி குண்டுகளை வீசியதில் ஏழு பேர் காயமடைந்தனர்.

தலைநகரிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள ஷோபியன் மாவட்டத்தில் ராணுவக் காவல் துருப்புகளினால் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உள்ளூர் மக்கள் அவர்கள் அப்பாவி மனிதர்கள் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.

ஆயினும் அவர்கள் அங்கிருந்த சோதனைச் சாவடியைத் தாக்கியதாகவும் ஆயுதங்களையும் கையெறி குண்டுகளையும் தங்களுடன் வைத்திருந்ததாகவும் சிஆர்பிஎப்பின் நிர்வாக இயக்குநர் திலிப் திரிவேதி தெரிவித்துள்ளார்.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் : கேயார் அணி அபார வெற்றி!!

cinema election

2013-2015 ஆம் ஆண்டுக்கான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தேர்தல் நேற்று காலை நந்தனத்தில் நடந்தது. நடிகர்கள் ரஜினி, கமல் உள்பட பல தயாரிப்பாளர்கள் இந்த தேர்தலில் உற்சாகமாக வாக்களித்தனர்.

காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணியுடன் முடிவடைந்தது. மாலை 5 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்தல் முடிவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக கேயார் வெற்றி பெற்றதாக கூறப்பட்டது.

தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கேயார் 449 வாக்குகளும், கலைப்புலி எஸ்.தாணு 252 வாக்குகளும் பெற்றனர். துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுபாஷ் சந்திரபோஷ் 407, டி.ஜி.தியாகராஜன் 358 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்.

செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஞானவேல்ராஜா 414, டி.சிவா 284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர். இதே பதவிக்கு போட்டியிட்ட சிவசக்திபாண்டியன் 280 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

21 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்டதில் எஸ்.தாணு அணியைச் சேர்ந்த ராதாரவி, கருணாஸ் ஆகிய இருவர் வெற்றி பெற்றனர். சுயேட்சையாக போட்டியிட்ட கோவைத்தம்பி வெற்றி பெற்றார். இவர்கள் மூன்று பேரைத் தவிர செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் கேயார் அணியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நித்தியானந்தாவின் சிஷ்யையை மணக்கிறார் அவரது அண்ணன்!!

Nithiyanantha

நித்தியானந்தாவின் சிஷ்யை திருமணம் செய்யவுள்ளார் அவரது உடன் பிறந்த அண்ணன் செந்தில்குமார். நித்தியானந்தாவுக்கு ஒரு அண்ணன், ஒரு தம்பி. அண்ணன் பெயர் செந்தில்குமார்.

அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. 40 வயதாகிறது. நித்தியானந்தாவின் தந்தை இறந்ததும் தனது தாயார் மற்றும் தம்பியை தன்னுடனேயே அழைத்து வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

அண்ணன் செந்தில்குமார் மட்டும் திருவண்ணாமலையில் தொடர்ந்து தங்கியுள்ளார். இந்நிலையில் அவருக்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளது.
நித்தியானந்தாவின் சிஷ்யையானா மலேசியாவைச் சேர்ந்த சுபத்ரா என்கிற நித்திய கீதானந்தாவை மணக்கிறாராம் செந்தில்குமார்.

இவர்களது திருமணம் செப்டம்பர் 16ம் திகதி பிடதி ஆசிரமத்தில் நடைபெறவுள்ளதாம். திருமணத்திற்காக அழைப்பிதழில் நித்தியானந்தர் ஆண்டு 36ம் வருடம் ஆவணி மாதம் 31ம் திகதி திருமணம் என்று குறிபிடப்பட்டுள்ளது.

மேலும் அவதார புருஷர் ஜகத்குரு பகவான் ஸ்ரீ ல ஸ்ரீ பரமஹம்ச நித்யானந்த ஞானசம்மந்த தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள் திருவருளால் நடைபெறவுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்களே கத்தியுடன் வெளியே செல்லுங்கள் : ஷில்பா ஷெட்டி!!

silpa

பெண்கள் வெளியே செல்லும்போது பாதுகாப்புக்கு கத்தி எடுத்து செல்ல வேண்டும் என்று பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார்.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஷில்பா ஷெட்டி சமூகத்தில் சிலர் கேவலமான மனநிலையில் இருக்கின்றனர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி பத்திரிகைகளில் படிக்கும் போது விரக்தி ஏற்படுகிறது.

இதுபோன்ற சமூகத்தில் வாழ்கிறோமே என்று கவலை ஏற்படுகிறது. பொலிசார் மிகவும் அசாதாரணமாக தங்கள் கடமையை செய்கின்றனர்.

எல்லா பொறுப்பையும் அவர்களின் தோள்களிலேயே சுமத்தி விடக் கூடாது. அவர்களால் எவ்வளவுதான் தாங்க முடியும். பெண்கள் சுயசார்பு உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

இதனால் வெளியில் செல்லும் போது பெண்கள் பாதுகாப்புக்கு கத்தி எடுத்துச் செல்ல வேண்டும் என்று ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார்.

சிம்பாவேயில் 41 யானைகள் விஷம் வைத்துக் கொலை!!

poisoned-elephants-jpg

ஆபிரிக்க நாடான சிம்பாவே நாட்டில் கலதாரி பாலைவனம் அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற வாங் தேசியப் பூங்காவில் யானைகள், சிங்கங்கள், புலிகள் என பல விலங்குகள் வசிக்கின்றன.

இந்நிலையில் இந்த பூங்காவில் யானைகள் மற்றும் காண்டாமிருகங்கள் கொல்லப்படுவதாக குற்றச்சாட்டுகள் கடந்த சில நாட்களாக தகவல்கள் வந்துக்கொண்டிருந்தன.

மருத்துவ பயன்பாட்டிற்காக வேட்டையாளர்களால் விலங்குகளின் தந்தங்கள் மற்றும் கொம்புகள் வேட்டையாடப்படுகின்றன என்று கூறப்படுகிறது.

கடந்த சில வருடங்களில் மட்டும் இப்பூங்காவில் 41 யானைகள் சயனைட் விஷம் வைத்து கொல்லப்பட்டு அதன் தந்தங்களை கொள்ளையர்கள் வேட்டையாடி சென்று இருக்கின்றனர் என்று பூங்காவின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

இது குறித்து நடந்த விசாரணையில் 5 வன விலங்கு வேட்டையாளர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

சயனைட் விஷத்தால் இறந்துபோன விலங்குகளின் உடலை தொடும் விலங்குகளும் மற்றும் மனிதர்களும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த விஷத்தால் சிங்கங்கள், காட்டெருமைகளும் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மலையாளத்தில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படம்..!!

naduvila

கடந்த 2012ம் ஆண்டு விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் வெளிவந்த படம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். இந்த படத்தை குறும்பட இயக்குனர் பாலாஜி இயக்கியிருந்தார். வித்தியாசமான கதையம்சத்தில் வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தை மலையாளத்தில் ரீமேக் செய்யவிருக்கின்றனர். இப்படத்தின் கதாநாயகனாக நேரம் படத்தில் நடித்த நிவின் பவுலி நடிக்கிறார். நடிகை அம்பிகாவின் தம்பி சுரேஷ் இப்படத்தை இயக்குகிறார்.

தமிழில் மிகப்பெரிய பிரம்மாண்டமான படங்களை வெளியிட்ட வேந்தர் மூவீஸ் நிறுவனம் புதிதாக தொடங்கியிருக்கும் மாருதி கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகையர் தேர்வு விரைவில் தொடங்கவிருக்கிறது. இப்படம் குறித்து மேலும் பல தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லண்டனில் இஸ்லாமியர்களை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் 160 பேர் கைது!!

Muslim-google-Lond_1601967a

இங்கிலாந்தில் பெரும்பான்மையான முஸ்லிம் சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் நேற்று இஸ்லாமியர்களை எதிர்த்து இங்கிலீஷ் டிபென்ஸ் லீக் பிரிவினைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களை எதிர்த்து போட்டி ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றபோது ஏற்பட்ட மோதலில் 160க்கும் மேற்பட்டோரை லண்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

டிபென்ஸ் லீக் பிரிவினைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் மற்றும் இனவெறிக்கு எதிரான ஒன்றுபட்ட அமைப்பினர் போன்ற பல குழுவினர் கலந்துகொண்ட இந்த சம்பவத்தின்போது சுமார் 3000 பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இஸ்லாமியர்கள் வசிக்கும் டவர் ஹாம்லெட் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழையாத வண்ணம் பொலிஸார் தடுப்புகள் ஏற்படுத்தி வைத்திருந்தனர்.

அதேபோல் இவர்களின் ஊர்வலம் முடியும் இடமான டவர் பிரிட்ஜ் பகுதியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. பொது ஒழுங்கிற்கு தடை செய்யாதபடி ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஊர்வலத்தின் வழிகளும் நேரமும் பொலிஸாரால் குறிப்பிடப்பட்டிருந்தன.

வெள்ளிக்கிழமை அன்று இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் ஈடிஎல் அமைப்பினர் முறையிட்டபோது நீதிமன்றம் அவர்களது மனுவைத் தள்ளுபடி செய்தது.

ஊர்வலம் முடியும் இடத்தில் போட்டி அமைப்பாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தகவல் அதிகாரி தெரிவித்தார்.

அதேபோல் கத்தி, வெடிமருந்துகள் போன்றவற்றை வைத்திருந்ததாகவும், வன்முறையில் ஈடுபட்டதாகவும் ஈடிஎல் அமைப்பைச் சேர்ந்த 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இந்த அமைப்பின் தலைவர் டோமி ரொபின்சனும் அடங்குவார் என்று அந்த அமைப்பினரின் இணையதளத் தகவல் தெரிவித்துள்ளது.

2013 எனக்கு சிறந்த ஆண்டாக அமையவில்லை : போல்ட் கவலை!!

usainbolt

2013ம் ஆண்டு எனக்கு சிறப்பாக அமையவில்லை என்று உலகின் அதிவேக மனிதரான ஜமைக்காவின் உசைன் போல்ட் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் கடைசி ஓட்டப் பந்தயப் போட்டியான டைமண்ட் லீக், பெல்ஜியத்தில் நடைபெற்றது.

இப்போட்டியின் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 9.80 விநாடிகளில் இலக்கைக் கடந்து முதலிடத்தைப் பிடித்தார் போல்ட்.

அவரைத் தொடர்ந்து அமெரிக்காவின் மைக் ரோட்ஜர்ஸ் (9.90 விநாடிகள்), ஜமைக்காவின் நெஸ்டா கார்டர் (9.94 விநாடிகள்) அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர்.

காயம் உள்ளிட்ட பிரச்னையால் இந்த சீசனை எனது தடகள வாழ்க்கையில் சிறந்ததாக எண்ணவில்லை எனினும், உலக சம்பியன்ஷிப் தடகளம் உள்ளிட்ட போட்டிகளில் முதலிடத்தைப் பிடித்தது நிறைவைத் தந்துள்ளது என்று போல்ட் கூறினார்.