கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் 1 கோடி பரிசு வாங்கிய நபர்!!

Kaun Banega Crorepati

நடிகர் அமிதாப் பச்சன் நடத்திய கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் 1 கோடி ரூபாய் பரிசு வென்றுள்ளார்.

நடிகர் அமிதாப்பச்சன் கோன் பனேகா குரோர்பதி என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

ஏழாவது முறையாக தொடர்ந்து நடத்தப்படும் இந்த பொது அறிவு கேள்வி பதில் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில் உதய்பூரை சேர்ந்த தாஜ் முகமது என்ற நபர் முதல் பரிசான 1 கோடி ரூபாயை வென்று உள்ளார்.

இந்த பணத்தை வைத்து கண் பார்வையில்லாத தன் மகளுக்கு சிகிச்சை அளிக்க உள்ளதாக தாஜ் முகமது கூறினார்.

செப்டம்பர் 15ம் திகதி இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

இந்தியாவில் தண்ணீர் கிடைக்காமல் ஏங்கும் 22 நகரங்கள் : அதிர்ச்சி தகவல்!!

india-water-and-sanitation

இந்த‌ியாவில் 22 ‌நகரங்கள் அன்றாட தண்ணீர் பற்றாக்குறையில் சிக்கி தவிப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன. இந்திய அரசுக்கு இப்பிரச்சினை வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பிரச்சினையாகும்.

இதில் மிகவும் மோசமான பாதிப்பு உள்ளான நகரம் ஜாம்ஷெட்பூர் ஆகும்.
ஏறக்குறைய இங்கு மக்களுக்கு தேவையான தண்ணீரும் கிடைக்கின்ற தண்ணீர் அளவையும் கணக்கிட்டு பார்த்தால் 70 சதவீத பற்றாக்குறை இருந்து வருகிறது.

கான்பூர், அசான்சோல், தன்பாத், மீரட், பரிதாபாத், விசாகபட்டினம், மதுரை மற்றும் ஐதராபாத் ஆகிய முக்கிய நகரங்களில் கடுமையான பற்றாக்குறை உள்ள நகரங்களாக உள்ளன. இதில் 30 சதவீத தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லை.

உதாரணமாக, டெல்லியில் 4,158 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவை என்றால் 3,156 மில்லியன் லிட்டர் தான் அளிக்கப்படுகிறது. அதாவது 40 சதவீதம் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதாக அரசு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

மற்றொரு புள்ளி விபரத்தின்படி பெரும்பாலான நகரங்‌களுக்கு போதுமான தண்ணீர் உள்ளதாகவும் தண்ணீரை பொறியாளர்கள் சரியானபடி பராமரிக்காத காரணத்தினால் இப்பிரச்சினை ஏற்படுவதாக சொல்கிறது அப்புள்ளி விபரம்.

இதுகுறித்து குடிநீர் வள மோலாண்மை அதிகாரி திலிப் ‌பவுஷ்தர் கூறுகையில் மற்ற பெரிய நகரங்களுடன் ஒப்பிடுகையில் மு‌ம்பையில் நல்ல மழை பெய்கிறது. இதில் சிறிது தான் விவசாயத்திற்கு பயன்‌படுகிறது. தண்ணீர் பற்றாக்குறையை இந்நகரம் மழை நீர் சேகரிப்பு செய்யாமல் தண்ணீர் வீணாகிறது.

இதை சரியாக செய்தால் தண்ணீர் பற்றாக்குறையை குறைக்கலாம்.
மேலும் ஜாம்ஜெட்பூர், தன்பாத் மற்றும் கான்பூரில் அதிகரிக்கும் மக்கள் தொகை பெருக்கம் தண்ணீர் தேவையை அதிகரிக்கிறது.

எடுத்துக்காட்டாக குர்கானில் பெரிய அளவிலான ‌குடீநீர் கால்வாய்கள் ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட 15-20 வருடங்களுக்கு பிறகு கட்டப்பட்டது.
குடிநீர் ஆதாரமாக தண்ணீ்ர் தேவையை பூர்த்தி செய்கிறது.மொத்தத்தில் இந்தியாவில் தினசரி தண்ணீரை முறையாக பயன்படுத்தினால் 90 சதவீத தேவையை பூர்த்தி செய்யலாம்.

தண்ணீ்ரை வீணாக்காமல் வழங்கினாலே பற்றாக்குறையை தவிர்க்கலாம். உதாரணமாக கொச்சியில் தினசரி குடிநீர் தேவை 247 மில்லியன் லிட்டர். ஆனால் அங்கு 250 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது.

இதே போல் தண்ணீரின் தேவையை விட குடீநீர்அதிகமாக 10 நகரங்களில் வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

கல்முனைக்குடியில் வீடொன்றில் இருந்து 4 ½ கோடி கொள்ளை..!

robகல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனைக்குடி மத்திய வீதியிலுள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில் பணம், தங்க ஆபரணங்கள் உட்பட சுமார் 4 ½ கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இச்சம்பவம் நேற்று திங்கள் அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது;

கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற வீட்டின் உரிமையாளரான வர்த்தகர் தூரப் பயணமொன்றை மேற்கொண்டு அதிகாலை 3 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார்.

அதன் பின்னர் அதிகாலை 4 மணியளவில் அவரும் அவரது மனைவி, பிள்ளைகள் உட்பட அனைவரும் உறக்கத்தில் இருந்த வேளை வீட்டின் வெளிப்புற யன்னல் கம்பியை கழற்றி விட்டு நுழைந்த கொள்ளையர்கள் வீட்டு அலுமாரியை உடைத்து அதனுள்ளிருந்த மாணிக்கக் கற்கள், பணம், நகை மற்றும் வீட்டிலிருந்த கையடக்கத் தொலைபேசி என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

காலை 6 மணிக்கே வீட்டார் எழுந்ததாகவும் அப்போது அலுமாரி திறக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையிடப்பட்டிருந்ததாகவும் அதைத் தொடர்ந்து பொலிஸ் அவசரப் பிரிவுக்கு அழைப்பை மேறகொண்டதாகவும் வீட்டார் தெரிவித்தனர்.

வீட்டார் உறங்கி எழுந்தவேளை அவர்களின் கண்களில் சற்று எரிவு இந்ததாகவும் ஒருவேளை கொள்ளையர்கள் மயக்க மருந்தைத் வீட்டினுள் விசிறிய பின் கொள்ளையில் ஈடுபட்டடிருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவுகிறது.

பணம் உட்பட ஏறக்குறைய 4 ½ கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் இக்கொள்ளைச் சம்பவத்தின் போது கொள்ளையிடப்பட்டுள்ளது.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை கல்முனைப் பொலிசாருடன் இணைந்து கல்முனைக் குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஊடகங்களுக்கு சச்சின் விடுத்த வேண்டுகோள்!!

sachin-arjun

எனது மகனுக்கு யாரும் நெருக்கடி கொடுக்க வேண்டும் என ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன்.

இவர் கடந்தாண்டு 14 வயதுக்குட்பட்ட போட்டியில் சதம் அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஆனால் இந்த ஆண்டு இதுவரை முத்திரை பதிக்கும் வகையில் ஆடவில்லை.

இந்நிலையில் எனது மகனுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம் என சச்சின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில் எனது மகன் கிரிக்கெட்டை நேசித்து விளையாடுகிறான்.

என்னை போன்று அவனையும் ஒப்பிட்டு பார்க்காதீர்கள் சாதாரண சிறுவனை போன்று பாருங்கள். பொறுப்புள்ள தந்தை என்ற முறையில் எனது மகனுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம் என்று ஊடகங்களை கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

மும்பை விளையாட்டு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் சச்சினுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜப்பானை கலக்கிய ஸ்ரீதேவி!!

sridevi

ஜப்பான் நாட்டை கலக்கியுள்ளார் முன்னாள் கனவு கன்னி ஸ்ரீதேவி.
ஜப்பானின் ஆய்சி திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ஸ்ரீதேவியின் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்திற்கு ஜப்பான் பெண்கள் மத்தியில் பெருவாரியான ஆதரவு கிடைத்துள்ளதாம்.

ஸ்ரீதேவியின் படம் இதுவரை ஜப்பானில் திரையிடப்பட்டதில்லை. இந்நிலையில் அவரது இங்கிலீஷ் விங்கிலீஷ் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

ஆனால் படம் வருவதற்கு முன்பே பட விழாவில் அவரது படம் கலக்கி விட்டதாம். செப்டம்பர் 1ம் திகதி நடந்த ஆய்சி திரைப்பட விழாவில் இங்கிலீஷ் விங்கிலீஷ் திரையிடப்பட்டபோது அதற்கு பெண்கள் மத்தியில் பிரமாதமான வரவேற்பு கிடைத்ததாம்.

பட விழாவில் ஸ்ரீதேவி படத்தைப் பார்த்து அவரது ரசிகையாகி விட்ட ஜப்பான் பெண்கள் தற்போது ஸ்ரீதேவியை நேரில் பார்க்கத் துடிக்கிறார்களாம்.

ஐபிஎல் சூதாட்டம் : அஜித் சண்டிலாவுக்கு ஜாமீன்!!

ajit chandila

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அஜித் சாண்டிலாவுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் சூதாட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜீத் சண்டிலா உட்பட பலரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசு தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் சில விஷயங்கள் தொடர்பு இல்லாமல் இருப்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அஜீத் சண்டிலா உள்ளிட்ட மூன்று பேரை ஜாமினில் விடுவிக்க உத்தரவிட்டனர். இந்த வழக்கில் மேலும் 6 பேரின் ஜாமின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இவர்களில் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் ஆகியோர் ஏற்கனவே ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய அமர்வில் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எச்சரிக்கை!!

pillei

இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தன்னை சந்தித்த சமூக ஆர்வலர்கள் தாக்கப்படுகின்றமை குறித்து நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐநா மனித உரிமை பேரவையின் 24 வது பருவகால அமர்வு இன்று ஆரம்பமான போது இலங்கை குறித்து உரையாற்றிய நவநீதம்பிள்ளை இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்களை பாதுகாக்கும்படி அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மனித உரிமைகள் விடயம் குறித்து ஐ.நா சபையுடன் இணைந்து பணியாற்றப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா.சபையின் மனித உரிமை ஆணையக் கூட்டம் ஜெனீவாவில் இன்று நண்பகலில் தொடங்கியது. 20 நாடுகளின் மனித உரிமை நிலவரம் குறித்து ஆணைய தலைவர் நவநீதம் பிள்ளை உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில் இலங்கையில் மேற்கொண்ட ஆய்வுகள் குறித்து பின்பு விளக்கமாக அறிவிப்பேன் என்றார். மேலும், தம்மை சந்தித்தவர்களின் பாதுகாப்பை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் நவநீதம் பிள்ளை வலியுறுத்தினார்.

வரும் 27ம் திகதி வரை நடைபெறும் கூட்டத்தில் 25ம் திகதி இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து நவநீதம் பிள்ளை உரையாற்றுகிறார்.

பொது அறிவு : தெரிந்துகொள்ளுங்கள் !!

1) உலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது
தீக்கோழி

2) வெறும் கண்களால் பார்க்க முடியாத கோள்
யுரேனஸ்

3) ஜப்பானின் தலைநகர்
டோக்கியோ

4) பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது
நாக்கு

5) திரை அரங்குகளே இல்லாத நாடு
பூட்டான்

6) உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம்
முதலை

7) எந்த கண்டத்தில் கங்காரு, பனிக்கரடி உள்ளது
அவுஸ்திரேலியா

8) நள்ளிரவு சூரியன் உதிக்கும் நாடு
நோர்வே

9) உலகிலேயே உயரமான சிகரம்
எவரெஸ்ரட்

10) மரத்தின் கிளைகளிலிருந்து வேர்களைத் தோற்றுவிக்கும் தாவரம்
ஆலமரம்

வெளியானது கோச்சடையான் டீசர் : வீடியோ இணைப்பு!!

kochadayan

ரஜினியின் கோச்சடையான் தீபாவளி சரவெடியாக வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் கோச்சடையான் படத்திற்கான இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

தீபாவளி அன்று வெளியீடு செய்ய திட்டமிட்டு இருப்பதால் டப்பிங் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

தற்போது ரஜினி கோச்சடையான் தெலுங்கு பதிப்பிற்கு தெலுங்கு டப்பிங் பேசிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் கோச்சடையான் தெலுங்கு படத்திற்கு விக்ரமசிம்ஹா என்று பெயர் வைத்திருப்பதாக படத்தின் இயக்குனர் சவுந்தர்யா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் ஒரே நேரத்தில் கோச்சடையான் படத்தை வெளியிட சவுந்தர்யா திட்டமிட்டிருக்கிறார்.

ரஜினியை அடுத்து படத்தில் நடித்திருக்கும் சரத்குமார், நாசர், ருக்மணி, ஆகியோரும் தெலுங்கு டப்பிங் பேச இருக்கிறார்களாம்.

இந்நிலையில் கோச்சடையான் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று மாலை கோச்சடையான் ரெயிலர் வெளியிடப்படவுள்ளது.

இலங்கையில் போதைப் பொருள் கடத்தல் : 20 மாதங்களில் 90 ஆயிரம் பேர் கைது!!

arrest

இலங்கையில் கடந்த 20 மாதங்களில் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 90 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப் பொருள் கடத்தியவர்களே அதிகளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி போதைப் பொருள் கடத்தல் மற்றும் வைத்திருத்தல் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நாள் தோறும் 150 பேர் கைது செய்யப்படுகின்றனர்.

பொலிஸாரின் சுற்றி வளைப்புக்கள் மூலம் பாரியளவில் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் முறியடிக்கப்பட்டுள்ளன.

போதைப் பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்தல் மற்றும் கடத்தல் நடவடிக்கைகளை இல்லாதொழித்தல் ஆகிய நடவடிக்கைகளில் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்துவார்கள் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் தமிழ் பெண்ணுக்கும் முஸ்லிம் வாலிபருக்கும் இந்து மத முறைப்படி நடைபெற்ற திருமணம்(படங்கள்)!!

மட்டக்களப்பு மரப்பாலம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ் யுவதி ஒருவருடன் முஸ்லிம் ஆசிரியர் ஒருவருக்கு நேற்று இந்துமத முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் 1ம் குறிச்சியில் வசிக்கும் புகாரி முகமது நஜீம் லாபீர் கான் என்ற 28 வயது முஸ்லிம் ஆசிரியருக்கும் மரப்பாலத்தைச் சேர்ந்த நல்லதம்பி சாந்தி என்ற 23 வயது பெண்ணுக்கும் நேற்று ஏறாவூர் 4ம் குறிச்சி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் இந்துமத முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது.

குறித்த முஸ்லிம் ஆசிரியர் இந்துமதத்தை தழுவிக் கொண்டதோடு அவர் தனது பெயரை சிவகாந்தன் எனவும் மாற்றிக்கொண்டுள்ளார்.

இவருக்கு செங்கலடி வர்த்தக சங்கத் தலைவர் மோகன் தலைமையில் பதிவாளர் திருமதி.கமலேஸ்வரி தம்பிராஜா அவர்களினால் பதிவுத் திருமணம் செய்துவைக்கப்பட்டது.

அத்துடன் இவர்களுக்கான திருமணத்தை இந்துமத முறைப்படி செங்கலடி வர்த்தக சங்கத் தலைவர் நடாத்தி வைத்துள்ளார்.

1 2 3

அண்ணனை பொல்லால் அடித்து கொலை செய்த தம்பி : பொலநறுவையில் சம்பவம்!!

MURDER

பொலன்நறுவை காலிங்க பிரதேசத்தில் ஒருவர் பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சகோதரர்கள் இடையே நெல் அறுவடையை பங்கு போட்டு கொள்வதில் ஏற்பட்ட தகராறின் போது கோபமடைந்த தம்பி பொல்லால் அண்ணனை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அண்ணன் சம்பவ இடத்திலேயே உயரிழந்துள்ளார்.

நேற்று மாலை ஏற்பட்ட இந்த சம்பவத்தை அடுத்து தம்பியை பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்த கொலைச் சம்பவம் குறித்து பொலன்நறுவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விண்வெளிக்கு செல்லும் 2ஆவது குரங்கு!!

monkey

கடந்த ஜனவரி மாதம் ஈரான் விண்வெளி மையம் தங்களது சொந்த தயாரிப்பான பிஷ்கம்-I ரொக்கெட்டில் குரங்கினை முதன்முறையாக விண்ணிற்கு அனுப்பியது.

தற்போது வரும் 45 நாட்களுக்குள் பிஷ்கம்-II ரொக்கெட் மூலம் மற்றொரு குரங்கை அனுப்பும் திட்டத்தில் இருப்பதாக அரசின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வரும் ஐந்து முதல் எட்டு ஆண்டிற்குள் மனிதர்களை அனுப்பும் திட்டத்தின் முதல் கட்டமாக உயிரினங்கள் அனுப்பப்படுவதாகவும் அவர் கூறினார்.

முதலில் அனுப்பப்பட்ட ரொக்கெட்டானது திட எரிபொருளில் இயங்குவதாக அமைக்கப்பட்டிருந்தது. இப்போது அனுப்பப்பட இருப்பது திரவ எரிபொருளை பயன்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஈரான் விண்வெளி மையத்தின் இயக்குநர் ஹமித் பசெலி தெரிவித்துள்ளார்.

மேலும் 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 20ம் திகதி முடிவடையும் ஈரானிய ஆண்டிற்குள் தொழில்நுட்ப ஆய்விற்கான தட்பிர், ஷரிப், நஹித் ஆகிய விண்கலங்களையும் விண்ணிற்கு செலுத்தும் முயற்சிகளில் ஈரான் விண்வெளி மையம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பம் நடத்த மனைவி மறுத்ததால் கணவன் தீக்குளித்து தற்கொலை!!

Man-on-fire

குடும்பம் நடத்த வருவதற்கு மனைவி மறுத்ததால் மாமனார் வீட்டில் மருமகன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்தவர் பழனி(45). விவசாயி. இவரது மனைவி வள்ளி(39). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. சமீபத்தில் பிரச்னை ஏற்பட்டதால் அம்மாப்பேட்டையில் குழந்தைகளை விட்டு விட்டு வள்ளி தன் தாய் வீடான மன்னார்குடி அருகே உள்ள எடையூர், வேப்பஞ்சேரிக்குச் சென்றுவிட்டார்.

நேற்று காலை பழனி வேப்பஞ்சேரிக்குச் சென்று, வள்ளியைக் குடும்பம் நடத்த அழைத்தார். வள்ளி அவருடன் செல்ல மறுத்து ஆபாசமாகத் திட்டியுள்ளார்.

இதனால் அவமானம் அடைந்த பழனி மாமனார் வீட்டில் ஆளில்லாத நேரத்தில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார்.

அருகில் இருந்தோர் அவரை மீட்டு மன்னார்குடி அரசு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் பழனி இறந்தார். எடையூர் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிரியாவில் 3 நாட்கள் குண்டு வீச அமெரிக்கா திட்டம்!!

obama

ரசாயன ஆயுதம் பயன்படுத்திய விவகாரத்தில் சிரியா மீது ராணுவ தாக்குதல் நடத்த அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. குறைந்தபட்ச அளவில் இந்த தாக்குதல் நடத்தப்படும் என கூறப்பட்டு வருகிறது.

இந்த தாக்குதலை எவ்வாறு, எப்படி நடத்துவது, என்பது குறித்து ராணுவ தலைமையக அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

அநேகமாக சிரியா மீது போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் 72 மணி நேரம் (3 நாட்கள்) குண்டு வீசப்படும் என தெரிகிறது.

முதலில் 50 இடங்களை இலக்கு வைத்து இருந்தார்கள். தற்போது மேலும் சில இடங்களை சேர்ப்பது குறித்து ஆலோசித்து வருகிறார்கள்.

அமெரிக்க ராணுவத்தின் 2 மூத்த அதிகாரிகள் இந்த தகவல்களை உறுதி செய்வதாக லொஸ் ஏஞ்சல்ஸ் நகர பிரபல பத்திரிகை தெரிவிக்கிறது.

இதுதவிர அமெரிக்க செனட் உளவுப்பிரிவு வல்லுனர்கள் குழு சிரியாவில் ரசாயன தாக்குதல் நடந்த 13 வீடியோ காட்சிகளையும் வெளியிட்டார்கள்.

குடிவெறியில் தகராறு செய்த தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது!!

murder

குடிவெறியில் தகராறு செய்த தந்தையை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற மகனை பொலிசார் கைது செய்தனர்.

நாகை மாவட்டம் பொறையாரை அடுத்த குட்டியாண்டியூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் குஞ்சான்(65). இவருக்கு வெள்ளரியம்மாள் என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.

நேற்று முன்தினம் குஞ்சான் தன் வீட்டில் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். பொறையார் பொலிசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு வைத்தியசாலைக்கு அனுப்பினர்.

விசாரணையில் நேற்று முன்தினம் மதியம் குஞ்சான் வழக்கம் போல் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்துள்ளார். ஆத்திரமடைந்த அவரது மகன் சேகர் (40) உருட்டுக்கட்டையால் அவரை அடித்துள்ளார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த குஞ்சான் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரிய வந்தது. பொலிசார் சேகரை கைது செய்தனர்.