நொக்கியா நிறுவனத்தை 43,000 கோடிக்கு வாங்கும் மைக்ரோசொப்ட்!!

nokia

உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான நொக்கியாவை மைக்ரோசொப்ட் நிறுவனம் 43,000 கோடிக்கு வாங்கவுள்ளது.

செல்போன் விற்பனையில் உலகில் முதலிடத்தில் இருந்த நொக்கியாவை சாம்சங் போன்ற நிறுவனங்கள் பின் தள்ளிவிட்டன. மிக வேகமாக மாறிவரும் தொழில்நுட்பத்துக்கு இணையாக நொக்கியா தன்னை மாற்றிக் கொள்ளாததால் சாம்சங், சொனி , அப்பிள் போன்ற சர்வதேச நிறுவனங்களும், மைக்ரோமேக்ஸ் போன்ற உள்நாட்டு நிறுவனங்களும் நோக்கியாவின் சந்தையை ஆக்கிரமித்துவிட்டன.

குறிப்பாக ஸ்மார்ட்போன் சந்தையில் நொக்கியா மிகவும் பின்தங்கிவிட்டது. அன்ரொய்ட் மொபைல் போன்களை சமாளிக்க 2011ம் ஆண்டில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் மென்பொருளை நொக்கியா தனது செல்போன்களில் புகுத்தியது.

இது ஓரளவுக்கு நொக்கியாவுக்கு உதவினாலும் பெரிய அளவில் விற்பனையை அதிகரிக்க இந்தத் திட்டம் உதவவில்லை. இந் நிலையில் கடும் நெருக்கடியில் உள்ள நொ க்கியாவை வாங்க மைக்ரோசொப்ட் முடிவு செய்துள்ளது.

அப்பிள் போன்ற மென்பொருள் பின்னணியைக் கொண்ட நிறுவனங்களே நேரடியாக போன்களைத் தயாரித்து வெற்றி கண்டதையடுத்து அதே வேலையில் கூகுள் நிறுவனமும் இறங்கியுள்ளது. விரைவிலேயே கூகுள் போன்கள் உலகளவில் வலம் வரவுள்ளன.

இந் நிலையில் அதே வழியில் பயணிக்க முடிவு செய்துள்ள மைக்ரோசொப்ட் இதன் முதல் படியாக உலகின் மாபெரும் செல்போன் நிறுவனமான நொக்கியாவை வாங்க முடிவு செய்துள்ளது.

மேலும் நொக்கியா நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குனரான ஸ்டீபன் எலோப் மீண்டும் மைக்ரோசொப்டிலேயே இணைவார் என்றும் தெரிகிறது. இவர் மைக்ரோசொப்டில் இருந்து தான் நொக்கியாவுக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசொப்ட்டின் இப்போதைய தலைவரான பால்மர் விரைவில் பதவி விலக உள்ள நிலையில், ஸ்டீபன் எலோப் மைக்ரோசொப்ட்டின் தலைவாரகவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

வாழ்க்கையில் முன்னேற முயற்சிப்பவரா நீங்கள் : அவசியம் இதை பாருங்கள்(வீடியோ)

பிறப்பிலேயே கைகளை இழந்திருந்த ரிசி பார்கர் என்பவர் இன்று ஒரு பொறியியலாளராக இருக்கின்றார். இவர் எந்த ஒரு நிலமையையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தும் ஆற்றல் கொண்டிருக்கின்றமையால் ஏனையவர்களுக்கு இணையாக அத்தனை விடயங்களையும் வாழ்வில் அனுபவித்து வருகின்றார்.

புகை பழக்கத்தை விட வேண்டுமா??

dry_grapes

தினமும் ஒரு பக்கெட் சிகரட் வாங்குவதற்கு பதில் உலர் திராட்சை பக்கெட் அல்லது 100 கிராம் வாங்கி வைத்து கொள்ளுங்கள் . சிகரட் ஞாபகம் வரும் போது 2 உலர் திராட்சை வாயில் போட்டு சுவையுங்கள் .

மிகவும் அதிமிக முக்கியமான மருத்துவ குணம் கொண்ட உலர் திராட்சை அது. புகை பிடிப்பவர்களை தடுக்கும் அருமருந்து ஆகும். புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோடினை உலர்திராட்சை கரைத்து விடுகிறது.

மேலும் புகைபிடிக்க மனதுக்கு தோன்றும் முன்பு சில உலர்திராட்சைகளை சாப்பிடும் பொழுது அதன் இனிப்பு கரைசல் புகைப்பிடிக்க தூண்டும் உணரவை கட்டுப்படுத்துகிறது,

இது சைனாவில் பிரபலம் நமக்கு காசு கொடுத்தால் மட்டுமே நல்ல மருத்துவத்தை சொல்லும் சில சிறந்தநாட்டு மருத்துவர்கள் கூட இந்த உண்மையை சொல்வதில்லை இதை நீங்களும் உங்கள் உயிரான உறவுகளிடம் சொல்லி புகைபழக்கத்தை ஒழிக்க சிறந்த வழி.

சுற்றும் ஹீரோக்கள் : காதலில் சிக்காத நயன்தாரா!!

nayan

நயன்தாராவை காதலிக்க கதாநாயகர்கள் பலர் சுற்றுகின்றனர். ஆனால் அவர் யாரிடமும் சிக்கவில்லை. இரண்டுமுறை காதலில் தோற்றதால் எச்சரிக்கையுடன் இருப்பதாக நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

முதல் காதல் சிம்புவுடன் நடந்தது. இருவரும் ஆழமாக காதலித்தனர். திருமணத்துக்கும் தயாரானார்கள். திடீரென அது முறிந்தது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் குறைகளை அள்ளி வீசி விட்டு பிரிந்தார்கள்.

அதன் பிறகு நயன்தாராவும் சிம்புவும் நெருக்கமாக கட்டிப்பிடித்தபடி இருக்கும் படங்கள் இன்டர்நெட்டில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
காதல் தோல்வியில் தவித்துப் போய் இருந்த நயன்தாரா வாழ்க்கையில் இரண்டாவதாக பிரபு தேவா வந்தார்.

அவரின் ஆறுதல் பேச்சில் மனதை இழந்தார். இருவரும் காதலித்தார்கள். பொது நிகழ்ச்சிகளுக்கும் ஜோடியாக வந்து நெருக்கத்தை பகிரங்கப்படுத்தினர். மனைவியை விவாகரத்து செய்து விட்டு நயன்தாராவை மணக்க பிரபுதேவா தயார்.

ஆனால் திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்த நிலையில் இவர்களும் பிரிந்தார்கள். பிரிவுக்கான காரணத்தை இருவருமே இதுவரை சொல்ல வில்லை.

இதனால் விரக்தியின் உச்சிக்கு போன நயன்தாரா தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். பழைய மார்க்கெட் சரியவில்லை. பெரும் தொகை சம்பளம் கொடுத்து தமிழ் தெலுங்கு படங்களில் நடிக்க வைக்கின்றனர்.

தற்போது ஆர்யாவுக்கு நயன்தாரா மேல் காதல் துளிர்த்துள்ளதாக கிசுகிசுக்கள் பரவியுள்ளன. வீட்டில் அழைத்து விருந்து கொடுத்தார் என்றும் கூறப்பட்டது. இது போல் இன்னாரு இரண்டெழுத்து ஹீரோவும் அவரை விரும்புகிறாராம்.

அத்துடன் பெரிய தொழில் அதிபர்கள் சிலரும் திருமணம் செய்து கொள்ள விரும்பி தூது விட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது. ஆனால் யாருடைய காதலையும் நயன்தாரா ஏற்கவில்லை. எற்கனவே பட்ட அனுபவங்கள் மூலம் இனி என் வாழ்க்கையில் காதல் இல்லை என்று சொல்லி விலகி போகிறாராம்

தெலுங்கு திரையுலகை அலங்கரிக்கப் போகும் கமல்-சூர்யா!!

kamal

டொலிவுட்டில் 1980களிலும், 1990 முற்பகுதியிலும் கமல் ஹாசனுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. குறிப்பாக, சாகரா சங்கமம், ஸ்வாதி முத்யம் மற்றும் இந்துருடு சந்துருடு உள்ளிட்ட பல படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது தெலுங்கில் மீண்டும் களமிறங்க உள்ளார். இதற்காக, ஜெய் போல் தெலுங்கானா என்ற வெற்றிப் படத்தை இயக்கிய ஷங்கருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் கமல்.

ஷங்கர் தனது அடுத்த படத்தின் கதைக்கருவைவும், கதாபாத்திரத்தையும் கமலிடம் கூறியிருக்கிறார். இதில் திருப்தியடைந்த கமல் நடிக்க ஒப்புக் கொண்டதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, உலக நாயகன் மீண்டும் டோலிவுட்டில் மின்னப்போகிறார்.

இதேபோல் ஏராளமான தெலுங்கு ரசிகர்களை வசியப்படுத்தியுள்ள சூர்யா நேரடியாக தெலுங்குப் படத்தில் நடிக்க உள்ளார். பூரி ஜெகனாத்தின் பிசினஸ்மேன் பட வாய்ப்பை இழந்ததால் அதிருப்தியில் இருந்த சூர்யா விரைவில் அவருடன் கைகோர்க்க இருக்கிறார்.

இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக கூறும் சூர்யா, படத்தைப்பற்றிய மேற்கொண்டு விவரங்களை தெரிவிக்கவில்லை. இவர்களின் கூட்டணியில் உருவாகும் படம் வெளியான பின்னர், சூர்யாவின் மார்க்கெட் உச்சத்திற்கு செல்லும் என எதிர்பார்க்கலாம்.

கோலிவுட் நட்சத்திர நாயகர்கள் தெலுங்கு சினிமாவின் பக்கம் பார்வையை செலுத்தும் அதேசமயம் தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோவாக திகழும் கோபி சந்த் கோலிவுட்டுக்கு விஜயம் செய்துள்ளார். அவர் தற்போது நயன்தாராவுடன் இணைந்து நடித்து வருகிறார்.

கலைக்கும் பொழுதுபோக்கிற்கும் மொழி ஒரு தடையல்ல என்கிறார்கள் இந்த நட்சத்திரங்கள்.

சத்யராஜைக் கலாய்த்த சிவகார்த்திகேயன்!!

sivaசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான வருத்தப்படாத வாலிபர் சங்கம் இந்த வாரம் வெளியாக இருக்கிறது. முதன்முதலாக இந்தப் படத்துக்காக பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

அழகான கிராமத்தில் நடக்கும் நகைச்சுவை கதை இது. நான் போஸ் பாண்டி, வருத்தப்படாத வாலிபர் சங்கத்தோட தலைவர். செயலாளர் கோடியா சூரி அண்ணன் நடிச்சிருக்கார்.

ஊரில் எந்த விசேஷம் நடந்தாலும் நாங்க தான் முதல்ல நிப்போம். பேனர், கொடின்னு ஏரியா முழுக்க எங்க ராஜ்யம்தான். அந்த ராஜ்யம் பிடிக்காம முஷ்டியை முறுக்கிட்டு நிக்குறார் சிவனாண்டி கேரக்டர்ல நடிக்குற சத்யராஜ். அதுக்கப்புறம் எங்க ரெண்டு டீமுக்கும் நடக்குற ஜாலி மோதல்கள்தான் படத்தோட கதை.

சத்யராஜ் சாரைப் பார்த்து முதல்ல கொஞ்சம் பயந்தேன். அவரே ரொம்ப சகஜமா பேசினார். ஒரு சீன்ல அவரைக் கலாய்க்கலாம்னு என்னம்மா கண்ணு சௌக்கியமான்னு அவர் ஸ்டைல்ல சொன்னதும் ரொம்பவே ரசிச்சார். தெனாவட்டா, கெத்தா திரியுற என் கேரக்டரும், எனக்கு எதிரா இருக்குற சத்யராஜ் சார் கேரக்டரும் ரொம்ப பெருசா பேசப்படும்.

இமான் அண்ணன், சும்மா ட்ரை பண்ணிப் பாருங்கன்னு பாடச் சொன்னார். அது நல்லா இருந்தா யூஸ் பண்ணப் போறாங்க. நல்லா இல்லைன்னா விட்டுடப் போறாங்கன்னு தைரியமா பாடினேன். அதுலயும் எஸ்.பி.பி. ரேஞ்சுக்கு மூச்சுவிடாம பாடுற மாதிரி 12 வரிகள் பாடச் சொல்லி பென்ட் எடுத்துட்டாங்க. அதனால பாட்டு அவ்ளோ அழகா வந்திருக்கு. ஏற்கெனவே யு டியூப்ல வெளியாகி எல்லாருக்கும் பிடிச்சிருக்கு.

சூரி அண்ணனோட எனக்கு இது மூணாவது படம். ஹீரோயினை விட சூரி அண்ணனோட கெமிஸ்ட்ரி தான் எனக்கு நல்லா வொர்க் அவுட் ஆகி இருக்குறது ஸ்க்ரீன்லயே தெரியும். இந்தப் படம் யாரையும் வருத்தப்பட வைக்காது. கேப் விடாம சிரிக்கவைக்கும் என்கிறார் சிவகார்த்திகேயன்.

அகதிகளை திருப்பி அனுப்புவதை இடை நிறுத்தியது சுவிஸ்!!

swiss

இலங்கையில் இருந்து வந்து அகதித் தஞ்சம் கோரியுள்ளவர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை சுவிட்சர்லாந்து இடை நிறுத்தி வைத்துள்ளது.

அப்படி அனுப்பப்பட்ட இருவர் இலங்கையில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை அந்நாட்டின் குடிவரவுக்கான மத்திய அமைச்சின் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.

இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த பெயர் வெளியிட விரும்பாத இலங்கையிலிருந்து சுவிஸ் வந்து தஞ்சம் கோரியுள்ள ஒருவர் இந்த முடிவானது ஜெனிவாவில் மட்டும் ஐம்பதுக்கும் அதிகமானோருக்கு பலன் அளிக்கும் என்றார்.

சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கை திரும்பிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளது மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் கவலை வெளியிட்டுள்ளது.

திருப்பி அனுப்பப்பட்ட இருவரில் ஒருவர் குறித்த விபரங்கள் வெளிப்படையாகத் தெரியவில்லை என்று பெர்ண் நகரிலிருந்து அம்னெஸ்டியின் பேச்சாளர் பட்ரிக் வோல்டர் தெரிவித்தார்.

அவர் திரும்பிச் சென்றபோது கைது செய்யப்பட்டார் என்பதை மட்டும் தம்மால் உறுதியாகச் சொல்ல முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இரண்டாவது நபர் சம்பந்தப்பட்ட விடயம் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடந்துள்ளது என்றும் அந்தக் குடும்பத்திலுள்ள சுவிஸ்ஸில் பிறந்த இரண்டு சிறுவர்கள் உட்பட அனைவரும் கொழும்பு திரும்பிச் சென்றபோது அந்தப் பிள்ளைகளின் தந்தை கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணைகள் நடந்து வருகின்றன எனவும் அவர் மேலும் பிபிசியிடம் கூறினார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக முதலாவது நபர் எப்போது இலங்கைக்கு அனுப்பப்பட்டார் என்பது போன்ற விபரங்களை இப்போது வெளியிட முடியாது எனவும் அம்னெஸ்டியின் பேச்சாளர் கூறுகிறார்.

ஒரே படத்தில் பிரபலமான நஸ்ரியா நசீம்!!

nasriya

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்தளித்து வந்தவர் நஸ்ரியா நசீம். நேரம் என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் இவர் ஒரே இரவில் நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்ந்துவிட்டார்.

இப்போது, மலையாளத்திலும், தமிழிலும் குறிப்பிடத்தக்க அளவு படங்களை அதுவும் முன்னணி நடிகர்களுடன் இவர் கைவசம் வைத்துள்ளார்.

நேரம் திரைப்படம் அவரது வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களைக் குறித்து கேட்டபோது அதிகப் படங்களில் வாய்ப்புக் கிடைத்திருப்பதைத் தவிர தனக்குப் பெரிய மாற்றம் எதுவும் இல்லை என்று நஸ்ரியா தெரிவித்தார்.

குழந்தை நட்சத்திரமாக இருந்த தன்னை கதாநாயகியாக மக்கள் பார்க்க ஆரம்பித்துள்ளார்கள் இதனால் தனக்குப் பொறுப்புகள் கூடியுள்ளதாக அவர் கருதுவதாகக் கூறினார்.

தனக்குக் கிடைத்த பாராட்டுகள் மகிழ்ச்சியை அளித்ததாகக் குறிப்பிட்ட நஸ்ரியா இந்தப் பாராட்டுகள் மக்கள் தன்னை கதாநாயகியாக ஏற்றுக்கொண்டதைக் காட்டுகின்றது.

ஒரே படத்தின் மூலம் இவ்வளவு உயரத்திற்கு வந்திருப்பது தன்னால் மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவேண்டும் என்ற அச்சத்தையும் தருகின்றது. ஆயினும் தன்னால் இயன்றவரை சிறப்பாக செய்வேன் என்றும் நஸ்ரியா தெரிவித்தார்.

மன்மதன்-2 வை இயக்கத் தயராகும் சிம்பு!!

manmathan

நடிகர் சிம்பு கதை, திரைக்கதை எழுதி இயக்கி, நடித்து 2004ல் வெளிவந்த படம் மன்மதன். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஜோதிகா, சிந்து துலானி நடித்திருந்தனர். இப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். குறிப்பாக மொட்டை கேரக்டரில் இவர் நடித்திருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகத்தை மன்மதன்-2 என்ற பெயரில் சிம்பு இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகவுள்ளன. இப்படத்தை அவரே தயாரிக்கவும் போகிறாராம்.

சிம்பு தற்போது வாலு, வேட்டை மன்னன் ஆகிய படங்களில் பிசியாக உள்ளார். இப்படங்களை முடித்த பிறகு மன்மதன்-2வை இயக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கண்டுபிடிக்கப்படாத லட்சக்கணக்கான வைரஸ்கள் விலங்குகளிடையே!!

virus1

விலங்கினங்களிடையே நாம் இதுவரை கண்டறியாத லட்சக்கணக்கான கிருமி வகைகள் காணப்படுவதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகின்றது.

மனிதர்களைப் பாதிக்கவல்ல பெரும்பாலான நோய்க் கிருமிகள் விலங்குகளிடத்தில் இருந்து வந்தவைதான் எனும் நிலையில் பல்வேறு நோய்க் கிருமிகளை சுமக்கக்கூடிய ஒரு விலங்காக நாம் அறிந்துள்ள வௌவால் இனமொன்றை அமெரிக்க மற்று வங்கதேச விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.

நாம் இதுவரை அறிந்திராத புதிய அறுபது வகையான கிருமிகள் அந்த வௌவால் இனத்தில் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

நோய்க் கிருமிகளை சுமக்கவல்ல மற்ற விலங்கினங்களிலும் இப்படி புதிய வகை நோய்க்கிருமிகள் இருப்பதாகக் கணக்கிட்டால் நாம் இதுவரை அறிந்திராத மூன்று லட்சத்து இருபதாயிரம் வகை நோய்க் கிருமிகள் விலங்கினங்களிடையே இருப்பதாக விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.

இந்த நோய்க் கிருமிகளை நாம் அடையாளம் காணுவதென்பது எதிர்காலத்தில் தொற்று நோய்கள் மனிதரிகளிடையே பரவுவதைத் தடுக்க உதவியாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இத்தனைக் கிருமிகளையும் கண்டறிய அறுநூறு கோடி டாலர்கள் செலவாகும் என ஆராய்ச்சிக் குழு தெரிவிக்கிறது. ஆனால் ஒரு தொற்றுநோய் மனிதர்களிடையே பெரிய அளவில் பரவிட்டாலே அதனைக் கட்டுப்படுத்த இதனைவிட பல மடங்கு அதிகமான தொகை செலவாகும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த ஆய்வின் முடிவுகள் எம்பயோ என்ற விஞ்ஞான சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரெடிக்ட் என்ற அமெரிக்க ஆய்வுத் திட்டம் ஒன்று, உலகில் மனிதர்களும் விலங்குகளும் நெருங்கி வாழும் இடங்களில் இருந்து 240 புதிய வகை கிருமிகளை இதுவரை கண்டுபிடித்து அடையாளப்படுத்தியுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கனடாவிலும், ஜப்பானிலும் கடும் நிலநடுக்கம்!!

japan-earthquake

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வன்கூவர் தீவுக்கு அப்பால் கடலுக்கடியில் இன்று அதிகாலையில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு ‌கோலில் 6.3 அளவாக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. அதேவேளை தெற்கு ஜப்பானிலும் 6.9 அளவுள்ள கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. சேதவிபரங்கள் வெளியாகவில்லை.

மரம் முறிந்து விழுந்து இலங்கை அகதி உயிரிழப்பு!!

malai

தமிழ்நாடு பவானிசாகரில் பெய்த பலத்த கடும் மழையினால் மரம் முறிந்து விழுந்து இலங்கை அகதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் ஆலங்கட்டி மழை பெய்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு பலத்த மழை பெய்ததால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதையடுத்து பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் சுப்பிரமணி (43) இவரும் இதே முகாமை சேர்ந்த மாரிமுத்து (60) ஆகிய இருவரும் வர்ணம் பூசுபவர்களாக உள்ளனர்.

பணியை முடித்துவிட்டு ஒன்பது மணியளவில் பவானிசாகர் அருகே உள்ள முடுக்கன்துறையில் இருந்து இலங்கை அகதிகள் முகாம் நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தனர்.

அப்போது தென்னை வித்து ஆராய்ச்சி நிலையம் அருகே வரும்போது வீதியில் இருந்த வாகை மரம் ஒன்று திடீரென நடந்து சென்ற சுப்பரமணி மற்றும் மாரிமுத்து மீது விழுந்தது.

இதில் சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே இறந்தார். மாரிமுத்து கால் முறிந்து கோயமுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பவானிசாகர் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

50 ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்துடன் 5 டெஸ்ட் விளையாடவுள்ள இந்திய அணி!!

india

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக அடுத்த ஆண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இது குறித்த பரிந்துரைக்கு இங்கிலாந்து கிரிக்கெட் சபை நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 50 ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்தில் முதன்முறையாக அந்நாட்டு அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்கு இடையே கடைசியாக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இங்கிலாந்தில் 1959ம் ஆண்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

5 டெஸ்ட் போட்டிகளைத் தவிர, இத்தொடரில் 5 ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் இருபது ஓவர் ஆட்டம் உள்ளிட்டவற்றிலும் இந்திய அணி விளையாட உள்ளது. இத்தொடர் அடுத்த ஆண்டு ஜூலை 9ம் திகதி தொடங்கி செப்டம்பர் 7ம் திகதி வரை நடைபெற உள்ளது.

இதேவேளை, 2014ம் ஆண்டு தொடக்கத்தில் இந்திய அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை சம்மதம் தெரிவித்துள்ளது.

இதனால் நியூஸிலாந்து அணியுடன் 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடும். ஒருநாள் தொடர் ஜனவரி 19ம் திகதி தொடங்கி 31ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

டெஸ்ட் தொடரானது பெப்ரவரி 7ம் திகதி தொடங்கி 18ம் திகதி வரை நடைபெற உள்ளது. இந்திய அணி கடைசியாக, 2009ம் ஆண்டில் நியூஸிலாந்து சுற்றுப்பயணம் செய்து விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிவுட்டில் நடிகையாக அறிமுகமாகும் கமலின் 2வது மகள் அக்ஷரா!!

akshara

நடிகர் கமலஹாசனுக்கு ஸ்ருதி, அக்ஷரா என இரண்டு மகள்கள் உள்ளனர். ஸ்ருதி தமிழ் சினிமாவில் பாடகி, இசையமைப்பாளர், நடிகை என அவதாரம் எடுத்தவர். தமிழில் 3, 7ஆம் அறிவு ஆகிய படங்களில் நடித்து, பிறகு பொலிவுட் பக்கம் சென்று, அங்கு தற்போது பிசியான நடிகையாக உள்ளார்.

இந்நிலையில் கமலின் இரண்டாவது மகள் அக்ஷராவும் பொலிவுட்டில் நடிகையாக அறிமுகமாகவிருக்கிறாராம். இவரை கதாநாயகியாக நடிக்க வைக்க நிறைய பேர் போட்டி போட்டனர். ஆனால் இவரோ நடிப்பில் ஆர்வம் இல்லை டைரக்ஷன்தான் பிடிக்கும் என மறுத்து வந்தார். சில இந்தி படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றினார்.

இப்போது நடிகையாக நடிக்க முடிவு செய்துள்ளார். இதையடுத்து தற்போது நடிப்பு பயிற்சி பெற்று வருகிறார். கும்பகோணத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்கிற பால்கி பொலிவுட்டில் இயக்குனராக உள்ளார். இவர் கமல்ஹாசனின் நண்பர். இந்தியில் அமிதாப் நடிப்பில் சீனி கம், பா ஆகிய படங்களை இயக்கியவர். இவர் அடுத்து இயக்கும் படத்தில்தான் அக்ஷரா நடிக்க உள்ளார்.

இதற்கிடையே அக்கா ஸ்ருதியை போலவே மும்பையில் தனியாக வசிக்க அக்ஷரா முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் சில அபார்ட்மென்ட்களில் வீடு தேடி வருகிறார்.

சம்பியன்ஸ் லீக் தொடர் அட்டவணை மாற்றம்!!

Champions-League-T20-Winner

சம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் நடக்கவுள்ள போட்டிகள் மொகாலி, ராஞ்சி மற்றும் அகமதாபாத்தில் நடத்தப்படுகிறது.

இந்தியாவில் சர்வதேச உள்ளூர் சம்பியன் அணிகள் பங்கேற்கும் ஐந்தாவது சம்பியன்ஸ் லீக் T20 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 17ம் திகதி முதல் ஒக்டோபர் 6ம் திகதி வரை நடக்கிறது.

6வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் முதல் மூன்று இடங்களை பிடித்த மும்பை, சென்னை, ராஜஸ்தான் அணிகளுடன் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் ஹீட், பெர்த் ஸ்கார்சர்ஸ், தென் ஆப்ரிக்காவின் லயன்ஸ், டைட்டன்ஸ், மேற்கிந்திய தீவுகளின் டிரினிடாட் அண்டு டுபாகோ உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன.

தகுதிச் சுற்று: இந்தியா (3), அவுஸ்திரேலியா (2), தென் ஆப்ரிக்கா (2), மேற்கிந்திய தீவுகள் (1) சேர்ந்த 8 அணிகள் நேரடியாக பிரதான சுற்றில் விளையாடுகின்றன.

மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த 4 உள்ளூர் அணிகள் தகுதிச் சுற்றில் பங்கேற்கின்றன.

தகுதிச் சுற்றுப் போட்டிகள் செப்டம்பர் 17-20ம் திகதிகளில் ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் சர்வதேச மைதானத்தில் நடக்க இருந்தன. விநாயகர் சதூர்த்தி ஊர்வலம், தெலுங்கானா பிரச்னை போன்ற காரணங்களுக்காக போதிய பாதுகாப்பு வழங்குவதில் ஐதராபாத் பொலிசுக்கு சிக்கல் ஏற்பட்டன.

இதனையடுத்து 6 தகுதிச் சுற்றுப் போட்டிகள் மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க (பி.சி.ஏ.,) மைதானத்துக்கு மாற்றம் செய்யப்பட்டன.

இதேபோல, ஐதராபாத்தில் நடக்க இருந்து ஆறு பிரதான சுற்றுப் போட்டிகளும் இடமாற்றம் செய்யப்பட்டன. இதன்படி, தலா இரண்டு போட்டிகளாக மொகாலி (செப்டம்பர் 24), ராஞ்சி (செப்டம்பர் 28), அகமதாபாத்தில் (செப்டம்பர் 30) உள்ள மைதானங்களில் நடத்தப்படுகிறது.

அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் அமலாபால்!!

Amala Paul New Cute Pics

அறிமுக நடிகையில் ஆரம்பித்து லைம்லைட்டில் இருக்கும் அத்தனை நடிகைகளும் அச்சரம் பிசகாமல் சொல்லும் ஒரே விஷயம் எப்படியாவது ரஜினி, கமலுடன் நடிச்சிடணும் என்பதுதான்.

எந்த நடிகை பேட்டியளித்தாலும் இந்த பதில் பெரும்பாலும் மாறுவதில்லை. அந்த பதில் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. ரஜினி, கமலுக்குப் பதிலாக விஜய், அஜித்தை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

அமலாபாலும் அப்படி ஒரு ஆசையில்தான் இருக்கிறார். ரஜினி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிச்சிடணும் . சான்ஸ் கிடைச்சா சம்பளமே தேவையில்லை என்று ஆரம்பத்தில் சொல்லி வந்தார்.

தலைவாவுடன் நடிச்சிட்டேன். இனி தலயுடன் நடிச்சா போதும். தமிழ் சினிமாவில் நிரந்தரமா ஒரு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்ற கணிப்பில் இருக்கிறார் அமலாபால்.

அஜித்துக்கு ஜோடியாக நடிக்க என்ன செய்யலாம் என்ற தீவிர யோசனையில் இருக்கிறார் அமலா.