
தலைவா படத்தைத் திரையிட்டால் ஏற்படும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் கட்டுப்படுத்துவது கஷ்டம். தியேட்டர்களுக்கு பாதுகாப்புத் தர முடியாது என உள்ளூர் பொலீஸ் தெரிவித்துள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தலைவா படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தப் படத்துக்கு எதிராக ஏகப்பட்ட சிக்கல்கள் கிளம்பியுள்ளன. படத்தை வெளியிட முடியாது என்று சென்னை – செங்கை மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ள நிலையில், படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு தங்களால் பாதுகாப்பு தரமுடியாது என அந்தந்த மாவட்ட பொலீசார் திரையரங்க உரிமையாளர்களுக்கு வாய் மொழியாகக் கூறிவிட்டார்களாம்.
சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் தலைவா படம் வெளியாகவிருந்த திரையரங்க உரிமையாளர்கள், தங்களை நேரில் அழைத்து இந்த விஷயத்தைப் பொலீசார் கூறியதாகத் தெரிவித்தனர்.
சென்னையின் மிக முக்கியமான விநியோகஸ்தரும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவமருமான அபிராமி ராமநாதனை நேரில் அழைத்த தென் சென்னையின் ஆளுங்கட்சி எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான ஒருவர், இந்தப் படத்தை திரையிடுவது நல்லதாகப் படவில்லை. பாத்து இருந்துக்கங்க என்று அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் கோயில் வருடாந்த பலி பூசையை இடைநிறுத்த கோயில் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட பாடங்களைப் புரிந்து கொள்ள முடியாத விரக்தியில், தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் திங்கள்கிழமை நள்ளிரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இலங்கையில் நூற்றுக்கும் அதிகமான தமிழக மீனவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து இந்தியா தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.









