வவுனியா வைத்தியசாலையில் மரணித்த குழந்தையின் பெற்றோர்க்கு நீதி வேண்டி பொதுமக்கள் ஆர்பாட்டம்!!

வவுனியா வைத்தியசாலையில் நேற்றயதினம் மரணித்த சிசுவின் பெற்றோர்க்கு நீதிகிடைக்குமாறு கோரி ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா வைத்தியசாலையின் பிரதான வாயிலின் முன்பாக இன்று (21.08.2024)மாலை குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவித்த போது…

குழந்தையின் தாய் வலி தாங்கமுடியாமல் பலமணிநேரங்கள் கதறியபோதும் அவருக்கு சிசேரியன் செய்யவில்லை. இவ்வாறனவர்களை நம்பி இந்த வைத்தியசாலையக்கு சிகிச்சைக்காக எப்படி செல்ல முடியும்.

குறித்த சம்பவம் தொடர்பாக வைத்தியசாலையினால் முன்னெடுக்கப்படும் உள்ளக விசாரணையில் எமக்கு துளியும் நம்பிக்கைஇல்லை.

எனவே சுகாதார அமைச்சினுடாக ஒரு குழு நியமிக்கப்பட்டு இதற்கான நீதியான விசாரணையினை மேற்கொள்ளவேண்டும். அதுபோலவே சிசுவின் சட்டவைத்திய பரிசோதனையினையும் கொழும்பு வைத்தியர்கள் மூலம் முன்னெடுக்க வேண்டும்.

அத்துடன் பொறுப்பே இல்லாத இந்த வைத்தியசாலைக்கு மூன்று பணிப்பாளர்கள், இரண்டு நிர்வாக உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது ஏன் என்று எமக்கு தெரியவில்லை. எனவே இந்த சம்பவத்திற்கு நீதி கிடைக்கும்வரைக்கும் பொதுமக்கள் இங்கு மகப்பேற்றுக்காக வரவேண்டாம் என நாம் கோரிக்கை விடுக்கின்றோம் என தெரிவித்தனர்.

இதேவேளை இன்று மாலை சிசுவின் சடலத்தை பார்வையிட்ட நீதவான் அதனை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.

நகைக்காக சுவற்றில் மோதி பெண் கொலை : 12 மணி நேரத்தில் இளைஞன் கைது!!

திருவாரூர் அருகே இளவங்கார்குடி ராஜகுரு நகரை சேர்ந்தவர் நாகநாதன் (45). வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி பிரபாவதி (40). நேற்றுமுன்தினம் காலை நீண்ட நேரமாகியும் அவரது வீடு திறக்கப்படவில்லை.

சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், கொல்லைப்புறமாக சென்று பார்த்த போது, சமையலறையில் பிரபாவதி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து திருவாரூர் தாலுகா போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக இளவங்கார்குடியை சேர்ந்த சந்தோஷ் (20) என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில், வீட்டில் பிரபாவதி மட்டும் தனியாக வசித்து வருவதை அறிந்து சந்தோஷ், கடந்த 17ம் தேதி இரவு 10 மணி அளவில் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அப்போது சமையல் அறையில் நின்றிருந்த பிரபாவதியின் கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றுள்ளார்.

அவரை அடையாளம் கண்டு கொண்டதால் போலீசிடம் தெரிவித்து விட்டால் மாட்டிக்கொள்வோம் என கருதி, பெட்ஷீட் மூலம் பிரபாவதி முகத்தை மூடி சுவற்றில் மோதியுள்ளார். பின்னர் கத்தியால் கழுத்தில் குத்தி, முகத்தை தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளார்.

தாலி செயின் மற்றும் கொலுசை அவரது வீட்டு மாடியில் மறைத்து வைத்து விட்டு செல்போனை மட்டும் எடுத்து கொண்டு தப்பியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து, கொலை நடந்த 12 மணி நேரத்தில் சந்தோஷை கைது செய்தனர்.

பிரியாணி சாப்பிட்ட 3 குழந்தைகள் பரிதாபமாக பலியான சோகம்!!

ஆந்திர மாநிலத்தில் அனகாபள்ளி மாவட்டத்தில் வசித்து வருபவர் கிரண் குமார் .இவர் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் பாதிரியாராக பணிபுரிந்து வருகிறார். இவர் அருகில் உள்ள பழங்குடியின மக்களின் குழந்தைகள் தங்கி பள்ளிக்கு செல்வதற்காக விடுதி ஒன்று நடத்தி வருகிறார்.

இந்த விடுதியில் மொத்தம் 97 குழந்தைகள் தங்கி அருகில் உள்ள பள்ளிக்கு படிக்க சென்று வருகின்றனர். இந்நிலையில் சம்பவ நாளில் ஒருவர் வீட்டு விசேஷத்தில் மீதமான சிக்கன் பிரியாணி மற்றும் சமோசாவை விடுதியில் தங்கிப் படிக்கும் குழந்தைகளுக்கு கொடுக்குமாறு பாதிரியாரிடம் கொடுத்துள்ளார்.

குழந்தைகளுக்கு சிக்கன் பிரியாணி மற்றும் சமோசாவை சாப்பிட கொடுத்துள்ளார். அதன்பின் குழந்தைகள் தூங்க சென்றனர். அப்போது 1 ம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமி ஜோஸ்வாவுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது.

இதனால் பாதிரியார் சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து விடுதியில் தங்கியிருந்த மாணவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் பதட்டமடைந்த பாதிரியார் இது குறித்து அவர்களது பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

பெற்றோர்கள் விடுதிக்கு வந்து குழந்தைகளை அவர்களது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அதன்பின் பெற்றோர்கள் குழந்தைகளை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதில் ஜென்மேலி பாவனி(8), சத்தா(6) ஆகிய பெண் குழந்தைகள் 2 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து பாதிரியாரை கைது செய்ததுடன் அவரிடம் இச்சம்பவத்தை பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது சந்திரபாபுநாயுடு விடுதியில் தங்கி இருந்து உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு தலா ரூ10 லட்சம் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார். அவர் அனுமதியின்றி நடத்தப்படும் ஆதரவற்ற இல்லங்கள், அனாதை இல்லங்கள் போன்றவற்றை உடனடியாக மூடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மனைவியின் மூக்கை அறுத்த கணவன் : தாய் வீட்டிக்கு போக அடம் பிடித்ததால் விபரீதம்!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பூர்வா பகுதியில் வசித்து வருபவர் ராகுல். இவரது மனைவி அனிதா. இந்த நிலையில், நேற்று ரக்க்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு தனது சகோதரனுக்கு ராக்கி கட்டிவிட பிறந்த வீட்டுக்கு செல்ல வேண்டும் என அனிதா கூறியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கணவன் ராகுல் அனிதாவின் மூக்கை அறுத்துள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அனிதாவை ராகுலின் சகோதரன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

தீவிர சிகிச்சைக்குப் பின் ஆபத்தான கட்டத்தை கடந்த அனிதா, தனது கணவனின் கொடூரமான செயல் குறித்து பேசினார். அந்த வீடியோவில், அந்தப் பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்து, தன் கணவனை மூக்கை அறுத்ததாகக் குற்றம் சாட்டினார்.

அவள் இனி வாழ விரும்பவில்லை என்று சொல்வதைக் கேட்கலாம். மேலும், தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.படுகாயமடைந்த பெண்ணின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

இதனையடுத்து எக்ஸில் பதிவிட்ட ஹர்டோய் போலீசார், இந்த விவகாரம் விசாரணையில் இருப்பதாகவும், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

“குறிப்பிடப்பட்ட வழக்கு தொடர்பாக, இன்ஸ்பெக்டர் இன்ஸ்பெக்டர் (கிராமப்புறம்) விசாரித்து தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என ஹர்டோய் போலீசார் தெரிவித்தனர்.

முன்னதாக அந்த பெண், தனது கணவர் அடிக்கடி தன்னுடன் சண்டையிடுவதாகவும், அதன் விளைவாக அவர் தனது தாய் வீட்டிற்கு சென்றதாகவும் கூறினார். இருப்பினும், அவர் 4 நாட்களுக்கு முன்பு திரும்பி வந்து, மீண்டும் ரக்க்ஷா பந்தன் நிகழ்வில் செல்ல திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொறாமை, பகை, தரக்குறைவான பேச்சு, சிங்கமுத்துவிடம் 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு வழக்கு!!

நடிகர் சிங்கமுத்துவிடம் ரூ.5 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக நடிகர் வடிவேலு மனுதாக்கல் செய்துள்ளார். அதில் அவர், “கடந்த 1991 -ம் ஆண்டு முதல் சிறு சிறு வேடங்களில் சினிமா துறையில் நடித்தேன்.

பின்னர், எனது கடும் உழைப்பால் 300 படங்களுக்கும் மேல் நடித்து நகைச்சுவை நடிகர் ஆனேன். தற்போது, என்னுடைய சினிமா காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

2000 -ம் ஆண்டு முதல் நானும், நடிகர் சிங்கமுத்துவும் ஒன்றாக சேர்ந்து நடித்த படங்கள் பெரிய வெற்றியை கொடுத்தது. அதன்பின்னர், எனக்கு கிடைக்கும் வாய்ப்புகள் போல அவருக்கு கிடைக்கவில்லை.

இதனால் என் மீது அவர் பொறாமை, பகை கொண்டார். 2015 -ம் ஆண்டுக்கு பிறகு என்னை பற்றி மோசமாக பேச ஆரம்பித்ததால் அவருடன் சேர்ந்து படம் நடிப்பதை நிறுத்திவிட்டேன்.

இதனிடையே, தாம்பரத்தில் இருக்கும் பிரச்சனையான நிலத்தை எனக்கு வேண்டுமென்றே வாங்கி கொடுத்தார். இதனால் சிங்கமுத்துவுக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு என்னை பற்றி சிங்கமுத்து தரக்குறைவாக பேசியுள்ளார். இதனால் எனக்கு மனவேதனை அளித்துள்ளது.

பொதுமக்களுக்கு மத்தியில் எனக்கு உள்ள நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதால், 5 கோடி ரூபாயை சிங்கமுத்து மான நஷ்ட ஈடாக வழங்கவும், என்னை பற்றி பேச தடை விதிக்கவும் உத்தரவிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சிங்கமுத்து 2 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

 

மனைவி தொல்லை தாங்க முடியவில்லை.. வீட்டை விட்டு தப்பியோடிய கணவரை சுற்றி வளைத்த பொலிஸ்!!

மனைவியின் தொல்லை தாங்க முடியாமல் வீட்டை விட்டு தப்பியோடிய கணவரை பொலிஸார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

இந்திய மாநிலமான கர்நாடகா, பெங்களூருவில் உள்ள ஒயிட் ஃபீல்டை சேர்ந்தவர் முகேஷ் (28). இவர் மென்பொருள் பணியாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த 4 -ம் திகதி வீட்டை விட்டு வெளியில் சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், இவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின்படி, தனிப்படை பொலிஸார் விசாரணை நடத்தி தேட ஆரம்பித்தனர். அவரை யாராவது கடத்தி சென்றிருக்கலாம் என்ற அடிப்படையில் மொபைல் எண் மூலம் அவரது இருப்பிடத்தை கண்டுபிடிக்க முயன்றனர். ஆனால், அவரது மொபைல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் முகேஷ் தன்னுடைய மொபைலில் புதிய சிம் கார்டைப் பொருத்தி ஆன் செய்துள்ளார். அப்போது அவர் நொய்டாவில் இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, பொலிஸார் நொய்டாவுக்கு சென்று, வணிக வளாகத்தில் திரைப்படம் பார்த்துவிட்டு வெளியே வந்த முகேஷை பிடித்தனர். பின்னர், முகேஷிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டபோது அதிர்ச்சி தகவல் ஒன்று தெரியவந்தது.

முகேஷ் கூறுகையில், “எனது மனைவியுடன் எனக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர் விவாகரத்து ஆனவர் என்று தெரிந்தும் திருமணம் செய்து கொண்டேன். அவருக்கு 12 வயதில் மகள் இருந்தார்.

அதன்பிறகு எங்களுக்கும் பெண் குழந்தை பிறந்தது. பின்னர், அவர் என்னை தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்க நினைத்தார். வீட்டில் சாப்பிடும்போது ஒரு பருக்கை கீழே சிந்தினால் கூட சண்டை போடுவார்.

அவருடன் என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை. என்னுடைய சுதந்திரத்தை பறித்துக் கொண்டார். என்னை சிறையில் வேண்டுமானால் கூட அடையுங்கள். ஆனால் அவருடன் சேர்த்து வைக்காதீர்கள்” என்றார்.

பின்னர் முகேஷை சமாதானப்படுத்திய பொலிஸார் அவரை பெங்களூருவுக்கு அழைத்து வந்தனர். இருவருக்கும் மனநல மருத்துவர் மூலம் கவுன்சிலிங் வழங்க திட்டமிட்டனர்.

அதற்கு, முகேஸும் அவரது மனைவியும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் கவுன்சிலிங் வழங்க திட்டமிட்டுள்ளனர்.

இளைஞனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய திருநங்கைகள் : அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!!

இந்தியா பெங்களூருவில் 18 வயது இளைஞனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய 5 திருநங்கைகளை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் உள்ள டிஜி ஹல்லி பகுதியைச் சேர்ந்தவர் 18 வயது இளைஞன் தேநீர் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், கடைக்கு தேநீர் அருந்த வந்த சில திருநங்கைகளுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த இளஞனிடம் , அதிக வருமானம் ஈட்டுவதற்கான வேலை தங்களிடம் இருப்பதாக ஆசைவார்த்தை கூறிய நிலையில் இளைஞன் மறுப்பு தெரிவிக்க, திருநங்கைகள் வலுக்கட்டாயமாக அவரை கடத்திச் சென்றுள்ளனர்.

தெருக்களில் பிச்சை எடுக்க வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 12-ஆம் திகதி இரவு திருநங்கைகள் குறித்த இளைஞன் வசிக்கும் இடத்திற்கு சென்று, ஒரு ஆண் பிச்சைக்காரராக நீ ஒரு நாளைக்கு 2 ஆயிரம் ரூபாய் சம்பாதித்துள்ளாய். பெண் பிச்சைக்காரராக இருந்தால் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என எண்ணிப்பார் என்று தெரிவித்துள்ளனர்.

எனினும் இளைஞன் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, வலுக்கட்டாயமாக திருநங்ககைள் இளைஞனுக்கு சில ஊசிகளை செலுத்தியதால இளைஞர் மயக்கம் அடைந்துள்ளார்.

மயக்கம் தெளிந்த பின்னர் அவரது அந்தரங்க பகுதி கத்தியால் வெட்டியுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின்ன ஆகஸ்ட் 3 ஆம் திகதி வீட்டிற்குள் அடைக்கப்பட்டிருந்த அந்த இளைஞனை பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு வற்புறுத்தியுள்ளனர்.

எப்படியோ அங்கிருந்து தப்பித்த இளைஞன் பொலிஸ் நிலையத்தில் தனக்கு நேர்ந்த சம்பவம் தொடர்பில் முறைபாடளித்த நிலையில், பொலிஸார் வழக்குப்பதிவு செய்து ஐந்து திருநங்கைகளையும் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

யாழில் கடும் காற்றினால் பறந்த குடியிருப்பின் கூரைகள் : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

யாழ்ப்பாணத்தில் அசாதாரண காலநிலை நிலவிவரும் நிலையில் குடியிருப்பொன்றின் கூரைகள் வீசிய கடும் காற்றினால் தூக்கி எறியப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் இன்று(21.08.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலுக்கு அருகாமையில் இருந்த தொடர் மாடி குடியிருப்பின் கூரைகளே காற்றினால் தூக்கி எறியப்பட்டுள்ளன.

இதனால் குடியிருப்பு பகுதியளவில் சேதமடைந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், நிலவும் சீரற்ற காலநிலையினால் பொதுமக்கள் எச்சரிக்கையும் செயற்படுமாறு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மலைப்பாம்புகள்!!

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்து விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு வெளிநாட்டு மலைப்பாம்புகளை வத்தளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் மூலம் இன்று (21.08.2024) மலைப்பாம்புகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இச்சோதனையின் போது இலங்கைக்கு சொந்தமான முதலை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வத்தளை பிரதேசத்தில் உள்ள வியாபார நிலையமொன்றில் ஒன்றின் மாடியில் குறித்த விலங்குகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சம்பவம் தொடர்பில் கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் இருவரையும் வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த விலங்குகள் விமானம் மூலம் பயணப்பொதிகளில் மறைத்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த முதலை இனம் இலங்கையின் வறண்ட பிரதேசத்தில் உள்ள ஏரியிலிருந்து பிடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும் இந்த விலங்குகள் 300,000 ரூபாய்க்கும் அதிக தொகைக்கு விற்பனைக்கு தயாராக இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விலங்குகளை தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு அனுப்பி அவை பற்றிய அறிக்கையைப் பெறுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்னர்.

லொறி – பஸ் மோதி கோர விபத்து!!

திஸ்ஸ – மாத்தறை பிரதான வீதியில் லொறி – பஸ் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று (21) காலை இடம்பெற்றுள்ளது.

சிறிய ரக லொறி ஒன்று எதிர்த்திசையில் பயணித்த தனியார் பஸ் ஒன்றுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. லொறியின் சாரதி உறங்கியதால் விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தின் போது, லொறியின் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

வாகன சாரதிகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் : இரத்து செய்யப்படவுள்ள அனுமதிப்பத்திரங்கள்!!

புதுப்பிக்க முடியாத அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பதிவாகும் போக்குவரத்து விபத்துகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இன்று அவர் கூறியுள்ளார்.

இதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 11 இலட்சம் புதுப்பிக்க முடியாத டிரக் ஓட்டுநர் உரிமங்கள் இரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் சலுகைக் காலத்தில் புதிய ஓட்டுநர் உரிமத்தைப் பெறலாம். அதற்கு தகுந்த மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தவிர, புதுப்பிக்க முடியாத இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களின் 10 லட்சம் உரிமங்களும் எதிர்காலத்தில் ரத்து செய்யப்படும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் 1000இற்கும் மேற்பட்டோர் வீதி விபத்துக்களால் உயிரிழப்பு!!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் மொத்தமாக 1,417 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் சுமார் 1000 பேர் உயிரிழப்பதாக போக்குவரத்து நிர்வாகம் மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் நிகழும் 3,000க்கும் மேற்பட்ட வீதி விபத்துகளில் மூன்றில் ஒரு பங்கு மோட்டார் சைக்கிள் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் என்று அவர் கூறியுள்ளார்.

எனினும், 2023 ஆம் ஆண்டில், விபத்துகளில் குறைவாக காணப்பட்டதோடு, 2,214 வீதி விபத்துகளில் 2,321 இறப்புகள் நிகழ்ந்துள்ளன. மேலும், 2024 ஜனவரி 01 முதல் ஆகஸ்ட் 10 வரை 1,352 வீதி விபத்துக்களில் இதுவரை 1,417 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த வருடத்தில் 328 பாடசாலை மாணவர்கள் வீதி விபத்துக்களினால் உயிரிழந்துள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் ஹப்புகொட குறிப்பிட்டுள்ளார்.

 

தமிழர் பகுதியில் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கொடூரம்!!

மட்டக்களப்பு , காத்தான்குடி நாவற்குடாவில் நேற்றிரவு 10 மணியளவில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இரு பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய மரியதாஸ் என்பவரே வெட்டுக்காயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் .

குறித்த நபர் நேற்றிரவு 10 மணியளவில் நாவற்குடாவிலுள்ள சாரதா வீதியால் வந்து கொண்டிருந்த போது இனந்தெரியாதவர்களால் கொலை செய்யப்பட்டதாக தெரியவருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உலக இளையோர் தடகள சம்பியன்சிப் போட்டியில் பங்கேற்கமுடியாத சிக்கலில் இலங்கை வீரர்கள்!!

இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சு கடைசி நிமிடத்தில் நிதியுதவியை திரும்பப் பெற்றதன் காரணமாக, 2024 ஆம் ஆண்டு பெரு நாட்டின் லிமாவில் நடைபெறவுள்ள உலக இளையோர் தடகள செம்பியன்சிப் போட்டிகளில், இலங்கையைச் சேர்ந்த 12 இளைய தடகள வீரர்கள் பங்கேற்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சகம், திடீர் நிதிப் பற்றாக்குறையை மேற்கோள் காட்டியதன் காரணமாக, விளையாட்டு வீரர்களுக்கு பயணம் மற்றும் தங்குமிடம் என்பவற்றை பெற்றுக்கொள்வதில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன.

2024 ஆகஸ்ட் 27ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை திட்டமிடப்பட்டுள்ள உலக இளையோர் தடகள செம்பியன்சிப் களத்தை பொறுத்தவரை, இலங்கையின் இளம் விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச அரங்கில் போட்டியிட ஒரு முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

பதினோராவது மணி நேரத்தில் அமைச்சகத்தின் இந்த திடீர் அறிவிப்பு வெளியிடப்பட்டமையால் மாற்று தீர்வுகள் அல்லது தனியார் அனுசரணையாளர்களை நாடுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்பியன்சிப் போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், விமானங்கள் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த 12 விளையாட்டு வீரர்கள் உலக அரங்கில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வேகமாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஜனாதிபதி நிதியில் இருந்து நிதி ஒதுக்குவது குறித்து பரிசீலிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சை பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளது.

எனவே அவர் இதற்கு ஒப்புதல் வழங்குவார் என்று எதிர்பார்ப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

மாமியாரை அடித்து கொன்ற மருமகன் : ஆபத்தான நிலையில் மனைவி மற்றும் மகள்!!

கேகாலையில் மாமியாரை கொன்று மனைவி மற்றும் மகளை கடுமையாக காயப்படுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கலபிடமட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெவங்கம பகுதியிலுள்ள வீடொன்றுக்கு நேற்று மாலை நபர் ஒருவர் வந்து பெண் ஒருவரை கொலை செய்துள்ளார்.

மேலும் இரு பெண்களை காயப்படுத்தியதாகவும் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதலவத்த, லெவங்கம பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பணத் தகராறு தொடர்பாக தனது மனைவி மற்றும் மனைவியின் தாயாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் மனைவியின் தாயாரை கல்லால் தாக்கியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், படுகாயமடைந்த பெண் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மேலும் மனைவியும் மகளும் கூரிய ஆயுதத்தால் காயம்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் 44 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கலபிடமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2 மணிக்குப் பின்னர் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!!

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாட்டில் இன்று சில இடங்களில் பி.ப.2.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதற்கமைய, திருகோணமலை,மன்னார்,யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு மற்றும் அனுராதபுரம் உள்ளிட்ட சில இடங்களில் பி.ப.2.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.