வவுனியா வைத்தியசாலையில் வைத்தியரின் அலட்சியத்தினால் குழந்தை இறந்தது : தந்தை பொலிசில் முறைப்பாடு!!

வவுனியா வைத்தியசாலை வைத்தியர் ஒருவரின் அலட்சியத்தினால் தனது குழந்தை பிறந்து இறந்துள்ளதாக குழந்தையின் தந்தையினால் வவுனியா பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மரணித்த சிசுவின் தந்தையார் தெரிவிக்கும் போது….

தனது மனைவியினை பிரவசத்திற்காக கடந்த 17 ஆம் திகதி வவுனியா வைத்தியசாலையின் 7 ஆம் விடுதியில் அனுமதித்திருந்தேன். மறுநாள் அவருக்கான மருந்துகள் வழங்கப்பட்ட நிலையில் அவரது பன்னீர்குடம் உடைந்துள்ளது.

இதனை தாங்கமுடியாத எனது மனைவி அங்குள்ள தாதி ஒருவருக்கு விடயத்தினை தெரிவித்திருந்தார். இதன்போது அங்கு கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் தொலைபேசியினை பயன்படுத்திக்கொண்டு, அது தொடர்பாக கவனமெடுக்காமல் அது ஒரு பிரச்சனையுமில்லை என தெரிவித்திருந்தார். பின்னர் வலிக்குரிய மருந்தினை மனைவிக்கு தந்துவிட்டு உறங்குமாறு தெரிவித்துள்ளனர்.

மறுநாள்வைத்தியசாலைக்கு வந்த வைத்திய அதிகாரி ஒருவர் சீசர்செய்து குழந்தையினை எடுத்திருக்கலாம் தானே என கடமையில் இருந்த வைத்தியரை பேசியிருந்தார். பின்னர்மீண்டும் மாலை 5 மணிக்கு எனது மனைவியை சிகிச்சைகூடத்திற்கு அழைத்துச்சென்றனர்.

பலமணி நேரமாகியும் அவர் வெளியில் வரவில்லை. இதற்குள் 7ஆம் விடுதியில் குளிரூட்டி இயங்கவில்லை என தெரிவித்து 5 ஆம் விடுதிக்கு எனது மனைவியை மாற்றியுள்ளனர்.

பின்னர் தாதி ஒருவர் தொலைபேசி அழைப்பை எடுத்து என்னை வைத்தியசாலைக்கு வருமாறு அழைத்திருந்தார். அங்கு சென்றபோது அதிதீவிர சிகிச்சைபிரிவில் எனது குழந்தையினை அனுமதித்திருந்தார்கள்.

அங்குள்ள வைத்தியரிடம் கேட்டபோது 5 ஆம் விடுதியில் இருந்து குழந்தையினை இங்கு அனுமதிக்கும் போதே உயிரில்லாத நிலைமையிலேயே தந்தனர். இருப்பினும் குழந்தையின் இதயத்துடிப்பினை நாம் மீட்டுள்ளோம்.

எனினும் குழந்தையின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவித்து குழந்தையினை எனக்கு காட்டினர். பின்னர் நேற்றயதினம் இரவு எனது குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

எனவே வைத்தியர்களின் அசமந்தபோக்கினால் எனது மனைவிக்கு நடந்த கொடுமைக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். எனக்கு நீதி கிடைக்காமல் நான் சிசுவின் சடலத்தினை பொறுப்பெடுக்கமாட்டேன் என்று தெரிவித்தார்.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பாக சிசுவின் தந்தையால் வவுனியா பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடும் பதிவுசெய்யப்பட்டது.

இது தொடர்பாக வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் கேட்டபோது உள்ளக விசாரணை இடம்பெற்றுவருவதாக தெரிவித்தார்.

வவுனியாவில் 12 வயது மாணவன் ஐஸ் போதைப் பொருள் பாவித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!!

வவுனியா நகரையண்டிய பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 12 வயது மாணவன் ஒருவன் ஐஸ் போதைப் பொருள் பாவித்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை தேறி வருவதாக பொலிசார் இன்று தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகரையண்டிய பிரபல பாடசாலையில் தரம் 7 இல் கல்வி பயிலும் 12 வயது மாணவன் ஒருவன் பாடசாலைக்கு முன்பாகவுள்ள கடை ஒன்றின் அருகில் இருந்த ஒதுக்குப்புறமான இடம் ஒன்றிற்கு சென்றுவிட்டு மீண்டும் பாடசாலைக்குள் சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில் குறித்த மாணவன் தொடர்ச்சியாக வாந்தி எடுத்தமையால் பெற்றோருக்கு தெரியப்படுத்தி அவர்கள் ஊடாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவன் தற்போது நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த மாணவன் ஜஸ் போதைப் பொருளை பாவித்ததன் காரணமாக இவ் அசம்பாவிதம் ஏற்பட்டதாக பொலிசார் தெரிவத்தனர். அத்துடன் குறித்த மாணவன் இந்து மதகுரு ஒருவரின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒன்றாக ஆற்றில் வீழ்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சகோதரிகள்!!

சகோதரிகள் இருவர் கைகளை கட்டிக் கொண்டு ஒன்றாக ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், மான்காபூர் கிராம் பகுதியை சேர்த்தவர் சுரேஷ் குமார். இவருக்கு அனிதா, சுனிதா (19), புனிதா (17) என மூன்று மகள்கள் உள்ளனர்.

இவருடைய முதல் மகள் அனிதாவுக்கு அசோக் குமார் என்பவருடன் திருமணம் ஆகியுள்ளது. இரண்டாவது மகள் சுனிதா 12 -ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். மூன்றாவது மகள் புனிதா 10 -ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை வெளியில் சென்ற சுனிதாவும், புனிதாவும் வீடு திரும்பாததால் ஊர் மக்களுடன் தந்தை சுரேஷ் குமார் மகள்களை தேடியுள்ளார். இதையடுத்து, இருவரது உடல்களும் பிசுஷி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பின்னர், பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், ஆற்றில் இருந்து சகோதரிகளின் உடல்கள் மீட்கப்பட்டது.

இருவரும் துணியால் கைகளை கட்டி ஒன்றாக ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து தந்தை சுரேஷ் குமார் கூறுகையில், “எனது மகள்கள் விபரீத முடிவு எடுத்ததற்கு முதல் மகள் அனிதாவின் கணவர் அசோக் குமார் தான் காரணம். அவர் தான் என்னுடைய மகள்களை தவறான முறையில் துன்புறுத்தியுள்ளார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

 

உடல் பரிசோதனைக்காக சென்ற நபருக்கு நேர்ந்த சோகம் : பேரதிர்ச்சியில் பொதுமக்கள்!!

இந்தியா – மத்தியப் பிரதேசம், இந்தூரில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் உடல் பரிசோதனையின் போது நபர் ஒருவர் திடீரென மயங்கிய நிலையில் உயிரிழந்துள்ளாதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(18) இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் இந்தூரில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலைக்கு தனது உடல் பரிசோதனைக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளார்.

இந்நிலையில், வைத்தியர் அவரை பரிசோதித்துக் கொண்டிருக்கும் போதே அவர் திடீரென மயக்கமடைந்த நிலையில் உயிரழந்துள்ளார்.  இதனை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதேவேளை, இந்த சம்பவம் உயிரிழந்த நபரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடையே பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உன்ன யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன்… காத்திருந்து பழிவாங்கிய காதலன்… பரிதாபமாக பலியான பெண்!!

பீகார் மாநிலம் மோதிஹாரியில் நடந்த கொடூர சம்பவத்தில், தனது காதலியை இளைஞர் ஒருவர் வெட்டிக் கொன்றார். சன்னு ராம் பீகார் மாநிலம் மோதிஹாரியில் வசித்து வருகிறார். இவரும் அதை பகுதியை சேர்ந்த பூஜா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், 5 மாதங்களுக்கு முன்பு இருவரும் சண்டை போட்டு பிரிந்தனர்.

இதையறிந்த பெண்ணின் வீட்டார் பூஜாவுக்கு மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இதையறிந்த, சன்னு ராம் மிகவும் கோபமடைந்தார். மேலும், பல்வேறு வகையில் மிரட்டி வந்துள்ளார். குறிப்பாக கல்யாணம் செய்தால் நீ என்னுடன் தான் செய்ய வேண்டும் என்றும், வேறு யாருக்கும் உன்னை கொடுக்க மாட்டேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் பூஜாவின் தாய் பயந்து மகளை பாட்டி வீட்டுக்கு அனுப்பி அவளைப் பாதுகாத்து வந்துள்ளார். இந்நிலையில் தக்க நேரத்திற்கு காத்திருந்த சன்னு நேற்று வீட்டில் பூஜா தனியாக இருப்பதை அறிந்து நண்பர்களுடன் பின்பக்கமாக வீட்டுக்குள் புகுந்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்த பூஜாவை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொன்றார். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

தோழியுடன் நடனமாடிக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து பலி!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான உயர்தர பப் ஒன்றில் தோழிகளுடன் நடனமாடிக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் முகமது சுகைல் (22). இவர் சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்னர் தான் சொந்த ஊரான காரைக்குடியில் இருந்து புறப்பட்டு படிப்பதற்காக இந்த கல்லூரிக்கு வந்துள்ளார். ராமாபுரத்தில் உள்ள பிஜி ஹாஸ்டலில் தங்கியிருந்து கல்லூரியில் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் கடந்த சனிக்கிழமை இரவு 10 மணியளவில் தனது தோழிகள் சிலரை அழைத்துக் கொண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கேளிக்கை விடுதியில் உள்ள பப்பிற்கு சென்றுள்ளார் சுகைல்.

அப்போது அவர் அங்கு உணவு சாப்பிட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பப்பில் தனது தோழிகளுடன் சுகைல் நடனமாடிக் கொண்டிருந்தார். தோழிகளுடன் பப்பில் நடனமாடிக் கொண்டிருந்த போதே திடீரென முகமது சுகைல் சுருண்டு கீழே விழுந்தார்.

திடீரென முகமது சுகைல் மயங்கி கீழே விழுவதைப் பார்த்து உடன் நடனமாடிக் கொண்டிருந்த அவரது தோழிகள் பதறியடித்தப்படி அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு சுகைலைப் பரிசோதித்த மருத்துவர்கள் முகமது சுகைல் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து தேனாம்பேட்டை போலீசார் மாணவனின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதன் பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள பப், கடந்த 2 ஆண்டுகளாக அந்த பகுதியில் இயங்கி வருகிறது என்றும் ஒரு நபருக்கு உள்ளே நுழைவு கட்டணமாக மட்டுமே 1,000 ரூபாய் வசூல் செய்யப்படுவதும் தெரிய வந்துள்ளது. எனினும் கல்லூரி மாணவர் மாரடைப்பு ஏற்பட்டு தான் உயிரிழந்தாரா? இல்லை வேறு ஏதேனும் உட்கொண்டு இறந்தாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!!

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து கனரக வாகன சாரதி அனுமதி பத்திரங்களையும் அடுத்த 3 மாதங்களுக்குள் இரத்துச் செய்ய மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

பழைய சாரதி அனுமதிப்பத்திரங்கள் அனைத்தையும் இரத்துச் செய்வதன் கீழ் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் அச்சிட முடியாமல் குவிந்து கிடக்கும் 3 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் பணி அடுத்த சில மாதங்களுக்குள் நிறைவடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியை போல் நடித்து பெண் ஒருவர் செய்த மோசமான செயல்!!

பதுளையில் ஆசிரியை போல் நடித்து பல கடைகளில் பல நாட்களாக பொருட்களை திருடிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான குறித்த பெண் பொத்துஹெர பொலிஸாரால் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை பகுதியை சேர்ந்த நிவந்தி சுமன அலோக பண்டார என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். திருடப்பட்ட சில்லறைப் பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துஹெர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் பாரவூர்தி மோதி ஒருவர் பலி!!

வவுனியா – மூன்றுமுறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்துச் சம்பவம் நேற்று(19.08.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மதவாச்சி பகுதியை நோக்கி பயணித்த பாரவூர்தி ஒன்று, வீதியில் சென்ற ஒருவர் மீது மோதுண்டதில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், விபத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன் அவர் தொடர்பிலான அடையாளங்கள் இதுவரை இனங்காணப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், விபத்தின் போது பாரவூர்தியின் சாரதி சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்ற நிலையில், அவர் மிஹிந்தலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

 

சுவிஸில் கைது செய்யப்பட்ட இலங்கை குற்றவாளி : நாடு கடத்த நடவடிக்கை!!

சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் பொடி பெட்டியை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரது கைரேகை பரிசோதனைக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அந்நாட்டு அதிகாரிகளால் இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அந்த நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் பொடி பெட்டியை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான இராஜதந்திர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அரச நிறுவனங்களுக்கு அறிவித்தல் விடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பொடி பெட்டி சமீபத்தில் பெலாரஸில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் லொக்கு பெட்டியின் சகோதரராகும். கிளப் வசந்த கொலைகளை லொக்கு பெட்டியினால் திட்டமிட்டதாக செய்திகள் வந்தன.

இதேவேளை, போதைப்பொருள் கடத்தல்காரர்கள், பாதாள உலக தலைவர்கள் உள்ளிட்ட 168 குற்றவாளிகள் பல்வேறு நாடுகளில் தலைமறைவாகி குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களை கைது செய்ய சர்வதேச பொலிஸாரிடம் சிவப்பு பிடியாணை பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதில் பெரும்பாலான குற்றவாளிகள் டுபாயில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் விபத்துக்குள்ளான கார் : சம்பவ இடத்திலேயே பலியான தமிழ் குடும்பத்தினர்!!

அமெரிக்காவின் (US) டெக்சாஸ் மாகாணத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் தமிழ் குடும்பத்தை சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர்.

வடக்கு டெக்சாஸில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றில் தனது மகளுடன் புறப்பட்ட அரவிந்த் மற்றும் பிரதீபா என்ற தம்பதியினர் பயணித்த காரே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த காரின் மீது மற்றொரு வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பத்தின் போது, தமிழ் குடும்பம் பயணித்த காரில் இருந்தவர்கள் மற்றும் மற்றைய வாகன ஓட்டுநர் உட்பட மொத்தம் ஐவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, அதே குடும்பத்தை சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் காரில் பயணிக்காத நிலையில் விபத்தில் சிக்காமல் உயிர் தப்பியுள்ளார்.

இருப்பினும், சிறுவனின் எதிர்காலம் கருதி பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்ட முடிவு செய்து அதிகாரிகளால் அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இதுவரை 700,000 அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக திரட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் கோர விபத்து – திருமணமான இளைஞன் பரிதாபமாக மரணம்!!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடமைகளை முடித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த தாதி ஒருவர் கொஸ்கம பிரதேசத்தில் லொறியுடன் மோதியதில் உயிரிழந்துள்ளார்.

புவக்பிட்டிய, பஞ்சசர மாவத்தையில் வசிக்கும் சசிந்து நில்ஷான் செனவிரத்ன என்ற 28 வயதுடைய திருமணமான இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

லொறியில் மோதி காயமடைந்த தாதி அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 16 ஆம் திகதி காலை உயிரிழந்ததாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையை கொழும்பு வைத்திய அதிகாரி எஸ். வி. என். பெரேரா தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரான லொறி சாரதியை எதிர்வரும் 5ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

வவுனியாவில் தலைக்கவசம் கொண்டு ஊடகவியலாளர் மீது தாக்குதல்!!

வவுனியா மாவட்டத்தில் தனியார் பத்திரிகையொன்றில் பணியாற்றும் ஊடகவியலாளர் மீது தலைக்கவசம் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

குறித்த சம்பவம், நேற்று (17.06.2024) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கடந்த சில நாட்களாக வவுனியா ஊடக அமையம் மற்றும் ஊடகவியலாளர்கள் தொடர்பாக முகநூலில் அவதூறு பரப்பிவரும் சம்பவம் தொடர்பாக சுமுகமான தீர்வு ஒன்றை எட்டுவதற்காக வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தினால் குடியிருப்பு பூங்காவில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

இக்கூட்டத்தில் அவதூறு பரப்பிய நபரும் கலந்து கொண்டிருந்தார். இதன்போது வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றபோது திடீரென உணர்ச்சிவசப்பட்ட அவர் குறித்த பத்திரிகை ஊடகவியலாளர் மீது தலைக்கவசம் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதனையடுத்து, காயமடைந்த ஊடகவியலாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, அங்கிருந்த பெண் ஊடகவியலாளரையும் தள்ளி வீழ்த்தியதுடன் அவர் மீதும் தாக்குதல் மேற்கொள்ள முயன்ற வேளையில், அருகில் இருந்த ஊடகவியலாளர்கள் அதனை தடுத்துள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி மூலம் – தமிழ்வின்

4 வயதுச் சிறுவன் பரிதாப மரணம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெறிநாய் கடித்து, ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுவன், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து பல மாவட்டங்களிலும் தெருநாய் கடித்து அடுத்தடுத்து உயிரிழப்புகளும், பாதிப்புகளும் ஏற்பட்டு வரும் நிலையில், நகராட்சி அதிகாரிகள், அரசு இந்த விஷயத்தில் அக்கறை எடுப்பதில்லை என்று பொதுமக்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது.

நாய்க்கடி உரிமையாளருக்கு அபராதம் விதிப்பதால் மட்டுமே இந்த பிரச்சனையைத் தீர்க்க முடியாது என்றும், அபராதம் விதிப்பது மட்டுமே குற்றங்களைத் தடுத்து நிறுத்தாது என்று சமூக ஆர்வலர்களும் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெறிநாய் கடித்து நான்கு வயது சிறுவன் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வெறிநாய்க்கடித்தன் காரணமாக சிறுவனின் மூளையில் காயம் நெருக்கமாக இருந்ததால் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த ஜூலை 27ம் தேதி மாலை, 4 வயது சிறுவன் நிர்மல் தனது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது அந்த பகுதியில் இருந்த ​​தெருநாய் ஒன்று சிறுவனைக் கடித்து தாக்கியதில் சிறுவனின் வாயில் காயம் ஏற்பட்டது.

தெருநாய் கடித்து 17 நாட்களுக்குப் பிறகு, சிறுவன் சிகிச்சைப் பலனின்றி ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார். இந்த ஆண்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட முதல் வழக்காக இது பதிவாகியிருக்கிறது.

சம்பவம் நடந்த ஜூலை 27ம் தேதி, அந்த பகுதியில் இருந்த மக்கள் சிறுவனைக் கடித்த நாய் மீது கற்களை வீசியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து தெருநாய் கொல்லப்பட்டது.

அரக்கோணம் தாலுகா காந்திபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பி.கலைவாணி மற்றும் பாலாஜி தம்பதியின் மகன் நிர்மல் (4). நிர்மலுக்கு ஜெனிதா என்ற சகோதரி இருந்தாள். ஜூலை 27ம் தேதி மாலை, நிர்மல் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​தெருநாய் தாக்கியதில், வாயில் காயம் ஏற்பட்டது.

“நான் கொஞ்சம் தண்ணீர் எடுக்க வீட்டிற்குள் சென்றிருந்தேன். நான் திரும்பி வந்தபோது, ​​வாயில் காயங்களுடன் எனது மகனைப் பார்த்தேன். வாய் முழுவதும் அதிக ரத்தம் வெளியாகிக் கொண்டிருந்தது” என்று சிறுவனின் தந்தை பாலாஜி கூறியிருந்தார்.

உடனடியாக நிர்மலை காஞ்சிபுரத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் சிறுவன் நிர்மலுக்கு நான்கு டோஸ் ரேபிஸ் தடுப்பூசி போட்டனர்.

மருத்துவர் பரிந்துரையின் பேரில், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்காக நிர்மல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். செங்கல்பட்டில் அவருக்கு 15 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவரது உடல்நிலை சீரானதையடுத்து, நிர்மலை தங்கள் வீட்டிற்கு பெற்றோர் அழைத்து சென்றனர். ஆனால் விரைவில், நிர்மல் கத்துவது மற்றும் அழுவது போன்ற அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியது பெற்றோரைப் பதற்றத்திற்குள்ளாக்கியது.

மீண்டும், நிர்மல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மருத்துவர்கள் ரேபிஸ் வைரஸ் சிறுவன் நிர்மலின் நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், இரண்டு நாட்களில் அவர் இறந்து விடக்கூடும் என்றும் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.

“அதன் பின்னர் கவலைக்கிடமான நிர்மலின் உடலும் வீங்கத் தொடங்கியதில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். பெற்றோரின் வேண்டுகோளை ஏற்று, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் அவர்களது கிராமத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.

இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டி செந்தில் குமார் கூறுகையில், சிறுவன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் தடுப்பூசியின் நான்கு டோஸ்களும் அவருக்கு வழங்கப்பட்டன. காயம் மூளைக்கு அருகாமையில் இருப்பதால் மரணம் ஏற்படலாம். இது போன்ற சமயங்களில் மூளையை வேகமாக பாதிக்கிறது.

நிர்மலை கடித்த நாய் 11 வயது சிறுவனையும் அவனது தந்தையையும் தாக்கியது. மருத்துவ பரிசோதனைக்கு பிறகு இருவரும் தற்போது பாதுகாப்பாக உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து தெருநாய்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

13 வயது மகளுடன் கணவன், மனைவி எடுத்த விபரீத முடிவு!!

கர்நாடக மாநிலத்தில் ஹாசன் நகரில் வசித்து வருபவர் ஸ்ரீனிவாஸ். இவரது மனைவி ஸ்வேதா மற்றும் அவர்களது 13 வயது மகள் நாகசீதா. இருவரும் திடீரென காணாமல் போன நிலையில், அவர்களை உறவினர்கள் தேடி அலைந்தனர்.

அவர்களது உடல்கள் கால்வாயில் மிதந்தது கொண்டிருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற உறவினர்கள் அவர்களை கண்டதும் கதறித்துடித்தனர்.

இந்நிலையில், சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட அப்பகுதிக்கு விரைந்த அதிகாரிகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஸ்ரீனிவாஸ் கடனால் அவதிப்பட்டு வந்துள்ளார். கார் ஓட்டுநரான அவர், கடன் தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளாகி, தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

யாழில் சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

யாழ்ப்பாணத்தில் சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் கீழே விழுந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

சாந்தை – பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நேசராசா பனுசா என்ற பெண்ணே நேற்று(16) உயிரிழந்துள்ளார். கடந்த 11ஆம் திகதி குறித்த பெண் பொன்னாலை கிருஷ்ணன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து, தனது சகோதரனுடன் தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த வேளை மாதகல் – பொன்னாலை வீதியில் குறித்த பெண் தவறி திடீரென கீழே விழுந்து மயக்கம் அடைந்துள்ளார்.

இந்நிலையில், சங்கானை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று(16) உயிரிழந்துள்ளார்.

அத்துடன், சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.