‘குழந்தைகளைப் பார்த்துக்கோங்க’ உருக்கமாக கடிதம் எழுதி தம்பதியர் எடுத்த விபரீத முடிவு!!

’அப்பா… அம்மா… எங்க குழந்தைகளைப் பார்த்துக்கோங்க’ என்று உருக்கமாக கடிதம் எழுதி வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு, கங்கையில் விழுந்து கணவனும், மனைவியும் தற்கொலைச் செய்து கொண்டது பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள கிஷன்புரா பகுதியில் வசித்து வருபவர் சவுரப். இவரது மனைவி மோனா. இந்த ஜோடிக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.

சவுரப் நகைக்கடை நடத்தி வருகிறார். அவர் தொழிலதிபர்கள் குழுவை நிர்வகித்தபோது, ​​​​அவர்கள் கமிட்டியில் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்து வணிக நஷ்டத்தை எதிர்கொண்டனர். கடும் கடன் தொல்லையால், ஹரித்வாருக்குப் புறப்பட்ட தம்பதியர், கங்கை நதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

கடனில் சிக்கித் தவித்ததால் சோகமான முடிவை எடுத்துள்ளதாகவும், இரு குழந்தைகளும் தாத்தா, பாட்டி வீட்டில் தங்குமாறு வாட்ஸ்அப்பில் செல்ஃபி எடுத்து அனுப்பி விட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர்களது தற்கொலைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு வினையான சோகம் : 10 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்!!

கேரள மாநிலம் திருச்சூரில், கழுத்தில் சுடிதாரின் ஷால் மாட்டி விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி எல்வினா, எதிர்பாராத வகையில் கழுத்து இறுக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் செல்லக்கரை வட்டுலியைச் சேர்ந்த தம்பதியர் ரெஜி – பிரிஸ்லா. இவர்களது ஒரே மகள் எல்வினா ரெஜி(10). நேற்றிரவு று 9 மணியளவில் தனது வீட்டில் கழுத்தில் சுடிதாரின் ஷால் மாட்டிக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி எல்வினா, திடீரென கழுத்தில் ஷால் சிக்கி இறுக்கியதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சிறுமி ஷால் வைத்து ஜன்னலில் மாட்டி விளையாடிக் கொண்டிருந்த போது அவரது பெற்றோர் வீட்டில் இருந்துள்ளனர்.

சிறுமியின் தாய் பிரிஸ்லா, விளையாடிக் கொண்டிருந்த எல்வினாவை இரவு உணவு சாப்பிட அழைக்கச் சென்றபோது, ​​அவள் கழுத்தில் ஷால் மாட்டப்பட்டிருந்த நிலையில் படுத்திருந்தாள். ஷாலின் ஒரு பகுதி ஜன்னலிலும் மற்றொரு பகுதி எல்வினாவின் கழுத்திலும் கட்டப்பட்டிருந்தது. உடனடியாக பெற்றோர்கள் பதறியடித்தப்படி எல்வினாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சிறுமி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சேலக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, எல்வினாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு தடயவியல் குழுவினரும் விரைந்து சென்று தடயங்களை சேகரித்துள்ளனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மாணவி எல்வினா ஷால் வைத்து ஜன்னல் கம்பிகளில் மாட்டி விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​தவறுதலாக ஷால் கழுத்தை இறுக்கியதில், மூச்சுத்திணறி இறந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

வவுனியா பிரதான வீதியில் விபத்து : இருவர் வைத்தியசாலையில் அனுமதி!!

வவுனியா பிரதான வீதி நவகம பிரதேசத்தில் முச்சக்கர வண்டியுடன் வான் மோதி இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்து இன்று (14.08.2024)காலை இடம்பெற்றுள்ளதாக வவுனியா, இரட்டைபெரியகுளம் பொலிஸார் கூறியுள்ளனர்.

அநுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த வான் ஒன்றுடன் வவுனியாவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கர வண்டியுடன் வான் மோதியதில் முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்துடன் தொடர்புடைய வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரட்டைபெரியகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

2024 ஆம் ஆண்டு பாடசாலை இரண்டாம் தவணை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு!!

இந்த ஆண்டுக்கான இரண்டாம் தவணை பாடசாலை கற்கைகள் அனைத்தும் எதிர்வரும் ஓகஸ்ட் 16ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை நிறைவு பெறவுள்ளது.

இதன்படி, பாடசாலைகளின் மூன்றாவது தவணைக்கான முதல் கட்டம் ஓகஸ்ட் 26ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது.

மேலும், ஓகஸ்ட் 16ஆம் திகதியுடன் 2ஆம் தவணை முடிவடைவதை தொடர்ந்து 3ஆம் தவணைக்கான ஆரம்பம் வரை மாணவர்களுக்கான 2ஆம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

 

இலங்கை வான் பரப்பில் நிகழவுள்ள அரிய மாற்றம்!!

நாளை காலை வானில் செவ்வாய் – வியாழன் ( Mars-Jupiter) இணைவை அவதானிக்கும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைக்கும் என நவீன தொழில்நுட்பங்களுக்கான ஆர்தர் சி கிளார்க் ( Arthur C. Clarke) நிறுவனத்தின் வானியல் துறை தெரிவித்துள்ளது.

இன்று செவ்வாய் மற்றும் வியாழன் மிக நெருக்கமாகத் தோன்றும், அவை அதிகாலையில் “இரட்டைக் கோள்” போல இருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் செவ்வாய் மற்றும் வியாழன் ஆகியவை அந்தந்த சுற்றுப்பாதையில் 350 மில்லியன் மைல்கள் (575 மில்லியன் கிலோமீட்டர்) தொலைவில் இருக்கும்.

எனினும், இரவு வானில் சந்திரன் இணைவது பொதுவானது என்றாலும், இரு கோள்களுக்கு இடையே இணைவது மிகவும் அரிதான நிகழ்வாகும்.

செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் இதுபோன்ற ஒரு அரிய இணைப்பு இன்று (14) இரவு 8.57 மணி முதல் இரவு 9.51 மணி வரை நிகழும் ஆனால் அந்த நேரத்தில், செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையிலான கோண தூரம் ஒரு டிகிரிக்கும் குறைவானது ஆகும்.

ஆனால் அந்த காலப்பகுதியில் செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய கிரகங்கள் தொடுவானத்தில் இருந்து எழாததால் நாளை (15) அதிகாலை 2 மணிக்கு பின்னர் இலங்கையர்கள் இணைவதை அவதானிக்க முடியும்.

அந்த நேரத்தில், செவ்வாய் மற்றும் வியாழன் இடையே கோண வேறுபாடு 19′ 29” ஆக அதிகரிக்கும். இந்த நிகழ்வை தொலைநோக்கி மூலம் மக்கள் சிறப்பாகக் அவதானிக்க முடியும். இருப்பினும், செவ்வாய் மற்றும் வியாழன் இடையே இந்த வகையான இணைப்பு 2033 ஆம் ஆண்டில் மீளவும் நிகழும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

 

கொழும்பில் பெண் ஒருவருக்கு அதிர்ச்சி கொடுத்த பரிசு : லட்சக்கணக்கில் மோசடி!!

கொழும்பில் கார் மற்றும் 875,000 ஸ்டெர்லிங் பவுண்ட் பரிசுத் தொகை கிடைத்துள்ளதாக பெண் ஒருவரின் தொலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பி 45 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ, படோவிட்ட பகுதியை சேர்ந்த சுமித் பெர்னாண்டோ என்பவரே கைது செய்யப்பட்ட நிலையில் மஹர நீதிமன்ற நீதவான் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

மாகொல பகுதியை சேர்ந்த மனோஹரி பிரியங்கரி என்ற பெண் செய்த முறைப்பாடுக்கு அமைய, சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

முறைப்பாட்டாளரான பெண்ணின் கையடக்க தொலைபேசிக்கு பரிசு கிடைத்ததாக குறுந்தகவல் வந்ததாக களனிப் பிரிவு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட் குமார நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

சுங்க அதிகாரி என தன்னை அடையாளப்படுத்திய சந்தேக நபர், சுங்கத்தில் இருந்து காரை வெளியே கொண்டு வருவதற்காக பணம் தேவை என பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, அந்த பெண் குறித்த தொகையை வங்கியில் வைப்பு செய்துள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுக்களை பரிசீலித்த மஹர இலக்கம் 02 நீதவான் ஜனித பெரேரா சந்தேக நபரை எதிர்வரும் 7ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

 

அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியொன்றில் இருந்து 10 வருடங்களின் பின்னர் மீட்கப்பட்ட சடலம்!!

அமெரிக்காவில் 3 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பல்பொருள் அங்காடியில் குளிர்சாதனப் பெட்டிக்கு பின்னால் சிக்கியிருந்த இளைஞர் ஒருவரின் உடல் 10 வருடங்களின் பின்னர் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய காணொளி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அயோவாவில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்று சுமார் 3 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டில் பல்பொருள் அங்காடியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

இதன்போது, அங்கிருந்த குளிர்சாதனப் பேட்டி ஒன்றை அவர்கள் அகற்ற முயன்றபோது, அதன் பின்னால் அழுகிய நிலையில் உடல் ஒன்று இருந்துள்ளது.

உடனே பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மனித உடலைக் கைப்பற்றி DNA பரிசோதனைக்கு அனுப்பியதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், 2009ஆம் ஆண்டில் காணாமல்போன Larry ely murillo-moncada என்பவரின் உடல் தான் அது என தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞன் குளிர்சாதனப்பெட்டிக்கு பின்னால் சிக்கியதன் விளைவாகவே உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் யூகித்துள்ளனர்.

எனினும், உயிரிழந்த இளைஞன் சிக்கியது விபத்தாக இருந்தாலும் அவர் உதவிக்கு அழைத்திருக்கக்கூடும். அது எப்படி கடைக்கு உள்ளேயும், வெளியேயும் இருந்தவர்களுக்கு தெரியாமல் போனது? அவரின் குரல் யாருக்கும் கேட்கவில்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இவ்வாறு எழுந்த கேள்விக்கு விளக்கம் அளித்த பொலிஸார், உயிரிழந்த இளைஞன் 12 அடி உயரம் கொண்ட அந்த பாரிய குளிர்சாதனப்பெட்டியில் இருந்து வந்த சத்தத்தால், அதற்கு பின்னால் இருந்து அவர் எழுப்பிய குரல் கேட்காமல் போயிருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், அந்த இளைஞனுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை புரிய வைக்க கிராஃபிக்ஸ் காணொளி ஒன்றை தொழில்நுட்ப வல்லுநர்கள் வெளியிட்டுள்ளனர்.

 

17 மாணவர்களால் பாடசாலை மாணவிக்கு நேர்ந்த கொடூரம் : அதிபர், ஆசிரியர்கள் அதிரடியாக கைது!!

தனமல்வில பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான செயலுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் குறித்த பாடசாலையின் அதிபர், ஆசிரியர் மற்றும் இரண்டு ஆசிரியைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவி தவறான செயலுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பிலான தகவல்களை அறிந்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்காமல் மறைத்த காரணத்திற்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் பாடசாலை மாணவியை தவறான செயலுக்கு உட்படுத்தியமை தொடர்பில் 14 மாணவர்களை சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் நேற்று முன்தினம் (12.08) உத்தரவிட்டது.

மேலும், மூன்று மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவிய பெண்ணை ஆகஸ்ட் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வெல்லவாய நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தனமல்வில பிரதேச பாடசாலையொன்றில் கல்வி பயின்ற பாடசாலை மாணவியை தவறான செயலுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 17 மாணவர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தவறான செயலுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட போது, ​​அங்கிருந்த வைத்தியர் ஒருவர் சிறுமியை மேலும் கொடுமைப்படுத்தியதாக அவரது தாயார் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்படி, சிறுமியின் தாய் ஹம்பாந்தோட்டை பொலிஸ் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

கொழும்பில் பெண் ஒருவருக்கு அதிர்ச்சி கொடுத்த நபர் : மில்லியன்கணக்கான பணம் மாயம்!!

கொழும்பில் கார் மற்றும் 875,000 ஸ்டெர்லிங் பவுண்ட் பரிசுத் தொகை கிடைத்துள்ளதாக பெண் ஒருவரின் கையடக்கபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பி 45 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்டமை அம்பலமாகி உள்ளது.

மோசடி செய்தமை தொடர்பில் நபர் ஒருவர் கைது செயப்பட்ட நிலையில் குறித்த நபரை விளக்கமறியலில் வைக்க மஹர நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ, படோவிட்ட பகுதியை சேர்ந்த சுமித் பெர்னாண்டோ என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

மாகொல பகுதியை சேர்ந்த மனோஹரி பிரியங்கரி என்ற பெண் செய்த முறைப்பாடுக்கு அமைய, சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

முறைப்பாட்டாளரான பெண்ணின் கையடக்க தொலைபேசிக்கு பரிசு கிடைத்ததாக குறுந்தகவல் வந்ததாக களனிப் பிரிவு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட் குமார நீதிமன்றில் தெரிவித்தார்.

சுங்க அதிகாரி என தன்னை அடையாளப்படுத்திய சந்தேக நபர், சுங்கத்தில் இருந்து காரை வெளியே கொண்டு வருவதற்காக பணம் தேவை என பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, அந்த பெண் குறித்த தொகையை வங்கியில் வைப்பு செய்துள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுக்களை பரிசீலித்த மஹர இலக்கம் 02 நீதவான் ஜனித பெரேரா சந்தேக நபரை எதிர்வரும் 7ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

சகோதரனுடன் வீடு திரும்பிய சகோதரி பரிதாபமாக உயிரிழப்பு!!

குருணாகல், நிகவெரட்டிய பிரதேசத்தில் மேலதிக வகுப்பிற்கு சென்று தனது சகோதரனுடன் வீடு திரும்பிய சிறுமி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

மனஷா ஹன்சனி என்ற 12 வயதான சிறுமி தனது 16 வயதுடைய சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த மாணவியின் சகோதரன் தற்போது நிகவெரட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீட்டிற்கு அருகில் உள்ள பாறை மீது மோதியதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த சகோதரனும் சகோதரியும் நிகவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சகோதரி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பாடசாலை மாணவியின் சடலம் தொடர்பான பிரேதப் பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மருமகளை திருமணம் செய்த மாமியார்!!

 இந்தியாவில் மாமியார் , தன் சொந்த மருமகளை திருமணம் செய்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ள மட்டுமே சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளது. மாறாக ஆணும் – ஆணும், பெண்ணும் – பெண்ணும் திருமணம் செய்து கொள்வதற்கு சட்டப்பூர்வ அனுமதி கிடையாது.

சில நாடுகள் தன்பாலி திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கி இருந்தாலும் , இந்தியாவில் தன்பாலின திருமணத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. அவ்வப்போது நடைபெறும் சம்பவங்கள் இளைததளங்களில் வெளியாகி விவாத்தையும் தூண்டி விடுகின்றது.

பீகார் மாநிலம் கோபால் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பெல்வா கிராமத்தைச் சேர்ந்த நடுத்தர வயது பெண் சுமன். இவருடைய சொந்த மருமகள் ஷோபா. கடந்த 3 ஆண்டுகளாக மாமியார் சுமனுக்கு மருமகள் சோபா மீது காதல் ஏற்பட்டதுடன் இருவரும் வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் ரீதியாக நெருக்கமாக இருந்தனர். இது இவர்களின் கணவர்களுக்கு தெரியவந்தது.

அவர்கள் இருவரையும் கண்டித்தனர். இதனால் மாமியார் மருமகள் இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இருவரும் வீட்டை விட்டு வெளியேறி அங்குள்ள ஒரு கோவிலில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

அப்போது மாமியார் சுமன் பேண்ட் சட்டை அணிந்து மணமகன் போல காட்சி அளித்தார். மருமகள் சோபாவுக்கு மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

கோவிலில் இருவரும் மாலை மாற்றினர். பின்னர் மாமியார் சுமன் மருமகள் கழுத்தில் தாலி கட்டினார். தமது திருமண தொடர்பில் மாமியார் கூறுகையில், நான் எனது மருமகளை வெறித்தனமாக காதலிக்கிறேன்.

அவள் வேறொருவரை திருமணம் செய்து கொண்டதை என்னால் தாங்க முடியவில்லை. உலகம் என்ன நினைக்கும் என்பதை பற்றி கவலைப்படாமல் எல்லாவற்றையும் விட்டுவிட்டு திருமணம் செய்து கொள்ள எங்களது மனம் தூண்டியது.

கணவரை பிரிந்து வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் எப்போதும் பிரிய மாட்டோம். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை என அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் அவர்களின் திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது.

 

கடவுச்சீட்டால் நின்றுபோன திருமணம் : வெளிநாடு செல்ல காத்திருந்த யுவதிக்கு அதிர்ச்சி!!

இலங்கையில் இருந்து திருமணத்திற்காக அவுஸ்திரேலிய செல்ல ஆயத்தமான இலங்கை யுவதியொருவர் கடவுச்சீட்டு இல்லாத காரணத்தினால் வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது கடவுச்சீட்டை புதுப்பிக்க வந்த மணப்பெண்ணுக்கு, எதிர்பாராதவிதமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருமணத்திற்கு தயாரான குறித்த யுவதி இணையம் மூலம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளார்.

அதற்காக கைரேகை அடையாளங்களை வழங்க வந்தபோது, ​​குடிவரவு அலுவலக அதிகாரிகள் கடவுச்சீட்டை வழங்க மறுத்துவிட்டதாக கூறப்படுகின்றது.

அதேவேளை திட்டமிட்டபடி திருமணத்திற்கு வராவிட்டால் விவாகரத்து செய்துவிடுவதாக அவுஸ்திரேலியாவில் உள்ள மணமகன் தெரிவித்ததையடுத்து குறித்த யுவதி அழுது புலம்பியவாறு அதிகாரிகளிடம் உதவி கோரியுள்ளார்.

எனினும் தற்போதுள்ள நடைமுறைகளுக்கமைய யுவதிக்கு கடவுச்சீட்டை வழங்க அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகின்றது. இதன்போது பிரச்சினைகளை தீர்க்க நியமிக்கப்பட்ட அதிகாரி நேரம் ஒதுக்கியவர்களுக்கு மாத்திரம் கடவுச்சீட்டை வழங்கியுள்ளது.

கடவுச்சீட்டு கிடைக்காத காரணத்தால் யுவதி திட்டமிட்ட வகையில் வெளிநாட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில் திருமண வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

 

காணாமல்போன யுவதி : உதவி கோரியுள்ள உறவினர்கள்!!

கம்பஹா மாவட்டத்தின் நிட்டம்புவ ஒர்சட்வத்த பிரதேசத்தை சேர்ந்த பாத்திமா ஆயிக்ஷா எனும் இளம் யுவதி காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதி கடந்த 11 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. காணாமல்போன யுவதி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் உறவினர்களால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் யுவதி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0777 302 372, அல்லது 0755 489 489 எனும் இலகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு காணாமல்போன யுவதியின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

 

மன்னார் சிந்துஜாவிற்கு நீதி கோரி வீதிக்கு இறங்கிய மக்கள் : தாய்க்கான போராட்டத்தில் பிஞ்சுக் குழந்தை!!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிந்துஜாவிற்கு நீதி கோரி பொதுமக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

இன்று (13) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் பிஞ்சுக்குழந்தை

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது கருப்பு துணியால் தனது வாயை கட்டி, கையில் கருப்புக் கொடியை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கடந்த மாதம் 28 ஆம் திகதி சிகிச்சைக்காக அமுனதிக்கப்பட்டிருந்த ஒரு பிள்ளையின் தாயான சிந்துஜா , நோயாளர் விடுதியில் இருந்த வைத்தியர் மற்றும் பணியாளர்களின் அசமந்த போக்கு காரணமாக உயிரிழந்ந்திருந்தார்.

இந்நிலையில் சிந்துஜா மரியராஜின் மரணம் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணைகள் நடைபெற்று ஒரு வாரம் கடந்த போதும் இதுவரை எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டு இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதேவேளை குறித்த போராட்டத்தில் உயிரிழந்த சிந்துஜாவின் தாயார், சிந்துஜாவின் பிஞ்சுக்குழந்தையுடன் கலந்து கொண்டிருந்தமை பார்ப்பவர் நெஞ்சங்களை கலங்க செய்திருந்தது .

 

மன்னாரில் உண்ணாவிரதத்தில் இறங்கிய வைத்தியர்!!

புதிய இணைப்பு : மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிந்துஜாவிற்கு நீதி கோரி இன்றைய தினம் (13.08.2024) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஏற்பாடு செய்த குறித்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தை சேர்ந்த வைத்தியர் செந்தூரன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(13) காலை உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

சிந்துஜாவின் மரணத்துடன் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து குறித்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுப்பு துணியால் தமது வாயை கட்டி கையில் கறுப்புக் கொடியை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதலாம் இணைப்பு : மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த சிந்துஜாவுக்கு நீதி கேட்டு அந்த வைத்தியசாலை முன்பாக இன்று(13) காலை 9 மணிக்குக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. இது தொடர்பில் மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

“மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த மாதம் 28ஆம் திகதி இறந்த சிந்துஜா மரியராஜின் மரணம் தொடர்பாக ஆரம்பகட்ட விசாரணைகள் நடைபெற்று ஒரு வாரம் கடந்த போதும் இதுவரை எதுவிதநடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

தாமதிக்கும் நீதி மறக்கப்பட்ட நீதியாகவே நாம் கருதுகின்றோம். ஆகவே, வைத்தியசாலையின் பொறுப்பற்ற செயற்பாட்டால் இறந்தவருக்கு நீதி வேண்டும். இப்படி இன்னொரு கொலை நடைபெறக்கூடாது.

எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பாதுகாக்க நினைக்கும் மத்திய மற்றும் மாகாண சுகாதார அதிகாரிகளுக்கு எதிராக சிந்துஜாவுக்கு நீதி வேண்டி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று(13) காலை 9 மணிக்குக் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளதால் இந்தப் போராட்டத்தில் தார்மீக அடிப்படையில் கலந்துகொள்ளுமாறு அழைப்பதுடன் அனைத்து உறவுகளையும் அணிதிரளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : இருவர் படுகாயம்!!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து இருவர் படுகாயம்டைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து சம்பவமானது நேற்று (12.08.2024) மாலை வேளை இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பான விசாரணை

களுவாஞ்சிகுடி நோக்கி பயணித்த இரு மோட்டார் வண்டிகளும், ஒன்றுடன் ஒன்று பின்பக்கமாக மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

இதில் படுகாயமடைந்த இருவரும், சிகிச்சைக்காக கருவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.