இலங்கையின் ஒரு பகுதியில் தொடருந்து சாரதி ஒருவர் தொடருந்து தண்டவாளத்திலே தொடருந்தை நிறுத்தி விட்டு கடையில் உணவு வாங்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களிலே வெளியாகி வைரலாகி வருகின்றது.
குறித்த காணொளியில் புகையிரத்தை கடவையில் நிறுத்தி வைத்து விட்டு பொது மக்கள் காத்திருக்க தொடருந்து செலுத்துபவர் உணவை வாங்கிச் செல்வதாக பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் குறித்த செயலானது பொது மக்களிடையே தொடருந்து திணைக்கள உத்தியோகத்தர்கள் தொடர்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் உயர் கல்வி கற்க சென்ற இலங்கை இளைஞன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். கடந்த 6 ஆம் திகதி களனி பிரதேசத்தை சேர்ந்த இளைஞன், தனது வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
களனி, பெத்தியகொட, மாவெல்ல வீதியில் வசித்து வந்த தனிது சஸ்மித ரவிஹன்ச என்ற 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து உயிரிழந்த இளைஞனின் தாயார் தெரிவிக்கையில்,
களனி தர்மலோக வித்தியாலயத்தில் உயர்தரம் வரை வர்த்தகம் கற்று, பின்னர் ஜப்பானிய மொழிப் பரீட்சையில் சித்தியடைந்த குறித்த இளைஞன், ஜப்பானின் நகோயாவில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் உயர் கல்வியைத் தொடர்வதற்காக அண்மையில் சென்றுள்ளார்.
“எனது மகன் இலங்கையிலிருந்து ஜப்பான் சென்று நான்கு மாதங்கள் ஐந்து நாட்கள் ஆகின்றன. சட்டரீதியாகவே அவர் சென்றார். ஜப்பானிய மொழிப் பரீட்சையில் தேர்ச்சி பெற்றார். மகனை இலங்கையில் இருந்து ஜப்பானுக்கு அனுப்ப 35 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது.
கடனுக்கு பணம் பெற்றே அவரை ஜப்பானுக்கு அனுப்பினோம். மகன் முல்லேரியா பகுதியில் உள்ள முகவர் ஊடாக ஜப்பான் சென்றுள்ளார்.
மகன் உயிரை மாய்த்துக் கொள்வதற்கு எந்தக் காரணமும் இருக்கவில்லை. மகன் உயிரிழப்பதற்கு முன்னர் 45 நிமிடங்கள் என்னிடம் பேசினார். எனது மகன் தனது முந்தைய வேலையை இழந்தார். மற்றுமொரு வேலைக்கான நேர்முகத்திற்கு செல்லவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
கடந்த ஐந்தாம் திகதி அவருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டேன். எனினும் எனது அழைப்பிற்கு பதில் இல்லை. அதன் பிறகு அவரே எனக்கு அழைப்பேற்படுத்தி நான் நேர்முகத் தேர்வுக்கு சென்றதாக கூறினார்.
கடந்த 6ஆம் திகதி ஜப்பானில் வாழும் எங்கள் அயல்வீட்டு பெண், மகன் உயிரை மாய்த்து கொள்வதாக தன்னிடம் கூறியதாக கூறினார்.
வட்அப்பில் பதிவிட்டிருந்தார், அதனை பேஸ்புக்கிலும் பதிவிட்டிருந்தார் என கூறிய நிலையில் அவரை மகனின் அறைக்கு சென்று பார்க்குமாறு கூறினேின் அங்கு அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
மகனின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்தேன். மகனின் சடலத்தைப் பார்க்க அரசாங்கம் எனக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என தாயார் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் பூநகரி, பரமன்கிராய் பகுதியில் இன்றையதினம் (11-08-2024) காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் யாழ்.கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி – பூநகரி பொலிஸ் பிரிவிற்குப்பட்ட மன்னார், நாவற்குழி செல்லும் A-32 பிரதான வீதியில் பரமன்கிராய் பகுதியில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், விபத்திற்கான காரணம் தொடர்பாக பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கம்பளை – அம்புலுவாவ மலைக்கு தவறான பாதையில் ஏறிச்சென்ற நபரொருவர் கல் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தெஹியோவிட்டவிலிருந்து கம்பளைக்கு வந்த நான்கு பேர் கொண்ட குழுவினரில் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெஹியோவிட்ட, முருத்தெட்டுவ பிரதேசத்தினை சேர்ந்த தமிந்த சமரதுங்க என்ற 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மனைவியிடம் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளமை தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
காலியில் 45000 ரூபாவுக்கு நாய்க்குட்டியை கொள்வனவு செய்வதாக தெரிவித்த நபரின் கணக்கில் இருந்து 172,280 ரூபாவை மோசடியான முறையில் பெற்றுக்கொண்ட நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தம்மிடம் தலா 45000 ரூபாவுக்கு நாய்க்குட்டிகள் விற்பனைக்கு இருப்பதாக ஒருவர் இணையத்தில் விளம்பரம் செய்துள்ளார்.
இதனையடுத்து காலியில் உள்ள ஒருவர் நாய்க்குட்டியை பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்து நாய்க்குட்டிகளின் உரிமையாளர் போல் நடித்த நபரை அழைத்துள்ளார்.
இதன்போது 20000 ரூபாய் முன்பணம் தேவை எனவும் வங்கி கணக்கு எண் வழங்கியுள்ளார். அதற்கமைய, நாய் வாங்குபவர் இருபதாயிரம் ரூபாவை வைப்பிலிட்டுள்ளார்.
பணத்தை வைப்பு செய்த பிறகு, நாயின் உரிமையாளர் மீண்டும் அழைத்து, OTP உடன் உங்கள் கையடக்க தொலைபேசிக்கு குறுஞ்செய்தி வரும் என கூறினார்.
அந்த எண்ணைக் கொடுத்த மூன்று நிமிடங்களில், நாய் உரிமையாளர், கொள்வனவாளரின் கணக்கில் இருந்து மூன்று முறை 172,280 ரூபா பணத்தை எடுத்துள்ளார்.
பணம் எடுக்கப்பட்டதை அறிந்த அவர், இந்த மோசடி குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். மேலும் இவ்வாறான ஒன்லை விளம்பரங்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என பொது மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
OTP இலக்கங்களை யாருக்கும் வழங்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாதகமான வானிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களத்தின் வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், மக்களுக்கு அறிவித்துள்ளது.
புத்தளம், மதுரங்குளிய நல்லன்தலுவ பிரதேசத்தில் 3 பிள்ளைகளின் தாய் ஒருவர் இன்று கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈருபட்டுள்ளனர்.
சம்பவத்தில் மதுரங்குளிய நல்லன்தலுவ பிரதேசத்தைச் சேர்ந்த செல்வமரிக்கார் அயினா உம்மா என்ற 71 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த வயோதிப பெண் தனது வீட்டினுள் கைகால்கள் கட்டப்பட்டு, ஆடைகளின்றி படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தனக்குச் சொந்தமான தென்னந்தோப்பு காணியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வரும் நிலையில் , பிள்ளைகள் எப்போதாவது தம்மைப் பார்க்க வருவதாகவும் தெரியவந்துள்ளது.
வீட்டின் படுக்கையில் கைகளையும் கால்களையும் கட்டி ஏதோ ஒரு வழியில் கொல்லப்பட்டிருக்க வேண்டும் எனவும் உடலில் வெட்டுக்களோ அல்லது வேறு காயங்களோ காணப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வயோதிப பெண்ணிடம் அதிக அளவில் பணம் இருந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று பிற்பகல் 3 மணியளவில் வயோதிப பெண்ணின் உறவினர்கள் இருவர் வீட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும், அந்த வயோதிப பெண் தங்கியிருந்த வீட்டின் முன் கதவு திறந்திருந்த நிலையில் அவரை தேடியுள்ளனர். பின்னர், வீட்டுக்குள் சென்று படுக்கை அறையில் பார்த்த போது அந்த வயோதிப பெண் இரண்டு கைகளும் கட்டப்பட்ட நிலையில் கட்டிலில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, சம்பவம் பற்றி அந்த வயோதிப பெண்ணின் மகளுக்கு அறிவிக்கப்பட்டதுடன், இதுதொடர்பில் பொலிஸ் அவசர பிரிவினருக்கும், மதுரங்குளி பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த மதுரங்குளி பொலிஸாரும், புத்தளம் பிரிவு பொலிஸ் தடயவியல் பிரிவினரும் இணைந்து ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.
குறித்த வயோதிப பெண் தங்கியிருந்த வீட்டின் மூன்று ஓடுகள் பிரிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறினர். சம்பவம் இடம்பெற்ற இரவு வயோதிப பெண் தனது மகளின் வீட்டுக்கு சென்று மீண்டும் தனது வீட்டுக்கு வரும் முன்னர் சந்தேக நபர்கள் இவ்வாறு வீட்டின் கூரையை பிரித்துக் கொண்டு உள்ளே பதுங்கி இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அதோடு பொலிஸ் மோப்ப நாயும் அழைத்துவரப்பட்டு பெண் தங்கியிருந்த வீடு மற்றும் வளவு என்பனவும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் ஏ.எம்.சம்சுல் ராபி, சடலத்தை பார்வையிட்டு, சம்பவ இடத்தில் நீதிவான் விசாரணையை முன்னெடுத்ததுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வயோதிப பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நல்லாந்தளுவ பகுதியில் பெரும் பரபரப்பையும் மக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அனுராதபுரம் – ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்தியரொருவர் விபரீத முடிவெடுத்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று காலை (12.08) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சடலமாக மீட்கப்பட்டவர் கெப்பித்திக்கொல்லாவ சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றி வரும் 38 வயதுடைய சாமர சதுரங்க எனவும் தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த வைத்தியரின் மனைவி தம்புத்தேகம வைத்தியசாலையில் தாதியராக கடமை ஆற்றி வருகிறார்.
ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரஹேவ பகுதியில் மனைவியின் தாயாரின் வீட்டில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த வைத்தியரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியாவில் இளைஞன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று சனிக்கிழமை (10) மூன்று மோட்டர் சைக்கிள்கள் மீட்கபட்டுள்ளதுடன், ஏழு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த வியாழக்கிழமை அதிகாலை வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவரை காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாடு தொடர்பில் வவுனியா பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இதன்போது சந்தேகத்தின் பேரில் சில இளைஞர்கள் கைது செய்யப்படட்டனர். அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளது.
வவுனியா, பூந்தோட்டம் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த புதன்கிழமை மாலை பூந்தோட்டம் பகுதியில் உள்ள தனது வீட்டில் தனது பிறந்தநாள் நிகழ்வினை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளார்.
அந்த நிகழ்வுக்காக அங்கு உறவினர்கள், நண்பர்கள் என பலர் வந்திருந்தனர். அங்கு வந்த அவரது சில நெருங்கிய நண்பர்கள் மது போதையில் இருந்துள்ளனர்.
இதன்போது, பிறந்தநாள் நிகழ்வினை சிறப்பிப்பதற்காக நண்பர்கள், இளைஞர் குழுக்களாக பாட்டுப்பாடி நடனம் ஆடினார்கள்.
இந்த நேரத்தில் மதுபோதையில் இருந்த நெருங்கிய நண்பர்கள் பிறந்தநாள் நிகழ்வுக்காக வந்த பெண் நண்பிகளுடன் சேர்ந்து நடனமாட முற்பட்ட வேலை பிறந்தநாள் கொண்டாடிய நண்பன் அதனை அனுமதிக்காது தடுத்துள்ளார்.
இதனால் நெருங்கிய நண்பர்கள் மற்றும் இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை அங்கு இருந்த உறவினர்கள் சமரசம் செய்து வைத்துள்ளனர்.
அதன் பின்னர் வியாழக்கிழமை அதிகாலை 1 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் குழு ஒன்று பிறந்தநாள் கொண்டாடிய இளைஞனை கடத்தி சென்று குட்செட் வீதியில் உள்ள கருமாரி அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள பாழடைந்த வீட்டில் இளைஞனை அடைத்து வைத்து கடுமையாக கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பாழடைந்த வீட்டில் இளைஞனை அடைத்து வைத்து விட்டு கடத்தியவர்கள் தப்பி சென்ற நிலையில், கடத்தப்பட்ட இளைஞனை மீட்டு அவரை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பாெலிஸார் அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் 20 வயது தொடக்கம் 22 வயது வரையுள்ள 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் பட்டைகாடு பகுதியைச் சேர்ந்த 3 பேரும், வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த 2 பேரும் கோயில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த ஒருவருவரும் உள்ளடங்கியுள்ளனர்.
அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று மோட்டர் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களையும் கைது செய்யப்பட்ட இளைஞர்களையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை நகரில் உள்ள கடற்கரையில் இலட்சக்கணக்கான சிறு சிகப்பு நிறத்திலான நண்டுகள் இறந்த நிலையில் கரையொதுங்கி உள்ளன. இன்று (10) அதிகாலை முதல் நண்டுகள் இவ்வாறு இறந்து கரையுங்குவதாக கூறப்படுகின்றது.
சுமார் ஐந்து தொடக்கம் ஆறு கிலோமீட்டர் நீளமுள்ள இந்த கடற்கரையில் மூன்று தொடக்கம் 4 கிலோ மீட்டர் தூரம் வரை நண்டுகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளன.
அதேவேளை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இப்பிரதேசத்துக்கு கூடுதலான சுற்றுலா பயணிகள் வருகின்ற நிலையில் இவ்வாறான நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
அவிநாசி அருகே புறவழிச்சாலையில் இன்று (சனிக்கிழமை) காலை இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (48 ). பனியன் தொழிலாளி. இவரது மனைவி லதா (42 ). இவர்கள் இருவரும் அவிநாசி அருகே புதிய திருப்பூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் அவிநாசி புதுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அவிநாசி மங்கலம் சாலை அருகே புறவழிச் சாலையில் சென்றபோது, பின்னால் வந்த கார் அவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சிவகுமார் லதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், இருவரது உடல்களையும் கைப்பற்றி அவிநாசி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து அவிநாசி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் இளைஞன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஏழு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை(08.08.2024) அதிகாலை வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவரை காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடு தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, சந்தேகத்தின் பேரில் சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளது.
வவுனியா, பூந்தோட்டம் பகுதிகளை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த புதன் கிழமை(07) மாலை பூந்தோட்டம் பகுதியில் உள்ள தனது வீட்டில் தனது பிறந்தநாள் நிகழ்வினை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளார்.
அந்த நிகழ்வில் அவரது உறவினர்கள், நண்பர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளதுடன் அங்கு வந்த அவரது சில நெருங்கிய நண்பர்கள் மது போதையில் இருந்துள்ளனர்.
இந்நிலையில், பிறந்தநாள் நிகழ்வினை சிறப்பிப்பதற்காக நண்பர்கள், இளைஞர் குழுக்களாக பாட்டுப்பாடி நடனம் ஆடியுள்ளனர்.
இதேவேளை, மதுபோதையில் இருந்த நெருங்கிய நண்பர்கள் பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்ட பெண் நண்பிகளுடன் சேர்ந்து நடனமாட முற்பட்ட போது பிறந்தநாளை கொண்டாடிய இளைஞன் அதனை அனுமதிக்காது தடுத்துள்ளார்.
இதனால் நெருங்கிய நண்பர்கள் மற்றும் இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளதுடன் அங்கு இருந்த உறவினர்கள் இதனை சமரசம் செய்து வைத்துள்ளனர்.
இதன் பின்னர். வியாழக்கிழமை(08) அதிகாலை 1மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் குழு ஒன்று பிறந்தநாள் கொண்டாடிய இளைஞனை கடத்தி சென்று குட்செட் வீதியில் உள்ள கருமாரி அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள பாழடைந்த வீட்டில் தனிப்பட்ட தகராறு காரணமாக இளைஞனை அடைத்து வைத்து கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸா தெரிவித்துள்ளனர்.
அத்துடன், குறித்த பாழடைந்த வீட்டில் இளைஞனை அடைத்து வைத்து விட்டு கடத்தியவர்கள் தப்பி சென்ற நிலையில், கடத்தப்பட்ட இளைஞனை மீட்டு அவரை வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் 20 வயது தொடக்கம் 22 வயது வரையுள்ள 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதில் பட்டைகாடு பகுதியைச் சேர்ந்த 3 பேரும், வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த 2 பேரும் கோயில்புதுக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவரும் தோணிக்கல் பகுதியை சேர்ந்த ஒருவருவரும் உள்ளடங்கியுள்ளனர்.
மேலும், சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று மோட்டர் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளதுடன் சான்று பொருட்களுடன் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் பல நூறு வருட காலமாக சோழர் கால தாலி திருட்டுபோயுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போர்த்துக்கேயர் காலத்தில் கோயில் உடைக்கப்பட்ட போது சைவ சமயத்தினாரால் பல உயிர் தியாகங்கள் செய்யப்பட்டு காப்பாற்றப்பட்டு பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டிருந்த குறித்த தாலி நிலையில் கடந்த வாரம் தாலி திருட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து பொது மக்கள் குரலெழுப்ப தொடங்கியுள்ளனர். கோயில் நிர்வாகத்தினர் இவ்விடயத்தை அமைதிப்படுத்தி பொதுமக்களை சமாதானம் செய்ய முயன்றுள்ளனர்.
பல நூறு கோடி பெறுமதியான ரத்தினங்கள், வைடூரியங்கள் பொதிக்கப்பட்ட 5 பவுண் தாலி பல பூஜைகள் செய்யப்பட்டு சக்திவாய்ந்ததாக இருந்தது எனவும் இதை எவராலும் ஈடு செய்ய முடியாது எனவும் பொது மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறு அம்மன் கழுத்தில் இருந்த தாலி திருட்டு போய் சிவனின் சக்தியை செயலிழக்க செய்யப்பட்ட சதியா ? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இது குறித்து பொறுப்பு கூறவேண்டிய தரப்பினரின் இதுவரை பொலிஸ் முறைப்பாடு கூட செய்யவில்லை என தெரியவந்துள்ளது.
அதேபோல் சோழர் காலத்தில் செய்யப்பட்ட பல நூறு கோடி மதிப்புடைய 16 பவுன் வைரம், வைடூரியம் பொதிக்கப்பட்ட தங்க நகைகளும் கடந்த காலத்தில் திருட்டு போயுள்ளது.
இந்நிலையில் இவ்விடயம் குறித்து மாவட்ட செயலாளர், அரசங்க அதிபர் என சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு பொதுமக்களால் கொண்டு செல்லப்பட்டுள்ள்ளது.
பொலிஸாருக்கும் பொதுமக்களால் முறைப்பாடு அளிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணை தீவிரமாக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விடயம் குறித்து ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து இவ்விடயம் தொடர்பாக கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில், ஆளுநர் இந்த தாலியை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மேலும், தாலி திருட்டு போயவுள்ள சம்பவம் குறித்து ஆன்மீக வாதிகளார் அச்சம் தெரிவித்தனர்.
இந்நிலையில், போர்த்துக்கேயரிடம் இருந்து பாதுகாக்கப்பட்ட தாலி தமிழர்களால் திருடப்படுவதற்கா ? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் பளபளப்பை வெடிக்கச் செய்வதன் மூலம் அதை வெப்பமாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு நீராக உள்ளது.
600,000 ஆண்டுகளுக்கு முன்பு நீரோடைகள் கிரகத்தைச் சுற்றி பாய்ந்திருக்கலாம், ஆனால் தற்போது அது வசிக்க முடியாத அளவுக்கு குளிர்ச்சியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல ஆண்டுகளாக, விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தை வெப்பமாக்குவது எப்படி என்று ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால் முன்மொழியப்பட்ட தொழில்நுட்பங்கள் விலை உயர்ந்தவை மற்றும் செயல்படுத்த கடினமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்போது, சிகாகோ பல்கலைக்கழகம், இல்லினாய்ஸில் உள்ள வடமேற்கு பல்கலைக்கழகம் மற்றும் மத்திய புளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள்,
கிரகத்தின் மேற்பரப்பில் இருக்கும் இரும்பு மற்றும் அலுமினியத்தால் செய்யப்பட்ட பொறிக்கப்பட்ட துகள்களைப் பயன்படுத்தி ஒளியைப் பிரதிபலிக்கவும், தப்பிக்கும் வெப்பத்தை சிக்க வைக்கவும் முடியும் என்று கூறுகிறார்கள்.
பூமியில் மனிதர்கள் தற்செயலாகப் பயன்படுத்திய அதே செயல்முறைதான் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் குறைந்த வசதிகளுடன் வாய் பேச முடியாத செவித்திறன் அற்ற விசேட தேவையுடைய மக்கள் வாழும் கிராமம் ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்லது.
இந்த அதிசய கிராமம் இலங்கையின் அனுராதபுரத்தில் , திரப்பனய பிரதேச செயலகப் பிரிவில் அனுராதபுரம், இல. 553 மிவெல்லேவ கிராம சேவை பிரிவில் அமைந்துள்ளது.
தினிப்பிட்டிகம என்றழைக்கப்படும் இக் கிராமத்தில் கிட்டத்தட்ட 20 குடும்பங்கள் வசித்து வருகின்றன, இதில் 15 குடும்பங்கள் பிறக்கும்போதே வாய் பேச முடியாத மற்றும் செவித்திறன் அற்ற விசேட தேவையுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அத்தியாவசிய அடிப்படைத் தேவைகள் இன்றி சிரமங்களுக்கு மத்தியில் வசிக்கும் இவர்களின் கிராமத்திற்குள் செல்ல சரியான வீதி இல்லாத பின்னணியில், வெளியூர்களில் இருந்து வரும் லொரிகளில் குடிநீரை அக்கிராமவாசிகள் பெறுகின்றனர்.
இங்குள்ள பெரும்பாலான வீடுகள் களிமண் அல்லது தகர கூரைகளால் கட்டப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகும் இக்கிராமத்தில் வசிப்பவர்கள் கூலித்தொழில், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி என்பன இவர்களின் தொழிலாக உள்ளது.
அதேவேளை குறைந்த வசதிகளின் கீழ் வசிப்பவர்களுக்கு விசேட தேவையுடையவர்களுக்கு உதவித்தொகையாக 5,000 ரூபாய் அரசாங்கத்திடம் இருந்து பெற உரிமை உண்டு.
எனினும் அடிப்படை தேவைகளுக்கு , அந்தத் தொகை போதாததால், கூலி வேலை தேடிச் சென்றாலும், விசேட தேவையுடைய இவர்களுக்கு கூலி வேலைகளும் கிடைப்பதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அவ்வப்போது கூலி வேலை செய்து சம்பாதிக்கும் சொற்பத் தொகை, வாழ்க்கை நடத்தவோ, குழந்தைகளின் கல்வியைத் தொடரவோ போதாது என்கின்றனர் கிராமவாசிகள்.
இக்கிராமத்தில் குளிப்பதற்கு அன்றாட நீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஏரி உள்ள போதிலும் அதுவும் வறண்டு காணப்படுவதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கோடீஸ்வரர் ஒருவரால், இக்கிராமத்திற்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது அதன் மோட்டார் பழுதடைந்து, தண்ணீர் வடிகட்டியும் பழுதடைந்துள்ளதாகவும், கிராம மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.