கொழும்பில் இளம் ஆசிரியை எடுத்த விபரீத முடிவு : விசாரணை தீவிரம்!!

கொழும்பு ஹோமாகம, கொடகம பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை ஆசிரியை ஒருவர் தனது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள நிலையில் அது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

சம்பவத்தில், கொடகம பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதான ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார் உயிரிழந்த ஆசிரியை சம்பவத்தன்று தனது பிள்ளையை தனது கணவருடன் பாடசாலைக்கு அனுப்பிவிட்டு உயிர்மாய்த்தாக கூறப்படுகின்றது.

வர்த்தகரான தந்தை திடீரென வீட்டுக்கு வந்த போது தூக்கில் தொங்கிய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி, மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் ஆசிரியரின் விபரீத முடிவிற்கான காரணமான தகவல்கள் எதுவும் வெளியாகாததால், முழுமையான பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சகல விடயங்களையும் பரிசீலித்து ஆசியையின் மரணம் தொடர்பில் திறந்த தீர்ப்பை வழங்குமாறு தென் கொழும்பு போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி சமாதான நீதவான் பரிந்த கொட்டுகொட உத்தரவிட்டுள்ளார்.

 

யாழில் வங்கிக் கணக்கில் இருந்த 65 இலட்சம் ரூபா மாயம் : பொலிஸ் விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள்!!

யாழ்ப்பாணத்தில் வங்கிக் கணக்கில் இருந்த 65 இலட்சம் ரூபாவை கையாடல் செய்த குற்றச்சாட்டில் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவ தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

பணத்தை இழந்தவர் யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய பெண் உட்பட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் என்று சமூக வலைத்தளத்தில் விளம்பரத்தை பார்த்து யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த ஒருவர் அதில் குறிப்பிடப்பட்டிருந்த உள்நாட்டு மற்றும் பிரிட்டன் தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொண்டுள்ளார்.

அந்தத் தொலைபேசி இலக்கங்களில் பேசியவர்கள், வங்கிக் கணக்கில் ஒரு தொகைப் பணத்தை வைப்பிடவேண்டும் என்றும், சில ஆவணங்களைத் தங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

அவர்களை நம்பி, தனது கடவுச்சீட்டு பிரதிகள், அடையாள அட்டைப் பிரதிகள் உட்பட பல ஆவணங்களை குறிப்பிடப்பட்ட கொழும்பு விலாசம் ஒன்றுக்கு அனுப்பியுள்ளார்.

அதோடு அவர்கள் குறிப்பிட்ட தொகையை தனது வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டு, வங்கிச் செயலியில் கணக்குமீதியை ஸ்கீரின் சொட் எடுத்தும் அனுப்பியுள்ளார்.

இந்தநிலையில் கடந்த 27ஆம் திகதி குருநகரைச் சேர்ந்தவரது கைபேசி இலக்கம் செயலிழந்துள்ளது. இதனையடுத்து சிலநாள்களின் பின்னர் வங்கிக்குச் சென்று தனது கணக்கு மீதியைச் சரிபார்த்தபோது, அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அவரது வங்கிக் கணக்கில் இருந்த 65 லட்சம் ரூபாவும் காணாமல் போயிருந்த நிலையில், யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் அது தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான பொலிஸ் குழு இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்தது.

அந்த விசாரணைகளின் அடிப்படையில் பெண் ஒருவர் உட்பட இருவர் யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. குருநகரைச் சேர்ந்த நபரிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்களைக் கொண்டும், அவரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டும் லாவகமான முறையில் வங்கிக் கணக்கில் இருந்த பணம் வேறொரு வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதோடு குருநகரைச் சேர்ந்தவரின் கைபேசி இலக்கத்தைச் செயலிழக்கச் செய்து, அவரிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்களைக் கொண்டு ஈ-சிம் ஒன்று சந்தேகநபர்களால் பெறப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண்ணே கைபேசி நிறுவனத்துக்குச் சென்று உரையாடி, அந்த இலக்கத்துக்குரியவர் தற்போது தாய்லாந்தில் உள்ளார் என்று தெரிவித்து, தாய்லாந்து தொலைபேசி இலக்கத்தில் ஒருவரை உரையாட வைத்து ஈ-சிம்மைப் பெற்றுள்ளார்.

அதனால் பணப்பரிமாற்றம் தொடர்பான குறுந்தகவல்கள் உரியவருக்குக் கிடைப்பது தடுக்கப்பட்டுள்ளது.

தாம் சேகரித்த ஆவணவங்கள் தகவல்கள் என்பவற்றைக் கொண்டு, குருநகரைச் சேர்ந்தவரின் வங்கிக் கணக்குக்குள் செயலி ஊடாக நுழைந்த சந்தேநபர்கள், தற்போது கைது செய்யப்பட்ட பெண்ணின் வங்கிக் கணக்குக்கே முதலில் பணம் மாற்றப்பட்டுள்ளது.

அதன்பின்னர் மற்றொருவரின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த நபர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் ஐ.டி. துறையில் பணியாற்றுபவர் என கூறப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஏ ஆனந்தராஜா முன்னிலையில் முற்படுத்தப்பட்டு, எதிர்வரும் 20 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வெளிநாட்டிலிருந்து ஆபத்தான நிலையில் இலங்கை வந்த பெண்!!

குவைட்டிலிருந்து ஆபத்தான நிலையில் பெண் ஒருவர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் குறித்த பெண் குவைட்டில் வீட்டு வேலைக்காக சென்ற நிலையில் திடீரென நோய்வாய்ப்பட்டு ஆபத்தான நிலையில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தம்புள்ளை – ஹம்பஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு நாடு திரும்பியுள்ளார்.

இவர் தற்போது தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், கந்தளாய் ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்படவுள்ளதாகவும் அவரது உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

விதிமீறல் குற்றச்சாட்டு : இலங்கை வீரர் தகுதி நீக்கம்!!

பிரான்ஸில் நடைபெற்றுவரும் பரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் விதிமீறல் குற்றச்சாட்டில் இலங்கை வீரர் அருண தர்ஷன தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

2ஆவது அரை இறுதிப் போட்டியில் பங்குபற்றிய அவர், போட்டியை 44.75 செக்கன்களில் ஓடி முடித்து 5ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

எனினும், மூன்று அரை இறுதிப் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் அருண தர்ஷன TR 17.2.3 என்ற தடகள விதியை மீறும் வகையில் மற்றைய தடத்தில் கால் பதித்துள்ளார்.

இதன் காரணமாக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன்படி மூன்று அரை இறுதிப் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற 6 வீரர்களும் அடுத்த அதிசிறந்த நேரங்களைப் பதிவுசெய்த இருவருமாக 8 வீரர்கள் இறுதிப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றுள்ளனர்.

முதலாவது அரை இறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் குவின்சி ஹோல் (43.95 செக்.), ட்ரினிடாட் அண்ட் டுபாகோ வீரர் ஜெரீம் ரிச்சர்ட்ஸ் (44.33 செக்.) ஆகியோரும், 2ஆவது அரை இறுதிப் போட்டியில் க்ரெனெடா வீரர் கிரானி ஜேம்ஸ் (43.78 செக்), ஸம்பியா வீரர் முஸாலாக சாமுகொங்கா (43.81 செக்.) ஆகியோரும், கடைசி தகுதிகாண் போட்டியில் பிரித்தானிய வீரர் மெத்யூ ஹட்சன் – ஸ்மித் (44.07 செக்.), அமெரிக்க வீரர் மைக்கல் நோர்மன் (44.26 செக்.) ஆகியோர் இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதிபெற்றனர்.

அவர்களுடன் ஒட்டுமொத்த நிலையில் அடுத்த அதிசிறந்த நேரப் பெறுதிகளைப் பதிவுசெய்த அமெரிக்க வீரர் கிறிஸ்டோபர் பெய்லி (44.31 செக்.), நைஜீரிய வீரர் சாமுவேல் ஒகாஸி (44.41 செக்.) ஆகியோரும் இறுதிப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றனர்.

 

பரீட்சை பெறுபேறுக்காக காத்திருந்த மாணவி எடுத்த விபரீத முடிவு!!

17 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார். சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளுக்காக காத்திருந்த ரக்வானை – அலவத்தன்ன பிரதேசத்தைச் சேர்ந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஐந்து பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இவர் இரண்டாவது பி்ள்ளை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,

மாணவி இறப்பதற்கு சற்றுமுன்னர், கைகளை வெட்டி, இரத்தத்தினால் கடிதமொன்றினை எழுதி இளைஞரொருவருக்கு அனுப்பியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த மாணவி அவர் வசிக்கும் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் காதல் உறவில் இருந்துள்ளார். உறவை நிறுத்துமாறு பெற்றோர் பலமுறை எச்சரித்துள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்த மாணவியின் பிரேதப் பரிசோதனை கஹவத்தை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்தியர் முன்னிலையில் இடம்பெற்றுள்ளதுடன், சாட்சியங்களின் அடிப்படையில் இந்த மரணம் தற்கொலை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த மாணவியின் இறுதிக் கிரியைகள் இன்று (07) அலவத்தன்ன பொது மயானத்தில் நடைபெறவுள்ளன.

 

பாடசாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவுப் பொதியில் காத்திருந்த அதிர்ச்சி!!

கொழும்பு – ஜா எல கல்வி வலயத்திற்குட்பட்ட ஜா எல நகர எல்லையில் இயங்கும் தேசிய பாடசாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவுப் பொதியில் புழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நேற்று(06.08.2024) இடம்பெற்றுள்ளது.

தரம் 1 முதல் தரம் 5 வரை அரசாங்கத்தின் அனுசரணையுடன் இலவசமாக வழங்கப்பட்ட உணவுப் பொதியில் இருந்த மீன் குழம்பிலேயே புழுக்கள் இருந்ததாக பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த தேசிய பாடசாலையில் 3ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் நேற்று (06.08) பாடசாலையில் வழங்கப்பட்ட உணவுப் பொதியை உண்ணாமல் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில், வீட்டில் உணவுப் பொதியை திறந்து பார்த்தபோது, ​​அதிலிருந்த மீன் குழம்பில் புழுக்கள் இருந்ததை அவதானித்த பெற்றோர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட பாடசாலை நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபரிடம் வினவியபோது, ​​சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

நாட்டில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்பு : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் மி.மீ. 50க்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மன்னார் வைத்தியசாலைக்கு வெளிநாட்டில் இருந்து கொலை அச்சுறுத்தல்!!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒரு பிள்ளையின் தாயான பட்டதாரியான இளம் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக வைத்திய சாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மனார் வைத்தியசாலையில் சிசு பிரசவித்து சிறிது நாட்களில் அதிக ரத்தப்போக்கு காரணமாக சிகிச்சைக்காக அனுமத்திக்கப்பட்டிருந்த இளம் தாய் உயிரிழந்தமை தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டிருந்ததை அடுத்து, சம்பவம் தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்பட்ட சுயாதீன விசாரணை குழுவின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவ தினத்தின் போது சிலர் தவறிழைத்துள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் – தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இளம் தாய் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 28 ஆம் திகதி உயிரிழந்தார்.

சம்பவத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த மரியராஜ் சிந்துஜா வயது (27) என்பவரே உயிரிழந்தவராவார். குறித்த பெண்ணின் மரணத்திற்கு சம்பவ தினம் விடுதியில் இருந்தவர்களின் அசமந்த போக்கே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டது.

குறித்த மரணம் தொடர்பாக வடமாகாண சுகாதார அமைச்சினால் சுயாதீன விசாரணை குழு ஒன்று நியமிக்கப்பட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்து துரித விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதுடன் விசாரணைகளின் அடிப்படையில் சிலர் தவறிழைத்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பாக விசேட அறிக்கை வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு மேலதிக நடவடிக்கைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் மத்திய சுகாதார அமைச்சின் விசாரணைக் குழு ஒன்று மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சின் விசாரணைகள் முடிவடைந்தவுடன் தவறிழைத்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

அதேவேளை பெண்ணின் மரணம் தொடர்பாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து எனது தொலைபேசிக்கு பல்வேறு அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகிறதாகவும் அவர் கூறினார்.

மேலும் அந்த அச்சுறுத்தல் குறித்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா தெரிவித்தார்.

5 வயது மகளுடன் மாயமான தாய் : தேடும் கணவன்!!

மொனராகலை பிபிலமுல்ல பகுதியில் தனது 5 வயது மகளுடன் தாயொருவர் திங்கட்கிழமை (05) காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மனைவி – மகள் காணாமல்போனமை தொடர்பில் கணவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து சம்பவம் தொடர்பில் மெதகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரபாத் திஸாநாயக்க விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நீச்சல் பயிற்சியில் நீரில் மூழ்கி 10 வயதுச் சிறுவன் பரிதாபமாக பலி : தாய் கண் முன் சோகம்!!

கொளத்தூர் பகுதியில் தாய் கண்முன்னே நீச்சல் பயிற்சியின்போது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுதொடர்பாக, நீச்சல் பயிற்சி மைய உரிமையாளர் மற்றும் பயிற்சியாளர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொளத்தூர் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலேக்கர் (38). திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை பூர்வீகமாகக் கொண்ட இவர் தற்போது சென்னையில் குடும்பத்துடன் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராணி.

இவர்களது மகன் கிருத்திக் சபரீஸ்கர் (10). சிறப்பு குழந்தையாக வளர்ந்து வந்த சிறுவனுக்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படி நீச்சல் பயிற்சியும் அளிக்கப்பட்டு வந்தது. இதற்காக கொளத்தூர், அசோகா அவென்யூ பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான நீச்சல் பயிற்சி மையத்தில் சிறுவனுக்கு வாரத்தில் 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில் வழக்கம்போல் சிறுவனின் தந்தையும், தாயும் சிறுவனை அழைத்துக்கொண்டு நீச்சல் பயிற்சி மையத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு சிறுவனை பயிற்சிக்காக விட்டுள்ளனர். சிறுவனின் தந்தை அலுவலக நிமித்தமாக காரில் அமர்ந்தபடி லேப்டாப்பில் வேலை செய்துள்ளார். தாய் ராணி சிறுவனின் அருகில் இருந்து நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் முறையை கவனித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நீச்சல் பயிற்சியாளர் சிறுவனுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் சிறுவன் நீரில் தத்தளித்துக் கொண்டு மூழ்கியபடி இருந்ததைக் கண்டு தாய் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர், எனது மகன் நீரில் மூழ்குகிறான், என்னவென்று பாருங்கள் என பயிற்சியாளரிடம் கூறியுள்ளார். ஆனால், பயிற்சியாளர் பார்ப்பதற்குள் சிறுவன் கிருத்திக் சபரீஸ்கர் நீச்சல் குளத்தில் பேச்சு மூச்சு இல்லாமல் மிதந்தபடி இருந்துள்ளான்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தாய் ராணி, செல்போன் மூலம் தனது கணவரை அழைத்து விவரங்களை கூறியுள்ளார். இதை தொடர்ந்து, சிறுவனை நீச்சல் குளத்தில் இருந்து மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தாய் மற்றும் தந்தை அழுதபடி சம்பந்தப்பட்ட நீச்சல் பயிற்சி மையத்திற்கு வந்து, அங்கிருந்த நீச்சல் பயிற்சி மைய மேலாளர் மற்றும் பயிற்சியாளரிடம் ‘நீச்சல் கற்றுத் தருவதாகக் கூறி எனது மகனை சாகடித்து விட்டீர்களே’ எனக்கூறி அழுதனர்.

இந்த தகவல் கொளத்தூர் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொளத்தூர் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையிலான போலீசார், உயிரிழந்த சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நீச்சல் பயிற்சி மையத்தின் உரிமையாளர் காட்வின் மற்றும் பயிற்சியாளர் அவினேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

2 வயது குழந்தை காருக்குள் மூச்சுத்திணறி பலி… வீடியோ கேமால் விபரீதம்!!

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள நகர்ப்புற பகுதி ஒன்றில், வெளியில் சென்றிருந்த தாய் வீட்டுக்கு வந்து பார்த்த போது காரில் அவரது குழந்தை மூச்சுப் பேச்சின்றி கிடந்துள்ளது. குழந்தைக்கு சிபிஆர் உள்ளிட்ட முதலுதவிகளைச் செய்து பார்த்தும் பயனில்லை.

சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிரேத பரிசோதனையின்படி, குழந்தை 42.7 டிகிரி செல்சியஸ் வெப்பத்தால் உயிரிழந்ததாகத் தெரியவந்தது.

அதன்பின்னரே விசாரணையில், குழந்தையின் தந்தை, வீட்டின் முன் ஹோண்டா SUV காரை பார்க் செய்து அதில் குழந்தையை விட்டுவிட்டு வீட்டுக்குள் பிளே ஸ்டேஷனில் வீடியோ கேமில் மூழ்கியிருந்திருக்கிறார்.

வாகனத்துக்குள் ஏசி ஓடாத நிலையில் சுமார் 3 மணி நேரமாக வெப்பத்தில் துடிதுடித்து குழந்தை உயிரிழந்துள்ளது என்றும் தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து கொலை மற்றும் குழந்தைகள் வன்கொடுமை பிரிவின் கீழ் தந்தை கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எப்போ திருமணம் என தொடர்ந்து நச்சரித்த முதியவர்.. ஆத்திரத்தில் பக்கத்து வீட்டு நபர் செய்த கொடூரம்!!

45 வயதான சிரேகர் என்பவர் இந்தோனேசியாவில் வசித்து வருகிறார். அசிம் இரியாண்டோ என்ற 60 வயது முதியவர் தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்தார். இவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.

அசிம் பக்கத்து வீட்டுக்காரரான சிரேகரை பார்க்கும் போதெல்லாம், “எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறாய்?” என்று கேட்பது வழக்கம். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிரேகர் கடந்த ஜூலை 29ம் தேதி முதியவர் வீட்டிற்குள் நுழைந்து கட்டையால் அடித்துக் கொன்றார்.

இந்த சம்பவம் குறித்து உயிரிழந்த ஆசிமின் மனைவி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சிரேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்தபோது, ​​”திருமணம் குறித்து தொடர்ந்து கேள்வி கேட்டு கேலி செய்ததால் நான் மனதளவில் பாதிக்கப்பட்டேன். அதனால் தான் அவரை கொன்றேன்” என்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருமணத்திற்கு முன் மணமகனின் வலிமையை சோதிக்கும் மணமகளின் தாய்… ஆபிரிக்க பழங்குடியினரின் விசித்திரமான வழக்கம்!!

ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள இந்த கலாச்சாரம் பற்றி உங்களுக்கு தெரியுமா? செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் அளவுக்கு மனிதன் தற்போது முன்னேறிவிட்டான். இவ்வளவு தொழில்நுட்ப வளர்ச்சி இருந்தும், இன்னும் சில பகுதிகளில் மூடநம்பிக்கைகள் நிலவுகின்றன.

சில பழங்குடியினர் விசித்திரமான சடங்குகளைப் பின்பற்றுகிறார்கள். ஆப்பிரிக்காவில் சில பின்தங்கிய நாடுகளின் பழங்குடியினரிடம் விசித்திரமான பழக்கவழக்கங்கள் இன்னும் நடைமுறையில் உள்ளன.

இதேபோன்ற ஒரு விசித்திரமான வழக்கம் இப்போது இணையத்தில் விவாதிக்கப்படுகிறது. அந்த விசித்திரமான வழக்கம் என்ன என்று பார்ப்போம்.

உகாண்டாவில் உள்ள பன்யன்கோல் (Banyankole) பழங்குடியினரிடையே இந்த விசித்திரமான வழக்கம் உள்ளது.

அந்த வழக்கப்படி திருமணத்திற்கு முன் மணமகன் தனது பாலியல் திறனை நிரூபிக்க வேண்டும். ஆம் இது விசித்திரமாகத் தோன்றினாலும் உண்மைதான்.

மேலும், மணமகனின் பாலியல் திறனை யார் சோதிக்கிறார்கள் என்பதை அறிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள். ஏனெனில் மணமகளின் தாயே மணமகனின் பாலியல் திறனை சோதிக்கிறார்.

பன்யன்கோல் பழங்குடியினரில், சிறுமிகளுக்கு 8 அல்லது 9 வயது இருக்கும் போது திருமணம் செய்து வைக்கப்படுகிறது.

ஆனால் அந்த பெண்ணின் தாயார் தனது மகளுக்கு பொருத்தமான பையனை காதல் ரீதியாக கண்டுபிடிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். அதற்காக தன் பெண்ணைக் கொடுக்க விரும்பும் பையனின் பாலியல் திறனை அவளே சோதிக்கிறாள்.

மணப்பெண்ணுக்கு தாய் இல்லையென்றால், அந்தத் தாயின் மூத்த சகோதரியோ, தங்கையோ அந்தப் பொறுப்பை ஏற்பார்கள். அவர்கள் இல்லை என்றால், மணமகளின் மூத்த சகோதரி வேலை செய்வார்.

பாலியல் திறன் சோதனையில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவருக்கு மணமகள் வழங்கப்பட்டு திருமணம் செய்து வைக்கப்படும். இல்லையெனில் திருமணம் ரத்து செய்யப்படும்.

மணமகனின் பாலியல் திறனை சோதித்த பெண் மணமகளுக்கு அவனது பலம் மற்றும் பலவீனத்தை விளக்குகிறார். மேலும், முதலிரவில் அவளும் அந்த இளம்பெண்ணுடன் அறைக்குள் செல்கிறாள்.

புதுமணத் தம்பதிகளை இரவு முழுவதும் பின்தொடர்ந்து, அவர்களின் முதல் இரவை வெற்றியடையச் செய்ய ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்குகிறார்.

அந்த பழங்குடியின மக்கள் இன்றும் இந்த வழக்கத்தை பின்பற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

குடும்பத்திற்கு சம்பாதிப்பதற்காக வெளிநாடு சென்ற இளைஞர்.. திரும்பி வந்து பார்க்கையில் ஒருவர் கூட உயிருடன் இல்லை!!

வெளிநாடு சென்று திரும்பிவிட்டு கிராமத்திற்கு திரும்பிய இளைஞர், குடும்பத்தில் ஒருவர் கூட உயிருடன் இல்லை என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்னிக்கை 500யை தாண்ட கூடும் என்று கேரள வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நௌஃபல் என்று இளைஞர் ஒருவர் தன்னுடைய குடும்பத்தினர் அனைவரையும் இழந்து தனியாளாய் நிற்கிறார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் தன்னுடைய கிராமமான முண்டக்கையில் இருந்து ஓமன் சென்றுள்ளார்.

இவர், தனது குடும்பத்திற்கு பணம் சம்பாதிப்பதற்காக வெளிநாடு சென்ற நிலையில், திரும்பி வந்து பார்க்கும் போது குடும்பத்தில் உள்ள ஒருவர் கூட உயிருடன் இல்லை.

இந்த நிலச்சரிவில் தந்தை, தாய், மனைவி, குழந்தைகள், சகோதரன், மைத்துனர் மற்றும் அவர்களது குழந்தைகள் என 11 பேரையும் இழந்து நிற்கிறார்.

மூன்று மாதங்களுக்கு பிறகு வந்து பார்க்கையில் வீடு இருந்த பகுதியில் வெறும் மணல் குவியல்தான் இருக்கிறது. வெளிநாட்டிற்கு செல்லும் போது அவர்களை பார்ப்பது தான் கடைசி என்று நினைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட பிரபல நடிகரின் மனைவி!!

பிரபல நடிகரும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான ஒருவரின் மனைவி என கூறிக்கொண்ட பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் இந்தியாவில் இருந்து இலங்கை வந்த போது குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அவருக்கு விமானப் பயணத் தடை விதித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

37 வயதான குறித்த பெண், தன்னை வைத்தியர் என கூறிக்கொள்வதாகவும், இவர் குருநாகல் பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவித்துள்ளார்.

நேற்று, இந்தியாவின் புதுடில்லியில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-192 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பெண் விமான நிலைய பொலிஸாரால் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

மனைவியை மிரட்டுவதற்காக தந்தை செய்த மோசமான செயல்!!

சமூக வலைதளங்களில் தனது இளம் மகளை தகாத வார்த்தைகளில் திட்டி தன்னை விட்டு பிரிந்த மனைவியை அழைத்து வர முயன்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று பிற்பகல் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் தனது 6 வயது மகளை அருகில் வைத்துக்கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், குடும்பத் தகராறு காரணமாக, 2 மாதங்களாக வீட்டை விட்டுப் பிரிந்திருந்த மனைவியை கொன்றுவிடுவதாக வீடியோவில் மிரட்டியுள்ளார்.

மிரட்டும் வீடியோவையம் தனது டிக்டாக் கணக்கில் வெளியிட்டுள்ளார். தனது மனைவி எந்த நேரத்திலாவது இந்த வீடியோவை பார்ப்பார் என்ற எண்ணத்தில் வீடியோக்களை வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட நபர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த சந்தேக நபர் தம்புத்தேகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார், அவர் மல்வனேகம – எல்லாவ கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான ஜயக்கொடி ஆராச்சிலகே சமன் கருணாரத்ன என்ற இளைஞரே ஆவார்.

கடந்த மே மாதம் 24ஆம் திகதி குடும்பத் தகராறு காரணமாக சந்தேக நபரின் மனைவி கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

மனைவி இல்லாத காரணத்தால், இந்த சந்தேக நபர் தனது மகளுடன் வீடியோ எடுத்ததுடன், மனைவியையும் குழந்தையையும் கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது. சிறுமியின் தாய் தன்னையும் மகளையும் கைவிட்டுச் சென்றதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் இதற்கு முன்னர் முறைப்பாடு செய்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை தம்புத்தேகம தலைமையக பொலிஸ் பரிசோதகர் சாகர லியனகே அவர்களின் பணிப்புரையின் பேரில் சிறுவர் மற்றும் மகளிர் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.