அதிகரிக்கப்பட்ட பஸ் கட்டண அறிவிப்பு இன்று..!

பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் இன்று பஸ் சங்க உறுப்பினர்களுக்கிடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தனியார் பஸ் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து பஸ் கண்டன அதிகரிப்பு நடைமுறைக்கு வரவுள்ளது.

இவ் பஸ்கட்டண அதிகரிப்பு தொடர்பில் கடந்த சில நாட்களாக பஸ் சங்க உறுப்பினர்கள் மற்றும் போக்குவரத்துச் சபைக்கு இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

நேற்று இவ் விடயம் தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜயரட்ன தெரிவித்தார்.

எனினும் இதன்போதும் கட்டண அதிகரிப்பு தொடர்பில் தீர்மானம் எட்டப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

அதிகரிக்கப்பட்ட பஸ் கட்டண அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதவி விலகினார் அவுஸ்திரேலிய பிரதமர் – புதிய பிரதமர் கெவின் பூட்

அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிலாட் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இன்று இடம்பெற்ற தொழிற்கட்சி தலைவர் தெரிவு தேர்தலில் ஜூலியா கிலாட் 45 வாக்குகளையும் அவரை எதிர்த்து போட்டியிட்ட கெவின் பூட் 57 வாக்குகளையும் பெற்றனர்.

இதனால் 12 வாக்குகளால் வித்தியாசத்தில் ஜூலியா கிலாட் தோல்வியடைந்தார். கட்சி தலைவர் தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து தான் அரசியலில் இருந்து விலகப்போவதாக ஜூலியா கிலாட் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக கெவின் பூட் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

ஜூலியா கிலாட் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்தமையைத் தொடர்ந்து அப் பதவியை கெவின் பூட் பொறுப் பேற்றுக் கொண்டுள்ளார்.

வவுனியா மாவட்ட சிறுவர் மேம்பாட்டு அதிகாரியால் மீட்கப்பட்ட சிறுவன் உறவினர்களிடம் ஒப்படைப்பு..!

siruvan

வவுனியா பூங்கா வீதியில் சுமார் நான்கு வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தனியாக திரிவது இனங்காணப்பட்டு வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரியிடம் பொது மக்களால் ஒப்படைக்கப்பட்டது.

இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட சிறுவன் நேற்று மாலை (26) அவனது சகோதரியிடம் ஒப்படைக்கப்பட்டதாக சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி எஸ்.ஜெயக்கெனடி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த சிறுவனின் தந்தை இறந்துவிட்டார். தாய் வேறு ஒரு வேலை நிமிர்த்தம் கொழும்பு சென்றுள்ளார்.

நாய் பிரியம் கொண்ட குறித்த மூன்று வயது சிறுவன் தனது சகோதரியுடன் இருந்த போது, நாய் ஒன்றை திரத்தி கொண்டு சென்றுள்ள நிலையிலேயே வீட்டிற்கு செல்ல வழி தெரியாது வீதியில் நின்று அல்லல் பட்டுள்ளான்.

இந் நிலையிலேயே மீட்கப்பட்ட சிறுவனை தேடியலைந்த உறவினரை இனங்கண்டு குறித்த சிறுவன் ஒப்படைக்கப் பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை இச்செய்தியினை உடன் பிரசுரித்து உதவிய அனைத்து ஊடகங்களுக்கும், முகநூல் பாவனையாளர்களுக்கும் தமது நன்றியையும் தெரிவித்தார்.

– See more at: http://www.athirady.com/tamil-news/news/249654.html#sthash.0yd3EUpa.dpuf

துருப்பிடித்த காதல்..

நீ வாழ்வின்
வாசலில்
நுழையும் போது
நான்
மரணத்தின் பிடியில்
தள்ளப்படுவேன்..

உன்
உபசரிப்பு வைப்பகத்தில்
நான்
ஏகாந்தத்தில் நுழைந்து
துருப்பிடித்த என்
இதயத்தில் காதல்
சிலையொன்றை
நிறுவி பூசிப்பேன்..

காதலை திராட்சை
மதுவைப்போல்
குடிப்பேன்..

அது என்னை
பாலைவனத்திற்கு
அழைத்துசென்று
மேகங்கள்
வானில்
நீந்துவதைக்காட்டும்..

இரவு இரத்தில்
காதல்
பட்டுப்போன்ற
உதடுகளால்
ஒரு நீண்ட
ஆழ்ந்த தவிக்கும்
முத்தத்தை என் மீது
பதித்து விட்டு
தன் வலிய கரத்தால்
அறைந்து விடுகிறது..

நீண்ட போரின்
பின்னரான
அமைதி
மண்டையோடுகளையும்
எலும்புகளையும் விட்டு
செல்லவதைப்போல்..

இருந்தும்
துன்ப உயிர்
தனிமையில் ஆறுதல்
கொள்ளவதெல்லாம்
துருப் பிடித்த
காதலில் தான் ..

மித்யா -கானவி.

பாடகரானார் சிவகார்த்திகேயன்..!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் பாடகராக அவதாரம் எடுத்துள்ளாராம் சிவகார்த்திகேயன்.
கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் போன்ற படங்கள் வெற்றி அடைந்ததால் கொலிவுட்டில் சிவகார்த்திகேயனுக்கு மவுசு கூடிவிட்டது.

இதனை தொடர்ந்து நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தரும் படமான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை ராம் ஜாவ் இயக்குகிறார், இவர் ஓகே.ஓகே, பாஸ் என்ற பாஸ்கரண் போன்ற படங்களில் ராஜேஷின் உதவியாளராக பணியாற்றியவர்.

இதில் பஸ் ஸ்டாப் என்ற தெலுங்கு படத்தில் நடித்த ஸ்ரீ திவ்யா நாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில் டி.இமானின் இசையில் இப்படத்தில் பாடலொன்றையும் பாடியுள்ளாராம் சிவகார்த்திகேயன்.

பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து இளைஞரை காதலிக்கிறாரா அசின்?

நியூசிலாந்தில் அசினுக்கு காதலர் இருப்பதாகவும், அவரையே திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அசினின் மார்க்கெட் சரிந்து கிடப்பதால், மும்பையில் இருக்காமல் அடிக்கடி ஊர் சுற்றி கிளம்பி விடுகிறார்.

அதிலும் குறிப்பாக நியூசிலாந்துக்கு தான் அடிக்கடி சென்று வருகிறார்.

அவரது சொந்த ஊர் கேரளா தான், ஏன் அடிக்கடி அங்கு சென்று வருகிறார் என பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் நியூசிலாந்தில் அசினுக்கு காதலர் இருப்பதாகவும், அவரையே விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த திடீர் திருமண செய்தியால் படபடத்து விட்டாராம் அசின்.

எனக்கு பிடித்தமான நாடு நியூசிலாந்து, அதோடு அங்கு உறவினர்களும், நண்பர்களும் நிறைய இருக்கிறார்கள்.

அதனால் அடிக்கடி சென்று வருகிறேன். இதை போய் காதல் கல்யாணம் என்று கதை கட்டி விட்டால் எப்படி? என்று பேட்டி கொடுத்துள்ளார்.

ஆந்திராவில் பிஸியாகும் ஸ்ருதி ஹாசன் !

shruthi-hassan

ஆந்திராவில் பவன் கல்யாணுடன் ஸ்ருதி நடித்த கப்பார் சிங் சூப்பர் டூப்பர் ஹிட்.தெலுங்கு தேசத்து மக்களுக்கு ஸ்ருதியை பிடித்துப்போக, பலுபு, எவடு, ராமய்யா வத்சவய்யா என அம்மணிக்கு அங்கு படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

முதன்முதலாக சினிமாவில் கால்பதித்த “லக்” இந்திப் படம் லக்காக அமையாவிட்டாலும், தற்போது “டி டே” என்ற இந்திப் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், “கப்பார் சிங்” இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். இதிலும் பவன் கல்யாண் தான் ஹீரோ. ஆனால், ஹீரோயினாக நடிக்க காஜலிடம் கேட்டுள்ளனர். அவர் சொன்ன சம்பளத்தைக் கேட்டதும் தயாரிப்பாளருக்கு மயக்கமே வந்துவிட்டதாம்.

பவன் கல்யாண் ஸ்ருதியை சிபாரிசு செய்ய, மறுபடியும் ஸ்ருதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் ஆந்திராவில் பிஸியான நடிகையாகி விட்டார் ஸ்ருதி.

வவுனியாவில் விதவைகள் தினத்தில் கலந்து கொண்ட சென்னை பெண்..!

சர்வதேச விதவைகள் தினத்தை முன்னிட்டு, வவுனியாவில் நடந்த நிகழ்ச்சியில் சென்னை சேர்ந்த பெண் கலந்து கொண்டார். அவரை ராணுவத்தினர் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெண்களுக்கான கிராமிய பொது அமைப்புகளை சேர்ந்த முக்கியஸ்தர்கள் உள்பட 35க்கும் மேற்பட்ட விதவைகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சமூக சேவை பணியாளரின் வேண்டுகோளுக்கிணங்க, பெண்களுக்காகப் பணியாற்றும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் கலந்து கொண்டார்.

இவருடன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணியாக சென்ற எஸ்தர் தேவகுமார் என்ற பெண்ணும் கலந்து கொண்டார். இது பற்றி் தகவல் அறிந்து ராணுவ அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். ஆனால் விதவைகளுக்கான ஆற்றுப்படுத்தல் நிகழ்ச்சி என்பதால் அவர்கள் சென்றுவிட்டனர்.

இருப்பினும், நிகழ்ச்சி முடிந்து எஸ்தர் தேவகுமார் கொழும்புக்குத் திரும்பும்போது ஓமந்தை சோதனைச்சாவடியில் அவரை ராணுவத்தினர் பிடித்து நெடுங்கேணிக்கு அழைத்துச் சென்ற தொண்டு நிறுவனப் பெண்களையும் தடுத்து நிறுத்தி சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

அப்போது, சுற்றுலா பயணியாக வந்த ஒருவர் கருத்தரங்கு போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாது என்று தெரிவித்த ராணுவ அதிகாரிகளிடம், சர்வதேச விதவைகள் தினத்தையொட்டி, அரசு சார்பில் நடத்தப்பட்ட விதவைகளுக்கான ஆற்றுப்படுத்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக அந்த பெண்கள் எடுத்துக் கூறினர்.

எனினும் தங்களுக்கு மேலிடத்தில் இருந்து கிடைத்த உத்தரவு படியே விசாரணை நடத்தியதாகவும், அங்கிருந்து அவர்கள் சென்றுவிட வேண்டும் என்றும் ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சுற்றுலா பயணியாக இலங்கை சென்ற எஸ்தர் தேவகுமார் கடந்த 24ஆம் தேதி சென்னை திரும்பினார்.

-விகடன்-

nedunkeni

‘பரோட்டா’ சூரியின் அலப்பறை!

Parotta-Soori

வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் பரோட்டாவால் வாழ்வு பெற்றவர் காமெடி நடிகர் சூரி. தமிழ் சினிமாவில் இப்போது சந்தானத்தை அடுத்து இவர்தான் டொப் காமெடியன்.

பெரிய ரவுண்டு வருவார் என எல்லாரும் எதிர்பார்க்க, அவர் செய்யும் அலப்பறையே அவரை சீக்கிரம் வீட்டில் உட்காரவைத்துவிடுமோ என அஞ்சுகின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.

உதயநிதி நடிக்கும் கதிர்வேலன் காதல் படத்தில் முதல் பாதி முழுக்க சூரி வருவது போலவும், இரண்டாம் பாதி முழுக்க சந்தானம் வருவது போலவும் கதையாம்.

முதல் பாதியில் மதுரை காட்சிகள் எடுத்தபிறகு திடீரென இரண்டாம் பாதியிலும் நான் தான் இருப்பேன் என அடம் பிடித்துள்ளார் சூரி. சந்தானத்தின் உயிர்த் தோழனான உதயநிதிக்கு இதனால் சூரி மீது செம கடுப்பு. பிறகு சந்தானமே இறங்கி வந்து சமாதானப்படுத்தியிருக்கிறார்.

தில்லுமுல்லு படத்திலும் இப்படித்தான் சந்தானம் சூரியைக் கிண்டல் செய்யும்படி வருகிற காட்சிக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தாராம் சூரி. பின்னர் எப்படியோ அரை மனதோடு ஒப்புக்கொண்டுள்ளார்.

இப்படி அலப்பறை கொடுத்தா ரொம்ப நாளைக்கு இண்டஸ்ட்ரியில இருக்க முடியாதுப்பா என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்.

அவுஸ்திரேலிய அணியின் புதிய பயிற்றுவிப்பாளரானார் டெரன் லீமன்..

leahman
அவுஸ்திரேலியக் கிரிக்கெட் அணியின் புதிய பிரதம பயிற்றுவிப்பாளராக அவ்வணியின் முன்னாள் வீரர் டெரன் லீமன் நியமிக்கப்பட்டுள்ளார். அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்த மிக்கி ஆதரை நேற்று திடீரென அப்பதவியிலிருந்து நீக்கிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை புதிய பயிற்றுவிப்பாளராக லீமனை நியமித்துள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அண்மைக்காலமாக சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தத் தவறி வருவதுடன் ஒழுக்கப்பிரச்சினைகளுக்கும் உள்ளாகிவருகின்றது. இந்நிலையிலேயே மிக்கி ஆதர் நீக்கப்பட்டு புதிய பயிற்றுவிப்பாளராக டெரன் லீமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் உள்ளூர்ப் போட்டிகளிலும், பிறிஸ்பேர்ண் ஹீற் அணியிலும், அவுஸ்திரேலிய “ஏ” அணியிலும் பயிற்றுவிப்பாளராக டெரன் லீமன் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருந்தார்.

இதனையடுத்து லீமனுக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை இந்த் வாய்ப்பை அளித்துள்ளது.

இதனிடையே அணியின் தேர்வாளர்கள் குழுவிலிருந்து அணித்தலைவர் மைக்கல் கிளார்க் விலகியுள்ளார். இந்திய அணியுடனான தொடருக்குப் பின்னர் தன்னை தேர்வுக்குழுவிலிருந்து நீக்குமாறு கிளார்க் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொலைபேசியில் காதல் வலை வீசி பல பெண்களை ஏமாற்றிய காதல் மன்னன் கைது..!

பல பெண்களை கையடக்கத்தொலைபேசி மூலம் ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை பறித்து வந்த நுவரெலியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கல்முனை பஸ் தரிப்பு நிலையத்தில் வைத்து 32 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் ஏ.கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

குறித்த சந்தேகநபர் கையடக்கத் தொலைபேசி ஊடாக பெண்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி காதலித்து திருமணம் செய்வதாக நடித்து பணம், நகை என்பவற்றை அபகரித்து வந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இவரால் ஏமாற்றப்பட்டதாக கூறப்படும் வவுணதீவு நாவற்காட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் மட்டக்களப்புப் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டில், தன்னை திருமணம் செய்துக்கொள்வதற்காக 40 ஆயிரம் ரூபா பணத்துடனும் இரண்டு இலட்சத்து பத்தாயிரம் ரூபா பெறுமதியான நகையுடனும் குறித்த நபர் அழைத்து சென்றார்.

இருவரும் கொழும்பில் சில நாட்கள் தங்கியிருந்தோம். கையிலிருந்த பணம் முழுவதும் செலவழிந்த நிலையில் கொண்டு சென்றிருந்த நகைகளில் ஒரு தங்க சங்கிலியை கொழும்பில் அடகுவைத்தார்.

அதற்கு பின்னர் நுவரெலியாவிற்கு என்னை அழைத்துச் சென்று சில நாட்கள் வைத்திருந்ததுடன் அங்கும் மற்றொரு தங்க சங்கிலியை அடகுவைத்தார்.

இந்நிலையில், திருமணத்திற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக போதியளவு பணம் இன்மையினால் கையிலிருந்த இரண்டு காப்புகளை தருமாறு கேட்டார். அதனையும் கழற்றிகொடுத்தேன்.

வாங்கிச் சென்றவர் பல நாட்களாக திரும்பவேயில்லை அவருடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்தே நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து மட்டக்களப்புக்கு திரும்பினேன் என்றும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்த முறைப்பாடு தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மெவன் சில்வாவின் ஆலோசனையில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.கே.கே.குணசேகரவின் வழிகாட்டலில் தமிழ் பெண் பொலிஸார் ஒருவர் அடங்கலாக பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

மட்டக்களப்பு பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் தமிழ் பெண் பொலிஸ் ஒருவர் குறித்த இளைஞருடைய தொலைபேசி இலக்கத்திற்கு மிஸ் கோள் ஒன்றை விடுத்துள்ளார்.

மிஸ் கோளுக்கு தொடர்பினை ஏற்படுத்திய குறித்த நபர் காதல் மொழிகளை பேசி உன்னை காதலிப்பதாகவும் திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறி கல்முனை பஸ் தரிப்பு நிலையத்திற்கு அந்த பெண்ணை அழைத்துள்ளார்.

அந்த பெண்ணும் பஸ் நிலையத்திற்கு உரியநேரத்திற்கு சென்றுள்ளார். கையடக்கதொலைபேசியுடன் காதலியை வரவேற்பதற்காக ஓடோடிசென்ற இளைஞனை அங்கு சிவில் உடையில் ஏற்கனவே தயாராகவிருந்த பொலிஸார் கைதுசெய்தனர்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் குறித்த சந்தேகநபர் அனுராதபுரத்தில் சிங்களப் பெண்ணொருவரையும் இவ்வாறு ஏமாற்றியமை தெரிய வந்துள்ளதாக தெரிவித்த மட்டக்களப்பு பொலிஸார் மோசடி செய்யப்பட்ட நகைகள் நீதிமன்ற அனுமதியைப் பெற்று மீட்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

வவுனியாவில் நடைபெற்று வரும் வடமாகாண கபடிப் போட்டி முடிவுகள்..!

kabadi

வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணப் பாடசாலைகளின் பெரு விளையாட்டு அணிகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

பெரு விளையாட்டுப்போட்டிகளின் மூன்றாம் கட்டப் போட்டிகள் வருகையில், 15, 19 வயது ஆண்கள் பெண்களுக்கான கபடிப் போட்டிகள் நேற்று செவ்வாய்க்கிழமை வவுனியா நகர சபை மைதானத்தில் நடைபெற்றது.

15 வயதுப்பிரிவு ஆண்கள் போட்டியில் வடமராட்சி கலட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அணி முதலிடத்தைப் பெற்றது. இரண்டாமிடத்தினை இளவாளை சென்.ஹென்றியரசர் கல்லூரி அணியும் மூன்றாமிடத்தினை வவுனியா பரக்குளம் மகா வித்தியாலய அணியும் பெற்றுக்கொண்டன.

15 வயதுப்பிரிவு பெண்கள் போட்டியில் முதலிடத்தினை பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உhய்தரப் பாடசாலை அணி பெற்றுக்கொண்டது. இரண்டாமிடத்தினை கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணியும், மூன்றாமிடத்தினை மன்னார் கருங்கண்டல றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அணியும் பெற்றுக்கொண்டன.

19 வயதுப்பிரிவு ஆண்கள் போட்டியில் வவுனியா பரக்குளம் மகா வித்தியாலய அணி சம்பியனாகியது. இரண்டாமிடத்தினை கிளநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணியும், மூன்றாமிடத்தினை இளவாளை சென்.ஹென்றியரசர் கல்லூரி அணியும் பெற்றுக்கொண்டன.

19 வயதுப்பிரிவு பெண்கள் போட்டியில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலய அணி முதலிடத்தினையும், இரண்டாமிடத்தினை கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணியும், மூன்றாமிடத்தினை பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை அணியும் பெற்றுக்கொண்டன.

வவுனியாவில் குருசேத்திரம்..!

guru

வட மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நாட்டிய பேராசான் கலைஞர் வேல் ஆனந்தனின் நெறியாள்கையில் வவுனியா மாவட்ட ஆடல் அணியினர் வழங்கும் குருசேத்திரம் கீழைத்தேய ஆடற்கதை வியாழக்கிழமை மாலை ஐந்து மணிக்கு வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சி .சத்தியசீலன் தலைமையில் நடை பெறவுள்ளது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி அவர்களும் கௌரவ விருந்தினர்களாக வட மாகாண பிரதம செயலாளர் திருமதி .ர.விஜயலட்சுமி அவர்களும் வவுனியா மாவட்ட செயலாளர் எம்.கே.பந்துல ஹரிச்சந்திர அவர்களும் கலந்து கொள்கின்றனர்.

மீண்டும் இருபதுக்கு -20 உலகக் கிண்ணம் இலங்கையில்??

ICC-World-Twenty20

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இருபதுக்கு -20 உலகக் கிண்ணத் தொடர் மீண்டும் அடுத்த ஆண்டு இலங்கையில் நடைபெற வாய்ப்புக்கள் உள்ளன என எதிர்பார்க்கப் படுகின்றது.

பங்களாதேஷில் மைதானப்புனரமைப்பு பணிகள் மந்தகதியில் நடைபெற்றுவரும் நிலையிலேயே இந்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு ஐ.சி.சி.யின் இருபதுக்கு -20 உலகக் கிண்ணத் தொடர் பங்களாதேஷில் நடைபெறவுள்ளது. அடுத்தாண்டு மார்ச் 16 ஆம் திகதி முதல் ஏப்ரல் 6 ஆம் திகதி வரை தொடர் நடைபெறவுள்ள நிலையில் அங்கு இரு மைதானங்கள் இன்னமும் பூர்த்தியாக்கப்படாமல் காணப்படுவதோடு, அதன் பூர்த்தி மந்தகதியிலேயே இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையிலேயே பங்களாதேஷ் உலகக் கிண்ணத்தொடரை நடத்துவதற்குரிய வாய்ப்பை இழக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாரம் நடைபெறவுள்ள ஐ.சி.சி. வருடாந்தக் கூட்டத்தில் இது தொடர்பாக ஆராயப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே பங்களாதேஷின் உரிமை பறிக்கப்படுமாயின் இலங்கை அல்லது தென்னாபிரிக்காவில் இப்போட்டிகள் இடம்பெற வாய்ப்புக்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்ததாண்டு இருபதுக்கு -20 உலகக் கிண்ணத் தொடர் இலங்கையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

பிரிட்டன் விசா புதிய விதிக்கு கடுமையான எதிர்ப்பு..

UK

இலங்கை உட்பட சில நாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு வருபவர்கள், 4500 ஸ்டேர்லிங் பவுண்கள் ”பாண்ட்” பணமாக கட்ட வேண்டும் என்று பிரிட்டனால் அறிவிக்கப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இப்படியான அறிவித்தலை கடந்த வார இறுதியில் பிரிட்டன் அறிவித்திருந்தது. இந்த நடவடிக்கையை கண்டித்திருந்த நைஜீரியாவின் செனட் சபை, இதற்கு பதிலடியாக தாமும் இப்படியான நிபந்தனையை விதிக்க நேரிடும் என்று கூறியுள்ளது.

இது ஒரு பக்கசார்பான நடவடிக்கை என்று இந்திய தொழில்துறை நிறுவனங்களின் கூட்டமைப்பு கூறியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நைஜீரியா மற்றும் கானா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டனுக்கு வர 6 மாத விசாவைப் பெறவேண்டுமானால் அதற்காக அவர்கள் 4500 ஸ்டேர்லிங் பவுண்களுக்கும் அதிகமான பணத்தை பாண்டாக கட்ட வேண்டும்.

அந்த விசாக் காலம் முடிந்த பின்னரும் அவர்கள் பிரிட்டனில் தங்கினால், அந்தப் பணத்தை பிரிட்டன் பிடித்துக்கொள்ளும்.
இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் மிகவும் அதிகமாக குடிவரவு விதிகளை துஷ்பிரயோகம் செய்வதாக பிரிட்டன் கூறுகிறது.

-BBC தமிழ்-

வசூல் மழையில் தனுஷின் ராஞ்சனா..

ranjana
இந்தியில் வெளியிடப்பட்ட ராஞ்சனா திரைப்படமானது நாளுக்கு நாள் வசூலை வாரிக்குவிக்கின்றது.தனுஷ் மற்றும் சோனம் கபூர் இணைந்து நடித்துள்ள ராஞ்சனா திரைப்படமானது கடந்த யூன் 21ந் திகதி வெளியிடப்பட்டத

ராஞ்சனா வெளியிடப்பட்ட மூன்று நாட்களில் ரூ.11 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. வசூலானது முதல் நாளை விட இரண்டாம் நாள் அதிகமாகவும், இரண்டாம் நாளை விட மூன்றாம் நாள் அதிகமாகவும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் எண்ணற்ற மகிழ்ச்சியில் உள்ளார் தனுஷ்.

இப்படமானது தனுஷ் நடித்துள்ள முதல் இந்திப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.