வெறுங்கையுடன் கைவிட்டுச் சென்ற கணவர் இன்று ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியான பெண்!!

கனேடிய பெண்ணொருவரை 30 ஆண்டுகளுக்கு முன் வெறுங்கையுடனும், இரண்டு பிள்ளைகளுடனும் கைவிட்டுச் சென்றார் அவருடைய கணவர்.

ஆனால், அந்தப் பெண் இன்று ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாக வாழ்ந்துவருகிறார்.

பொதுவாக செல்வந்தர்கள் கலைப்பொருட்களை வாங்கி தங்கள் வீடுகளை அழகுபடுத்துவார்கள். ஆனால், கனேடிய பெண்ணொருவர், வீடுகளையே கலைப்பொருட்கள்போல் வாங்கிக் குவித்துள்ளார்.

தற்போது இங்கிலாந்திலுள்ள கென்டில் மாளிகை ஒன்றில் பிளாஸ்டிக் சர்ஜனான தன் இரண்டாவது கணவரான Stephen என்பவருடன் வாழ்ந்துவரும் அவரது பெயர், Dr Ann Kaplan Mulholland.

அவரிடம் தற்போது 11 வீடுகள் உள்ளன. இங்கிலாந்திலுள்ள கென்டில் 139 ஏக்கர் பரப்பில் ஒரு மாளிகை, ஹவாயில் மூன்று வீடுகள், கனடாவில் ஐந்து வீடுகள், லாஸ் வேகஸில் 17,000 சதுர அடியில் ஒரு வீடு, அதன் விலை 18 மில்லியன் டொலர்கள்.

இன்று தலையில் வைர கிரீடமும், கையில் 23 காரட் நிச்சயதார்த்த மோதிரமும், டிசைனர் உடையும், 4,000 பவுண்டுகள் மதிப்புடைய ஷூக்களுமாக இளவரசி போல வலம் வருகிறார் ஆன்.

அவரது முதல் கணவர், கனடாவின் ரொரன்றோவில் இரண்டு குழந்தைகளுடன் ஆனை கைவிட்டுவிட்டு காணாமல் போனார்.

முறையே 21 மற்றும் 9 மாதங்களே வயதுடைய இரண்டு குழந்தைகளுடன் தனித்துவிடப்பட்ட ஆன், தனியாளாக மருத்துவ கடன் வழங்கும் பிசினஸ் ஒன்றைத் தொடங்கினார்.

கடுமையாக உழைத்து முன்னேறிய ஆனுடைய சொத்து மதிப்பு, இன்று 500 மில்லியன் பவுண்டுகள், இலங்கை மதிப்பில் 1,51,65,30,50,000 ரூபாய்

போன் பேச சமையலறை வந்த மனைவி வெள்ளத்தில் அடித்துச் சென்று உயிரிழப்பு.., கணவர் மற்றும் குழந்தை வேறு அறையில்!!

வயநாடு நிலச்சரிவில் சிக்கிய மருத்துவமனை பெண் ஊழியர் ஒருவர் தங்களை காப்பாற்றுங்கள் என்று கதறியுள்ளார்.

இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 280 -க்கும் மேல் உயர்ந்துள்ளது. மேலும், காணாமல்போன 225 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 3-வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

4 குழுக்களாக 150 மீட்புப்படையினர் மீட்புப்பணியை செய்து வருகின்றனர். அதோடு, தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், கேரள போலீஸார், தன்னார்வலர்கள், ஆம்புலஸ் ஓட்டுநர்கள், ராணுவ மருத்துவ வாகனம் என மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு அங்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், வயநாடு மேப்பாடி பகுதியில் நீத்து என்ற பெண் ஒருவர் தான் நிலச்சரிவில் சிக்கியுள்ளதாக மருத்துவமனை ஊழியர்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு கூறியுள்ளார்.

அப்போது அவர், “நான் எனது குடும்பத்துடன் நிலச்சரிவில் சிக்கியுள்ளேன். எனது வீட்டை சுற்றி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சகதியும் சூழ்ந்துள்ளது. தயவு செய்து எங்களை காப்பாற்றுங்கள்” என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, கடும் மழையையும் பொருட்படுத்தாமல் நீத்து பணிபுரிந்து மருத்துவமனை ஊழியர்கள் காப்பாற்ற சென்றுள்ளனர். ஆனால், அவரது வீட்டு பகுதிக்கு செல்லும் பாலம் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டதால் அவர்களால் செல்ல முடியவில்லை.

இதையடுத்து, நீத்து மீண்டும் சக ஊழியர்களுக்கு போன் செய்து வீட்டின் பின்புறம் தண்ணீர் கொட்டுவதாகவும், எங்களை காப்பாற்றுங்கள் என்று கதறியுள்ளார்.

அப்போது நீத்து வீட்டின் சமையலறை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் போன் பேசுவதற்காக சமையலறை வந்த நீத்துவும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளார். இதில், கணவர் ஜோ ஜோ, 5 வயது மகன் மற்றும் பெற்றோர் வீட்டின் மற்றொரு அறையில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்து யாருமில்லாமல் நிற்கும் திருமணப்பெண், தங்கையின் உடலை பார்த்து கதறும் சோகம்!!

வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் மொத்த குடும்பத்தையும் இழந்து திருமணப்பெண் ஒருவர் தனியாளாக நிற்கிறார்.

இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 280 -க்கும் மேல் உயர்ந்துள்ளது. மேலும், காணாமல்போன 225 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 3-வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

மண்ணில் புதைந்தவர்களை கண்டறியும் பணியை மீட்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர். தனது குடும்பத்தினர் உயிரோடு வரமாட்டார்களா என்று அங்குள்ள மக்கள் கண்ணீருடன் கதறுகின்றனர்.

இந்நிலையில், வெள்ளார்மல அரசு பள்ளி மண்ணுக்குள் புதைந்தது. இந்த பள்ளிக்கு அருகே சிவண்ணன் என்பவரின் குடும்பம் வசித்து வந்துள்ளது. இவரின் குடும்பத்தில் மொத்தம் 9 பேர் உள்ளனர்.

இதில், மூத்த மகள் சுருதியை தவிர மற்ற அனைவரும் மண்ணில் புதைந்து உயிரிழந்துள்ளனர். சிவண்ணன், மனைவி சபிதா, தந்தை போமலப்பன், தாய் சாவித்திரி, மகள்கள் ஸ்ருதி, ஸ்ரேயா ஆகியோர் ஒரு வீட்டிலும், பக்கத்துக்கு வீட்டில் சிவண்ணனின் சகோதரர் மற்றும் அவரது மனைவி மகள் என வசித்து வந்துள்ளனர்.

இதில், மகள் ஸ்ருதி கோழிக்கோடு மிம்ஸ் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். மற்றொரு மகள் ஸ்ரேயா கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்நிலையில், தங்கை ஸ்ரேயாவின் உடல் மேப்பாடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்ததை பார்த்த ஸ்ருதி கதறி அழுதுள்ளார். அதனை பார்த்தவர்களுக்கு மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வரும் டிசம்பர் மாதம் ஸ்ருதிக்கு திருமணம் நடத்த அவரது பெற்றோர்கள் திட்டமிட்டுள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை செய்துவந்த நிலையில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது.

இவரது வீடு வெள்ளத்தில் அடித்துச் சென்ற நிலையில் குடும்பத்தில் உள்ள மற்ற 7 பேர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

 

மகள், மருமகன், பேத்தியை தகனம் செய்துவிட்டு, கனத்த இதயத்துடன் தந்தை!!

நிலச்சரிவில் உயிரிழந்த மகளின் உடலை குன்னூருக்கு கொண்டு வர இயலாததால் வயநாட்டில் தகனம் செய்துவிட்டதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 280 -க்கும் மேல் உயர்ந்துள்ளது. மேலும், காணாமல்போன 225 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழக மாவட்டமான நீலகிரி, குன்னூர் அடுத்த கரன்சி பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகள் கவுசல்யா (26) வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

தனது மகள், மருமகன், பேத்தி ஆகிய மூவரும் நிலச்சரிவில் உயிரிழந்ததை அறிந்த ரவிசந்திரன், வயநாடு சென்றுள்ளார்.  அங்கிருந்து அவர்களது உடலை குன்னூர் கரன்சி பகுதிக்கு கொண்டு வர முடியாமல், அங்கேயே அவர்களது உடல்களை தகனம் செய்தார்.

இதையடுத்து, அங்கிருந்து கரன்சி பகுதிக்கு திரும்பிய ரவிச்சந்திரன் கண்ணீருடன் தனது வேதனையை தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக என்னுடைய மகளுக்கும், சூரல்மலை பகுதியைச் சேர்ந்த பிஜிஸ் குட்டன் (36) என்பவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் பெண் குழந்தை உள்ளது.

இதில் பிஜிஸ் குட்டன் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். பிஜிஸ் தனது பெற்றோருடன் மனைவி, குழந்தையுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குடும்பத்துடன் மூவரும் உயிரிழந்து விட்டனர். அவர்களது உடல் குன்னூருக்கு கொண்டு வர முடியாததால் அங்கேயே தகனம் செய்துவிட்டோம். பிஜிஸ் குட்டனின் பெற்றோர் உட்பட மூவரின் உடல் தேடப்பட்டு வருகிறது” என்றார்.

 

நடிகர்களுக்கு அடுத்த வரிசையில், ஏலியனுக்கு கோயில் கட்டி கும்பிடும் பக்தர்!!

குஷ்பு, ரஜினி உள்ளிட்டவர்களுக்கு ரசிகர்கள் கோயில் கட்டிய நிலையில், பக்தர் ஒருவர் ஏலியனுக்கு கோயில் கட்டி கும்பிட்டு வருகிறார்.

தமிழக மாவட்டமான சேலம், மல்லமூப்பம்பட்டியை அடுத்த ராமகவுண்டனூரைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர், வேற்றுகிரகவாசிகள் என்று கூறப்படும் ஏலியனுக்கு கோயில் அமைத்து வழிபாடு செய்து வருகிறார்.

இந்த கோயிலை ஏலியன் சித்தர், கைலாய சிவன் கோவில் என்று அழைக்கின்றனர். இந்த கோயிலுக்கு தினமும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

கடந்த 2021 -ம் ஆண்டு முதல் இந்த ஏலியன் கோயில் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த கோயிலானது சித்தர் பாக்யா என்று அழைக்கப்படும் லோகநாதனின் குருநாதர் சித்தர் பாக்யா ஜீவசமமாதி அருகே அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, ஏலியன் சித்தர் மற்றும் அகத்திய முனிவர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக லோகநாதன் கூறுகையில், “இதுவரை எந்த இடத்திலும் ஏலியன் சித்தர் இல்லை. தற்போது, கோயிலில் திருப்பணி பூஜை நடந்து வருகிறது.

இதனால், குறைந்த அளவு பூஜை செய்யப்படுகிறது. கும்பாபிஷேகம் முடிந்த பிறகு அனைத்து விதமான பூஜைகளும் செய்யப்படும்” என்றார்.

இலங்கையில் அரிசியால் ஏற்பட்டுள்ள ஆபத்து : வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!!

அரிசியில் காட்மியம், ஈயம் போன்ற கனரக உலோகங்கள் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஆனந்த ஜயலால் தெரிவித்தார்.

இதன் காரணமாக அதிகளவான சிறுநீரக நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

உணவு தொடர்பில் சமூகத்தில் நிலவும் தவறான கருத்துக்கள் தொடர்பில் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாளாந்தம் 200 கிராம் அரிசியை உணவாக மூன்று வேளை உட்கொள்வது பாதிப்பை ஏற்படுத்தும். நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் பிற நோய்களை ஏற்படுத்தும்.

உணவு சில நோய்களை குணப்படுத்தும் என சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம்.

ஒரு குறிப்பிட்ட நோயை உணவின் மூலம் குணப்படுத்த முடியும் என்று கூறினால் முறையான அறிவியல் ஆய்வு நடத்தி, நாட்டின் முக்கிய உணவு அதிகாரியான சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் அனுமதி பெற வேண்டும்.

மேலும், ஊட்டச்சத்து, உடல் செயல்பாடு, ஆற்றல் போன்றவை உணவில் இருந்து பெறப்படுவதாகவும், நோய்களைக் குணப்படுத்த உணவல்ல மருந்தைப் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.

ஒருவர் வாரத்திற்கு 2.8 கிலோ அரிசி, 32 கிலோ கோதுமை மா, 12 கிலோ ரொட்டிமா மற்றும் 24 கிலோ சீனி சாப்பிடுகிறார், இதனால் உடலில் கார்போஹைட்ரேட் அளவு அதிகரிக்கிறது என்று அவர் கூறினார். உணவை பன்முகப்படுத்த வேண்டும், இல்லை என்றால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காதலியின் தந்தையுடன் சென்ற இளைஞன் விபத்தில் பலி!!

ஹொரணை, பொருவதன்ட பிரதேசத்தில் இன்று (01) கார் – முச்சக்கரவண்டி மோதி இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கார் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த கால்வாயில் மோதி பின்னர் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சாரதி உறங்கியதால் விபத்து

காரின் சாரதி உறங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது முச்சக்கரவண்டியில் இருந்த இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் களுத்துறை, புலத்சிங்கள பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞரொருவரே உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர் அருணகம பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய நபரொருவர் என்பதுடன் இவர் உயிரிழந்த இளைஞரின் காதலியின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

18 வயது திருமணமான யுவதியின் மரணத்தில் சந்தேகம்!!

பண்வஸ்நுவர, கிரிமெட்டிய கெலினாவல பிரதேசத்தில் 18 வயதுடைய திருமணமான யுவதியொருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தமையால், நேற்று (31) பதற்றமான சூழல் ஏற்பட்டது.

கணவனால் தாக்கப்பட்டே யுவதி உயிரிழந்துள்ளதாகவும் கணவரை பொலிஸார் கைது செய்யவில்லை எனவும் பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

கிரிமெட்டிய கெலினாவல பிரதேசத்தில் வசித்து வந்த 18 வயதுடைய செனுரி பிரேமதிலக என்ற யுவதி கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். செனுரியின் கணவரின் தாக்குதலே அவரது மரணத்திற்குக் காரணம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனடிப்படையில், மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும் செனுரியின் கணவரை கைது செய்யுமாறும் வலியுறுத்தி யுவதியின் உறவினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் நேற்று கிரிமெட்டிய வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதோடு , சடலத்தை வீதிக்கு எடுத்துச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேவேளை செனுரியின் கணவரின் தந்தை செனுரியின் தாயை தாக்கியதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!!

நாட்டிலுள்ள அனைத்து அரச, தனியார், மற்றும் விசேட பாடசாலைகளில் பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் 3 வருட காலத்திற்கு மாணவர் காப்புறுதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சுக்கும் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் காப்புறுதியை நடைமுறைப்படுத்துவது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட அமைச்சர்,கல்வி அமைச்சு இதற்காக 7,112 மில்லியன் ரூபாவை முதலீடு செய்துள்ளதாகவும், இந்த காப்புறுதி மூலம் அரச அல்லது தனியார் வைத்தியசாலைகளில் உள்நோயாளிகளுக்கான சிகிச்சைக்கான நன்மை ரூ. 300,000/- மற்றும் வெளிநோயாளர் சிகிச்சைக்கு ரூ. 20,000/- மற்றும் தீவிர நோய் நன்மையாக ரூ. 1,500,000/- வரை மாணவர்கள் பலனடைய முடியும் என குறிப்ப்பிட்டுள்ளார்.

ஆயுள் காப்புறுதியின் கீழ் வருடாந்த வருமானம் ரூ.180,000/- க்கும் குறைவான குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மேலதிகமாக, ‘அவஸ்வசும’ திட்டத்தைச் சேர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தலா 75,000/= மற்றும் ஒரு மரணத்திற்கு ஒதுக்கப்பட்ட அதிகபட்ச தொகையான 225,000/= தொகையானது குடும்பத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சமமாகப் பிரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கல்வி அமைச்சின் சார்பாக அமைச்சின் செயலாளர் திருமதி திலகா ஜயசுந்தர இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதுடன், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி பிரியந்த பெரேராவும் இதில் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேருந்து – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து : 8 பேரின் நிலை!!

நுவரெலியா – ஹட்டன் ஏ7 பிரதான வீதியில் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாமஸ்டன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று (02) வெள்ளிக்கிழமை காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. லொறி ஒன்றும் சொகுசு பஸ் ஒன்றும் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

தலவாக்கலை பகுதியில் இருந்து நுவரெலியா பகுதியை நோக்கி பயணித்த லொறியுடன் நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த கொகுசு பஸ் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்து தொடர்பில் லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

விசேட வைத்தியரின் அலட்சியம் : பெண்ணின் வயிற்றுக்குள் வைத்து தைக்கப்பட்ட பருத்தி!!

கர்ப்பிணி தாய் ஒருவருக்கு சிசேரியனின் பின்னர் வயிற்றில் பருத்தி மற்றும் கோஸ்களை வைத்து இளம் பெண்ணின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியமைக்காக, 30 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்க கொழும்பு நீதிமன்ற உத்தர்விட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசேட வைத்தியர் D.வர்ணகுலசூரிய மற்றும் பிரபல தனியார் வைத்தியசாலையான ஆசிரி சென்ட்ரல் வைத்தியசாலைக்கு 30 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்க கொழும்பு பிரதான மாவட்ட பிரிவு நீதிபதி சந்துன் விதான நேற்று முன்தினம் (30ம் திகதி) உத்தரவிட்டார்.

05 மாதங்களுக்கும் மேலாக சிகிச்சை செய்த விசேட வைத்தியரின் அலட்சியத்தால் அனுபவித்த துன்பங்களுக்கு ஒரு கோடி ரூபா நட்டஈட்டை பெற்றுத்தருமாறு கோரி வழக்கு தொடந்திருந்தார்.

இந்நிலையில் நீண்ட விசாரணையின் பின்னர் மாவட்ட நீதிபதி, அறுவை சிகிச்சை செய்த வைத்தியர் மற்றும் பிரபல தனியார் மருத்துவமனை இணைந்து 30 லட்சம் ரூபாயை நஷ்ட ஈடாக பெண்ணுக்கு வழங்க உத்தரவிட்டார்.

களனி தலுகம ஜொனிக்வத்தையில் வசிக்கும் திருமதி எம்.சி.டி.டி. பெரேராவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஆராய்ந்த பின்னர், 23 வயதான மனுதாரர் பெரேரா, 2016 ஆம் ஆண்டு ஜனவரி 03 ஆம் திகதி சிறப்பு மருத்துவர் டி. வர்ணகுலசூரியவின் கீழ் மத்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சிசேரியன் மூலம் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தார்.

அதன் பின்னர் ஏற்பட்ட உடல் நல பிரச்சனைகளை பல தடவைகள் தெரியப்படுத்திய போதும் அவர் அதனை உரிய முறையில் கவனிக்கவில்லை எனவும் மனுதாரரின் சட்டத்தரணி கூறினார்.

திருமதி சாமந்தியின் குடலில் பருத்தி போன்ற பொருள் காணப்பட்டதன் காரணமாக, அவரது உடல்நிலை மோசமடைந்ததால், உடனடியாக விசேட வைத்திய நிபுணர் மொஹான் டி சில்வாவினால் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சத்திரசிகிச்சையின் போது அவரது வயிற்றில் இருந்து இரண்டு ‘பருத்தி மற்றும் கோஸ்கள் அகற்றப்பட்டு அவற்றுடன் இணைந்திருந்த குடலின் ஒரு பகுதி அகற்றப்பட்டதாக சட்டத்தரணி கமகே தெரிவித்தார்.

சிறப்பு மருத்துவர் டி. வர்ணகுலசூரியவின் கவனக்குறைவான செயற்பாடு மற்றும் அது தொடர்பான முறைப்பாடுகளை புறக்கணித்தமையினால் இந்த நிலைமை ஏற்பட்டதாகவும் மன்றில் சுட்டிக்காட்டப்பட்டது.

அதோடு பாதிக்கப்பட்ட பெண் , 05 மாதங்கள் கடந்தும் தன்னால் யாருடைய உதவியும் இன்றி சுயாதீனமாக செயற்பட முடியாத நிலை ஏற்பட்டிருந்ததாகவும், சட்டத்தரணி திருமதி சாமந்தி கமகே தெரிவித்துள்ளார்.

சத்திரசிகிச்சையை மேற்கொண்ட விசேட வைத்தியரின் அலட்சியத்தினாலும் , பிரபல தனியார் வைத்தியசாலையின் அலட்சியத்தினாலும் மனுதாரர் 05 மாதங்களுக்கும் மேலாக பல இன்னல்களை அனுபவித்ததாக சட்டத்தரணி சாமந்தி கமகே தெரிவித்தார்.

தொடர்ந்து மன்றில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை பரிசீலித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சாதகமாக தீர்ப்பை வழங்கியதுடன், சிறப்பு மருத்துவரும், பிரபல தனியார் மருத்துவமனையும் வாதிக்கு 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணத்தில் அரச ஊழியர் விபரீத முடிவால் உயிரிழப்பு : நடந்தது என்ன?

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் அரச ஊழியரான் இரு பிள்ளைகளின் தந்தை விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில், ஆசீர்வாதம் தனஞ்சயன் (45 வயது ஜிம்புறு) எனும் நபரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பல்கலைக்கழக ஊழியரும் சைவசமய தொண்டரும் மிகச் சிறந்த சமூகசேவையாளர் என்றும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் அவரது உயிரிழப்பிற்கான காரணம் வெளியாகாத நிலையில், அவரின் மரணம் பெரும் தியரத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சகோதரி வெளிநாட்டில் : கணவன் உயிரைப் பறித்த தம்பி!!

சகோதரியின் கணவனை அலவாங்கினால் தலையில் தாக்கி கொலை செய்த மச்சானை கைதுசெய்துள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவமானது உனவட்டுன தலவெல்ல பிரதேசத்தில் இன்று (01) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் தலவெல்ல, உனவட்டுன பகுதியைச் சேர்ந்த கனேகொட கமகே ரத்னசிறி என்ற 54 வயதுடையவராவார்.

உயிரிழந்தவரின் மனைவி வெளிநாட்டில் பணி புரிந்து வருவதோடு, அவர் மனைவியின் இளைய சகோதரனுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையிஒல் உயிரிழந்தவர் நித்திரையில் இருந்த போது மனைவியின் சகோதரன் அலவாங்கினால் தலையில் தாக்கி கொலை செய்துள்ளமை பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த இளைஞன் பரிதாபமாக பலி!!

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய உள்ளூராட்சி சபை வேட்பாளர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நவகத்தகம உள்ளூராட்சி சபைக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்ட கொங்கடவலயைச் சேர்ந்த 36 வயதுடைய டபிள்யூ.டி.எம்.ஜகத் குமார வன்னிநாயக்க என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வீட்டில் இருந்து 300 மீற்றர் தூரத்தில் உள்ள தனது நண்பருக்கு சொந்தமான காணியில் வெற்றிலை பயிரிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தோட்டத்திற்கு நீர் பெறுவதற்காக அதனை அடுத்துள்ள விவசாய கிணற்றுக்கு சென்ற போது அருகில் மின்சாரம் தாக்கி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

 

பால்மா விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு!!

பால்மாவின் விலையை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுமென வர்த்தக மற்றும் வர்த்தக பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது பால்மாவின் விலையை குறைப்பது தொடர்பில் பால்மா இறக்குமதியாளர்களுடன் அடுத்த சில தினங்களில் கலந்துரையாடல் நடத்தப்படும் என கூறியுள்ளார்.

மேலும் நுகர்வோருக்கு தேவையான சலுகைகளை வழங்குவதற்கு இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

இலங்கை மகளிர் அணியின் வெற்றிக்கு வித்திட்ட தமிழன் விதுபாலா!!

நடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண டி20 தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணி, இந்திய அணியை வீழ்த்தி ஆசியக் கிண்ணத்தை முதல் முறையாக வென்றுள்ளது.

இவ்வாறான நிலையில், இலங்கை மகளிர் மற்றும் ஆடவர் கிரிக்கெட் அணியின் பகுப்பாய்வாளாராக யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட 36 ஆம் அணி விதுபாலா இருந்து வருகின்றனர்.

யாழ்.பல்கலைக்கழ புள்ளிவிபரவியல் பட்டதாரியான விதுபாலா எதிரணியின் பலப் பலவீனம் மற்றும் ஆடுகள பலம் பலவீனங்களை துல்லியமாக பகுப்பாய்ந்து அணித்தலைமைக்கான ஆலோசனைகளை வழங்கி வெற்றிக்கு வித்திடுட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.