கனடா செல்லவிருந்த முல்லைத்தீவு இளைஞன் மரணம் : பொலிசார் அதிர்ச்சித் தகவல்!!

வவுனிக்குளத்தில் இருந்து புதன்கிழமை (30) சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடா செல்வதற்கு தயாராக இருந்த முல்லைத்தீவு யோகபுரம் மல்லாவி பகுதியை சேர்ந்த ஆனந்தராசா ஜீவன் (வயது 27) என்ற இளைஞன் வவுனிக்குளத்தில் இருந்து நேற்றியதினம் சடலமாக மீட்கப்பட்டார்.

உயிரிழப்பதற்கு முன்னர் இளைஞன், சுமார் இருபது இலட்சம் ரூபாய் பணத்துடன் யோகபுரத்தில் திங்கட்கிழமை (29) இரவு பாண்டியன் குளம் சென்றிருந்தார்.

அதன்பின்னார் வீடு திரும்பாத இளைஞரை உறவினர்கள் அவரை தேடிய நிலையில் வவுனிக்குளம் குளத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை (30) சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்து உடலத்தை பார்வையிட்ட முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். ஏச் .மக்ரூன்ஸ், சடலத்தை உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனை இடம்பெற்றது. உடற்கூற்று பரிசோதனையின் முடிவில் இளைஞன் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நட்டாங்கண்டல் பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணையைமுன்னெடுத்து வருகின்றனர்.

பிரித்தானியாவில் இலங்கையரின் பல்பொருள் அங்காடியை சூறையாடிய கும்பல் : அதிர்ச்சியில் நபர்!!

பிரிட்டனின் சௌத்போர்ட்டில் கத்திக்குத்து சம்பவத்தில் சிறுமிகள் பலியானதை தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளின் போது இலங்கையைரின் கடை அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

இதன்போது இலங்கையரின் பல்பொருள் அங்காடியை வன்முறை கும்பலொன்று சூறையாடி பெரும் சேதத்தையும் நஸ்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது என பிபிசி தெரிவித்துள்ளது.

இலங்கையரான சானகபலசூரிய என்பவரின் வர்த்தக நிலையமே சூறையாடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வின்ட்ஸர் மினிமார்ட்டின் ஜன்னல்களை உடைத்து உள்ளே நுழைந்த வன்முறை கும்பல்களை சேர்ந்தவர்கள் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்து சென்றதாகவும் பாதிக்கபப்ட்ட இலங்கையர் தெரிவித்துள்ளார்.

கத்திக்குத்து தாக்குதலில் பலியானவர்களை நினைவுகூரும் நிகழ்வின் பின்னர் மெனேசைட் பகுதியில் வன்முறைகள் இடம்பெற்றது.

அந்த பகுதி பாதுகாப்பனதாக மாறலாம் என்ற அச்சம் காரணமாக தனது வர்த்தக நிலையத்தையை மூடிக்கொண்டு அன்று மாலை வீடு திரும்பிய இலங்கையரான பாலசூரிய வீட்டில் உள்ள சிசிடிவி கமராவின் மூலம் தனது வர்த்தக நிலையம் சூறையாடப்படுவதை பார்த்துள்ளார்.

அவர்கள் ஜன்னல் கண்ணாடிகளை காலால் உதைத்தனர் என அவர் தெரிவித்துள்ளார். வர்த்தக நிலையத்தின் வெளியே தீயை பார்த்தேன் அவர்கள் கார்ட்போர்ட்டினை கொழுத்தினார்கள் நான் அவர்கள் எனது வர்த்தக நிலையத்தை தீயிடப்போகின்றார்கள் என அச்சமடைந்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

நான் 999 அழைத்தேன் சிசிடிவியில் எனது பிள்ளைகளும் அதனை பார்த்தார்கள் அலறினார்கள் என அவர் தெரிவித்துள்ளார். மறுநாள் காலையே சேதங்களை பார்த்தேன் என தெரிவித்த அவர், அனைத்து பொருட்களும் தரையில் காணப்பட்டன என குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் அனைத்தையும் எடுத்துச்சசென்றுள்ளனர் என கூறிய அவர் நான் காப்புறுதி செய்யவில்லை எனவும் இலங்கையரான சானக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் இதுமிகவும் மோசமான விடயம் ஆனால் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் நிதி திரட்டி எனக்கு உதவப்போகின்றார்கள் என தெரிவித்த அவர் , குற்றவாளிகளை தண்டிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

லிட்ரோ விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

நாட்டில் ஆகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட விலையிலேயே தொடர்ந்தும் லிட்ரோ சமையல் எரிவாயு விற்பனை செய்யப்படும் எனவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதேவேலை நாட்டில் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் பிரகாரம், இன்று (31) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலைகள் திருத்தப்படாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது .

 

பேருந்தில் யுவதி மீது சேஷ்டை : ஓய்வுபெற்ற அதிபரின் மோசமான செயல்!!

கொழும்பில் இருந்து மாத்தறை சென்ற பேருந்தில் இளம் யுவதி மீது பாலியல் சேஷ்டை புரிந்த ஓய்வு பெற்ற அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் காலி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றிய ஓய்வு பெற்ற அதிபர் என கூறப்படுகின்றது.

சந்தேக நபர் கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த பஸ்ஸில் பயணித்த 25 வயதுடைய யுவதி ஒருவர் மீது பாலியல் சேஷ்டை புரிந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் நடத்துனர் இது தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

உடற்பருமன் குறித்து சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!!

நாட்டில் அதிக எடை மற்றும் உடல் பருமன் விகிதம் மக்களிடையே வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மகிபால தெரிவித்துள்ளார்.

மருத்துவ முகாம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நாட்டில் சுமார் 48 சதவீத பெண்கள் அதிக எடையுடன் இருப்பதாகவும், குறைந்தது 33.3 சதவீத ஆண்கள் தங்கள் ஆரோக்கியமான எடையை விட அதிக எடையுடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

உடற்பயிற்சியின்மை மற்றும் ஆரோக்கியமான உணவுகளில் கவனம் செலுத்தாமையே இதற்கு காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்க்கரை, கொழுப்பு மற்றும் உப்பு அதிகமாக உட்கொள்ளும் போது உடற்பயிற்சி செய்யும் அளவில் கவனம் செலுத்த வேண்டும் என்பதோடு காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்கொள்ளல் தற்போது குறைவடைந்துள்ளது.

இந்தநிலையில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதோடு நாட்டின் முதியவர்களில் 42 வீதமானோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் வைத்தியர் பாலித மகிபால கூறியுள்ளார்.

 

திருமண நிச்சயதார்த்தம் முடிந்து கனடாவுக்குச் சென்ற இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயர முடிவு!!

சமீபத்தில் இந்தியாவில் திருமண நிச்சயதார்த்தம் முடித்து கனடா சென்ற இந்திய வம்சாவளி இளம்பெண் ஒருவர் கார் விபத்தில் பலியானார்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பட்டியாலா என்னும் இடத்தைச் சேர்ந்த Rashamdeep Kaur (23) என்னும் பெண்ணுக்கு, நான்கு மாதங்களுக்கு முன் தான் இந்தியாவில் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

கல்வி கற்பதற்காக நான்கு ஆண்டுகளுக்கு முன் கனடா வந்த Rashamdeep, படிப்பை முடித்து பணி அனுமதி பெற்று பணி செய்துவந்தார்.

இந்நிலையில், Rashamdeep, அவரது தோழி Harman மற்றும் Harmanஉடைய சகோதரரான Navjot ஆகியோர் தங்கள் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கான விண்ணப்பத்தை அளித்துவிட்டு டெக்ஸி ஒன்றில் தாங்கள் தங்கியிருந்த அறைக்கு திரும்பிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென காரின் டயர் ஒன்று வெடிக்க, கட்டுப்பாட்டை இழந்த கார் தூக்கி வீசப்பட்டு உருண்டு சென்று விழுந்துள்ளது.

இந்த விபத்தில் Rashamdeep, அவரது தோழி Harman மற்றும் Harmanஉடைய சகோதரரான Navjot ஆகிய மூவரும் உயிரிழந்துவிட்டார்கள். மூன்று பிள்ளைகளை இழந்த பட்டியாலா கிராமம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

அதுவும், நிச்சயதார்த்தம் முடித்து, நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கான விண்ணப்பமும் அளித்து, நல்ல எதிர்காலத்துக்காக எதிர்பார்த்திருந்த நிலையில் Rashamdeep உயிரிழந்ததால் அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளார்கள்.

 

கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணத்தை காலுறைக்குள் வைத்து கடத்திய விமான பணிப்பெண்!!

ரூ.1 கோடிக்கும் அதிகமான வெளிநாட்டு பணத்தை காலுறைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த பாகிஸ்தானை சேர்ந்த விமான பணிப்பெண் சிக்கினார்.

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின் (PIA) விமானப் பணிப்பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை லாகூரில் உள்ள அல்லாமா இக்பால் சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகளைக் கடத்திச் சென்றபோது பிடிபட்டார்.

விமானப் பணிப்பெண் தனது காலுறைகளில் நிறைய அமெரிக்க டொலர்களையும் சவுதி ரியாலையும் மறைத்து வைத்திருந்தார்.

இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் விமானப் பணிப்பெண்ணின் காலுறையில் இருந்து விசாரணை முகமை ஊழியர்கள் இந்த கரன்சியை வெளியே எடுக்கும் காட்சிகள் உள்ளன.

பாகிஸ்தான் செய்தித்தாள் Dawn செய்தியின்படி, விமானப் பணிப்பெண் சனிக்கிழமை நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

அந்த அறிக்கையின்படி, விமானப் பணிப்பெண்ணிடம் இருந்து 1,40,000 சவுதி ரியால்கள் மீட்கப்பட்டுள்ளதாக துணை ஆட்சியர் சுங்கத்துறை ராஜா பிலால் தெரிவித்துள்ளார்.

இதன் மதிப்பு இலங்கை ரூபாவில் சுமார் 1 கோடியே 13 லட்சம் ஆகும். விமானப் பணிப்பெண் வெளிநாட்டு நாணயங்களை கடத்தி வருவதாக சுங்க அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

பின்னர் அவர் சந்தேகத்தின் அடிப்படையில் விமானத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவரை தேடி வந்த அதிகாரிகள், விமானப் பணிப்பெண் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணைக் குழுவிடம் ஒப்படைத்தனர்.

விமானப் பணிப்பெண்ணுக்கு எதிரான எப்ஐஆரில் அவரது பெயர் AQ பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏர் ஹோஸ்டஸ் லாகூரில் இருந்து ஜெட்டா செல்லும் PIA விமானம் எண் PK 203-இல் இருந்ததாக புகார் கூறுகிறது.

விமானப் பணிப்பெண் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு விமானப் பணிப்பெண் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர் உடனடியாக பணியில் இருந்து நீக்கப்படுவார் என்று PIA செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

 

7 மாத கர்ப்பிணியாக பாரிஸ் ஒலிம்பிக்கில் வாள்வீசிய எகிப்திய வீராங்கனை!!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நடைபெற்றுவரும் நிலையில் எகிப்திய வீராங்கனை ஒருவரின் திறமைமிகு பங்குபற்றலானது பேசுபொருளாகியுள்ளதோடு, பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த ஜூலை 28 ஆம் திகதி முதல் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், எகிப்து நாட்டு வாள்வீச்சு வீராங்கனை நாடா ஹபீஸ் (Nada Hafez) 7 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையிலும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்துக்களை வெளியிட்டுள்ள அவர்,

“களத்தில் இருந்தது 2 பேர் என்று நினைக்கிறீர்கள். ஆனால் இருந்தது 3 பேர். ஒன்று நான், ஒன்று என் எதிரணி வீராங்னை, மற்றொன்று இந்த உலகத்தை இன்னும் காணாத என் குழந்தை” என்று தான் கர்ப்பமாக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக் தனிநபர் பெண்கள் வாள்வீச்சு போட்டிகளில் முதலில் அமெரிக்க வீராங்கனை எலிஸபத் ட்ரக்கோவ்ஸ்க்கியுடன் மோதி வெற்றி பெற்ற நாடா ஹபேஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

நேற்று தென்கொரிய வீராங்கனை ஜியோன் ஹயோங் (Jeon Hayoung) உடன் மோதிய நாடா ஹபேஸ் 15-7 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியைத் தழுவினார்.

கேரள நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 தமிழர்கள் பலி : 150ஐத் தாண்டிய உயிரிழப்பு!!

கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் தமிழர்கள் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய மாநிலம் கேரளாவின் முக்கிய பகுதியான வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின் பாதிப்பு தேசத்தையே உலுக்கியுள்ளது.

100க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கி பலியான நிலையில் தற்போது 163ஆக இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தமிழர்கள் 6 பேர் உயிரிழந்ததாகவும், இதன்மூலம் வயநாட்டில் பலியான தமிழர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

காளிதாஸ், கல்யாண குமார், ஷிஹாப் ஆகியோரின் உடல்கள் முன்னதாக மீட்கப்பட்டது. இந்த நிலையில், முதல்வர் பினராயி விஜயன் பாதிப்பு மற்றும் மீட்புப்பணிகள் குறித்து அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

 

எரிபொருளின் விலைகள் திருத்தப்படாது!!

நாட்டில் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் பிரகாரம், இன்று (31.07) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலைகள் திருத்தப்படாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது .

அதேவேளை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை முன்பதிவு செய்யாத காரணத்தினால் நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்தியதன் பின்னர் எரிபொருள் விலை இன்று திருத்தப்படாது எனவும் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

வெளிநாடொன்றில் வளர்ப்பு நாய்க்கு அதிக உணவு வழங்கிய பெண்ணுக்கு சிறைத்தண்டனை!!

வளர்ப்பு நாயின் நிறையை பராமரிக்காத குற்றத்துக்காக¸ நியூசிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இரண்டு மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

நியூஸிலாந்தின் விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு சங்கத்தின் அறிக்கையின்படி, நுக்கி ( Nuggi)என்று பெயர் கொண்ட இந்த நாய், 2021ஆம் ஆண்டில் 54 கிலோகிராம் நிறையுடன், அசைவற்ற நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நுக்கி, அதன் உரிமையாளரின் இடமான ஒக்லாந்தில் இருந்து விலங்கு பராமரிப்பு மையத்துக்கு அழைத்து செல்லப்பட்டது.

குறித்த மையத்தின் பராமரிப்பில் இருந்த இரண்டு மாதங்களில் 8.8 கிலோகிராம் அளவு நிறை குறைந்த போதும், நுக்கி கல்லீரல் இரத்தக்கசிவு காரணமாக உயிரிழந்துள்ளது.

இந்தநிலையில், நாயின் மருத்துவ, நடத்தை மற்றும் உடல் தேவைகளை வழங்கத் தவறிய குற்றச்சாட்டை உரிமையாளர் ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து, அவருக்கு ஒக்லாந்தில் உள்ள மனுகாவ் மாவட்ட நீதிமன்றம், இரண்டு மாத சிறை தண்டனையையும், 1,222 டொலர் அபராதத்தையும் விதித்தது.

அத்துடன், ஒரு வருடத்திற்கு நாய்களை வைத்திருக்க அனுமதிக்கப்பட மாட்டார் என்றும் உத்தரவிட்டது. முன்னதாக, நுக்கியின் அதிக எடை காரணமாக, கால்நடை மருத்துவர்களால், அதன் இதயத் துடிப்பைக் கண்டறிய முடியவில்லை.

பொதுவாக நிறை குறைந்த, பட்டினி அல்லது ஊட்டச்சத்து குறைபாடு உள்ள விலங்குகளை அன்றாடம் காண்கின்ற போதும், அதிக அளவில் உணவளிக்கப்பட்ட இந்த விலங்கு குறித்து நியூஸிலாந்தின் கால்நடை மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த நாய்க்கு உலர் உணவுடன் தினமும் 10 கோழி துண்டுகள் கொடுக்கப்பட்டு வந்ததாக கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 60 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!!

வவுனியாவில்(Vavuniya) 60 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஜூலை மாதம் 1 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர்.

இதன்போது சரியான தராசை பயன்படுத்தாமை, விற்பனைக்கு பொருளை மறுத்தமை, விலை அழிக்கப்பட்டிருந்தமை, விலை குறிக்கப்படாமை, காலாவதியான பொருள்களை வைத்திருந்தமை, தகவல் குறிக்கப்படாமை, உத்தவாதம் வழங்காமை போன்றன தொடர்பில் 54 வழக்குகளும், பேக்கரி தொடர்பில் 6 வழக்குகளுமாக 60 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வவுனியா நகரம், கோவில்குளம், வைரவபுளியங்குளம், குருமன்காடு, பட்டானிச்சூர், வேப்பங்குளம், நெளுக்குளம் உள்ளிட்ட பகுதிகளிலேயே மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

இந்திய கேரளாவில் பயங்கரம் : மண்ணுக்குள் புதையுண்ட 276 பேர்!!

இந்தியாவின் கேரளா மாநிலம் வயநாடு அருகே சூரல்மலைப் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 276 ஆக உயர்ந்துள்ளது.

நிலச்சரிவில் சிக்கிய 200க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் சுமார் 70 பேரை இன்னும் காணவில்லை என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

கேரளாவின் வயநாடு பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்தப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வயநாடு சூரல்மலை பகுதியில் இடைவிடாது கொட்டிய கனமழையால் நேற்று அதிகாலை காலை முதலே லேசான நிலச்சரிவுகள் சில இடங்களில் ஏற்பட்டன. முன்னதாக அதிகாலை 2 மணியளவில் சூரல்மலை பகுதியில் முதலில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனையடுத்து அதிகாலை 4.30 மணிக்கு இரண்டாவதாக மற்றொரு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர பாதிப்பு ஏற்பட்டது.

அட்டமலையில் இருந்து முண்டகை வரையிலான ஒரே ஒரு பாலம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. இதேவேளை வயநாடு சூரல்மலை நிலச்சரிவில் 500 வீடுகள் சிக்கி இருக்கின்றன. இதனையடுத்து இந்த வீடுகளில் சிக்கிய 1000 பேரை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நான்கு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிப்பவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!!

சிறுவர்கள் மத்தியில் இன்புளுவன்சா நோய் அறிகுறிகள் மற்றும் வைரஸ் காய்ச்சல் தொற்று அதிகரித்துள்ளமையினால் குழந்தைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார்.

03 அல்லது 04 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக இரத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்றும் வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் வாந்தி தொடர்ந்தால், வைரஸ் தடுப்பு மருந்துகள் வழங்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த வைரஸ் நோய்களின் அறிகுறிகளாக தலைவலி, இருமல், சளி, தும்மல், உடல்வலி ஆகியவற்றுடன் கூடிய காய்ச்சல் இருக்கும் என்றும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், அறிகுறி உள்ள குழந்தைகளை வீட்டிலேயே தங்க வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், குழந்தைகளுக்கு இயற்கையான திரவ உணவு மற்றும் சரியான அளவு பாரசிட்டமால் மாத்திரைகளை வழங்குமாறும் வைத்தியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

02 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள், நாற்பட்ட சுவாச நோய்கள் உள்ளவர்கள், நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த வைரஸ் தீவிரமாக பரவும் தன்மை கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே 03 அல்லது 04 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனbahடிக இரத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது என வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கேரளாவில் பாறைக்கு நடுவில் உயிருக்கு போராட்டம் : வெளியான காணொளி!!

கேரளாவில் நிலச்சரிவால் ஏற்பட்ட உயிரிழப்பு 100 ஐ தாண்டியுள்ள நிலையில், இந்த திடீர் அனத்தம் இந்தியாவை உலுக்கியுள்ளது.

இந்நிலையில் வேகமாகப் பாயும் வெள்ளத்துக்கு மத்தியில் சேற்றில் மூழ்கிய நிலையில் ஒரு பெரிய பாறையை பிடித்துக் கொண்டு நபரொருவர் உயிருக்குப் போராடும் காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதற வைத்துள்ளது.

அவரைக் காப்பாற்றும் முயற்சி தீவிரமாக நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவம் இந்தியாவின் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிகழந்துள்ளது.

வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட அந்த நபர், பெரிய பாறைகளுக்கு இடையில் சிக்கி உயிர் பிழைத்துள்ளார். எனினும், நிலச்சரிவினால் ஏற்பட்ட சேறுகளில் சிக்கி அவரால் எழுந்து நிற்க கூட முடியவில்லை.

எனினும், தொடர்ந்து எழுந்து நிற்க முயற்சித்து உயிர் பிழைக்க சிரமப்பட்டு வருகிறார். 2வயநாடு – முண்டக்கை டவுன் பகுதியில் நேற்று (30.07)அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

வவுனியா நோக்கி பயணித்த சொகுசுப் பேருந்தில் தலை நசுங்கி பலியான பெண்!!

அனுராதபுரம் நொச்சியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவரின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது. இன்று (30.07.2024) பிற்பகல் நொச்சியாகம நகரின் மத்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சாரதியின் கவனக்குறை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாரதியின் போட்டித்தன்மை காரணமாக ஓட்டிச் சென்ற சொகுசு பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.