மருத்துவமனை வளாகத்திலேயே இளைஞருக்கு திருமணம்.. பெண் வீட்டார் அதிரடி!!

ராணிப்பேட்டையில் தற்கொலை முயற்சி மேற்கொண்ட இளைஞருக்கு, மருத்துவமனை வளாகத்திலேயே திருமணம் நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது… நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட பெண்ணை கழற்றிவிட முயற்சித்த இளைஞரின் கபட நாகடம் அம்பலமானதால். கல்யாண மாலை போடப்பட்டுள்ளது… நடந்தது என்ன?

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன் – சாந்தி தம்பதியின் இளைய மகன் தினேஷ்குமார். 27 வயதான இவர், பூ அலங்கார வேலை செய்து வருகிறார்.

தினேஷ்குமாருக்கும், கரிக்கந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் – பரிமளா தம்பதியரின் மகள் லாவண்யாவுக்கும், கடந்த 9 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. திருமண நாளை எதிர்பார்த்து காத்திருந்த தினேஷ்குமார், தனது வருங்கால மனைவியான லாவண்யாவை அடிக்கடி சந்தித்து, லவ்வை டெவலப் செய்துள்ளார்.

புதிதாக ஒரு செல்போனும் வாங்கிக் கொடுத்து மணிக்கணக்கில் எதிர்காலம் குறித்து அளவளாவியுள்ளனர். எல்லாம் சுபமாக சென்று கொண்டிருந்த போது கடந்த 19-ம் தேதி திடீரென லாவண்யாவை தனக்கு பிடிக்கவில்லை, திருமணத்தை நிறுத்தி விடுங்கள் என்று பெற்றோரிடம் தினேஷ்குமார் கூறியுள்ளார். இதைக் கேட்டு பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பெண் வீட்டார் கதிகலங்கி நின்றபோது, மறுபுறம் மாப்பிள்ளை வீட்டார் தனது மகனுக்கு 15 சவரன் நகை வரதட்சணையுடன் வேறொரு வரன் வந்ததால், அந்த பெண்ணை திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இந்த அதிர்ச்சி தகவல் தெரிந்ததும், பெண் வீட்டாருக்கு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் வலித்துள்ளது.

இதனால் வேறு வழியின்றி வழக்கறிஞர்கள் மூலமாக பேச்சு வார்த்தையும் நடத்தி, குறித்த தேதியில் திருமணம் செய்ய பத்திரத்தில் மாப்பிள்ளை கையெழுத்திட்டுள்ளார்.

தனது முடிவுக்கு மாறாக கடந்த 24 ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில், அதை நிறுத்துவதற்கு தினேஷ்குமார், எறும்பு சாக்பீஸை கடித்து தின்றுள்ளார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தினேஷ்குமாரை, ஆற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

திருமணத்தை நிறுத்துவதற்காக சிறிதளவு மட்டுமே எறும்பு சாக்பீஸை கடித்து, தினேஷ் தற்கொலை நாடகமாடியது பெண் வீட்டாருக்கு தெரியவந்துள்ளது. இதனால், பெண்ணை மணக்கோலத்தில் அழைத்து வந்து, மருத்துவமனை வளாகத்திலேயே பெண் வீட்டார் திருமணம் செய்து வைத்தனர்.

இதன் மூலம் சிகிச்சை பெற்று வந்த மகா நடிகனுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கப்பட்டது. தற்கொலை நாடகம் கை கொடுக்காததால், தினேஷ்குமார் வேண்டா வெறுப்பாக பெண்ணிற்கு தாலி கட்டினார். அதோடு மண மாலையை தூக்கி எறிந்துவிட்டு புது மாப்பிள்ளை அங்கிருந்து கோபமாக கிளம்பிச் சென்றார்.

நிச்சயக்கப்பட்ட திருமணம் வேண்டாம் என்று தற்கொலை நாடகம் ஆடியவருக்கு, மருத்துவமனை வளாகத்திலேயே திருமணம் நடத்தி வைக்கப்பட்ட சம்பவம் ஆற்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

யாத்திரை சென்ற இடத்தில் தொலைந்த வளர்ப்பு நாய் : 4 நாட்களுக்கு பிறகு வந்து சேர்ந்த அதிசயம்!!

தொலைந்து போன வளர்ப்பு நாய் 4 நாட்களுக்கு பிறகு சொந்தக்காரரிடம் வந்தடைந்துள்ளது.

கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டத்தில் உள்ள நிப்பானி தாலுகாவில் உள்ள யமகர்னியைச் சேர்ந்தவர் ஞானதேவ கும்பரா என்பவர் புனித யாத்திரைக்காக தனது குடும்பத்தாருடன் சென்றுள்ளார்.

குறித்த யாத்திரைக்கு தனது வளர்ப்பு நாயான மகாராஜாவையும் அழைத்து சென்றுள்ளார். இந்த யாத்திரையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவதால் கூட்டம் அதிகரிக்க வண்ணத்திலேயே இருந்துள்ளது.

இந்நிலையில் அலை மோதும் பக்தர் கூட்டத்தில் மகாராஜா தொலைந்து போய் உள்ளது. தொலைந்த நாளை குடும்பத்தின் பல இடத்தில் தேடி அலைந்துள்ளனர். ஆனாலும் நாயை கண்டுப்பிடிக்கவில்லை.

பின் மனதை தளர்த்திக்கொண்டு, யாத்திரை முடிந்து சொந்த ஊரிற்கு சென்றுள்ளனர். அன்றிலிருந்த 4 நாட்களுக்கு பின்னர் மகாராஜா, ஞானதேவ கும்பராவைத் தேடி வந்துள்ளது.

இதை பார்த்த குடும்பத்தினர் ஆச்சரியத்தில் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். சுமார் 195 கி.மீ தூரத்தில் தொலைந்த வளர்ப்பு நாய், தனது குடும்பத்தை தேடி வந்த செய்தி அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வளர்ப்பு நாயின் புகைப்படமும் ஞானதேவ கும்பரா என்பவரின் புகைப்படமும் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

பட்டதாரியான இளம் தாய் பரிதாப உயிரிழப்பு : மருத்துவமனையின் அலட்சியம் காரணமா?

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் குழந்தை பிரசவித்த சில நாட்களில் இளம் தாய் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மன்னார், மதவாச்சி பிரதான வீதி, தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டப்படிப்பை நிறைவு செய்த மரியராஜ் சிந்துஜா (27.07) என தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உயிரிழந்த பெண்ணுக்கு முதலாவது ஆண் குழந்தை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 09ம் திகதி பிறந்த நிலையில் 11ம் திகதி மருத்துவமனையில் இருந்து தாய் சேய் நலமாக வெளியேறியுள்ளார்கள்.

7 நாட்களின் பின்னர் முருங்கன் வைத்தியசாலையில் தையல் வெட்டுமாறு கூறியதையடுத்து கடந்த 16ம் திகதி முருங்கன் வைத்தியசாலையில் தையல் வெட்டப்பட்டதாக பெண்ணின் தாயார் தெரிவித்தார்.

அதன் பின்னர் கடந்த சனிக்கிழமை (27) தாய்க்கு குருதிப் பெருக்கு ஏற்பட்டதை அடுத்து நோயாளர் காவு வண்டி மூலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை நோயாளர் விடுதியில் அனுமதிக்கப்பட்டார்.

குருதி ஓட்டம் கட்டுப்படாமல் தொர்ச்சியாக கசிந்து கொண்டே இருந்ததன் காரணத்தினால் விடிய காலை ஆறு முதல் ஏழு மணி அளவில் சுய நினைவை அவர் இழந்ததாக தாயார் தெரிவித்தார்.

அதன்பின் அவசர சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்ட போது நண்பகல் 11 மணியின் பின்னர் இளம் தாய் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

குருதிப் பெருக்கு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அன்று இரவு வைத்தியர்கள் பார்வையிட்டு இருந்தால் தனது மகளை காப்பாற்றியிருக்கலாம் என பெண்ணின் தாய் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபாவை கூறுகையில், பெண்ணின் மரணம் தொடர்பாக விசேட சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனை நேற்று (29) முன்னெடுக்கப்பட்டது.

அதிக குருதிப் பெருக்கு காரணமாக மரணம் நிகழ்ந்துள்ளதாகவும், மேலதிக பரிசோதனைகளுக்காக உடற்பாகங்கள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறித்த பரிசோதனை அறிக்கை வெளிவந்தால் மரணத்திற்கான காரணத்தை முழுமையாக அறிய முடியும் என கூறிய அவர் , வைத்தியசாலை தரப்பினர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

நாளை கனடா செல்ல காத்திருந்த இளைஞர் சடலமாக மீட்பு : முல்லைத்தீவில் துயர சம்பவம்!!

முல்லைத்தீவு மல்லவி பிரதேசத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவர் கனடாவுக்கு நாளை செல்ல காத்திருந்த நிலையில் வவுனிக்குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த துயர சம்பவம் இன்று (30.07.2024) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் முல்லைத்தீவு யோகபுரம் மல்லாவி பகுதியினை 27 வயது ஆனந்தராசா சஜீவன் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் 20 இலட்சம் பணத்தினை கொண்டு யோகபுரத்தில் இருந்து பாண்டியன் குளத்திற்கு சென்ற இளைஞன் இரவு 8.40 வரை நண்பர்களுடன் தொலைபேசியில் உரையாடியதாக கூறப்படுகின்றது.

அதன் பின்ன அவரது தொலைபேசி வேலை செய்யவில்லை குறித்த இளைஞனின் தொடர்பு கிடைக்காத நிலையில் அவனது நண்பர்கள் தேடியபோது இன்று அதிகாலை பாண்டியன்குளம் குளக்கரையில் மோட்டார் சைக்கில் இனம் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் வவுனிக்குளத்தின் மூன்றாது நீர் சுருங்கையில் (நீர் கொட்டு) பகுதியில் உடலம் கிடப்பது இனம்காணப்பட்டு பிரதேச வாசிகளால் உடலம் மீட்கப்பட்டு வெளியில் எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பாண்டியன் குளம் பொலீசார் நீதிபதி முன்னிலையில் உடலத்தினை மீட்கும் நடவடிக்கையிலம் சம்பவம் தொடர்பிலான விசாரணையினையும் முன்னெடுத்து வருகின்றார்கள்.

இந்நிலையில் இளைஞன் கனடாவிற்கு செல்வதற்காக தயாரான நிலையில் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

அலுவலகத்திற்குள் நுழைந்த பாம்பு : தைரியமாக கையால் தூக்கிச் சென்ற வீரப்பெண்!!

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்று தான் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் அந்த படைகள் அஞ்சும் பாம்பையை பெண் ஒருவர் அசால்ட்டாக கையால் பிடித்து செல்லும் காணோளி ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

பெண்கள் பலர் கரப்பான் பூச்சி, பல்லி என்றாலே நடுங்குவார்கள். சமூகவலைத்தளங்களில் வெளியான அக் காணொளியில், அலுவலகம் ஒன்றுக்குள் சுமார் 6 ஆடி நீளமுள்ள பாம்பு ஒன்று புகுந்துகொண்டுள்ளது.

ஆண்கள் உட்பட ஊழியர்கள் அனைவரும் பயத்துடன் பார்த்துக்கொண்டிருக்க இளம் பெண் ஒருவர் வந்து சற்றும் பயமின்றி அந்த 6 அடி நீளமுள்ள பாம்பை, நாய் , பூனை போன்ற செல்லப்பிராணிகளை பிடிப்பதுபோல கைகளால் பிடித்து பை ஒன்றுக்குள் போட்டு எடுத்துச் செல்கின்றார்.

இந்த காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகும் நிலையில், நெட்டிசன்கள் இந்த வீரப் பெண்மணியை புகழ்ந்துள்ளனர்.

வகுப்பறையில் பாய் விரித்து உறங்கிய ஆசிரியை : காணொளியால் நேர்ந்த கதி!!

வகுப்பறையில் பாய் விரித்து படுத்து உறங்கி ஆசிரியருக்கு மாணவிகள் சிலர் விசிறியால் வீசிறிவிட்ட காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம், அலிகார் மாவட்டம் தானிபூர் பகுதியில் உள்ள கோகுல்பூரில் அரசு ஆரம்பப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

குறித்த பள்ளியில் ஆசிரியை ஒருவர் பாடம் நடத்தாமல் தரையில் பாய் விரித்து படுத்துறங்குகிறார். அவரை சுற்றி மூன்று மாணவிகள் விசிறியால் வீசி விடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து வகுப்பறையில் பாய் விரித்து உறங்கிய ஆசிரியை டிம்பிள் பன்சால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

வெளிநாட்டில் கணவன் முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்ப பெண்!!

முல்லைத்தீவில் உள்ள ஒட்டுசுட்டான் நகர பகுதியில் கிணற்றில் இருந்து இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் இன்றையதினம் (29.07.2024) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணை நேற்றிரவு தொடக்கம் காணவில்லையென வீட்டார் மற்றும் அயலவர்கள், கிராமத்தவர்கள் இணைந்து தேடியுள்ளனர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை.

இவ்வாறான நிலையில் இன்று (29.07.2024) காலை வீட்டு கிணற்றுக்குள் இருந்து சடலமாக இருப்பதை அவதானித்த குடும்பத்தினர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இச் சம்பவத்தில் 30 வயதுடைய டெனிஸ்குமார் தெரினா என்ற இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் திருமணமான பின்பு கணவருடைய வீட்டில் மாமன் மாமியுடன் வசித்து வந்ததாகவும் அவருக்கு 5 வயதுடைய ஒரு மகள் இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணின் கணவர் புலம்பெயர் நாடு ஒன்றில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

உடலம் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் கிராம சேவகரின் உதவியாளரான பெண்ணுக்கு எதிராக போராட்டம்!!

யாழ்ப்பாணம் (Jaffna) – நவாலி வடக்கு ஜே/134 கிராம சேவகர் பிரிவில் கிராம சேவகரின் உதவியாளராக கடமையாற்றும் பெண்ணொருவர் உதவித் திட்டங்களில் பாகுபாடு காட்டுவதாக தெரிவித்து பெண்ணொருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த போராட்டம் நேற்றையதினம் (29.07.2024) கிராம சேவகர் அலுவலகத்திற்கு முன்னால் நடாத்தப்பட்டுள்ளது.

உதவியாளராக கடமையாற்றும் பெண், வருகின்ற உதவித் திட்டங்களை தனக்கு விரும்பியவர்களுக்கு வழங்குவதாகவும், பொதுக் கூட்டங்களுக்கு சமூகமட்ட பொது அமைப்புகளுக்கு அறிவித்தல் வழக்குவதில்லை எனவும், பொதுவான இடங்களில் கூட்டத்திற்கான அழைப்பு அறிவித்தல் ஒட்டப்படுவதில்லை எனவும், இவற்றை தனக்கு விரும்பியவர்களுக்கு தொலைபேசி மூலம் அறியத் தருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பான முறைப்பாட்டை தான் ஏற்கனவே அரசாங்க அதிபர் மட்டத்துக்கு கொண்டு சென்ற நிலையில், இதற்கு முன்னர் இருந்த கிராம சேவகர் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டார் என்றும், புதிதாக வந்த கிராம சேவகரும் அந்த பெண்ணின் கருத்துப்படியே செயற்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசாங்கத்தால் வழங்கப்படும் வாழ்வாதாரங்களிலும் பாகுபாடு காட்டப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு செய்ய வேண்டாம் என தான் பலமுறை கூறி முரண்பட்ட நிலையில், தான் பயங்கரவாதத்தை மீளுருவாக்க செய்யவுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு மொட்டை கடிதம் மூலம் முறைப்பாடு செய்து, தன்னை பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணைக்கு அழைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், குறித்த இடத்திற்கு வந்த கிராம சேவகர் தன்னிடம் எதுவும் கேட்கவில்லை என்றும், இன்றும் இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தான் அனுப்பிய கடிதங்கள், தனக்கு கிடைத்த கடிதங்களை ஆடையில் தொங்கவிட்ட நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

உயிரிழந்த தாயின் இறுதிக்கிரியைகள் நேற்று : பல்கலையில் இன்று பரீட்சை எழுதும் மகள்!!

திடீர் வாகன விபத்தில் உயிரிழந்த தாயாரின் இறுதிக்கிரியைகள் நேற்று இடம்பெற்ற நிலையில் மகள் இன்று (30.07) கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு இறுதிப்பரீட்சையை எழுதும் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்துவிட்டு வீடு திரும்பிய குருநாகல், பொல்பிதிகம பகுதியில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தாயான நிரோஷா தமயந்தி கடந்த 28ஆம் திகதி இரவு விபத்தில் சிக்கி உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் மூத்த மகள் கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்விகற்று வரும் நிலையில், இன்று (30) இறுதிப்பரீட்சை இடம்பெறவுள்ளது.

கடந்த 28 ஆம் திகதி காலை வேலையை முடித்துவிட்டு, பல்கலைகழக பரீட்சை எழுதும் மகளுக்கு இனிப்புகள் செய்து கொடுப்பதற்காக வீடு திரும்பிய போதே விபத்தில் சிக்கியுள்ளார்.

இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 30 ஆம் திகதி செய்ய தீர்மானிக்கப்பட்ட நிலையில், மகளின் பரீட்சை நிமித்தம் நேற்று (29) திகதி இறுதிக்கிரியை மேற்கொள்ள உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதற்கமைய, உயிரிழந்த தாயின் இறுதிக் கிரியைகள் பெருந்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் நேற்று (29) கொருவை பொது மயானத்தில் இடம்பெற்றுள்ளது.

 

மரணிப்பதற்கு முன்னர் இருவரை வாழ வைத்த பெண் : குடும்பத்தினர் நெகிழ்ச்சி!!

மூளைச்சாவு அடைந்த பெண் ஒருவரின் இரண்டு சிறுநீரகங்களையும் தானமாக வழங்க குடும்பத்தினர் விருப்பம் தெரிவித்தமையினால் இருவர் மறுவாழ்வு பெற்றுள்ளனர் என அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அயந்தி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை – லுனம நோனகம ஹெல்பேஜ் வீடமைப்புத் தொகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான சுசாந்தா (57) என்ற தாயே தனது இரு சிறுநீரகங்களையும் மேலும் இருவருக்கு தானமாக வழங்கியுள்ளார்.

இவரது மூளைக்குள் விஷக்கிருமி நுழைந்தமையினால் அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாது மூளைச்சாவு அடைந்துள்ளார்.

இதற்கமைய, மூளைச்சாவு அடைந்த பெண்ணின் கணவர் மற்றும் பிள்ளைகளின் விருப்பத்திற்கு அமைய இரண்டு சிறுநீரகங்களும் இருவருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணர் டொக்டர் ஹிருஷிகா டி சில்வா, டொக்டர் மகேஷ் பிரியந்த, பிசியோதெரபிஸ்ட் கசுன் பிரபாசர மற்றும் நரம்பியல் வைத்திய நிபுணர் வைத்தியர் நிரோஷன் செனவிரத்ன, அறுவை சிகிச்சை நிபுணர், மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவின் ஊழியர்கள் இணைந்து சத்திரசிகிச்சையினை வெற்றிகரமாக முன்னெடுத்து இருவரை வாழ வைத்துள்ளனர்.

இலங்கையில் அதிகளவான நோயாளர்கள் உடல் உறுப்புகள் செயலிழந்து பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும், உடல் உறுப்புகளைப் பெறுவது இலகுவான காரியமல்ல எனவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற மூளைச்சாவு அடைந்த நோயாளிகளிடமிருந்து எடுக்கப்படும் உறுப்புகள் எட்டு நோயாளிகளை உயிருடன் வைத்திருக்க முடியும் என்பதால், நோயாளியின் குடும்பத்தினரின் ஒப்புதலின் பேரில் அறுவை சிகிச்சை செய்யப்படுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மன்னாரில் பட்டதாரியான இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு : வைத்தியசாலை மீது குற்றச்சாட்டு!!

மன்னார் (Mannar) – மதவாச்சி பிரதான வீதி, தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இளம் தாய் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த இளம் தாய் பட்டப்படிப்பை நிறைவு செய்த 27 வயதுடைய மரியராஜ் சிந்துஜா என தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

இறந்த இளம் தாய்க்கு முதலாவது ஆண் குழந்தை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 09ஆம் திகதி பிறந்துள்ளது. 11ஆம் திகதி மருத்துவமனையில் இருந்து தாய் சேய் நலமாக வெளியேறியுள்ளார்கள்.

7 நாட்களின் பின்னர் முருங்கன் வைத்தியசாலையில் தையல் வெட்டுமாறு கூறியதையடுத்து, கடந்த 16ஆம் திகதி முருங்கன் வைத்தியசாலையில் தையல் வெட்டப்பட்டதாக இறந்த பெண்ணின் தாயார் தெரிவித்தார்.

தனது மகளை அவரே மருத்துவமனையில் வைத்து பராமரித்து வந்துள்ளார். அதன் பின்னர் கடந்த சனிக்கிழமை (27.07) அவருக்கு குருதிப் பெருக்கு ஏற்பட்டதையடுத்து, அன்று இரவு நோயாளர் காவு வண்டி மூலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று ஓ.பி.டி பதிவுகளின் பின்னர் உரிய நோயாளர் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குருதி ஓட்டம் கட்டுப்படாமல் தொடர்ச்சியாக கசிந்து கொண்டே இருந்ததன் காரணத்தினால் காலை ஆறு முதல் ஏழு மணி அளவில் சுய நினைவை அவர் இழந்ததாக தாயார் தெரிவித்தார்.

அதன்பின் அவசர சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்ட போது, நண்பகல் 11 மணியின் பின்னர் இளம் தாய் மரணித்து விட்டதாக செய்தி எமக்கு கிடைத்தது.

குருதிப் பெருக்கு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அன்று இரவு வைத்தியர்கள் பார்வையிட்டு இருந்தால் தனது மகளை காப்பாற்றியிருக்கலாம் என இந்த பெண்ணின் தாய் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இறந்த இளம் தாயான சிந்துஜா, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த போதும் பட்டமளிப்பு நிகழ்வு இன்னும் நடைபெறவில்லை.

குறித்த பட்டமளிப்பு நிகழ்வு இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது. கனவுகளோடு படித்து திருமண வாழ்க்கைக்குள் நுழைந்து உயிரிழந்த இளம் தாய் இனி உயிருடன் மீளப் போவதில்லை.

ஆனால், இறுதி நேரத்தில் உடனிருந்து பராமரித்து வந்த இறந்த பெண்ணின் தாய் தெரிவித்த குற்றச்சாட்டில் ஏதேனும் உண்மை இருக்கிறதா என்று நீதியான விசாரணை செய்து உண்மைத் தன்மையை வெளிப்படுத்த சுகாதாரத் துறையினர் முன்வர வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா வை வினவிய போது,

“குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக விசேட சட்ட வைத்திய அதிகாரியின் சடலப் பரிசோதனை நேற்றையதினம் (29.07.2024) முன்னெடுக்கப்பட்டது.

அதிக குருதிப் பெருக்கு காரணமாக மரணம் நிகழ்ந்துள்ளது. மேலதிக பரிசோதனைகளுக்காக உடற்பாகங்கள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த பரிசோதனை அறிக்கை வெளிவந்தால் மரணத்திற்கான காரணத்தை முழுமையாக அறிய முடியும். எப்படி இருந்தாலும் வைத்தியசாலை தரப்பினர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார்.

 

பாரிஸ் ஒலிம்பிக்கில் இலங்கைக்கு கிடைத்துள்ள பெருமை!!

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான சிறந்த கலாச்சார ஆடைகளில் இலங்கைக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.

இதன்போது 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன. அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.

மேலும் முதலாம் இடத்தை மங்கோலியாவும் இரண்டாம் இடத்தை மெக்சிகோவும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழர் பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்த கொடுமை : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டில் இருந்து திருகோணமலை புறா தீவிற்கு விடுமுறைக்காக வந்த இருபது பேர் கொண்ட இலங்கையர்கள் குழு ஒன்று புறா தீவின் சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சுற்றுலா பணியாளர்களால் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த குழுவினர் அண்மையில் புறா தீவிற்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் அவர்களிடமிருந்து 90,000 ரூபாவை புறா தீவு சுற்றுலா ஊழியர்கள் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை படகு சவாரி, நீச்சல் போன்றவற்றுக்கு தேவையான உபகரணங்கள் மிகவும் பழுதடைந்த நிலையிலேயே அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அந்த உபகரணங்களை சுற்றுலா பயணிகள் திருப்பிக் கொடுக்கும் போது, குறித்த உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டதால் இவ்வாறு பழுதடைந்துள்ளதாக தெரிவித்து, மேலதிகமாக 12,000 ரூபாவை செலுத்துமாறு சுற்றுலா வழிகாட்டிகள் கேட்டுள்ளனர்.

ஆனால், சுற்றுலா பயணிகள் பணத்தை தர மறுத்ததால், சுற்றுலா குழுவில் இருந்த பெண்கள் உட்பட அனைவரையும் சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளிட்ட சிலர் பொல்லுகளால் தாக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் சுற்றித்திரிந்த 10 பேர் அதிரடியாக கைது!!

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் மக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்கள் , மது போதையில் வாகனம் செலுத்தியவர்கள், போக்குவரத்து விதிமுறைகள் மீறி வாகனம் செலுத்தியவர்கள் என 10 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமைகளில் பண்ணை பகுதியில் பெருமளவாவர்கள் நடை பயிற்சி செய்வதற்கும் , குழந்தைகள் , சிறுவர்களுடன் கடற்கரையில் பொழுதை கழிக்கவும் என கூடுவார்கள்.

இந்த நேரங்களில் இளைஞர்கள் குழுக்கள் பெரிய சத்தங்களுடன் மோட்டார் சைக்கிள் ஓடுதல் , வீதியில் ஆபத்தை விளைவிக்கும் விதமாக மோட்டார் சைக்கிள்களை செலுத்துதல் என மோட்டார் சைக்கிள்களில் சாகசங்கள் செய்து மக்களுக்கு இடையூறு விளைவித்து வந்தனர்.

அது தொடர்பில் யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டாரவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து , போக்குவரத்து பொலிஸார் நேற்று பண்ணை பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அதன் போது மோட்டார் சைக்கிளை ஆபத்து விளைவிக்கும் வகையாக செலுத்தியமை , போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை மது போதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களின் 10 மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டுள்ள 10 பேரையும் , அவர்களின் மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள பொலிஸார் , நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

வாகன இறக்குமதிக்கான அனுமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு ஆரம்ப கட்டத்தில் அனுமதி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தேர்தலை இலக்குவைத்து இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதிக்கும் நிலைக்கு ஒரு அரசாங்கம் நாட்டை மீண்டும் இட்டுச்செல்ல முடியாது. தற்போது வாகனங்களை தவிர ஏனைய அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன.

வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாக நீக்கப்படும், முதல் காலாண்டில் வணிக நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களுக்கு அனுமதி வழங்குவோம் என்றும் கூறியுள்ளார்.

 

வைத்தியசாலையிலுள்ள மகனை பார்க்க சென்ற 25 வயது இளம் தந்தை விபத்தில் சிக்கி பலி!!

கொழும்பு – காலி பிரதான வீதியில் பயாகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 25 வயதுடைய இளம் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் தனது பிள்ளையை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற போதே விபத்து இடம்பெற்றுள்ளது.

மக்கொனை அக்கரமலை பிரதேசத்தை சேர்ந்த இளம் தந்தையே உயிரிழந்துள்ளார்.

களுத்துறை நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பிள்ளையை பார்க்கச் சென்ற இவர் நிறுத்தப்பட்டிருந்த பஸ்ஸை கடக்க முற்பட்ட போது, எதிரே வந்த லொறியுடன் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.