சுற்றுலா செல்வதற்கான சிறந்த நாடுகளில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்!!

சுற்றுலா செல்வதற்கான சிறந்த முதல் மூன்று நாடுகளுள் இலங்கை சேர்க்கப்பட்டுள்ளது.

அதனுடன், கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அண்மைய நிலமைகளால் மீள எழுந்திருக்கும் இலங்கை இவ்வாண்டில் சுற்றலாவுக்கான சிறந்த நாடுகளுள் முன்னணியில் உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஃபோர்ப்ஸ் நாளிதழின்படி, 2024ஆம் ஆண்டில் கோடைக் காலத்தில் சுற்றுலா செல்வதற்காக கிரீஸ் , மொரிஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் உலகின் சிறந்த சுற்றுலா நாடுகளாக பெயரிடப்பட்டுள்ளன.

இதேவேளை, சுற்றுலா பயணிகளுக்காக அதிசொகுசு ரீதியிலான வசதிகள் இலங்கையில் காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இலங்கை மேடு பள்ளங்களுடன் மற்றும் கண்கவர் கடற்கரைகளுடன் காணப்படக்கூடிய தீவாக உள்ளதுடன் ஒப்பீட்டளவில் பாலி நாட்டைப் போன்ற ஈர்ப்பைக் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை அழகை கண்டுகளிக்கும் விதத்தில் 22 தேசிய பூங்காக்கள் உள்ளதாகவும் ஃபோர்ப்ஸ் நாளிதழ் கூறுகிறது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நால்வர் கைது!!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளுடன் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் நுழைய முற்பட்ட வெளிநாட்டு பெண் உட்பட நான்கு பயணிகள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில், 29,200 சிகரெட்டுகள் அடங்கிய 146 சிகரெட் பெட்டிகளை மறைத்து வைத்திருந்த 37 வயதுடைய சீனப்பெண் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கொழும்பில் கிளப் ஒன்றில் பணிபுரியும் பெண் ஒருவரும், பாணந்துறை பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய நபரும், மத்துகம பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய சாரதி ஒருவரும் சட்டவிரோதமான முறையில் 39,000 சிகரெட்டுகள் அடங்கிய 195 அட்டைப்பெட்டி சிகரெட்டுகளை தமது பயணப் பொதிகளில் மறைத்து வைத்திருந்த போது சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

திருமணமான நான்கே மாதங்களில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு : நடந்தது என்ன?

தமிழக மாவட்டம் சேலத்தில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள ஓலைப்பாட்டியைச் சேர்ந்தவர் நித்யா. 21 வயதான இவர் வேறு சமூகத்தைச் சேர்ந்த தினேஷ் (23) என்பவரை காதலித்து வந்தார்.

இவர்கள் இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில் நித்யா தனது கணவர் வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்தார். காலையில் எழுந்த தினேஷ் மனைவி சடலமாக தூக்கில் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் தகவல் அறிந்த பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து நித்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நித்யாவின் தாய் அளித்த புகாரின் பேரில் தாரமங்கலம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் தினேஷிற்கும், நித்யாவிற்கும் இடையே கடந்த ஒரு மாதமாக தனிக்குடித்தனம் செல்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் நித்யா இந்த விபரீத முடிவை எடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது.

திருமணமான நான்கே மாதங்களில் இளம்பெண் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

யாழில் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக கைதான பெண்!!

யாழ்ப்பாணம் (Jaffna) சிவபூதராயர் கோவிலடி, சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவர் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக கசிப்பு மற்றும் கோடாவுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று (28.07) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, 80 ஆயிரம் மில்லிலீட்டர் கோடா மற்றும் 2250 மில்லிலீட்டர் கசிப்புடன் குறித்த பெண் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு தலைக்காதலால் விபரீதம் இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பை உரண் பகுதியில் வசித்து வருபவர் 22 வயது யாஷிரி ஷிண்டே. இவர் பேலாப்பூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 25-ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். இதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் வேலை பார்க்கும் இடத்தில் விசாரித்தனர். அன்றைய தினம் இளம்பெண் முன்கூட்டியே புறப்பட்டு சென்று விட்டதாக தெரிவித்தனர். பல இடங்களில் தேடி பார்த்தும் பலனில்லை. மறுநாள் காலை தங்கள் மகள் காணாமல் போனதாக போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து யாஷிரி ஷிண்டேவை தேடி வந்தனர். ரயில் நிலையம் அருகே முட்புதரில் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் அங்கு சென்று பெண்ணின் உடலை மீட்டு ஆய்வு நடத்தினர். இதில் வயிறு, முதுகு போன்ற இடங்களில் பல கத்தி குத்து காயங்கள் இருந்ததை கண்டனர். இதனால் அப்பெண் கொலையானது உறுதி செய்யப்பட்டது. உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காணாமல் போனதாக புகார் அளித்த பெற்றோரை மருத்துவமனைக்கு வரவழைத்து அடையாளம் காண செய்தனர். இதில் அப்பெண் யாஷிரி ஷிண்டே என தெரியவந்தது. மகளின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

இதையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தாவூத் சேக் என்பவர் தனது மகளை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், அவர் கொலை செய்து இருக்கலாம் என இளம்பெண்ணின் தந்தை சுரேந்திர குமார் போலீசாரிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் விவேக் பன்சாரே கூறுகையில், “சந்தேகத்தின் பேரில் தாவூத் சேக் என்ற நபரை பிடிக்க 7 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. கொலை செய்யப்பட்ட நாளில் யாஷிரி ஷிண்டே அரை நாள் மட்டும் வேலை செய்துள்ளார்.

அன்று பிற்பகல் 3.30 மணி முதல் 4 மணி வரையிலான நேரத்தில் கொலை சம்பவம் நடந்து இருக்கலாம். கொலைக்கு முன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்” என்றார்.

கோர விபத்தில் தாய் மரணம் : உதவியின்றி தவிக்கும் பிள்ளைகள்!!

குருணாகல் பொல்பித்திகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 4 பிள்ளைகளின் தாய் உயிரிழந்தார்.

பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மகள் மற்றும் கல்வியில் ஈடுபட்டுள்ள மேலும் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே உயிரிழந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 பிள்ளைகளும் தாயாரின் உழைப்பிலேயே வாழ்த்து வந்துள்ளனர். பொல்பித்திகம, பிரதேசத்தில் வசித்து வந்த 46 வயதான எச்.எச். நிரோஷா தமயந்தி, என்ற இந்த பெண், ஆடை தொழிற்சாலையில் சேவையில் ஈடுபட்டிருந்தார்.

நேற்று காலை 7.30 மணியளவில் பணிக்கு செல்லும் போது, அவர் விபத்தில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இவருடன் பணிபுரிந்து வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த மற்றுமொரு பெண்ணும் ஆண் ஒருவரும் விபத்தில் படுகாயமடைந்து குருநாகல் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து பொல்பித்திகம நோக்கி சென்ற பாரவூர்தியின் சாரதி உறங்கியதால், வாகனம் வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியது. இதனையடுத்து பிரதான வீதியை நோக்கி சென்று மூவர் மீது மோதியுள்ளது.

இதனையடுத்து, பாரவூர்தியை ஓட்டிச் சென்ற 27 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மஹவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பித்திகம போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அவிசாவளையில் நீரில் மூழ்கி சிறுவன் பலி!!

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாச்சிமலை ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (28.07) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் பண்டாரகமை (Bandaragama) பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய சிறுவனொருவரே உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உயிரிழந்த சிறுவன் தனது நண்பர்களுடன் நாச்சிமலை ஆற்றில் நீராடிக் கொண்டிருக்கும் போது சிறுவனும் அவரின் நண்பரொருவரும் திடீரென நீரில் மூழ்கியுள்ளனர்.

இதன்போது, சிறுவனின் நண்பர் பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில் குறித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை உயிரிழந்த சிறுவனின் சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

இந்திய அணியை வீழ்த்தி ஒன்பதாவது ஆசிய மகளீர் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணி!!

ஒன்பதாவது ஆசிய மகளீர் கிண்ண தொடரில் இலங்கை அணி 08 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணி நிர்ணயித்த 166 என்ற வெற்றியிலக்கை கடந்த இலங்கை அணி ஒன்பதாவது ஆசிய மகளீர் கிண்ணத்தை தன்வசப்படுத்தியுள்ளது. இலங்கை அணி ஆசியக் கிண்ணத்தை முதல் முறையாக வென்றுள்ளது.

ரங்கிரி தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Smriti Mandhana அதிகபட்சமாக 60 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Kavisha Dilhari 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் 166 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் Harshitha Samarawickrama ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 69 ஓட்டங்களை பெற்றதுடன், அணித்தலைவர் Chamari Athapaththu 61 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

வவுனியா நகரசபை தேசிய விருது வழங்கும் நிகழ்வில் 2ஆம் இடம் பிடித்து சாதனை!!

ஸ்வர்ணபுரவர தேசிய விருது வழங்கும் நிகழ்வில் 20 விருதுகளைப் பெற்று வடக்கு மாகாணம் முதலாமிடம் பெற்றுள்ளதுடன், அதில் வவுனியா நகரசபை இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றங்களின் செயற்றிறனை மதிப்பிடுவதற்கான ஸ்வர்ணபுரவர தேசியவிருது வழங்கும் விழாவில் பிரதமர் தினேஸ் குணவர்த்தன அவர்களால் ஸ்வர்ணபுரவர தேசிய விருது வழங்கி வைக்கப்பட்டது.

நாடு முழுவதுமுள்ள 276 உள்ளுராட்சி மன்றங்களுக்கு கட்டம் கட்டமாக நடாத்தப்பட்ட சபைகளின் செயற்றிறன் மதிப்பீட்டின் அடிப்படையில் 62 விருதுகளில் வடக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்கள் 20 விருதுகளைப் பெற்று தேசிய ரீதியில் முதலாமிடம் பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை நகரசபை முதலாமிடத்தைப் பெற்று தங்க கேடயத்தையும் பெற்றுக் கொண்டது.

வவுனியா வீரர் சசிகுமார் டனுசன் தேசிய கனிஸ்ட போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாமிடம்!!

கொழும்பு தியகம விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வில் வவுனியா வீரர் சசிகுமார் டனுசன் 3000 மீற்றர் போட்டியில் 10நிமிடம் 0 செக்கனில் ஓடி முடித்து தேசிய ரீதியில் 2ம் இடத்தினை பெற்றுள்ளார்.

முதலாம் மற்றும் மூன்றாவது இடத்தினை இரானுவ வீரர்கள் பெற்றிருந்தமையுடன் ஓர் தமிழ் விளையாட்டு வீரானாக தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினை பெற்று சசிகுமார் டனுசன் வவுனியா மாவட்டத்திற்கு மாத்திரமின்றி வடமாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இவ் விளையாட்டு வீரர் வடமாகாணத்தில் கடந்த 2013ம் ஆண்டு 800 மீற்றர் ஒட்டப்போட்டியில் 1நிமிடம் 59.03 செக்கன் நேரத்தில் ஒடி முடித்த சாதனையினை 11 வருடங்களின் பின்னர் 06.07.2024 அன்று இடம்பெற்ற வட மாகாண மட்ட விளையாட்டு பெருவிழாவின் போது,

800 மீற்றர் ஒட்டப்போட்டியில் 1நிமிடம் 59.03 செக்கன் நேரத்தில் ஓடி சமன் செய்துள்ளமையுடன் வடமாகாணத்தில் சிறந்த சுவட்டு வீரராக சம்பியனை வவுனியா மாவட்ட வீரரான சசிகுமார் டனுசன் தம்வசமாக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியா இளைஞன் தேசியமட்ட விளையாட்டுப் போட்டியில் வரலாற்று சாதனை!!

தேசியமட்ட விளையாட்டுப் போட்டியில் வடமாகாணத்தை பிரிநிதித்துவப்படுத்தி வவுனியா வடக்கு இளைஞன் தங்கப்பதக்கம் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

48வது தேசிய மட்ட விளையாட்டு போட்டி கொழும்பில் இடம்பெற்றது. இதில் குத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்தை பிரதிநிதிப்படுத்தி முதன்முறையாக தங்கப்பதக்கத்தை பெற்று வவுனியா நெடுங்கேணியை சேர்ந்த முத்தையா கிரிதரன் என்ற இளைஞன் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

குறித்த குத்துச்சண்டை போட்டியானது கொழும்பு டொரின்டன் உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றிருந்தது. இதில் 63.5 தொடக்கம் 67 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டே குறித்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதேவேளை வடமாகாண தலைமை பயிறுவிப்பாளர் மு.நிக்சன் ரூபராஜ் தலைமையிலான அணியினர் ஒரு தங்கம், 02 வெள்ளி 05 வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுக்கெண்டனர்.

இதில் குறித்த பயிற்றுவிப்பாளரின் பயிற்சியின் கீழான வவுனியா மாவட்ட குத்துச்சண்டை அணியினர் 01 தங்கம் மற்றும் 03 வெண்கலப்பதக்கத்தினை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

டிப்ளோமா பட்டதாரிகளுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்!!

டிப்ளோமா கற்கை நெறியினை பூர்த்தி செய்தவர்கள் எதிர்காலத்தில் ஆசிரியர் தொழிலில் ஈடுபட முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இந்த புதிய முறைமை தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“எதிர்காலத்தில் அனைத்துக் கல்லூரிகளும் ஒரே பல்கலைக்கழகமாக இணைக்கப்படும். 2028ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் இளநிலைக் கல்விப் பட்டதாரிகளாக இருப்பார்கள்.

உலகில் வேகமாக மாறிவரும் அறிவுக்கு ஏற்ப, ஆசிரியர்கள், மருத்துவர்கள் என ஒவ்வொரு தொழில் வல்லுநர்களும் தங்களது கல்வி தகைமையை மேம்படுத்த வேண்டும்.

அதேவேளை, ஆரம்பக் கல்வியின் அடிப்படையான அழகியல் பாடத்தை ஒருபோதும் பாடத்திட்டத்தில் இருந்து நீக்க முடியாது. மேலும், செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழிநுட்பம் ஆகிய பாடங்களை இணைத்து பாடசாலை பாடத்திட்டம் ஆக்கப்பூர்வமாக சர்வதேச தர கல்விக்கு உயர்த்தப்படும்.

இதற்கமைய, 100 பாடசாலைகளில் முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டு, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து அந்த ஆசிரியர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்ற உரிமம் வழங்கப்படும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.

 

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பில் நடைமுறைக்கு வரும் புதிய முறைமை!!

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது உரிய வாக்களிப்பு நிலையத்தைத் தவிர வேறு இடத்தில் வாக்களிக்க விண்ணப்பிக்க முடியும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நியமிக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க முடியாது என்பதற்கான நியாயமான காரணங்கள் இருந்தால், ​​வேறு ஒரு வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க விண்ணப்பிக்கலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவையான விண்ணப்பப் படிவங்களை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

உரிய விண்ணப்பங்கள் தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகம், சரண மாவத்தை, ராஜகிரிய என்ற முகவரிக்கு ஒகஸ்ட் முதலாம் திகதி அல்லது அதற்கு முன்னர் அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பதாரர் வசிக்கும் பகுதியில் உள்ள கிராம அலுவலரால் சான்றளிக்கப்பட வேண்டும். கிராம அலுவலர் சான்றிதழ் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலுக்கான செல்லுபடியாகும் ஒருங்கிணைக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள தகவல்களை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட செயலகங்கள், மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் அல்லது தேர்தல்கள் ஆணைக்குழுவின் www.election.lk என்ற இணையத்தளத்தில் பட்டியல் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

திருட சென்ற இடத்தில் ஏமாற்றம் : 20 ரூபா டிப்ஸ் வைத்து சென்ற கொள்ளையன்!!

திருட வந்த ஓட்டலில் திருடுவதற்கு எதுவும் இல்லாததால் விரக்தியடைந்த திருடன் இரக்கப்பட்டு 20 ரூபாயை அங்கு வைத்து சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் முகத்தை துணியால் மறைந்துள்ள திருடன் திருடுவதற்கு எந்த மதிப்புமிக்க பொருளும் கிடைக்காமல் விரக்தியடைந்து 20 ரூபாய் நோட்டை அங்கு வைத்து செல்கிறார்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த சம்பவம் இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் வழக்கு பதிந்துள்ள பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நான்கு பிள்ளைகளை தவிக்கவிட்டு உயிரை மாய்த்த தாய் : இலங்கையில் நடந்த சோகம்!!

கேகாலை, வறக்காப்பொல பிரதேசத்தில் கிணற்றில் வீழ்ந்து நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வறக்காப்பொல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (26) அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கேகாலை, வறக்காப்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயொருவரே உயிரிழந்துள்ளார்.

அவரது கணவர் கடந்த 2005 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ள நிலையில் இவர் தனது இரண்டு பெண் பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த தாயார் நேற்று (26) அதிகாலை ஒரு மணியளவில் தனது மகளிடம் குடிப்பதற்கு தேநீர் கேட்டுள்ளார். அதன் பின்னர், காலை 4 மணியளவில் தனது தாய் வீட்டில் இல்லாததை அவதானித்த மகள் தாயை தேடியுள்ளார்.

இதன்போது, வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றிற்குள் தாய் சடலமாக கிடப்பதை கண்ட மகள் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து உயிரிழந்தவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக கேகாலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் தொடர்பான மேலதிக விசாரணைகளை வறக்காப்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

ஐபோனுக்காக 8 வயது தங்கையை கொன்ற அக்கா… கையும் களவுமாக சிக்கிய பரிதாபம்!!

ஐபோனுக்காக 8 வயது சிறுமியை கழுத்தை நெரித்து கொன்ற 12 வயது அக்காவை பொலிஸார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் டென்னிசியில் கோடை விடுமுறைக்காக 2 சிறுமிகள் தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு ஐபோன் தொடர்பாக இரண்டு சிறுமிகளுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை தொடர்ந்து, கோபமடைந்த 12 வயது சிறுமி தனது 8 வயது தங்கை தூங்கும் போது கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.

அத்துடன் தன்னுடைய குற்றத்தை மறைப்பதற்காக தங்கையின் உடலை கட்டிலுக்கு அடியில் மறைத்தும் வைத்துள்ளார். ஆனால் அந்த அறையில் சிசிடிவி காட்சிகள் பொறுத்தப்பட்ட இருந்த நிலையில் இந்த சம்பவம் முழுவதும் அதில் பதிவாகியிருந்தது.

இந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து 12 வயது சிறுமியை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட குழந்தையின் மீது கொலை மற்றும் ஆதாரங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.