2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் திருமண நிச்சயம் செய்த முதல் காதல் ஜோடி!!

உலக விளையாட்டுப் போட்டியில் வீராங்கனைகள் பதக்கம் வென்றால், உலகையே வென்றது போல் மகிழ்ச்சி அடைவார்கள்.

அதே மேடையில் வாழ்க்கை துணையை கண்டால் அவர்களின் மகிழ்ச்சி ஆயிரம் மடங்கு இருக்கும். சமீபத்தில், ஒரு காதல் ஜோடி பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கள் வாழ்க்கையின் மறக்கமுடியாத நாளை கொண்டாடியது.

இந்த காதல் ஜோடி தங்கள் நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் முன்னிலையில் காதலை வெளிப்படுத்தி மோதிரம் மாற்றிக்கொண்டனர். இதன் மூலம், 2024 Paris Olympic போட்டியில் நிச்சயம் செய்துகொண்ட முதல் ஜோடி என்ற பெருமையை பெற்றனர்.

அர்ஜென்டினா அணியில் பாப்லோ சிமோனெட் (Pablo Simonet) மற்றும் பிலர் காம்போய் (Pilar Campoy). தாங்கள் திருமண நிச்சயம் செய்துகொள்ள இதை விட சிறந்த தருணம் இல்லை என்று இருவரும் நினைக்கிறார்கள்.

வெள்ளிக்கிழமை, அவர்கள் தங்கள் நண்பர்கள் முன்னிலையில் அடக்கமாக நிச்சயதார்த்தம் செய்தனர். அந்த புகைப்படங்களை ஒலிம்பிக் அமைப்பாளர்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.

அர்ஜென்டினா ஹேண்ட்பால் மற்றும் ஹாக்கி வீரர்களின் முன்னிலையில் பாப்லோ சிமோனெட் மற்றும் பிலர் காம்போய் ஆகியோர் சிறப்பு தருணங்களை நினைவுகளாக மாற்றினர்.

உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள். அனைத்து நல்வாழ்த்துக்களும், இன்ஸ்டா இடுகையில் தம்பதிகளாக வருவதற்கு ஒலிம்பிக் வாழ்த்துக்கள்.

பாப்லோவும் பிலரும் 2015 முதல் டேட்டிங் செய்து வருகின்றனர். தங்களது 9 வருட காதல் பயணத்தை ஒலிம்பிக் மைதானத்தில் வெளிப்படுத்தி தம்பதிகளாக மாற விரும்பினர்.

முதலில், பாப்லோ மண்டியிட்டு பிலரிடம் முன்மொழிந்தார். பிலர் மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தார். உடனே பாப்லோ மோதிரத்தை போட்டு நிச்சயதார்த்தத்தை முடித்தார். பின்னர் இருவரும் தங்களது குழு உறுப்பினர்களுடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர்.

 

மகன் இறந்த தேதியில் தாயும் தற்கொலை.. தனியே தவிக்கும் கணவர், மகள்!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர்கள் ரிச்சர்ட் (வயது 37), மீனாட்சி (வயது 35). தம்பதியருக்கு 13 வயதில் ஜெஸ்ஸி என்ற மகளும், டோனி என்ற 12 வயது மகனும் உள்ளனர்.

ஒரகடம், மீனாட்சிதாம்பரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரிச்சர்ட் வேலை பார்த்து வருகிறார். ஜெஸ்சி சாலமங்கலம் பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். டோனி ஆதனஞ்சரியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.

சரியாக படிக்கவில்லை என பெற்றோர் திட்டியதால், கடந்த ஜூன் மாதம் (25.06.2024) மாலை 3:50 மணியளவில் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். ரிச்சர்ட், மீனாட்சி, ஜெஸ்ஸி ஆகியோர் டோனியின் மரணத்தைத் தாங்க முடியாமல் தவித்தனர்.

மேலும் மகன் இறந்த தேதியில் இருந்து மீனாட்சி வேலைக்கு செல்லாமல் வீட்டில் கதறி அழுதுள்ளார். மகன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் கணவர் வேலைக்கு, மகள் பள்ளிக்கு சென்ற நிலையில், மகன் இறந்த அதே தேதியில் மீனாட்சி வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மகனுக்குப் பிடித்த வெஜ் பிரியாணி, பிஸ்கட், முட்டை, மீன் போன்றவற்றைச் செய்துவிட்டு 35 வயது தாய் தற்கொலை செய்துகொண்டார்.இறந்து போன மீனாட்சியின் மகன் பாசத்தை என்ன சொல்வான் என அப்பகுதி மக்கள் வேதனையில் புலம்பினர்.

வளர்ந்த மகளும், கணவரும் தனியே தவித்து வருகின்றனர். மணிமங்கலம் போலீசார், மீனாட்சியின் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

தந்தையும் மகனும் உயிரிழப்பு : பெண்கள் இருவர் மருத்துவமனையில்!!

பாரவூர்தி ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர்.

பிடிகல – மாபலகம வீதியின் மத்தக்க பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் இரு பெண்கள் காயமடைந்து எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே காரில் பயணித்துள்ளதுடன், குடும்ப அங்கத்தவர் ஒருவரே காரை செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் குறித்த வீதியில் பயணித்த அதிபர் ஒருவரும் சிறு காயங்களுடன் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் விபத்து தொடர்பில் பாரவூர்தி சாரதியை பிடிகல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

5 பெண்கள் உட்பட 12 பேர் அதிரடியாக கைது!!

கட்டார், நியூசிலாந்து, மலேசியா, ருமேனியா, கனடா நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை ஏமாற்றிய 5 பெண்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 5 நாட்களின் காலப்பகுதியில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் 12 மோசடி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜூலை 22 ஆம் திகதி தொடக்கம் இன்று (26 ஆம் திகதி) வரையான காலப்பகுதியில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி நியூசிலாந்தில் வேலை வாய்ப்புக்கான நேர்முகப் பரீட்சைகளை நடாத்திய குருநாகலில் உள்ள சட்டவிரோத முகவர் நிறுவனம் ஒன்றும் சோதனையிடப்பட்டதுடன், அங்கு இருந்த 108 கோப்புகளும் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பிரான்ஸில் காதலியின் கண்முன்னே விபரீத முடிவெடுத்து உயிரிழந்த கிளிநொச்சி இளைஞன்!!

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 4 வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டிக்கு அகதி கோரிக்கை அமைவாக புலம் பெயர்ந்துள்ளார்.

இளைஞரின் குடும்பம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இறுதி யுத்தத்தில் சகோதரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவரின் சகோதரன் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வரும் நிலையில் அவரின் உதவியுடன் குறித்த இளைஞர் பிரான்ஸ் நாட்டுக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் தரகர் ஊடாக நுவரெலியா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது, இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த இளைஞர் அதிக பணத்தை பெண் விரும்பும் தேவைகளையும் நிறைவு செய்து வந்துள்ளார். இறுதியாக ஒரு கோடி 80 லட்சம் ரூபா பணம் குறித்த பெண்ணுக்கு அனுப்பியதாக கூறப்படுகின்றது.

அதனை பெற்றுக் கொண்ட பெண் தனது சகோதரியின் திருமணத்தை சிறப்பாக செய்து முடித்துள்ளார். இவ்வாறு பல தேவைகளையும் இந்தியாவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றும் வந்துள்ளனர்.

கடந்த 23-07-2024 அன்று இளைஞருக்கும் பெண்ணக்கும் இடையில் வீடியோ காலில் கருத்து முரண்பாடு வந்து காதலி கண்முன் இளைஞர் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக இளைஞரின் குடும்பத்தினர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

காதலியை காண யாழ்ப்பாணம் சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி!!

யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் காதலியை காண சென்ற இளைஞன் ஒருவனை கடத்திச் சென்ற கும்பல் வாளால் வெட்டி சித்திரவதை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று (26.07.2024) மாலை இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சியில் இருந்து தனது காதலியை பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதிக்கு குறித்த இளைஞர் சென்றுள்ளார்.

இதன்போது, அங்கு கூடிய அடையாளம் தெரியாத நபர்கள் இளைஞனை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்று தலை முடியை வெட்டி வாளால் உடலில் வெட்டி சித்திரவதை செய்துள்ளனர்.

இதன்பின்னர், அந்த இளைஞனை உடுவில் பகுதியிலுள்ள வீதியொன்றில் போட்டுவிட்டு கும்பல் தப்பிச் சென்றுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சுழல் ஏற்பட்டுள்ளது.

பூநகரி கிராஞ்சியை சேர்ந்த பிரதீபன் வினுஜன் என்ற இளைஞரே சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளதுடன் பொலிஸாருக்கு நடந்தவற்றை தெரிவித்து விட்டு மயக்கமடைந்துள்ளார்.

இதையடுத்து, படுகாயமடைந்துள்ள இளைஞனை நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வாள் வெட்டு சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் மற்றுமொரு பெருந்தொகை பணமோசடி : ஏமாற்றப்பட்டுள்ள ஆயிரக்கணக்கானோர்!!

பிரமிட் திட்டத்தின் ஊடாக வல்லப்பட்டை செடி வளர்ப்பினால் பெருந்தொகை இலாபத்தை பெற்றுக்கொள்ளலாம் எனக்கூறி மக்களை ஏமாற்றி 150 கோடி ரூபாவிற்கும் அதிகமான பாரிய தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குருநாகல் நகரை மையமாகக் கொண்டு நாடளாவிய ரீதியில் 15,000க்கும் மேற்பட்டோர் இந்த மோசடியில் சிக்கியுள்ளமை தெரியவந்துள்ளது.  அவர்களில் பெரும்பாலானோர் முதலீடு செய்த பணத்தை மீளப் பெற முடியாமல் அநாதரவாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களை ஈடுபடுத்தி, குறித்த பகுதியில் வல்லப்பட்டை செடி வளர்க்கும் திட்டம் மேற்கொள்ளப்படுவதாக விளம்பரம் செய்து இந்த மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஒரு வல்லப்பட்டை செடிக்கு முப்பதாயிரம் ரூபாய் கொடுத்து, பிரமிட் திட்டம் என்று தெரியாமல் பணத்தை முதலீடு செய்ததாகப் ஏமாற்றப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

பணத்தை முதலீடு செய்த 300 நாட்களில் முழுத்தொகை வழங்கப்படும் என்றும், குறைந்த தொகையாக முப்பதாயிரம் ரூபாய்க்கு நாளொன்றுக்கு இருநூறு ரூபாய் செலுத்துவதும் என்ற அடிப்படையில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளது.

குருநாகல் தலைமையக பொலிஸ், இலங்கை மத்திய வங்கி மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் ஆகியவற்றிலும் இந்த மோசடி தொடர்பில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

சவப்பெட்டியுடன் வீட்டிற்கு சென்ற கணவர் : மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

பலாங்கொடை பகுதியில் மனைவி இறந்துவிட்டதாக பொய் கூறி சவப்பெட்டி, மாலை, உடைகள் மற்றும் இறுதி சடங்கு பொருட்களை கணவர் வீட்டிற்கு எடுத்துச்சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

பலாங்கொடை நகரில் உள்ள மலர்சாலைக்கு சென்று 40,000 ரூபா பெறுமதியான சவப்பெட்டி, மாலை, உடைகள் மற்றும் இறுதி சடங்கிற்கு தேவையான பொருட்களை கணவர் வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

மனைவி உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் பிரேத பரிசோதனை அதிகாரியும் மற்ற அதிகாரிகளும் கூறியதாக அவர் மலர்சாலை உரிமையாளரிடம் பொய் கூறியுள்ளார்.

வெளியான தகவல்

இதனை நம்பிய மலர்சாலை ஊழியர்கள் அவருடன் சவப்பெட்டி உள்ளிட்ட உபகரணங்களை அவரது வீட்டிற்கு எடுத்துச்சென்றுள்ளனர். இதன்போது ஏன் வீட்டிற்கு சவப்பெட்டி கொண்டு வந்தீர்கள் என்று பிள்ளைகள் வினவிய போது தாய் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

தாய் இறக்கவில்லை என்றும், தாய் சமையல் அறையில் இருப்பதாகவும் குழந்தைகள் கூறியதையடுத்து, மலர்சாலை ஊழியர்கள் சவப்பெட்டியை திரும்ப எடுக்க முயன்றுள்ளனர். இதன்போது அவர்களை மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து மகள் இது தொடர்பாக 119 என்ற அவசர எண்ணிற்கு தகவல் வழங்கிய நிலையில், மலர்சாலை உரிமையாளரும் பலாங்கொடை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அவசர தொலைபேசி எண்ணிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பலாங்கொடை பொலிஸ் உத்தியோகத்தர்கள் வீட்டுக்குச் சென்று சவப்பெட்டியை மலர்சாலையில் ஒப்படைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

மேலும், சவப்பெட்டிக்காக கணவர் செலுத்திய 40000 ரூபா பணத்தை மீளப்பெற்றுக்கொள்வதற்காக மலர்சாலைக்கு வருமாறு மனைவிக்கும், கணவனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்வில் ஏற்பட்ட விபரீதம்!!

தம்புள்ளையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு மோதலாக மாறியதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற திருமண நிகழ்விலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

மேலும் வன்முறையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட நபர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சிங்களவர்களை நெகிழ வைத்த தமிழ்ப் பெண் : குவியும் பாராட்டுக்கள்!!

திருகோணமலை தமிழ் பெண் ஒருவரால் நெகிழ்ச்சியடைந்த சிங்களவர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவொன்றை பதிவிட்டுள்ளனர்.

வறுமையில் வாடும் ஏழைகளுக்கு தினமும் இலவச உணவு வழங்கும் ஷீலாம்மா என்ற தமிழ் பெண் தொடர்பிலேயே சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது.

தினமும் அன்னதானம் வழங்கும் ஷீலாம்மா என்ற பெயரில் இந்த பதிவை சிங்கள இளைஞன் ஒருவர் பதிவிட்டுள்ளார். “பதவியாவில் இருந்து திருகோணமலை செல்லும் போது இக்பால் நகர் என்ற இடத்திலேயே இந்த மனிதாபிமானமிக்க பெண்ணை சந்தித்தேன்.

வீதிக்கு அருகிலுள்ள சிறிய குடிசை ஒன்றில், மிகவும் சுத்தமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டிருந்தது. தமிழர்களின் சுவையில் வழங்கப்பட்ட உணவை விடவும் அங்கிருந்த பலகை ஒன்றில் எழுதப்பட்டிருந்த விடயமே மனதை நிறைவாக்கியது.

பணம் இல்லாத அனைவருக்காகவும் ஷீலாம்மாவிடம் தினமும் உணவு உள்ளது. பணத்தில் ஏழையாக இருந்தாலும் இதயத்தில் பணக்காரராக எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவர்களின் வாழ்க்கை இது” என சிங்கள இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.

 

வெளிநாட்டு வாழ் தமிழ் பெண் திருகோணமலையில் மரணம்!!

ஐரோப்பிய நாடொன்றில் குடியுரிமை பெற்ற இளம் தாய் ஒருவர் திருகோணமலையில் உயிரை மாய்த்துள்ளார்.

இந்த சம்பவம் திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துவரங்காடு புதுக்குடியிருப்பு நேற்றையதினம் பதிவாகி உள்ளது.

நோர்வே நாட்டின் பிரஜாவுரிமையை கொண்ட ரீனாசிறில் என்ற 32 வயதுடைய 4 மாத குழந்தையின் தாயொருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

இலங்கை மக்களுக்கான ஓர் மகிழ்ச்சி செய்தி : தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

இலங்கையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில் இலங்கையின் இன்றைய (26) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய தங்க நிலவரத்தின்படி, தங்க அவுன் விலை 722,082 ரூபாவாக பதிவாகியுள்ளது. 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 25,480 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 203,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 23,360 ஆகவும் அதற்கமைய 22 கரட் தங்கப் கிராம் பவுண் ஒன்று 186,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதன்படி 21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 22,300 அதற்கமைய 21 கரட் தங்கப் கிராம் பவுண் ஒன்று 178,400 ரூபாவாக பதிவாகியுள்ளது

 

யாழ்ப்பாணத்தில் வாள் முனையில் வழிப்பறி : மக்களே அவதானம்!!

யாழ்ப்பாணத்தில் வாள் முனையில் வழிப்பறி செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோண்டாவில் வீதியில் இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை (24) இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை, கோண்டாவில் இந்துக் கல்லூரிக்கு முன்பாக காலை நொண்டியவாறு இளைஞன் ஒருவர் மோட்டார் சைக்கிளை வழி மறித்துள்ளார்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் மோட்டார் சைக்கிளை நிறுத்திய வேளை, நொண்டிக் கொண்டிருந்த நபர் தனது உடைமையில் மறைத்து வைத்திருந்த வாளினை எடுத்து மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை வெட்ட முயன்றுள்ளார்.

அப்போது வீதியின் ஓரத்தில் மறைந்திருந்த மற்றுமொரு இளைஞனும் வாளுடன் வெளியே வந்து இளைஞனை வெட்ட முயன்ற வேளை இளைஞன் அவ்விடத்தில் இருந்து தப்பியோடியுள்ளார்.

அதனை அடுத்து மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்ட தாக்குதலாளிகள் இருவரும் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை குறைப்பு!!

பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்துள்ளாா்.

அதனடிப்படையில், 450 கிராம் நிறையுடைய பாணின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், நாடு முழுவதும் குறித்த விலைக்குறைப்பு அமுல்படுத்தப்படும் எனவும் அவா் மேலும் தெரிவித்தார்.

 

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி.. காதலனால் நடந்த விபரீதம்!!

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா டவுனில் வசித்து வருபவர் 25 வயது சௌமியா. இவர் நர்சிங் படித்து வந்தார். அதுபோல் சிவமொக்கா மாவட்டம் சாகரில் வசித்து வருபவர் 28 வயது ஸ்ருஜன். இவர் தீர்த்தஹள்ளியில் உள்ள நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் கடன் வாங்கிய கொப்பாவை சேர்ந்தவர்களிடம் பணம் வசூலிக்க அடிக்கடி அங்கு வந்து சென்றுள்ளார். அப்போது சௌமியாவுடன் ஸ்ருஜனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது.

இருவரும் இரண்டரை ஆண்டுகள் காதலித்து வந்தனர் . வேற்று ஜாதி என்பதால் ஸ்ருஜனின் வீட்டில் இந்த காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் சவுமியாவிடம் பேசுவதை ஸ்ருஜன் தவிர்த்து வந்துள்ளார்.

இருப்பினும் சவுமியா, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி காதலன் ஸ்ருஜனை அடிக்கடி வலியுறுத்தினார். ஜூலை 2ம் தேதி சௌமியா தீர்த்தஹள்ளிக்கு சென்று ஸ்ருஜனை சந்தித்துள்ளார். அப்போது தன்னை இப்போதே திருமணம் செய்துகொள்ளும்படி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் நான் எனது வீட்டுக்கு செல்ல மாட்டேன் என சவுமியா, ஸ்ருஜனிடம் அடம்பிடித்துள்ளார். அதற்கு ஸ்ருஜன் நான் திருமணம் செய்து கொள்ள முடியாது. நீ உனது வீட்டுக்கு செல். எனது வீட்டுக்கு வர வேண்டாம் என கூறி சமாதானப்படுத்த முயன்றார்.

அப்போது சவுமியா காதலித்துவிட்டு திருமணம் செய்து கொள்ளாமல் என்னை ஏமாற்றுகிறாயா என கூறி தகராறு செய்தார். வாய்த்தகராறு கைகலப்பாக மாறி ஆத்திரத்தில் ஸ்ருஜன், சவுமியாவின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் மூச்சுத்திணறி அவர் பரிதாபமாக துடி, துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ருஜன், சவுமியாவின் உடலை சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா ஆனந்தபுரம் அருகே மும்பாலு கிராமத்தில் குழி தோண்டி புதைத்து விட்டார்.

எதுவும் நடக்காதது போல் அங்கிருந்து சென்றுள்ளார். இதற்கிடையே சவுமியா வீடு திரும்பாததால் தங்களது மகளை காணவில்லை என பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீஸ் விசாரணையில், சவுமியா, ஸ்ருஜனை காதலித்து வந்தது தெரியவந்தது. உடனே சாகருக்கு கொப்பா போலீசார் விரைந்து சென்று ஸ்ருஜனை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் தான், வீட்டை விட்டு வெளியேறி வந்து திருமணம் செய்ய வலியுறுத்தியதால் சவுமியாவை, ஸ்ருஜன் கழுத்தை நெரித்து கொன்று, உடலை புதைத்த கொடூரம் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஸ்ருஜனை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காதலித்து ஏமாற்றிய கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்!!

தன்னைக் காதலித்து விட்டு, பெற்றோர் கட்டாயப்படுத்தியதால் காதலை பாதியில் கைவிட்டு, பேச மறுத்த காதலியையும், அவளது குடும்பத்தினரையும் விநோதமாக பழிவாங்க நினைத்த மாணவன் ஒருவன் ஆன்லைனில் ஆர்டர் செய்து மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறான்.

சென்னை பெரியமேட்டில் டியூஷன் செல்லும் போது கல்லூரி மாணவி ஒருவர் 17 வயது சிறுவன் ஒருவனைக் காதலித்து வந்துள்ளார். இதையறிந்த பெற்றோர் இருவரையும் பிரித்து விட்டனர்.

இந்த காதல் விவகாரத்தில் சிறுவன் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கல்லூரி மாணவியிடம் சிறுவன் பேச முயன்ற போது, அந்த மாணவி சிறுவனைக் காதலிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 17 வயது மாணவன், காதலித்து விட்டு ஏமாற்றி சென்ற தனது காதலி மற்றும் அவரது குடும்பத்தினரை பழிவாங்க முயன்றான்.

அதன்படி, கல்லூரி மாணவியை பழிவாங்க, அமேசான், பிளிப்கார்ட், ஸ்விக்கி, ஜொமேட்டோ உள்ளிட்ட பல்வேறு டெலிவரி ஆப்ஸ் மூலம் கல்லூரி மாணவியின் வீட்டு முகவரிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்டர்கள் செய்துள்ளார்.

இதனால், பல டெலிவரி ஊழியர்கள், கல்லூரி மாணவியின் முகவரிக்கு சென்று ஆர்டர் செய்த பொருளை டெலிவரி செய்தனர். குறிப்பாக கல்லூரி பெண்ணுக்கு டெலிவரி செய்யும் ஊழியர்களுடன் சண்டை போடுவதற்காக ஆன்லைனில் ஆர்டர் செய்த அனைத்து பொருட்களுக்கும் சிறுவன் பணம் கொடுத்து அனுப்பியதும் தெரிய வந்துள்ளது.

ஒவ்வொரு முறையும் கல்லூரி மாணவி மற்றும் அவரது குடும்பத்தினர் ஆர்டர் செய்யவில்லை என்று டெலிவரி ஊழியர்களிடம் கூறிய போதும், டெலிவரி ஊழியர்களும் ஆன்லைனில் ஆர்டர் செய்து பொருட்களை செலுத்தாமல் கோபத்தில் சண்டையிட்டனர். மூன்று நாட்களாக ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்து சிறுவன் மாணவியின் குடும்பத்தினரை டார்ச்சர் செய்ததாக போலீசார் கூறுகின்றனர்.

ஆன்லைன் டெலிவரி மூலம் கஷ்டத்தில் இருந்த கல்லூரி மாணவியை மேலும் சித்ரவதை செய்ய ஓலா, ஊபர் உள்ளிட்ட வாடகை கார் புக்கிங் ஆப்ஸ் மூலம் 77 முறை வாகனங்களை புக் செய்து கல்லூரி மாணவியின் முகவரிக்கு அனுப்பி மன உளைச்சல் கொடுத்துள்ளார்.

மேலும், கல்லூரி மாணவியின் தந்தை இறந்ததாக புகைப்படங்களை சித்தரித்து டெலிகிராம் மூலம் பதிவிட்டதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, கல்லூரி மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில், சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஆன்லைனில் ஆர்டர் செய்த விண்ணப்பங்களில் பயன்படுத்திய செல்போன் எண், மின்னஞ்சல் ஆகியவற்றைக் கண்டுபிடித்து ஐபி முகவரி மூலம் சிறுவனை கைது செய்தனர்.

போலீசார் அந்த சிறுவனை பிடித்து விசாரித்த போது தான், காதல் விவகாரத்தில் இவ்வளவு செயல்கள் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. சிறுவனிடம் இருந்து இரண்டு செல்போன்கள், இரண்டு வைஃபை ரூட்டர்கள் மற்றும் ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.

தற்போது 18 வயதாகும் சிறுவன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறான். இருப்பினும், குற்றம் நடந்தபோது அவருக்கு 17 வயது என்பதால், போலீசார் சிறுவனை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் அந்த சிறுவனுக்கு உளவியல் ஆலோசனை கொடுத்து தாயுடன் அனுப்பி வைத்தது தெரிய வந்துள்ளது.