சவுதியில் மரணமான வாகரைப் பெண்ணின் சடலத்தில் தொடரும் மர்மம்!!(படங்கள்)

சவுதி அரேபியா ஜித்தாவில் பணிப்பெண்ணாக பணியாற்றிய தமிழ் இளம் பெண் ஒருவர் நஞ்சருந்தி மரணமானதாக தெரிவித்து அவரது சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறித்து உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தனது மகளுடைய மர்ம மரணம் தொடப்பாக விசாரணை நடத்தி உண்மை நிலையினைக் கண்டறிய வேண்டுமென மரணமான பெண்ணின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலிலுள்ள ஓமடியாமடுவைச் சேர்ந்த யோகேஸ்வரன் சாந்தி (வயது 24) என்ற இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உறவினர்களுக்கு தகவல் வழங்க்கப்பட்டு சடலம் நேற்று கொழும்பில் இருந்து சொந்த இடம் கொண்டுவரப்பட்டு இன்று அதனை நல்லடக்கம் செய்யும் நடவடிக்கையில் உறவினர்கள் ஈடுபட்டனர்.

இவர் கடந்த 4 வருடங்களாக சவுதி அரேபிய நாட்டில் ஜித்தா நகரில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்துள்ளார்.
இவரது தந்தை சீனித்தம்பி யோகேஸ்வரன் வயது (59) தெரிவிக்கையில்,
தனது மகள் சாந்தி 2009.10.10 இல் பணிப்பெண்ணாக சவுதியரேபியா சென்றார்.

அங்கு சென்று இரண்டு தடவைகள் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டார். அதன் பின்பு எதுவித தொடர்பும் கிடைக்கவில்லை.
எனது மகளைப் பற்றிய தகவல் அறிய பல்வேறு இடங்களிலும் முகவர்களின் மூலமாகவும் தொடர்பு கொண்டேன். பலன் எதுவும கிடைக்கவில்லை.

இறுதியில் மகளின் சடலத்தையே காணமுடிகிறது. இந் நிலையில் சவுதி நாடு சென்றது தொடக்கம் எதுவிதமான பணமும் எங்களுக்கு அனுப்பவும் இல்லை. எனது மகளை கொடுமைப்படுத்தியே கொன்றிருக்க வேண்டும்.

காரணம் என்னிடம் சடலத்தை தரும்போது உமது மகள் நஞ்சருந்தி இறந்துள்ளாதாகவே சவுதியில் இருந்து தகவல் தெரிவிக்கின்றனர் என்று கூறினர். ஆனால் இங்கு வந்து சடலத்தை பார்க்கும் போது முகப் பகுதி, மார்புப் பகுதி, கழுத்து பகுதி மற்றும் முழங்கால் பகுதிகளில் காயத் தழும்புகளும் அடிகாயங்களும் காணப்படுகின்றன.

எனது மகளை கொடுமைப்படுத்தியே கொன்றிருக்க வேண்டும். எனது மகளின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும். அரசாங்கம் இது தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்துமாறு சவுதியிலுள்ள இலங்கைத் தூதரகத்தை பணிக்க வேண்டும். வறுமை காரணமாகவே மகள் எனது அனுமதியின்றி மத்திய கிழக்கு நாட்டிற்கு சென்றிருந்தார் என அவர் தெரிவித்தார்.

இவ்விடயத்தை கேள்வியுற்ற ஊர் மக்கள் உடனடியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரிடம் இச்சம்பவம் பற்றி கூறியிருந்தனர்.

வெருகல் சித்திரவோயுதர் ஆலய இறுவெட்டு வெளியீட்டில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சம்பவத்தை கேள்வியுள்ளதும் அங்கிருந்து வாகரை பொலிஸ் நிலையத்துக்கு உடனடியாக சென்று வாகரைப் பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் இவ்விடயமாக ஆராயுமாறு வேண்டுதல் விடுத்தார்.

அத்தோடு உறவினர்களின் வாக்கு மூலத்தையும் பொலிஸார் பதிவு செய்தனர். அத்தோடு சடலத்தை அடக்கம் செய்யுமாறும், இவ்விடயமாக தாங்கள் வெளிநாட்டு நலனோம்புகை அமைச்சருக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினருக்கு வாகரை பொலிஸ் பொறுப்பதிகாரி உறுதியுரை வழங்கியுள்ளார்.

பின்னர் ஓமடியாமடு கிராமத்திற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் சவுதியில் இருந்து அனுப்பப்பட்ட சடலத்தை பார்வையிட்டுள்ளதுடன், உறவுகளுக்கு ஆறுதலும் கூறியுள்ளார்.

இவ்வியடமாக தான் வெளிநாட்டு நலனோம்புகை அமைச்சருடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் இது சார்பான தீவிர விசாரணைக்கான ஏற்பாடும், நஸ்டஈடும் கோருவதாகவும்இ அடித்து துன்புறுத்தியது உறுதிப்படுத்தப்பட்டால் உரியவருக்கு தகுந்த தண்டனை வழங்க கோருவதாகவும் உறவுகளுக்கு தெரிவித்துள்ளார்.

கடந்த சில காலமாக இவ்வாறு வெளிநாடு செல்பவர்கள் சடலமாக அனுப்பப்படும் நிலை அதிகரித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

1
2

3

4

சிரியா மீது போர்த்தொடுக்குமா அமெரிக்கா??

syria

தென்மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான சிரியா எண்ணை வளம் மிக்கது. இதன் மொத்தபரப்பளவு 71,500 சதுர மைல்.

வடக்கில் துருக்கியும், மேற்கில் இஸ்ரேல், லெபனானும், கிழக்கில் ஈராக்கும், தெற்கில் ஜோர்டானும் எல்லைகளாக உள்ளன. சிரியாவின் ஜனாதிபதியாக பஷர் அல்–ஆசாத் உள்ளார்.

கடந்த 1971ம் ஆண்டு முதல் கடந்த 42 ஆண்டுகளாக இவரது குடும்பத்தினர் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்றனர்.

அவர்களின் சர்வாதிகார போக்கு மக்களுக்கு பிடிக்கவில்லை. அவர்களின் கோபம் நீறுபூத்த நெருப்பாக தகித்து கொண்டிருந்தது. கடந்த 2010ம் ஆண்டு டிசம்பரில் துனிசியாவில் அரசுக்கு எதிராக பொதுமக்களின் போராட்டம் வெடித்தது.

அது படிப்படியாக வலுவடைந்து 2011ம் ஆண்டு பிப்ரவரியில் கலவரமாக மாறியது. அதே போன்று அண்டை நாடுகளான எகிப்து, லிபியாவுக்கும் பரவி அது உள்நாட்டு போர் ஆக உருவானது.

மக்கள் சக்தியை தாக்கு பிடிக்க முடியாமல் துனிசியா, எகிப்து நாடுகளின் ஜனாதிபதிகள் ஷின் எல் அபிடினே பென் அலி, ஹோஸ்னி முபாரக் ஆகியோர் பதவி விலகினர்.

லிபிய தலைவர் மும்மர் கடாபி புரட்சிபடையினரால் அடித்துக் கொல்லப்பட்டார். தற்போது அங்கு குடும்ப ஆட்சி மறைந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சி மலர்ந்துள்ளது.

அதே நிலை சிரியாவிலும் தொடர அந்நாட்டு மக்கள் விரும்பினர். அதை தொடர்ந்து அரபுநாடுகளில் ஒன்றான சிரியாவிலும் கடந்த 2011 மார்ச் 15ம் திகதி மக்கள் புரட்சி வெடித்தது. தொடக்கத்தில் ஜனாதிபதி பஷர் அல்–ஆசாத்துக்கு எதிராக ஆங்காங்கே போராட்டங்கள் நடந்தன.

அது மாபெரும் புரட்சியாகி 2011 ஏப்ரல் மாதத்தில் நாடு தழுவிய அளவில் போராட்டம் வெடித்து கலவரமாக மாறியது. தலைநகர் டமாஸ்கஸ், ஹோம்ஸ், அலெப்போ உள்ளிட்ட நாட்டின் அனைத்து நகரங்களிலும் வன்முறை சம்பவங்கள் நடந்தன.

அரசுக்கு எதிராக சிரியா சுதந்திரப்படை என்ற மக்கள் புரட்சி படை கடந்த 2011 ஜூலை மாதம் உருவாக்கப்பட்டது. அதில் அரசின் நடவடிக்கை பிடிக்காத இராணுவ வீரர்கள்,இராணுவ அதிகாரிகள் இளைஞர்கள் சேர்ந்தனர்.

இதனால் அப்படை வலுவடைந்தது. அவர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து இராணுவத்தை எதிர்த்து போரிட்டனர்.

கலவரத்தை அடக்க ஆசாத் தனது இராணுவத்தை ஏவி விட்டார். அவர்கள் நடத்தி வரும் கண்மூடித்தனமான தாக்குதல்களால் குவியல் குவியலாக பொதுமக்கள் கொல்லப்பபட்டு வருகின்றனர்.

கலவரம் தொடங்கி 2 1/2 ஆண்டுகளாகியும் இன்னும் கலவரம் முடிவுக்கு வரவில்லை. கடந்த ஜூன் மாதம் வரை சுமார் ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

இராணுவ நடவடிக்கையை கை விடும்படியும் பதவி விலகி பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தும் படியும் ஜனாதிபதி ஆசாத்தை ஐ.நா. சபை எச்சரித்தது. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் அவற்றின் நட்பு நாடான பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் கேட்டுக் கொண்டன.

அதற்கு தொடக்கத்தில் சம்மதம் தெரிவித்த ஆசாத் பின்னர் பதவி விலக மறுத்து விட்டார். அதைத் தொடர்ந்து போராட்டம் கடுமையானது. புரட்சி படைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து பிரான்ஸ் போன்ற நாடுகள் மறைமுகமாக ஆயுத உதவியும் மருந்து மற்றும் உணவு பொருட்கள் வழங்கி வருகின்றன.

சவுதி அரேபியா, கட்டார், துருக்கி ஆகிய அண்டை நாடுகளும் ஆயுத உதவி வழங்கி வருகின்றன. இதனால் புரட்சி படையின் கை ஓங்கியுள்ளது. அவர்கள் இராணுவத்தின் வசம் இருந்த முக்கிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.

இதை பொறுத்து கொள்ள முடியாத ஆசாத் அவற்றை மீண்டும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அதிரடி தாக்குதல் நடத்த இராணுவத்துக்கு உத்தரவிட்டார்.

புரட்சிபடையின் பிடியில் இருக்கும் தலைநகர் டமாஸ்கசின் புறநகரான ஷமால்கா மீது கடந்த 21ம் திகதி இராணுவம் போர் விதிமுறைகளை மீறி தடை செய்யப்பட்ட இரசாயன குண்டுகளை வீசி கொடூர தாக்குதல் நடத்தியது.

அதில் சுமார் 1429 பேர் நச்சுப்புகை தாக்கியதில் மூச்சு திணறி பலியாகினர். பலியானவர்களில் 600க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். இச்சம்பவம் உலகநாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஐ.நா சபையும், அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஏற்கனவே சிரியாவிடம் இரசாயன குண்டுகள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்தது.

அதை சிரியா மறுத்தது. இந்த நிலையில் இரசாயன குண்டுகள் இருந்தாலும் போராடும் மக்கள் மீது வீசினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என சிரியாவை கடந்த 2012ல் அமெரிக்கா எச்சரித்தது.

இதே கருத்தை பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தும் கூறின. இந்த எச்சரிக்கையையும் மீறி சிரியா இரசாயன குண்டுகளை வீசி சொந்த மக்களின் இன்னுயிரை பறித்துள்ளது. இதனால் கோபத்தின் எல்லைக்கு சென்றுள்ள அமெரிக்கா சிரியா மீது இராணுவ தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளது.

இதே காரணத்தை காட்டி தான் கடந்த 2003ம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அப்போது ஈராக் ஜனாதிபதியாக சதாம் உசேன் இருந்தார். இவர் ஈராக்கின் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்தார்.

அவர் பேரழிவு ஆயுதங்களை வைத்திருப்பதாகவும் அல்கொய்தா தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் அவரை கடந்த 2003 டிசம்பர் 13ம் திகதி அமெரிக்கா கைது செய்தது. அவர் மீது விசாரணை நடத்தி 2006 டிசம்பர் 30ம் திகதி தூக்கிலிட்டது. அப்போது அமெரிக்காவின் ஜனாதிபதியாக புஷ் பதவி வகித்தார்.

தற்போது அதே காரணத்தை முன்வைத்து சிரியா மீதும் போர் தொடுக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதற்கான ஆயத்த பணிகளிலும் தீவிரமாக உள்ளது.

அமெரிக்காவுக்கு துருக்கி, இஸ்ரேல், பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஆதரவாக உள்ளன. போர் நடவடிக்கைக்கு முன்னோடியாக அமெரிக்கா தனது 6 போர் கப்பல்களை சிரியா அருகே மத்திய தரைக் கடலுக்கு அனுப்பியுள்ளது.

அதே நேரத்தில் சிரியா மீதான இராணுவ தாக்குதலுக்கு ரஷ்யா, சீனா, இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் தாக்குதலை முறியடிக்க ரஷ்யா தனது 3 போர்க்கப்பல்களை சிரியா கடல் பகுதிக்கு அனுப்பும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதனால் எந்நேரமும் போர் வெடிக்கலாம் என்ற அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சிரியா மீது போர் தொடுக்கும் நடவடிக்கையை அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தள்ளி வைத்துள்ளன.

சிரியா மீது போர் தொடுக்க பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறவே அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2003ம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா நடத்திய போரினால் சர்வதேச நாடுகளில் கச்சா எண்ணை விலை அதிகரித்து தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது, மற்றொரு எண்ணை வள நாடான சிரியா மீதும் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இப்போது சிரியா விவகாரத்தால் சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

விடுமுறை முடிந்து பாடசாலைகள் இன்று ஆரம்பம்..!

schoolநாட்டிலுள்ள தமிழ், சிங்கள அரச பாடசாலைகள் மூன்றாம் தவணை கல்விச் செயற்பாட்டிற்காக மீண்டும் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகின்றன.

2ம் தவணை விடுமுறைக்காக இப்பாடசாலைகள் கடந்த ஒகஸ்ட் மாதம் 02ம் திகதி மூடப்பட்டது.

இன்று அரச பாடசாலைகள் திறக்கப்படுமாயினும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு இடம்பெறும் பாடசாலைகள் திறக்கப்படமாட்டது.

இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகள் கடந்த ஓகஸ்ட் 12ம் திகதி மூன்றாம் தவணைக்காக திறக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் தவணை விடுமுறை சகல அரச பாடசாலைகளுக்கும் டிசம்பர் 06ம் திகதி என்பது குறிப்பிடத்தக்கது.

மதிப்பீட்டில் ஈடுபடும் ஆசிரியர்கள் இன்றையதினம் சமுக மளிக்கமாட்டார்கள்.

தொடர்ந்து மதிப்பீடு முடியும் வரை ஒரு சில பாடசாலைகள் ஸ்தம்பித நிலையிலிருப்பது தவிர்க்க முடியாமலிருக்குமென கூறப்படுகிறது.

வவுனியாவில் மின்னல் தாக்கியதில் இருவர் வைத்தியசாலையில் அனுமதி : வீடும் சேதம்!!

thunder

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சேனப்புலவு கிராமத்தில் நேற்று (31) இரவு மின்னல் தாக்கியதில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை வவுனியாவில் இடியுடன் கூடிய மழை பெய்து வந்த நிலையில் தமது வீட்டில் இருந்தவர்கள் மீதே மின்னல் தாக்கியுள்ளது.
இதன் காரணமாக இருவர் படு காயமடைந்த நிலையில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை வவுனியா நெளுக்குளம் பகுதியியல் தம்பனைக்குளம் வீதியில் உள்ள வீடொன்றின் மீது மின்னல் தாக்கியதில் அவ் வீட்டில் கூரைப்பகுதி சேதமடைந்துள்ளது.

சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் : லெபனானுக்கு தப்பியோடும் மக்கள்!!

syria

சிரியாவில் ஜனாதிபதி அசாத் ஆட்சிக்கு எதிராக கடந்த 2 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் போரில் ஒரு லட்சத்துக்கும் மேலானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் போராளிகள் பகுதியில் ஜனாதிபதி படையினர் இரசாயன குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் குழந்தைகள், முதியோர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.

இதை ஐ.நா. ஆய்வாளர்கள் உறுதி செய்தனர். இந்நிலையில் பொதுமக்களை கொன்றுகுவிக்கும் சிரியாவின் மீது போர் தொடுப்பது உறுதி என்று அமெரிக்கா கூறியுள்ளது. எந்த நேரத்திலும் தாக்க தயாராகவுள்ளதாகவும் அது கூறியுள்ளது.

இதனால் பயந்துபோன சிரியா மக்கள் குழந்தைகளையும் கையில் கிடைத்த பொருட்களையும் எடுத்துக்கொண்டும் பக்கத்து நாடான லெபனானுக்கு தப்பி ஓடுகின்றனர்.

இவர்கள் அனைவரும் ஐ.நா. ஆய்வாளர்களை பின் தொடர்ந்து மஸ்னா எல்லை வழியாக லெபனான் நாட்டிற்கு அகதிகளாக தப்பிச் செல்கின்றனர்.

சிரியாவிலிருந்து வரும் அகதிகள் வருவதற்கு அருகிலுள்ள நாடுகள் அனுமதி வழங்க வேண்டும் என ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காலியில் நபரொருவரை கோரமாக வெட்டிக் கொலை செய்த 3 பேர் கைது

knife

காலியில் உள்ள தோட்ட குடியிருப்பில் வசித்து வந்த நபரொருவரை கோரமாக வெட்டிக்கொலை செய்த மூன்று பேரை எல்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

எல்பிட்டிய – பிட்டிகல பாணதுராதோட்டத்தில் வசித்த நபரோ இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர்கள் எல்பிட்டிய நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு எதிர்வரும் 05ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட நபர் வசித்த தோட்டத்தை சேர்ந்த 21, 43 மற்றும் 62 வயதான நபர்கள் மூவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தனது இரண்டாவது மனைவியுடன் தோட்டத்தில் உள்ள வீடொன்றில் வசித்தபோதே குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது மனைவியுடன் தகராறு ஏற்பட்ட மறுநாளே இவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த பொலிஸார் விசாரணைகளை நடத்தி கொலையுடன் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்தனர்.

கொடுமைப்படுத்திய கணவனை துண்டு துண்டாக வெட்டி சமைத்த பெண்!!

Cooking Lamb in slow cooker

சீனாவில் தன்னை கொடுமைப்படுத்திய கணவரை ஒரு பெண் கொன்று சமைத்துள்ளார்.

சீனாவில் உள்ள ஆன்ஹீய் மாகாணத்தை சேர்ந்த ஒரு பெண் ஒரு நபரை 2வது திருமணம் செய்தார். திருமணமான சில நாட்களே அவர் அப்பெண்ணுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.

பின்னர், அப்பெண்ணையும் மகளையும் அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி வந்தார். அதை தாங்க முடியாத அப்பெண் தனது 2வது கணவருக்கு போதை மருந்து கொடுத்து மயக்கத்தில் வைத்தார்.

அதைத்தொடர்ந்து 3 நாட்களாக அறையில் அடைத்து வைத்து சாப்பாடு தண்ணீர் கொடுக்காமல் பட்டினி போட்டார். மேலும் அடித்து உதைத்து சித்ரவதை செய்தார்.

அதை தாங்க முடியாத பெண்ணின் கணவர் இறந்துவிட்டார். எனவே, அவரது சடலத்தை மறைக்க உடலை துண்டு துண்டாக நறுக்கி குக்கரில் போட்டு சமைத்தார்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் பொலிசார் விரைந்து சென்று அப்பெண்ணை கைது செய்தனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

12 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வயோதிபர் கைது!!

arrest1

12 வயது நிரம்பிய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 63 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிமடை நுகத்தலாவ என்னுமிடத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டில் தனியாக இருந்தபோதே முதியவர் சிறுமியை நேற்று வெள்ளிக்கிழமை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முதியவர் சிறுமி வசிக்கும் வீட்டுக்கு அண்மையில் வசிப்பவர் என்று தெரிவித்த வெலிமடை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

 

மோப்பநாய் திருமண வைபவம் தொடர்பில் விசாரணை!!

dog

இலங்கை பொலிஸ் மோப்பநாய் மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மோப்பநாய் திருமண வைபவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின்படி விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மோப்ப நாய்கள் இரண்டின் திருமண வைபவம் அண்மையில் கண்டி அஸ்கிரிய மைதானத்தில் இடம்பெற்றது.

அதன்மூலம் இலங்கையின் புராதன சிங்கள திருமண கலாசாரத்திற்கு இழுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கலாசார அமைச்சு உள்ளிட்ட அமைப்புக்கள் விசனம் தெரிவித்திருந்தன.

இந்த திருமண வைபவ ஏற்பாடு குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

நண்பர்களுடன் சேர்ந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பொலிஸார்!!

abuse

பெண் ஒருவர் இரண்டு பொலிசார் மற்றும் அவர்களது நண்பர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் நொய்டாவில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் பெண் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.

அப்பெண் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட பின் அவரிடமிருந்து பணம் ஏடிஎம் அட்டை ஆகியவற்றை அந்த கும்பல் கொள்ளையடித்ததும் தெரியவந்துள்ளது.

இன்று காலை அப்பெண் அளித்த புகாரின் பேரில் பொலிசார் நான்கு பேரை கைது செய்துள்ளனர். அவர்களில் இருவர் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் என்பது தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் வசித்த அதே குடியிருப்பில் தான் அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஒருவன் வசித்துவந்துள்ளான்.

பொலிஸில் சேர முயற்சித்துக்கொடிருந்த அந்த நபர் தன்னுடைய பொலிஸ் நண்பர்கள் இரண்டுபேரையும் மற்றொரு நண்பரையும் இப்பெண்ணின் வீட்டிற்கு அழைத்து இக்கொடுமையை செய்துள்ளான்.

இக்கும்பல் அப்பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதை அவருடைய உடைமைகளை திருடியது கண்காணிப்பு கேமராவில் பதிவானதை அடுத்து பொலிசார் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிரியா மீது தாக்குதல் நடத்துவது தவிர்க்க முடியாதது : ஒபாமா!!

obama-immigration-1

சிரியா மீது தாக்குதல் நடத்துவது உறுதி என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில்..

அமெரிக்கா தரப்பில் எந்தவொரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும் அது ஒரு குறுகிய கால நடவடிக்கையாகவே இருக்கும். சிரியா மீதான போரும் சிறிய அளவிலேயே இருக்கும். இது தொடர்பாக நேச நாடுகளின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.

சிரியா மீது தாக்குதல் நடத்துவது தவிர்க்க முடியாதது என்றார்.

இதற்கிடையில் சிரியாவில் எந்த நேரத்திலும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள இந்தியர்களை உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

 

இலங்கை வழியாக தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவலா??

map

நாகை மாவட்ட கடலோர பகுதியில் மர்ம நபர்கள் ஊடுருவியதாக வெளியான தகவலையடுத்து கடல் பகுதியில், கடலோர பாதுகாப்பு பொலிசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இலங்கை வழியாக, தமிழகத்திற்குள் ஊடுருவி கடலோர மாவட்டங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக சில நாட்களுக்கு முன் மத்திய உளவுத் துறை எச்சரித்தது.

இதையடுத்து தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கண் காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. நாகை மாவட்டம், திருக்கடையூர் கடல் பகுதியில் நேற்று அதிகாலை மர்ம நபர்கள் தென்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

கடலோர பாதுகாப்பு பொலிசார் மத்திய புலனாய்வு பிரிவினர் நடத்திய விசாரணையில் அத்தகவல் விஷமிகள் பரப்பிய வதந்தி என தெரியவந்தது.

இருப்பினும் கடலோரக் காவல் குழும பொலிசார் நாகை மாவட்ட கடல் எல்லையான கொடியம்பாளையத்தில் இருந்து கோடியக்கரை வரையிலான கடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலில் மீன் பிடித்து துறைமுகத்திற்கு வரும் படகுகள், தீவிர சோதனைக்குப் பின் அனுமதிக்கப்படுகின்றன.

கடன் அட்டை மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் மதுரையில் கைது!!

credit

சர்வதேச வங்கிகளின் போலி கடன் அட்டை தயாரித்து, பிரபல கடைகளில் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த, இலங்கையர் ஒருவர் உட்பட இருவர் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி கடன் அட்டை தயாரிப்பு தொடர்பாக, மாருதிஹள்ளியில் பரிமளா கோல்டன் கேட் அபார்ட்மென்ட் மகேந்திர கருணராஜ்(50), மதுரை விவேகானந்தா வீதி அஸ்வின் குமார்(30), ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அவர்கள் போலி கடன் அட்டை மூலம் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் அபகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இவர்களிடமிருந்து பல்வேறு வங்கிகளின் 50 க்கும் மேற்பட்ட கடன் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

கைதானவர்களில், கருணராஜ், இலங்கையை சேர்ந்தவர். அஸ்வின் குமார் மதுரையை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

சென்னை வந்த இவர்களிடையே நட்பு ஏற்பட்டு உள்ளது. பிரான்சில் வசிக்கும் தன் சிறு வயது நண்பர் மூலம் இந்திய வங்கிகளின் கடன் அட்டை தகவல்களை, இ-மெயிலில் பெற்ற, கருணராஜ், அஸ்வின் குமாருடன் சேர்ந்து போலி கடன் அட்டைகளை தயாரித்து உள்ளார்.

இதற்கு தேவையான இயந்திரங்களை கேரளாவை சேர்ந்த நண்பர் ஒருவர் மூலம் மலேசியாவிலிருந்து வரவழைத்து உள்ளனர். தயாரித்த கடன் அட்டை மூலம் பெரிய ஷாப்பிங் மால், கடைகளில் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி, பல்வேறு இடங்களில் அதை விற்று பணம் பெற்றுள்ளனர்.

இந்த பணத்தின் மூலம் சொகுசு வாழ்க்கை நடத்தியுள்ளனர். இந்த கார்ட்களை பல இடங்களில் பயன்படுத்தி உள்ளனர். போலி கடன் அட்டை தயாரிக்க உதவியாக இருந்த பிரான்ஸ் மற்றும் கேரளாவைச் சேர்ந்த நண்பர்களுக்கும், அவ்வப்போது பண உதவி செய்துள்ளனர்.

கிரெடிட் கார்டின், பின் எண்களை கேட்கும் நிறுவனங்களின் பொருட்களை மட்டும் இவர்கள் வாங்குவதில்லை. அத்துடன் ஒரு எண்ணில் தயாரித்த கடன் அட்டையை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி உள்ளனர். அதனால் எளிதாக அனைவரையும் மோசடி செய்துள்ளனர்.

கருணராஜ் சென்னையில் போலி கடன் அட்டை ஒன்றை பயன்படுத்தியபோது, கண்காணிப்பு கேமராவில் அவரின் படம் பதிவாகியிருந்தது. அதன்மூலமே இருவரும் கைது செய்யப்பட்டனர்.

வீரம் படத்தில் ஓடும் ரெயிலில் தொங்கியபடி துணிச்சலாக நடித்த அஜீத்!!

ajith

ஆரம்பம் படத்தினைத் தொடர்ந்து பிறகு அஜீத் நடிக்கும் படம் வீரம். இப்படத்தை சிறுத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார். அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். ஆரம்பம் படப்பிடிப்பக்குப் பின் தற்போது அஜீத் வீரம் படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.

இது ஒரு ஆக்சன் படமாக உருவாகி வருகிறது. இதனால் சண்டைக்காட்சிகள் அதிகமாக இருக்கும். அஜீத் பெரும்பாலும் தான் நடிக்கும் படத்தின் சண்டைக்காட்சியில் டூப் போடுவதில்லை. அதேபோல் இந்த படத்திலும் ஒரு காட்சியில் டூப் இல்லாமல் நடித்துள்ளார்.

வீரம் படப்பிடிப்பு பீகார் மாநிலத்தில் நடைபெற்றது. ஓடும் ரெயிலில் வெளியே தொங்கியபடி ஒரு காட்சியில் அஜீத் நடிக்க வேண்டியிருந்தது. டைரக்டர் சிவா டூப் போட்டு எடுத்துக்கொள்ளலாம் என்று கூறினார். ஆனால் அஜீத் நானே நடிக்கிறேன் என்று தைரியமாக கூறினார்.

காட்சியும் கச்சிதமாக எடுக்கப்பட்டது. அஜீத்தின் இந்த துணிச்சலை படக்குழுவினர் பாராட்டினர். பீகாரைத் தொடர்ந்து ஐதராபாத்திலும், சென்னையிலும் படப்பிடிப்பு நடைபெற்றது.

நகை கடை திறப்பு விழாவில் நயன்தாராவை முற்றுகையிட்ட ரசிகர்கள் : திணறிய நயன்தாரா!!

nayan

நகை கடை திறப்பு விழாவில் நயன்தாராவை ரசிகர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொச்சியில் இச்சம்பவம் நடந்தது. அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள நகைக்கடையொன்றை திறக்க நயன்தாராவை அழைத்து இருந்தனர்.

வீட்டில் இருந்து நாலைந்து கார்கள் பின் தொடர அவ்விழாவுக்கு நயன்தாரா சென்றார். நகைக்கடையை திறக்க நயன்தாரா வருகிறார் என்று ஏற்கனவே விளம்பரப்படுத்தி இருந்ததால் அவரை காண ரசிகர்கள் பெரும் கூட்டமாக திரண்டு நின்றனர்.

நயன்தாரா காரில் இருந்து இறங்கியதும் கூட்டத்தினர் முண்டியடித்தார்கள். ஒட்டோ கிராப் வாங்கவும் நீட்டினார்கள். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நயன்தாரா கூட்டத்தினர் நடுவில் சிக்கினார். இதனால் விழாக்குழுவினர் பதட்டமானார்கள். உடனடியாக அங்கு நின்று கொண்டிருந்த பாதுகாவலர்கள் விரைந்து போய் கூட்டத்தினரை விலக்கி நயன்தாராவை பத்திரமாக மீட்டனர்.

அவரை சுற்றி வளையம் அமைத்தபடி நகைக்கடைக்குள் அழைத்து சென்றனர். நகைக்கடையை திறந்து வைத்து சிறிது நேரம் நயன்தாரா சுற்றி பார்த்தார். பிறகு பாதுகாவலர்கள் துணையோடு காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.

நயன்தாரா ஜவுளிக்கடை, நகைக்கடை திறப்பு விழாக்களில் அதிகம் பங்கேற்பது இல்லை. அதிக பணம் தருவதாக ஆசை காட்டியும் மறுத்து வந்தார். கொச்சி நகை கடையை மட்டும் திறந்து வைக்க சம்மதித்தார்.

என்னை ஆபாசமாக காட்டுவதா : டைரக்டர் மீது சார்மி பாய்ச்சல்!!

Sharmi00

தமிழில் காதல் அழிவதில்லை படத்தின் மூலம் அறிமுகமானவர் சார்மி. அதன்பின் ஒன்றிரண்டு படங்கள் நடித்தபின் தமிழில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனைத்தொரட்ந்து தனது பார்வையை தெலுங்கு பக்கம் திருப்பினார். தெலுங்கில் நிறைய படங்கள் வந்தன. அங்கு முன்னணி நடிகையாக உள்ளார்.

பிரசித்தி கந்தா, ரம்பா ஊர்வசி மேனகா, மந்த்ரா 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள பிரேம ஒகமாலிகம் படம் நேற்று ரிலீசானது.

இந்த நிலையில் டைரக்டர்கள் பலர் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். என் சினிமா வாழ்க்கையில் பலர் என்னை ஏமாற்றியுள்ளனர். சில டைரக்டர்கள் மோசடித்தனமாக நடந்துள்ளனர்.

மாயகடு தெலுங்கு படத்தில் நடித்தபோது டைரக்டர் எனக்கு தெரியாமலேயே என்னை ஆபாசமாக படம் பிடித்தார். படத்தில் அதை பார்த்தபோது அதிர்ந்தேன். அங்க அசைவுகளை வக்கிரமாக படமாக்கி இருந்தார். பிரேம கமாலிகம் படத்தில் அழுத்தமான வேடத்தில் நடித்துள்ளேன் என்று சார்மி கூறினார்.