வட மாகாணத்தில் 5000 தமிழ் பொலிஸாரை நியமிக்க அனுமதி!!

doglass

வட மாகாணத்தில் 10,000 தமிழ் பொலிஸாரை புதிதாக இணைத்துக் கொள்வதற்கான கோரிக்கையை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் விடுத்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி அவர்கள் முதற்கட்டமாக பொலிஸ் சேவைக்கு 5000 தமிழ் இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொள்ள இணக்கம் தெரிவித்துள்ளார்.

விரைவில் வட மாகாணத்தில் முதற்கட்டமாக 5,000 தமிழ் பொலிஸாருக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன. ஆர்வமுள்ள தமிழ் இளைஞர் யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்ள முடியும்.

எனவே அதனை வேலைவாய்ப்பாக மட்டும் கருதாமல் தமிழ் மொழி மூலமாக எமது மக்கள் தமது முறைப்பாடுகளை செய்வதற்கும், உதவிகளைப் பெற்றுக்கொள்வதில் எதிர்கொள்கின்ற அசெளகரியங்களை நிவர்த்தி செய்து கொள்வதற்கு இந்த வாய்ப்பை எமது இளைஞர், யுவதிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டுள்ளார்.

இளம் குற்றவாளியை தூக்கில் போட வேண்டும் : குடும்பத்தினர் ஆவேசம்!!

boy

டெல்லியில் 23 வயது மருத்துவ மாணவி கொடூரமான முறையில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இளம் குற்றவாளியை தூக்கில் போட வேண்டும் என்று மாணவியின் குடும்பத்தினர் ஆவேசமாக கூறினார்கள். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேச இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

டெல்லி மருத்துவ மாணவி கடந்த டிசம்பர் மாதம் 16ம் திகதி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சம்பவம் நடந்தபோது 18 வயது நிரம்பாத இளம் குற்றவாளி ஒருவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.அவர்களில் ராம்சிங் என்பவன் சிறையில் தற்கொலை செய்து கொண்டான்.

இளம் குற்றவாளி மீது டெல்லி சிறுவர் நீதிமன்றத்திலும் மற்ற4 பேர் மீது டெல்லி விரைவு கோர்ட்டிலும் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இளம் குற்றவாளிக்கு கொலை மற்றும் கற்பழிப்பு உள்ளிட்ட குற்றங்களுக்காக பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

இளம் குற்றவாளிகள் சட்டத்தின்படி அதிகபட்சம் 3 ஆண்டுகள்தான் தண்டனை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த அளவிலான இந்த தண்டனை மாணவியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை வேதனையில் ஆழ்த்தி உள்ளது. தீர்ப்பு கூறப்பட்டதும் அதிருப்தி அடைந்த மாணவியின் தந்தை இந்த தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்யப்படும் என்று தெரிவித்தார். மாணவியின் தாய் மற்றும் தம்பியும் ஆவேசம் அடைந்தனர்.

டெல்லியில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு டெலிபோனில் பேட்டி அளித்த மாணவியின் தந்தை ‘‘இளம் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட குறைவான தண்டனை முடிவு துரதிர்ஷ்டவசமானது. அது குறித்து வக்கீல்களிடம் கலந்து பேச இருக்கிறோம். அவனை தூக்கில் போட வேண்டும். இந்த வழக்கில் மற்ற குற்றவாளி களுக்கும் இன்னும்10 அல்லது 15 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டுவிடும் என்று நம்புகிறோம். குற்றவாளிகள் அனைவரையும் தூக்கில் போட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

குறைவான தண்டனை திருப்தி அளிக்கவில்லை என்றாலும், தங்கள் மகளுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை அவர் இழக்கவில்லை. தீர்ப்பு வழங்கப்பட்டபின் மாணவியின் குடும்பத்தினர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா வதேராவுடன் தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது 10 நாட்களுக்குள் அவர்களை சந்தித்துப் பேச நேரம் ஒதுக்குவதாக பிரியங்கா அவர்களிடம் உறுதி அளித்தார்.

தங்கள் மகளுக்கு நீதி கிடைப்பதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்மந்திரி ஷீலா தீட்சித், காங்கிரஸ் தலைவர் ரேணுகா சவுத்ரி ஆகியோரை சந்தித்துப் பேச இருப்பதாகவும், மாணவியின் தந்தை தெரிவித்தார்.

மற்றொரு கேள்விக்குப்பதில் அளித்த அவர், பா.ஜனதா தலைவரும் குஜராத் முதல்மந்திரியுமான நரேந்திரமோடியை இன்னும் தான் சந்திக்கவில்லை என்றும் அவர் தங்களை சந்தித்து ஆறுதல் கூறி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் தெரிவித்தார்.

சச்சின் சாதனை முறியடிக்கக் கூடியது தான் ஆனால் எளிதல்ல : வெங்கடேஷ் பிரசாத்!!

Venkatesh-Prasad

தென் ஆபிரிக்காவுக்கெதிரான தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதால் இந்திய வீரர்கள் கவனமுடன் விளையாட வேண்டும் என்று முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்தார்.

நவம்பர் மாதம் தென் ஆபிரிக்க சுற்றுப்பயணம் செய்யவுள்ள இந்திய அணி இரண்டு சர்வதேச T20, ஏழு ஒருநாள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இத்தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் கூறுகையில் சமீப காலமாக இந்திய அணியின் செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது. மூத்த வீரர்கள் அணி மட்டுமல்லாமல், இந்தியா ஏ, 19 மற்றும் 23 வயதுக்குட்பட்ட அணிகளும் சிறப்பாக விளையாடின.

வரும் நவம்பர் மாதம் தொடங்கவுள்ள தென் ஆபிரிக்காவுக்கெதிரான தொடரில் இந்திய அணிக்கு உண்மையான சவால் காத்திருக்கிறது. தென் ஆப்ரிக்க அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியமல்ல.

குறிப்பாக துடுப்பாட்ட வீரர்களுக்கு அதிக நெருக்கடி இருக்கும். ஏனெனில் தென் ஆபிரிக்க வேகப்பந்துவீச்சாளர்களின் பவுன்சர் மற்றும் சுவிங் பந்துகளை சமாளிப்பது கடினம். இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள், துல்லியமாக பந்து வீசினால் மட்டுமே சாதிக்க முடியும்.

இரண்டு தொடர்களில் இளம் வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் சிறப்பாக பந்துவீசினார். இவருக்கு, இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட வேகப் பந்து வீச்சாளர்கள் ஒத்துழைப்பு கொடுத்தது பாராட்டுக்குரியது. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான தென் ஆபிரிக்க ஆடுகளத்தில் இவர்கள் நிச்சயம் சாதிப்பார்கள்.

இந்திய அணி அதிகளவு டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும். டெஸ்ட் போட்டி மட்டும் தான் உண்மையான கிரிக்கெட். ஒருநாள் மற்றும் T20 போட்டிகள் அதிகளவு ரசிகர்களை மைதானத்துக்கு அழைத்து வருகிறது.

அதேபோல சச்சின் படைத்த சாதனைகள் முறியடிக்க கூடியது தான். ஆனால் எளிதான காரியமல்ல. இருபது ஆண்டுகளுக்கு மேலாக போமை தக்கவைத்துக் கொண்டு உடற்தகுதி, காயம் உள்ளிட்ட பிரச்சனைகள் இல்லாமல் விளையாடினால் மட்டுமே முடியும் என்று கூறினார்.

சாதனை முயற்சியில் 64 வயதான நீச்சல் வீராங்கனை டயான நையத்!!

dina

அமெரிக்காவின் வலிமையான நீச்சல் வீராங்கனையான டயான நையத் (64) கியூபாவின் தலைநகர் ஹவானாவில் இருந்து அமெரிக்காவின் புளோரிடா வரை கடலில் நீத்திக்கடக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

166 கிலோமீட்டர் நீளமுடைய இந்த புளோரிடா நீரிணைப்பை முதலாவது நபராக நீந்திக்கடக்கும் முயற்சியை அவர் மேற்கொண்டுள்ளார். கடந்த ஆண்டு இவரது இதே முயற்சியானது 41 மணி நேரம் கடலில் நீந்தியபிறகு கடல் சீற்றத்தாலும் ஜெல்லி மீன்கள் கடித்ததாலும் தடைப்பட்டது.

இது அவரது 5வது முயற்சியாகும். 64 வயதான இந்த உறுதியான வீராங்கனையின் கடைசி முயற்சி இதுவாகும். கடலில் நீத்துகிறபோது சுறா மற்றும் ஜெல்லி மீன்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க முகத்தில் சிலிகான் முகமூடியை அணிந்துள்ளார்.

இந்த சாதனையை முடிக்க அவருடன் 35 உதவியாளர்களும் செல்கின்றனர்.

வாழைக் குற்றியில் தோணி செய்து விளையாடிய சிறுவர்கள் பரிதாப மரணம்..!

floodபிலியந்தலை, எகொடவத்த பிரதேசத்தில் வாழைக் குற்றியின் உதவியுடன் தோணி செய்து விளையாடிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

விளையாடும்போது சேற்று நீரில் புதைந்து இரு சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது வயதான சிறுவன் மற்றும் ஏழு வயதான சிறுமியுமே உயிரிழந்துள்ளளனர்.

நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ள அதேவேளை இவர்களது சடலம் பிலியந்தலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.

செப்டெம்பர் மாத ராசி பலன்கள்!!

astrology

செப்டம்பர் மாதத்திற்குரிய உங்களது இராசி பலனை அறிந்து கொள்ள உங்களது இராசியின் மேல் கிளிக் செய்யுங்கள்.

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இன்று நாடு முழுவதும் மழை பெய்யும்..!

weatherநாட்டின் பல பாகங்களிற்கும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

புத்தளம், காலி தொடக்கம் பொத்துவில் வரையான கடற் பகுதிகள் மழை அல்லது மின்னல் தாக்கத்திற்கு உட்படும் என அவ்நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்படையினர் அவதானமாக செயற்படுமாறு வானிலை அவதான நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இடையிடையே காற்று மணத்தியாலத்திற்கு 20 தொடக்கம் 40 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக் கூடும் எனவும் வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் இன்று காலை முதல் மழையுடன் கூடிய காலநிலை நிலவப்பெறும் என தெரவிக்கப்பட்டுள்ளது.

விஷால், சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்த கார்த்தி!!

karthi

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள மதகஜராஜா, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய இரண்டு படங்களும் வரும் செப்டம்பர் 6ம் திகதி வெளியாகவிருக்கின்றன.

இந்த படங்களை பார்த்து ரசிக்க வரும் ரசிகர்களுக்கு தியேட்டரில் கூடுதல் ஆச்சர்யமும் காத்திருக்கிறது. அது என்னவென்றால், எம்.ராஜேஷ் இயக்கத்தில் கார்த்தி, காஜல் அகர்வால் நடித்துள்ள ஆல் இன் ஆல் அழகுராஜா’படத்தின் டீஸரை அன்றைய தினம் திரையரங்குகளில் வெளியிடவுள்ளனர்.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் இப்படத்தை வரும் தீபாவளிக்கு வெளியிடவுள்ளனர். அதற்கு முன்னோட்டமாக இந்த டீஸரை வருகிற 6ம் திகதி திரையரங்குகளில் வெளியிடவுள்ளனர்.

சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி’என தொடர்ந்து மூன்று ஹிட் படங்களை கொடுத்த எம்.ராஜேஷ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் முதல் படம் இது. இப்படத்தில் கார்த்தியுடன் பிரபு, சரண்யா பொன்வண்ணன், சந்தானம் ஆகியோரும் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.

டெண்டுல்கர் தொடர்ந்து விளையாட வேண்டும் : கிறிஸ் கெய்ன்ஸ்!!

Sachin-tendulkar

கிரிக்கெட்டின் ககாப்தம் என்று அழைக்கப்படுபவர் டெண்டுல்கர் பல்வேறு சாதனைகளை படைத்த அவர் கடந்த டிசம்பர் மாதம் ஒய்வு பெற்றார். டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுவேன் என்று அறிவித்து இருந்தார். இந்திய அணி நவம்பர் மாதம் தென்னாபிரிக்கா செல்கிறது.

இந்த சுற்றுப் பயணத்தில் டெண்டுல்கர் தனது 200வது டெஸ்டில் விளையாடி சாதனை படைக்க இருக்கிறார். இந்த டெஸ்ட் தொடரோடு டெண்டுல்கர் ஒய்வு பெறலாம். என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. அவரும் அதே மனநிலையில்தான் உள்ளார்.

இந்த நிலையில் டெண்டுல்கர் மேலும் ஒரு ஆண்டு விளையாட வேண்டும் என்று நியூசிலாந்து முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் கிறிஸ்கெய்ன்ஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

இந்திய அணியில் டெண்டுல்கர் இடம்பெற்று இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அனுபவம் வாய்ந்த வீரராக அவர் மட்டுமே உள்ளார். கங்குலி, டிராவிட், லட்சுமண் ஒய்வுக்கு பிறகு டெண்டுல்கர் மட்டும் அணிக்கு இருக்கிறார்.

நடு வரிசையில் வீராத் கோலி, புஜாராவுக்கு இன்னும் அதிகமான அனுபவம் தேவைப்படுகிறது. இதனால் இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் டெண்டுல்கர் மேலும் ஒரு ஆண்டு விளையாட வேண்டும் என்று கிறிஸ்கெய்ன்ஸ் கூறியுள்ளார்.

கையில் தூக்கி செல்லக்கூடிய மினி சலவை இயந்திரம் அறிமுகம்!!

portable-washing-machine

கையில் தூக்கி செல்லக்கூடிய வகையில் சிறிய சலவை இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒரு இடத்தில் வைத்தே சலவை இயந்திரங்களில் துணிகளை சலவை செய்ய முடியும். ஆனால் கையில் தூக்கி சென்று துணிகளை துவைக்கும் சலவை இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது பேக் வடிவில் ஆனது. வாட்டர் புரூப் உலோகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 5 நிமிடத்தில் துணிகளை துவைக்க முடியும். சாதாரண சலவை இயந்திரத்தின் தரத்தில் இதன் சலவை உள்ளது.

கையில் தூக்கி செல்லும் வசதி இருப்பதால் அதை சுற்றுலா செல்லும் இடங்கள் மற்றும் வெளியிடங்களுக்கு கொண்டு செல்ல முடியும். அதில், ஜீன்ஸ், டி–சேர்ட், உள்ளாடைகள், காலுரைகள் போன்றவற்றை திரவ நிலையிலான கோப்புடன் 3 லிட்டர் தண்ணீரில் சலவை செய்யலாம்.

இந்த சலவை இயந்திரம் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. 180 கிராம் மட்டுமே எடையுள்ள இதை மடித்து வைத்து கொள்ள முடியும்.

சிம்பாவேயை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்!!

pak

சிம்பாவேக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 108 ஓட்ட வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி கண்டது.
இதன்மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது.

சிம்பாவேயின் ஹராரே நகரில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 260 ஓட்டங்களை குவித்தது.

அதிகபட்சமாக அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக் 67, அஹ்மத் ஷெஸாத் 54, நசிர் ஜம்ஷெட் 38, உமர் அமின் 33 ஓட்டங்களை எடுத்தனர். சிம்பாவே தரப்பில் சதாரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பிறகு 261 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சிம்பாவே அணி, பாகிஸ்தானின் பந்துவீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் 40 ஓவர்களில் 152 ஓட்டங்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக வாலர் 48, அணித் தலைவர் டெய்லர் 26 ஓட்டங்களை எடுத்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் முகமது ஹபீஸ், அப்துர் ரெஹ்மான், சயீத் அஜ்மல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

சினிமாவில் கால்பதிக்கும் செந்திலின் வாரிசு!!

senthil

தமிழ் சினிமாவில் ஹீரோக்கள், காமெடியர்கள், டெக்னீசியன்கள் தங்கள் வாரிசுகளை சினிமாவுக்கு அறிமுகப்படுத்துவது ஒன்றும் புதிதல்ல. அந்த வரிசையில் தற்போது காமெடி நடிகர் செந்திலும் இணைந்துள்ளார். ஆனால் இவர் தன்னைப்போல் காமெடி நடிகராக உருவாக்காமல் இயக்குனராக உருவாக்க நினைத்துள்ளார்.

இதற்காக சிறுத்தை சிவாவிடம் உதவி இயக்குனராக சேர்த்து விட்டிருக்கிறாராம். தற்போது அஜீத்தின் வீரம் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.

அப்பா பணம் கொடுப்பார் சொந்த படம் எடுக்கலாம் என்ற கனவில் வேலைக்கு போகக்கூடாது. நான் எப்படி சொந்த முயற்சியில் அறிமுகமாகி, நடித்து, பேரும் புகழும் வாங்கினேனோ, அதேபோல் சொந்த காலில் நிற்கணும் என அறிவுரை கூறித்தான் தன் மகனை சினிமாவுக்குள் நுழைய அனுமதித்தாராம் செந்தில்.

நான் பாடிய பாடலை 30 லட்சம் பேர் கேட்டுள்ளனர் : சிவகார்த்திகேயன்!!

siva

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நெல்லை ரத்னா தியட்டரில் நடந்தது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் பட தயாரிப்பாளர், இணை தயாரிப்பாளர், தியேட்டர் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

நிருபர்களிடம் நடிகர் சிவகார்த்திகேயன் கூறியதாவது:–

இந்த படத்தில் நடிகர் சத்யராஜூடன் இணைந்து நடித்துள்ளேன். முழுக்க முழுக்க பொழுதுபோக்கும், நகைச்சுவையும் நிறைந்த படம். 90 சதவீதம் காமெடி இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தில் ஒரு பாடலும் பாடியுள்ளேன். அந்த பாடலை யூ டியூப் மூலம் 30 லட்சம் பேர் கேட்டுள்ளனர். இந்த படம் மக்கள் மத்தியில் சென்றடைய வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஊருக்கும் சென்று டிரெய்லர் வெளியிட்டு வருகிறோம் என்று கூறினார்.

வரதட்சணைக் கொடுமையால் இந்தியாவில் மணிக்கொரு பெண் மரணம்!!

dowry

இந்தியாவில் சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண் வரதட்சணைக் கொடுமை காரணமாக உயிரிழப்பதாக உத்தியோகப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இந்தியா எங்கிலும் பார்க்க 2012ம் ஆண்டில் வரதட்சணைக் கொடுமை சம்பந்தமான உயிரிழப்புகளாக 8233 சம்பவங்கள் பதியப்பட்டுள்ளதாக தேசிய குற்றச் சம்பவ பதிவு அலுவகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

2007 ஆண்டு முதல் இந்த எண்ணிக்கை எட்டாயிரத்துக்கும் கூடுதலாகவே இருந்துவந்துள்ளது என்றும் தெரியவருகிறது. தவிர 2007க்கும் 2011க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வந்துள்ளது.

வரதட்சணைக் கொடுமையால் பெண்கள் இறந்ததாக குற்றம்சாட்டப்படும் சம்பவங்களில் சராசரியாக 35 சதவீத வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

திருமண விஷயத்தில் பெண்ணை ஒரு பரிவர்த்தனைப் பொருளாகவே பார்க்கும் சமூக மனப்பாங்கு இந்தியாவில் இன்னும் பெரிதாக மாறியிருக்கவில்லை என கருத்து வெளியிட்ட எழுத்தாளரும் பெண்ணுரிமை ஆர்வலருமான கீதா கூறினார்.

இந்தியாவில் வரதட்சணை ஒழிப்பு சட்டம் 1961ம் ஆண்டே அமலுக்கு வந்துவிட்டாலும் இன்றளவும் சாவு எண்ணிக்கை அதிகமாக இருப்பது, சட்டம் இருந்தும் இல்லாத ஒரு நிலையையே காட்டுவதாகவும், சட்டத்தை நடைமுறைப்படுத்தவும், சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞரான ஆர்.வைகை தெரிவித்தார்.

விராத் கோலிக்கு அர்ஜுனா விருது!!

kholi

இந்திய விளையாட்டு வீரர்களை கௌரவப்படுத்தும் வகையில் கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகளை வீரர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கப்படும் உயரிய விருதான கேல் ரத்னா விருதினை துப்பாக்கி சுடுதல் வீரர் ரஞ்சன் சோதிக்கு பிரணாப் முகர்ஜி வழங்கி கௌரவித்தார்.

மேலும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி உள்ளிட்ட 14 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடைபெற்றது. வீரர்,வீராங்கனைகள், பயிற்சியாளர் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

உலகக் கிண்ண துப்பாக்கி சுடுதலில் தொடர்ந்து இரு முறை தங்கம் வென்றவரான ரஞ்சன் சோதிக்கு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.

இந்த விருதுடன் 7.5 இலட்சம் இந்திய ரூபா, பதக்கம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

நட்சத்திர வீரரான விராத் கோலி உட்பட 14 வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டன. இந்த விருதுடன் 5 இலட்சம், பட்டயம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

ரஞ்சன் சோதிக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டதை அடுத்து, இவ்விருதை பெற்ற 7 வது துப்பாக்கி சுடும் வீரர் எனும் பெருமையை அவர் பெற்றுள்ளார் என்பதும் இவ்விருது தொடர்ந்து மூன்றாவது வருடமாக ஒரு துப்பாக்கி சுடும் வீரருக்கு வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி!!

eng

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது 20-20 போட்டியில் ஹேல்ஸ் அதிரடி ஆட்டம் கைகொடுக்க, இங்கிலாந்து அணி 27 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இதன்மூலம் தொடரை கைப்பற்ற நினைத்த அவுஸ்திரேலிய அணி ஏமாற்றம் அடைந்தது. இங்கிலாந்து சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி 20-20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

முதல் 20-20யில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி செஸ்டர்- லீ-ஸ்டீரிட்டில் நடந்தது. நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவு செய்தது.

இங்கிலாந்து அணிக்கு லம்ப், ஹேல்ஸ் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. வட்சன் ஓவரில் லம்ப் இரண்டு பவுண்டரிகள் விளாசினார். தன் பங்கிற்கு ஜோன்சன் பந்துவீச்சில் ஹேல்ஸ் தொடர்ச்சியாக இரண்டு பவுண்டரி அடித்தார். தொடர்ந்து பால்கனர் ஓவரிலும் மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் அடிக்க, ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர்.

முதல் விக்கெட்டுக்கு 111 ஓட்டங்களைச் சேர்த்தபோது, லம்ப் 43 ஓட்டங்களில் வெளியேறினார். பின் வந்த ரைட் (30), மோர்கன் (20) நீடிக்கவில்லை. ஹேல்ஸ் 94 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். முடிவில், இங்கிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 195 ஓட்டங்க எடுத்தது.

அவுஸ்திரேலிய அணிக்கு கடந்த முறை உலக சாதனை படைத்த பின்ச் (5) இம்முறை ஏமாற்றினார். பிராட் ஓவரில் வார்னர் இரண்டு பவுண்டரி விளாசினார். ஆனால், பின் வந்த வாட்சன் (7), மார்ஷ் (13) விரைவில் வெளியேறினர்.

அரை சதம் கடந்த வோனர் 53 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பெய்லி (23), வேட் (4), மேக்ஸ்வெல் (27) நிலைக்கவில்லை. மற்றவர்கள் சொதப்ப, அவுஸ்திரேலிய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 168 ஓட்டங்களை எடுத்து தோல்வியடைந்தது. இங்கிலாந்தின் ஹேல்ஸ் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

இதன் மூலம் 20-20 தொடர் 1-1 என சமநிலையானது.