காதலர்கள் செய்த மோசமான செயல் : நண்பிக்கு செய்த துரோகம்!!

தோழியின் ஏ.ரி.எம் அட்டையைத் திருடி 310,000 ரூபா பணம் மோசடியாக பெற்ற 18 வயதுடைய யுவதியும், யுவதியின் காதலனும்கைது செய்யப்பட்டுள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சந்தேக நபரான யுவதியான காதலி கடந்த 20 ஆம் திகதி தனது தோழியின் வீட்டிற்குச் சென்று இருவரும் இணைந்து நகரத்துக்கு சென்றுள்ளனர்.

இதன்போது, யுவதியின் தோழி தனது ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி 10 ஆயிரம் ரூபா பணத்தைப் பெற்ற பின் ஏ.ரி.எம் அட்டையை தனது கையடக்கத் தொலைபேசியின் அட்டைக்குள் வைத்துள்ளார்.

இதனை அவதானித்த யுவதி, புகைப்படம் எடுப்பதாகக் கூறி தனது தோழியின் கையடக்கத் தொலைபேசியை பெற்றுக்கொண்டு அதிலிருந்த ஏ.ரி.எம் அட்டையைத் திருடியுள்ளார்.

பின்னர், இருவரும் தங்களது வீட்டிற்குச் சென்ற பின்னரே தோழி தனது ஏ.ரி.எம் அட்டை காணாமல் போயுள்ளதை அறிந்துள்ளார். அதிர்ச்சியடைந்த தோழி யுவதியின் வீட்டிற்குச் சென்று அவரது பையை சோதனையிட்ட போது தனது ஏ.ரி.எம் அட்டையைக் கண்டுபிடித்துள்ளார்.

இதனையடுத்து, யுவதியின் தோழி இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்த நிலையில், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் திருடப்பட்டதாகக் கூறப்படும் 310,000 ரூபா பணம் யுவதியின் காதலனிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து காதலர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் தனிநபரால் அரச காணி வழங்கப்படுவதற்கு மக்கள் எதிர்ப்பு : மாவட்ட செயலகத்தில் திரண்ட மக்கள்!!

வவுனியா – பன்றிகெய்தகுளம் பகுதியில் தனிநபர் ஒருவரால் அரச காணியை 16 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதற்கு அப் பகுதி சமூக அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட அரதச அதிபரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

நேற்று (22.07) வவுனியா மாவட்ட செயலாளர் பீ.ஏ.சரத்சந்திர, வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் ஆகியோருடன் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது, வவுனியா, பன்றிக்கெய்தகுளம் மற்றும் அதனையண்டிய பகுதிகளில் கூட பலர் காணியின்றி இருக்கும் போது வெளிமாவட்டத்தவர்கள் உள்ளடங்களாக புதிதாக 16 குடும்பங்களை எமது கிராமத்தில் குடியமர்த்த வெளிநாட்டில் இருந்து வந்து நிற்கும் தனிநபர் ஒருவர் முயற்சி செய்கின்றார்.

அரதசாங்கத்தால் வேறு நபர்களுக்கு வழங்கப்பட்ட காணியினை முறையான மாற்றீடு செய்யாது அரச காணியில் தனிநபர் தான் விரும்பிய குடும்பங்களை குடியமர்த்த முயல்கிறார். இதனை ஏற்க முடியாது. எமது மாவட்டத்தில் பலர் காணியில்லாது இருக்கின்ற நிலையில் வெளி மாவட்த்தில் இருந்து மக்களை குடியமர்த்த முயல்வது பிழையான செயற்பாடு.

அடுத்து, எமது மாவட்டத்திற்கு என 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் அனுமதி வழங்காது வேறு அரசியல்வாதிகள், வேறு மாவட்ட எம்.பிகள் எமது மாவட்டத்தில் குடியேற்றத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கியதாக குடியமர்த்தும் வெளிநாட்டு நபர் கூறுகின்றார். இதற்கு எமது மாவட்ட எம்.பிகளே முடிவு காண வேண்டும். இத்கு எமக்கு தீர்வு வேண்டும் என அவர்கள் இதன்போது தெரிவித்தனர்.

இதன்போது, அரச சட்டதிட்டங்களுக்கு அமைவாக குறித்த காணி தனிநபரால் வழங்க முடியாது. அதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டது என இதன்போது மாவட்டஅரச அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் உறுதியளித்ததாக பொது மக்கள் தெரிவித்தனர்.

 

வங்கிகளில் தங்க நகை அடகு வைத்திருக்கும் நபர்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை!!

வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு இவ்வாறு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் சமீபகாலமாக நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியானது பொருளாதாரத்தின் அனைத்து துறைகளையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதித்துள்ளது.

இதன் விளைவாக தங்க நகைகளை அடமானம் வைக்கும் செயற்பாடு பொதுமக்களிடத்தில் வேகமாக அதிகரித்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைக் கருத்திற் கொண்டு, உரிமம் பெற்ற வங்கிகளில் அடமான முன்பணம் பெற்ற குறைந்த வருமானம் பெறும் நபர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய அவசியம் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

25 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை : ஆச்சர்யத்தை ஏற்படுத்திய சம்பவம்!!

இந்தியாவின் கர்நாடகத்தில் 25 விரல்களுடன் ஒரு குழந்தை பிறந்துள்ள சம்பவம் பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகல்கோட்டை மாவட்டம் ராபகவி அருகே கொன்னூரை சேர்ந்தவர் பாரதி (வயது 35). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பாரதி பிரசவத்திற்காக ராபகவி டவுனில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. உடல் ஆரோக்கியத்துடன் பிறந்த அந்த குழந்தையின் கால், கை விரல்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது.

அதாவது வலது கையில் 6 விரல்களும், இடது கையில் 7 விரல்களும், இரு கால்களிலும் தலா 6 விரல்களும் என மொத்தம் 25 விரல்களுடன் அந்த அதிசய குழந்தை பிறந்துள்ளது.

குழந்தையை பார்த்து மருத்துவர்களும் மற்றும் குழந்தையின் குடும்பத்தினரும் ஆச்சரியம் அடைந்தனர். குழந்தை தொடர்பில் மருத்துவர்கள் கூறுகையில்,

“பாரதியின் குழந்தைக்கு 25 விரல்கள் உள்ளன. மற்றபடி குழந்தையின் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. விரல்களின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதால் பயப்பட தேவையில்லை” என்றனர்.

திருமணமாகி முன்றே நிமிடத்தில் விவாகரத்து : திகைத்து நின்ற உறவினர்கள்!!

மணமகன் திட்டியதற்காக திருமணமாகி முன்றே நிமிடத்தில் பெண் ஒருவர் விவாகரத்து செய்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்த விசித்திர சம்பவம் துபாயில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், துபாயில் ஒரு தம்பதி உறவினர்களை அழைத்து மிகவும் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்தவுடன் அத்தம்பதி அங்கிருந்து புறப்பட்டனர்.

அப்போது மணமகள் திடீரென கால் தடுமாறி கீழே விழுந்தார். இந்நிலையில் அவருக்கு கை கொடுத்து உதவி செய்வதற்கு பதில், மணமகன் மணப்பெண்னை திட்டிய சம்பவம் தான் விவாகரத்து செய்ய காரணமாகியுள்ளது.

இந்த சம்பவம் திருமணத்திற்கு வந்திருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மணமகள் கீழே விழுந்தவுடன் கோபம் அடைந்த மணமகன், ”முட்டாள் பார்த்து நடக்கமாட்டாயா” என புத்தம் புது மனைவியை திட்டியுள்ளார்.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் தன்னை தனது கணவர் முட்டாள் என்று கூறி அவமரியாதை செய்ததை மணமகளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

இப்போதே இப்படி என்றால் எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வாரோ என்று நினைத்த மணமகள், உடனே இந்த திருமணத்தை ரத்து செய்ய முடிவு செய்து நீதிபதியை அழைத்து, தனக்கு உடனே விவாகரத்து வேண்டும் என்று கேட்டார்.

நீதிபதியும் அவர்களுக்கு உடனே விவாகரத்து வழங்கிவிட்டார். திருமணமாகி வெறும் 3 நிமிடத்தில் இருவருக்கும் இடையே விவாகரத்து ஏற்பட்டுவிட்டது.

இந்நிலையில் துபாயில் இதுதான் மிகவும் குறுகிய கால திருமணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் மணப்பெண்ணுக்கு ஆதரவாக பலரும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

வெளிநாட்டில் இருந்து வந்த சகோதரனுக்கு திருமணம் – ஹோட்டலில் உயிரிழந்த தங்கை!!

ஹிக்கடுவ பிரதேசத்தில் திருமணம் செய்த நபர் ஒருவரின் தேனிலவு நடந்த ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்த மாப்பிள்ளையின் தங்கை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

அம்பலாங்கொடை, துயலையில் வசித்து வந்த மணீஷா செவ்வந்தி என்ற திருமணமாகாத யுவதியே உயிரிழந்துள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டில் இருந்து வந்த சகோதரரின் திருமண நிகழ்வு ஹிக்கடுவ, பின்னதுவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. தேனிலவை கழிப்பதற்காக கடந்த 18ஆம் திகதி அஹுங்கல்லை ஹோட்டலுக்கு வந்துள்ளார்.

மறுநாள் காலை ஒன்பது மணியளவில் தாயும், தங்கையும், தங்கையின் காதலனுடன் புதுமண தம்பதிகளிடம் நலன் விசாரிப்பதற்காக ஹோட்டலுக்கு வந்துள்ளனர்.

இதன்போது, குறித்த யுவதி மற்றும் அவரது காதலன் நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு அனுமதி பெற்ற நிலையில், யுவதி நீரில் மூழ்கியுள்ளார்.

உடனடியாக நீச்சல் குளத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

பாண் விலை தொடர்பிலான அரசாங்கத்தின் தீர்மானம்!!

பேக்கரி உரிமையாளர்கள் பாணின் விலையை குறைக்கத் தவறினால், பாணுக்கு (Bread) கட்டுப்பாட்டு விலை அறிமுகம் செய்யப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வர்த்தக விவகார அமைச்சர் நளின் பெர்னாண்டோ (Nalin Fernando) இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் இரண்டு நாட்களில் பேக்கரி உரிமையாளர்கள் பாணின் விலையை குறைக்காவிட்டால் கட்டுப்பாட்டு விலை அறிமுகம் செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.

பேக்கரி உற்பத்தியாளர்களை சந்தித்து பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்குமாறு கோரியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இரண்டு அல்லது மூன்று நாட்களில் விலை குறைப்பு தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படாவிட்டால் அரசாங்கம் தீர்வு ஒன்றை எடுக்க நேரிடும் என பேக்கரி உற்பத்தியாளர்களிடம் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, சண்ட்விட்ஜ் மற்றும் சாதாரண பாண் ஆகியனவற்றின் விலையை குறைக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், 450 கிராம் எடையுடைய பாணின் விலை மக்களினால் உணரக் கூடிய வகையில் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ உறுதியளித்துள்ளார்.

கொழும்பில் அதிகாலையில் பரபரப்பை ஏற்படுத்திய சடலம்!!

கொழும்பு, வார்ட் பிளேஸில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்குள் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (23) அதிகாலை 1 மணியளவில் கறுவாத்தோட்டம் பொலிஸார் மற்றும் 119க்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் தேசிய பல் வைத்தியசாலைக்கு அருகில் குறித்த முச்சக்கரவண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அப்பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டிக்குள் இருந்து கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நபரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 33 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டி தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடத்திய விசாரணையில் அது மித்தெனிய பிரதேசத்தை சேர்ந்த ஒருவருடையது என தெரியவந்துள்ளது.

குறித்த நபரிடம் வினவியபோது, ​​முச்சக்கரவண்டியை 33 வயதுடைய தனது மைத்துனருக்கு வாடகைக்கு செலுத்த வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கருவாத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சடலமாக மீட்கப்பட்ட தாய் மற்றும் பிள்ளைகள் – பெண்ணின் இரண்டாவது கணவர் கைது!!

ஹம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம பிரதேசத்தில், நீராடச் சென்ற தாய் மற்றும் இரண்டு மகள்களின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் உயிரிழந்த தாயின் இரண்டாவது கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 21ஆம் திகதி இரவு 8.00 மணியளவில் மூவரும் கல்வல பகுதிக்கு நீராடச் சென்ற நிலையில், குறித்த பெண்ணின் சடலம் பிரதேச மக்களால் மீட்கப்பட்டது.

இதனையடுத்து நேற்று காலை இரண்டு பிள்ளைகளின் சடலங்களும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன திஸ்ஸமஹாராமய சமகுலிய பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.பி. மனோரி சுரங்கிகா என்ற 32 வயதான தாய் மற்றும் 9 வயதான தேவ்மி தெஹன்சா மற்றும் 14 வயதான நேத்மி நிமான்சா ஆகிய மூவரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த நாட்களில் கொடிகஹவெவ பிரதேசத்தில் குழாய் நீர் இல்லாததால் அப்பகுதி மக்கள் தண்ணீர் தேங்கிய இடங்களுக்கு சென்று ஆடைகளை துவைத்து குளிப்பதை வழமையாக கொண்டிருக்கின்றனர்.

இதன்படியே, நேற்று முன்தினம் மாலை 5.00 மணியளவில் இந்த இரண்டு பிள்ளைகளும் தாயும் ஆடைகளை துவைக்கவும் குளிக்கவும் கல்வல நோக்கிச் சென்றதை பிரதேசவாசிகள் கண்டுள்ளனர்.

கணவர் பணிக்கு சென்று வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டில் எவரும் இல்லாத நிலையில் ​, குவாரிக்கு அருகில் இருந்த ஆடைகள், பிள்ளைகளின் செருப்பு ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து கிராம மக்கள் ஒன்று திரண்டு காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டதாகவும், அன்றிரவு தாயாரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு, அனுமதிச் சட்டத்தை மீறி குவாரி நடத்தப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில் குவாரி மூடப்பட்டுள்ளது. எனினும் இருபது அடிக்கு மேல் ஆழமாக தோண்டப்பட்ட குவாரியை மூட உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்தநிலையில், குவாரியை மூடியிருந்தால் இதுபோன்ற விபத்து நடந்திருக்காது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

உயிரிழந்த இரண்டு பிள்ளைகளும் கவுந்திஸ்ஸபுர மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வருவதாகவும், மூத்த மகள் நெத்மி நிமான்சா ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவி எனவும், நான்காம் ஆண்டில் கல்வி கற்கும் தேவ்மி தெஹன்சா வகுப்பறையில் புத்திசாலியான பிள்ளை எனவும் அதிபர் ஹர்ஷ கட்டகே தெரிவித்துள்ளார்

ஆபத்தை உணராமல் நீர்வீழ்ச்சியில் Reels.. 300 அடி உயர பள்ளத்தில் விழுந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

நீர்வீழ்ச்சி அருகே ரீல்ஸ் செய்துகொண்டிருந்த இளம்பெண் 300 அடி உயர பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் ரீல்ஸ் செய்வதற்காகவும், வீடியோ போடுவதற்காகவும் பலரும் தங்களது உயிரை பொருட்படுத்தாமல் துணிச்சலான விடயங்களை செய்து வருகின்றனர். சில நேரம் அது ஆபத்தில் முடிகிறது.

இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, ராய்காட் மாவட்டத்தில் உள்ள கும்பே நீர்வீழ்ச்சிக்கு ஆன்வி கம்தார் (27) என்ற இளம்பெண் ஒருவர் தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்தார்.

அப்போது அவர் நீர்வீழ்ச்சியின் அருகே ரீல்ஸ் செய்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் 300 அடி உயர பள்ளத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

அவர், ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. பின்னர், சம்பவம் குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் விரைந்து வந்தனர்.

இதையடுத்து, 6 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பள்ளத்தாக்கில் இருந்து பெண்ணை பத்திரமாக மீட்டனர். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாங்கிய நகையை திருப்பி கொடுக்காத மாமியார்.. விரக்தியில் மருமகள் எடுத்த விபரீத முடிவு!!

சென்னை புறநகர் தாம்பரம் அருகே மணிமங்கலத்தில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால், குரோம்பேட்டை அரசு மருத்துவமனை அருகே ஜிஎஸ்டி சாலையில் பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தாம்பரம் அடுத்த மணிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் மஞ்சுளா. இருவரும் காதலித்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு மஞ்சுளாவுக்கும், அவரது மாமியார் சித்ராவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் மணிமங்கலம் பகுதியில் கணவருடன் மஞ்சுளா தனியாக சென்றுள்ளார்.

இந்நிலையில் மஞ்சுளாவுக்கு வரதட்சணையாக வழங்கப்பட்ட 12 சவரன் தங்க நகைகளை மஞ்சுளாவின் மாமியார் சித்ரா வாங்கி மகளுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. நகையை பலமுறை கேட்டும் மாமியார் தராததால் மணிமங்கலம் காவல்நிலையத்தில் மாமியார் மீது மஞ்சுளா புகார் அளித்தார்.

மேலும் நகையை ஜூன் 15ம் தேதி தருவதாக மணிமங்கலம் காவல் நிலையத்தில் சித்ரா கடிதம் எழுதியுள்ளார்.இந்நிலையில் மஞ்சுளா திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

மஞ்சுளா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், இது கொலை என்றும், மஞ்சுளாவின் உடலில் பல காயங்கள் இருந்ததாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் மணிமங்கலம் போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என்றும், ஆர்டிஓ விசாரணை நடத்த வேண்டும் என்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மஞ்சுளாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டபோது,

​​அவரது மரணத்திற்கு நீதி கேட்டு அவரது உறவினர்கள் குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் குரோம்பேட்டை காவல் ஆய்வாளர் நேரில் சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

வகுப்பறையில் மயங்கி விழுந்து ஆசிரியை மரணம்… பதறிய மாணவர்கள்!!

கேரள மாநிலம், தெங்கனா குட் ஷெப்பர்ட் பள்ளியின் விளையாட்டு ஆசிரியையும், முன்னாள் தேசிய வீராங்கனையுமான மனு ஜான் (50) காலை பள்ளியில் பணியில் இருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

தேசிய அளவில் கேரளாவுக்காக பல விருதுகளை வென்றுள்ள மனு, எம்ஜி பல்கலைக்கழக கிராஸ்-கன்ட்ரி அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.

மனு தனது களத்தில் உச்சக்கட்டத்தில் இருந்த போது, ​​முன்னாள் பல்கலைக்கழக பயிற்சியாளர் பி.வி.வெல்சியின் கீழ் அஞ்சு பாபி ஜார்ஜ், அஜித் குமார், சாக்கோ மற்றும் சினிமோளிடம் பயிற்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

குவைத் தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்தியர்கள் 4 பேர் மரணம்!!

குவைத்தின் அப்பாசியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கேரள மாநிலம் திருவல்லா நீராட்டுபுரத்தைச் சேர்ந்த மேத்யூ முலக்கல், அவரது மனைவி லினி ஆபிரகாம் மற்றும் அவர்களது குழந்தைகளான ஐசக் மற்றும் ஐரின் ஆகியோர் இந்த தீ விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அப்பாசியாவின் அல் ஜலீப் பகுதியில் குடும்பத்தின் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

விடுமுறைக்காக கேரளா சென்றிருந்த மேத்யூ குடும்பத்தினர், விடுமுறை முடிந்து கேரளாவில் இருந்து திரும்பி வந்து, தீ விபத்து குறித்து தெரியாமல் அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

ஏசி வென்டிலேட்டர் வழியாக அறைக்குள் கசிந்த புகையை நான்கு பேரும் சுவாசித்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மின்சுற்று காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக குவைத் தீயணைப்பு மீட்புப் படை மேலும் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

கேரளாவில் விடுமுறையை கழித்துவிட்டு நேற்று தான் இந்த குடும்பம் குவைத் திரும்பியது. மேத்யூ ராய்ட்டர்ஸில் பணிபுரிகிறார். அவரது மனைவி லினி அதான் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் இருந்து தந்தையின் இறுதி சடங்கிற்காக யாழ் வந்த மகனுக்கு நேர்ந்த சோகம்!!

தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக லண்டனிலிருந்து வருகை தந்த மகன் கடந்த வியாழக்கிழமை (18.07) கடுமையான மனவேதனையின் காரணமாக மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – காரைநகர் மணற்காடு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் லண்டன் சென்றிருந்த நிலையில், தந்தையின் மரணம் காரணமாக யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

இதன்போது இறுதிச் சடங்கில் திடீரென மயங்கி கீழே விழுந்து காரைநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மேலும் அவரது மரணத்திற்கு மாரடைப்பு காரணம் எனவும், ஒரே நேரத்தில் இரண்டு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் காரைநகர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் நடைமுறைக்கு வரவுள்ள பயோமெட்ரிக் கடவுச்சீட்டுக்கள்!!

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், எதிர்வரும் ஜனவரி, 2025 முதல் இலத்திரனியல் தட்டுகள்(Ships) உட்பொதிக்கப்பட்ட பயோமெட்ரிக் (Biometrics) கடவுச்சீட்டுகளை வழங்கத் தயாராகி வருகிறது.

இந்தநிலையில் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்களுக்கான முன்பதிவு செயல்முறை இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிற்கு வெளியே வசிக்கும் மக்களுக்கான செயல்முறையை எளிதாக்குவதற்காக, இணையம் மூலமான கடவுச்சீட்டு விண்ணப்பங்களையும் குடிவரவுத்திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

முன்னதாக சுமார் 5 மில்லியன் பயோமெற்றிக் கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்கான கேள்விப்பத்திரம் கடந்த ஜனவரியில் கோரப்பட்டது.

எனினும் சில மேம்படுத்தல்களுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் செல்லலாம் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பயோமெட்ரிக் அணுகல் தொடர்பான விடங்களில் ஜப்பான் மற்றும் சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு என்பன இலங்கைக்கு ஆதரவளிக்கின்றன.

ஊருக்குள் வந்த 12 அடி நீள ராஜநாகம் : அச்சத்தில் மக்கள்!!

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் 12 அடி நீளம் உள்ள ராஜநாகம் ஒன்று பார்த்து மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

அங்கு பெய்துவரும் கடுமழை காரணமாக ராஜநாகம் இருப்பிடத்தை விட்டு வெளியே வந்திருக்கலாம் என கூறப்படுகின்றது.

12 அடி நீளம் உள்ள ராஜநாகம் ஒன்று காம்பவுண்ட் சுவரின் மீது ஏறி மரத்தின் கிளைகளில் சுற்றிக் கொண்டிருந்தது. இதனையடுத்து அதுதொடர்பில் வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர்.

தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் பாம்பை லாவகமாகப் பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர்.