ஜேர்மனியில் நாயுடன் இணைந்து போதை மருந்து செயல்களில் ஈடுபடும் சிறுவர்களை கண்டுபிடித்து வருகின்றார் ரெய்னர் ரூதர் (Reiner Reuther).
ரெனிர் ரூதர் (Reiner Reuther) மற்றும் அவரது நாய் தோர் (Thor) ஆகிய இருவரும் இணைந்து பெற்றோர்களை மறந்து போதை மருந்து பழக்கங்களுக்கு அடிமையாவதில் இருந்து குழந்தைகளை தடுக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
25 ஆண்டுகளாக ஹோட்டல் உரிமையாளராக இருந்த இவர் விலங்குகளுடன் பணியாற்ற விரும்பி அமெரிக்க பொலிஸ் அகாடமியில் நாய் கையாளுதல் பயிற்சியில் ஈடுபட்டார்.
அங்கு பயிற்சியை முடித்துவிட்டு ஜேர்மன் வந்த இவர் குழந்தைகள் போதை காப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் அவரது பணியில் சந்தித்த அனுபவங்கள் குறித்து கூறுகையில், நான் பல்வேறான அனுபவங்களை இந்த பணியில் சந்தித்துள்ளேன்.
அவற்றில் ஒரு அனுபவமாக தனது மகள் போதையில் ஈடுபடுவதாக சந்தேகித்த பெற்றோர்கள் இவர்கள் மூலமாக வீட்டில் சோதனை செய்ததில் கழிவுகளை பயன்படுத்தும் இடத்தில் கோகைன் போதை பொருளை மறைத்து வைத்து பயன்படுத்துவைதை கண்டுபிடித்துள்ளனர்.
மற்றுமொரு அனுபவமாக பெற்றோரே தன்னுடைய மகன் தனது இளமைப் பருவத்தை புறக்கணித்து விட்டு தவறான வழியில் செல்கிறான் என்று பொலிசில் புகார் கொடுத்துள்ளனர் என்றும் தனது அனுபவங்களை கூறியுள்ளார்.
மேலும், தனியார் நாய் கையாளர்கள் இந்த மாதிரியான செயல்களில் பொறுப்புடன் ஈடுபடுவதில்லை. ஆனாலும், தனது சேவைகளை திறம்பட செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பெற்றோர்கள் அனைவரும் மனநல ஆலோசனை பெறுவது என்பது முக்கியமாகும். நான் இந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கும் பெற்றோர்களுக்கு உதவி செய்ய விரும்புகின்றேன்.
ஆனால் அவர்கள் தங்கள் குழுந்தைகள் குறித்த விடயங்களை தெரிவிப்பது இந்த பிரச்சனைக்கு உதவியாக இருக்கும்.
மேலும், போதை பிரச்சனையானது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் பரவலாக பேசப்படுகின்ற விடயம் என்றும் ஆனால் ஜேர்மனியில் இதனை ஒரு மறைமுக பிரச்சனையாக கையாளுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
இவர் ஒரு தேடலுக்கு 95 யூரோ பணம் வாங்குகின்றார். மேலும் இந்த பணி குறித்து கூறுகையில், தனியாக வேலை பார்க்கும் நாங்கள் எங்களது தொழிலை மேலும் வளரச் செய்ய விரும்புகின்றோம் என்று தெரிவித்துள்ளார்.

மதுரை அருகே கார் மோதி, சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இளம் நகைச்சுவை நடிகர் பாலா கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு 20ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது.

வடமாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் பிரதம நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாலச்சந்திர குமார் இயக்க பிக் பிக்சர் எனும் மலையாளப் படத்தில் நாயகனாக சர்ச்சைக்குரிய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் நடிக்கிறார்.
வவுனியாவிலுள்ள 3 பாடசாலைகளில் மஹிந்தோதயம் திட்டத்தின் மூலம் ஆய்வுகூடங்கள் அமைப்பதற்கான அடிக்கல்லு நாட்டும் நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
வடமாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் பிரதம நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனை நியமிப்பதற்கு அக் கட்சியினர் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 14 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
சோமாலியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடற்கொள்ளையர்களின் பிடியிலிருந்தபோது, கடந்தவாரம் கடலில் மூழ்கிய கப்பலில் இருந்த 11 கப்பல் பணியாளர்கள் உயிர்தப்பியுள்ளதாக அந்தப் பிராந்திய கடற்பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







தொலைபேசி மூலமாக பலரை அச்சுறுத்தி பணம் பறிப்பது தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.