தன்னைத்தானே கடத்தி கணவனிடம் 50 இலட்சம் ரூபா கேட்ட பெண் : பொலிஸாரின் நடவடிக்கை!!

கர்ப்பிணி பெண் ஒருவர் தனது காதலனுடன் சேர்ந்து கணவனிடம் 50 இலட்சம் ரூபா பணம் கேட்டு தொல்லை கொடுத்த சம்பவம் ஒன்று இரத்தினபுரி – கலவானை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.

கடந்த 9ஆம் திகதி குறித்த கர்ப்பிணி பெண், மாதாந்த கிளினிக்குக்குச் செல்வதாக கூறிவிட்டு, வீட்டை விட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில், அன்றைய தினம் தனது மனைவி, வீட்டுக்குத் திரும்பவில்லை என அவருடைய கணவன், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதற்கிடையில், அந்தப் பெண்ணை விடுவிக்க வேண்டுமாயின் 50 இலட்சம் ரூபா பணத்தைக் கொடுக்க வேண்டும் என்று இனம் தெரியாத தொலைபேசி அழைப்பொன்று, கணவனின் அலைபேசிக்கு வந்துள்ளதுடன் வட்ஸ்அப் இற்கும் குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அந்த பெண்ணின் கணவன் பொலிஸாருக்கு தெரியடுத்தியதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் குறித்த பெண்ணை கலவானை பொலிஸ் பிரிவிலுள்ள கோவிந்தபுரத்தில் கடந்த 12 ஆம் திகதி மாலை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இதன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் விசாரணைகள் மூலம், இணையத்தளத்தின் ஊடாக 5 மாதங்களுக்கு முன்னர் தொடர்பில் இருந்த கர்ப்பிணி பெண்ணும் இளைஞனும் பின்னர் காதலர்களாக மாறியுள்ளமை தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், பெண்ணை, சியம்பலாண்டுவ நகருக்கு வரவழைத்த காதலன், கலவான – வெத்தேகொட பகுதியிலுள்ள தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து, அங்கு வைத்து கணவனிடமிருந்து பணம் பெறுவதற்கான அழைப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதற்கமைய, விசாரணைகளின் பிரகாரம் 31 வயதான பெண்ணையும், அவருடைய காதலன் என அறியப்பட்ட 21 வயதான இளைஞரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், அந்த இளைஞரை சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்திய போது அவரை 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த கர்ப்பிணி பெண், அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 

முல்லைத்தீவில் சிறுமியை தவறான செயற்பாட்டிற்கு உள்ளாக்கிய இளைஞன் இந்தியாவிற்கு தப்பியோட்டம்!!

முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் 14 வயதுடைய சிறுமியை தவறான செயற்பாட்டிற்கு உள்ளாக்கிய இளைஞன் இந்தியாவிற்கு தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த 14 வயதுடைய சிறுமி கடந்த ஜுன் மாதம் 11 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற நிலையில் அவர் தவறான செயற்பாட்டிற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

இதையடுத்து, சிறுமியிடம் சட்டவைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சிறுமியை கடந்த ஏப்ரல் மாதம் முள்ளியவளை பகுதியினை சேர்ந்த இளைஞன் ஒருவர் தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, சிறுவர் நன்நடத்தை பிரிவினால் யாழ்ப்பாணத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான இளைஞனை கைதுசெய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்ட வேளை இளைஞன் கிராமத்தில் இருந்து தலைமறைவாகிய நிலையில் தற்போது இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு தப்பி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றச்செயல் புரிந்த சந்தேகநபரான இளைஞனை கைதுசெய்யும் நடவடிக்கையில் இலங்கை பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

 

வவுனியாவில் இளம் யுவதி குளிக்கும் போது வீடியோ எடுக்க முயன்ற போதனாசிரியர்!!

வவுனியாவில் அரச ஊழியரான இளம் யுவதி ஒருவர் தங்கியிருக்கும் தனியார் வாடகை வீட்டில் குளிப்பதை தொலைபேசியில் வவுனியா பல்கலைக்கழக போதானாசிரியர் ஒருவர் வீடியோ எடுக்க முயன்ற சம்பவம் ஒன்று வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் அரச ஊழியராக வேலை செய்யும் சகோதர மொழி ஊழியர் ஒருவர் வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சில யுவதிகளுடன் இணைந்து தங்கியுள்ளார். குறித்த வீட்டில் வவுனியா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பிரிவில் போதனாசியராக பணியாற்றும் ஒருவர் குழு வகுப்புக்கள் நடாத்தி வருகின்றார்.

குறித்த வீட்டில் அவர் வெளியில் கற்பித்துக் கொண்டிருந்த போது சகோதர மொழி அரச ஊழியரான யுவதி ஒருவர் குளியலறைக்குள் சென்று குளித்துள்ளார்.

இதன்போது குளியலறைப் பக்கம் சென்ற போதானாசிரியர் குளியறையின் மேல் துவாரத்தின் ஊடாக கைத்தொலைபேசியை உயர்த்தி வீடியோ எடுக்க முயன்றுள்ளதுடன், அதன் பின் குளியலறையின் மறுபக்கம் தவன்று சென்றுள்ளார்.

அந்த அரச ஊழியரான இளம் யுவதி சத்தம் கேட்டு வெளியில் இருந்த சக யுவதிகளை அழைத்த போது குறித்த போதானாசிரியர் குனிந்து ஓடியபடி வெளியேறியுள்ளார். குறித்த காட்சிகள் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசீரீவியில் பதிவாகியுள்ளது.

-தமிழ்வின்-

முகநூல் பக்கத்திலிருந்து…

திடீரென விபரீத முடிவெடுத்த 22 வயது இளைஞன்!!

அங்குலான பகுதியில் இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இளைஞன் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில், குறித்த இளைஞனின் பெற்றோர் பொலிஸார் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தில் 22 வயதான சுபுன் ரந்திக எனும் இளைஞனே உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அங்குலான பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் (14.07.2024) இரவு இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது இளைஞன் ஒருவன் தகறாறு செய்தமை தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

பின்னர் அங்குலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் அங்கு சென்று இளைஞனை அழைத்துச் சென்றபோது, ​​குறித்த இளைஞன் பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

பொலிஸாரிடம் இருந்து தப்பியோடிய இளைஞனை பெற்றோர் வீட்டுக்கு அழைத்து வந்து இரவு உணவு கொடுத்த பின் உறங்கச் செய்துள்ளனர்.

இதையடுத்து, நேற்று காலை 7.00 மணியளவில் இளைஞர் ரயில் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தமக்கு அறிவித்ததாக உயிரிழந்த இளைஞனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் பொலிஸார் மீது குற்றம் சுமத்தியுள்ளதுடன் இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா பாணியில் கணவனை கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவி!!

மொரட்டுவயில் வீடொன்றில் இன்று காலை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

41 வயதான ஹரேந்திர குமார் என்ற பொடி அய்யா என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட நபரின் மனைவி மற்றும் அவரது சகோதரன் ஆகியோர் இந்த கொலையை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தகாத காதல் உறவின் அடிப்படையில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொலையின் பின்னர் மனைவி கட்டிவைக்கப்பட்டிருந்த நிலையில் மனைவியின் அலறல் சத்தம் கேட்டு அயலவர்கள் வந்துள்ளனர்.

இதன் போதே கணவர் கொலை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது. எனினும் விசாரனை போது மனைவியே இந்த கொலையை செய்துள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரவு 12.30 மணியளவில் கணவரின் மார்பு மற்றும் கழுத்து பகுதியில் மனைவி கூரிய ஆயுதத்தால் சரமாரியாக வெட்டியதுடன் மனைவியின் சகோதரன் தலையில் கட்டையால் தாக்கியுள்ளார்.

குறித்த நபர் கொல்லப்படும் போது சுற்றுவட்டார மக்களுக்கு சத்தம் கேட்காத வகையில் பிரித் ஒளிபரப்பி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

“நான் தொலைபேசியில் அழைக்கும் போது என்னை கட்டி வைத்துவிட்டு, வேறு யாரோ இந்த கொலையை செய்ததாக காட்டிவிடுவோம்” என தனது தம்பியிடம் அக்காக கோரியுள்ளார்.

மாமாவும், அம்மாவும் தந்தையை அடித்து கொலை செய்ததாக, இந்த சம்பவத்தை கட்டிலிலுக்கு கீழாக மறைந்திருந்து பார்த்த உயிரிழந்த நபரின் மகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

 

மாஸ்டர் ஷெப் இறுதிப் போட்டிக்கு முன்னேற தவறிய இலங்கைப் பெண்!!

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மாஸ்டர் ஷெப் (MasterChef Australia) சமையற்கலைப் போட்டியில் இலங்கைப் பெண் எதிர்பாராத விதமாக தோல்வியைத் தழுவியுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த சாவிந்திரி பெரேரா என்ற பெண் இறுதி மூன்று போட்டியாளர்கள் வரையில் முன்னேறியிருந்தார். எனினும் இறுதிப் போட்டிக்கான இரண்டு போட்டியாளர்கள் பட்டியலில் சாவிந்திரிக்கு இடம் கிடைக்கவில்லை.

இந்தப் போட்டியின் இறுதிப் போட்டியாளர்களாக ஜோஸ் பெரி மற்றும் நாட் தாய்புன் ஆகீயோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். சாவிந்திரி இலங்கை உணவு வகைகளை சுவையாக சமைத்து போட்டியில் அசத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், நேர முகாமைத்துவம் தொடர்பில் சவிந்திரி சில சிக்கல்களை எதிர்நோக்க நேரிட்டிருந்தது.

மாபெரும் இறுதிப் போட்டிக்கு தெரிவான இரண்டு போட்டியாளர்களுக்கும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து ஊக்கப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டதை அடுத்து உணவுப் பொருட்களின் விலையும் குறைப்பு!!

மின்சாரக்கட்டணம் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களின் விலையும் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சோறு மற்றும் கறி (Rice and Curry), ப்ரைட் ரைஸ் (Fried Rice) மற்றும் கொத்து (Koththu) என்பவற்றின் விலை 25 ரூபாயால் குறைக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன் பரோட்டா, முட்டை ரொட்டி மற்றும் சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாயால் குறைக்கப்படும் என்றும் சங்கம் அறிவித்துள்ளது.

முன்னதாக மின்சாரக்கட்டணத்தை நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 22.5 வீதத்தினால் குறைப்பதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்தல் ஒன்றை விடுத்திருந்தது.

பொதுமக்கள் மத்தியில் இடம்பெற்ற கருத்தாடல்களை அடுத்தே இந்த குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டிருந்தது.

கனடாவில் வேலை பெற்று தருவதாகக் கூறி பண மோசடி!!

கனடாவில் வேலை பெற்று தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த இருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொரளை பிரதேசத்தில் இயங்கி வந்த குறித்த நிறுவனம் ஒன்று கனடாவில் நிதித்துறையில் தொழில் வழங்குவதாக கூறி 10 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளது.

எனினும் வாக்குறுதியளித்தபடி வேலை வழங்கவில்லை என நபர் ஒருவர் பணியகத்திற்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் விசாரணை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

குறித்த நிறுவனம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அனுமதிப்பத்திரம் இன்றி செயற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடத்தப்பட்ட விசாரணைகளின் போது சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் என தெரியவந்துள்ளது.

இதன்படி, குறித்த நிறுவன உரிமையாளர் உட்பட மேலும் ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஆட்டம் பார்க்கச் சென்ற காதலன் : பிடிக்காத காதலி உயிரை மாய்த்த சோகம்!!

“தொவில்” ஆட்டம் பார்க்கச் சென்ற காதலனுடன் முரண்பட்ட காதலி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எல்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள 18 வயதுடைய மாணவியொருவரே உயிரிழந்துள்ளார்.

இவர் தனது 20 வயதுடைய காதலனிடம் “தொவில்” ஆட்டம் பார்ப்பதற்கு செல்ல வேண்டாம் என கூறி முரண்பட்டுள்ளார்.

இந்நிலையில், காதலியின் வேண்டுகொளையும் மீறி காதலன் “தொவில்” ஆட்டம் பார்க்கச் சென்றதால், காதலி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிறந்தநாள் விழாவில் களேபரம் : நால்வருக்கு நேர்ந்த கதி : இருவர் கவலைக்கிடம்!!

வீடொன்றில் இடம்பெற்ற பிறந்தநாள் விழாவின் போது ஏற்பட்ட மோதலில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மோதல் சம்பவம் தனமல்வில குமாரகம பிரதேசத்தில் உள்ள இடம்பெற்றுள்ளது.

பிறந்தநாள் விழா இடம்பெற்றுக்கொண்டிருந்த வீட்டின் வாயிலை கெப் வண்டியினால் ஒருவர் மோதி சேதப்படுத்தி சென்றதால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தனமல்வில பொலிஸார் தெரிவித்தனர்.

மோதலின் காயமடைந்த நான்கு பேர் ஹம்பாந்தோட்டை மற்றும் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அதேவேளை கெப் வண்டியில் மோதி வாயிலை சேதப்படுத்திய சாரதி கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காக நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீட்டில் உள்ளவர்களுடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக கெப் வண்டியின் சாரதி இந்த செயலை செய்தமை பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தனமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவி இறந்த வேதனையில் குளுக்கோஸ் பாட்டிலில் விஷ ஊசி செலுத்தி உயிரை மாய்த்த மருத்துவர்!!

மனைவி இறந்த சோகத்தில் குளுக்கோஸ் பாட்டிலில் விஷ ஊசி செலுத்தி மருத்துவர் விபரீத முடிவு எடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மாவட்டமான சேலம், வாய்க்கால் பட்டறை வாரி கார்டன் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகன் இனியவன் (33). இவர் தென்காசியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு, சேலம் அம்மாபேட்டை கடலூர் ரோடு பகுதியைச் சேர்ந்த சௌமியா (31) என்பவருடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது.

இதில் சௌமியா, தனியார் வங்கியில் பணியாற்றி வந்த போது தான் இனியவனுடன் பழக்கம் ஏற்பட்டு காதல் ஏற்பட்டது.

இருவரும் திருமணத்திற்கு பின்னர் திருவேங்கடம் அக்ரஹாரம் தெருவில் உள்ள வீட்டில் வாடகைக்கு குடிபெயர்ந்தனர்.

இதையடுத்து, மருத்துவ பயிற்சிக்காக இனியவன் 6 மாதம் வெளியூருக்கு செல்ல வேண்டியிருந்ததால் சௌமியாவை சேலத்தில் உள்ள தனது தாயாரின் வீட்டில் சென்று இருக்குமாறு கூறினார்.

ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த சௌமியா தனது தாயார் வீட்டிற்கு செல்வதாக கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 7 -ம் திகதி தனது வீட்டில் சௌமியா தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். பின்னர், மனைவி இறந்த சோகத்தில் வெற்று ஊசியை தனது உடலில் செலுத்தி உயிரை மாய்த்துக் கொள்ள இனியவன் முயன்றுள்ளார்.

இதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்கப்பட்டு அம்மாபேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பினார்.

இந்நிலையில், இன்று காலை குளுக்கோஸ் பாட்டிலில் ஊசி மூலம் விஷத்தை கலந்து தனது உடலில் செலுத்தி கொண்டு உயிரிழந்துள்ளார்.

இதன்பின்னர், தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து இனியவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புற்றுநோயால் உயிரிழந்த கணவர்… மகனை கொன்றுவிட்டு உயிரைமாய்த்துக் கொண்ட தாய்.. சிக்கிய கடிதம்!!

இந்திய மாநிலம் கர்நாடகாவில் பெண்ணொருவர் தனது மகனை கொன்றுவிட்டு, தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கர்நாடகாவின் பெங்களூருவை சேர்ந்த தம்பதி ஸ்ரீதர் (42), ரம்யா (40). காதல் தம்பதியான இவர்களுக்கு 19 வயது மகளும், 13 வயது மகனும் இருந்தனர்.

இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஸ்ரீதர், சில ஆண்டுகளுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து தனது மகனுடன் வசித்து வந்த ரம்யா, வீட்டுக்கு வாடகை செலுத்த முடியாமலும், போதிய வருமானம் இல்லாமலும் திணறியுள்ளார்.

இதன் காரணமாக மனமுடைந்து காணப்பட்ட அவர், கடந்த 9ஆம் திகதி சேலையைக் கொண்டு மகனை தூக்கிலிட்டு தொங்கவிட்டு கொலை செய்துள்ளார்.

அதன் பின்னர் அவரும் சேலையில் தூக்குமாட்டி உயிரிழந்துள்ளார். விடுதியில் தங்கி படித்து வந்த அவரின் மகள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவுகள் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

உடனே அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்த உள்ளே சென்று பார்த்தபோது, தனது தாயும் தம்பியும் தூக்கில் தொங்கி உயிரிழந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடல்களையும் மீட்டனர். பின்னர் அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்றது.

வீட்டில் நடந்த சோதனையில் கடிதம் ஒன்று சிக்கியது. அதில் ரம்யா ‘தங்கள் இறப்புக்கு காரணம் நிதி நெருக்கடி தான்’ என்று எழுதியிருந்தார்.

 

விசா தேவையில்லை : இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

இன்று (15) முதல் இலங்கை உட்பட 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசா இன்றி தாய்லாந்துக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள புதிய கொள்கையின்படி, ஒரு சுற்றுலாப் பயணி 60 நாட்களுக்கு விசா இல்லாமல் நாட்டில் தங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, விசா இல்லாமல் தாய்லாந்திற்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகள் தங்குமிட நிதி மற்றும் திரும்புவதற்கான சான்றுகளை வைத்திருக்க வேண்டும் என்பதுடன், அந்நாட்டின் குடிவரவு அதிகாரிகளின் ஒப்புதலைப் பெறுவதும் கட்டாயமாகும்.

தாய்லாந்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை இதன் ஊடாக முதல் தடவையாக இலங்கையர்களுக்கு விசா இன்றி தாய்லாந்து செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹோட்டலில் பெண் துஸ்பிரயோகம் : முன்னணி நிறுவனமொன்றின் தலைவரை தேடும் பொலிஸார்!!

பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கையின் முன்னணி நிறுவனமொன்றின் தலைவர் கைதுசெய்யப்படுவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிறுவன தலைவர் வெளிநாடு சென்றுள்ள நிலையில் நாடு திரும்பியதும் அவர் கைது செய்யப்படுவார் என கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேசமயம் நிறுவன தலைவரான சந்தேக நபருக்கு கோட்டை நீதவானால் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் சந்தேக நபர் இருக்கும் இடம் தொடர்பில் எந்த தகவலும் இல்லை எனவும், பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமையினால் அவர் நாட்டிற்கு வருகை தந்தவுடன் கைதுசெய்யப்படுவார் எனவும் கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மே மாதம் 7ஆம் திகதி கொள்ளுப்பிட்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சந்தேக நபர் தன்னை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கொழும்பைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

சந்தேக நபர் வெளிநாட்டில் இருந்தபோது அவரின் வணிக ஆய்வாளராக குறித்த பெண் ஒரு மாத காலமாக இணையம் ஊடாக பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மே மாதம் 6 ஆம் திகதி சந்தேக நபர் நாடு திரும்பிய நிலையில், குறித்த பெண்ணை 7 ஆம் திகதி சந்திக்க விரும்புவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட இடத்தில் பெண்ணை சந்தித்த சந்தேக நபர் அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் கொள்ளுப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில், சம்பவம் நடந்த அன்றே சந்தேக நபர் நாட்டை விட்டு வெளியேறியதாகவும், இன்னும் நாடு திரும்பவில்லை என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழர் பகுதியில் பயங்கரம் : காருடன் எரிக்கப்பட்ட வர்த்தகர்!!

திருகோணமலை வர்த்தகர் ஒருவர் கெப் வண்டியில் கடத்திச் செல்லப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டதால் உயிரிழந்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் திருகோணமலை – அலஸ் தோட்ட பகுதியை சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காணாமல்போன வர்த்தகர் இறுதியாக மொரவெவ பகுதிக்கு வந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இவர் பயணித்ததாக கூறப்படும் வாகனம் கடந்த 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் வில்கம் விகாரைப்பகுதியை கடந்து பயணித்துள்ளதை சி.சி.ரி.வி காணொளி மூலம் கண்டறிந்தனர்.

அதன் பின்னர் அவரது வாகனம் மொராவெவ பகுதிக்கு வராத நிலையில் இடைப்பட்ட காட்டுப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்கள்.

இதன்போதே பன்மதவாச்சி காட்டுப் பகுதியில் இவர் பயணித்ததாக கூறப்படும் வாகனத்துடன் எரிக்கப்பட்ட நிலையில் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் இவருடைய உறவினர்கள் உட்பட பலரிடம் பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேவேளை தனிப்பட்ட காரணத்துக்காக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் இரு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வைத்தியசாலையில் நடந்த மோசமான செயல் – 11 மாணவர்கள் ஆபத்தான நிலையில்!!

பாடசாலை மாணவர்கள் 11 பேர் சுகயீனமடைந்து ஆபத்தான நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மிஹிந்தலை வைத்தியசாலையினால் பாடசாலை மாணவர்கள் குழுவொன்றுக்கு, வழங்கப்பட்ட ஊசி மருந்து காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஊசி மருந்து ஏற்றியதன் காரணமாக ஆபத்தான நிலைக்குத தள்ளப்பட்ட மாணவர்கள், மிஹிந்தலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் 06 வயதுக்கும் 13 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

ஊசி மருந்து

குறித்த மாணவர்கள் மிஹிந்தலை வைத்தியசாலைக்கு சளிக்காக சிகிச்சை பெறச் சென்ற போது, ​​அங்கு வழங்கப்பட்ட ஊசி மருந்து காரணமாக சுகயீனமடைந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதனையடுத்து மேலதிக சிகிச்சைக்காக மாணவர்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.