குளியாபிட்டிய காதலன் கொலையில் சிக்கிய காதலி!!

குளியாபிட்டிய பிரதேசத்தில் காதலியை காணச்சென்ற இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது காதலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலைக்கு உதவியமை மற்றும் குற்றத்தை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் காதலில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 18 வயதுடைய வஸ்ஸாவுல்ல, இலுக்கின்ன, பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இந்த இளைஞன், கடந்த 22ஆம் திகதி தனது காதலியைப் பார்ப்பதற்காக குளியாப்பிட்டிய வஸ்ஸாவுல்ல பகுதிக்கு சென்றிருந்த நிலையில் காணாமல் போருந்தார்.

பின்னர் காணாமல் போன இளைஞனின் சடலம் சிலாபம் – மாதம்பே பிரதேசத்தில் மீட்கப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில், குளியாப்பிட்டிய வஸ்ஸாவுல்ல பகுதியைச் சேர்ந்த காதலியின் தந்தையான ‘சிங்கிதி’ என அழைக்கப்படும் சுஜித் பெர்னாண்டோ மற்றும் அவரது மனைவு டிலானி ரசிகா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பல்கலைக்கழக ஊழியர் சங்கம் போராட்டம்!!

வவுனியா பல்கலைக்கழக ஊழியர் சங்கம் சம்பள உயர்வு கோரி இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா பல்கலைக்கழக பூங்கா வீதி அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததன் பின்னர், அலுவலக வாயிலில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் புகையிரத வீதியூடாக பழைய பேருந்து நிலையம் வரை சென்று அங்கு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது எம்.சீ.ஏ கொடுப்பனவை அதிகரி, அரசே 107 வீத சம்பள அதிகரிப்பை வழங்கு போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கிவாறு ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது வவுனியா பல்கலைக்கழக கல்விசார் ஊழியர் சங்கம் மற்றும் மாணவர் சங்கமும் ஆதரவு வழங்கி கலந்து கொண்டனர்.

கோர விபத்தில் சிக்கி இருவர் பரிதாபமாக உயிரிழப்பு!!

அநுராதபுரத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும், தம்புள்ளையில் இருந்து கெக்கிராவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கண்டி நோக்கி பயணித்த சிறிய ரக லொறியை முந்திச் செல்ல முற்பட்ட போது, ​​கண்டி நோக்கி பயணித்த பேருந்து எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தின் போது பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் பேருந்தின் அடியில் சிக்கி சுமார் 20 மீற்றர் தூரம் முன்னோக்கி இழுத்துச்செல்லப்பட்டுள்ளது.

இந்த விபத்தின் போது பேருந்தில் சுமார் 40 பயணிகள் இருந்ததாகவும் அவர்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது விபத்துக்குள்ளான லொறியில் சாரதியும் மற்றுமொரு நபரும் பயணித்துள்ளதாகவும், அவர்களும் விபத்தில் காயமடையவில்லை எனவும், எனினும் லொறி பாரியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இரு இளைஞர்களை வீதியில் பயணித்த முச்சக்கர வண்டியில் ஏற்றி அப்பகுதி மக்கள் தம்புள்ளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளனர்.

தம்புள்ளை, களுந்தல்லுல பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய நபரும், கண்டி சத்திரலியடி பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் திருமணமாகி இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும், மற்றைய இளைஞருக்கு ஒரு மாதக் குழந்தை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் தலாவ பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்த இருவரது சடலங்களும் தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை நாளை தம்புள்ளை வைத்தியசாலையின் கண்காணிப்பு வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பேருந்து சாரதியை கெக்கிராவ பதில் நீதவான் கித்சிறி அம்பகஹவத்தவிடம் நேற்று (12.05) பொலிஸார் முன்னிலைப்படுத்திய நிலையில், அவரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பெருந்திரளானோரின் கண்ணீருடன் மலேசியாவில் உயிரிழந்த இளைஞனின் சடலம் அடக்கம்!!

மலேசியாவில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த தமிழ் இளைஞனின் சடலம் (12.05.2024) மாலை அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மஸ்கெலியா, மொடிங்ஹேம் தோட்டத்தைச் சேர்ந்த ராஜகுமார் டேவிட்சன் என்ற 24 வயது திருமணமாகாத இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மலேசியா கோலாலம்பூரில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த மாதம் 24 ஆம் திகதி கொதிகலன் (Boiler) குறித்த இளைஞன் மீது விழுந்ததில் படுகாயமடைந்து கோலாலம்பூரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த 5 ஆம் திகதி காலை சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டிருந்த அந்நாட்டு பொலிஸார் இளைஞனின் குடும்பத்தினருக்கு அறிவித்திருந்தனர்.

இதற்கமைய, இளைஞனின் சடலம் இலங்கையின் மஸ்கெலியா மோட்டிங்ஹாம் பிரிவில் உள்ள பிரன்சுவிக் தேயிலைத் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு நேற்று (12.05) Brunswick Tea Estate, Mottingham Section பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் மலேசியாவிற்கு வேலைக்காக சென்றிருந்த நிலையில் இந்த அனர்த்தத்திற்கு முகம்கொடுத்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அரச வங்கிக்கு அனுப்பிய பணம் மாயம் : நாட்டுக்கு வந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

வெளிநாட்டில் வீட்டுபணிப்பெணாக வேலை செய்து வந்த பணத்தை நாட்டிலுள்ள அரசங்கிக்கு அனுப்பி வந்த பெண், நாடு திரும்பிய நிலையில் பணம் எடுக்க வங்கிக்கு சென்றபோது தனது வங்கிக்கணக்கில் பணம் இல்லை என்பதை அறித்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

பக்வந்தலாவ, எல்பொட வத்தபகள பிரதேசத்தைச் சேர்ந்த நித்யஜோதி என்ற பெண்ணின் பணமே இவ்வாறு மாயமான நிலையில் அது தொடர்பில் அவர் ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குவைத்தில் இரண்டு வருடங்கள் வீட்டுப் பணிப் பெண்ணாகப் பணிபுரிந்து வந்த பாதிக்ல்கப்பட்ட பெண், தனது மாதாந்த சம்பளத்தை ஹட்டன் மக்கள் வங்கியில் ஆரம்பிக்கப்பட்ட தனது கணக்கில் வரவு வைத்துள்ளார்.

எனினும் அவர் இலங்கைக்கு வந்து குறித்த பணத்தின் ஒரு பகுதியை வங்கி பெற்றுக் கொள்வதற்காக சென்ற போது, ​​கணக்கில் மீதி 1046 ரூபா மாத்திரமே இருந்ததாக கூறியுள்ளனர். 17.05.2022 அன்று குவைத் நாட்டில் வீட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைக்குச் சென்றதாக பெண் கூறியுள்ளார்.

குடும்பத்தின் பொருளாதாரச் சிரமங்களையும், தான் வசிக்கும் வீட்டையும் சீர்செய்யும் நோக்கில், வேலையில் இணைந்தது அன்றைய தினத்திலிருந்து பெற்ற மாதச் சம்பளத்தையும் உள்ளூர் வங்கியின் ஊடாக ஹட்டன் மக்கள் வங்கியில் உள்ள அவரது கணக்கில் வரவு வைக்கப்பட்டது , என அவர் கூறியுள்ளார் .

அவ்வாறு வரவு வைக்கப்பட்ட தொகை ரூ.13,44859/= (பதின்மூன்று இலட்சத்து நாற்பத்து நாலாயிரத்து எண்ணூற்று ஐம்பத்தி ஒன்பது) எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் கஸ்ரப்பட்டு சேர்ந்த பணத்திற்கு என்ன நடந்தது என தெரியாத நிலையில், பெண் மிகவும் கவலையில் ஆழ்ந்துள்ளார்.

அம்மாவும், மகனும் 10ம் வகுப்பில் ஒன்றாக படித்து தேர்ச்சி.. சுவாரஸ்ய சம்பவம்!!

தாயும், மகனும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒன்றாக படித்து தேர்ச்சி பெற்ற சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது.

தமிழக மாவட்டமான திருவண்ணாமலை, வந்தவாசியை அடுத்த கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்த தாயும் மகனும் 10 -ம் வகுப்பில் ஒன்றாக படித்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த கிராமத்தைச் சேர்ந்த நித்யா என்பவர் 9 -ம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை நிறுத்தியுள்ளார். இதனால், கோவிலூர் அரசுப் பள்ளியில் படிக்கும் தனது மகன் சந்தோஷ் உடன் இணைந்து தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், தாயும் மகனும் ஒன்றாக படித்து 10ம் வகுப்பு தேர்வை எழுதி வெற்றி பெற்றுள்ளனர். இதில் நித்யா, கோவிலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி சமையலராக தற்காலிக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் படித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

அமலா பால் நடிப்பில் வெளியான அம்மா கணக்கு திரைப்படத்தை போலவே திருவண்ணாமலையில் அம்மாவும், மகனும் ஒன்றாக படித்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தாயும், மகளும் 12ம் வகுப்பில் தேர்ச்சி.. இருவரும் ஒரே கல்லூரியில் சேர முடிவு!!

தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வுகள் மே 5ம் தேதி வெளியாகின. வழக்கம் போல் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிக தேர்ச்சி சதவீதம் பெற்றிருந்தனர். நெமிலி அருகே பிளஸ் 2 தேர்வில் வெற்றிபெற்ற தாய், மகள் இருவரும் கல்லூரியில் சேர முடிவு செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பெரும்புலிம்பாக்கத்தில் வசித்து வருபவர் 49 வயது சுந்தரமூர்த்தி. இவர் கூலி தொழிலாளியாக இருந்து வருகிறார்.

இவரது மனைவி 35 வயது நாகவேணி. இவர்களின் மகள் பத்மலோசினி. இவர் பனப்பாக்கம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில் பிளஸ் 2 தேர்வை தாய், மகள் இருவரும் எழுதினர்.

நாகவேணி தனித்தேர்வராக தேர்வு எழுதிய நிலையில் பத்மலோசினி 511 மதிப்பெண் பெற்றும், தாய் நாகவேணி 386 மதிப்பெண்கள் பெற்றும் தேர்ச்சி பெற்றனர். இதுகுறித்து மாணவி பத்மலோசினி எனது அம்மா 2002ல் 10ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றவர்.

குடும்ப சூழ்நிலை காரணமாக திருமணம் செய்து கொண்டு படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நான் 11ம் வகுப்பு படிக்கும்போது எனது தாயும் 11ம் வகுப்பு படிக்கலாம் என முடிவு செய்தார்.

இதனால் தனித்தேர்வு மையம் மூலம் பதிவு செய்து எனக்கு பள்ளியில் கற்பிக்கும் பாடங்களை எனது தாய்க்கும் வீட்டில் தினமும் நான் கற்றுக்கொடுப்பேன். கடந்த ஆண்டு 11ம் வகுப்பு தேர்வு எழுதியதில் எனது அம்மா 372 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.

அதே போல் இருவரும் பிளஸ் 2 தேர்வு எழுதினோம். இதில் நான் 600க்கு 511 மதிப்பெண்ணும், எனது அம்மா 386 மதிப்பெண் பெற்றுள்ளார். நாங்கள் இருவரும் கல்லூரியில் சேர்ந்து படிக்க உள்ளோம். நான் படிக்கும் கல்லூரியில் எனது தாயும் விண்ணப்பித்துள்ளார் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

தாயும் மகளும் ஒன்றாக பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று ஒன்றாக கல்லூரிக்கு செல்ல இருப்பதை அப்பகுதிமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். இருவருக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் சமூக வலைதளங்களில் குவிகின்றன.

மனைவி நடத்தையில் சந்தேகம்.. 2 குழந்தைகளை கொன்று தந்தையும் தற்கொலை!!

சென்னை மேற்கு மாம்பலம் கிருஷ்ணப்பநாயக்கர் தெருவை சேர்ந்தவர் மோகன் (55). இவர் ராயபுரம் பகுதியில் பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்தார். இவரது மனைவி யமுனா (35). தம்பதிக்கு சாய் சுவாதி (13) என்ற மகளும், தேஜஸ் (5) என்ற மகனும் உள்ளனர்.

சாய் ஸ்வாதி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். தேஜஸ் யுகேஜி படித்து வந்தார். இந்நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகத்தால், இவரக்கும், அவரது மனைவி யமுனாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் யமுனா தனது கணவர் மோகன் மீது புகார் அளித்தார். அதன்பிறகு, யமுனா தனது மகள் சாய் சுவாதி மற்றும் மகன் தேஜஸுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

ஒரு மாதத்திற்கு முன்பு மோகன் தனது மனைவி யமுனா வசித்த வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மோகன் இனி தவறு செய்ய மாட்டேன் என்று கூறி சமாதானம் செய்து குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். யமுனா அச்சகத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 10ம் தேதி மாலை ஆறரை மணியளவில் வேலை முடிந்து யமுனா வீட்டுக்கு வந்தார்.

அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. வெகுநேரம் கதவைத் தட்டியும் யாரும் திறக்கவில்லை. பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சாய் சுவாதி கழுத்தை நெரித்தும், அவரது மகன் தேஜஸ் கழுத்து நெரிக்கப்பட்டும் இறந்து கிடந்தார். அதைப் பார்த்து யமுனா கதறி அழுதாள்.

அதே அறையில் மோகன் தூக்கில் தொங்கினார். பின்னர் குமரன் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், மகள் மற்றும் மகனைக் கொன்றுவிட்டு மோகன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த துயரமான முடிவுக்கு என்ன காரணம் என்று யமுனாவிடம் போலீசார் கேட்டனர்.

அப்போது, குடும்ப பிரச்னை மற்றும் என் மீதான கோபம் காரணமாக குழந்தைகளை அநியாயமாக கொன்றுவிட்டதாக யமுனா கண்ணீருடன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் முள்ளிவாய்கால் நினைவேந்தலின் முதல்நாள் நிகழ்வு அனுஸ்டிப்பு!!

வவுனியாவில் முள்ளிவாய்கால் நினைவேந்தலின் முதல் நாள் நிகழ்வு இன்று (12.05.2024) அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா, வாடி வீடு மண்டபத்தில் போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, முள்ளிவாய்கால் இறுதி யுத்தத்தின் போதும், போரின் போதும் கொல்லப்பட்ட பொதுமக்கள் நினைவாக முன்னாள் போராளி ஒருவரால் பொதுச் சுடர் ஏற்பட்டதுடன், மலர்தூபி அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.

இதன்போது முள்ளிவாய்கால் நினைவாக நினைவுப் பாடல் அறிமுகம் செய்யப்பட்டதுடன், பாடசாலை மாணவர்கள் 60 பேருக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கபட்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி ஜெனிற்றா, முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்க தலைவர் ரவீந்திரன், தமிழ விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார், முன்னாள் போராளிகள், போராளிகள் குடும்பங்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கப்பட்டது!!

முள்ளிவாய்கால் 15 ஆம் நினைவு நாளை முன்னிட்டு வவுனியாவில் முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் குறித்த கஞ்சி நகரசபை பொங்கு தமிழ் நினைவு தூபி முன்பாக இன்று (12.05.2024) வழங்கப்பட்டது.

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது மக்கள் முள்ளிவாய்கால் கஞ்சியினை உணவாக உட்கொண்டே உயிர் பிழைத்தனர். அதனை நினைவு கூர்ந்து அடுத்த தலைமுறைக்கு வரலாற்றை கடத்தும் நோக்குடன் இவ்வாறு கஞ்சி வழங்கப்பட்டது.

வீதியால் சென்ற பலரும் அதனை வாங்கி பருகிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

மலேசியா சென்ற இலங்கை தமிழ் இளைஞனுக்கு நேர்ந்த துயரம்!!

மலேசியாவுக்கு பணிக்கு சென்ற மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த இளைஞன் அங்கு பொயிலர் வெடித்து உயிர்ழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் மஸ்கெலியா ப்ரௌன்ஸ்வீக் தோட்ட மோட்டிங்ஹேம் பிரிவைச் சேர்ந்த துரைராஜ் ராஜ்குமார் டேவிட்சன் (வயது 24 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் இருந்து மலேசியாவில் உள்ள மினரல் வோட்டர் நிறுவனம் ஒன்றுக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் பணிக்கு சென்றிருந்தார்.

இந்த அனர்த்தம், ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்றுள்ள நிலையில் சடலம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

வவுனியாவில் 15 வயதுச் சிறுமி கூட்டு வன்புணர்வு : உடந்தையாக செயற்பட்ட பெண் உட்பட நால்வர் கைது!!

வவுனியா நகரையண்டிய தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து 15 வயதுச் சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, பண்டாரிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த 15 வயது சிறுமி ஒருவரை கடந்த ஜனவரி மாதம் வவுனியா நகரையண்டிய தேக்கவத்தையில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்ற இளைஞர் ஒருவர் குறித்த சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து கூட்டு வன்புணர்வில் ஈடுபட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இம்மாதம் சிறுமியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து பெற்றோர் சிறுமியிடம் விசாரித்ததில் சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிறுவர் பிரிவு உத்தியோகத்த்ர்களை அணுகிய சிறுமியின் பெற்றோர் அவர்களின் வழிப்படுத்தலில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்த வவுனியா பொலிசார் கூட்டு வன்புணர்வுக்கு உடந்தையாக செயற்பட்டதாக அவரது உறவினரான 20 வயது பெண் ஒருவரையும், வன்புணர்வில் ஈடுபட்ட சந்தேகத்தில் வவுனியா நகரப் பகுதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் கடமையாற்றும் இளைஞன் உட்பட மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு பேரும் வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சிறுமியிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

யாழில் அதிர்ச்சி சம்பவம் : குடும்பப் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை!!

யாழ்ப்பாணம் – மருதங்கேணி தாளையடி பகுதியில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மூன்று பிள்ளைகளின் தாயான 44 வயதுடைய பெண்ணின் சடலம் அவர் வசித்து வந்த வீட்டின் கழிவறைக்கு முன் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவரின் கணவர் மீன்பிடித் தொழிலுக்காக சென்று மீண்டும் வீடு திரும்பிய போது, வீட்டுக்கு அருகில் பெண் கிடந்ததைக் பார்த்துள்ளார்.

இதனையடுத்து அவர் உடனடியாக மனைவியை பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்திருந்த போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சடலத்தை பிரேத பரிசோதனை செய்ததில், அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இரண்டு தசாப்தங்களுக்கு பின்னரான சூரியப் புயல் : புலப்பட்ட அரிய காட்சி!!

இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் ஏற்பட்ட சூரிய காந்த புயலின் விளைவால் பூமியின் வடக்குப் பகுதியில் அரோரா பொரியாலிஸ் (Aurora Borealis) எனப்படும் கதிரொளி தென்பட்டுள்ளது.

வானில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை காணும் வாய்ப்பினை பூமியின் வடக்குப் பகுதி மக்கள் பெற்றுள்ளனர். குறித்த வானிலை மாற்றமானது, சூரியனில் இருந்து வெளிவரும் பலத்த கதிர் கசிவினால் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்போது, ஐரோப்பிய நாடுகளில் வானம் இளஞ்சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் காணப்பட்டுள்ளது.

இதற்கமைய, அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல ஆய்வுக்குழுவினர், இது சுமார் 21 ஆண்டுகளுக்கு பின்னர் பூமியைத் தாக்கியுள்ள வலுவான புவி காந்த புயல் எனவும் இது ஐந்தாவது அல்லது ஜி5 (G5) நிலை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இதன் தாக்கத்தின் காரணமாக பூமியின் வடக்கு பகுதிகளுக்கு அப்பால் உள்ள உலகளாவிய மின் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புக்கள் கூடுதலாக பாதிப்புக்குள்ளாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக மின் தடை, கையடக்கத்தொலைபேசிக்கன இணைய செயலிழப்பு, வானொலி அலைகள் செயலிழப்பு மற்றும் செயற்கைக்கோள்களின் செயற்பாட்டில் பாதிப்பு போன்ற பேரழிவுகளும் ஏற்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2003ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதுபோன்று பூமியை தாக்கிய சூரியப் புயலினால் ஸ்வீடன் மற்றும் தென்னாப்பிரிக்காவில் மின் அமைப்புகள் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தை மிரட்டும் வெயில் : மேலுமொருவர் பலி!!

யாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் நேற்று (10) அல்வாய் கிழக்கை சேர்ந்த 68 வயதுடைய வல்லிபுரம் கோபாலசிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார்.

முதியவர் வீட்டில் மயக்கமுற்றதை அடுத்து , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் உடற்கூற்று பரிசோதனை சட்ட வைத்திய அதிகாரி மேற்கொண்ட நிலையில் , கடும் வெப்ப தாக்கத்தால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையிட்டார்.

நேற்று முன் தினம் (9) கடும் வெப்ப தாக்கத்தால் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் 44 வயதுடைய நபர் ஒருவரும் உயிரிழந்திருந்தார். அதேவேளை, அண்மைய நாட்களில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஐவர் “ஹீட் ஸ்ரோக்” ஏற்பட்டு உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

2024 ஆம் ஆண்டு தொடர்பில் மீண்டும் மிரட்டும் பாபா வங்காவின் கணிப்பு!!

2024ல் பெரும் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தும் என பாபா வாங்கா கணித்துள்ளதாக கூறப்படுகின்றது. 2024 ஆம் ஆண்டு பிறந்து நான்கு மாதங்கள் கடந்துவிட்டன.

உலகம் முழுவதும் பல்வேறு வகையான அசௌகரியங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் பல்கேரியாவை சேர்ந்த பார்வையற்ற தீர்க்கதரிசி பாபா வங்கா 1996 இல் தனது 85 வயதில் காலமானதற்கு முன் கூறிய சில கணிப்புகள் ஏற்கனவே கவனத்தை ஈர்த்து வருகின்றன.

பாபா வங்கா கணிப்புகளில் செப்டம்பர் 11, 2001 இல் அமெரிக்காவில் நடந்த உலக வர்த்தக மைய பயங்கரவாத தாக்குதல், செர்னோபில் பேரழிவு மற்றும் இளவரசி டயானாவின் மரணம் ஆகியவை அடங்கும்.

இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு பற்றியும் அவர் சில கணிப்புகளைச் கணித்து வைத்துள்ளார். அதன்படி 2024-ல் இயற்கை சீற்றங்கள் மற்றும் தீவிர வானிலை ஏற்படும் என பாபா வங்கா கணித்துள்ளார்.

உலக வெப்ப அலைகளின் அதிர்வெண் 67 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அறிவியல் முன்னேற்றங்களில் வெளியிடப்பட்ட அறிக்கை கூறுகிறது. இந்த வெப்ப அலைகளின்போது உச்ச வெப்பநிலை 40 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டதை விட அதிகமாக உள்ளது.

1979 முதல் 1983 வரையிலான உலகளாவிய வெப்ப அலைகளின் சராசரி காலம் 2016 முதல் 2020 வரை 8 நாட்களில் இருந்து 12 நாட்களாக அதிகரித்துள்ளது என்று ஆய்வு காட்டுகிறது.

அதேவேளை 2024 ஆம் ஆண்டு வெப்ப சாதனையை முறியடிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. 1996 இல் பாபா வங்கா இறந்தபோது, ​​​​இன்டர்நெட் அதன் ஆரம்ப நிலையில் இருந்தது.

ஆனால், அதைப் பற்றியும் அற்புதமான கணிப்புகளைச் அவர் கணித்துள்ளார். அதுமட்டுமல்லாது வரும் காலத்தில் சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.

முக்கியமான உள்கட்டமைப்பு மீதான இந்த தாக்குதல்கள் சர்வதேச பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் அவர் கணித்துள்ளார். உலகப் பொருளாதார சக்தியின் கட்டமைப்பு மாறும் என்றும், உலக நாடுகளிடையே அரசியல் பதட்டங்களும் கடன்சுமைகளும் அதிகரிக்கும் என்றும் வங்கா கணித்துள்ளார்.

இவை அனைத்தும் 2024ல் பெரும் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நூறாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் ஏற்கனவே பணவீக்கத்தின் பிடியில் இருப்பதாக அலையன்ஸ் லைஃப் கணக்கெடுப்பு சொல்கிறது. அதில் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பாவில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ள வங்கா, ஒரு பெரிய உலக நாடு உயிரியல் ஆயுதங்களை சோதிக்கும் அல்லது பயன்படுத்தப்போவதாகவும் சூசகமாக கூறியுள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் ஆகியவை தற்போது உலக நாடுகளுக்கு முக்கிய பிரச்னைகளாக தற்போது உள்ளன.