அவுஸ்திரேலியாவில் வாழை இலை விருந்து வைத்து நடுவர்களை வியப்பில் ஆழ்த்திய இலங்கை யுவதி!!

அவுஸ்திரேலியாவில் நடைபெறும் MasterChef Australia போட்டியின் இறுதிப்போட்டிக்கு இலங்கையை சேர்ந்த சவிந்திரி பெரேராவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இறுதியாக நடந்த போட்டி சுற்றின் போது அவர், வாழை இலையில் உணவு வழங்கியிருந்தார். மேலும் அது பரிமாறப்பட்ட விதம் நடுவர்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

MasterChef Australia போட்டியில் இலங்கையின் சில கறிகளுடன் வாழை இலையில் சுற்றப்பட்டு உணவு பரிமாறப்பட்ட விதம் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக சவிந்திரி பெரேரா போட்டியின் ஒரு சுற்றில் விலக வேண்டியிருந்த போதிலும், ஏற்பாட்டுக் குழு மற்றும் நடுவர்கள் அவரை மீண்டும் போட்டியில் இணைத்துக் கொண்டனர்.

அவர் தயாரித்த இலங்கை உணவுகளை நடுவர்கள் விரும்பி உட்கொண்டதால் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் சவிந்திரி மீண்டும் தங்கள் இதயங்களில் நுழைந்துவிட்டதாக நடுவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

MasterChef Australia நடுவர்கள் சவிந்திரியின் முன்னைய போட்டிகளில் தயாரித்த சுவையான இலங்கை உணவு வகைகளை ருசித்துவிட்டு மீண்டும் போட்டிக்குத் திரும்புவதற்கு அவரை தெரிவு செய்திருந்தனர்.

சவிந்திரி தனது 18வது வயதில் அவுஸ்திரேலியாவின் அடிலெய்டுக்கு வந்ததாகவும், அதுவரை அவர் வாழ்ந்த இலங்கையில் கிராமப்புற சமையல் குறித்து அறிந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

போட்டியில் கவனம் செலுத்துவதற்காக அவர் தனது வேலையை விட்டுவிட்டு MasterChef Australiaவின் அடுத்த சுற்றுக்கு தயாராகி வருகிறார்.

சவிந்திரி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில், MasterChef Australia போட்டியில் இதுபோன்ற இலங்கை உணவை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்து விபத்து : பலர் காயம்!!

திருகோணமலை (Trincomalee) தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – திருகோணமலை பிரதான வீதியின் 96ம் கட்டை முள்ளிப்பொத்தானையில் கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி வந்த அதிசொகுசு தனியார் பயணிகள் போக்குவரத்து பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (10) அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன் பேருந்து பாதையை விட்டு விலகியே விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் சாரதி, நடத்துநர் உட்பட பயணிகள் சிலரும் காயமடைந்துள்ளனர்.

மேலதிக விசாரணை

சம்பவ இடத்துக்கு தம்பலகாமம் போக்குவரத்து பொலிஸார் வந்துள்ளதுடன் நித்திரை கலக்கமே விபத்துக்கு காரணம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவில் பெரும் சோகம் : பாடசாலை மாணவி விபரீத முடிவால் உயிரிழப்பு!!

முல்லைத்தீவு மல்லாவி பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் விபரீத முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (07.07.2024) மாலை இடம்பெற்றுள்ளது

சம்பவத்தில் மல்லாவி பகுதியைச் சேர்ந்த மோகராஜ் கிருத்திகா வயது 13 என்ற மாணவியை இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூற்று சோதனைகாக,

முல்லைத்தீவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவமானது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குழந்தைகளையும் பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டு தவறான முடிவை எடுத்த இளம் தாய்!!

தனது 3 பிள்ளைகளை ஹட்டன் பொலிஸ் மகளிர் பணியகத்தில் ஒப்படைத்துவிட்டு உயிரை மாய்த்துகொள்ளவிருந்த தாய் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் ரயிலில் முன் பாய்ந்து உயிரை மாய்க்க முயன்ற நிலையிலேயே ஹட்டன் பொலிஸ் மகளிர் பணியக அதிகாரிகள் அவரை காப்பாற்றி டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஹட்டன் டிக்கோயாவை சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான இவர், தனது கணவருடன் வாழ முடியாது என ஹட்டன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். மேலும், 08, 06, 04 வயதுடைய இரண்டு ஆண் குழந்தைகளும் மற்றும் ஒரு பெண் குழந்தையை பொலிஸார் தமது பொறுப்பில் எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

பின்னர் ரயில் நிலையத்தை நோக்கி சென்ற போது அவர் தடுக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். இந்த நிலையில் மூன்று குழந்தைகளையும், அவர்களின் தந்தையிடம் ஒப்படைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் இருவர் அதிரடியாக கைது!!

வவுனியாவில் 28 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இன்று (10.07.2024) நள்ளிரவு 1.30 மணியளவில் வவுனியா நகரில் வைத்து குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து, மன்னார் பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி கொண்டு செல்லப்பட்ட கூலர் ரக வாகனம் சோதனைக்குட்படுத்தப்பட்டது.

இதன்போது, 28 கிலோ 750 கிராம் கேரள கஞ்சாவை வவுனியா பொலிஸார் பறிமுதல் செய்ததுடன், மன்னார் பேசாலை பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 27 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரையும் இன்றைய தினம் வவுனியா நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் படுகொலை செய்யப்பட்ட பெண் : முல்லைத்தீவில் இராணுவ மரியாதையுடன் அடக்கம்!!

யாழ்ப்பாணம்- கொழும்புத்துறைப் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த 6 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இராணுவத்தில் இணைந்து கடந்த 10 ஆண்டுகளாக கேப்பாபிலவு இராணுவ முகாமில் கடமையாற்றியுள்ளார்.

இந்நிலையில் பெண்ணின் உடலம் நேற்று (09.07.2024)மூங்கிலாறு தெற்கில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துவரப்பட்டு பூரண இராணுவ மரியாதையுடன் மூங்கிலாறு தெற்கு இந்து மயானத்தில் உடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இவர் தனது இரண்டாவது கணவனுடன் யாழ் கொழும்புத்துறை ஆனந்தவடலி பகுதியில் வசித்து வந்த நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கணவன் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் கணவன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவில் வாடகைக்கு அமர்த்திய ஹயஸ் ரக வாகனத்தில் மாடு கடத்தல் : வாகனம் விபத்துக்குள்ளானதால் மாட்டிய நபர்!!

வவுனியாவில் வாடகைக்கு அமர்த்திய ஹயஸ் ரக வாகனத்தில் மாட்டை கடத்தியவர் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் நேற்று (09.07) கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, பாவற்குளம் பகுதியைச் சேர்ந்த சிலர் ஆச்சிபுரம் பகுதியில் ஹயஸ்ரக வாகனம் ஒன்றினை வாடகைக்கு பெற்றதுடன், குறித்த வாகனத்தில் கோவில்குளம் பகுதியில் இருந்து இரு மாடுகளை கடத்தியுள்ளனர்.

மாடுகளுடன் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதால் குறித்த வாகனத்தை வாகன திருத்தும் இடம் ஒன்றில் நிறுத்தி விட்டு இரு மாடுகளையும் இறைச்சிக்காக விற்றுள்ளனர்.

மாடு கடத்தப்பட்டமை தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து, தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக்கொடி வழிகாட்டலில்
உப பொலிஸ் பரிசோதகர் அகமட் தலைமையில் பொலிஸ் சார்ஜன்ட்டுகளான,

திசாநாயக்க (37348), திலீபன் (61461), பொலிஸ் கொன்தாபிள்களான உபாலி (10945), தயாளன் (9792), ரணில் (81010) உள்ளடங்கிய பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, மாடுகளை கடத்திய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன், விபத்துக்குள்ளான வாகனமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளின் பின் சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

 

கொழும்பில் மாடியிலிருந்து வீழ்ந்த மாணவர்கள் மரணம் தொடர்பில் சந்தேகம்!!

கொழும்பு – கொம்பனிவீதியில் உள்ள அல்டெயார் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவ, மாணவிகளின் மரணம் சந்தேகத்திற்குரியது என உயிரிழந்த மாணவியின் தந்தை முறைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளார்.

உயிரிழந்த மாணவியின் தந்தை சம்பவம் தொடர்பில் நேற்று (08.07.2024) சட்டத்தரணி அசங்க தயாரத்ன ஊடாக கோட்டை நீதவான் நீதிமன்றில் குறித்த முறைபாட்டை செய்துள்ளார்.

இருப்பினும், பிரேத பரிசோதனையின் போது தனிப்பட்ட முறைபாடுக்கு அனுமதி வழங்க மறுத்த நீதவான், இது தொடர்பில் கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தில் முறையிடுமாறு சட்டத்தரணிக்கு அறிவித்துள்ளார்.

அது மாத்திரமன்றி, சம்பவம் தொடர்பில் கொம்பனி வீதி பொலிஸார் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைகளின் முன்னேற்றம் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, வழக்கின் கோப்பு எண்ணைப் பெற்று பொலிஸாரிடம் முறைபாடு செய்யுமாறு நீதிமன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இலவச இணைய கொடுப்பனவு விளம்பரங்கள்: மக்களுக்கு எச்சரிக்கை!!

இலவசமாக இணைய கொடுப்பனவு (Free Internet Data) வசதிகள் வழங்குவதாக செய்யப்படும் விளம்பரங்கள் குறித்து தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து தொலைபேசி நிறுவனங்களினாலும் இவ்வாறு இலவச இணைய கொடுப்பனவு வழங்குவதாக விளம்பரம் செய்யப்படுகின்றது.

இவ்வாறான விளம்பரங்களின் இணைப்புகளைஅழுத்துவதன் ஊடக சமூக ஊடகக் கணக்கு விபரங்கள் அல்லது அலைபேசி விபரங்களை மூன்றாம் தரப்பிற்கு கிடைக்கும் சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலவச இணைய கொடுப்பனவு வழங்குவதாக குறுஞ்செய்தி, வாட்ஸ்அப் மற்றும் மெசென்ஜர் ஊடாக தகவல் அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் தகவல்களில் உண்மையில்லை என தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பதிரண எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் லிங்குகளை கிளிக் செய்வதனை தவிர்த்துக் கொள்வது பொருத்தமானது என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பில் தவறான முடிவெடுத்து இளம் ஜோடி உயிர் மாய்ப்பு!!

மட்டக்களப்பில் இளைஞன் ஒருவரும் சிறுமி ஒருவரும் தவறான முடிவெடுத்து ஒரே இடத்தில் உயிரை மாய்த்து கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே இன்று சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வெல்லாவெளி, திக்கோடை தும்பாலை கிராமத்தை சேர்ந்த 21 வயதுடைய கெங்கநாதன் ரதன் மற்றும் 16 வயதுடைய புண்ணியமூர்த்தி பேஜினி ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

திக்கோடை தும்பாலை 4ஆம் வட்டார வீதியில் உள்ள வேம்பு மரத்தில் தூங்கிய நிலையில் பொதுமக்களினால் குறித்த இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காதல் விவகாரம் காரணமாக குறித்த இருவரும் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்திருக்கலாம் எனவும் இது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

வவுனியாவைச் சேர்ந்த பெண் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி!!

வவுனியா பிரதேசத்தில் பெண்ணொருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா – போகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் 10 இலட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக, கம்பஹா பிரதேசவாசி ஒருவர் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவில் அண்மையில் முறைப்பாடு செய்திருந்தார்.

சந்தேக நபர் குறித்து பணியகத்துக்கு 5 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில், விசாரணை அதிகாரிகள் குறித்த பெண்ணின் வீட்டுக்குச் சென்று கைது செய்துள்ளனர்.

மேலும், முறைப்பாடுகளின் அடிப்படையில், பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் குறித்த பெண்ணுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

விசாரணையின் போது, ​​அவர் நாட்டில் உள்ள ஒரு பிரபலமான காப்பீட்டு நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகின்றமை தெரியவந்துள்ளதாக பணியக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

ஆடு மேய்ப்பவர் முதல் அரசியல்வாதி வரை.. 15 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய இளம்பெண்.. யார் இந்த பெண்?

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அன்பே என்ற ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலமாக பெண் தேடியிருக்கிறார். இதில், ஆன்லைன் வரன் மூலம் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 32 வயதான சத்யா என்ற பெண் அவருக்கு அறிமுகமாகி உள்ளார்.

தொடர்ந்து இருவரும் பழகி வந்த நிலையில் இருவருக்கும் காதல் ஏற்பட்டு வீட்டில் சொல்லாமல் திருமணம் செய்துள்ளனர். பின்னர் இளைஞரின் வீட்டில் உள்ளோர் ஏற்றுக்கொண்ட நிலையில் தனது வீட்டில் வைத்து சத்யாவுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் சத்யாவின் பெயரை ரேஷன் கார்டில் இணைக்க முயன்ற போது சத்யாவின் கணவராக மற்றொருவர் பெயர் பதிவாகி இருப்பது இளைஞருக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்தவர் உடனடியாக தனக்கு தெரிந்தவர்கள் மூலமாக சத்யாவின் சொந்த ஊரில் விசாரித்து இருக்கிறார்

அதில், சத்யாவுக்கு ஏற்கனவே பல பேருடன் திருமணமாகி அவருக்கு குழந்தை இருக்கும் தகவல் தெரிந்து கடும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். ஒவ்வொருவரையும் திருமணம் செய்து அவர்களுடன் சில நாட்கள் வாழ்ந்து விட்டு, வீட்டில் இருக்கும், நகை, பணத்துடன் ஓட்டம் பிடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார் சத்யா.

இளைஞர் வீட்டிலும் திருடுவதற்கு சரியான நேரத்திற்காக சத்யா காத்திருந்த நிலையில், அதற்குள் அனைத்து விவரங்களையும் மகேஷ் தெரிந்து கொண்டார். இந்நிலையில் சத்யாவிடம் சாதுர்யமாக பேசி தாராபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற இளைஞர் காவல் நிலையத்தில் வைத்து அவர் மீது புகார் கொடுத்து இருக்கிறார்.

தன்னை சிக்க வைப்பதற்காக காவல் நிலையம் அழைத்து வந்திருப்பதை கடைசி நிமிடத்தில் கண்டுபிடித்த சத்யா அங்கிருந்து நைசாக நழுவி தப்பி சென்று விட்டார். மேலும் பல்வேறு இடங்களில் விசாரித்ததில் சத்யாவால் ஏராளமான ஆண்கள் ஏமாற்றப்பட்டு இருப்பது தெரியவந்தது.

சத்யா மீது புகார் கொடுத்திருக்கும் தகவல் அறிந்த மேலும் நான்கு பேர், தங்களையும் சத்யா ஏமாற்றி விட்டதாக கூறி, தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சத்யா திருமணம் செய்து சுமார் 15 பேரையும், திருமணம் செய்யாமல் 50-க்கும் மேற்பட்டவர்களையும் ஏமாற்றி இருப்பதாக அவரால் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். சத்யாவின் ஏமாற்று வேலையில் ஆடு மேய்ப்பவர், காவல் உதவி ஆய்வாளர், தொழில்அதிபர், சர்வேயர், அரசியல்வாதி என பலர் சிக்கி பணத்தை இழந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சத்யாவும், தமிழ்செல்வி என்ற பெண் புரோக்கரும் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். திருமணத்திற்கு வரன் தேடும் ஆண்கள் குறித்த தகவல்களை புரோக்கர் தமிழ்ச்செல்வி சேகரித்து கொடுக்க, அவர்களை சரியாக ஏமாற்றி காரியத்தை முடித்து இருக்கிறார் சத்யா.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள தாராபுரம் போலீசார் தலைமறைவாக இருக்கும் சத்யா மற்றும் புரோக்கர் தமிழ்ச்செல்வியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஊர் முழுவதும் கடன் வாங்கிய தந்தை… அவமானத்தில் தாய், மகன் எடுத்த விபரீத முடிவு!!

வேலூர் மாவட்டம் எரிகுத்திமேடு பகுதியை சேர்ந்தவர் அன்சார் (வயது 52). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மும்தாஜ் (48). இவர்களுக்கு நஸ்ரின், ஹபிஹா என்ற 2 மகள்களும், இம்ரான் (28) என்ற மகனும் உள்ளனர்.

அனைவரும் திருமணமானவர்கள். இம்ரான் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். அவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இவருக்கு அர்ஷியாமா என்ற மனைவியும், அபன் என்ற ஒரு வயது மகனும் உள்ளனர். அர்ஷ்யாமா தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

அன்சார் மற்றும் அவரது மனைவி மும்தாஜ் இருவரும், பேரணாம்பட்டு, குடியாத்தம், ஆம்பூர் உள்ளிட்ட பல இடங்களில் இயங்கி வரும் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள் மற்றும் மகளிர் குழுக்களில், உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் ரூ.28 லட்சமும், தனியார் நிதி நிறுவனங்களில் ரூ.2 லட்சத்து 20 ஆயிரமும் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்தக் கடனை அடைக்க உள்ளூர் நிதியில் கடன் வாங்கி உள்ளனர்.

அதிக கடன் வாங்கியதால், கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மும்ராஜ், இம்ரான் இருவரும் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இது தொடர்பாக பேரணாம்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர். தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் மேலாளர் ஒருவர் அன்சாரின் வீட்டுக்குச் சென்று கடனை திருப்பித் தருமாறு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் பயந்து போய் அவர் வெளியில் சென்றார்.

இம்ரானின் மனைவி அர்ஷியாமா கர்ப்பமாக இருப்பதால், குழந்தையை மருத்துவ பரிசோதனைக்காக தனது தந்தை குலாபுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில் சிறுகடன் நிறுவன ஊழியர் கடனை திருப்பி செலுத்துமாறு கூறி கதவை தட்டிய்தால் மும்தாஜ் அவமானப்பட்டு மனமுடைந்துள்ளார்.

இதில் தாய் மும்தாஜ், மகன் இம்ரான் ஆகியோர் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தற்கொலைக்கு முன், இம்ரான் தனது தாய் மும்தாஜ் அழும் வீடியோவை வெளியிட்டார். அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது. அப்பா அன்சார் எங்கெல்லாம் காட்டி கடன் வாங்கினார்.

கடனை செலுத்த முடியவில்லை. பதில் சொல்ல முடியாது. அப்பா அன்சார் பெட்ரோல் வாங்கி வருகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினார். ஆனால், அவர் திரும்பி வரவில்லை என அழுதுகொண்டே வீடியோ ஒன்றை வெளியிட்டு, தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தோழியைக் கொன்று காட்டுக்குள் உடலை வீசி சென்ற இளைஞர்!!

பணப்பிரச்சனையில் தோழியைக் கொலைச் செய்து, உடலை காட்டுக்குள் வீசி சென்ற இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மஸ்தலா சங்கத்தின் சேவைப் பிரதிநிதி பூஜா காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில்,காட்டில் இளம்பெண் பூஜாவின் சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர்.

கர்நாடகாவின் சிமோகா மாவட்டத்தில் தீர்த்தஹள்ளி வட்டத்தில் உள்ள அகும்பை கிராமத்தைச் சேர்ந்தவர் குஷால். இவரது மகன் பூஜா(24). இவர் தர்மஸ்தலா சங்கத்தின் சேவை பிரதிநியாக செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில், கடந்த ஜூன் 30-ம் தேதி வேலைக்குச் சென்ற பூஜா திடீரென காணாமல் போனார். அவர் வீடு திரும்பாததால், பூஜாவின் தந்தை குஷால், அகும்பே காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன பூஜாவை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் அகும்பே வனப்பகுதியில் பூஜாவின் உடல் போலீஸாரால் கண்டெடுக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது பூஜா கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து பூஜாவின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது நாலூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் அடிக்கடி செல்போனில் பேசியது தெரிய வந்தது.இதையடுத்து போலீஸார், மணிகண்டனை நேற்று பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது பூஜாவும், அவரும் நீண்ட நாள் நண்பர்கள் என்றும், பணப்பிரச்சினையில் பூஜாவை மணிகண்டன் கொலை செய்து உடலை வனப்பகுதியில் வீசியதும் தெரிய வந்தது. இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

தண்ணீர் தொட்டியில் மனைவி 2 குழந்தைகள் உடல் மீட்பு – கணவன் கைது!!

கோவை மாவட்டம் ஒண்டிபுதூரை அடுத்த நெசவாளர் காலனியில் வசித்து வருபவர் தங்கராஜ். இவருக்கு புஷ்பா என்ற மனைவியும், ஹரிணி மற்றும் ஷிவானி என்கிற 2 பெண் குழந்தைகளும் உண்டு.

உள்ளூரில் பெயிண்டர் வேலைக்கு செல்லும் தங்கராஜ், கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் மதுபோதைக்கு அடிமையான இவர், வீட்டில் நாள்தோறும் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார்.

இதனால் வீட்டு வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்தார் புஷ்பா. ஆனால் மனைவியிடம் இருந்த 100, 200 ரூபாயைக் கூட விட்டு வைக்காமல் பறித்துக் கொண்டு மது அருந்தி, வீட்டில் தகராறு செய்வது வழக்கம்.

இந்நிலையில் ஜூலை 8-ம் தேதியன்று காலையில் புஷ்பாவும், அவரது 9 வயது மற்றும் 3 வயது குழந்தைகளும் வீட்டின் தண்ணீர் தொட்டியில் சடலமாக மிதப்பதாக அப்பகுதியில் தகவல்கள் பரவியது.

இதையடுத்து அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் நேரில் சென்று பார்த்தபோது, அதில் புஷ்பா மற்றும் 2 குழந்தைகளின் உயிரற்ற உடல்கள் கிடந்தன.

இதனை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கினர்.

இதில் மனைவி, குழந்தைகள் உயிரிழந்த நிலையிலும், காலையிலேயே மது அருந்திய தங்கராஜ், தள்ளாடிக் கொண்டிருந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில், முந்தைய நாள் இரவில் கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகவும், வந்த ஆத்திரத்தில் மனைவியை சரமாரியாக தாக்கியதாக கூறினார்.

இதன் காரணமாக விரக்தியடைந்த புஷ்பா, குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என விசாரணையில் தெரியவந்தது.

குடும்பத்தைக் கவனிக்கும் பொறுப்பில் இருந்து விலகி, மதுவுக்கு அடிமையானவரால் இளம்பெண், தன் பிள்ளைகளுடன் உயிரை மாய்த்த இந்த சம்பவம் ஒண்டிப்புதூர் பகுதி மக்களை ஓலமிடச் செய்துள்ளது.

கனடாவில் திருடப்பட்ட 400 கிலோ தங்கக் கட்டிகள் : சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார்!!

கனடா(Canada) ரொறன்ரோ நகரத்தில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கடந்த ஆண்டு திருடப்பட்ட 20 மில்லியன் கனேடிய டொலர் பெறுமதியான 400 கிலோ தங்கம் இந்தியா மற்றும் டுபாய்க்கு கடத்தப்பட்டிருக்கலாம் என கனேடிய பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 17ஆம் திகதி பியர்சன் விமான நிலையத்தில் உள்ள கனடா சரக்கு டெர்மினலில் இருந்து 6,600 தங்கக் கட்டிகள் திருடப்பட்டன. 3 நாட்களுக்கு பிறகு தங்கம் திருடப்பட்டது பொலிஸாருக்கு தெரியவந்தது.

 

400 கிலோ எடையுள்ள இந்தத் தங்கக் கட்டிககளின் விலை இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.450 கோடியாகவுள்ள நிலையில் திருடப்பட்ட தங்க கட்டிகள் இன்று வரை மீட்கப்படவில்லை.

இந்தத் தங்கம் இந்தியா மற்றும் துபாய்க்கு வந்திருக்கலாம் எனவும், நெட்ஃபிளிக்ஸின் கிரைம் சீரிஸ் பாணியில் இந்த திருட்டு நடந்ததாகவும் கனடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த திருட்டுக்கு போலி சீட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 3 பேரும் உள்ளதாகவும், இது வரலாற்றில் மிகப்பாரிய திருட்டு என்று பொலிஸார் விவரித்துள்ளனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்து தகவல் அளித்த பொலிஸார், விமான நிறுவன ஊழியர்கள் இருவரின் உதவியுடன் இந்த திருட்டு நடந்துள்ளதாக கூறியுள்ளனர்.

இதன் போது திருடப்பட்ட தங்கத்தை உருக்கி தங்க வளையல்கள் தயாரிக்கப்பட்டு பின்னர் விற்பனை செய்யப்படுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.