காலி கோடீஸ்வர பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி : 120 மில்லியன் சொத்துக்கள் முடக்கம்!!

காலி பிரதேசத்தில் பெண்ணொருவருக்கு சொந்தமான பல மில்லியன் பெறுமதியான சொத்துக்களை தடை செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த சொத்து எவ்வாறு ஈட்டப்பட்டது குறித்த தகவல்கள் வெளியிடப்படாமை காரணத்தினால், காலி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பெண்ணின் சொத்துக்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

தடை செய்யப்பட்ட சொத்துக்களின் சந்தைப் பெறுமதி சுமார் 120 மில்லியன் ரூபா என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சொத்துக்களில் காலி தடல்ல பிரதேசத்தில் நான்கு மாடி கட்டிடமும் அக்மீமன பிரதேசத்தில் ஒன்றரை ஏக்கர் தேயிலை மற்றும் மிளகு காணியும் உள்ளடங்குவதாக கூறப்படுகின்றது.

மேலும் முடக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழில் யுவதியின் முடிவால் கதறும் குடும்பம்!!

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் தனக்கு தானே தீ மூட்டி இளம் யுவதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் வல்வெட்டித்துறை ஸ்ரீ முருகன் குடியேற்றம் பகுதியைச் சேர்ந்த அன்ரன் மரியதாஸ் கிருபாகினி வயது 26 என்ற இளம் யுவதியை உயிரிழந்தவர் ஆவார் .

நேற்று மாலை தனக்கு தானே தீ மூட்டிய இளம் யுவதி உயிரிழந்துள்ளார். மனஅழுத்தம் காரணமாக விபரீத முடிவு எடுத்து தனக்கு தானே தீ மூட்டி உடலில் தீக்காயங்களுக்கு உள்ளாகி யுவதி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தனக்கு தானே தீ மூட்டி யுவதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பில் பணத்திற்காக பெண்களை விற்பனை செய்யும் நிலையம் சுற்றிவளைப்பு!!

கல்கிஸ்ஸ – காசியா மாவத்தையில் ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் பெண் ஒருவரால் நடத்தப்பட்டு வந்த பெண்களை பணத்திற்காக விற்பனை செய்யும் நிலையமொன்றை குற்றப்புலனாய்வு பிரிவினர் சுற்றிவளைத்துள்ளனர்.

ஆயுர்வேத மையம் ஒன்றின் விளம்பரப் பலகைகள் இயங்கி வந்த போதிலும், அந்த இடத்தில் வைத்தியர் எவரும் தங்கவில்லை என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தாங்கள் கொழும்பு பிரதேசத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவதாக வீடுகளுக்கு கூறியதாகவும், இந்த இடத்தில் தங்கி தொழிலில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் 25 வயதுக்கும் 37 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும், இவர்கள் பாணந்துறை எல்பிட்டிய, நிட்டம்புவ கடமுலாவ மற்றும் பொலன்னறுவை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பில் இளம் பெண்ணின் மோசமான செயல் : அதிர்ச்சியில் அதிகாரி!!

கொழும்பில் தனியார் நிறுவனமொன்றின் சிரேஷ்ட நிர்வாக உத்தியோகத்தருடன் தகாத உறவு ஒன்றை ஏற்படுத்தி அவரது வீட்டில் உள்ள பொருட்களை திருடிய இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை பின்வத்தை பிரதேசத்தில் வசிக்கும் 41 வயதுடைய திருமணமான குறித்த நிர்வாக உத்தியோகத்தர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் பின்வத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் இந்த நபரின் வீட்டில் இருந்து சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடியுள்ளார். ஹம்பாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய பெண் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர் மற்றுமொரு இளைஞருடன் இணைந்து நிர்வாக அதிகாரியின் வீட்டிற்கு ஜன்னல் வழியாக நுழைந்து பொருட்களை திருடியுள்ளார். சம்பவம் தொடர்பில் பின்வத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் 4 பெரிய கோள்கள்.. விஞ்ஞானிகள் வெளியிட்ட பரபரப்புத் தகவல்!!

தற்போது பூமியை நோக்கி 4 சிறுகோள்கள் வந்துகொண்டிருப்பதாக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா எச்சரித்துள்ளது. அப்பல்லோ குழுவின் அனைத்து பகுதிகளும் பூமியின் பாதையில் குறுக்கிடும் சுற்றுப்பாதைகளுக்கு பெயர் பெற்றவை.

இந்தச் செய்தி சில கவலைகளை ஏற்படுத்தும் என்றாலும், ஒவ்வொரு சிறுகோளின் பிரத்தியேகங்களையும் இந்த தொகுப்பில் ஆராய்வோம். அதில் உள்ள அபாயத்தின் அளவை இதிலிருந்து தீர்மானிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த பட்டியலில் முதலிடத்தில் Asteroid 2024 JF உள்ளது. அப்பல்லோ குழுவின் இந்த சிறுகோள், ஒரு சாதாரண 26 அடி அளவை அளவிடுகிறது, மணிக்கு 42,081 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. பூமிக்கு மிக நெருக்கமான அணுகுமுறை மே 6 அன்று 21:58 UTC மணிக்கு நிகழும், இது பூமியில் இருந்து 4,75,443 கிலோமீட்டர்களுக்குள் வரும்.

78 அடி உயரத்தில் சற்றுப் பெரிய சிறுகோள் 2024 HE2. மணிக்கு 43,472 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் இது மே 6 அன்று 20:16 UTC-க்கு கடந்து செல்லும், ஆனால் பாதுகாப்பான தூரம் 1.2 மில்லியன் கிலோமீட்டர் ஆகும்.

அடுத்து வரவிருக்கும் ஆஸ்டிராய்டு 2024 HL2. 84 அடி அளவு மற்றும் மணிக்கு 48,247 கிலோமீட்டர் வேகத்தில் வேகமாக நகரும்.

பூமிக்கு மிக நெருக்கமான அணுகுமுறை மே 6 அன்று 08:12 UTC-க்கு இருக்கும், இது நமது பூமியில் இருந்து 2.9 மில்லியன் கிலோமீட்டர்களுக்குள் கடந்து செல்லும்.

171 அடி விட்டம் மற்றும் மணிக்கு 90,056 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் அஸ்டெராய்டு 2024 HM2 என்பது கடைசியாக வரும் சிறுகோள்.

அதிர்ஷ்டவசமாக, மே 6 அன்று 14:49 UTC மணிக்கு 6.6 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் அது கடந்து செல்லும் என்று சொல்லப்படுகிறது.

இந்த சிறுகோள்களின் அளவுகள் மற்றும் வேகம் அச்சுறுத்தலாகத் தோன்றினாலும், அவற்றின் நெருங்கிய அணுகுமுறைகள் இன்னும் பூமியிலிருந்து ஒப்பீட்டளவில் தொலைவில் உள்ளன.

அவைகளில் ஒன்று 4,75,443 கிலோமீட்டர் தொலைவில் வரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது சந்திரனுக்கான தூரத்தை விட அதிகம்.

பூமிக்கு அருகில் உள்ள பொருள்களை நாசா உன்னிப்பாகக் கண்காணிக்கிறது, பூமிக்கு அருகில் உள்ள பொருள் ஆய்வு மையம் (CNEOS) விழிப்புடன் கண்காணிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ உலகில் சாதனை படைத்த சுவிஸ் மாணவி!!

மருத்துவ உலகில் முதல் முறையாக மனிதனுக்கு நோயை ஏற்படுத்தும் பற்றீரியாவை கொல்லக்கூடிய வைரஸ் ஒன்றை சுவிட்சர்லாந்தினை (Switzerland) சேர்ந்த மாணவியொருவர் கண்டுபிடித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் மன்சென்ஸ்டீன் (Münchenstein) என்னுமிடத்தைச் சேர்ந்த நோரா ஆர்டிகோ (Nora Artico) என்னும் 19 வயதுடைய பாடசாலை மாணவியே இந்த சாதனையை படைத்துள்ளார்.

பற்றீரியா மூலம் பரவும் நோய்களுக்கான மருந்தாக ஆன்டிபயாட்டிக் என்னும் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த ஆன்டிபயாட்டிக் என்பது பற்றீரியா என்னும் நோய்க்கிருமிகளை கொல்வதன் மூலமோ அல்லது அவற்றை அதிகரிக்க விடாமல் தடுப்பதன் மூலமோ, நோய்களைக் குணமாக்கும் ஒருவகை மருந்துகள் ஆகும்.

எனினும், இந்த ஆன்டிபயாட்டிக் எனும் மருந்துகளில் ஒரு பிரச்சினை உள்ளது. அதாவது, நம் உடலுக்குள்ளும் தோலின் மீதும், ஏராளம் நன்மை செய்யும் பற்றீரியாக்கள் உள்ளன.

குறிப்பிட்ட நோய்க்காக ஒருவர் இந்த ஆன்டிபயாட்டிக் மருந்தை உட்கொள்ளும்போது, அந்த மருந்து குறிப்பிட்ட நோயை உண்டாக்கும் பற்றீரியாவைக் கொல்வதுடன், மனித உடலுக்கு நன்மை பயக்கும் பற்றீரியாக்களையும் கொன்றுவிடுகிறது.

எனவே, மனிதர்கள் அடிக்கடி ஆன்டிபயாட்டிக் மருந்துகளை உட்கொள்வதால், வயிற்றுக்குள் இருக்கும் கிருமிகள், காலப்போக்கில், அந்த ஆன்டிபயாட்டிக்கையே எதிர்த்து தாக்குப்பிடித்து வாழும் திறனை வளர்த்துக்கொள்கின்றன. அந்த தாக்குப்பிடிக்கும் திறன் drug-resistant என அழைக்கப்படுகிறது.

இந்த drug-resistant பற்றீரியாவில் ஒன்று, மனிதர்களுக்கு ஏதாவது ஒரு நோயை ஏற்படுத்துமானால், அதற்கு மருந்தே கிடையாது என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

காரணம், மருந்து கொடுத்தாலும் அந்த பற்றீரியா அழிவடையாது என்பதுடன் மருந்தை எதிர்த்து தாக்குப்பிடித்து மரணம் ஏற்படும் நிலையை உருவாகும் என கூறப்படுகின்றது. இதற்கான தீர்வாகவே சுவிட்சர்லாந்தினை சேர்ந்த மாணவி புதிய வைரஸ் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

நுண்ணுயிர்களில் பற்றீரியா, வைரஸ், பூஞ்சை என பலவகை உள்ளன. அவற்றில் பற்றீரியாக்களையே கொல்லக்கூடிய பாக்டீரியோபேஜ் (Bacteriophage) என்னும் ஒரு வகை வைரஸையே அவர் கண்டுபிடித்துள்ளார்.

இந்த பாக்டீரியோபேஜ் (Bacteriophage) என்னும் வைரஸில் சில குறிப்பிட்ட வைரஸ்களை தேர்ந்தெடுத்து, அதை பற்றீரியா தொற்றுக்கு ஆளான நோயாளிகள் உடலில் செலுத்தும்போது, அந்த பாக்டீரியோபேஜ் (Bacteriophage), அந்த நோய்க்கிருமியைக் கொன்றுவிடும்.

முக்கியமான விடயம் என்னவென்றால், அந்த நோயாளிக்கு சிகிச்சைக்காக ஆன்டிபயாட்டிக்குகளைக் கொடுத்தால், அந்த ஆன்டிபயாட்டிக்குகள், அந்த நோய்க்கிருமியைக் கொல்வதுடன் கூடவே அந்த நோயாளியின் உடலிலுள்ள நல்ல நுண்ணுயிர்களையும் கொன்றுவிடும்.

ஆனால், இந்த பாக்டீரியோபேஜ் (Bacteriophage) வைரஸோ, நல்ல நுண்ணுயிர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என்பதுடன் கெட்ட கிருமிகளை மட்டுமே கொல்லும் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்தகைய ஐந்து பாக்டீரியோபேஜ் (Bacteriophage) வைரஸ்களைக் கண்டுபிடித்த சுவிட்சர்லாந்தினை சேர்ந்த மாணவிக்கு, Swiss Youth Research மற்றும் European Union Contest for Young Scientists என்னும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

உலகில் அதிக நேரம் உறங்கும் நாடுகளின் தரவரிசையில் இலங்கைக்கு 3ம் இடம்!!

உலகில் அதிக நேரம் உறங்கும் நாடுகளின் தரவரிசையில் இலங்கை 3 ஆவது இடத்தை பிடித்துள்ளது. அதன்படி, இலங்கையில் வாழும் மக்கள் சராசரியாக இரவில் 8.1 மணிநேரம் உறங்குவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலகில் உள்ள 60 நாடுகளில் வாழும் மக்களின் சராசரி உறக்கத்தின் அளவை அடிப்படையாக கொண்டு, உலகில் எந்த நாட்டில் மக்கள் ஒரு இரவில் அதிக அளவு உறங்குகிறார்கள் என்பதைக் கண்டறிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை, ஒவ்வொரு இரவும் சராசரியாக எந்த நகரத்தில் மக்கள் அதிகம் உறங்குகிறார்கள் என்பதை கண்டறிய ஐக்கிய இராச்சியத்தின் 40 நகரங்களில் இந்த ஆய்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் பல்கேரியா (Bulgaria), அங்கோலா (Angola) மற்றும் இலங்கை (Sri lanka) ஆகிய நாடுகள் உலகில் அதிக நேரம் உறங்கும் நாடுகளின் தரவரிசையில் முதல் மூன்று இடத்தை பெற்றுள்ளது.

அத்துடன் ஐக்கிய இராச்சியத்தின் (UK) நகரங்களின் தரவரிசையில் நார்விச் (Norwich) நகரம் முதலாமிடத்தை பெற்றுள்ளது.

கைபேசியால் பரிதாபமாக உயிரிழந்த மாணவி!!

கர்நாடகா மாநிலம் பெங்களூரு திப்பகொன்டனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் நாராயண். இவரது மனைவி சுதா. இவர்களுடைய மகள் 18 வயது லிகிதா. இவர் படிக்காமல் தினமும் செல்போன் பயன்படுத்தி வந்தார். செல்போன் அதிகம் பாக்கதே… என லிகிதாவை அவரது பெற்றோர் கண்டித்தனர்.

பெற்றோர் பேச்சை கேட்கவே இல்லை. தொடர்ந்து செல்போன் பார்த்துக் கொண்டே இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இதுகுறித்து பெற்றோர், லிகிதாவை அழைத்து கண்டித்தனர். அப்போது செல்போனை எடுப்பதை தவிர்க்கும்படி புத்தகத்தை எடுத்து படிக்கும்படியும் கூறியுள்ளனர்.

இதனால் லிகிதா மனமுடைந்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவரது அறை கதவு திறக்கப்படவில்லை. வாக்குப்பதிவு எந்திரங்கள் இதனால் பெற்றோர் சந்தேகம் அடைந்தனர். அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது லிகிதா தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதனைக்கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். லிகிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது செல்போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் மனம் உடைந்து லிகிதா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடலில் குளிக்கச் சென்ற இளைஞர் மாயம்.. தேடும் பணி தீவிரம்!!

தமிழகத்தில் அடுத்தடுத்து நீர் நிலைகளிலும் கடலிலும் குளிக்கும் இளைஞர்களின் உயிரிழப்புகள் அதிர்ச்சியளிக்கிறது. விடுமுறை தினம் என்பதால் இளைஞர்கள், மாணவர்கள் கடல், ஏரி போன்ற நீர்நிலைகளில் குளிக்கச் செல்கின்றனர்.

இதனால் அவ்வப்போதும் விபத்தும் ஏற்படுகிறது. அந்த வகையில், கன்னியாகுமரியில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 8 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதேபோல் கடலோரப் பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

குறிப்பாக தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் கட்டுமரத்தில் சென்று மீன் பிடிப்பது வாடிக்கையாகி விட்டது. கட்டுமரத்தில் மீன் பிடிக்கச் சொல்லும் மக்களும் கள்ளக் கடல் நிகழ்வால் மீன்பிடிப்பதை தவிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனை அடுத்த குண்டுக்கல் துறைமுகத்தில் நேற்று மதியம் பாம்பன் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 7 பேர் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த முஹம்மது முஜாஹித் (20) என்ற வாலிபர் திடீரென கடலின் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாமல் கடலில் மூழ்கி தலைமறைவானார்.

இதையடுத்து மீனவர்கள் உதவியுடன் காணாமல் போன இளைஞரை கடலோர காவல் படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கடலில் நீந்துவது நல்ல அனுபவமாக இருந்தாலும், இந்த நேரத்தில் இதை தவிர்க்குமாறு எதிராக வானிலை ஆய்வு மையமும், கடல்சார் ஆராய்ச்சி மையமும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன.

அப்பாவுக்கு குட் பை சொல்லு… 3 வயது மகனை சுட்டுக்கொன்றுவிட்டு தாய் எடுத்த விபரீத முடிவு!!

அமெரிக்காவில் 3 வயது மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தாய், தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக, உங்களது மகனுக்கு குட்பாய் சொல்லுங்கள் என தனது முன்னாள் கணவருக்கு அந்த பெண் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

அமெரிக்காவில் 3 வயது மகனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு, தாய் தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி அரங்கேறியது. இதுதொடர்பான விசாரணையில் அடுத்தடுத்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, உயிரிழந்தவர்கள் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்தவர் சவான்னா கிரிகர் (வயது 32) மற்றும் அவரது மகன் கேடன் (வயது 3) என்பது தெரிய வந்துள்ளது.

திருமண வாழ்வில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, கிரிகர் கணவரை பிரிந்து தனது மகனுடன் தனித்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், கடந்த மார்ச் 18ம் தேதி கிரிகர் தனது முன்னாள் கணவர் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

அங்கு வீட்டில் யாரும் இல்லாததை கண்டதும் அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளார். தொடர்ந்து தனது வீட்டிற்கு சென்ற அவர், ஆத்திரத்தில் அங்கிருந்த தனது திருமண புகைப்படங்களை இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். தொடர்ந்து குழந்தை பராமரிப்பு நிலையத்திற்கு சென்று, அங்கிருந்த தனது மகன் கேடனை அழைத்துச் சென்றுள்ளார்.

இதையடுத்து தனது முன்னாள் கணவரை தொடர்புகொள்ளும் முயற்சி தோல்வியுற்றதால், செல்ஃபோனில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், “இப்போது வீட்டிற்குச் செல்ல உங்களுக்கு எதுவும் இல்லை. மேலும் நாள் முடிவில் உங்களிடம் எதுவும் இருக்காது” என கிரிகர் தெரிவித்துள்ளார்.

பிறகு சான் ஆன்டனியோ பகுதியில் உள்ள பூங்காவுக்கு மகனுடன், காரில் சென்றுள்ளார். அங்கிருந்து தனது முன்னாள் கணவரை செல்ஃபோன் மூலம் மீண்டும் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.

இதையடுத்து, ”உங்கள் மகனுக்கு குட்பாய்” சொல்லுங்கள் என அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். மேலும், ”உனது அப்பாவுக்கு குட்பாய் சொல்லு, அவர் இங்கு இல்லாததற்கு மன்னித்துக் கொள் என கூறி தனது மகனுக்கு முத்தமிடும்” வீடியோ ஒன்றையும் கிரிகர் பதிவு செய்துள்ளார்.

தொடர்ந்து தனது மகனை தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, தன்னைத் தானே தலையில் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையடுத்து, மார்ச் 19ம் தேதி பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், பூங்காவில் இருந்து கிரிகர் மற்றும் கேடனின் உடலையும், அங்கிருந்த செல்ஃபோனையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், கிரிகரின் வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தோட்டாக்களின் உறைகள், அவர் தற்கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கிக்கான தோட்டாக்களின் உறைகளுடன் சரியாக பொருந்தியுள்ளன. எனவே இது தற்கொலை தான் என்பது உறுதியாகியுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் நூதன முறையில் ஏ.ரி.எம் இயந்திரங்களில் பணம் கொள்ளை!!

வவுனியாவில் பெண்ணொருவரின் ஏ.ரி.எம் பண அட்டையிலிருந்த 37ஆயிரம் ரூபா பணம் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (05.05.2024) இடம்பெற்றுள்ளது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றின் ஏ.ரி.எம் இயந்திரத்தில் பணம் பெறுவதற்கு பெண் ஒருவர் சென்றபோது அப்பணத்தை பெற நபரொருவர் உதவி புரிவதுபோல நடித்து அட்டையை இயந்திரத்தினுள் சிக்கவைத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து வங்கி பாதுகாப்பு அலுவலகரை தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து பாதுகாப்பு அலுவலகரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கமைய, வங்கியிலிருந்து 37ஆயிரம் ரூபா திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில், திருட்டுச்சம்பவம் தொடர்பில் வங்கியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமராவின் உதவியுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கனடாவில் அறிமுகமாகும் புதிய வீசா நடைமுறை!!

கனடாவில்(Canada) வாழ்பவர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை அந்நாட்டுக்கு அழைத்து வருவதற்கான சிறப்பு வீசா நடைமுறையை கனடா அறிமுகம் செய்துள்ளது.

குறித்த வீசா நடைமுறை மே மாதம் 21ஆம் திகதி முதல் நடைமுறையில் இருக்கும் என கனடா அறிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டில் தங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை கனடாவுக்கு அழைத்துவருவதற்காக விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பித்த 35,700பேருக்கு, கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, அழைப்பிதழ்களை அனுப்புவதை நீட்டிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி கடந்த 2020ஆம் ஆண்டு விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பித்தவர்கள், தங்களுக்கு வரும் மின்னஞ்சல்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தற்போது வரை பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை கனடாவுக்கு அழைத்துவருவதற்காக விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிக்கவில்லை என்றால், புதிய வீசா நடைமுறையை பயன்படுத்தி உங்கள் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டியை கனடாவுக்கு அழைத்துவர ஒரு வாய்ப்பு உள்ளது என கனடா அறிவித்துள்ளது.

இதன்படி, கனடாவுக்கு வரும் உங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை ஒரு நேரத்தில் 5 ஆண்டுகள் வரை கனடாவில் தங்கியிருக்க அனுமதி வழங்கியுள்ளது. மேலும், உங்கள் இருப்பை கனடாவில் இருக்கும்போது நீட்டிக்கவும் முடியும் என கூறப்பட்டுள்ளது.

குறித்த விசாவிற்குத் தகுதிபெற, அவர்களுக்கு விண்ணப்பம் செய்பவர் ஒரு கனேடிய குடிமகனாக, அல்லது, நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற்றவராக அல்லது பதிவு செய்யப்பட்ட புலம்பெயர்ந்தோராக இருக்கவேண்டியது அவசியம் என கூறப்பட்டுள்ளது.

அத்துடன், நிர்ணயிக்கப்பட்ட அளவிலான பணம் தங்களிடம் இருப்பதை உறுதிப்படுத்தவேண்டும் என்றும் விண்ணப்பிக்கப்பட்ட பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி முறையான, செல்லுபடியாகும் மருத்துவக் காப்பீடு பெற்றிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

காதலியை பார்க்க சென்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் : குடும்பத்தினர் கொலை செய்தார்களா?

தனது காதலியை பார்ப்பதற்காக சென்ற நிலையில், காணாமல் போன குளியாப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாதம்பே பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியிலேயே குறித்த இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இளைஞன் காணாமல் போனதை தொடர்ந்து காதலியின் குடும்பத்தினர் காணாமல் போயிருந்தனர்.

இதனையடுத்து நேற்றையதினம் தந்தை நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார். காதலி கர்ப்பமானதை தொடர்ந்து, அவரது குடும்பத்தினரால் அவர் கொல்லப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்புக்காக சென்ற தமிழ் இளைஞன் பரிதாபமாக பலி!!

வெளிநாட்டில் வேலைவாய்ப்புக்காக சென்ற தமிழ் இளைஞன் விபத்து காரணமாக உயிரிழந்துள்ளார். மலேஷியாவிற்கு பணிக்கு சென்ற மஸ்கெலியா பகுதியில் உள்ள இளைஞர் அங்கு பொயிலர் வெடித்து உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஸ்கெலியா புரவுன்ஷீக் தோட்ட மோட்டிங்ஹேம் பிரிவைச் சேர்ந்த 24 வயதான துரைராஜ் ராஜ்குமார் டேவிட்சன் என்பவரே உயிரிழந்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன்னர் இலங்கையில் இருந்து மலேஷியா சென்றுள்ளார்.

தண்ணீர் போத்தல் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய நிலையில் உயிரிந்துள்ளார். அவரது சடலம் இலங்கைக்கு கொண்டு வருவதற்காக ஏற்பாடுகளை அவரது உறவினர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

காரில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட யாழ்ப்பாண இளம் குடும்பஸ்தர் : நோர்வேயில் துயரம்!!

நோர்வேயில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் காரிலிருந்து எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

நோர்வேயில் குடும்பத்துடன் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளி்ன் தந்தையான அரசரத்தினம் துஷ்யந்தன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் நோர்வே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச் சம்பவம் நோர்வே வாழ் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் துயரத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பில் சினிமா பாணியில் நடந்த பயங்கரம் : பணக்கார தந்தையின் மோசமான செயல் அம்பலம்!!

கொழும்பில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்ட மகளிற்கு தந்தையால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பன்னிப்பிட்டிய வீரமாவத்தையில் வசித்து வந்த புதுமண தம்பதியினருக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தந்தையின் தொடர் அழுத்தங்களை தாங்க முடியாத தம்பதியினர், வெளிநாடு ஒன்றுக்கு சென்றுள்ளனர்.

அங்கும் பல்வேறு அழுத்தங்கள் தந்தையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடும் அழுத்தம் காரணமாக மீண்டும் இலங்கை திரும்பிய தம்பதி, கொழும்பில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 29ஆம் திகதி பிற்பகல் பன்னிப்பிட்டியவில் உள்ள இளைஞனின் வீட்டுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் என தம்மை அடையாளப்படுத்திய சிலர் வந்துள்ளனர்.

இதன்போது, வீட்டில் இருந்த தாயின் கையடக்கத் தொலைபேசியை சோதனையிட்டதாகவும், தாயாரை அச்சுறுத்தியதாகவும், அந்த இளைஞனின் புகைப்படங்கள் சிலவற்றை தமது அலைபேசிக்கு அனுப்பி வைத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

அன்று பிற்பகல், அந்த இளைஞனின் தந்தை, அதிகாரிகள் என்று கூறிக்கொண்டவர்களின் தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பின்னர், மகளின் தந்தைக்கு சொந்தமானது என கூறப்படும் தலவத்துகொடையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மூவரும் மது அருந்தியுள்ளனர்.

பின்னர் மூன்று அதிகாரிகளில் இருவர் ஹோட்டல் வளாகத்தில் மறைந்திருந்த நிலையில், மற்றைய நபர் காரில் தப்பிச் செல்லும்போது பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு மஹரகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்தவராகக் காட்டிக் கொண்ட குறித்த சந்தேகநபர் துறைமுகப் பணியாளர் எனவும், மற்றைய இருவரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.